ஹதீஸ் அணுகுமுறை தொடர்பான சில அடிப்படைகள்.

முதவாதிர் தரத்திலான ஹதீஸ்களை அகீதாவில் ஏற்று,  ஆஹாத் வகையினை அதில் மறுத்தல் என்ற புது சிந்தனை நபித்தோழர்களின் வழிமுறை கிடையாது , மாறாக பிற்காலத்தில் தோன்றிய சான்றுகளை ஒதுக்கி, பகுத்தறிவை முன்னிலைப்படுத்தும் முன்னணி இயக்கங்களில்  ஒன்றான முஃதஸிலா பிரிவினரும் அவர்கள் வழி நடக்கும், ஜஹ்மிய்யா அஷ்அரிய்யா போன்ற பிரிவுகளினதும் நிலைப்பாடாகும்.

முஃதஸிலா கோட்பாட்டை நிராகரித்து  இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் தனது ரிஸாலாவிலும் மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் என்பது ஒரு குறிப்பாகும்.

இது தொடர்பாக 
حجيَّة أحاديثِ الآحاد في العقائد والأحكام
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல்களில் முதவாதிர் + ஆஹாத் வகை எதுவானாலும் அவை அகீதாவிலும் சட்டத்திலும் பரஸ்பரம் எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கான தெளிவைப் பெறலாம்.

(02) ஹதீஸ் முதவாதிர் அதன் சட்டப் பயன்பாடு ஸஹீஹ், ளஃயீஃப் வகைப்படுத்தல் முறைமையில் ஃபிக்ஹ்  துறை சார்ந்த இமாம்களுக்கும் ஹதீஸ் துறை சார்ந்த இமாம்களுக்கும்  இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

அதன்காரணமாகவே ஃபிக்ஹ் நூல்களில் பலவீனமான  ஹதீஸ்கள் வாயிலாகவும் சட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

(3) அவ்வாறே ஹதீஸ் துறைசார்ந்து, முஹத்திஸீன்களின் வழி நின்று ஹதீஸ்களை அணுகுவோருக்கும் ஃபிக்ஹ் மற்றும் தர்க்கவியலோடு பகுத்தறிவு கலந்து ஹதீஸ்களை அணுகுவோருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகளும் கருத்து மோதல்களும் காணப்படுவதுண்டு.

அந்த அடிப்படையில்தான் பிற்கால அறிஞர்களாக அறியப்பட்ட ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலீ, 
ஷேக் யூசுஃப் கர்ழாவி போன்ற அறிஞர்கள் நோக்கப்படுகின்றனர். ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலியின்
(السنة النبوية بين أهل الفقه واهل الحديث)
என்ற நூல் ஷேக் கஸ்ஸாலி (ரஹி) படித்த ஃபிக்ஹ் மற்றும் சமகால நிகழ்வுகளை வைத்து அணுகுதல் போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில், நம்பகமான முஹத்திஸீன்கள் குறிப்பிடும் ஹதீஸ் விதிகளை  மீறியும் கருத்துக்கள் எழுதப்பட்டு, முரண்பாடுள் இடம் பெறுவதன் காரணமாகவே ஹதீஸ் துறை அறிஞர்கள் மத்தியில் பல எதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஷேக் கஸ்ஸாலி (ரஹி) உயிர் வாழும் போதே சம கால அறிஞர்களால்  முரண்பாடான அவரது கருத்துக்களுக்கு தெளிவான முறையில் மறுப்புக்களும் எழுதப்பட்டுள்ளன என்பதை ஷேக் கஸ்ஸாலியின் கருத்துக்களை புனிதமாக  எடுத்தெழுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டு குறிப்புக்கள்:

(1) ஷேக் கஸ்ஸாலி அவர்களின்
 فقه السيرة 
என்ற இறைத் தூதர் வாழ்வியல் தொடர்பான நூலில் இடம் பெறும் பலவீனமான ஹதீஸ்களை ஷேக் அல்பானி ரஹி அவர்கள் : 
تخريج 
என்ற ஹதீஸ் தரப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு ஆய்வு முறை  மூலம் தரப்படுத்தி வெளியிட்டிருப்பது அவ்விருவர் மத்தியில் காணப்பட்ட புரிந்துணர்வு என்பது ஒரு புறம் இருக்க ; ஷேக் முஹம்மத் அல் கஸ்ஸாலியிடம் ஹதீஸ் பகுப்பாய்வில் காணப்பட்ட குறைபாட்டை  உணர்த்துகின்றது . 

அவ்வாறே , ஷேக் முஹம்மத் கஸ்ஸாலியின் 
(السنة النبوية بين اهل الفقه واهل الحديث 
 நூலுக்கு

١) طليعة سمط اللالئ في الرد على الشيخ محمد الغزالي للشيخ الحويني حفظه الله.
எகிப்தைச் சேர்ந்த ஷேக் இஸ்ஹாக் ஹுவைனி அவர்களின் மேலுள்ள நூல் மிக பயனுள்ள விமர்சன நூலாகும்.

மிகவும் நாகரீகமான முறையில் ஷேக் கஸ்ஸாலிக்கு மறுப்புரை வழங்கி இருப்பது அறிஞர்களின் தவறுகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கு நமக்கும் ஒரு பாடமாகும்.

٢) جناية الشيخ محمد الغزالي على الحديث وأهله"
تأليف : أشرف بن عبدالمقصود

٣) "حوار هادىء مع محمد الغزالي" سلمان العودة.

٤)موقف الشيخ الغزالي من السنة وأهلها الشيخ ربيع المدخلي.
எகிப்தைச் சேர்ந்த முஹம்மத் செய்யித் அஹ்மத் ஷஹ்ஹாத்தா என்ற மாணவர் தனது கலாநிதி கற்கை ஆய்வாக 
٥) (موقف الداعية الكبير الشيخ محمد الغزالي من السنة النبوية (عرض ونقد) وهي رسالة دكتوراة للدكتور محمد سيد أحمد شحاته  (مجلدان من مطبوعات دار السلام - مصر)
என்ற தலைப்பில்  ஆய்வு செய்து பின்னால் அது 
இரண்டு பெரிய நூல்களாக  அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதும் ஷேக் கஸ்ஸாலியின் நூல்களும் கருத்துக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புடம் போடப்பட்டுள்ளன என்பது மற்றொரு குறிப்பாகும் .

(2) ஷேக் கர்ழாவீ (ரஹி) அவர்கள் இஸ்லாமிய உலகில் அறியப்பட்ட பிரபலமாகும்.

தனது ஆசான் முஹம்மத் அல்கஸ்ஸாலி வழியில் பயணிப்பவர் என்பதற்கு அவரது பல கருத்துக்கள், மற்றும் நூல்கள் சான்றாகும்.

விஞ்ஞானத்திலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஈ யின் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில்  நிவாரணமும் இருப்பது பற்றிய ஸஹீஹான ஹதீஸை தனது குறுகிய பகுத்தறிவு கொண்டு ஷேக் கர்ழாவீ அவர்கள் மறுத்தாலும் அதற்குரிய மறுப்பு எழுதப்பட்டிருப்பதும்  நமக்கு உணர்த்துவது என்ன?
 
இவர்களின் கருத்துக்களை புனிதத்துப்படுத்தி இலங்கையில் தமிழில் சந்தைப்படுத்துவோரின் போக்கு முஃதஸிலா வழி நின்று பகுத்தறிவுக்கு முன்னுரிமை வழங்கிடும் போக்கையும்,  

كن بين يدي الشيخ كالميت
ஷேக் நாயத்திற்கு முன்னால் ஒரு மையித்தைப் போல் இரு. அதனை எப்பக்கம்  புரட்டினாலும் அது எதுவும் பேசாது காணப்படும் என்ற பொருளில் 
தரீக்கா  மக்கள் ஷேகுக்கு  வழப்படுவது போன்ற போக்கையும் உறுதிப்படுத்தி, இலங்கை நவீன ஷேக்குகள் தமது ஆசான ஷேக்குகளின் கருத்துக்களோடு நடந்து கொள்கின்றனர் என்பதே! 

நபி (ஸல்) இந்த சமூகம் 73 பிரிவுகளாகப் பிரியும் என்ற 
حديث الافتراق 
ஹதீஸை صحيح لغيره ஸஹீஹ் லிகைரிஹீ தரத்தில் ஹதீஸ் துறை  அறிஞர்கள் நோக்குகின்றனர்

அதனை பகுத்தறிவிற்கு உட்படுத்தும் ஷேக் கர்ழாவீ  அவர்கள் அது  பலவீனமானது எனக் கருதிட அவர் முன்வைக்கும் ஆதாரம் அதைவிட விசித்திரமானது.

அதாவது குறித்த ஹதீஸானது
புகாரி, முஸ்லிம் கிரந்தக்களில்   இடம் பெறவில்லையாம்.
 
சிறுபிள்ளைத் தனமான இந்தக் காரணத்தை முன்வைப்பாரா என நீங்கள் கேட்டு நீங்களே அவரது கருத்தின் தரத்தை முடிவு செய்து கொள்ள முடியும்.

புகாரி, முஸ்லிம் ஆகிய இரு  இமாம்களும் தமது நூலில் இடம் பெறாத பல நூறு ஸஹீஹான ஹதீஸ்கள் பதியப்படாது வெளியில் விடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் செய்தியும் அவ்விரண்டும் தவிர்ந்த ஏனைய ஹதீஸ் கிரந்தங்களில் பல நூறு ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதும்  
أصول الحديث 
பாடத்தில் புகாரி, முஸ்லிமின்  ஹதீஸ் ஒன்று திரட்டல் தொடர்பான தலைப்பில் அரபிக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் சாதாரண விஷயமாகும்.
 
இதைக் கூட ஷேக் கர்ழாவி அவர்கள் அறியாதிருப்பது அவர் முஹத்திஸ் தரத்தில் இல்லாத அறிஞர் என்பதை நமக்கு  உணர்த்துகின்றது.

அதனால் அவர் தனது ஆசான் ஷேக் கஸ்ஸாலி வழி நின்று ஹதீஸ்களை அணுகுவது தவிர்க்க முடியாத ஒன்று.

அதன் காரணத்தினால் ஷேகுக்கான மறுப்பு மாணவனுக்கும் பொருத்தமானதே! 

இந்த மறுப்புக்களை வாசிக்காமல், அல்லது இவ்விருவரையும் அவர்கள் வழியில் செல்வோரையும், மறுப்புரை எழுதப்பட்ட அவர்களின்  முரண்பட்ட பின்பும் அவர்களின் ஆய்வுகளையும் கருத்துக்களையும்  புனத வேதமயப்படுத்தி பொத்தாம் பொதுவாக சரிகாணும்  التقليد الأعمى  தக்லீத் அஃமா என்ற கண்மூடித்னமான முறை அந்த கலை பற்றிய தேடல் இல்லாத இலங்கை வாழ் நமது சகோதரர்களிடம்  காணப்படுகின்ற ஷேக்குகள், குருக்கள் மோகப் போக்காகும்.

இறுதியில் இது மூளைக் கோமா நிலைக்கு கொண்டு சென்று அதன் ஊடாக ஸஹீஹான ஹதீஸ் மறுப்பை உருவாக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இது பீ.ஜே. சொன்னால்  சரிதான் என தலையசிக்கும்  அமைப்பின் கண்மூடித்திற்கு ஒப்பான இயல்பாகும்.

3) ஹதீஸ்களை அறிவிக்கும் பொழுது அனைத்து அறிவிப்பாளர்களும் இறைத்தூதர் மொழிந்த அதே சொற்சேர்க்களை அதே வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அறிவிப்பதில்லை. மாறாக பெரும்பாலான ஹதீஸ் அறிவிப்பாளர்கள் இறைதூதரின் வார்த்தைப் பிரயோகங்களின் கருத்துக்களைத் தான் அறிவிக்கிறார்கள். (என்ற ஹதீஸ் மறுப்பாளர்களின் உளறல்)

இதனை சுன்னா என்ற வஹி எழுத்து மூலம் பாதுகாக்கப்படவில்லை என்ற கீழைத்தேய சிந்தனைவாதிகளின் கருத்தை ஒத்த கருத்தாகவும் என்பது என்பதும் ஹதீஸ் அறிவிப்பு பற்றிய தேடலில் காணப்படும் பாரிய குறைபாடாகவுமே நோக்க வேண்டி உள்ளது .

ஏனெனில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டும் வஹி இரண்டையும் நபித்தோழர்கள் மனனமிட்டுக் கொண்டனர் என்பதே  ஹதீஸ் துறை  அறிஞர்கள் தரும் விளக்கமாகும்.

1) تقييد العلم " -  الخطيب البغدادي ، " 
2) الكفاية في‮ ‬علم الرواية‮» للخطيب البغدادي أيضا 
3) جامع بيان العلم وفضله " - ابن عبد البر ، " 
4) دراسات في الحديث النبوي " - محمد مصطفى الأعظمي 
5) تاريخ تدوين السنة النبوية وشبهات المستشرقين - أكرم ضياء العمري
6) كتب العلل
போன்ற நூல்கள் ஹதீஸ்களின்  பாதுகாப்பு, பதிவு, ஆவணப்படுத்தல் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை விளக்குகின்றன. 

ஹதீஸ்கள் கருத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட முடியுமா ? என்ற கேள்விக்கான பதிலும் தெளிவும் பிற்காலத்தில் தோன்றியதோடு, கருத்தின் அடிப்படையில் பின்வரும் நிபந்தனைகளைப் பேணி ஹதீஸை அறிவிக்கலாம் என்ற முடிவானது
கருத்தின் அடிப்படையில்தான் ஹதீஸ்கள்
அறிவிக்கப்பட்டன புதிய என்ற வாதத்தை முறியடிக்கின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
அவை
1 - أن تكون مِنْ عارفٍ بمعناه : من حيث اللغة ، ومن حيث مراد المروي عنه .
அறிவிப்பவரிடம் அரபு மொழி சார்ந்த ஆழ்ந்த  புலமையும், அறிவிக்கப்பட்ட அறிவுப்பு பற்றிய அறிவும் இருக்க வேண்டும். 

2 - أن تدعو الضرورة إليها ، بأن يكون الراوي ناسياً للفظ الحديث حافظاً لمعناه ، فإن كان ذاكراً للفظه لم يجز تغييره ، إلا أن تدعو الحاجة إلى إفهام المخاطب بلغته .
அதற்கான அவசியமான தேவைப்பாடு காணப்படுதல் .
உதாரணமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸின் குறித்த சொல்லின் பொருளை நினைவில் வைத்து அந்த சொல்லை மறைந்திருப்பது. 

3 - أن لا يكون اللفظ متعبداً به : كألفاظ الأذكار ونحوها " انتهى.
வணங்கப்படக் கூடிய சொற்பிரயோக முறைகள் இல்லாமல் இருப்பது. ஆகிய மூன்று முக்கிய நிபந்தனைகளாகும்.

அவற்றின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாம் நிலைக் கருத்தானது  முதல் நிலையாக மாற்றப்படுவது கீழத்தையவாதிகளின் கருத்து தாக்கத்தினால் உருவானது என்பதை  நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post