கெட்ட கனவு கண்ட பின்னர் பாதுகாவல் தேடுங்கள்…

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 

கனவுகள் மூ‌ன்று வகைப்படும்:
அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் கனவு (ரஹ்மானி), ஷைத்தானின் புறத்திலிருந்து வரும் வேதனை அளிக்கும் கனவு (ஷைத்தானி) ம‌ற்று‌ம் ஒரு மனிதன் விழித்திருக்கும் நேரத்தில் நினைப்பவை அவருக்கு கனவில் வருவது (நஃப்ஸானி). 
[அல் புகாரி; முஸ்லிம்] 

கெட்ட கனவு கண்ட பின்னர் நீங்கள் என்ன செய்ய வேன்டும்?

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவர் கண்ட கனவு அவருக்கு பிடித்தமானதாக இருந்தால், அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும், எனவே அதற்காக அவர் அல்லாஹ்வை புகழ்ந்து, அக்கனவைப் பற்றி பிறரிடம் கூறலாம். மாறாக அவர் விரும்பாத வேறு கனவைக் கண்டால், அது ஷைத்தானின் புறத்திலிருந்து வந்ததாகும், எனவே  அதன் தீங்லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளட்டும், மேலும் அக்கனவைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம், ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. 
[அல் புகாரி; முஸ்லிம் ] 

ம‌ற்று‌ம்: 

உங்களில் ஒருவர் தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால், தன் இடது புறம் மூன்று முறை துப்பி விட்டு அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடிக் கொள்ளட்டும், பிறகு மறுபுறம் திரும்பி படுத்துக் கொள்ளட்டும். 
[முஸ்லிம்] 

அடுத்த முறை நீங்கள் கெட்ட கனவு கண்டால் . . . 

அக்கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானிடமிருந்தும், அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள். 

எழுந்தவுடன் உங்கள் இடது புறம் மூன்று முறை துப்பிக்கொள்ளுங்கள் (மெதுவாக, எச்சில் உமிழாமல் வெறுமனே துப்பிக் கொள்ளுங்கள்) 

தொழுது கொள்ளுங்கள் ( . . . விரும்பாத ஒன்றை (கனவில்) கண்டவர் . . . எழுந்து தொழுக வேண்டும் 

[அல் புகாரி, பாப் அல்-கய்த் ஃபில் மனாம்]) 

மறுபுறம் திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் கனவை நீங்கள் யாரிடமும் கூறவே வேண்டாம். 

நீங்கள் நல்ல கனவு கண்டால் . . . 

அல்லாஹ்வைப் புகழந்து, அதைக் குறித்து மகிழ்ச்சியாக இருங்கள்.
أحدث أقدم