தொழுகைக்கு பின் ஓதப்படும் கூட்டு துஆ பித்அத்தா?



بسم الله الرحمن الرحيم

தொழுகைக்கு பின் ஓதப்படும் கூட்டு துஆ பித்ஆவானதா என்பதற்கு விடைதேடும் சில சகோதரர்கள் தவறான முடிவுக்கு வருகின்றனர் அதனால் அது பற்றிய தெளிவை இவ்வாக்கத்தினூடாக தர முயல்கின்றேன் :

பித்ஆ :
மார்க்கத்தில் எந்த அடிப்படையும் இல்லாமல் செய்யும் பித்ஆவுக்கு (பித்அஹ் அல்அஸ்லிய்யாஹ்) البدعة الأصية  
என்றும்
அடுத்தாக بدعة وصفية
(பித்அஹ் வஸ்பிய்யாஹ்) என்றும் அறிஞர்கள் கூறுவர் 
 பித்அஹ் வஸ்பிய்யா என்றால் அடிப்படையில் அச்செயல் மார்கத்தில் இருப்பதை காட்டி செய்வர்  ஆனால் அவர்கள் செய்யும் விதம் புதியதாக அமைந்ருக்கும்

உதாரணமாக :
 “அதான் “
இது அடிப்படையில் மார்க்கத்தில் உள்ளது அதனால் ஒருவர் மழை வேண்டி தொழல், கிரகணத் தொழுகை போன்ற தொழுகைகளுக்காக அதான் சொல்கின்றார் எனில் அதை “பித்ஆ வஸ்பிய்யாஹ்” என்று சொல்லப்படும்.
 அதாவது அதான் அடிப்படையில் மார்க்கத்தில் இருந்த போதும் அது ஐங்கால தொழுகைக்காக சொல்லப்பட்டதாகும் அதை மேற்படி தொழுகைகளான மழை வேண்டி தொழல். கிரகணத் தொழுகை போன்றவற்றிக்காக செய்யமுடியாது காரணம் நபிகளாரின் காலத்தில் அதானுக்கான தேவையிருந்தும் அதை சொல்ல முடிமாக இருந்தும் நபிகளார் அதைச்சொல்லவில்லை. சொல்லும்படி ஸஹாபாக்ளுக்கு சொல்லவும் இல்லை.

இப்போது  நமது மஸ்ஜிதுகளில் பர்ழு தொழுகைகளின் பின் ஓதப்படும் கூட்டு துஆவின் ஷரிஆவின் தீர்ப்புக்கு வருவோம் :

பொதுவாக துஆ என்னபது மார்கத்தின் அடிப்படையில் உள்ள அதிகம் தூண்டப்பட்ட விடயமாகும் ஆனால் இன்று நாம் ஏற்படுத்தியிருக்கும் இமாம் துஆ ஓத மஃமும்கள் ஆமீன் எனச்சொல்லும் விதம் பித்ஆஹ் வஸ்பியாவாகும் காரணம் என்ன நபிகளாரின் காலத்தில் மக்களுக்கு கூட்டு துஆவின் தேவையிருந்து அதை செய்ய முடியுமாக இருந்தும் நபிகளார் அதை செய்யவில்லை ,செய்யும்படி ஸஹாபாக்ளுக்கு கூறவும் இல்லை

பிக்ஹுடைய சட்ட காயிதா இவ்வாறு காணப்படுகின்றது :
إن مشروعية الشيئ بأصله لا يستلزم المشروعية بوصفه
நிச்சயமாக அடிப்படையில் மார்க்கமாக்கப்பட்ட ஒன்றை அதன் பண்பில் (வேறொன்றை வேறு இடங்களில் ) மார்க்கமாக்கப்படுவதை  அவசியமாக்காது

உதாரணமாக : ஸுரத்துல் பாத்திஹாவுக்கு பல சிறப்புக்கள் உள்ளன அதாவது ஸுரத்துல் பாத்திஹா உம்முல் கிதாப் (திருமறையின் நுழை வாயில்). ஸப்உ மதானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் வசனங்கள்) என இன்னும் பல சிறப்புக்கள் உள்ளன என்பதால் ஸுரத்துல் பாத்திஹாவை வைத்து அல்பாத்திஹா ஓத முடியாது காரணம் ஸுரத்துல் பாத்திஹா அடிப்படையில் மார்க்கமாக்கப்பட்ட சிறப்பான விடயம் என்பது வேறு நாம் உருவாக்கி ஓதும் அல்பாத்திஹாவின் விதம் என்பது வேறு

ஆனால் பித்அத்வாதிகள் எப்படி மக்களை திசை திருப்புகின்றார்கள் பாருங்கள்

ஸுரத்துல் பாத்திஹாவுக்கு  பல மேற்படி  சிறப்புகள் உள்ளன அதை ஓதவேண்டாம் எனத் தடுக்கிறார்கள் இவர்கள் பாருங்கள் என்பர்.

உண்மையில் “அஸ்லை” (அடிப்படை அம்சத்தை) நாம் தடுத்தோமா என்றால் இல்லை மாற்றமாக அந்த “அஸ்லை” வைத்து இவர்கள் புதிதாக உருவாக்கிய விதத்தையே தடுத்தோம்.

அதுபோன்றே நாம் ஷரீஆவில் கூறப்பட்ட அடிப்படையான துஆவை தடுப்பதில்லை மாறாக இவர்கள் உருவாக்கிய தொழுகை;கு பின் ஓதப்படும் கூட்டு துஆ  என்ற பித்ஆஹ் வஸ்பியாவையே நாம் தடுகின்றோம்.

كل محدثة بدعة
மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்ஆவாகும் என்ற நபி மொழி தொழுகைக்கு பின் ஓதப்படும் கூட்டு துஆவையும் உள்ளடக்கும் காரணம் நபிகளார்> சஹாபாக்கள் செய்யாத புது விதத்தில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

அல்லாமா நாஸிருத்தீன் (றஹிமஹுல்லாஹ்) கூறும்போது :
إذا ترك النبي شيئا فى الدين فتركه سنة
நபிகளார் மார்க்கத்தில் ஒன்றை செய்யாது விட்டால் அதை விடுவதும் ஸுன்னாஹ்வாகும்

உதாரணமாக:
மலசல கூடத்துக்கு செல்லும் போது> அத்தஹிய்யாத்தின் போது> சாப்பிட முன் நபிகளார் துஆ ஓதியுள்ளார்கள் ஆனால் அவற்றில் தங்கள் கைகளை அந்த துஆக்களின் போது ஏந்தியதில்லை.
 எனவே அங்கு நபிகளார் கையேந்தாமல் விட்டு விட்ட செயல் ஸுன்னாஹ்வாகும் அதுபோன்று நாமும் நமது கைகளை அந்த துஆக்களின் போது ஏந்தாது விடுவது ஸுன்னாஹ்வாகும்.
 
நபிகளார் தொழுகைக்கு பின் ஓதப்படும் கூட்டு துஆ  முறையை ஒருபோதும் செய்ததில்லை ஆகவே நாமும் அதை செய்யாது விடுவது  ஸுன்னாஹ்வாகும் மாறாக அதை செய்வது பித்ஆவாகும்.

மார்கத்தில் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு விடயம் அதன் விதம் தவறி நம்மால் புதிதாக உருவாக்கி செய்யப்படுமானால் அது வித்ஆவாகும்.

ஷரீஆவை பின்பற்றல் என்பது சில அடிப்படையில் அமையவேண்டும் அதாவது ஒரு இபாதத்தில் பின்வரும் அம்சங்கள் கவனிக்கப்பட்டு பின்பற்றபடவேண்டும் இல்லையானால் அவை மறுக்கப்படும் :

1-இடம்
2-காலம்
3-விதம்
4-இனம்
5-எண்ணிக்கை
6-காரணம்

மேற்படி 06 விடயங்களில் தொழுகைக்கு பின் ஓதப்படும் கூட்டு துஆவை  உரசிப்பார்ப்போம் :

1-இடம்: 
மஸ்ஜிதில் அல்லது வெளியில் ஐங்கால தொழுகைக்கு பின் நபிகளார் இன்று ஓதப்படும் கூட்டு துஆ ஓதவில்லை

2-காலம் : 
எந்த காலத்திலும் மஸ்ஜிதில் அல்லது வெளியில் ஐங்கால தொழுகைக்கு பின் நபிகளார் இன்று ஓதப்படும் கூட்டு துஆ ஓதவில்லை

3-விதம் : 
எந்த காலத்திலும் இன்று ஓதப்படும் கூட்டு துஆபோல் மஸ்ஜிதில் அல்லது வெளியில் ஐங்கால தொழுகைக்கு பின் நபிகளார் இன்று ஓதப்படும் விதத்தில்  ஓதவில்லை

அன்பின் சகோதர சகோதரிகளே :

 பித்ஆக்களை புறந்தள்ளுவோம் ஸுன்னாக்களை கடைபிடிப்போம்.

பித்ஆக்கள் இடங்களைப்பிடித்தால் ஸுன்னாக்கள் தூர விலகிவிடும்

எனவே தனித்து செய்யும்படி சொல்லப்பட்ட துஆக்களை தொழுகையின் பின் கடைபிடிப்போம் மறுமையில் வெற்றிபெறுவோம்.
صَلَّى اللهُ عَلَيْهِ وعلى آله وَسَلَّمَ تسليما

இவன் :
செம்மண்ஸலாமி
மூதூர்> சிறீலங்கா.

Previous Post Next Post