بسم الله الرحمن الرحيم
*أخلاق المسلم
[குர்ஆன் கற்றுத் தந்த]
முஸ்லிமின் பண்புகள்
ولا تعتدوا
வரம்பு மீறாதீர்கள். [அல்குர்ஆன் 2:190]
ولا تعثوا في الأرض مفسدين
பூமியில் கேடுவிளைவித்தவர்களாக அலையாதீர்கள். [2:60]
ولا تلبسوا الحق بالباطل
உண்மையைப் பொய்யுடன் கலக்க வேண்டாம். [2:42]
ولا تقف ما ليس لك به علم
உமக்கு எதைப் பற்றி அறிவில்லையோ அதனைத் தொடர வேண்டாம். [17:36]
ولا تمش في الأرض مرحا
பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம். [17:37]
ولا تصعر خدك للناس
(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! [31:18]
واخفض جناحك للمؤمنين
(பணிவும், மென்மை எனும்) உனது இறக்கையை முஃமின்களுக்காக தாழ்த்துவீராக! [15:88]
واغضض من صوتك
உன் குரலைத் தாழ்த்திக்கொள். [31:19]
واقصد في مشيك
உன் நடையில் (பெருமையின்றி) நடுத்தரத்தைக் கடைபிடி. [31:19]
وأعرض عن الجاهلين
அறிவீனர்களைப் பொருட்படுத்தாது விட்டுவிடுவீராக! [7:199]
خذ العفو وأمر بالعرف.
(மனிதர்களுடன் மன்னிப்புடனும் துருவி ஆராயாமலும் சிரமம் கொடுக்காமலும்) தாராளத் தன்மையைக் கைக் கொள்வீராக! நல்லதை ஏவுவீராக! [7:199]
ادفع بالتي هي أحسن
(மற்றவர்கள் உனக்குச் செய்யும் தீமையை) நல்லதைக் கொண்டு (எதிர்கொண்டு) தடுத்துக் கொள்வீராக! [41:34]
ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة
உம்முடைய இரட்சகனின் பாதையின் பக்கம் விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக! [16:125]
لا تبطلوا صدقاتكم بالمن والأذى
கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (கொடுக்கப்பட்டவரை) நோவினை செய்தும் உங்கள் ஸதகஹ்களை (தான தர்மங்களின் நன்மைகளைப்) பாழாக்கி விடாதீர்கள். [2:264]
ولا تأكلوا أموالكم بينكم بالباطل
உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். [2:188]
ولا تنابزوا بالألقاب
உங்களில் ஒருவருக்கொருவர் தீய பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொள்ளாதீர்கள். [49:11]
ولا يسخر قوم من قوم
ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தைப் பரிகாசம் செய்ய வேண்டாம். [49:11]
ولا يغتب بعضكم بعضا
உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். [49:12]
ولا تجسسوا
(பிறர் குறைகளை) ஆராயாதீர்கள். [49:12]
اجتنبوا كثيرا من الظن
(மற்றவர்களைப் பற்றிய) அதிகமான (தப்பான) எண்ணங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். [49:12]
ادخلوا في السلم كافة
முழு இஸ்லாத்திற்குள்ளும் நுழைந்து விடுங்கள். [2:208]
وإذا حييتم بتحية فحيوا بأحسن منها
உங்களுக்கு (ஒரு வார்த்தையைக் கொண்டு) முகமன் கூறப்பட்டால், நீங்கள் அதை விட அழகான (வார்த்)தையைக் கொண்டு (பதில்) முகமன் கூறுங்கள். [4:86]
وبالوالدين إحسانا وذي القربى واليتامى
பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் நல்லுபகாரம் செய்யுங்கள். [2:42]
وأطعموا البائس الفقير
சிரமப்படும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். [22:28]
ولا تتبدلوا الخبيث بالطيب
(ஹலால் எனும்) நல்லதற்கு மாற்றாக (ஹராம் எனும்) கெட்தை எடுத்துக்கொள்ளாதீர்கள். [4:2]
وآتوا اليتامى أموالهم
அனாதை(கள் பருவ வயதை அடைந்தால் அவர்)களிடம் அவர்களின் பொருட்களை ஒப்படைத்து விடுங்கள். [4:2]
أنفقوا مما رزقناكم
நாம் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவிடுங்கள். [2:254]
وقولوا قولا سديدا
சரியான வார்தையையே சொல்லுங்கள். [33:70]
وقولوا للناس حسنا
மனிதர்களிடம் அழகான (வார்)தையையே பேசுங்கள். [2:83]
ولا تعاونوا على الإثم و العدوان
பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ள வேண்டாம். [5:2]
وتعاونوا على البر والتقوى
நல்ல விடயத்திலும் (இறைவனை) அஞ்சுவதிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள். [5:2]
واحفظوا أيمانكم
(பொய் சத்தியம் செய்யாமலும், அவசியமின்றி சத்தியம் செய்யாமலும், சத்தியங்களை முறிக்காமலும்) உங்கள் சத்தியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். [5:89]
وأوفوا بعهد الله إذا عاهدتم
நீங்கள் உடன்படிக்கை செய்வீர்களானால், அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். [16:91]
وأوفوا الكيل إذا كلتم
நீங்கள் அளந்தால் அளவைப் பூர்த்தியாக அளவுங்கள். [17:35]
وزنوا بالقسطاس المستقيم
நேரான (சரியான) தராசைக் கொண்டு நிறுத்துக்கொடுங்கள். [17:35]
كونوا قوامين بالقسط
நீங்கள் மிகவும் நீதியை நிலைநாட்டக் கூடியவர்களாக இருந்து கொள்ளுங்கள். [4:135]
اعدلوا
நீதி செய்யுங்கள். [5:8]
தொகுப்பு: கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் -ஹாஃபிழஹுல்லாஹ்-