ஹதீஸ்கலை நிபுணர் இமாம் அல் ஹாபிழ் ராமஹுர்முஸி ரஹிமஹுல்லாஹ் பற்றிய சுருக்க அறிமுகம்.

அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ (المحدث الفاصل بين الراوي والواعي) என்ற (உலூமுல் ஹதீஸ்) ஹதீஸ்கலையின் அடிப்படை விதிகள் என்ற பாடப்பகுதியில் முதலாவது தனித்துவமிக்க சிறப்பு வாய்ந்த நூலை தொகுத்து எழுதிய இமாம் ராமஹுர்முஸி (ரஹ்) அவர்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையே இங்கு வழங்குகின்றோம்.

முழுப்பெயர் : அல் இமாம் அல் ஹாபிழ் அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அப்துர் ரஹ்மான் பின் ஹல்லாத் அர்ராமஹுர்முஸி. 

இமாம் ராமஹுர்முஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 265 ல் பிறந்தார்கள். 

ஆசிரியர்கள் :
இவரது ஆசான்களில் குறித்து சொல்லப்பட வேண்டியவர்கள் தந்தை அப்துர்ரஹ்மான் பின் ஹல்லாத் அர்ராமஹுர்முஸி , அபூ ஹுசைன் முஹம்மத் பின் ஹுஸைன் 
அல் வாதிஇஈ , அபூ ஜஃபர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் ஹழ்ரமி , அபூ யஃலா அல் மூசிலி ரஹிமஹுமுல்லாஹ் போன்றவர்களை குறித்து சொல்ல முடியும். 

இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தோர் என்ற வகையில் அபுல் ஹுஸைன் முஹம்மத் பின் அஹ்மத் அஸ்ஸைதாவி , ஹஸன் பின் லைஸ் அஸ்ஷீராஸி , அபூ பக்ர் முஹம்மத் பின் மூஸா பின் மர்தவைஹி போன்றோரை குறிப்பிட முடியும். 

இமாமவர்கள் எழுதிய நூற்கள்: 

1- அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ. 
2- அல் இலல் பீ முஹ்தாரில் அஹ்பார். 
3- அதபுந் நாதிக். 
4- அஷ்ஷைப் வஷ்ஷபாப். 
5- அம்தாலுந் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். 

இமாமவர்கள் பற்றி ஏனைய அறிஞர்கள்: 

இமாம் தஹபி ரஹ் அவர்கள் 
இமாம் ராமஹுர்முஸி அவர்கள் மிகப்பெரும் ஹாபிழாகவும் அஜமிகளின் மிகப்பெரும் முஹத்திதாகவும் உறுதிமிக்க ஹதீஸ்துறை ஆய்வாளராகவும் தலை சிறந்த கவிஞராகவும் காணப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 

இமாம் ஸன்ஆனி ரஹ் அவர்கள் இமாம் ராமஹுர்முஸி அவர்கள் மிகவும் சிறந்த மனிதர் என்றும் அதிகம் ஹதீஸ்களை தெரிந்து வைத்திருந்தவர் என்றும் கூறியுள்ளார்கள். 

இமாம் தஆலபி ரஹ் அவர்கள் 
இமாம் ராமஹுர்முஸி நிபுணத்துவம் மிக்க இலக்கியவாதியாகவும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆய்வாளரகவும் கருதப்பட்டவர் என பாராட்டியுள்ளார்கள். 

முகத்திமதுல் முஹத்திஸ் 
தஹ்கீக் - அல்லாமா ஹதீப் (9-25)
தாருல் பிக்ர் பதிப்பகம். 

ஹிஜ்ரி 360 ல் இமாமவர்கள் வபாத்தாகி நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். 
அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக.

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
أحدث أقدم