சூபிகளின் கடவுள் தத்துவத்தை பொய்ப் பிக்கும் இறைநேசர் இப்ராஹீம் நபியின் உரையாடல்

உலகில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் வெளிப்பாடுதான் என்ற பொய்யான கோட்பாட்டிற்கு முட்டுக் கெடுப்பதற்காக
لا إله إلا الله
வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்ற  நபிமார்கள்  உணர்த்தியஉண்மையாக போதனையின் பொருளை தலைகீழாக மாற்றி
لا إله إلا الله 
அல்லாஹ்வை அன்றி இல்லை. அதாவது  அனைத்தும் அல்லாஹ்தான் என்ற கேட்டால் வாந்தி வருகின்ற
வழிகெட்ட சூஃபிகளின் தத்துவத்தினால் மக்களை முப்பது ஆண்டுகளாக வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஞானப்பாவின் உழரல்களை அவரது சீடர்களின் வலைத் தள பக்கங்களில் காணொளிகளாகக் காணலாம்.

இது பொய்யான கோட்பாடு என்பதை நபிமார்களின் தஃவா பிரச்சாரம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இறைத் தூதர் நூஹ் நபி முதல் இறுதி நபி  வரை வந்த தூதர்கள்  இந்த கலிமாவின் பொருளின் உள்ளடக்கத்தின் பக்கமே அழைத்தனர். 

அதன் காரணமாகவே அவர்களின் சமூகங்களால் எதிர்க்கப்பட்டனர், நையப் படைக்கப்பட்டனர். தமது ஊர்களை விட்டும் விரட்டப்பட்டனர். 
அவர்களில் இறை நேசர் இப்ராஹீம் (அலை) நபியும் ஒருவராகும்.

இறை நேசர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது தந்தையோடு அவர் தயாரித்து வணங்கும் தெய்வங்கள் பற்றிய உரையாடலை நுணுக்கமாக ஆராய்ந்தால்  மர்யம் அத்தியாயம்  41 வது வசனம் முதல் இடம் பெறுகின்ற இப்ராஹீம் (அலை) தனது தந்தை ஆஸரோடு உரையாடிய வரலாற்றுப்  பின்னணியானது
ஞானப்பா  வழிபாட்டையும் வழிகேட்டையும்  படம் பிடித்துக் காட்டும்  .

எல்லாம் அவனே, சிவனும் அவனே, முருகனும் அவனே பன்றியும் அவனே போன்ற ஞானப்பா முன்வைக்கும்
வழிகேட்டுக் கோட்பாடு புதை குளிக்குத் தள்ளப்படுவதை பாவப்பட்ட அவரது சீடர்கள் புரிந்து கொள்ளலாம்.

அப்போதுதான் இப்ராஹீம் நபி கொண்டு வந்த தவ்ஹீத் என்ற ஓரிறைக் கோட்பாட்டு மார்க்க சிந்தனையைத்தான் இறைத் தூதர் முஹம்மது நபியும் பின்பற்றினார்கள் என்பதும், ஞானப்பா சொல்வது நரகத்திற்கு கூட்டிச் செல்லும் அவ்லியா வழிபாட்டை விட படு மோசமான வடிகட்டிய குஃப்ர் கொள்கை என்பதும் தெளிவாகும் . 

இனி விஷயத்திற்கு வருவோம்.
وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ۙ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا‏
 (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.(19:41).

 اِذْ قَالَ لِأبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا‏
 அவர் தனது தந்தையை நோக்கி “என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று கூறியதை நினைவுபடுத்துவீராக.(19:42.)
 يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا‏
 “எனதருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத (இறை)கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் நேர்த்தியான வழியை அறிவிக்கின்றேன்.(19:43.)
 يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ‌ ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا‏
“என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.(19:44.)

 يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا‏
“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக கருணைமிகு அர்ரஹ்மான் அல்லாஹ்விடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைப் பிடிப்பதையும் அதனால் நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றியும் நான் அஞ்சுகிறேன்”.(19:45.

قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُ‌ۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ‌ وَاهْجُرْنِىْ مَلِيًّا‏
 (அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) உம்மை விலகிக்கிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.(19:46).

 قَالَ سَلٰمٌ عَلَيْكَ‌ۚ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْؕ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا‏
.(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம்-  சாந்தி-  உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.19:47.

குறிப்பு: அவர் காஃபிராக மரணித்தார் என்ற செய்தி கிடைத்தது முதல் பிழை பொறுப்புத் தேடவில்லை .

மேலும் அவர்
 وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ‌ ‌ۖ . عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا‏
 நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்).19:48.
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا‏
 (இவ்வாறு)  அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் அவர் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், பின் யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம். (19:49).

 وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளை அளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பேறையும் நாம் வழங்கினோம்.  ஏற்படுத்தினோம்.  (19:50.)

-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

أحدث أقدم