இறைத் தூதர் (ஸல்), நபித்தோழர்கள், மற்றும் மத்ஹபு இமாம்கள் வழியில் கப்ரு வணக்கத்தை தகர்தெறிந்து ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தூய அகீதாவில் பயணிக்கும் சவூதி அரேபியா அதே கொள்கையில் பயணிக்க வேண்டும் என்பது நபித்தோழர் வழி நடக்கும் ஒவ்வொரு சுன்னா முஸ்லிமின் அவாவாகும்.
இறைத் தூதர் போதனைகளை நூறு சதவிகிதம் எடுத்துக் கொள்ளாத நாடுகளாக அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் எப்போதோ மாறி விட்டன.
இஸ்லாமிய கிலாஃபத் பெயரில் கப்ரு வணங்கி வந்த கிலாபத்து நடத்திய துருக்கியும் 1924 ல் மண்ணைக் கவ்வியது.
பின், அதன் தலை நகரமான இஸ்தான்பூல் நகரமும் மதச்சார்பின்மை நாடாக மாறி, ஆணும் ஆணும் திருமணம் செய்யும் நாயை விட கேவலமான கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது இன்றும் பயணித்த வருகின்றது. கவலைதான்!.
மறுமையின் பல அடையாளங்கள் உலகில் பொதுவாகவும் ஏனைய அரபு மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாகவும் நிகழாது மறுமை நாள் வரேவை வராது என்பதை மறந்து நாம் பேசக் கூடாது.
اللات والعزى லாத்து, உஸ்ஸா என்ற ஜாஹிலிய்யாக்கால இரு விக்கிரகங்கள் அரபு தீப கற்பத்தில் வணக்கப்படாத வரை மறுமை நாள் வராது. (நபிமொழி) என்ற நபிமொழிக்கு அமைவாக சவூதியில் ஹெலோயின் பண்டிகை மாத்திரமல்ல; ஹெரோயின் பண்டிகையும் வந்தாலும் ஆச்சரியமில்லை.
சவூதி ஆட்சியாளர்களை தூதர்களாக எடுத்துக் கொண்டிருக்கும், அல்லது குர்ஆன் ஹதீஸ் வழி நடப்போரை அவ்வாறு எடுத்துக் கொண்டோராக சித்தரிப்போருக்கும் சவூதியில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் புதுமையாகத் தோன்றினாலும் இஸ்லாம் படித்தோருக்கு அது புதுமை அல்ல.
மாற்றமாக இறைத் தூதரின் முன்னறிவிப்பு நடந்தேறுவதை நினைத்து ஈமானை புதுப்பிப்புக்கும் ஒரு அம்சமாகும்.
சவூதியில் இப்னு ஸல்மான் கட்டியதாக கூறப்படும் தியேட்டர் -திரை அரங்கு-கள், மிகைப்படுத்தியும் மிகைப் படுத்தாமலும் கூறப்படும் அவரது அதிரடி மாற்றங்கள்,
டுபாயில் அண்மையில் திறக்கப்பட்ட இந்துக் கோயில்,
கத்தாரில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கிரிஸ்தவ தேவாலயம்,
பல பில்லியன் செலவில் நடாத்தப்படும் ஃபீஃபா வீண் விளையாட்டு, மற்றும் விளையாட்டுக்கள் ,
ஈரானில் நாளாந்தம் நாஸ்தீகத்தை நோக்கி பயணிக்கும் ஷீஆ மத தடல் புடல்கள் என்பன இனிப் பிறக்கவிருக்கும் ஈராக் ஸர்தாபில் 1200 ஆண்டுகள் ஒழியாத புதிய மஹ்தி (அலை) அவர்களின் வருகையை துரிதப்படுத்துவதாகவே நோக்க வேண்டி உள்ளது.
சவூதியில் இப்போது காணும் (ஹோலோவின் கொண்டாட்டங்கள் உட்பட) அனைத்து புதினங்களும் மற்ற அரபு நாடுகளில் ஏலவே வந்து புளித்து விட்ட பழங் கஞ்சிக் கதையாகும்.
ويل للعرب من شر قد اقترب فتح اليوم من ردم يأجوج ومأجوج.
அரேபியருக்கு வரப்போகும் கேடே! யஃஜூஜ் மஃஜூஜின் அணை தகர்தெறியப்பட்டு விடும் நேரம் நெருங்கி விட்டதோ என எண்ணி நான் ஆச்சரியப்படுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி).
இதன்படி பார்த்தால் அரபிகள் இப்போது நல்லவர்கள். இன்னும் கெட்டுப் போகும் காலம் வர உள்ளது. பொறுங்கள். அவசரப்படாதீர்கள்.
இன்னும் என்னன்னவோ வரவிருக்கின்றது சகோதரர்களே!
தீனைப் பாதுகாக்க ஆட்டு மந்தைகளோடு மலை உச்சியில் ஒதுங்கி வாழும் நிலை வரும்வரை அல்லாஹ்விடம் ثبات ஐ வேண்டி நடப்போம்.
நமது இஸ்லாமிய வழி இறைத் தூதர், நபித்தோழர், இமாம்கள் வழியாகும் என மட்டும் சிந்தித்து தீயவைகளுக்கு விடை காணுவோம்.
اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك.
- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி