பெண்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கக் கூடிய ஓர் இஸ்லாமிய நடைமுறை
பெண் பிறப்புறுப்பு சிதைவை பெண் விருத்தசேதனத்துடன் குழப்பி பல எழுத்தாளர்கள் பிந்தைய நாட்களில் பெண் விருத்த சேதனம் பற்றி எழுதியுள்ளனர். எனினும் இது உண்மைக்குப் புறம்பானது. பெண் விருத்தசேதனம் என்பது கிளிட்டோரிசை சூழ்ந்துள்ள பெண் முனைப்புத் தோலை நீக்குவதாகும் என இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இது பல சுகாதார நன்மைகளைத் தரக்கூடிய, சிறிய,நோவினை அற்ற, ஆண் விருத்தசேதனம் போன்ற ஒரு செயல்முiறையாகும்.
இஸ்லாத்தின் அடிப்படையில்
அல்குர்அனில் பெண் விருத்தசேதனம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்பது உண்மையாகும் என்பதோடு ஆண் விருத்தசேதனம் பற்றியும் சொல்லப்படவில்லை. ஆண் பெண் இருவருக்குமான விருத்தசேதனம் பற்றிய விடயங்கள் ஹதீஸில் தான் கூறப்பட்டுள்ளன.
விருத்தசேதனம் என்பது ஆண்களுக்கான எனது வழிமுறையாகும். பெண்களுக்கு அதை ஊக்கப்படுத்துகிறேன். (பைஹகி)
இந்த ஹதீஸ் ஆண் மற்றும் பெண் விருத்தசேதனம் ஆகியவையும் நபியவர்களால் அங்கீகரிக்கப்பட்டதாக கூறுகிறது. அவர் இரண்டுக்குமாக பயன்படுத்திய சொல் ஹிதான் ஆகும். அசல் அரபு மொழியில் அல் ஹிதானு ஸ{ன்னதுன் லிர் ரிஜாலி மக்ரூமதுன் லிந் நிஸா. பெண்கள் சார்ந்த ஒரு விடயத்துக்கு ‘நபியவர்களின் வழிமுறை’ எனும் வார்த்தையைப் பயன்படுத்துவது பொருத்தமற்றதாக இருக்கும் என்ற எளிய காரணத்திற்காக அது பெண்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டிய கட்டாயத் தன்மையை அவசியம் பாதிக்காது. அதே போன்று மக்ரூமஹ் அல்லது ஊக்கப்படுத்தல் என்ற பிரயோகம் இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது (பெண் விருத்தசேதனம்) செய்யப்பட வேண்டியதன் கட்டாயத் தன்மையை பாதிக்காது.
பித்ராவுடைய செயல்கள் ஐந்து: விருத்தசேதனம், அந்தரங்க முடியை நீக்குதல், நகம் வெட்டுதல், மீசையைக் கத்தரித்தல், அக்குளுக்குக் கீழுள்ள முடியை நீக்குதல். (ஸஹீஹ{ல் புகாரி ஸஹீஹ{ல் முஸ்லிம்)
இந்த அறிக்கை மிகவும் வலுவான ஒன்றாகும். அந்தரங்க முடியை நீக்குதல், அக்குளுக்கு கீளுள்ள முடியை நீக்குதல் நகம் வெட்டுதல் போன்று விருத்தசேதனம் செய்வதையும் இறைவனால் வழங்கப்பட்ட இயற்கை செயற்பாடுகள் எனும் அம்சத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பதே மீண்டும் மீண்டும் அது ஆண், பெண் இருபாலாருக்கும் கட்டாயமான செயற்பாடாகும் என்பதை வலியுறுத்துகிறது. பித்ராவில் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள் வாஜிப் அல்லது கட்டாயம் என்ற பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டு முஸ்லிம்கள் அதனை செயற்படுத்த வேண்டும் என நபி அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் நோக்காகும். தூய்மைக்கு பங்களிக்கும் வகையில் உடம்பில் வளரும் ஏனையவற்றை நீக்குவதைப் போன்று விருத்தசேதனம் இறைவனால் விரும்பக்கூடிய நிலைக்கு மனித உடலை மாற்றும். இதனால் தான் ஆரம்பத்திலேயே இது பித்ராவுடன் இணைக்கப்படும் ஒரு செயல் எனக் கூறப்பட்டது. எனவே இருபாலினருக்கும் பிறப்பு உறுப்பை மறைத்து வைக்கப்பட்ட அசுத்தமான ஒரு திசு இருப்பதால் இது ஆண்களைப் போன்று பெண்களும் செய்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அது மட்டுமன்றி ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தில் உறுதியாக நிறுவப்பட்ட கொள்கையாகும். எனவே இந்த விடயத்திலும் அவர்கள் சமமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
3. ஆண் விருத்தசேதனம் செய்யப்பட்ட பகுதி பெண் விருத்தசேதனம் செய்யப்பட்ட பகுதியை சந்திக்கும் போதே குளிப்பு கடமையாகிறது. (அஹ்மத், திர்மிதி)
இங்கு நாம் விருத்தசேதனம் செய்யப்பட்ட இரு பகுதிகளும் சந்திக்கும் போதே குளிப்பு கடமையாகி விட்டது என நபியவர்கள் அறிவித்துள்ளதைப் பார்க்கிறோம். ஆண், பெண் விருத்தசேதனப் பகுதிகள் சந்திப்பதை பாலியல் உடலுறவு என நபியவர்கள் வரையறுத்ததோடு குளிப்பை கடமையாக்கியமை ஆண், பெண் இருவரும் விருத்தசேதனம் செய்வது கட்டாயக் கடமை என்பதைக் குறிக்கிறது. இந்த ஹதீஸின் இரண்டு வடிவங்கள் உள்ளன. ஒன்றில் நபியவர்கள் ‘ஹிதானைன் - இரு விருத்தசேதனப் பகுதிகள்’ என்றும் மற்றையதில் ‘ஹிதானுல் ஹிதான் - ஆண் பெண் விருத்தசேதனப் பகுதிகள்’ என்றும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை தெளிவான மரபுகள் என்பவற்றுக்கு அப்பால் அறிஞர்களால் நமக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இன்னும் ஹதீஸ்கள் இருக்கின்றன.
4. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸில் நபியவர்கள் அவரை சந்திக்க வந்த சில அன்சாரிப் பெண்களை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறுகிறார் ((Mukhtassar zawid musnad al bazzar, Ibn Hajar))
5. மதீனாவில் பெண்களை விருத்தசேதனம் செய்த உம்மு அதிய்யா அல் அன்சாரிய்யா என்ற பெண்ணிடத்தில் நபியவர்கள், “நீங்கள் விருத்தசேதனம் செய்யும் போது தெளிவாக வெட்டுங்கள். கடுமையாக வெட்ட வேண்டாம். ஏனென்றால், அது முகத்திற்கு அழகைக் கொடுக்கும் மற்றும் கணவருக்கும் விரும்பத்தக்கது.” என்று கூறினார் (Abu Dawud, Al Awsat of Tabarani and Tarik Baghdad of Al Baghdadi)
விருத்தசேதனம் பெண்களுக்கு அவசியமானது என்று நம்பிய நபி அவர்களின் மிக நெருங்கிய தோழர்களின் சில மரபுகள் உள்ளன.
1. உம்முல் முஹாஜிர், நான் பைசாந்திய பெண்கள் சிலருடன் கைதியாக பிடிக்கப்பட்டேன். அப்போது கலீபா உஸ்மான் எமக்கு இஸ்லாத்தைக் கூறினார். ஆனால் நானும் இன்னொரு பெண்ணும் மாத்திரமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம். அப்போது உஸ்மான். “அவர்களை விருத்தசேதனம் செய்து தூய்மைப்படுத்துங்கள்.” என்று கூறினார் (Adab al Mufrad of Bukhari)
2. உம்மு அல்கமா அவர்கள் கூறுகிறார்கள், “ஆயிஷாவின் சகோதரரது மருமகள்கள் விருத்தசேதனம் செய்ய்பபட்ட போது ஆயிஷாவிடம் அவர்களை மகிழ்விக்க யாரையாவது அழைக்கலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்.” என்று பதிலளித்தார். (Adab al Mufrad)
எனவே இங்கு நபியவர்களின் நெருங்கிய தோழரும் இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவுமாகிய உஸ்மான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சில பெண்களுக்கு விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு பணித்த மரபு இருக்கிறது. அடுத்த மரபானது நபி அவர்களின் மனைவி ஆயிஷா தனது மருமகள்களுக்கு விருத்தசேதனம் செய்தமை அவர் அதனைக் கட்டாயமாக அல்லது பரிந்துரைக்கப்பட்டதாக கருதினார் என்பதாகும்.
ஆரம்பகால அரபு இலக்கியங்கள் கூட பெண் விருத்தசேதனம் செய்வது சமூகத்தால் கடமையாகக் கருதப்பட்டது என்பதற்கு சாட்சியம் அளிக்கிறது. அலிப் லைலா வ லைலா (ஆயிரத்து ஓர் இரவுகள்) முஸ்லிம் வீரர் மற்றும் Christian Damsel ன் கதையில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணைப் பற்றிக் நமக்கு கூறப்படுகிறது. அதில் அப்பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் வீரர் ஒருவர் இஸ்லாமிய நம்பிக்கையின் கொள்கைகளை விவரித்தார். அந்தக் கதை தொடர்கிறது, அப்பெண் முஸ்லிம் ஆகிறார். அவர் விருத்தசேதனம் செய்த பின் அவர் அப்பெண்ணுக்கு தொழக் கற்றுக் கொடுத்தார். இந்த ஆதாரங்கள் விருத்தசேதனம் ஆண், பெண் இருபாலாருக்கும் கட்டாயமானது எனக் குறிக்கிறது.
இஸ்லாமிய செயல்முறை
ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் பெண் விருத்தசேதனத்தில் நீக்கப்பட வேண்டியது கிளிட்டேரிசை சூழவுள்ள பெண்குறி மூலத்தை உள்ளடக்கிய தோலின் மடிப்புப்பகுதி என ஒப்புக் கொண்டுள்ளனர். இது ஆண்களின் விருத்தசேதனம் செய்யப்படும் போது நீக்கப்படும் தோலுக்கு சமமான பெண்களின் பகுதியாகும்.
1. இமாம் நவவி தனது ஷர்ஹ{ல் முஹத்தபில் நீக்கப்பட வெண்டிய பகுதியைப் பற்றி கூறுகிறார். சிறுநீர் குழாய் திறப்பிற்கு மேல் சேவலின் கொண்ட போன்ற கட்டமைப்பின் தோல். மேலும் அவர் தனது விரிவுரைத் தொகுப்பான ஷரஹ் முஸ்லிம் இல் மேல் அந்தரங்கப் பகுதிகளில் சிறிது தோலை அகற்றுவதாக கூறுகிறார்.
2. இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ஃபத்ஹ{ல் பாரியில் நீக்கப்படும் பகுதி பற்றி குறிப்பிடுகிறார். சேவலின் முனைப்பு போன்ற அமைப்பை உள்ளடக்கிய தோல், சதை அல்ல.
3. இப்னு தைமியா மஜ்மூஉல் பதாவாவில் அவளின் விருத்தசேதனம் சேவலின் கொண்ட போன்ற பகுதியை வெட்டுவதை உள்ளடக்கியது என்கிறார். அவர் மேலும் கூறுகையில் இது நடைமுறையில் அகற்றப்படும் பெண்குறி மூலத்தின் செயல்பாடு ஆகும் என்கிறார்.
இந்த ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் அது எவ்வாறு செய்யப்பட வேண்டுமென எதேச்சையாக தீர்மானிக்கவில்லை. அவர்கள் நபியவர்கள் மதீனா பெண்களுக்கு விருத்தசேதனம் செய்த அன்சாரிப் பெண் உம்மு அதிய்யா அல் அன்சாரிய்யாவுக்கு கூறிய ஹதீஸ் அறிவிப்பினைத் தான் அடிப்படையாகக் கொண்டார்கள்.
“நீங்கள் விருத்தசேதனம் செய்யும் போது தெளிவா முறையில் வெட்டுங்கள். ஆனால் கடுமையாக வெட்டாதீர்கள். அது முகத்திற்கு அழகைக் கொடுக்கும் என்பதோடு கணவரும் விரும்பத்தக்கது.”(idha khafadti fa ashimmi wa la tanhaki fa innahu ashraq li-l wajh wa ahza ind al-zawj) (Sunan Abu Dāwud, Sunan Al Kubra of Baihaqi, Al Awsat of Tabarāni and Tārikh Baghdād of Al-Baghdādi)
இந்த ஹதீஸ் பெண்களை விருத்தசேதனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை தெளிவாகக் கூறுகிறது. தெளிவாக வெட்டுங்கள், ஆனால் ஆழமாக வெட்டாதீர்கள் என்ற சொற்கள் கிளிட்டோரிசை அல்லாமல் அதனை சூழவுள்ள தோலை நீக்குவதாகும் என்ற ரீதியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். லா தன்கஹி என்றால், ஆழமாக வெட்டாதீர்கள், பிடுங்க வேண்டாம் கிளிட்டோரிசில் தீங்கு விளைவிப்பது தெளிவாகவே அனுமதிக்கப்பட்டதல்ல. எனவே நபியவர்கள் கிளிட்டோரிசை சூழவுள்ள பகுதிகளை நீக்குவதற்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்பதோடு எந்த வகையிலும் அதற்குத் தீங்கிழைப்பதைத் தடுத்தார்கள் என்பது தெளிவானதாகும்.
‘இது முகத்திற்கு அழகு மிகுந்த பிரகாசம் அல்லது பிரகாசம் அஷ்ராக் என்ற வெளிப்பாடானது இன்பத்தைப் பெற்றுக் கொண்ட ஒரு முகத்தின் வெளிப்பாடு என புரிந்து கொள்ளப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால் தன் கணவனின் ஊடாக பாலியல் திருப்தி அடைந்த ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான முகம் ஆகும். இந்த ஹதீஸின் இன்னொரு வடிவமானது அதனை நேரடியாகவே சொல்கிறது. அஷ்ராக் லில் வஜ்ஹ் - முகத்திற்கு பிரகாசம் என்பதற்குப் பதிலாக அஹ்வா லில் மர்ஆ - பெண்ணுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது என நபியவர்கள் குறிப்பிட்டார்கள். அவர் வெளிப்படையாக கூறியது என்னவென்றால், கணவர் அவருடைய மனைவியும் அவரைப் போலவே அதே நேரத்தில் புணர்ச்சி அடைந்துவிட்டார் என்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார். மேலும் அவர் முழுமையாக திருப்தி அடைவதை உறுதி செய்ய மேலும் தன்னை ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இங்கு கிளிட்டோரிசை சூழவுள்ள அப்பகுதியை நீக்குவதன் ஊடாக தான் பாலியல் திருப்தி உணரப்படும் என்ற கருத்து சொல்லப்படுகிறது.
விருத்தசேதனம் செய்யப்படாத உறுப்பை விட நேரடியான வாய்வழி ஆண்குறி அல்லது தொட்டுணரக்கூடிய தொடர்புகளின் விளைவாக ஒரு விருத்தசேதனம் செய்யப்பட்ட கிளிட்டோரிஸ் தூண்டப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த செயல் பாலியல் செயல்பாட்டின் போது பெண்களின் பாலியல் உணர்வை மேம்படுத்துகிறது என வாதிடப்படுகிறது. இது நிச்சயமாக பெண்களின் திருப்திகரமான பாலியல் வாழ்க்கைக்கு வழி வகுப்பதோடு அவர்களின் கற்பும் உறுதி செய்யப்படுகிறது. பாரம்பரிய நீதிபதிகள் குறுகிய மனம் கொண்வர்கள் அல்ல. அவர்கள் நபியவர்களின் மேற்படி அறிக்கையிலிருந்து அது உண்மையில் எதை சொல்கிறது என்பதை வடித்துக் காட்டினார்கள். அவர்கள் அதிலிருந்து பெற்றுக்கொண்ட இன்னுமொரு முக்கிய முடிவு, நபியவர்கள் ஹிதான் என்ற பிரயோகத்தை ஆண், பெண் இருபாலாருக்குமான விருத்தசேதனம் செய்வதற்கு பயன்படுத்தினார்கள் என்பதாகும். எனவே, ஆணைப் போன்று பென் முனைப்புத் தோலை நீக்கும் செயல்பாட்டை இது பரிந்துரைக்கிறது.