-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
பொது மக்களே உஷாராக இருங்கள்
சூப்பர் முஸ்லிம் என்று சொல்லக்கூடிய இந்த யூடியூப் நபர் தனது அறிவு வாதத்தால் உங்களை மயக்கி உண்மையை உங்கள் பார்வையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விடுவார்.
இம்ரான் ஹீஸைன் என்ற வழிகெட்ட சிந்தனை உடையவரின் புத்தகத்தை மட்டுமே படித்து ஆதாரமாக முன் வைக்கிறார், இம்ரான் ஹுஸைன் என்பவர் இஸ்லாம் வலியுறுத்தும் ஷரீஅத் சட்டமான விபச்சாரம் செய்தவர்களுக்கு கல்லால் அடித்து தண்டனை தரவேண்டும் என்பதை விமர்சிக்கிறார் , யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டார்கள் அவர்கள் இஸ்ரேலும், ரஷ்யாவும் என்று மாற்றுக் கருத்து கூறுகிறார், உஸ்மானிய பேரரசு மீது பழி சுமத்துகிறார் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம் என்கிறார்,
கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றிய கலிஃபா முஹம்மத் அல்ஃபாதிஹை கடுமையாக விமர்சிக்கிறார் , துருக்கியில் இருக்கும் ஆயா சோபியா பள்ளிவாசலை கிறிஸ்தவர்களுக்கு திருப்பி தரவேண்டும் என்றும் அங்கு தொழுகை நடத்துவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறுகிறார், குர்ஆன் ஹதீஸை அவருடைய சிந்தனைக்கு மாற்றி விளக்கம் கூறுகிறார் , இவரை பின்பற்றுபவர் தான் இந்த சூப்பர் முஸ்லிம் அரபு மொழியில் எந்த பாண்டித்துவமும் கிடையாது, முறையாக மார்க்கத்தை படித்த ஆலிமும் அல்ல,
ஓர் உதாரணம்
இவர் இந்த வீடியோவில்
https://youtu.be/xfpuKhkrErc
ஸலஃப் உலமாக்கள் சஹாபாக்களை மதிப்பதில்லை என்ற உரத்த தொனியில் தனக்கே உண்டான கிண்டல் செய்யும் பாணியில் சிறுமை படுத்துகிறார் இது நமது முன்னோர்களான சஹாபாக்கள் இமாம்கள் வழி அல்ல, இது ஒருபுறமிருக்க.....
இவர் முன்வைக்கும் அனைத்து ஆதாரங்களும் பார்ப்பதற்கு சரியாக இருப்பதைப் போன்று நாம் உணர்கிறோம், ஆதாரங்கள் நபிமொழிகளின் எண்கள் இதுபோன்று தெளிவாக சொல்கிறார் என்ற ஒரு மாயையை இவர் ஏற்படுத்துகிறார் .
மர்வான் பின் ஹகம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் உமையாக்களின் நான்காவது கலிஃபா ஆவார், ஹதீஸ்கலை வல்லுனர்கள் இவரை தாபியீன்களின் (நபித்தோழர்களின் மாணவர்கள்)மூத்தவர் என்றும் சிலர் சஹாபாக்களில் சிறிய வயது உடையவர் என்றும் கூறுகிறார்கள்.
இறைத்தூதர் ﷺ அவர்கள் வஃபாதின் பொழுது இவர்களுக்கு 8 வயது,
இமாம் இப்னு கஸீர் அவர்களும் தங்களது புத்தகமான "பிதாயா வன் நிஹாயாவிலும்"மர்வான் பின் ஹகம் பற்றி விமர்சித்து எழுதி இருக்கிறார் என்ற கருத்தை மையப்படுத்தி கூடுதலாக ஷீஆக்களின் அடிப்படையான ஆதார புத்தகமான نهج البلاغة -நஹஜுல் பலாகாவில் இடம்பெற்றிருக்கும் தவறான செய்திகளை முன்வைத்தும் இவர் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இவர் வழமையைப் போன்று ஷீஆக்களும் , அவர்களின் வழியை பின்பற்றும் பரேலவிகளும் நபியவர்கள் சாபமிட்ட மனிதர் என்று பல காலங்களாக கூறி இவரின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்துகின்றார்.
இவர் தந்தை ஹகம் பின் அபில் ஆஸ் நபியவர்களால் சபிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார் என்பதாக கூறப்படும் அனைத்து நபிமொழிகளும் ஆதாரபூர்வமானவைகளாக இல்லை,
ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் மர்வான் பின் ஹகம் ரஹிமஹுல்லாஹ் அவர்களை ஸஹாபாக்களில் ஒருவராக கருதுகிறார்,
மர்வான் பின் ஹகம் அவர்களைப் பற்றி கூறும் பொழுது மிகவும் கொடைத் தன்மை கொண்டவராக இருந்தார் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஆக்கப்பட்ட பின் அவர் மகனான அலி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஆயிரம் தீனார்கள் கடனாக தருகிறார்கள், அதுவே தங்களது மாவுத்தன் தருவாயில் மகன் அப்துல் மலிகுக்கு திரும்பப் பெறக்கூடாது என்று வசியத் செய்து இருப்பது மர்வான் பின் ஹகமை பற்றி அஹ்லுல் பைத்கள் சிறந்த ஒரு அந்தஸ்தில் வைத்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது என்று நான்கு இமாம்களில் ஒருவரானஇமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் இவர்களைப் பற்றி கூறும் பொழுது மர்வான் பின் ஹகமுக்கு பின்னால்
ஹசன் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹும் தொழுது இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்
ஆக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் இவர் நீதமானவர், சிறந்த நபித்தோழர்களின் மாணவர் என்று வரலாறுகளில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
பல அறிஞர்கள் இவர் தொடர்பாக வந்திருக்கும் நபியவர்களால் இவர் சபிக்கப்பட்டவர் என்ற அறிவிப்புகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தெளிவாக கூறியிருந்தும்
இந்த சூப்பர் முஸ்லிம் என்று சொல்லக் கூடிய நபர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார், மர்வான் பின் ஹகம் அவர்களை தரக்குறைவாக அவன் இவன் என்று ஒருமையில் பேசுகிறார்.
ஆதாரமற்ற ஒரு செய்தியை கையில் வைத்துக்கொண்டு ஸலஃப் உலமாக்கள் சஹாபாக்களை மதிப்பதில்லை என்று குற்றம் வேறு சாட்டுகிறார்.
இந்த ஷீஆ சிந்தனை உடைய நபர்கள்தான் நபித்தோழர்களை இழிவு படுத்துவதும் அவர்களை திட்டுவதுமாக இருக்கிறார்கள் என்பது அனைவரும் தெரிந்த ஒரு உண்மை, ஷீஆ வழிமுறையை பின்பற்றி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் போற்றப்படும் மதிக்கப்படும் ஒரு இமாமை இவர் கடுமையாக திட்டுகிறார் இதை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்
பாமர மக்களே ஒரு சோற்று பானைக்கு ஒரு சோறு பதம் என்று கூறப்படுவது போல இவருடைய பல வீடியோக்களில் எந்த ஆதாரமும் இல்லாத செய்திகளை முன்வைத்து தனது அறிவை முன்னிலைப்படுத்தி இளம் இஸ்லாமிய சமுகத்தை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்,
இவரின் கருத்துக்கு ஆகா ஓகோ என்று நீங்கள் பதிலளித்து வழிகேட்டில் சென்று விடாதீர்கள்.
உஷார் எச்சரிக்கை!!