வெள்ளிக்கிழமை குத்பா


நபி ﷺ கூறினார்கள்:* “வெள்ளிக்கிழமையன்று ஒருவர் கொட்டாவி விட்டால் (குத்பாவின் போது) அவர் தான் அமர்ந்து இருக்கும் இடத்தை விட்டுவிட்டு வேரொரு இடத்தில் மாற்றி அமர்ந்து கொள்ளட்டும்”

[صحيح بن خزيمة : مختصر المختصر من المسند الصحيح ١٨١٩]

*ஷேய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஜான் கூறினார்கள்..*

“ஜும்ஆ நாளன்று சீக்கிரமாகவே பள்ளிவாசலுக்கு செல்வது பரிந்துரைக்கப்பட்டதாகும் மேலும் உள்ளே நுழைந்ததும் தஹிய்யத் அல்-மஸ்ஜித்காக இரண்டு ரக்அத் தொழுது கொள்ளட்டும்.”

[الملخص الفقهي ١٩٦/١]

“இமாம் அவர்கள் ஜும்ஆ குத்பா நடத்திக் கொண்டு இருக்கும் போது எவரொருவர் பள்ளிவாசலுக்குள் நுழைகிறாரோ அவர் சிறியதாக இரண்டு ரக்அத் தொழாமல் அமரக் கூடாது என்பது ஜும்ஆவுடைய சட்டங்களில் உள்ளவையாகும்.”

[الملخص الفقهي ١٩٨/١]

“இமாம் அவர்கள் குத்பா நடத்தி கொண்டு இருக்கும் போது பேசுவது அனுமதிக்கப்படாத ஒன்று என்பது ஜும்ஆ தொழுகையுடைய சட்டங்களில் உள்ளவையாகும்”

[الملخص الفقهي ١٩٨/١]

“இமாம் அவர்கள் குத்பா நடத்திக் கொண்டு இருக்கும் போது எவரொருவர் (பள்ளிவாசலுக்குள்) நுழைகிறாரோ, அவர் (எவருக்கும்) முகமன் கூறக்கூடாது.”

[الملخص الفقهي ٢٠٠/١]

“தன்னுடைய கை, கால், தாடி, ஆடை அல்லது அது அல்லாத வேறேதும் ஒன்றை நோண்டிக் கொண்டு இருப்பது அவருக்கு (எவர் குத்பாவின் போது அமர்ந்து அதனை கவனித்து கொண்டிருக்கிறாரோ அவருக்கு) அது அனுமதிக்கப்பட்டதன்று.”

[الملخص الفقهي ٢٠٠/١]

“அதைப்போன்றே, அவர் வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ திரும்பி மக்களை பார்ப்பதிலோ அல்லது வேறெதிலோ மும்மரமாக இருக்கக் கூடாது – ஏனெனில் அது அவரை குத்பாவை கேட்பதுவை விட்டும் திசைதிருப்பக்கூடும். மாறாக, குத்பாவின் போது ஸஹாபாக்கள் رضي الله عنهم எவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்களின் பக்கம் திரும்புவார்களோ அதைப் போன்றே அவரும் கதீப்பின் பக்கம் திரும்ப வேண்டும்.”

[الملخص الفقهي ٢٠٠/١]

“அவர் தும்பினால் அவர் இரகசியமாக (அதாவது அமைதியாக) தனக்குள் தானே (அதாவது யாரும் கேட்காதவாறு) அல்லாஹ்வை புகழ வேண்டும்.”

[الملخص الفقهي ٢٠٠/١]

“குத்பாவிற்கு முன்னரும் குத்பாவிற்கு பின்னரும், மேலும் சட்ட நன்மைக்காக இமாம் அவர்கள் குத்பதைன்னிற்கு (அதாவது இரண்டு குத்பாக்களுக்கு) இடையே அமரும் போதும் பேசிக்கொள்வதற்கு அனுமதியுண்டு. இருப்பினும், ஒருவர் உலக விஷயங்களை பற்றி பேசக் கூடாது.”

[الملخص الفقهي ٢٠١/١]

*இமாம் இப்னு தைம்மியா கூறினார்கள் “* ஜும்ஆவிற்கு வரும் ஒருவர் இமாம் வெளியே வரும் வரை (அதாவது குத்பா நடத்துவதற்கு வரும் வரை) தன்னை தொழுகையில் மும்மரமாக ஈடுப்படுத்திக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும்…”

[مجموع الفتاوى ١٨٩/٢٤]

*இப்னு அல்-கைய்யிம் கூறினார்கள்:* “அதில் (அதாவது வெள்ளிக்கிழமையில்) உள்ள துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரமானது ரமதானில் உள்ள லைலத்துல் கத்ரை போன்றதாகும்.”

[زاد المعاد ٣٩٨/١]

*இப்னு மஸ்’ஊத் رضي الله عنه கூறினார்கள்:* எல்லா நாட்களுக்கும் தலைவர் வெள்ளிக்கிழமை மேலும் எல்லா மாதங்களுக்கும் தலைவர் ரமதான்.”

[ابن أبي شيبه في المصنف ٥٥٥٢]

*இப்னு மஸ்ஸூத்:*
“தொழுகையை நீட்டித்துக் கொள்வதும் குத்பாவை சுருக்கிக் கொள்வதும் ஒரு மனிதனின் ஃபிக்கின் (புரிதலின்) அறிகுறியாகும்”

[الطبراني في الكبير٩٤٩٤]

*இமாம் அல்-பர்பஹாரி:* “எவரொருவர் காரணமின்றி வெள்ளிக்கிழமையையும் பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதையும் கைவிடுகிறாரோ அவர் புதுமை புனைவாளர் ஆவார்.”

[شرح السنة ٢\١٧٧]
أحدث أقدم