படைப்புகளுடைய தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடல்…

 மனிதனுக்கு ஏற்படும் பலவிதமான தீங்குகளிலிருந்து ஆன்மீக ரீதியாக பாதுகாப்பு பெறுவதற்காக பல வழிமுறைகளை அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

அவற்றில் மிக முக்கியமான ஒரு து ஆவை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّات مِن شَرِّ مَا خَلَقَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாமாத்தி, மின் ஷர்ரிமா கலக்

ஒவ்வொரு படைப்புகளுடைய தீங்கை விட்டும் பரிபூரணமான அல்லாஹ்வுடைய சொற்களைக் கொண்டு (அல்லாஹ்விடத்தில்) நான் பாதுகாப்பு தேடுகிறேன். (முஸ்லிம் 2708)

துஆவின் சிறப்புகள்:
எவர் ஓர் இடத்தில் இறங்கி இந்த துஆவை ஓதுகிறாரோ, அவர் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் வரை அவருக்கு எந்த தீங்கும் ஏற்ப்படாது என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும் ஒரு நபித்தோழர் நபியவர்களிடம் எனக்கு தேள் கொட்டி விட்டது என்று முறைப்பாடு செய்த போது, இந்த துஆவை ஓதியிருந்தால் அதனால் தீங்கு (விஷம்) தீண்டியிருக்காது என்று கூறினார்கள்.

எனவே நமது வீட்டிற்குள் செல்லும் போதும் சரி, அல்லது நமது ஊருக்குள் செல்லும் போதும் சரி, அல்லது வெளியூருக்குள் செல்லும் போது சரி, இந்த து ஆவை சொல்லிக் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில் என்ன தீங்கு ஏற்ப்படும் என்று நமக்கு தெரியாது. சில நேரங்களில் கொடிய மிருகங்கள் மூலம், அல்லது கால்நடைகள் மூலம், அல்லது ஊர்வனங்கள் மூலம், அல்லது விஷ ஜந்துகள் மூலம், அல்லது திருடர்கள் மூலம். அல்லது ஷைத்தான்கள், மற்றும் கெட்ட ஜின்கள் மூலம் அல்லது காற்றின் மூலம் அல்லது நீரின் மூலம் அல்லது நெருப்பின் மூலம் இப்படி பல படைப்புகளுடைய தீங்குகள் மூலம் எதுவும், எப்படியும் நடக்கலாம். எனவே தான் பொதுவாக எல்லா படைப்புகளுடைய தீங்குகளை விட்டும் நான் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன் என்று இந்த து ஆவை சொல்லிக் கொள்ள வேண்டும்.

இந்த து ஆவை மனனம் செய்து, காலையில் மூன்று தடவைகளும், மாலையில் மூன்று தடவைகளும் சொல்லக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

யா அல்லாஹ்! எல்லா படைப்புகளுடைய தீங்குகளை விட்டும் நான் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன், என்ற பொருளடங்கிய இந்த துஆவை நாம் அன்றாடம் செய்யும் ஸஜ்தாக்களில் அடிக்கடி சொல்லி வாருங்கள். நாம் மரணிக்கின்ற வரை இந்த து ஆ மறக்காமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும். அல்லாஹ் போதுமானவன்.

அல்ஹம்து லில்லாஹ்!

أحدث أقدم