தக்ஃபீர், தப்தீ ஆகியனவற்றின் வரைமுறைகள்

வெளியீடு இல: 09 (21/முஹர்ரம்/1445)

தலைப்பு: ஒரு முஸ்லிமைக் காஃபிர் அல்லது முர்த்தத் மற்றும் பித்அத்வாதி என்று தீர்ப்பளிப்பதன் வரைமுறைகள் 

உரை ( التكفير وضوابطه) வழங்கியவர்: அல்லாமா டாக்டர் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்

தமிழாக்கமும் வெளியீடும்: islamiyapuram.blogspot.com

 


Instructions

  1. Do not use this translated book for commercial purposes.
  2. Do not modify or recreate this PDF by adding your cover pages, logos and banners with or without tweaking, distorting and editing something in this book.
  3. You do not need our permission to share this electronic pdf document across the various internet platforms such as Websites, Facebook, Telegram/Whatsapp etc for free of charge.
  4. We are only responsible for what we have published in this version of the translated book which is available on our official blog (islamiyapuram.blogspot.com) and we do not take responsibility for the translated version of this book under our name but different publishings which are available with or without as modified pdf or any other formats and we never allowed it to anyone.



 

ஒரு முஸ்லிமைக் காஃபிர் அல்லது முர்த்தத் மற்றும் பித்அத்வாதி என்று தீர்ப்பளிப்பதன் வரைமுறைகள் 



ஆசிரியர்:


அல்லாமா டாக்டர் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான்



தமிழாக்கமும் வெளியீடும்:


islamiyapuram.blogspot.com



உள்ளடக்கம்:



அறிமுகம் 


தக்ஃபீர் (ஒரு முஸ்லிமைக் காஃபிர் அல்லது முர்த்தத்
என்று தீர்ப்பளிப்பது) உடைய விடயம் 


தப்தீ (ஒரு முஸ்லிமைக் பித்அத்வாதி என்று தீர்ப்பளிப்பது) உடைய விடயம் 


தஃப்ஜீர் (குண்டுவெடிப்புகள்) உடைய செயல்களைச்
செய்பவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களாவர்.


கேள்வி பதில்கள்


பின்குறிப்பு




அறிமுகம்

எல்லாப் புகழும் அனைத்துப் படைப்புகளின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது. நமது நபிகள் நாயகம் முஹம்மது மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், அவருடைய தோழர்கள் மீதும், இறுதித் தீர்ப்பு நாள் வரை அவர்களைச் சிறந்த முறையில் பின்பற்றுபவர்கள் மீதும் அருளும் ஈடேற்றமும் உண்டாவதாக.


பின்வருமாறு,


உண்மையில் தலைப்பின் பொருள் மிகவும் பாரதூரமான பிரச்சினையாகவும், மேலும் நிச்சயமாக  அது பற்றி பழைய, புதிய என நிறைய விவாதமும் உள்ளது. இது புரிதல்களுக்கும் வழிவகுத்தது மேலும் தவறுகளையும் ஏற்படுத்தியது. நிச்சயமாக, இது ஒருவரையொருவர் கொல்லவும், சமுதாயத்தைப் பிரிக்கவும் வழிவகுத்தது.



தக்ஃபீரின் விடயம்.

நிச்சயாமாக, இந்த தக்ஃபீர், தப்தீ மற்றும் தஃப்ஸீக் பற்றிய தலைப்பானது (மக்களிடையே) அறிவும், ஆழ்ந்த புரிதலும் இல்லாதவைகளாக உள்ளது; மேலும் அதன் தீவிரத்தன்மை காரணமாக அறிஞர்கள் அதைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர்.


எனவே, இந்த உம்மத்திலிருந்து ஏற்படும் ஆபத்திலிருந்து விடுபடும் நோக்கத்திற்காகவும், இந்த விவகாரத்தில் பொய்யிலிருந்து உண்மையைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்காகவும், இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துவது தொடர்பான புத்தகங்களை அறிஞர்கள் எழுதியுள்ளனர். இது ஒரு நபரின் இஸ்லாத்தை மறுக்கக்கூடியது. அத்துடன் இஸ்லாத்தை முறித்துவிடக் கூடிய காரியங்களிலும் சிறியவையான; பெரும் பாவங்களைச் செய்பவர் மீதான தீர்ப்பாகவும் இருக்கிறது..


எனவே, கல்வித்திறம் இல்லாதவர்கள், அல்லது அதன் பொது விதிகள் மற்றும் சட்டங்கள் பற்றி உறுதியாக தெரியாதவர்கள் அல்லது அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பற்றி கைரா (கண்ணிய உணர்வு) இல்லாமல் அலட்சியம் காட்டுபவர்கள் இதைப் பற்றி பேசக்கூடாது. இந்த விஷயத்திலும் அவர் நுழையக்கூடாது.


ஏனெனில், அதன் விளைவாக, கேடுகெட்ட சித்தாந்தங்களும், வழிகெட்ட பிரிவுகளும் அல்லாஹ்வின் மார்க்கத்தினுள் ஊடுருவும்; அப்போது உண்மை பொய்யாகக் கருதப்படும், மேலும் மார்க்கத்தில் இல்லாதவை உம்மத்தின் மீது சுமத்தப்படும்; அதிலிருந்து இல்லாதது மார்க்கத்தில் நுழையும்.


இந்த விஷயமானது, யாருக்கு மார்க்க அறிவான மர்பா (அதாவது, தனது ஐந்து புலன்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கற்றுக்கொள்வது), மற்றும் பஸீரா (அதாவது, வலுவான புரிதல் மற்றும் நுணுக்கமான அறிவு) இல்லையோ அவர் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவது ஹலால் அல்ல. அல்லாஹ் மற்றும்/அல்லது அவனது தூதர் (ஸல்) அவர்களால் முர்த்தத் என்று இஸ்லாத்தை முறித்துவிடக் கூடிய காரியங்களில் ஒன்றைச் செய்ததன் காரணமாக அறிவிக்கப்பட்ட ஒருவரைத் தவிர வேறு யாரும் முர்த்தத் ஆக அறிவிக்கப்படக்கூடாது. இது அறிவுள்ள மக்களிடையே ஒப்புக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது.


இதன் காரணமாக, பேசுவதற்கு முன் கற்றுக்கொள்வது முஸ்லிமான ஒருவர் மீது கடமையாகும்; அதாவது மார்க்க அறிவின் அடிப்படையிலேயே அல்லாமல் அவர் பேசக்கூடாது; இல்லையெனில், அவர் ஒரு முஸ்லிமை முர்த்தத் ஆக ஆக்கி வைத்து விடுவார். மேலும் இதனால் அவர் இரண்டு பெரிய குற்றங்களை தெளிவாக செய்திருப்பார்; இரண்டில் ஒன்று மற்றதை விட ஆபத்தானது. அல்லாஹ்வைப் பற்றி அறிவு இல்லாமல் பேசுவதே அதுவாகும். மிக உயந்தோனான அல்லாஹ் கூறுகிறான்:


 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا

 அல்லாஹ்வின் மீது பொய்யை ஏற்றிச் சொல்பவனைவிட அல்லது அவனுடைய சான்றுகளைப் பொய் என வாதிடுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?

(அல்குர்ஆன்: 6:21)


மேலும், மிக உயந்தோனான அவன் கூறுகிறான்:


 قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ

 (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி! பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்!”

(அல்குர்ஆன்: 7:33)


எனவே, அறிவு இல்லாமல் அல்லாஹ்வுக்கு எதிராக வைக்கப்படும் கூற்றானது ஷிர்க்கை விட ஆபத்தானது, ஏனெனில் அவன் (மேலே உள்ள வசனத்தில்) அதை ஷிர்க்கிற்குப் பிறகு குறிப்பிட்டான். மேலும் மிக உயந்தோனான அவன் கூறுகிறான்:


 وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا

 (நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக  செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.

(அல்குர்ஆன்: 17:36)


எனவே, ஒரு நபர் பேசுவதற்கு முன்பு கற்றுக்கொள்வது அவசியமாகும் மேலும் அறிவானது கூற்றுக்கள் மற்றும் செயல்களுக்கு முந்தியதாகும். உயர்ந்தோன் கூறுகிறான்:


 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ‌ 

 ஆகவே (நபியே!) நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துகொள்வீராக! உம்முடைய பாவத்திற்காகவும், விசுவாசங்கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங்கொண்ட பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக!

(அல்குர்ஆன்: 47:19)


எனவே, கற்றலானது, கூற்றுகள் மற்றும் செயல்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்று  அல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளான்.


குறிப்பாக மார்க்கம் மற்றும் அகீதாவுடைய விஷயங்கள் பற்றி; அறிவின் அடிப்படையில் கட்டமைக்கப்படாத கூற்றானது ஒரு பொய்யான கூற்று ஆகும். அது அல்லாஹ்வுக்கு எதிரான பொய் ஆகும். இது முதலாவது ஆபத்தான குற்றமாகும்; இது அல்லாஹ்வைப் பற்றிய அறிவு இல்லாத கூற்றாகும்.


இரண்டாவது குற்றம், அந்த நபர் இந்த முஸ்லிமுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டது ஆகும். அவர் அவரை முர்த்தத் என்று அறிவித்து, இஸ்லாம் மார்க்கத்திலிருந்து அவரை வெளியேற்றுகிறார், மேலும் இது பின்வரும் தீர்ப்புகளை கொண்டு வரும்:


அவனுடைய மனைவி அவனிடமிருந்து தனை பிரிந்து செல்வாள் என்று அது கொண்டுவருகிறது. அதனால் அவள் அவனுடன் உட்காரவுமாட்டள்.


ஒரு முஸ்லீம் உறவினரிடமிருந்து அவர் வாரிசுரிமை பெற முடியாது, அல்லது அவர் உயிலை வழங்க முடியாது என்பதையும் இது கொண்டு வருகிறது.


அவர் இறக்கும் போது அவர் குளிப்பட்டப்பட மாட்டார் அல்லது அவர் கபனிடப்பட மாட்டார் என்பதையும் இது கொண்டு வருகிறது.


மேலும் அவர் மீண்டும் தொழுவிக்கப்பட மாட்டார்.


அவருக்காக துவாவும் செய்யப்படாது.

.

முஸ்லிம்களின் மையவாடியில் அவர் அடக்கம் செய்யப்படவும் மாட்டார்.


எனவே, அநியாயமாக ஒரு முஸ்லிமை மதம் மாறியவராக யார் அறிவித்தாரோ; அவர்தான் அப்போது இந்த விஷயங்களை மொத்தமாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் இந்த விவகாரங்கள் அவரது பேச்சு மற்றும் கூற்றுக்களால் (முஸ்லிமுக்கு எதிராக) கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.


எனவே, நிராகரிப்புக்கு உட்பட்ட/உட்படாத விடயங்கள் எவையெவை மற்றும் ரித்தத் (முஸ்லிமாக இருந்து பின்னர் நிராகரிப்புக்கு மாறுதல்) என்றால் என்ன என்பதை மக்கள் கற்றுக்கொள்வது அவசியமாகும்.


அவர் இதைக் கண்டிப்பாகக் கற்று கொள்ள வேண்டும். அத்துடன் அறியாமையால் பேசக்கூடாது. இல்லையெனில், அவருடைய நிலையில் (இஸ்லாத்தில்) இருந்து கொண்டே அவரை எதிர்க்கும் எவரையும் அவர் நிராகரிப்பாளர் என்று நம்புவார். இருப்பினும் ஒரு நபர் மீது அவருடைய ரித்தத் ஆனது அல்லாஹ்வின் புத்தகத்தினாலும் அவனது தூதரின் உண்மையான சுன்னாவினாலும் அல்லது முஸ்லிம்களின் (அதாவது நபித்தோழர்களின்) ஒருமித்த கருத்தினாலும் நிறுவப்பட்டாலே தவிர எவரும் மற்றொருவரை முர்த்தத் (முஸ்லிமாக இருந்து பின்னர் நிராகரிப்புக்கு மாறியவர்) என்று அறிவிக்கக்கூடாது


இது பற்றிய அறிவு எங்கிருந்து எடுக்கப்பட்டது? புத்தகங்களைக் கவனிப்பதன் மூலமும், வாசகங்களை மனப்பாடம் செய்வதன் மூலமும் எடுக்கப்பட்ட அறிவா?, இல்லை. அறிவில் சிறந்து விளங்கும் அறிஞர்களான; கல்வியறிவுடையவர்களிடமிருந்தே தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் அறிவைப் பெறக்கூடாது


புத்தகங்களை வாசிப்பதன் மூலமோகவோ அல்லது வெறுமனே அவற்றிலுள்ள வாசகங்களைப் பரீட்சித்து அவற்றை மனப்பாடம் செய்வதன் மூலமாகவோ மார்க்க அறிவை எடுக்கக்கூடாது. அவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்ட நூல்கள் ஏராளமாக இருந்தாலும் சரி.


எனவே, நூல்களை மனப்பாடம் செய்த அனைவரையும், அதாவது "அவர் குர்ஆனை மனப்பாடம் செய்தவர், அவர் ஹதீஸில் இருந்து அதிகம் மனனம் செய்துள்ளார்; அதனால் அவர் ஒரு அறிஞர்" என்று சொல்ல முடியாது.


அதன் காரணமாக அவர் அறிஞர் ஆவதில்லை. அறிஞர் எனப்படுபவர் ஒரு ஃபகீஹ் மட்டுமே ஆவார். அறிவு என்பது அல்லாஹ்வின் மார்க்கத்தில் ஃபிக்ஹ் ஆகும்புகஹாக்களிடமிருந்தும் (அதாவது, மார்க்கத்தில் போதிய அறிவைப் பெற்ற அறிஞர்கள்), மேலும் அவர் மனப்பாடம் செய்து படித்து வைத்திருக்கும் இந்த நூல்களின் அர்த்தத்தை அவருக்குத் தெளிவுபடுத்தும் அறிவுடையவர்களிடமிருந்தும் படித்துக் கற்றுக் கொள்வதன் மூலமுமே தவிர இது சாத்தியமில்லை.


எனவே, அல்லாஹ்வின் புத்தகத்திற்கோ அல்லது அவனது தூதரின் (ஸல்) உண்மையான சுன்னாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு தூரமான புரிதலுடன் அவர் நூல்களைப் புரிந்துகொண்டிருக்கலாம்.


அவர் அறிவுடைய மக்களிடம் திரும்பியிருந்தால்; அப்போது, அவருக்குத் தவறான புரிதல் மற்றும் தவறான கருத்து இருப்பதை நிச்சயமாக அவர்கள் அவருக்குத் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.


அறிவுடைய மக்களிடம் திரும்புவதும், அவர்களிடமிருந்து பயனுள்ள அறிவைக் கற்றுக்கொள்வதும் அவர் மீது கடமையாக இருந்தது, எனவே அவரது சொல்லும், செயலும் மற்றும் தீர்ப்பும் ஆழமான விளக்கத்தின் மீது அமைந்திருக்கிறது. மேலும் அவர் கற்று அல்லாஹ்வின் மார்க்கத்தில் ஃபிக்ஹைப் பெறும்போது, ஒரு நபரின் இஸ்லாத்தை மறுக்கும் விஷயங்களை அவர் தெரிந்துகொள்கிறார்.


இஸ்லாத்தில் இருந்து முஸ்லிமை நீக்கும் விஷயங்கள் என்ன?, எனவே, ஒரு நபர் மீது தீர்ப்பு வழங்குவதற்கு முன் அவர் கவனமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம் ஆகும். குஃப்ர், ஷிர்க், அல்லது மார்க்கத்தை விட்டு வெளியேறுதல் போன்ற செயலை அவர் செய்திருப்பதன் மீது தீர்ப்புக் கூறப்படும். இந்த நபர் தொடர்பாக சட்டரீதியான முடிவை அவர் பயன்படுத்துகிறாரா என்பதை அவர் உறுதிப்படுத்துவது அவசியம்.


எனவே, முதலில், இதை உறுதிப்படுத்துவது அவசியம்.


நபித்தோழர்களில் இருந்து ஒரு குழு சில பயணங்களுக்குப் போய்கொண்டிருந்தார்கள், மேலும் ஒரு நபர் ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தை சாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றார், எனவே அவர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறினார். அவர் காஃபிர் என்ற நிலைப்பாட்டின் பேரில் அவர்கள் அவரைக் கொல்ல விரைந்தனர். அவர்கள் அவருடைய ஆடுகளை எடுத்துக்கொண்டு, அதைச் செய்ய விரைந்தார்கள்.


எனவே மிக உயந்தோனான அல்லாஹ் தனது கூற்றை வெளிப்படுத்தினான்:


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَـيَّـنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَ لْقٰٓى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا‌ ۚ تَبْـتَـغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ‌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَـيَّـنُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا

 விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (வழியில் எதிர்ப்படுவோர் யார் என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்உங்களுக்கு ஸலாம் கூறியவரை இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் தேடியவர்களாக, “நீ விசுவாசியல்லஎன்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்அல்லாஹ்விடத்தில் ஏராளமான போர்ப்பரிசுகள் இருக்கின்றன, இதற்கு முன்னர், நீங்களும் இவ்வாறே (பயந்து கொண்டு) இருந்தீர்கள்அப்போது அல்லாஹ் உங்கள் மீது பேருபகாரம் செய்தான், ஆகவே, (உங்கள் முன் இருப்பவர்கள், விசுவாசிகளா அல்லவா என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்,   நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 4:94)


எனவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக இருக்கும் போதே அவர்களை அவன் கண்டித்தான், அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விஷயங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்தல், சரிபார்த்தல் மற்றும் மக்கள் மீது தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படாமல் இருப்பதுடன், மேலும் ஆழமான புரிதல் மற்றும் கவனமான ஆலோசனை ஆகியவை கடமைகளாகும்.


உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்ஹுரகா' கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டபோது அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக்கொண்டார்.

நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், “உசாமாவே! அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தம்மைத் தற்காத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார்என்று சொன்னேன்

(ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவுக் கென்றால், நான், “(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)' என்றுகூட நினைத்தேன்

(ஸஹீஹுல் புஹாரி 6872)


ஏனெனில், தன்னைப் பற்றி தூதர் (ஸல்) அவர்களின் மறுப்பிலிருந்து அவர் (ரழி) கண்டவற்றின் தீவிரம்; விஷயங்களைக் கண்டறிவது, சரிபார்ப்பது மற்றும் மக்கள் மீது தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படாமல் இருப்பது ஒரு கடமை என்று அவர் (ஸல்) சுட்டிக்காட்டினார்கள்.


ஒரு நபரின் நிலையைக் கண்டறிய அறிவின் அடிப்படையிலான தீர்ப்பு அவசியம். எவரேனும் தனது இஸ்லாத்தை வெளிப்படையாகக் காட்டி, ஷஹாதத்தினை உச்சரித்திருந்தால், அவரிடமிருந்து இஸ்லாத்திற்கு முரணான ஒன்று ஏற்படும் வரை, இந்த மாபெரும் ஹதீஸ் குறிப்பிடுவது போல, அவரிடமிருந்து விலகி இருப்பது கட்டாயமாகும். அவர் அல்லாஹ்வை வணங்குவதில் ஷிர்க் செய்தால், அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்தால், அல்லது அறிவுள்ள மக்களால் அறியப்பட்ட இஸ்லாத்தை முறிக்கும் காரியம் ஒன்றை அவர் செய்தால், அந்த நேரத்தில் அவர் மீது ரித்தத் அறிவிக்கப்படும்.


கூடுதலாக, இஸ்லாத்துக்கு மாறான எதுவும் அவரிடமிருந்து வெளிப்படாத வரை; அப்போது, நிச்சயமாக நாம் அவரைப் பற்றி ஒரு சாதகமான கருத்தை கொண்டிருக்க வேண்டும்; அவரிடமிருந்து ஷிர்க் அல்லது சிறிய குஃப்ரை விட குறைந்த சில மாறுசெய்தல்கள் ஏற்பட்டாலும் சரி.


ஒரு பாவம் அல்லது ஒரு மாறுசெய்யும் செயல் ஏற்பட்டதைப் போலவே, இஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியமாக இஸ்லாத்தில் அறியப்பட்டு அறிவுடையவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்ட, மேலும் இதற்காக அவருக்கு ஒரு மன்னிப்பு இல்லாத கரியம் ஒன்றை அவர் செய்யும் வரை, நிச்சயமாக குஃப்ர் (அதாவது, பெரிய நிராகரிப்பு) அறிவிக்கப்படக்கூடாது


ஒருவேளை அவர் அறியாமல் இருக்கலாம், ஒருவேளை அவர் இஸ்லாம் மார்க்கத்திற்குப் புதியவராக இருக்கலாம். அவர் செய்த இந்தக் காரியம் குஃப்ர் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும், நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு ஹுனைன் படையெடுப்பிற்குச் சென்றபோது, மக்காவில் வசிப்பவர்களிலிருந்த இஸ்லாத்திற்குப் புதியவர்களான சிலர் அவருடன் (ஸல்) வெளியேறிச் சென்றனர். அவர்களில் அபு வாகித் அல்-லைதி (ரழி) யும் இருந்தார். அதாவது அவர்கள் சமீபத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தனர்.


பின்னர் அவர்கள் முஷ்ரிகீன்கள் (அதாவது, இணைவைப்பாளர்கள்) ஒரு மரத்தை எடுத்துக்கொண்டு அதைச் சுற்றி இஃதிகாஃப் இருப்பதைப் பார்த்தார்கள், மேலும் அவர்கள் தங்கள் ஆயுதங்களை அதன் மீது தொங்கவிட்டனருந்தனர். அதைப் பற்றி "தாது அன்வாத்" என்று கூறப்பட்டது. அதில் அருள்வளம் இருப்பதாக நம்பி அதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு, அதில் தங்கள் ஆயுதங்களைத் தொங்கவிட்டு, அதன் மூலம் வரம் தேடுவார்கள். எனவே இஸ்லாத்திற்கு புதியதான இந்த நபர்கள் கூறினார்கள்:


‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்குதாது அன்வாத்' இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒருதாது அன்வாத்' ஏற்படுத்தித் தாருங்கள்'' என்றனர்.


எனவே அவர்களின் அறியாமையின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் அவர்களை நிராகரிப்பவர்களாகக் கருதவில்லை.


நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹு அக்பர்!, அல்லாஹு அக்பர்!, அல்லாஹு அக்பர்!, நிச்சயமாக இது ஸுனனாக இருக்கிறது! என் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக!, ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்என்று மூஸா (அலை) அவர்களிடம் இஸ்ராயீலின் மக்கள் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள்! அவர் (மூஸா) கூறினார்நிச்சயமாக நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்கள்’.”


(முஸ்னத் அஹமத் 6/255, 21897, சுனன் திர்மிதி 4/412, 2180)


எனவே, தூதரவர்கள் (ஸல்) அவர்களைக் கண்டித்து, அவர்களின் இந்த கூற்று இஸ்ராயீலின் சந்ததியினர் மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போன்றது என்று தெளிவுபடுத்தினார்கள். எனினும், (இஸ்லாத்துக்குப் புதியவர்களான) அவர்கள் தீர்ப்பை (குஃப்ர், ஷிர்க் பற்றிய விதிமுறைகளை) அறியாததால், அவர் (ஸல்) அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அது ஷிர்க்கிலிருந்து உள்ளதாகும்; இருப்பினும் அவர் (ஸல்) அவர்களின் அறியாமையைப் பகுத்தாய்ந்து, அறியாமையின் காரணமாக அவர்களை மன்னித்தார்கள; அதனால் அவர்களை நிராகரிப்பாளர்களாக அவர் (ஸல்) கருதவில்லை.


இஸ்லாத்தின் விதிகளைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படாத; இஸ்லாத்திற்கு புதியவராக யாராவது இருந்து, மேலும் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தும் விட்டால், அப்போது ஆம், அது வெளிப்படையான ஷிர்க் மற்றும் பெரிய குஃப்ராக இருந்தாலும் அவருக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் மற்றும் அதனை முறிக்கக்கூடியவை அவருக்கு விளக்கப்பட வேண்டும்.


எனவே, அவர் இந்த விஷயத்தில் தொடர்ந்து நீடித்திருந்து; அதை விட்டுவிடவில்லை என்றால், அவர் காஃபிராக அறிவிக்கப்பட வேண்டும்.


எனவே, இந்த விஷயங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும், ஏனெனில் நிராகரிப்பின் தீர்ப்பை வெளியிடுபவர் அறியாதவராக இருக்கலாம். எனவே அவர் அறியாமையின் அடிப்படையில் மக்கள் மீது தீர்ப்பை வழங்குகிறார், ஒருவேளை முர்த்தத் என்று அறிவிக்கப்பட்டவர்; அது (இஸ்லாமிய மார்க்கம் மற்றும் அதனை முறிக்கக்கூடியவை) அவருக்கு தெளிவுபடுத்தப்படும் வரை இந்த தீர்ப்புக்கு தகுதியற்ற அப்பாவியாக இருக்கலாம்.


(இந்த) விவகாரங்களில் உறுதிப்படுத்தல் மற்றும் விசாரணை செய்தல் இன்றியமையாதது ஆகும், அதே போல் மேலும் இந்த விஷயம் மற்றும் இந்த நபரைப் பற்றி அவர் எவ்வாறு தீர்ப்பளிக்கப்பட வேண்டும்? என்று அறிவுள்ளவர்களிடம் கேட்டு, அறிவுடையவர்களிடம் திரும்புவதும் இன்றியமையாதது ஆகும்.


யாரேனும் ஒருவரை; அவர் நிராகரிப்பாளராக இருக்கிறார் என்று பிரகடனப்படுத்தி, மேலும் மார்க்கத்திலிருந்து அதனை ரத்து செய்பவை (அதாவது அவர் செய்த இஸ்லாத்தை முறிக்கக் கூடிய காரியங்கள்) அவருக்குச் சொந்தமில்லாத உரிமைகள் என்று அவருக்குத் தெரியாத நிலையில்; அவரை (மார்க்கத்திலிருந்து) நீக்குவதற்கு; அறிவைக் கற்க ஆரம்பித்துள்ள எந்த ஒரு புதிய மாணவருக்கோ அல்லது எதையேனும் வாசிப்பவருக்கோ உரிமை இல்லை. எனவே, இந்த விஷயம் மிகவும் ஆபத்தானது.


எனவே, இந்த விஷயத்தில் (அதாவது, ஒரு முஸ்லிமை அநியாயமாக முர்த்தத் என்று அறிவிக்கும் விஷயத்தில்) விழுந்திருக்கும் ஒவ்வொருவரின் மீதும் இது ஒரு கடமையாகும். அவர் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மனந்திரும்ப வேண்டும், மேலும் அவர் தனது நாக்கை தக்ஃபீரில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும், மேலும் அவர் பேசுவதற்கு முன் கற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அறிவுடைய மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


அவர் விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும், மேலும் நபரின் சூழ்நிலையை பகுப்பாய்வு செய்ய வேண்டும். (மார்க்கத்தின்படி சலுகையளிக்கப்பட்டு) அவர் மன்னிக்கப்படுகிறாரா அல்லது மன்னிக்கப்படவில்லையா? (என்றும் பார்க்க வேண்டும்) எனவே, இந்த விவகாரங்களில் விரிவான விபரங்கள் மற்றும் மார்க்கத்தில் ஃபிக்ஹ் தேவை; ஏனென்றால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்தால் - அநியாயமாக அவரைக் கொல்வது மிகப்பெரிய குற்றமாக இருந்தாலும், அவரை அநியாயமாக முர்த்தத் என்று நீங்கள் அறிவிப்பதை விட அது குறைவான குற்றமாகும். வேண்டுமென்றே ஒரு விசுவாசியைக் கொல்வது அதைப் பற்றிய கடுமையான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது:


 وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا

 மேலும், எவர், விசுவாசியை, வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும்அதில் அவர் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர், இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு அவரைச் சபித்தும் விடுவான்மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 4:93)


இரத்தம் மற்றும் மார்க்கத்தின் இந்த புனிதத்தன்மை மிகப் பெரியது. எனவே நீங்கள் அவரை இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேற்றுவது அல்லாஹ்வின் பார்வையில் அவரைக் கொலை செய்வதை விட மிகக் கடுமையானது. அவருடைய செல்வம் முழுவதையும் நீ எடுத்துச் சென்றாலும், அதைப் பறிமுதல் செய்தாய்; இது ஹராம். தூதர் (ஸல்) கூறினார்கள்,


நிச்சயமாக, உங்கள் இரத்தம், உங்கள் சொத்து மற்றும் உங்கள் மானம் (என்பன இன்னொரு முஸ்லிமுக்கு) ஹராம் ஆகும்.”

(ஸஹீஹுல் புஹாரி 1/61, 105)


நீங்கள் அவருடைய செல்வம் அனைத்தையும் அடக்குமுறையாக எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அது அவர் மீது பெரிய நிராகரிப்பு அல்லது ரித்தத் ஆன செயலைச் செய்ததாக அதற்குத் தகுதியற்றவரான அவரைக் குறித்துத் தீர்ப்பளிப்பதை விடக் கனம் குறைந்தது. (எனவே தக்ஃபீர் அதனை விடவும் கனதியான பெரிய குற்றமாகும்)


அந்த நபர் இஸ்லாம் மார்க்கத்திற்கு துரோகம் இழைத்து இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் (முர்த்தத்) என்று நீங்கள் அறிவிக்கிறீர்கள் அல்லது அவர் ஒரு பெரிய நிராகரிப்பைச் செய்ததால் அவர் மார்க்கத்தை விட்டு வெளியேறினார் என்றோ அல்லதுகாஃபிரே’, ‘அல்லாஹ்வின் எதிரியேஅல்லதுநயவஞ்சகனேஎன்றோ அவர் அதற்குத் தகுதியில்லாத நிலையில் நீங்கள் கூறுவீர்களானால், அப்போது ஆம், ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராகத் திரும்பும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


எவர் தன் (முஸ்லிம்) சகோதரனிடம், ‘காஃபிரே’, ‘நயவஞ்சகனே’, ‘பாவியேஅல்லதுஅல்லாஹ்வின் எதிரியே' என்று கூறினால், அது அவருக்கு எதிராகத் திரும்பும்.”

(ஸஹீஹ் முஸ்லிம் 1/79) 


பொருள்; இந்தக் கேவலமான பேச்சின் பாவம் சொன்னவனுக்கு திரும்ப வரும் என்பதாகும். யாரைப் பற்றிச் சொல்லப்படுகிறதோ அவர் அதற்குத் தகுதியற்றவராக இருந்தால் அது அவருக்குத் திரும்பாது. நீங்கள் உங்களுக்கு எதிராக மட்டுமே குற்றம் செய்கிறீர்கள்.


எனவே அல்லாஹ்வின் மீதான தக்வா (இறையச்சம்) வேண்டும். முஸ்லீமே! உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள், தகுதியில்லாத ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று கூறாதீர்கள்; அத்துடன் இந்த விஷயத்தில் அவசரப்பட வேண்டாம்; மேலும், இஸ்லாத்தின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்ட ஒருவர், ஒரு பெரிய நிராகரிப்புச் செயலைச் செய்ததாக அறிவிப்பதைத் தொடர்வதற்கு முன், இந்தப் பிரச்சினை தொடர்பான அறிவும் ஆழ்ந்த விளக்கமும் உள்ளவர்களிடம் திரும்பவும்.


உம்மத்தின் தக்ஃபீரில் முதலில் விழுந்தவர்கள் கவாரிஜ்கள் ஆவர். கவாரிஜிகளான அவர்களின் ஃபித்னா நபியின் (ஸல்) காலத்தில் வெளிப்பட்டது, அங்கு அவர்களில் ஒரு மனிதர் நபியவர்கள் (ஸல்) ஹுனைனிலிருந்து திரும்பிய பிறகு கனீமத் பொருட்களைப் பிரித்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம் வந்தார்.


எனவே அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்முஹம்மதே! நீதியாக நடந்து கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் நீதியானவராக இல்லைஎன்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘கேடுதான் உனக்கு!, நானே நீதியாக நடக்கவில்லை எனில் வேறு யார்தான் நீதியாக நடப்பவர்?” என்று கூறினார்கள். பின்னர் அவர் (ஸல்) கூறினார்கள் ‘‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு மக்கள் தோன்றுவார்கள். உங்களுடைய தொழுகையையும் அவர்களுடைய தொழுகையையும் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள், உங்களுடைய நோன்பையும் அவர்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள், அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து அம்பு வெளியேறிவிடுவதைப்போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்.

(ஸஹீஹ் புகாரி 172, 6163)


அவர்களின் தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் மற்றும் அல்லாஹ்வை நினைவு கூர்தல் போன்றன மிகுதியாக இருந்தாலும்; இன்னும், அவர்கள் முஸ்லிம்களை முர்த்தத்கள் என்று அறிவிக்கத் தொடங்கியபோது, அவர்கள் மார்க்கத்தின் எல்லையை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள், ஏனென்றால் அவர்கள் அதற்குத் தகுதியற்றவர்களை முர்த்தத்கள் என்று அறிவித்தார்கள். எனவே, எவர் ஒருவர் மீது ரித்தத்தை; அவர் அவ்வாறு இல்லாதபோது பிரகடனம் செய்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய கவாரிஜிகளைச் சேர்ந்தவர் ஆவார்.


"நீங்கள் அவர்களை எங்கு கண்டாலும், அவர்களைக் கொன்று விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவர்களை அடைந்திருந்தால் "ஆத்" (சமுதாயம்) கொல்லப்பட்டதைப் போல் நான் அவர்களைக் கொன்றிருப்பேன்.” (ஸஹீஹுல் புகாரி 3344)


மேலதிகமாக, விசுவாசிகளின் தலைவரின் ஆட்சியின் போது நிகழ்ந்தது, அலி (ரழி); அவருக்கும் ஷாம் மக்களுக்கும் இடையே ஸிஃப்பீனில் நடந்த போர், ஷாம் மக்கள் நடுவர் மன்றத்தைக் கோரினர். அவர்கள் குர்ஆனின் நகல்களை கம்புகளில் எழுப்பினர், மேலும் அவர்கள் குர்ஆனுக்குத் திரும்ப விரும்பினர், எனவே அலி (ரழி), "உண்மையில், இது ஒரு தந்திரம்" என்று கூறினார்.


பிறகு, கவாரிஜிகள் எழுந்து நின்றார்கள், அவர்கள் அலியின் (ரழி) படையில் சமூகம் கொடுத்திருந்தனர், எனவே அவர்கள் கூறினார்கள் "இது ஒரு தந்திரம் மட்டுமே." (பின்னர் கவாரிஜுகளான) அவர்கள் கூறினார்கள் "நாங்கள் அவர்களுடன் சண்டையிடுவதை நிறுத்துவது அவசியம்." அலி (ரழி) கூறினார், "நிச்சயமாக இது ஒரு தந்திரம் மட்டுமே." அவர்கள் கூறினர், "இல்லை, நாங்கள் அவர்களுடன் சண்டையிடுவதை நிறுத்துவது அவசியம்." அதனால் அவர்களுடன் போரிடுவதை நிறுத்தினார். பின்னர், அவர்கள் நபித்தோழர்களிலிருந்து இரண்டு பேரை அவர்களுக்கு இடையே தீர்ப்பளிக்க ஏற்பாடு செய்தனர்.


எனவே அவர்கள் தீர்ப்பளிக்கும் போது, கவாரிஜ்கள் அவர்களின் தீர்ப்பைப் பொருந்திக்கொள்ளவில்லை. அவர்கள் அலிக்கு (ரழி) எதிராக கிளர்ச்சி செய்து, அவரை முர்த்தத் என்று அறிவித்தனர். அவர்கள் கூறினார்கள்:


நிச்சயமாக நீங்கள் மனிதர்களை தீர்ப்பளிக்கும் நடுவர்களாக நியமித்துள்ளீர்கள். அனால் அல்லாஹ் கூறியிருக்கிறான்:


 ‌ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ؕ‌ۚ

 அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை,.

(அல்குர்ஆன்: 12:67)”


எனவே மனிதர்களை தீர்ப்பளிக்கும் நடுவர்களாக நியமித்திருக்கும் நீங்கள் ஒரு நிராகரிப்பாளர்.”


எனவே அவர்கள் அலியை (ரழி) முர்த்தத் என்று அறிவித்தார்கள். அவருடைய தோழர்களையும் முர்த்தத்கள் என்று அறிவித்தார்கள். அவர்கள் அவருக்குக் (ரழி) கீழ்ப்படிவதில் இருந்து விலகினார்கள், மேலும் அவர்கள் ஹூரூரா என்ற இடத்தில் ஒன்று கூடினர்.


இதனால், அலி (ரழி) தனது சிறிய தந்தையின் மகனான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸை (ரழி) அவர்களுடன் விவாதம் செய்வதற்கும், அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், அவர்களின் தவறுகளை தெளிவுபடுத்தவும் அனுப்பி வைத்தார்கள். அவர்களில் ஆறாயிரம் பேர் திரும்பி வந்து விட்டனர், அவர்களில் பலர் தங்களின் வழிகேட்டிலும், விசுவாசிகளின் தலைவரான அலி இப்னு அபு தாலிப் (ரழி) மற்றும் அவருடன் இருந்த நபித்தோழர்களின் தக்ஃபீரின் மீதும் உறுதியாக இருந்தனர்.


இதன்போதே முதாவது தக்ஃபீர் தொடங்கியது; எனவே நஹ்ரவான் போரில் அலி (ரழி) அவர்கள் அவர்களுடன் போரிட்டார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு எதிராக அவருக்கு (ரழி) உதவினான், மேலும் அவர் (ரழி) அவர்களை மிகப்பெரிய கொலையாக படுகொலை செய்து கொன்றார்கள். அதனால் அவருக்கு வெகுமதி கிடைத்தது, ஏனெனில் தூதர் (ஸல்) அதை அவருக்கு அறிவித்திருந்தார்கள்.


இது இஸ்லாத்தில் தக்ஃபீரின் முதல் செயல் ஆகும், ஆனால் கவாரிஜி ஒவ்வொரு சகாப்தத்திலும் வெளிப்படுவதை நிறுத்தாது; மேலும் அவர்கள் முஸ்லிம்களை முர்த்தத்களாக அறிவிப்பார்கள், முஸ்லிம்கள் அவர்களைக் கொல்வதை நிறுத்த மாட்டார்கள். அவர்களிடமிருந்து வெளிப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டனர், அல்லாஹ்வுக்கே புகழ் உரித்தாகுக.


முஆவியா (ரழி) காலத்தில் தோன்றிய இவர்கள் அப்துல் மாலிக் இப்னு மர்வானின் காலத்திலும் தோன்றினார்கள். அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில், முஸ்லிம்களின் தேசங்களில் தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய போதெல்லாம் அல்லாஹ் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு உதவி செய்தான். நபி (ஸல்) அவர்கள் கூறியது போல்:


அவர்கள் ஈமானின் மக்களுக்கு எதிராகப் போரிடுகிறார்கள், மேலும் அவர்கள் சிலை வணங்கிகளை விட்டும் விலகி விடுகிறார்கள்.”

(ஸஹீஹுல் புகாரி 557, 3344 )


எனவே, அவர்கள் காஃபிர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை; ஆனாலும், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் கவாரிஜ்களின் சூழ்நிலை இதுதான். இந்த மத்ஹபைத் (அதாவது, சிந்தனைப் பள்ளி) தழுவி, முஸ்லிம்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும்/அல்லது முஸ்லிம்களின் அறிஞர்களுக்கு தக்ஃபீர் கொடுப்பவர்; அப்போது, நிச்சயமாக அவர் இந்த வழிதவறிய மற்றும் வழிகெட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


அவர்களுக்கு எதிராகப் போரிட வேண்டியது கட்டாயமாகும், ஆனால் அவர்கள் உண்மைக்குத் திரும்ப அழைக்கப்பட்ட பின்னரே (அவ்வாறு போரிடப்பட வேண்டும்). அப்படி அவர்கள் விடாப்பிடியாக இருந்தால், அலி இப்னு அபீ தாலிப் (ரழி) மற்றும் அவர்களுக்கு (கவாரிஜிகளுக்கு) எதிராகப் போரிட்ட முஸ்லிம்களின் தலைவர்களில் அவருக்குப் (ரழி) பின் வந்தவர்களைப் போல அவர்களை எதிர்த்து நிச்சயமாக போராடப்பட வேண்டும்.


இது கனமானது, மேலும் இது ஒரு தீய அறிகுறியாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுவது முஸ்லிமின் மீது கடமையாகும், மேலும் அவர் ரித்தத் அல்லது பெரிய குஃப்ர் பற்றிய அறிவு இல்லாமலும் யாரையும் விசாரிக்காமலும், உண்மைகளை உறுதிப்படுத்தாமலும் ஒரு தீர்ப்பை வழங்க மாட்டார்.


அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் முர்த்தத் என்று அறிவித்தவர்களைத் தவிர வேறு யாரையும் முர்த்தத் என்று அறிஞர்கள் கருதுவதில்லை.


மேலும், மார்க்க அறிவில் சிறந்து விளங்குபவர்கள், யாருடைய நிராகரிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, அல்லாஹ்வின் புத்தகத்திலும், அவனது தூதரின் (ஸல்) சுன்னாவிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறதோ, அவர்களைத் தவிர, யாரையும் முர்தத்களாக கருதமாட்டார்கள்.


அறியாமை, அவசரம் மற்றும் மார்க்க அறிவை முழுமையான விதத்தில் படிக்காதவர்களைப் பொறுத்தவரை, நிச்சயமாக அவர்களுக்கு மிகவும் ஹலாலான விஷயம் தக்ஃபீர் ஆகும்.


லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!


அவர்களின் கண்ணோட்டத்தையோ அல்லது அவர்களின் மத்ஹபையோ எவரேனும் எதிர்த்தார் என்றால் அவர்கள் முர்தத்களாக அறிவிக்கப்படுவார்கள். இது ஒரு மோசமான மற்றும் கண்டிக்கத்தக்க பண்பு ஆகும்.


முஸ்லீம்களை தக்ஃபீர் செய்வது (அதாவது, அவர்களை முர்த்தத் என்று அறிவிப்பது) ஒரு மிகப்பெரிய சறுக்கல் என்பது தெளிவாகத் தெரிகிறது, அது அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்கள் மீதுதான் கடமை ஆகும். அவர் அறியாதவராக இருந்தால், அவர் அறிவு இல்லாமல் பேசுவது ஹலால் அல்ல, மேலும் அவர் ஒரு அறிஞர் என்றால், உறுதிப்படுத்துவதும், மேலும் சரிபார்த்து, விசாரணை செய்து இந்த நபர் அல்லது இந்த குழு நிச்சயமாக இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்களா என்று கலந்தாலோசனை செய்து மேலும் மீள ஊர்ஜீதப்படுத்திய பின்னரே தவிர இந்த தீவிர தீர்ப்பின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அவர் மீது கடமையாகும்.


எனவே, இந்த தீவிரமான விஷயத்திலிருந்து அவரது நாக்கைக் கட்டுப்படுத்துவது முஸ்லிமின் மீது கடமையாகும்.


இந்த குணாதிசயங்கள் உள்ளவர்களை அவர் சந்திக்கவும் கூடாது, அவர்களுடன் பழகவும் கூடாது.


முஸ்லிம்களை முர்த்தத் என்று அறிவிக்கும் இந்த மதவெறிக் கும்பலை அவர் சந்திக்கக் கூடாது; ஏனென்றால் அவர் அவர்கள் மத்தியில் அமர்ந்தால், அவர் அவர்களைப் போல் ஆகிவிடுவார். மாறாக, அவர்களிடமிருந்து தன்னைப் பிரித்து, அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.


தபூக் பயணத்தில் நயவஞ்சகர்கள் சிலர் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். எனவே அவர்கள் தூதர் (ஸல்) மற்றும் அவரது தோழர்களைப் பற்றி பேசினர். அப்போது அவர்கள் கூறினார்கள்:


எங்களுடைய (குர்ஆன்) ஓதுபவர்களைப் போன்றவர்களை நாங்கள் பார்த்ததில்லை, அவர்கள் மக்களில் மிகவும் உண்மையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் முழுவதுமாக சாப்பிடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள், சண்டையிடும் நேரத்தில் அவர்கள் மிகவும் கோழைகளாக இருக்கிறார்கள்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அவரது தோழர்களைக் குறித்து அவர்கள் பேசுகிறார்கள் என்பது இதன் பொருள். விசுவாசிகளில் ஒரு வாலிபர், அவர்களுடன் இருந்தவர், பேசுகிறவரிடம் கூறினார்:


நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் ஒரு நயவஞ்சகர்களாக இருக்கிறீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) இதை அறிவிப்பேன்


அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக ஈமான் மற்றும் கைராவின் (மார்க்கத்தின் மீதான கண்ணிய உணர்வுடைய) இதயம் தம்மிடம் இருந்த காரணத்தால் அவர் அவர்களைக் கண்டித்திருந்தார். பின்னர் அவர் தூதருக்குத் (ஸல்) தெரிவிக்கச் சென்றார், ஆனால் வஹியானது அவரை முந்திவிட்டதைக் கண்டுகொண்டார்.


எனவே, அல்லாஹ் தனது தூதரைப் (ஸல்) பற்றி அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை; இந்த நபர் தனது தூதரை (ஸல்) அடையும் முன்னரே தெரிவித்து விட்டான்.


அந்த நபர்களின் விடயம் தொடர்பாக தூதருக்கு (ஸல்) வஹீ அறிவிக்கப்பட்ட போது, அவர் (ஸல்) படையினரை அந்த இடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார். எனவே அவர்கள் புறப்பட்டனர், நபி (ஸல்) தனது பெண் சவாரி ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருந்தார்கள், அந்த நபர்கள் அவரிடம் (ஸல்) விளக்கமளிக்கும் வகையில் வந்து, மேலும் அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ்வின் தூதரே, சாலையில் செல்வதால் ஏற்படும் சிரமத்தை எளிதாக்குவதற்காக மட்டுமே நாங்கள் அவ்வாறு கூறினோம்


தூதர் (ஸல்) தனது முகத்தைத் அவர்களின் பால் திருப்பிக் கொள்ளாமல், அவருடைய (ஸல்) ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்.


அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்:


அல்லாஹ்வின் தூதர் அவர்களே, சாலையில் செல்வதில் உள்ள சிரமத்தை எளிதாக்குவதற்கு மட்டுமே இந்தப் பேச்சு பயன்படுத்தப்பட்டது.”


தூதரவர்கள் (ஸல்) அவர்களைப் பார்க்கவில்லை, உயர்வான அல்லாஹ்வின் கூற்றை ஓதினார்கள்:


‌ؕ قُلْ اَبِاللّٰهِ وَاٰيٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ

அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன்: 9:65)


 لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ‌ 

 “நீங்கள் (செய்யும் பரிகாசத்திற்கு வீண்) புகல் கூற வேண்டாம்உங்களின் விசுவாசத்திற்குப்பின்னர், திட்டமாக (அதனை) நீங்கள் நிராகரித்தே விட்டீர்கள்,

(அல்குர்ஆன்: 9:66).


அவர்கள் (ஸல்) அவர்களைப் பார்க்கவுமில்லை, அல்லாஹ் சொல்லிவிட்டான் என்பதைச் சேர்க்கவுமில்லை (இறக்கப்பட்ட குர்ஆன் வசனத்தை மட்டும் அப்படியே ஓதினார்கள்). இங்கே விஷயம் என்னவென்றால், இந்த குழுவில் பேசியவர் ஒருவராக இருந்தார், மற்ற மக்கள் அவரைக் கண்டிக்கவில்லை, அமைதியாக இருந்தார்கள்; பின்னர் அல்லாஹ் அவர்களை ஒரு பெரிய நிராகரிப்புச் செயலைச் செய்ததாக அறிவித்தான், இவரைத் தவிர, அவருக்கு எதிராக எழுந்து நின்று அந்த விஷயத்தை ஆட்சேபித்து வெறுத்தவரான இவர், பின்னர் தூதரிடம் (ஸல்) சென்றார்.


விஷயத்தின் விளைவு மிகவும் பாரதூரமானதாக இருந்தது. இந்த மதவெறிக் கும்பலுடன் உட்கார்ந்திருப்பதோ, துணையாகவோ அல்லது கூட்டாகவோ இருப்பது மக்களுக்கு ஆகுமானது அல்ல. பரந்த புரிதலும், அறிவும் இல்லாமல், முஸ்லிம்களையும் முஸ்லிம் ஆட்சியாளர்களையும் முர்த்தத்களாக இருக்கிறார்கள் என்று அறிவிக்கும் இவர்கள் முஸ்லிமின் இரத்தம் சிந்தப்படுவதையும், முஸ்லிமின் உடமையையும் ஹலாலாகக் கருதுபவர்கள்.


எனவே, அவர்களின் கூற்றுகளுக்கு நாம் செவிசாய்க்காமலும்; அவர்களை நாம் நிராகரித்தும்; அவர்கள் மத்தியில் நாம் உட்காராமலும்; அவர்களிடமிருந்து நாம் விலகியும், அவர்களிடமிருந்து தூரமாகி இருப்பது அவசியம்


இது தக்ஃபீருடைய விடயம் தொடர்பானது.



தப்தீயின் விடயம்

தப்தீ (அதாவது, ஒரு முஸ்லிமைப் பித்அத்வாதி என்று அறிவிப்பது) விடயத்தைப் பொறுத்தவரை, தப்தீ என்ற வார்த்தை பித்ஆ என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் அரபு மொழியில் பித்ஆ என்ற வார்த்தையின் அர்த்தம், முந்தைய உதாரணம்/மாதிரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட/ உருவாக்கப்பட்ட என்னவாக இருந்தாலும் (அது பித்ஆ ஆகும்). 

அது தொடர்பான மிக உயந்தோனான அவனது கூற்றுக்கள்:


 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ

முன் மாதிரியின்றியே வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன்

(அல்குர்ஆன்: 6:101)


அதாவது எந்த முன் உவமையும் இல்லாமல் இந்த இரண்டு விஷயங்களையும் (அதாவது, வானங்கள் மற்றும் பூமி) படைத்தவன் அவனே. அல்லாஹ் வானங்களையும் பூமியையும்; அவை இல்லாத நிலையிலிருந்து தோற்றுவித்தான்.


மார்க்கத்தில் உள்ள பித்ஆ என்ற சொல்லைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் புத்தகத்திலோ அல்லது அவனது தூதரின் (ஸல்) சுன்னாவிலோ எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்லாம் மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது. ஏனெனில் இபாதாத் (அதாவது, வணக்க வழிபாட்டு முறைகள்) என்பது தவ்கிஃபிய்யா, அதாவது ஆதாரத்துடனே தவிர அது (அதாவது, வணக்க வழிபாடுகள்) தொடர்பான எதுவும் செய்யப்படமாட்டாது, மேலும் இபாதாதில் ஒப்புதல்கள் அல்லது அபிப்பிராயங்களுக்கு இடமில்லை, அல்லாஹ்வின் புத்தகம் மற்றும்/அல்லது அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சுன்னாவிலிருந்து ஆதாரம் உள்ளது எதுவாக இருந்தாலும், அப்போது அது இஸ்லாத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, அது இபாதா ஆகும். மேலும் ஆதாரத்தின் அடிப்படையில் எது நிறுவப்படவில்லையோ அது பித்ஆ (அதாவது, புதுமையான காரியம்) ஆகும்.


தூதர் (ஸல்) கூறினார்,


நம்முடைய விவகாரத்தின் மீது (அதாவது இஸ்லாத்தில்) இல்லாத ஒரு செயலை யார் செய்தாலும் அது நிராகரிக்கப்படுகிறது.”

(ஸஹீஹுல் புகாரி 4/2292)


மேலும் மற்றொரு அறிவிப்பில்:


எங்களுடைய இந்த விவகாரத்தில் (அதாவது இஸ்லாத்தில்) அதிலிருந்து இல்லாததை யார் அறிமுகப்படுத்தினாலும், அது நிராகரிக்கப்படுகிறது.” 


(ஸஹீஹுல் புகாரி 2/819, 2697)


மேலும் அவர் (ஸல்) கூறினார்:


நிச்சயமாக, பேச்சினிலே சிறந்தது அல்லாஹ்வின் புத்தகம் ஆகும், மேலும் வழிகாட்டுதல்களில் சிறந்தது முஹம்மதுவின் (ஸல்) வழிகாட்டுதல் ஆகும், காரியங்களில் மிகவும் தீயவை (மார்க்கத்தில்) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவை (பித்அத்கள்ஆகும், மேலும் ஒவ்வொரு பித்அத்களும் வழிகேடு ஆகும்."

(ஸஹீஹ் முஸ்லிம் 2/592, 867)


மேலும் மற்றொரு வார்த்தையில்:


மேலும் ஒவ்வொரு வழிகேடும் நரக நெருப்பில் உள்ளது.”


(ஸுனன் நஸாயி 3/188, 189)


அது ஏனெனில் அல்லாஹ் மார்க்கத்தைப் பரிபூரணப்படுத்தி விட்டான், மேலும் அதற்கு கூடுதல் சேர்ப்பனவுகள் தேவை இல்லை; இறைத்தூதர் (ஸல்) மூலமாக அல்லாஹ் மார்க்கத்தை நிறைவு செய்யும் வரை அவர் (ஸல்) இறந்து விடவில்லை. அவன் கூறினான்:


 حُرِّ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ 

 இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்

(அல்குர்ஆன்: 5:3)


அவர் (ஸல்) தனது பிரியாவிடை பிரசங்கத்தின் போது ஜுமுஆ அன்று அரஃபாவில் நின்று கொண்டிருந்த பொழுது இது தூதருக்கு (வஹியாக) அறிவிக்கப்பட்டது; அல்லாஹ் அவருக்கு (ஸல்) இந்த வசனத்தை இறக்கி அருளினான்.


எனவே தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பிறகு எண்பத்தொரு நாட்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தார்கள்; அல்லாஹ் அவர் (ஸல்) மூலமாக மார்க்கத்தை நிறைவு செய்த பிறகே தவிர அவர் (ஸல்) மறையவில்லை.


எனவே அல்லாஹ்வின் புத்தகத்தில் மற்றும்/அல்லது அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சுன்னாவிலிருந்து எந்த ஆதாரமும் இல்லாத இபாதத்தின் செயலை எவர் கொண்டு வந்தாலும்; ஆம், அது நிராகரிக்கப்பட்ட பித்ஆ (அதாவது நூதனம்) ஆகும். அதைச் செய்பவர் இபாதா மற்றும் ஸுஹுத் (அதாவது, உலக விஷயங்களில் இருந்து விலகி இருப்பது) மீது எவ்வளவு நிலைத்திருக்கிறார் என்பது விஷயமே அல்ல.


எவராவது எங்களிடம் எதையாவது கொண்டு வந்து,


இது நன்றாக இருக்கிறது; இது இபாதாவாகும், இது திக்ராகும் (அதாவது அல்லாஹ்வை நினைவு கூர்தல்)”.


(என்று கூறினால்)


அது நிராகரிக்கப்படுகிறது. அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்; அப்போது, நீங்கள் விரும்புவது போல் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றால், அவர் ஸுஹுத் அல்லது அறிவுடையவர்களில் இருந்து வந்தாலும் அவருடைய கூற்றை நாங்கள் கைவிடுகிறோம்; நாம் தனி நபரைப் பார்ப்பதில்லை; மாறாக அல்லாஹ்வின் புத்தகத்திலிருந்தும் அவனது தூதரின் (ஸல்) சுன்னாவிலிருந்தும் அவரிடம் உள்ள ஆதாரங்களை மட்டுமே பார்க்கிறோம்.


அல்லாஹ்வின் புத்தகத்திலிருந்தோ அல்லது அவனது தூதரின் (ஸல்) சுன்னாவிலிருந்தோ இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக ஒரு நபர் எந்த ஒரு ஆதாரமும் இல்லாத ஒன்றைக் கொண்டு வந்தாலே தவிர நீங்கள் அவரை ஒரு பித்அத்வாதி என்று கருதுவது நினைத்துப் பார்க்க முடியாதது ஆகும். உங்களுக்குத் தெரியாத அல்லது உங்களுக்கு அறிவு இல்லாத ஒன்றை அவர் கொண்டு வந்தால், அவர்களைப் பித்அத்வாதிகள் என்று நீங்கள் கருதக்கூடாது. உங்களுக்கு மார்க்கத்தில் எல்லாம் தெரியாது; அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் (ஸல்) வந்தவை அனைத்தும் உங்களுக்குத் தெரியாது.


அல்லாஹ்வின் புத்தகம் மற்றும்/அல்லது அவனது தூதரின் (ஸல்) உண்மையான சுன்னாவிலிருந்து எவ்வித ஆதாரமும் இல்லாத ஒன்றை மார்க்கத்திலிருந்து உள்ளதாக கொண்டு வந்தாலே ஒழிய, மக்கள் பித்அத்தின் மீது இருப்பதாக அறிவிக்க அனுமதிக்கப்படமாட்டாது.


எனவே, நீங்கள் உண்மைகளைக் கண்டறிந்து உறுதிப்படுத்துவது அவசியம்; அல்லாஹ்வின் புத்தகம் மற்றும்/அல்லது அவனது தூதரின் (ஸல்) சுன்னாவில் இருந்து ஓர் உறுதிப்படுத்தல் இல்லாததை அல்லது அறிஞர்கள் இது ஒரு பித்அத் என்று தீர்ப்பளித்ததில் இருந்து உள்ளதை அவர்கள் கொண்டு வந்துள்ளனர் என்பதை உறுதிப்பிபடுத்திய பின்னரே தவிர, மக்களைப் பித்அத்வாதிகளாக அறிவிக்க வேண்டாம். எனவே நீங்கள் சொல்ல வேண்டும்:


இது ஒரு பித்அத் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.”


ஆதாரம் இல்லாமல், மேலும் உண்மைகளைக் கண்டறியாமல், விசாரணை செய்யாமல், அறிவுடையவர்களின் பேச்சுக்குத் திரும்பாமல் நீங்கள் அதை அறிவித்தால்; அப்போது அது மிகப்பெரிய தவறு ஆகும். அது முஸ்லிம்களிடையே பிளவை (பிரிவினை) ஏற்படுத்தும், மேலும் முஸ்லீம்களுக்கு இடையே பகையை உருவாக்கி அதிக தீங்கு விளைவிக்கும்; மேலும் மக்களுக்கு இடையே; அவர்களில் சிலருக்கு மற்றவர்களுடன் தீய எண்ணங்களை உண்டாக்கும்


எனவே, அல்லாஹ்வின் புத்தகத்திலோ, அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சுன்னத்திலோ, அல்லது முஸ்லிம்களின் கருத்தொற்றுமையிலோ அந்த விடயம் ஒரு பித்அத் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாது யாரையும் பித்அத்வாதி என்று அறிவிக்காதீர்கள்.


(அவ்வாறு எவ்வித ஆதாரமும் இல்லாத்தை ஒருவர் கொண்டு வந்தால்)


எனவே, அந்த நேரத்தில், நீங்கள் இந்த நபருடன் கலந்துரையாடி அவருக்கு விளக்க வேண்டும், அவர் அறியாமையால் இதைச் செய்திருக்கலாம். அவர் யாரோ ஒருவரின் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்றலாம், அது உண்மை என்று அவர் நினைத்திருக்கலாம். அவருக்கு ஒரு சாக்கு போக்கு இருக்கலாம். நீங்கள் அவருக்கு விளக்க வேண்டும்.


அப்படித் தெளிவுபடுத்திய பிறகும் அவர் தொடர்ந்தால்; ஆம், அவர் ஒரு பித்அத்வாதி என்று நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும்; ஏனென்றால், அவர் மார்க்கத்தில் இல்லாத ஒன்றைக் கடைப்பிடித்தார். எனவே அவர் ஒரு பித்அத்வாதி ஆவார். எனவே இந்த விஷயத்தை சரிபார்த்து, அவசரப்படாமல் விசாரணை நடத்த வேண்டும்.


சமீப காலமாக, மக்களுக்குள்ளும், மார்க்க அறிவின்பால் அழைப்பவர்களுக்குள்ளும் அறியாமை அதிகரித்துள்ளது; மேலும் ஓதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதே சமயம் ஃபுகாஹா (அதாவது, சட்ட வல்லுநர்கள்) தூதர் (ஸல்) கூறியது போல் எண்ணிக்கையில் சிறியவர்களாகிவிட்டனர்.


எனவே இந்த விஷயத்தை உறுதிப்படுத்துவது முஸ்லிம்கள் மீது கடமையாகும், மேலும் மார்க்கம் தொடர்பான தீர்ப்புகளில் அவசரப்பட வேண்டாம்; அத்துடன் தக்ஃபீர், தப்தீ மற்றும் பல விஷயங்களில் சட்டரீதியான தீர்மானமானது அல்லாஹ்வின் புத்தகத்தில் இருந்து மற்றும்/அல்லது அவனது தூதரின் (ஸல்) சுன்னாவிலிருந்து அல்லது அறிவுடைய மக்களின் ஒருமித்த கருத்துடன் நிறுவப்பட்டதாக இருக்கிறது. எனவே இது ஒரு தீவிரமான விஷயம் ஆகும், அறிஞர்களைத் தவிர மற்றவர்கள் இதைப் பற்றி பேசுவது அனுமதிக்கப்பட்டது அல்ல.


இந்தக் கூட்டத்தில் நான் சொல்ல விரும்பியது இதுதான். அவன் எங்களுக்கும், உங்கள் அனைவருக்கும் அவனுடைய மார்க்கத்தில் ஃபிக்ஹை தந்தருள்வானாக என்றும், எங்களுக்குப் பயன் தரும் ஒன்றை அவன் எங்களுக்குக் கற்பித்துத் தருமாறும், நாங்கள் கற்றுக்கொண்டவற்றின் மூலம் அவன் எங்களுக்குப் பயன் தருமாறும், அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.


உண்மையை உள்ளபடியே நமக்குக் காட்டுமாறும், அதைப் பின்பற்றுவதற்கான வழிகளை அவன் நமக்கு வழங்குமாறும், பொய்யை உள்ளபடியே நமக்குக் காட்டி, அதைத் தவிர்க்கும் வழியை அவன் நமக்குத் வழங்குமாறும் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். அல்லாஹ் நமது நபிகள் நாயகம் முஹம்மது மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மற்றும் அவரது தோழர்கள் அனைவருக்கும் ஈடேற்றத்தையும் அருளையும் தருவானாக.



தஃப்ஜீரின் (குண்டுவெடிப்புகள்) செயல்களைச் செய்பவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களாவர்.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது, மேலும் நமது நபிகள் நாயகம் முஹம்மது மீதும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் மீதும் பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாவதாக


தொடர்ந்து..


பாதுகாப்புக் கிடைப்பது என்பது அத்தியாவசியத் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. உணவு மற்றும் பானத்தின் தேவையை விட மனிதகுலத்திற்கு அதன் தேவை அதிகமாக உள்ளது.


அந்த காரணத்திற்காக, இப்ராஹிம் (அலை) தனது (பிரார்த்தனையில்) உணவுத்தேவைகளை குறிப்பிடுவதற்கு முன் அதை (அதாவது பாதுகாப்பை) முன் வைத்தார், எனவே அவர் கூறினார்:


 فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ

 ஆகவே மனிதர்களி(ல் ஒரு சிலரி)ன் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்தவையாக நீ ஆக்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவதற்காக (பற்பல) கனி வர்க்கங்களிலிருந்து நீ அவர்களுக்கு உணவும் அளிப்பாயாக!”

(அல்குர்ஆன்: 14:37)


ஏனென்றால் பயத்தின் முன்னிலையில் மக்கள் உணவு மற்றும் பானங்களை அனுபவிக்க முடியாது. அச்சத்தின் காரணமாக, சாலைகள் துண்டிக்கப்பட்டு, ஒரு நிலத்திலிருந்து மற்றொரு நிலத்திற்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் காரணமாகவே வழிப்பறிக் கொள்ளையின் விளைவை அல்லாஹ் மிகக் கடுமையான தண்டனையாக ஆக்கிவிட்டான். அவன் சொன்னான்:


 اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِ‌ؕ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا‌ وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ

 அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் தொடுத்து பூமியில் குழப்பம் செய்து கொண்டும் திரிகின்றவர்களுக்குரிய தண்டனையெல்லாம் (அவர்கள்) கொல்லப்பட வேண்டும் அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும், அல்லது அவர்களின் கைகளும், அவர்களின் கால்களும் மாறாக (ஒரு பக்கத்துக்கையும், மறு பக்கத்துக்காலுமாக)த் துண்டிக்கப்பட வேண்டும்அல்லது நாடுகடத்தப்படுதல் வேண்டும்இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும்இன்னும், மறுமையில் மகத்தான வேதனை அவர்களுக்குண்டு.

(அல்குர்ஆன்: 5:33)


இஸ்லாம் ஐந்து அத்தியாவசியங்களைப் பாதுகாக்க வந்துள்ளது, மேலும் அவையாவன


மார்க்கம் 

தனிநபர் 

புத்தி 

கண்ணியம் 

மற்றும் சொத்து


இந்த அத்தியாவசியங்களை மீறுவோருக்கும் மற்றும் சவாலுக்குட்படுத்துவோருக்கும் அல்லாஹ் கடுமையான சட்டத் தண்டனைகளை வழங்கியுள்ளான். இந்தத் அத்தியாவசியங்களின் தேவைகள் முஸ்லிமுக்காக இருந்தாலும் சரிதான்; அல்லது முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செய்தவர்களுக்காக இருந்தாலும் சரிதான்.


எனவே, முஸ்லீம்களுடன் உடன்படிக்கை செய்து கொண்ட காஃபிருக்கு முஸ்லீம் மீது ஓர் உரிமை உண்டு, மேலும் அவர் மீது முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு கடமை உள்ளது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


முஸ்லீம்களுடன் உடன்படிக்கை செய்துள்ள அவரைக் கொல்பவர் ஜன்னாவின் (அதாவது சொர்க்கத்தின்) வாசனையை உணரமாட்டார்.”

(புஹாரி, முத்தா மாலிக் பக்கம் 527, 3177)


மேலும் மிக உயர்ந்தோனான அவன் கூறினான்:


 وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِيْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰى يَسْمَعَ كَلَامَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ‌ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُوْنَ

 மேலும், (நபியே!) இணைவைத்துக் கொண்டிருப்போரில் எவரொருவர் உம்மிடம் அபயம் தேடினால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக! பின்னர், அவருக்கு அபயமளிக்கும் (வேறு) இடத்தில் அவரைச்சேர்த்து வைப்பீராக! அது (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அறியாத சமூகத்தினர் என்ற காரணத்தினாலாகும்.

(அல்குர்ஆன்: 9:6)


உடன்படிக்கை செய்தவர்கள் ஒப்பந்தத்தை மீறுவார்கள் என்று முஸ்லிம்கள் அஞ்சும்போது; அவர்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தம் முடிவடைந்ததாக முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்படும் வரை அவர்களுக்கு எதிராகப் போரிட அனுமதி இல்லை. அறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத வகையில் அவர்களைப் போருக்கு இழுத்து விடக்கூடாது.


மிக உயர்ந்தோனான அவன் சொன்னான்:


 وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَآءٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَآٮِٕنِيْنَ

 மேலும், ஏதாவது ஒரு கூட்டத்தினரிடமிருந்து துரோகத்தை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக(வே அவ்வுடன்படிக்கையை) அவர்கள்பால் எறிந்துவிடும்நிச்சயமாக அல்லாஹ் துரோகம் செய்வோரை நேசிக்கமாட்டான்.

(அல்குர்ஆன்: 8:58)


காஃபிர்களில் இருந்து முஸ்லிம்களின் உடன்படிக்கையின் கீழ் நுழைபவர்கள் மூன்று வகையினர் ஆவர்:


(1.) அடைக்கலம் தேடுபவர்: மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் அவர்களிடமிருந்து பாதுகாப்புக்காக முஸ்லிம்களின் நிலங்களுக்குள் நுழைபவர் இவர் ஆவார். பின்னர், அது முடிந்ததும் அவர் தனது நிலத்திற்குத் திரும்புகிறார்.


(2.) முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்தவர்: அவர்தான் முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கையின் கீழ் நுழைகிறார். இந்த நபர் இரு குழுக்களுக்கிடையில் ஒப்பந்தம் முடிவடையும் வரை பாதுகாக்கப்படுகிறார்; மேலும் எவரும் அவருடன் அநீதியாக நடந்து கொள்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல. அதேபோல், முஸ்லிம்களில் எவருக்கும் அவர் அநீதி இழைப்பதும் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல.


(3.) அவர் தான், முஸ்லிம்களுக்கு ஜிஸ்யாவை (வருடாந்த வரியை) செலுத்தி அவர்களின் ஆட்சியின் கீழ் நுழைகிறார்; இஸ்லாம் அவர்களின் இரத்தம், சொத்து மற்றும் அவர்களின் மரியாதைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும் அவர்களுடன் அநியாயமாக நடந்துகொள்பவர்; அப்போது அவர் நிச்சயமாக இஸ்லாத்திற்கு விசுவாசமின்மையுடன் நடந்து கொண்டார், மேலும் அவர் ஒரு தடுக்கும் வகையிலான தண்டனைக்கு தகுதியானவர். முஸ்லீம்களிடமும், காஃபிர்களிடமும்  (பரஸ்பரம்) நீதி கடமையாகும். காஃபிர்களான அவர்கள் உடன்படிக்கை செய்தவர்களாக இல்லாவிட்டாலும் கூட அல்லது பாதுகாப்பு தேடுபவர்களாகவோ அல்லது அஹ்லுல் திம்மாக்களாகவோ (இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் நிராகரிப்பாளர்கள்) இருந்தாலும் சரி.


மிக உயர்ந்தோனான அவன் சொல்கிறான்:


‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ اَنْ تَعْتَدُوْا‌  

கண்ணியமான மஸ்ஜிதுக்குச் செல்லவிடாது, உங்களைத் தடுத்துக் கொண்ட சமூகத்தார் மீது (உங்களுக்கு)ள்ள பகைமை  (அவர்கள் மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டிவிடவும் வேண்டாம்.  

(அல்குர்ஆன்: 5:2)


மேலும், மிக உயர்ந்தோனான அவன் கூறியதாவது,


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌  

 விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக் கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக (உண்மையின் மீது) நிலைத்தவர்களாக ஆகிவிடுங்கள்எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாக தூண்டிவிட வேண்டாம்,  (எவ்வளவு விரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள்அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும்,  

(அல்குர்ஆன்: 5:8)


மற்றவர்களின் பாதுகாப்பிற்கு எதிராக, விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்; அவர்கள் கவாரிஜ்களாகவோ அல்லது வழிப்பறி கொள்ளையர்களாகவோ அல்லது அவர்கள் அட்டூழியம் புரிபவர்களாகவோ இருக்கலாம். இந்த மூன்று வகையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கடுமையான அமலாக்கத்தின் கீழ் வருவார்கள், இது அவரது மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், மேலும் அவரது தீமை; முஸ்லிம்கள், பாதுகாப்பு தேடுபவர்கள் மற்றும் உடன்படிக்கையின் கீழ் உள்ளவர்கள் மற்றும் அஹ்லுல் திம்மாவின் கீழ் உள்ளவர்களிடமிருந்து தடுக்கப்படுகிறது.


எனவே, இந்த நபர்கள், எந்த இடத்திலும் தஃப்ஜீர் செயல்களைச் செய்கிறார்கள், முஸ்லிம்களின் பாதுகாப்பில் உள்ள மக்களை அழிக்கிறார்கள்; மேலும் முஸ்லீம்களுக்கு அல்லது முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுக்குச் சொந்தமான கண்ணியமான சொத்துக்களை அழிக்கிறார்கள். பின்னர் அவர்கள் பெண்களை விதவைகளாக ஆக்குகிறார்கள்; அவை குழந்தைகளை அனாதைகளாக ஆக்குகின்றன. இவர்கள்தான் அவர்கள், அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறியிருக்கிறான்


 وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ

 மேலும் - (நபியே! அற்ப) இவ்வுலக வாழ்க்கையில் எவனுடைய கூற்று உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துமோ, அவனும் மனிதர்களில் இருக்கின்றான்அவன் (உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் இதயத்திலுள்ளவற்றின் மீது அல்லாஹ்வைச் சாட்சியாக்குவான்.  (உண்மையில்) அவன்தான் (உண்மையை மறைக்க) கடும் தர்க்கம் செய்பவன் (உம்முடைய கொடிய விரோதியுமானவன்).

(அல்குர்ஆன்: 2:204)


 وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ

 அவன் (உங்களிலிருந்து) திரும்பிவிட்டால் பூமியில் குழப்பம் விளைவிக்கவும், விவசாயத்தையும், சந்ததியையும் (அழித்து) நாசமாக்கி விடவும் அதில் முயற்சி செய்கின்றான்இன்னும், அல்லாஹ் குழப்பத்தை விரும்பமாட்டான்.

(அல்குர்ஆன்: 2:205)


 وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ؕ وَلَبِئْسَ الْمِهَادُ

 இன்னும்நீ அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) கௌரவம் பாவத்தைச் செய்துக்கொண்டே அவனை பிடித்திழுத்துக் கொள்கின்றது. ஆகவே, அவனுக்கு நரகமே போதுமானதுஇன்னும், நிச்சயமாக தங்குமிடத்தில் அது மிகக் கெட்டது.

(அல்குர்ஆன்: 2:206)


இஸ்லாத்தின் விதிமுறைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தங்களின் இந்த செயல்களை அல்லாஹ்வின் பாதையிலான ஜிஹாத் என்று இந்த அக்கிரமக்காரர்கள் அழைப்பது  ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது!


இது அல்லாஹ்வின் மீது சுமத்தப்படும் மிகப்பெரும் பொய்களிலிருந்து உள்ளதாகும். உண்மையில் அல்லாஹ் இதை ஒரு ஒழுக்கக்கேடாக ஆக்கிவிட்டான், அவன் இந்த ஜிஹாதை ஆக்கவில்லை; எனினும், இதற்கு முன் கவாரிஜ்களில் இருந்து வந்தவர்கள் நபித்தோழர்களை; ‘நிராகரிப்பாளர்களாக இருக்கிறார்கள்என்று அறிவித்ததை அறிந்திருக்கும் நாங்கள் இதற்காக ஆச்சரியப்படவும் இல்லை. அவர்கள் உஸ்மானையும், அலியையும் கொன்றனர் (அல்லாஹ் அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக), மேலும் அவர்கள் இருவரும் நேர்வழியைப் பின்தொடர்ந்தவர்களில் உள்ளவர்களாக இருந்தனர்; மேலும் அவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பத்துப் பேர்களில் உள்ளவர்களாகவும் இருந்தனர். அவர்கள், அந்தக் கவாரிஜுகள், அவர்கள் இருவரையும் (ரழி) கொன்றார்கள். அதை அல்லாஹ்வின் பாதையிலான ஜிஹாத் என்றும் அழைத்தார்கள்!!


உண்மையில், இது ஷைத்தானின் பாதையில் உள்ள ஜிஹாத் மட்டுமே. மிக உயர்ந்தோனான அவன் சொன்னான்:


 اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ 

  விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வார்கள்இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்-அவர்கள் (இவர்களுக்கு எதிராக) தாகூத்துடைய (ஷைத்தானுடைய) பாதையில் யுத்தம் செய்வார்கள்,  

(அல்குர்ஆன்: 4:76)


இந்த நபர்கள் காஃபிர்களாக இல்லாவிட்டால், அப்போது நிச்சயமாக நிராகரிப்பு அவர்களுக்காக அஞ்சப்படுகிறது; மேலும் அவர்கள் தாகூத்தின் பாதையில் போராடுகிறார்கள்:


குஃப்ஃபார்களில் இருந்தான இஸ்லாத்தின் எதிரிகள்:


உண்மையில் இஸ்லாம் மதம் ஒரு பயங்கரவாத மதம்


என்று சொல்வது போல் இவர்களுடைய இந்த செயலால் இஸ்லாம் சுமைக்குள்ளாகவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை.


அவர்கள் இந்தக் குற்றவாளிகளின் செயல்களை ஒரு வாதமாக முன்வைக்கின்றனர்; எனவே, அவர்களின் செயல்கள் இஸ்லாத்தில் இருந்து வந்தவை அல்ல; இஸ்லாம் எந்த மார்க்கத்திலும் அதை நிறுவவில்லை. இது நிச்சயமாக ஒரு காரிஜிய்யா சிந்தனை மட்டுமே. உண்மையில், நபி (ஸல்) அவர்கள் அதைப் பின்பற்றுபவர்களைக் கொல்லும்படி ஏவினார்கள். அவர்கள் (ஸல்) சொன்னார்கள்:


நீங்கள் எங்கு கண்டாலும் அவர்களைக் கொன்றுவிடுங்கள்.” 


(ஸஹீஹுல் புஹாரி 3/1628, 5057)


ஆகவே, அவர்களைக் கொல்பவருக்கு ஏராளமான வெகுமதியை அவர் (ஸல்) உறுதியளித்தார், மேலும் அவர்களைக் கொல்வது முஸ்லிம்களின் தலைவருடன் மட்டுமே உள்ளது; விசுவாசிகளின் தலைவரான அலி இப்னு அபி தாலிப் (ரழி) அவர்களின் கட்டளையின்படி நபித்தோழர்கள் அவர்களுக்கு (கவாரிஜுகளுக்கு) எதிராகப் போரிட்டதைப் போல.


சில நயவஞ்சகர்கள் அல்லது அறியாதவர்கள்/தனிநபர்கள், மதரஸாக்களில் இந்த சித்தாந்தத்தை அவர்களுக்கு கற்பிப்பதாகவும், கற்பித்தல் முறைகளில் இந்த திரிபடைந்த சித்தாந்தம் உள்ளதாகவும் குற்றம் சாட்டி, அவர்கள் கற்பித்தல் முறைகளை மாற்றக் கோருகின்றனர்.


நாங்கள் சொல்கிறோம், உண்மையில் இந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்களின் மதரஸாக்களில் பட்டம் பெறவில்லை அல்லது அவர்கள் முஸ்லிம்களின் அறிஞர்களிடமிருந்து மார்க்க அறிவைப் பெறவில்லை; ஏனெனில் அவர்கள் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்பதை அனுமதிக்கவில்லை. மேலும் அவர்கள் முஸ்லிம்களின் அறிஞர்களை இகழ்கிறார்கள்; அவர்கள் அறிஞர்களை, அறிவில்லாதவர்கள் என்று அறிவிக்கிறார்கள்; மேலும் அவர்களை ஆட்சியாளர்களின் வேலையாட்கள் என்று வர்ணிக்கின்றனர்.


அவர்கள் (இந்த) திரிபடைந்த சித்தாந்தத்தை; அதைப் பின்பற்றுபவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள், மேலும் இளைஞர்களிடையே அவர்களின் முன்னோர்களைப் போல முட்டாள்தனமான எண்ணம் கொண்ட நபர்கள் உள்ளனர்; அவர்களின் முன்னோர்களான அவர்களும் இவ்வாறுதான் நபித்தோழர்களின் அறிஞர்களை அறிவிலிகள் என்று அறிவித்து அத்துடன  அவர்களை நிராகரிப்பாளர்கள் என்றும் பிரகடனம் செய்தார்கள்.


அது, இன்று முதல் எதிர்பார்க்கப்படுகிறது, தந்தை மற்றும் தாய் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை அழிவுகரமான சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்களுடன் விட்டுவிடக்கூடாது. அவர்கள் வழிதவறிய சித்தாந்தங்களுக்கும், திரிபடைந்த வழிமுறைகளுக்கும் அவர்களை இட்டுச் செல்வார்கள்.


தெரியாத இடங்களிலுள்ள மோசமான கூட்டங்களுக்கு அவர்களை விட்டுவிடக் கூடாது. இளைப்பாறும் இடங்கள்; அவை வழிகேட்டைப் பின்பற்றுபவர்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகவும் மற்றும் ஆவேசமான ஓநாய்களின் கண்ணி வலைகள் உள்ள இடங்களாகவும் உள்ளன. அவர்கள் தங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே மாம் லக்காவிற்கு (அதாவது சவூதி அரேபியா) வெளியே பயணம் செய்ய விடக்கூடாது.


பாடசாலைகள், பள்ளிவாசல்கள், மற்றும் தகவல் தொடர்பு மூலம்; உண்மையான அகீதாவை (அதாவது நம்பிக்கை கோட்பாடுகளை) போதனை செய்து சரியான வழிகாட்டுதலை நிறுவுவது அறிஞர்களின் கடமையாகும். அறிஞர்களான அவர்கள் வழிகெட்ட மக்களுக்கென ஒரு வாய்ப்பையும் தவறவிட மாட்டார்கள். வழிகெட்ட மக்களான அவர்கள் இருளிலும், சீர்திருத்தவாதிகளுடனான அலட்சியத்திலும் வெளியே செல்பவர்கள்.


நன்மை பயக்கும் அறிவு மற்றும் நேர்மையான செயல்களுக்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வெற்றியை வழங்குவானாக, மேலும் நமது நபிகள் நாயகம் முஹம்மது, அவரது குடும்பம் மற்றும் தோழர்கள் மீது ஈடேற்றமும் அருளும் உண்டாகட்டும்.




கேள்வி பதில்கள்


கேள்வி : இந்த நிலத்தை (அதாவது, சவூதி அரேபியா) காஃபிர்களின் பூமி என்று அறிவித்து, அதன் அறிஞர்களை நயவஞ்சகர்கள் என்று குற்றம் சாட்டுபவர்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?


பதில்: இது முஸ்லிம்களை முர்தத்கள் என்று அறிவிப்பவர்களிடமிருந்து வருகிறது; மேலும் அவர்கள் முஸ்லிம்களில் சிறந்தவர்களான அறிஞர்களை முர்தத்கள் என்று அறிவிக்கிறார்கள்.


எனவே இந்த நபர்கள் கவாரிஜ்களில் இருந்து வந்தவர்கள் ஆவர், இருப்பினும் அல்லாஹ்விடம் தவ்பா செய்வதும், சரியானதுக்குத் திரும்புவதும் அவர்கள் மீது கடமையாகும்; இந்த மாபெரும் பாவத்தை கைவிடுங்கள்.


கேள்வி : சில முஸ்லிம் நாடுகள் தொடர்பாக; அவை பல மதுபான நிலையங்கள், தீய செயல்கள் மற்றும் விபச்சாரத்தை அனுமதிக்கிறன. அது அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அனுமதிக்கப்படும் குஃப்ரின் வெளிப்படையான செயல்களில் ஒன்றாகக் கருதப்படுமா?


பதில்: அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் என்று நம்புபவருக்கும், அல்லாஹ் ஹராமாக்கியதை அனுமதிக்கப்பட்டதாகக் கருதாமல் செய்பவருக்கும் இடையே வேறுபாடு உள்ளது.


இவரைப்போல, அவர் மதுவை அருந்திக்கொண்டே அது ஹராம் என்று நம்புகிறார். அல்லது ரிபாவை உட்கொள்ளும் போது அது ஹராம் என்று நம்புகிறார். இந்த நபர் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் குஃப்ரான செயலைச் செய்தவர் அல்ல. அவர் ஒரு ஃபாசிக் (அதாவது வெளிப்படையான பாவி) ஈமானில் குறைபாடுள்ளவர். அவருக்கு சட்டப்படியான தண்டனை என்றால், திருடியதற்காகவோ, மது அருந்தியதற்காகவோ அந்தத் தண்டனை அவருக்கு உரியது; இருப்பினும், அவர் மார்க்கத்தை விட்டு நீங்கிய ஒருவராக அறிவிக்கப்பட மாட்டார், ஏனெனில் இந்த விஷயத்தை அவர் ஹலாலாக கருதவில்லை.


இந்த விஷயங்களை ஹலாலாக கருதியவர் ஒருவரைப் பொறுத்தவரை; அப்போது, நிச்சயமாக அவர் ஒரு நிராகரிப்பாளர் ஆவார். ஏனெனில், அது ஹராம் என அவற்றின் மீது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை யாரேனும் ஹலாலாக கருதினால், அவர் அதைச் செய்யாவிட்டாலும் அவர் நிச்சயமாக ஒரு நிராகரிப்பாளர் ஆவார், அவர் செய்திருந்தால் நிலை என்ன ஆகும்.


கேள்வி : இந்த நாட்டின் முஸ்லீம் ஆட்சியாளர்களை முர்தத்கள் என்று அறிவிக்கும் ஒரு மஸ்ஜிதின் இமாமின் பின்னால் தொழுவது பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? எனவே அவருக்குப் பின்னால் நின்று தொழுகையில் ஈடுபடலாமா?


பதில்: நீங்கள் சொல்வது சரியென்றால், இந்த நாடுகளின் தலைவர்களை அவர் காஃபிர்கள் என்று அறிவிக்கிறார் என்று அவர் மீது நிறுவப்பட்டிருந்தால்; அப்போது அவரின் பின்னால் தொழக் கூடாது, மேலும் அல்லாஹ்வுக்கே புகழ் உரியது, அறிவைக் கற்கும் மாணவர்கள் ஏராளமாக உள்ளனர்; பள்ளிவாசல்களின் விவகாரங்கள் அவருக்குப் பதிலாக தயாராக இருக்கின்றன; இருப்பினும், நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்துவதே விஷயம். வெறும் வதந்தி என்றால், அது தொடர்பாக எந்த தீர்ப்பும் இல்லை.



பின்குறிப்பு


குஃப்ர், ஷிர்க், மற்றும் நவாக்கிதுல் இஸ்லாம் (இஸ்லாமை முறித்துவிடக்கூடியவை) தொடர்பான விரிவான விளக்கங்கள் தேவைப்படுவோர் நமது இணைத்தளத்தில் உள்ள ஆக்கங்களைப் பார்வையிடவும்.












Previous Post Next Post