எமது முன்னைய அறிஞர்கள் ஹதீஸ்களை படிக்க, அதனைப் பாதுகாக்க தமது வாழ்நாள் முழுக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு ஹதீஸைப் பாதுகாக்க அந்த இமாம்கள் பட்ட கஷ்டத்தைப் போன்று ஸஹீஹான ஒரு ஹதீஸை மறுப்பதற்கு இன்றைய அறிஞர்கள் ? கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.
இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுக்க ஹதீஸ்களை தேடுவதிலே கழிந்தது. நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த "அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வ அய்யாமிஹி " (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட உளத்தூய்மைக்கு பேதிய சான்றாகும்.
புஹாரியின் விளக்கவுரைகளில் சிறிது, பெரிது அரைவாசி, ஓரக்குறிப்புக்கள், சிறு குறிப்புக்கள் என புஹாரியோடு தொடர்புபட்ட விரிவுரைகள் எனது ஆய்வின் படி ஐநூறு, அறுநூறையும் தாண்டிச் செல்கின்றன.
ஹதீஸ் துறையோடு தொடர்புடையவர்கள், அதில் ஈடுபாடுள்ளவர்களுக்கு பயனளிக்கும் என்ற வகையில் ஸஹீஹுல் புஹாரியின் விளக்கவுரைகளிலிருந்து ஐம்பது நூல்களை அதன் ஆசிரியர்களுடன் இங்கு தொகுத்து தருகிறேன்.
1- பத்ஹுல் பாரி - ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி.
2- பத்ஹுல் பாரி - இப்னு ரஜப் அல் ஹன்பலி அல் பக்தாதி. (கிதாபுல் ஜனாயிஸ் வரை)
3- பத்ஹுல் பாரி - அப்துல் அஸல் பின் மீர் அலாயி அல் ஹுஸைனி அஸ்ஸைத்பூரீ .
4- பத்ஹுல் பாரி - அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் காஸிம் பின் முஹம்மத் அத்தமீமீ அல் பூனி.
5- அஃலாமுஸ் ஸுனன் - ஹத்தாபி.
6- ஷர்ஹு ஸஹீஹில் புஹாரி - இப்னு பத்தால்.
7- ஷர்ஹு முஷ்கிலில் புஹாரி - முஹம்மத் பின் ஸஈத் அல் வாஸிதி.
8- ஷர்ஹுல் புஹாரி - நவவி.
9- அல் பத்ருல் முனீர் - அப்துல் கரீம் அல் ஹலபி.
10 - ஷவாஹிதுத் தவ்ழீஹ் வத் தஸ்ஹீஹ் லிமுஷ்கிலாதில் ஜாமிஃ - முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் மாலிக்.
11- அல் அக்துல் ஜலிய்யு - அஹ்மத் பின் அஹ்மத் அல் கர்தி.
12- அர்ராமூஸ் அலா ஸஹீஹில் புஹாரி - அலி பின் முஹம்மத்.
13- அத்தவ்ழீஹ் - இப்னுல் முலக்கின்.
14- அல் இப்ஹாம் - அப்துர் ரஹ்மான் புல்கீனி.
15- அல் கவ்கபுஸ் ஸாரி - முஹம்மத் பின் அஹ்மத் பின் மூஸா.
16- மஸாபீஹுல் ஜாமிஇஸ் ஸஹீஹ் - தமாமீனி.
17- தைஸீரு மன்ஹலில் காரி - முஹம்மத் பின் முஹம்மத் அஷ்ஷாபிஈ.
18- அல் லாமிஉஸ் ஸபீஹ் - முஹம்மத் பின் அப்துத் தாயிம் அல் பர்மாவி.
19- அல் கவ்கபுஸ் ஸாரி - அலி பின் ஹுஸைன் அல் மூஸிலி.
20- அத் தல்கீஹ் லிபஹ்மி காரிஇஸ் ஸஹீஹ் - புர்ஹானுத்தீன் அல் ஹலபி.
21- அல் மத்ஜருர் ரபீஹ் - முஹம்மத் பின் அஹ்மத்.
22- உம்ததுல் காரி - மஹ்மூத் பின் அஹ்மத் அல் ஐனி.
23- தஃலீகுன் அலல் புஹாரி - முஹம்மத் பின் முஹம்மத் அந்நுவைரி.
24- அல் கவ்ஸருல் ஜாரி - அஹ்மத் பின் இஸ்மாஈல் அல் கவ்ரானி.
25- அந்நஜாஹ் பீ ஷர்ஹி கிதாபி அஹ்பாரிஸ் ஸிஹாஹ் - நஜ்முத்தீன் அபீ ஹப்ஸ் அந்நஸபி.
26- அத்தௌஷீஹ் - ஜலாலுத்தீன் சுயூதி.
27- இர்ஷாதுஸ் ஸாரி - ஷிஹாபுத்தீன் அல் கஸ்தலானி.
28- ஷர்ஹு கவாமிஸ் ஸுன்னா - அபுல் காஸிம் அல் அஸ்பஹானி.
29- அல் பைழுல் ஜாரி - இஸ்மாஈல் பின் முஹம்மத் பின் அப்துல் ஹாதி.
30- அந்நூருஸ் ஸாரி மின் பைழி ஸஹீஹில் புஹாரி - ஹஸன் அல் அதவி அல் ஹம்ஸாவி.
31- அல் கவாகிபுத் தராரீ - ஷம்ஸுத்தீன் அல் கிர்மானி.
32- பைழுல் பாரி - அன்வர் பின் முஃழம் ஷா கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ்.
33- பைழுல் பாரி - ஹாபிழ் அபுல் ஹஸன் ஸியால்கோத்தி.
34- பைழுல் பாரி - கலாநிதி அஹ்மத் உமர் ஹாஷிம்.
35- பைழுல் பாரி - அப்துர் ரஹீம் பின் அப்துர் ரஹ்மான் பின் அஹ்மத் அஸ்ஸெய்யித் அஷ்ஷரீப் அல் அபாதீ அல் அப்பாஸி.
36- பைழுல் பாரி - அப்துல் அவ்வல் பின் மீர் அலாயி அல் ஹுஸைனி அஸ்ஸைத்பூரீ.
37- அந்நஹ்ருல் ஜாரி பீ ஷர்ஹி ஸஹீஹில் புஹாரி - முஹம்மத் பின் முஹம்மத் ஸாலிம்.
38- அத்தன்கீஹ் - முஹம்மத் பின் பஹாதுர் அஸ்ஸர்கஷி.
39- அவ்னுல் பாரி -அபுத் தையிப் ஸித்தீக் ஹஸன் ஹான்.
40- அல் பஜ்ருஸ் ஸாதிஃ - முஹம்மத் அல் புழைல் பின் அல் பாதிமி.
41 - நிஃமதுல் பாரி - அப்துல்லாஹ் பின் தர்வீஷ் அர்ருகாபி.
42- இர்ஷாதுல் காரி - முஹம்மத் அத்தஹாமி பின் அல் மதனி.
43- நுஸ்ரதுல் பாரி - அப்துஸ் ஸத்தார் பின் அப்துல் வஹ்ஹாப்.
44- ஸுப்ஹதுல் பாரி - இக்பால் அஹ்மத் அல் உமரி.
45- நயீமுல் பாரி - அஹ்மத் யார்ஹான் நயீமீ.
46- இல்ஹாமுல் பாரி - அப்துல் ஹலீம் அல்ஹாதி.
47- மனாருல் காரி - ஹம்ஸா பின் முஹம்மத் காஸிம்.
48 - தர்ஜமானுத் தராஜும் - அபூ அப்தில்லாஹ் ருஷைத் அல் பஹ்ரி.
49- பழ்லுல் பாரி - ஷிப்பீர் அஹ்மத் உஸ்மானி.
50 - புக்غயதுஸ் ஸாமிஃ வல் காரி பிஷர்ஹி ஸஹீஹில் புஹாரி - ஜமாலுத்தீன் அபூ யூஸுப்.
இத்தகைய மாபெரும் அறிஞர்களெல்லாம் ஹதீஸ்களுக்கு கொடுத்த விளக்கங்களை தூக்கி எறிந்து விட்டு தமது சுய புத்தியை அளவு கோலாகக்கொண்டு ஹதீஸ்களை மறுக்கின்ற அல்லது தவறான விளக்கங்கள் கொடுத்து ஹதீஸ்களில் மனம்போன போக்கில் விளையாடுகின்றவர்கள் இவர்களது தியாகங்களை கொஞ்சமாவது எட்டிப் பார்க்க வேண்டும்.
எமது முன்னைய இமாம்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
ஹதீஸ் துறை மாணவன்.