நபிகளார் (ஸல்) அவர்களை நிந்தனை செய்தவர் மீதான ஷரீஅத் சட்டம்

- கலாநிதி அப்துல்லாஹ் உவைஸ் (மீஸானி)

நபியவர்களைத் திட்டியவர்களை மன்னிப்பதற்கு முஸ்லிம்களுக்கோ முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கோ எவ்வித அதிகாரமும் உண்டு என எந்தவொரு அறிஞரும் கூறியதாக நான் அறியவில்லை. மாறாக அனைத்து அறிஞர்களும் தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்பதில் ஏகமனதான முடிவில் உள்ளார்கள். 

ஒரு முஸ்லிம் நபியவர்களை ஏசிவிட்டு திருந்தி தவ்பா செய்தால் கூட அவரது தண்டனையை ரத்துச் செய்ய முடியாது எனும் அளவுக்கு ஒரு பாரதூரமான செயல்தான் நபியவர்களை ஏசுவதாகும். 

எனவே மார்க்க விடயங்களில் நமது உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஆதாரங்களுக்கும் நபியவர்களின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை கொடுப்போம். 

இவ்வாறு தண்டனை வழங்குவது இஸ்லாத்தில் நபியவர்களுக்கு மீதுள்ள மரியாதையையும் கண்ணியத்தையும் அந்நியர்களிடம் உணர்த்துவதாகவே அமையும்.

ஆதாரம் 1:
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்-அஷ்ரஃபின் கதையை முடிக்க யார் இருக்கிறீர்கள்? ஏனெனில் அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பெரும் தீங்கு இழைத்துவிட்டான்" என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். (நூல்: புகாரி - 3031, முஸ்லிம் - 1801).

இப்னுல் முன்திர் (ரஹ்) கூறுகிறார்:
"நபி (ஸல்) அவர்களை நிந்தித்தவருக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து முன்வைக்கப்படும் ஆதாரங்களில் கஅப் பின் அல்-அஷ்ரஃபின் நிகழ்வும் அடங்கும். நபி (ஸல்) அவர்கள் 'கஅப் பின் அல்-அஷ்ரஃபின் கதையை முடிக்க யார் இருக்கிறீர்கள்? அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தீங்கு இழைத்துவிட்டான்' என்று கூறியதும், நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் ஒரு குழுவினர் சென்று அவனைக் கொன்றனர்." ("அல்-இஷ்ராஃப் அலா மதாஹிப் அல்-உலமா" - 8/60).

ஆதாரம் 2:
அலி (ரலி) அறிவிக்கிறார்கள்: "ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களை நிந்தித்தும், தரக்குறைவாகப் பேசியும் வந்தாள். இதனால் ஒரு நபர் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றார். இதற்காக அப்பெண்ணின் இரத்தத்திற்கு எவ்வித இழப்பீடும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்." (நூல்: அபு தாவூத் - 4362, அல்-அல்பானி இதனை "இர்வா அல்-கலீல்" 5/91 இல் ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்).

ஆதாரம் 3:
நபி (ஸல்) அவர்களை இகழ்ந்து பாடிய இரண்டு பாடகிகளின் ஹதீஸ். மக்கா வெற்றியின் போது அவர்களைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். மக்காவில் இஸ்லாத்திற்கு எதிரான கடுமையான பகைமை கொண்ட மற்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய போதிலும், இவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை. ("மாகாஸி அல்-வாகிதி" 2/859 – 860, மற்றும் "ஸீரத் இப்னு ஹிஷாம்" 4/52).

இப்னு தைமியா (ரஹ்) கூறுகிறார்:
"மூஸா பின் உக்பா தனது 'மாகாஸி'யில் ஸுஹ்ரியின் வழியாகக் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் தங்கள் கரங்களை அடக்கிக் கொள்ளுமாறும், தம்முடன் போரிடுபவர்களைத் தவிர வேறு எவருடனும் போரிட வேண்டாம் என்றும் கட்டளையிட்டார்கள். மேலும், நால்வரைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். இப்னு கத்தலுக்குச் சொந்தமான இரண்டு பாடகிகள் நபி (ஸல்) அவர்களை இகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர், அவர்களையும் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்... இந்தப் பாடகிகளின் ஹதீஸ் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஏகோபித்து ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். இது பரவலாக அறியப்பட்ட செய்தியாகும்." ("அஸ்-ஸாரிம் அல்-மஸ்லூல்" 2/ 249 – 253).
Previous Post Next Post