அகீதாவைக் கொண்டு தொடங்கப்படாத அழைப்பானது பயனில்லாத தோல்வியுறும் ஒரு அழைப்பாகும்

بسم الله الرحمن الرحيم

- அஷ்ஷைஃக் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ் 

السور المكية كلها في هذه العقيدة كلها في التوحيد. السور المكية. فهذا يدل على أن العقيدة هي اللأساس؛ أنه لا فائدة من الدعوة إلى الله بدون البداءة بالعقيدة.
அகீதாவின் விடயங்களிலேயே மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் அனைத்தும் இருக்கின்றன. (அவை) அனைத்தும் தவ்ஹீதின் விடயங்களிலேயே இருக்கின்றன. இது அகீதாவே அடிப்படை என்பதனை காட்டுகின்றது.  அல்லாஹ்வை நோக்கிய அழைப்புப்பணி அகீதாவைக் கொண்டு தொடங்கப்படாவிட்டால் அதில் எந்த பயனும் இல்லை என்பதைக் காட்டுகின்றது.  

 فالذين يدعون إلى الله ولا يبدؤون بالعقيدة ولا يهتمون بها، دعوتهم فاشلة ولم تُنتج شيئا.
எனவே அகீதாவைக் கொண்டு தன்னுடைய தஃவத்தை ஆரம்பிக்காமல், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களின் அழைப்பானது, தோல்வியுறும் ஒரு அழைப்பாகவே இருக்கும். அது எந்தவொரு (பலனான) விளைச்சலையும் தராது.  

أما الذين دعوا إلى هذه العقيدة ونشروها وبينوها فهؤلاء هم الذين أفادوا العباد والبلاد.
ஆனால் எவர்கள் இந்த அகீதாவின் பக்கம் (மக்களை) அழைத்து, அதனை பரப்பி மற்றும் அதைப்பற்றி தெளிவு படுத்தினார்களோ, அவர்களே அடியார்களையும், நாடுகளையும் பயனடையச் செய்தார்கள்.

انظروا إلى شيخ الإسلام ابن تيمية رحمه الله لما تبنّى هذه العقيدة ودعا إليها وبيّنها وقررها وألف فيها  
وتلميذه الإمام ابن القيم أيضا لما تلاه على هذا المنهج وكذلك بقية تلاميذ شيخ الاسلام ابن تيمية فإنهم لما بنوا على هذا الأساس وأصّلوا دعوتَهم عليه نجحت دعوتهم والحمد لله.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவை சற்று நோக்குங்கள். எப்போது அவர் இந்த அகீதாவை ஏற்று நடந்து, அதன் பக்கம் மக்களை அழைத்து, அதனை தெளிவுப்படுத்தி, விளக்கி, அதைப்பற்றி நூல்கள் தொகுத்தாரோ, மேலும் அவருடைய மாணவரான இமாம் இப்னுல் கய்யிம் எப்போது அவரை இந்த வழிமுறையில் பின்தொடர்ந்தாரோ, அதனைப் போன்றே இப்னு தைமிய்யாவின் மீதமுள்ள மாணவர்களும், எப்போது இந்த (அகீதா என்ற) அடிப்படையின் மீது (தங்களுடைய தஃவத்தை) கட்டமைத்தார்களோ மேலும் அவர்களுடைய அழைப்புப்பணியை  அதன்மீது அமைத்தார்களோ, அப்போது அவர்களுடைய அழைப்புப்பணியானது வெற்றிப்பெற்றது. மேலும் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

 وأفادت وأثمرت كتبا كثيرة معلومة بأيدي المسلمين في مشارق الأرض ومغاربها.
கிழக்கிலும் மேற்கிலும் முஸ்லிம்களின் கைகளில் தழுவப்படுவதாக அறியப்பட்ட அதிகமான நூற்கள் வெளிவருவதற்கு வழிவகுத்தது மற்றும் பயனளித்தது.

فهذه العقيدة هي الأساس الذي يُبنى عليه سائر الدين وسائر العبادات فعمل بدون العقيدة هذا عمل ضائع وباطل.
எனவே இந்த அகீதாவே மார்க்கத்தின் அனைத்து விடயங்கள் மற்றும் வணக்க வழிபாடுகள் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அடிப்படையாகும்.

எனவே (சரியான) அகீதா இல்லாத ஒரு அமலானது வீணான மற்றும் பயனில்லாத ஒரு அமலாகும்.

ودعوة بدون العقيدة دعوة فاشلة لا ثمرة فيها.
மேலும் அகீதா இல்லாத ஒரு அழைப்புப்பணியானது எந்தவொரு பயனுமில்லாத தோல்வியுறும் ஒரு அழைப்புப் பணியாகும்.

-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post