நபி(ஸல்) அவர்கள் செய்த அழைப்பு பணியின் வகைகள்

1) நேரடியாக மக்களை சந்தித்தல் ( அவராக சென்று சந்திப்பது அல்லது விருந்து கொடுத்து மக்களை வீட்டிற்கு அழைத்து அழைப்பு பணி செய்தது).

2) பகிரங்கமாக ஒரு கூட்டத்திற்கு முன்னால் குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி அல்லது தனித்தனியாக சந்தித்து குர்ஆனை ஓதிக் காட்டி அழைப்பு பணி செய்வது..

3) தர்மம் அதிகமாக செய்வதன் மூலம் அழைப்பு பணி செய்வது..

4) நற்குணங்கள் ( மன்னித்தல், ஆறுதலாக பேசுதல், சகித்தல், அழகிய முறையில் உறவை பேணுதல், தீமையான செயலுக்கும் நன்மையான செயலைக்கொண்டு பதில் தருதல்) என நற்குணங்களை கொண்டு அழைப்பு பணி செய்வது..

5) நோயாளிகளை நலம் விசாரிப்பதன் மூலம் அழைப்பு பணி செய்வது..

6) கடிதங்கள் மூலம் அழைப்பு பணி செய்வது 

என இப்படியாகவே அவர் வாழ்க்கை முழுவதும் அழைப்பு பணியின் அம்சங்கள் இருந்துள்ளது... எங்கும் நாடகம் போட்டோ அல்லது நடித்தோ அழைப்பு பணி செய்ததாக அவர் வாழ்க்கையில் இல்லை..

அழைப்பு பணியில் நபிமார்கள் பேசிய முக்கிய அம்சங்கள்:

நாம் இன்று பேசுவதைப் போல்  விஞ்ஞானமும் இஸ்லாமும் என்றும்  இஸ்லாம் போதிக்கும் நற்பண்புகள் என்று மேல்மட்டமாக இஸ்லாமை எடுத்துச்சொன்னவர்களாக நபிமார்களின் அழைப்பு பணி இல்லை.. இஸ்லாம் பலவகையான விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போனாலும் இஸ்லாம் நமக்கு அருளப்பட்டதன் நோக்கம் என்பது தவ்ஹீதை நிலைநாட்டத்தான்...அதே போல் எல்லா வற்றையும் நாம் விஞ்ஞானத்தை கொண்டும் வாதங்களை கொண்டும் நிருபித்து காட்ட முடியாது.. மறைவான விஷ்யத்தை நம்பிக்கை கொள்வது என்பது இஸ்லாமின் அடிப்படை கொள்கையாகும் (2:3) .
ஒவ்வொரு நபிமார்கள் காலத்திலும் பாவச்செயல்கள் பலவாறாக வேறுபட்டு காணப்பட்டன உதாரணமாக லுத்(அலை) அவர்களுடைய சமூகம் ஓரிச்சேர்கையை அதிகம் செய்யக்கூடியதாக இருந்தது, ஆது சமூகம் தனக்கு வழங்கப்பட்ட வலிமையை கொண்டு அதிகம் பெறுமை அடிக்கக்கூடியதாக இருந்தது..  இப்படிப்பட்ட பாவச்செயல்களை விட்டுவடும் படி எச்சரித்ததோடு எல்லா நபிமார்களும் நூஹ்(அலை) அவர்கள் ஆரம்பித்து முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அழைத்த அழைப்பு முதலில் 

1) *தவ்ஹீத்* தின் பக்கம் தான்.. 

அல்லாஹுவை மட்டும் வணங்க‌ வேண்டும் அவனுக்கு இணையாக எதையும் ஆக்ககூடாது என்று உறுதிமொழி எடுத்து அதன் படி செயல்படவும் அதே கொள்கையில் மரணம் வரை வாழவும் அழைப்பு கொடுத்தனர்.. (16:36) (2:21) (2-163)(112-1) (2-255)

2) ரிஸாலத் ( தூதுத்துவம்)

தான் அல்லாஹுடைய தூதர் என்றும் தனக்கு கீழ் படிந்தும் தன்னை பின்பற்றுவதையும் கொண்டு தான் அல்லாஹுவை நெருங்க முடியும் அவனது திருப்தியை பெற முடியும் என்றும் அழைப்பு கொடுத்தனர்..(7:158, 21:107,33:21 ,60:6,9:128)

3) ஆக்கிரத் ( மறுமை)

இந்த உலக வாழ்க்கையோடு (மரணத்தோடு) அனைத்தும் முடிந்த விடவில்லை இந்த உலக வாழ்க்கையில் நாம் கண்காணிக்கப்படுகிறோம் நம் செயல்கள் என அனைத்தும் நமது பதிவேட்டில் பதியப்படுகிறது.. ஒவ்வொரு செயலுக்கும் அது சிறயதோ பெரியதோ பாவமோ நன்மையோ அதற்குரிய கூலி கொடுக்கப்படும் என்றும்.. அல்லாஹுவுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படியாமல் அல்லாஹுவுக்கு இணை வைத்து வாழ்ந்தால் நிரந்தர நரகம் என்றும் அல்லாஹுவுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து  அல்லாஹுவுக்கு யாதொரு இணையும் வைக்காமல்  வாழ்ந்தால் அல்லாஹ் நம்மை மன்னித்து சொர்க்கத்தை அதற்கு கூலியாக வழங்குவான் என்றும் நரகத்தை பற்றி  எச்சரித்தும் சொர்க்கத்தை பற்றி நற்செய்தி யும் சொல்லி அழைப்பு கொடுத்தனர்.. (3:185, 99:7-8,88:25-26,30:40 18:49 67:12 ,67:6)

4) மக்ஃபிரத் ( மன்னிப்பு)

அவனது நபி(ஸல்) அவர்களை பின்பற்றி அல்லாஹுவை மட்டும் வணங்கி அவனிடம் தவ்பா செய்து நம்மை சீர்திருத்தம் செய்தால் அல்லாஹ் நம்மை மன்னித்து விடுவான் என்றும் ..அல்லாஹ் நம்மை மன்னிக்க விரும்புகிறான் என்பதையும் மன்னிப்பு கோரி அவன் பக்கம் திரும்புவதை வலியுறுத்தியும் அப்படி அவனிடம் நாம் தவ்பா செய்து திருந்தினால் அவனது திருப்தியை அடைந்த மனிதர்களில் நாமும் ஆகி விடலாம் என்பதையும் கூறி அல்லாஹுவின் கருணையின் பக்கம் அழைத்தனர்.. (3:31) (53-32) (42-25)

5) நஸாராக்கள் ( கிருஸ்துவர்களுக்கான அழைப்பு)

Al- Quran - 4: 171,5:72 ( Don't isa is a son of God or God.. say he is the prophet of God) 

3 :49 (miracles given to isa (as) ), 

 4:157 (isa (as) was not crucified),
 5:116 - 117(judgement day Allah Questions Isa (as)) ,
 61:6(isa (as) about upcoming prophet Ahmed), 43:61( isa (as) will come again), 
19:30( isa (as) in a baby stage spoke about his prophethood), 
3:85( only islam accepted other ways will end in jahannam),
 3:19(only islam accepted), 
3: 64(we should not worship other than Allah), 3: 42(Allah chose Mariam(as), 
57: 28(Christians should believe muhammed saw),
 53 : 5-6(thru jibril quran has come) , 
5:14 ( msg abt prophet Muhammad (saw) in injil ), 
5-17 ( who says Jesus and Mariam god are disbelievers),
 5-18 (god has no sons) 
5-19 ( you should not complaint there is no prophet after isa)

 

6) இதையெல்லாம் எடுத்துச்சொன்ன பின்னர் ஒருவர் இஸ்லாமை ஏற்றால்:

அவருக்கு குர்ஆனையும், சுன்னாவையும்,மார்க்க கடமைகளையும், ஹலால் ஹராம் பற்றிய தெளிவையும் சொல்லிக்கொடுத்து அதன்படி அவர்களும் வாழ்ந்து காட்டி முன்மாதிரியாக திகழ்ந்தனர்.. அல்லாஹ் அந்த நபிமார்களின் பணியை செய்ய நமக்கு உதவி செய்வானாக.. நம் தூதர் முஹம்மத் ஸல் அவர்களோடு மறுமையில் நாம் வாழ்வதற்கு அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக..

பிறரை கேலி செய்வதோ அல்லது விவாதம் என்ற பெயரில் வரம்பு மீறுவது உதாரணம் கூறிகிறேன் என்ற பெயரில் குர்ஆன் சுன்னாவில் கூறப்பட்ட அல்லாஹுவின் பண்புகளை விட்டு அவனுக்கு ஒப்புமையான உதாரணங்களை கூறுவதோ (112-4, 42-11 அவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை) கூடாது.. அதேபோல் மார்க்கத்தை மக்களை மிரட்டி அல்லது  கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள அழைப்பதோ இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்...

இந்த மார்க்கத்தில் கட்டாயம் இல்லை.. நேர்வழி எடுத்துச்சொல்வதோடு நம் வேலை முடிந்தது யார் எதை தேர்ந்தெடுப்பாரோ அவருக்கு நிச்சயம் அதற்கான கூலி உண்டு .. (2:256)

நாத்திகர்கள் , முஸ்லீம்களில் அறியாமையின் காரணத்தால் தஃவாவை எதிர்ப்பவர்களுக்கு இஸ்லாம் கூறும் பதில்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகத்தில்...

குறிப்புகள் எடுக்கப்பட்ட வகுப்பை எடுத்த ஆசிரியர்கள்:
மௌலவி முஜாஹித்
மௌலவி முஃப்தி உமர் ஷரிப்
மௌலவி மன்சூர் உமரி
மௌலவி முபாரக் மதனி
மௌலவி அப்துல் காதர் ரப்பானி
மௌலவி அப்துல் அக்பர் ஃபிர்தௌஸி
மௌலவி பஷீர் ஃபிர்தௌஸி
மௌலவி அப்துஸ்ஸலாம் மதனி
மௌலவி அனிஷ்ஷீர்ரஹ்மான் உமரி மதனி
மௌளவி RK நூர் மதனி
மௌலவி உவைஸ் உமரி 
மொலவி ஹஸன் அலி உமரி
மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி
மௌளவி கமாலுத்தீன் மதனி
மௌலவி சலாமுல்லாஹ் உமரி 

தொகுப்பு- Abubakr Ibnu Chandrasekar
أحدث أقدم