துஆவின் பதில் தாமதமாக உள்ளதே

ஷைக் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

துஆவின் பதில் தாமதமாக உள்ளதே, "நான் துஆக் கேட்டேன், துஆக் கேட்டேன், ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை" என்று கூறுதில் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் இதை போட்டு விடலாம். "எத்தனை முறை அல்லாஹ்விடம் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் வேண்டியது கிடைக்கவில்லை" என்று கூறி, அல்லாஹ்வின் அருளை விட்டு உங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விடுவான். இது பெரும் பாவங்களில் ஒன்றாகும். துஆவின் பதில் தாமதமானாலும் அல்லாஹ்வின் அருளை விட்டு நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள்.

[ஷர்ஹ் ரியாதுஸ் ஸாலிஹீன், தொகுதி 4, பக்கம் 293 | ஷைக் இப்னு உதைமீன்]


இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

ஷைத்தான் வந்து, "எத்தனை முறை நீ அவனிடம் துஆ கேட்டும் பதில் கிடைக்கவில்லையே?" என்று கூறினால், நீ சொல்: _நான் துஆக் கேட்பதன்  மூலம் அல்லாஹ்வை நெருங்கு வணங்குகிறேன். (அது ஒரு வணக்கம்) பதில் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் எனக்கு ஏற்ற சில நன்மைகளுக்காக அது தாமதப்படுத்தப்படலாம். உலக நோக்கம் நிறைவேறாவிட்டாலும், (அல்லாஹ்வுக்கு முன்) அந்தத் பணிவும் வணக்கமும் அதை விட  மேலானது பெரிய பலனுள்ளது.
أحدث أقدم