அல்வலா வல் பரா கொள்கை -விருப்பும் வெறுப்பம் ஈமானின் வலிமையான பிணைப்புகள்:

ஷேகுல்-இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

ஏகத்துவத்தின் மூலம் சாட்சிபகர்வதை நடைமுறைப்படுத்துவது, ஒருவர்  அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பதும், அல்லாஹ்வுக்காக மட்டுமே வெறுப்பதும், அல்லாஹ்வுக்காக மட்டுமே நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக மட்டுமே பகைத்துக் கொள்வதும், அல்லாஹ் நேசிப்பதை நேசிப்பதும், அவன் வெறுப்பதை வெறுப்பதும்  அவசியமாகும். நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே அஞ்ச வேண்டும், அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். இதுதான் அல்லாஹ் அனைத்து தூதுவர்களுக்கும் அனுப்பிய இஸ்லாம்.

 மஜ்மூஃ ஃபத்வா- 337/8)


நன்மை மற்றும் நினைவூட்டலுக்காக

விருப்பும் வெறுப்பம் ஈமானின் வலிமையான பிணைப்புகள்:

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் - ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்...

 "ஒரு இறை நம்பிக்கையாளரின் மார்க்கம் ஏகத்துவ வாதிகளை (முஸ்லிம்களை) நேசிப்பதாலும் , வழிகேடர்களை பகைமை கொள்வதும், அவர்களை விட்டு விலகி இருப்பதாலும் தான் சரியாகிறது.

எவ்வாறு இறைத்தூதர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம், இணை கற்பித்த தனது கோத்திரத்தினரை விட்டும் அல்லாஹ்விற்காக   பிரிந்து  ஒதுங்கினாரோ , இறைத்தூதர்  முஹம்மது  ﷺ அவர்கள் குரைஷி குஃபார்களை அல்லாஹ்விற்காக விட்டு ஒதுங்கி இருந்தார்களோ அவ்வாறு இருந்தால்தான் நமது இஸ்லாம் முறையானதாக இருக்கும். 

அல்லாஹ்விற்காக விரும்புவதும் வெறுப்பதும் ஈமானின் வலிமையான பிணைப்புகளாகும்".
 - அத்துரர் அஸ்ஸனிய்யா 2/95

-தமிழில் 
உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி
Previous Post Next Post