உங்களுக்கு எழுதப்பட்ட உணவும் வாழ்வாதாரங்களும் உங்களை வந்தடைந்தே தீரும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல்பாஹிலீ  ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

"நிச்சயமாக எந்த ஓர் ஆத்மாவும் தனது உணவை (வாழ்வாதார தேவைகளை) பூர்த்தியாக பெற்று, ஆயுளை முழுமையாக அடையும் வரை ஒரு போதும் மரணிக்கமாட்டாது, எனவே அல்லாஹ்வை பயந்து அழகிய முறையில் உணவை (ஹலாலாக) தேடுங்கள், அல்லாஹ்வுக்கு பாவம் இழைத்து ரிஸ்கை தேடுவதானது உங்களுக்கு வரவிருக்கும் ரிஸ்கை தாமதப்படுத்துமளவு உங்களை இட்டுச்செல்லாமலிருக்கட்டும், ஆக நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உள்ளவை அவனை வழிபடுவதன் மூலம் வந்தடையும்" என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனது உள்ளத்திற்கு அறிவித்தார்கள்."

நூல்: ஸஹீஹுல் ஜாமிஈ (2085)

வாழ்வாதாரங்கள் காலக்கெடுவைப் போல பிரிக்கப்பட்டு, விதிக்கப்பட்டுள்ளன.  ஒரு நபர் தனது வாழ்வாதாரத்தை விட்டு விரண்டோடினாலும், அவரது ஆயுள் முடிவு  அவரை அடைவது போல, அவரது வாழ்வாதாரம் அவரை அடைந்தே தீரும்.

அல்லாஹ் திருமறையில் வாழ்வாதாரத்தை வழங்கும் பொறுப்பு அவனுடையது என்று பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்:

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 11:6)

எழுதப்பட்ட வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற அதீத தவக்குலில் நாம் உழைக்காமலிருப்பதும், முயற்சிகள் செய்யாமலிருப்பதும் மடமையாகும். ஸபப் எனும் காரண காரியங்களை மேற்கொண்டு அல்லாஹ்விடம் தவக்குல் வைக்கும் போது தான் உரிய வாழ்வாத தேவைகளை அடைந்துகொள்ளலாம்.

நட்புடன்
Azhan Haneefa 
أحدث أقدم