- அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
(குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வில் இருந்துள்ள) சரியான ஆதாரமானது, தெளிவான புத்தியுடன் முரண்படுவதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை.
திரும்பி மீண்டும் கூறுகின்றேன்: வஹியும் புத்தியும் ஒன்றோடொன்று மாறுபடுவதென்பது அல்லது முரண்படுவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.
அதாவது, உதாரணத்திற்கு ஒரு ஆயத் உள்ளது, அது (அந்த ஆயத் காட்டும் பொருளானது) சாத்தியமற்ற ஒன்றென புத்தி உறுதிகொள்வது போலாகும். இந்த அனுமானம்தான் (நிதர்சனத்தில்) சாத்தியமற்றது.
(நம்மிடம்) வந்துசேர்ந்த ஷரீ'அத்திற்கும், விளங்கத்தக்க சத்தியத்திற்கும் இடையில் எந்த ஒரு மாறுபடுதலும் கிடையாது. முஸ்லிம் சமூகமான நம்மிடத்தில் இது ஒரு உறுதியான அடிப்படையாகும்.
நிச்சயமாக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, அவன்தான் குர்ஆன் ஸுன்னாஹ்வாகிய இந்த வஹியை தனது அடியார் முஹம்மது ﷺ அவர்களுக்கு வஹியாக அறிவித்தான் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும் அவன்தான் - சுப்ஹானஹு - புத்திகளை(யும்) படைத்தான்.
எனவே, (இரண்டின்) மூலமும் ஒன்றுதான், இவ்வாறிருக்க எவ்வாறு முரண்பாடு ஏற்படும்?!
முரண்பாடு ஏற்படுவதெல்லாம் சீர்கெட்ட அல்லது பலகீனமான புத்திகளில், சீர்கெட்ட வழிகெட்ட, தன்னுடைய இறைவனை விட்டும் பெருமையடிக்கும் புத்திகளில் மட்டுமே ஆகும்.
ஆகவே, (இவ்வாறான புத்திகள் வஹீயானது அறிவுக்கு) முரண்படுவதாக வாதிடுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
அல்லது பலகீனமான புத்திகள், அவை அவற்றின் குறைபாட்டின் காரணமாக முரண்பாடும், மாறுபாடும் இருப்பதாக கற்பனை செய்யும். (எனினும்), நிதர்சனமோ இதற்கு மாற்றமானதாகும். ஆம்
https://youtube.com/shorts/MIbq3yhzHTQ?si=4t3IO1YrutV5tQt7