கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வது அல்லது அவற்றைப் பார்ப்பது

بسم الله الرحمن الرحيم

உலகக்கோப்பை உள்ளிட்ட கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வது அல்லது அவற்றைப் பார்ப்பது குறித்த நிலையான குழுவின்(ஃபதாவா அல்-லஜ்னதித் தாயிமா) (اللجنة الدائمة) ஃபத்வா 

கேள்வி:  உலகக்கோப்பை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதின் மார்க்க தீர்ப்பு (ஹுக்கும்) என்ன?

பதில்: நிலையான குழு (اللجنة الدائمة) அளித்த பதில் வருமாறு:

"பணமோ அல்லது அது போன்ற பரிசுகளோ வைத்து நடத்தப்படும் கால்பந்து போட்டிகள் ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். ஏனெனில், இது சூதாட்டத்திற்குள் அடங்கும். குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் மட்டுமே மார்க்கம் பரிசுகளைப் பெற அனுமதித்துள்ளது. இதற்கல்லாத பிற விஷயங்களில் பரிசுகளைப் பெறுவது (பந்தயம் கட்டுவது) அனுமதிக்கப்படவில்லை. எனவே, இத்தகைய போட்டிகள் பரிசுகளுக்காக நடத்தப்படுகின்றன என்று தெரிந்தால், அங்கே நேரில் சென்று பார்ப்பதும், தொலைக்காட்சியில் பார்ப்பதும் ஹராம் ஆகும். ஏனெனில், அங்கே சென்று பார்ப்பது அந்தச் செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமையும்.
அதே சமயம், அந்தப் போட்டிகளில் எந்தவிதப் பரிசுகளும் (பணமோ பிற பொருட்களோ) இல்லாமல், தொழுகை போன்ற அல்லாஹ் கடமையாக்கிய காரியங்களுக்குத் தடையாக இல்லாமலும், மேலும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்கள் - அதாவது, மறைக்க வேண்டிய உடல் பாகங்களை வெளிப்படுத்துதல் (அவ்ரா), ஆண்கள் பெண்கள் கலந்திருத்தல், அல்லது இசைக்கருவிகள் போன்றவற்றின் பயன்பாடு - இல்லாமலும் இருந்தால், அப்படிப்பட்ட போட்டிகளில் கலந்துகொள்வதிலோ அல்லது அவற்றைப் பார்ப்பதிலோ எந்தத் தப்பும் இல்லை.

அல்லாஹ்வே போதுமானவன். நம்முடைய நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்."

இந்த ஃபத்வாவில் கையெழுத்திட்ட நிலையான குழுவின் உறுப்பினர்கள்:

 1. அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்
 2. அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் ஆலுஷ் ஷைக்
 3. ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான்
 4. பக்ர் பின் அப்துல்லாஹ் அபூ ஸைத்

ஆதாரம்: "ஃபதாவா அல்-லஜ்னதித் தாயிமா" (15/238)

Previous Post Next Post