குர்ஆனை மனனம் செய்து அது மறக்காமல் இருக்க வேண்டுமா..?

நீங்கள் குர்ஆனை திறமையாக மனனம் செய்ய விரும்புகிறீர்களா?

இதோ சில முக்கிய ஆலோசனைகள் 

நீங்கள் மனனம் செய்யும் போது பின்வரும் படி முறைகளைப் பின்பற்றவும்:

 1 - குர்ஆனை மனப்பாடம் செய்யும்போது ஒரே குர்ஆனை பயண்படுத்துங்கள் , அதை ஒருபோதும் மாற்றாதீர்கள்.

 2 - நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் பக்கத்தின் ஓதலை - ஒரு திறமையான காரியிடமிருந்து (ஆடியோ மூலம் )- பல முறை (5 அல்லது 10 முறை) கேளுங்கள் (செவிசாயுங்கள்) ஓதுவதைக் கேட்கும்போது குர்ஆனைப் பார்த்துக் கொள்ளுங்கள் 

 3 - நீங்கள்எந்தப் பக்கத்தை மனப்பாடம் செய்ய விரும்புகிறீர்களோ அந்தப் பக்கத்தின் பொருளை படிக்கவும்.

 4 - உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் வசனத்தை இருபது முறை ஓதவும் , அல்லது வசனம் நீளமாக இருந்தால் பகுதிகளாகப் பிரிக்கவும், ஒவ்வொரு இருபது முறையும், நீங்கள் வசனத்தின் முடிவை அடையும்போது, ​​​​உங்கள் சிந்தனை முதல் வார்த்தையின் மீது இருக்கும். மேலும் வசனங்களுக்கு இடையேயான தொடர்பை உருவாக்கி, சொற்களை சரியாக ஒதுவதில் கவனம் செலுத்துங்கள்.
 
மேலும் நீங்கள் பக்கத்தை முடிக்கும் வரை, ஒவ்வொரு வசனத்தையும் இருபது முறை படித்து அடுத்த வசனத்துடன் இணைக்கவும்.

 5 -  நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் பக்கத்தை மீண்டும் 20 முறை மீண்டும் படிக்கவும்.

 6 - நீங்கள்  மனப்பாடம் செய்த பக்கத்தைக் வேறொருவருக்கு ஓதி காட்டி  கேட்க செய்யுங்கள் , அல்லது நீங்கள் மனப்பாடம் செய்த பக்கத்தின் ஆடியோ கிளிப்பைப் பதிவுசெய்து, உங்கள் தவறுகளை அறிய குர்ஆனைப் பார்த்து அதைக் கேளுங்கள்.

 7-முடியுமாக இருந்தால் நீங்கள் மனப்பாடம் செய்த பக்கத்தை எழுதி, உங்கள் தவறுகளை அடையாளம் காணவும்.

 8 - மிக அவசியமானது :- உங்கள் தொழுகைகளில் நீங்கள் மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுங்கள்
 (கட்டாயமான தொழுகைகள், சுன்னத்தான தொழுகைகள், இரவுத் தொழுகைகள் போன்றவற்றில்).

 9 - ஒவ்வொரு புதிய பக்கத்தையும் நீங்கள் மனப்பாடம் செய்யும் போது, அதையும் முந்தைய பக்கத்தையும் 10 முறை மனப்பாடம் செய்து படிக்கவும்.

இவ்வாறு செய்தால் உங்கள் குர்ஆன் மனப்பாடம்  மிகவும் உறுதியாக இருக்கும், நீங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள், இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்...)

யாஅல்லாஹ் , சங்கையான குர்ஆனை எங்கள் இதயங்களின் வசந்தமாக ஆக்குவாயாக.
أحدث أقدم