பிறக்கவிருக்கும் சுன்னாப் பிரிவினரின் மஹ்தியும் பிறந்து விட்ட ஷீஆ மத மஹ்தியும்

அறிமுகம்.
----
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وبعد:
மறுமை நாள் வருவதற்கு முன்னால் நிகழ உள்ள சிறிய, பெரிய ஆச்சரியமிக்க பல  நூறு அதிசயமான அடையாளங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மிகத் துல்லியமாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றை நபித்தோழர்கள் வழி வந்த ஹதீஸ்கலை இமாம்கள் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். 

அவை நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தொடங்கி, மறுமை வரை நடக்க உள்ள பல நூறு நிகழ்வுகளாகும்.

அவற்றில் "நேர்வழி நடத்தப்பட்டவர்" என்ற பொருள்படும் இமாம் மஹ்தி என்பவரும் ஒருவராகும்.

சுன்னாப் பிரிவு முஸ்லிம்களாகிய நாம் ஷீஆ மதத்தவர்  நம்பிக்கை கொள்கின்ற மஹ்திக்கு மாற்றமான மறுமைநாளின் அடையாளமாக வரவிருக்கின்ற ஒரு மஹ்தி பற்றி நம்பிக்கை கொள்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே ஷீஆமதத்தவரும், சுன்னா முஸ்லிம்களும் நம்பிக்கை கொள்கின்ற மஹ்திகள் வெவ்வேறான இரு துருவங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .

அவ்விருவருக்கும் இடையில் காணப்படும்  பாரிய வேறுபாடு பற்றிய அறிவு அவசியம் என்ற அடிப்படையில் இரு மஹ்திகள் பற்றிய சுருக்கமே இங்கு தரப்படுகின்றது.

ஷீஆ & சுன்னா மஹ்திக் கோட்பாடு 
கிலாபத் காலம் கடந்து 
பிற்காலத்தில் ஷீஆ மதத்தில் அஹ்லுல் பைத்தினரில் பெயரில் உருவான இமாமா கோட்பாடானது பன்னிரெண்டு இமாம்கள் என்ற மற்றொரு
புதிய கோட்பாட்டோடு ஹிஜ்ரி 255 களின் பின்னால் முடிவுக்கு வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதற்காக ஷீஆ மத நம்பிக்கையின் பிரகாரம் பின் சந்ததிகள் அற்றவர் என கூறப்படும் தமது பதினோராவது இமாமின் திடீர் மறைவோடு அவருக்கு பின் சந்ததி ஒருவரை உருவாக்க வேண்டிய தேவை ஷீஆ மத குருமாருக்கு வழமைக்கு மாறாக ஏற்பட்டது.

அதனால் தமது 12வது இமாமுக்கு ஹிஜ்ரி: 255 ல் பிறந்து ஹி: 260ல் தலைமறைவானார் என்றும் மீண்டும் அவர் மறுமையின் அடையாளமாக அவர் வருவார் என்றும் கட்டுக் கதையின் கீழ் அவர்களின் 12 வது இமாம் மறைந்து வாழும் மஹ்தியாக பிறக்க வைக்கப்படுகின்றார்.

ஷீஆ மத நம்பிக்கையின் பிரகாரம் ஒரு இமாம் மரணிப்பற்கு முன்னால் தனது வாரிசு யார்? என்பதை வஸிய்யத் செய்து அறிவித்த பின்பே மரணிப்பார் என்ற  கோட்பாடாக  நிலவி வந்த நிலையில் அவர்களின் பதினோராவது இமாமாகிய ஹஸன் அல்கரீ என்பவர் பிள்ளைப் பாக்கியமோ, பின் சந்ததியோ அற்றவராக  மரணித்ததும் தாம்  நம்பிவரும் இமாமத் கோட்பாட்டுக்கு வலுச் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஷீஆ இமாமிய்யா மதகுருக்கள் தள்ளப்பட்ட கையோடு தமது மதத்தில் புதிது புதிதாக சேர்க்கப்பட்ட, அவதூறு, பொய்யான பல நூறு கற்பனைப் கதைகளோடு சேர்த்து புதிய கற்பனை மஹ்திக் கோட்பாட்டை  பிரசவிக்கச் செய்தனர். 

அவரே ஹிஜ்ரி- 250- ல் பிறந்து 260 ல் தனது  ஐந்தாவது வயதிலேயே தலைமறைவான பதுங்குழியில் வாழும் மஹ்தியாகும்.

அதாவது இமாம் ஹஸன் அஸ்கரிக்கு ஈராக்கின் 
"சுர்ரமன்ரஆ" என்ற  ஒரு மறைவிடத்தில்
முஹம்மத் என்ற குழந்தை பிறந்ததாம். அது அப்பாஸிய ஆட்சியாளரான அல்-முஃதளித்  என்பவரால் கொலை செய்யப்படுவதை  அஞ்சி  " ஹி: 260 ல் ஒழிந்து கொண்டதாம்; அது மறுமையின் அடையாளமாக வெளியில் வருமாம் 
என்ற கதையே அந்த பதுங்கு குழிக் கதையாகும்.

அவரின் துக்ககரமான இந்த மறைவின் பின்னால்
அவரோடு அவரது சிரேஷ்டமான  சீடர்கள் சிலர் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் வரை  தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள், 
سفراء/  النواب 
சுஃபரா, நுவ்வாப் "தூதுவர்கள்" "பிரதிநிதிகள்"
 என அறியப்பட்டனர் என்றும், அவர்கள் மொத்தம் மூவர் என ஷீஆ மத ஆய்வாளர்கள் குறித்த மத நூல்களை ஆதாரமாகக்காட்டி விளக்கம் அளிக்கின்றனர்.

அந்த மூவருமே மறைந்து வாழும் தமது இமாமிடம் மக்களின் பிரச்சினைகளை நேரில் எடுத்துச் சென்று,  அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்து வந்தராம்.

இந்த நிலையில் அவர்டளின் இறுதியான தூதரின் மரணத்தோடு பிரிதிகள்  காலமும் முடிவுக்கு வந்து விட்டதாக குறிப்பிடும் ஷீஆ மத கிரந்தங்கள்

அதனை  
الغيبة الصغرى 
இமாமின் சிறிய மறைவுக் காலம் என்றும்  அழைக்கப்படுகின்றன.
அதில் இருந்து இன்றுவரை   கற்பனையில் பிறந்த அந்த மஹ்தியின் மறைவு காலம் அவர் வரும்வரை
الغيبة الكبرى
பெரிய மறைவு காலம் என அழைக்கப்படுகின்றது.
அவர் ஈராக்கில் ஸர்தாப் எனப்படும் 18×18  பதுங்கு குழி ஒன்றில் இன்று வரை மறைந்து விட்டதாக நம்புகின்றனர் ஷீஆ மத்தினர்.

அதாவது 300 ஆண்டுகள் வாழ்ந்த பின் மறைந்தவரை மத்திய கிழக்கில் பலம் பொருந்திய ஈரானாலோ, அதன் குடியரசுப் படைகளாலோ  வெளிக் கொணர முடியாதொரு துர்பாக்கியமான நிலையில் ஷீஆ மத மக்கள் தடுமாற்றத்தில் உள்ளனர்.
வரும் காலங்களில் அமெரிக்கவோ இஸ்ரேலோ அவரைக் கடத்தி விட்டதாகச் சொன்னாலும் அதையும்  ஷீஆக்கள் நம்பத்தான் போகிறார்கள். பாவம் ஷீஆக்கள்.

மஹ்தியை ஸியாரத் செய்வதை வலியுறுத்தும் ஷீஆ மத நூல்கள்.
-- 
மஹ்தி எப்பவோ பிறந்துவிட்டதாக நம்புவதால் அவர் தொடர்பான கடமைகளையும் விளக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஷீஆ மதத்தில் கற்பனைக் கதைகளுக்கும் அறிவிப்பாளர் (ஸனதுகள்) இல்லாத பொய் கப்ஸாக்களுக்கும், பகுத்தறிவிற்குப் பொருந்தாத அபாண்டங்களுக்கும் குறைவே கிடையாது என்ற குறிப்போடு,  1200 வருடங்களுக்கும் முன்னால் பிறந்து அப்பாஸிய கலீஃபா அல்முஃதளிதின் படையின் பிடியில்  இருந்து தப்பிப் பிழைத்து  1800 ஆண்டுகளாக  ஸர்தாபில் மறைந்து விட்ட தமது மஹ்தியைப் பற்றி பேசும் ஷீஆ மதத் தலைவர்கள்
 عجل الله فرجه 
அவரது விடிவை அல்லாஹ் அவசரப்படுத்துவானாக! எனப் பிரார்த்திப்பதும் நூல்களில் எழுதி இருப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆகவே அவரை ஸியாரத் செய்வது பற்றியும்
பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.
 (( ويستحب زيارة المهدي عليه السلام في كل مكان وكل زمان ، والدعاء بتعجيل الفرج عند زيارته ، وتتأكد زيارته في السرداب بسر من رأى )) الدروس جـ 2 ص ( 16 ) .
மஹ்தி அவர்களை ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஸியாரத் செய்வதும், அவரது வருகையை அவசரமாக்க துஆ கேட்பதும் விருப்பமான செயலாகும். அவரை சுர்ர மன்றஆ பதுங்கு குழியில் ஸியாரத் செய்வது  முக்கியத்துவம் அளிக்கப்பட்ட வழிமுறையாகும்.

மஹ்தியை சந்திப்பதை வலி யுறுத்தி விளக்கும் ஜவ்ஹரீ என்பவர்:
ويقول الجوهري : (( وكذا يستحب مؤكدا زيارة الامام المهدي الحجة صاحب الزمان أبي القاسم محمد بن الحسن عليه السلام عجل الله فرجه وسهل الله مخرجه ، ولد بسر من رأى ليلة الجمعة ، وقيل ضحى خامس عشر شعبان سنة خمس وخمسين ومائتين ، أمه صقيل ، وقيل نرجس ، وقيل مريم بنت زيد العلوية ، 
காலத்தின் தோழரான முஹம்மத்  பின் ஹஸன் அவர்களை அல்லாஹ் அவசரமாக வெளிப்படுத்துவானாக.

அவர் ஹிஜ்ரி 255 ல் சுர்ர மன் றஆவில் ஒரு ஜும்ஆ இரவு  பிறந்து விட்டார்.

அவரை ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஸியாரத் செய்வது சுன்னத்தாகும்.

எனக் கூறிய பின், சுன்னாவை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாம் இனி வரவிருக்கின்ற நமது மஹ்தி பற்றி நம்புவதை காப்பி அடித்து
وهو الذي يملا الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا ، 
அவர்தான் அநீதி அக்கிரமத்தால் நிரப்பப்பட்ட இப்பூமியை நீதத்தால் நிரப்புவார்  எனக் குறிப்பிடுகின்றனர். 

-------------------------------------
குறிப்பு :
இந்த வாசகத்தை ஷீஆ மதத்தினர் சுன்னாக்களின் மஹ்திய பற்றிய ஹதீஸில் இருந்து திருடி தமது மஹ்திக்கு பொருத்தி உள்ளனர்.
-------------------------------------
மேலும் அவர் குறிப்பிடுகின்ற போது : 
، ويستحب زيارته في كل مكان وكل زمان ، والدعاء بتعجيل الفرج في زيارته ، وتتأكد زيارته في السرداب المعروف بسر من رأى )) جواهر الكلام جـ 2 ص ( 100 ) .
அவரை எல்லா நிலைகளிலும் ஸியாரத் செய்வதும், அதன் போது அவரது வருகையை அவசரமாக்க துஆ கேட்பதும் விருப்பமான செயலாகும் . அத்துடன், அவரை சுர்ர மன் றஆ பதுங்கு குழியில் ஸியாரத் செய்வது முக்கியத்துவப்ப்படுத்தப்பட்ட வழிமுறையாகும்.

https://www.fnoor.com/main/articles.aspx?article_no=6192#.Y-w21aThVow

அவர் எங்கே? அவர் ஸர்தாபில் ஓடி ஒழிக்க காரணம் என்ன? விபரம்: 
--
https://www.islam4u.com/ar/almojib/%D9%85%D8%A7-%D9%87%D9%8A-%D8%B9%D9%84%D8%A7%D9%82%D8%A9-%D8%B3%D8%B1%D8%AF%D8%A7%D8%A8-%D8%A7%D9%84%D8%BA%D9%8A%D8%A8%D8%A9-%D8%A8%D8%A7%D9%84%D8%A7%D9%85%D8%A7%D9%85-%D8%A7%D9%84%D9%85%D9%87%D8%AF%D9%8A-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85-%D8%9F

ஸர்தாபை விட்டும் வெளியேறும் ஷீஆ மத மஹ்தி என்ன செய்வார்?
--
ஷீஆ மத நூல்களில் பிறந்து விட்ட அந்த மஹ்தி பற்றிய பல தகவல்களோடு அவர் அங்கிருந்து வெளிப்பட்டால் அவர் நிகழ்த்தப்போகும் சாகசங்கள்,
பல சாதனைகளில் முக்கியமானவை பின்வருமாறு :

இரு பெரும் கலீஃபாக்களான அபூபக்கர், உமர் ஆகிய இருவரையும் அவர்களின்  மண்ணறைகளில் இருந்து எழுப்பி, அவர்களைக் கழுகு மரத்தில் ஏற்றிய பின், அலி (ரழி) அவர்களின் ஆட்சியை அபகரித்தமைக்ககாக தண்டனை நிறைவேற்றி விட்டு அவர்களை எரித்து விடுவாராம். 

அவ்வாறே அன்னை ஆயிஷாவுக்கும் ஹத்- விபச்சார தண்டனை நிறைவேற்றுவாராம்.
காரணம் அவங்க ஸஃப்வான் பின் முதல் என்ற ஸஹாபி யோடு விபச்சாரம் செய்தததாம். அதற்கு நபி அவங்க ஹத்து நிறைவேற்ற வில்லையாம். 
نعوذ بالله من الجهل المركب 
ஷீஆக்காரன்  எருமை எனில்? புத்தி உள்ள ஒரு முஸ்லிம் நம்பலாமா?  சிந்திப்பீர்களாக!

குர்ஆன் அல்லாத வேறு ஒரு புது வேதத்தைக் கொண்டு வருவாராம்.

பாரஸீகர்களை விட்டு விட்டு அரபுக்களைக் கொன்றொழிப்பாராம் போன்ற  தஜ்ஜாலுக்கு   பொருந்தும் பல செயற்பாடுகளை எழுதி வைத்துள்ளனர்.

சுன்னா கோட்பாட்டில் மஹ்தியின் வரவு
--- 
மஹ்தி தொடர்பான சுன்னா முஸ்லிம்களாகிய நமது நம்பிக்கை  மிகத் தெளிவானது. நபி (ஸல்) அவர்கள் இமாம் மஹ்தி தொடர்பாக மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.
அவர் இன்னும் பிறக்கவில்லை; அவர், நபி (ஸல்) அவர்களின் அன்பு மகள் அன்னை ஃபாத்திமா ரழியின் பரம்பரையில் தோன்றுவார்.

அவரது பெயர் முஹம்மத், அவரது தந்தையின் பெயர்  அப்துல்லாஹ் .(முஹம்மத் பின் அப்தில்லாஹ் )

அவர் ஈஸா நபி (அலை) அவர்களின் மீள் வருகையையும் தஜ்ஜாலின் வருகையையும் உணர்த்தும் விதமாக மறுமையின் அடையாளமாக வந்திருப்பார்.

அக்காலத்தில் ஆட்சி செய்யும் மூன்று கலீஃபாக்கள் கஃபாவின் பொக்கிஷங்களை  தமக்குள் பிரிப்பது பற்றிய விஷயத்தில் முரண்பட்டு கொண்டு அவர்கள் மத்தியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக நிலையில்  தீர்ப்பாளியாகவும்  மஹ்தி செயல்படுபார். 

வேறு  சில அறிவிப்புக்களில்: கஃபாவின் ருக்னுல் யமானிக்கும் மகாமு இப்ராஹீமுக்கும் இடையில் அவரை மக்கள் தலைவராக தேர்ந்தெடுத்து பைஅத்  செய்வர் எனக் இடம் பெற்றுள்ளது.

அவர் வரும் போது அநீதி, அக்கிரமத்தால் நிரப்பப்பட்டிருக்கும் இப்பூமியை, அவர் நீதத்தால் நிரப்புவார், மக்களை அவர் நேர்வழியில் நடத்தி ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் நீதியை நிலைநாட்டி இந்த உம்மத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் போதுதான் ஈஸா நபி (அலை) அவர்கள் பூமிக்கு மீள இறங்கி வருவார்கள்.  அது பற்றி பின் வரும் நபிமொழி விளக்கி உள்ளன .

 عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كيف أنتم إذا نزل ابن مريم فيكم وإمامكم منكم" (رواه البخاري ومسلم. )
உங்களை வழிநடத்தும் உங்கள் தலைவர் உங்களைச் சார்ந்த ஒருவராக இருக்கும் நிலையில் ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கினால் எப்படி இருக்கும் ?(புகாரி, முஸ்லிம்) .

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்: 
فيقول أميرهم: تعال صل لنا. فيقول: لا. إن بعضكم على بعض أمراء، تكرمة الله هذه الأمة" رواه مسلم. 
அவர்களின் அமீர் (மஹ்தி) வாருங்கள்.  எங்களுக்கு தொழுகை நடத்துங்கள் எனக் கூறுவார். இல்லை. (நீங்களே நடத்துங்கள்) நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அமீர்- தலைவர்களாகும்  எனக் கூறுவார் எனக் கூறிய நபி  (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் எனக் கூறினார்கள் .(முஸ்லிம்)

மேற்படி ஹதீஸும் ஈஸா நபியின் வருகையைப் பற்றிக் 
கேள்விப்படும் தஜ்ஜால் தண்ணீரில் போடப்பட்ட 
உப்பபைப் போல் கரைந்து விடுவான் (முஸ்லிம்) ; என்ற ஹதீஸும்   ஈஸா நபி, மற்றும் தஜ்ஜால்  ஆகியோரின் வருகை என்பது மஹ்தியின் வருகையால் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதை உணர்த்துகின்றது.

மஹ்தி தொடர்பான ஹதீஸ்கள்
--
1) ما رواه أحمد والترمذي وأبو داود أن النبي صلى الله عليه وسلم قال: "لا تذهب أو لا تنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطيء اسمه اسمي" وفي رواية لأبي داود: "يواطيء اسمه اسمي، واسم أبيه اسم أبي". والحديث قال عنه الترمذي: حسن صحيح، وصححه أحمد شاكر والألباني
அரபிகளில் எனது குடும்பப் பரம்பரையில் இருந்து வரும் ஒரு மனிதர் ஆட்சி செய்கின்றவரை உலகம் அழியாது.  அவரது பெயர் எனது பெயருக்கும், அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயருக்கும் நேர்பட்டிருக்கும்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், ஷேக் அஹ்மத் ஷாகிர், அல்பானி ஆகியோர் இதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளனர்).

. 2- وعن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم: "المهدي مني أجلى الجبهة، أقنى الأنف، يملأ الأرض قسطا وعدلاً، كما ملئت ظلما وجوراً، يملك سبع سنين" رواه أبو داود والحاكم، وحسنه الألباني في صحيح الجامع
மஹ்தி என்னைச் சார்ந்தவர். அவர் நெற்றி விரிந்தவராகவும் மூக்கு நீண்டவராகவும் இருப்பார்.( ஹாகிம், அபூ தாவூத், அல்பானி இதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்).

. 3- وعن أم سلمة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "المهدي من عترتي من ولد فاطمة" رواه أبو داود وابن ماجه وصححه الألباني. 
மஹ்தியானவர் எனது குடும்பத்தில் ஃபாத்திமாவின் பிள்ளைகளில் ஒருவராக இருப்பார்.
(அபூ தாவூத்). ஷேக்
 அல்பானி அவர்கள் இதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்).

4- وعن علي قال: قال رسول الله صلى الله عليه وسلم: "المهدي منا أهل البيت يصلحه الله في ليلة" رواه أحمد وابن ماجه، وصححه أحمد شاكر والألباني. 
மஹ்தியானவர் எனது குடும்பத்தில் 
ஒருவராக இருப்பார். ஒரு இரவில் அவரை அல்லாஹ் சீராக்குவான் . (
அஹ்மத், இப்னு மாஜா . இமாம்களான அஹ்மத் ஷாகிர் , அல்பானி ஆகியோர் இதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்).
قال ابن كثير في كتابه النهاية في الفتن والملاحم: (أي يتوب الله عليه، ويوفقه ويلهمه، ويرشده بعد أن لم يكن كذلك).
அதாவது அவருக்கு பாவங்களை மன்னித்து, அவருக்கு உதிப்பை  உண்டாக்கி , அவருக்கு அருள்பாக்கியமளிப்பான் என இமாம் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இமாம் இப்னு கஸீர் - அல்பிதாயா).

 5- وعن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال: "يخرج في آخر أمتي المهدي، يسقيه الله الغيث، وتخرج الأرض نباتها، ويُعطي المال صحاحاً، وتكثر الماشية، وتعظم الأمة، يعيش سبعاً أو ثمانياً. يعني حججا" رواه الحاكم وصححه ووافقه الذهبي، وقال عنه الألباني في سلسلة الأحاديث الصحيحة: هذا سند صحيح رجاله ثقات.
 
எனது சமுதாயத்தில் மஹ்தி இறுதியாக வெளிப்படுவார். அல்லாஹ் அவருக்கு அருள் மழை பொழிவிப்பான். பூமி அதன் புற்பூண்டுகளை  முளைப்பிக்கும். பணம் தாராளமாகக்  காணப்படும்.  கால்நடைகள்  பெருகிக் காணப்படும், 
மக்கள் செழிப்போடு வாழ்வார்கள், அவர் ஏழு அல்லது எட்டாண்டுகள் காலம் வரை வாழ்வார். (ஹாகிம்) இமாம் தபரி (ரஹி) அவர்கள் அதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் அல்பானி ரஹி அவர்கள் இதனை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்).

இந்த ஹதீஸ் பற்றி சிந்திக்கின்ற போது மஹ்தி (அலை) வருகைக்கு முன்னால் பூமி அநீதி, அட்டூழியம் நிறைந்திருப்பதோடு, பஞ்சமும் காணப்படும் என்பதை உணரலாம். 

மஹ்தி தொடர்பான ஹதீஸ்களின் தரம்
--
இமாம் மஹ்தியின் வருகையினை சிலர் சில காரணங்களைக் கூறி மறுக்க முற்பட்டாலும் அது பலவீனமான கருத்தாகும்.

ஏனெனில் ஹதீஸ்கலை இமாம்கள் பலர் அதனை ஸஹீஹ் என்ற கோணத்தில் நோக்குவதோடு,  கருத்தின் அடிப்படையில் முதவாதிர் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றும் இமாம் மஹ்தி வருகையை நம்பிக்கொள்வது இறைநம்பிக்கை சார்ந்த அம்சங்களில் ஒன்று என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இமாம் ஷவ்கானீ ரஹி அவர்கள் இமாம் மஹ்தி தொடர்பான ஹதீஸ் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
وقال الشوكاني: "والأحاديث في تواتر ما جاء في المهدي المنتظر ، التي أمكن الوقوف عليها ، منها خمسون حديثاً، فيها الصحيح والحسن والضعيف المنجبر، وهي متواترة بلا شك ولا شبهة، بل يصدق وصف التواتر على ما هو دونها في جميع الاصطلاحات المحررة في الأصول..." انتهى.

மஹ்தி தொடர்பாக ஐம்பது ஹதீஸ்கள் தனது தேடலின் போது கிடைத்ததாகவும் அவற்றில் ஸஹீஹ், ஹஸன், நிவர்த்திக்க முடியுமான பலவீனமான ஹதீஸ்கள் உள்ளடங்கி இருந்ததன.  

ஹதீஸ்கலை விதிகளின் படி சந்தேகத்திற்கு இடமின்றி அவை முதவாதிர்- தேடலின்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய வகை சார்ந்தவை என்றும் குறிப்பிடுகின்றார்கள். 
அதே வேளை 
"ولا مهدي إلا عيسى ابن مريم" وهو حديث رواه ابن ماجه والحاكم، لكنه ضعيف
ஈஸா பின்  மர்யமே மஹ்தி. (வேறு ஒருவரும் மஹ்தி இல்லை ) என ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் பலவீனமான ஹதீஸாகும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

أحدث أقدم