அஹ்லுல்‌ பைத்‌


M.B.M.இஸ்மாயில்‌ (மதனி) M.A(Cey)



வெளியீடு: அமானதுத்‌ தஃவா,
பயிற்சிக்கும்‌ அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார மையம்‌, இலங்கை.


உள்ளடக்கம்

பதிப்புரை

அணிந்துரை

முன்னுரை

அஹ்லுல்‌ பைத்‌ என்போர்‌ யார்‌?

நபி (ஸல்)‌ அவர்களின்‌ அஹ்லுல்‌ பைத்‌.

விதண்டாவாதமும்‌ விளக்கமும்‌.

அஹ்லுல்‌ பைத்தும்‌ ஸஹாபாக்களும்‌.

அஹ்லுல்‌ பைத்தினர்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களா? அல்லது ஷீஆக்களா?

அஹ்லுல்‌ பைத்‌ விடயத்தில்‌ அஹ்லுஸ்ஸுன்னாவின்‌ கொள்கை.

அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகளைப்‌ பாதுகாத்தது அஹ்லுஸ்ஸுன்னாக்களே.

அஹ்லுல்‌ பைத்தினர்தான்‌ ஆட்சிக்குத்‌ தகுதியானவர்களா?

அஹ்லுல்‌ பைத்தைத்தான்‌ பின்பற்ற வேண்டுமா?

ஹுஸைன்‌ (ரழி) அவர்களைக்‌ கொன்றவர்கள்‌ யார்‌?

ஷிஆக்களும்‌ நபியின்‌ மனைவியரும்‌.

ஷிஆக்கள்‌ சொல்லும்‌ அஹ்லுல்‌ பைத்‌.

அஹ்லுல்‌ பைத்தை அசிங்கப்படுத்தும்‌ ஷீஆக்கள்‌.

சந்தேகங்களை உருவாக்குவதே ஷீஆக்களின்‌ பணி.

ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகளைப்‌ பாதுகாக்கவில்லை.

ஷீஆக்கள்‌ சொல்லும்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகள்‌ குறைவாக இருப்பதற்கான காரணம்‌ என்ன?

ஷீஆக்கள்‌ சொல்லும்‌ 12இமாம்களும்‌ நபியவர்களால்‌ அடையாளப்படுத்தப்பட்டவர்களா?

ஷீஆக்களின்‌ தந்திரமான நகர்வு.

ஷீஆக்களே அஹ்லுல்‌ பைத்தின்‌ விரோதிகள்‌.

ஷீஆக்களைத்‌ தூற்றும்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌.

துணை நின்றவை.



பதிப்புரை.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்‌...

வருடந்தோறும்‌ அமானதுத்தஃவா றமழானில்‌ நடத்துகின்ற முஸாபகது றமழான்‌ போட்டிக்கு இவ்வாண்டு (2017ம்‌ ஆண்டு) அஷ்ஷேக்‌ M.B.M. இஸ்மாயில்‌ (ஸலாமி) எழுதியுள்ள “அஹ்லுல்‌பைத்‌” என்ற நூலைத்‌ தெரிவுசெய்வதிலும்‌ அதனை வெளியிடுவதிலும் நாம்‌ மகிழ்ச்சியடைகின்றோம்‌.

“அஹ்லுல்‌ பைத்‌” அனைவரும்‌ எமது கண்ணியத்துக்கும்‌ கெளரவத்துக்குமுரியவர்கள்‌. நாம்‌ அவர்களை இனங்காண வேண்டும்‌, கண்ணியப்படுத்த வேண்டும்‌. அவர்களை ஒரு குறுகிய வட்டத்தினுள்‌ நாம்‌ அடக்கிவிட முடியாது. எனவே, அவர்கள்‌ பற்றி சிறந்ததொரு அறிமுகத்தை சகோதரர்‌ இஸ்மாயில்‌ (ஸலாமி) செய்துள்ளார்‌.

எனவே, இந்நூலை வாசிக்கும்‌ வாசகர்கள்‌ “அஹ்லுல்‌ பைத்‌” பற்றித்‌ தெளிவாக அறிந்து கொள்ள வாய்ப்பேற்ப்படுகிறது. இந்நூலை வாசிக்கும்‌ வாசகர்கள்‌ றமழானில்‌ நடைபெறும்‌ போட்டியில் கலந்து சிறந்த அறிவைப்பெற்றுக்கொள்ள வாழ்த்துகின்றோம்‌.

எல்லாம்‌ வல்ல அல்லாஹ்‌ எமது பணிகளை ஏற்று அருள்‌ புரிவானாக. ஆமீன்‌.

தலைவர்‌, 
அமானதுத்‌ தஃவா, 
பயிற்சிக்கும்‌ அபிவிருத்திக்குமான சர்வதேச மையம்‌, கொழும்பு.  


றாபிதது அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஅத்தின்‌ தலைவர்‌ வழங்கிய அணிந்துரை.

வரலாறு நெடுகிலும்‌ இஸ்லாமிய மார்க்கத்திற்குள்‌ ஊடுருவி கொள்கைக்‌ குழப்பம்‌ செய்தவர்களில்‌ ஷீஆக்களைத்‌ தவிர வேறெவரும்‌ முஸ்லிம்‌ உம்மத்தின்‌ கைகளில்‌ தவழும்‌ குர்‌ஆன்‌ பிரதியை சந்தேகிக்கவில்லை. ஷீஆக்களைத்‌ தவிர வேறெவரும்‌ அல்லாஹ்வின்‌ தூதரின்‌ தோழர்களில்‌ ஒரு சிலரைத்தவிர மற்றெல்‌லோரையும்‌ மதம்மாறியோர்‌ என்று குற்றம்‌ சாட்டவில்லை.

ஐரோப்பாவின்‌ துருக்கி வரை வீறுநடை போட்ட இஸ்லாத்தின்‌ வளர்ச்சிக்கு அந்நியர்களுடன்‌ சேர்ந்து முட்டுக்கட்டை போட்டவர்கள இந்த ஷீஆக்கள்தான்‌ என்பதற்கு அல்லாஹ்வும்‌ வரலாறும்‌ சாட்சியாகும்‌. 

இந்த வழிகெட்ட ஷீஆக்கள்‌ “தகிய்யா” என்னும்‌ இடத்திகேற்ப நடந்து கொள்ளும்‌ நடைமுறையையும்‌, “மஹப்பது அஹ்லில்‌ பைத்‌” (அல்லாஹ்வின்‌ தூதரின்‌ குடும்பத்தாரை நேசித்தல்‌) என்னும்‌ கோஷத்தையும்‌ வைத்தே முஸ்லிம்‌ உம்மத்தின்‌ பாமரர்களையும்‌ படித்தவர்களையும்‌ தொடர்ந்து ஏமாற்றி வந்தனர்‌.

“மஹப்பது அஹ்லில்‌ பைத்‌” என்னும்‌ கோஷத்தால்‌ பெரும்பாலும்‌ பாமரர்கள்‌ ஏமாற்றப்பட்டார்கள்‌. “தகிய்யா” வின்‌ மூலம்‌ பெரும்பாலும்‌ படித்தவர்கள்‌ ஏமாற்றப்பட்டார்கள்‌.

இந்த வழிகெட்ட ஷீஆக்கள்‌ இஸ்லாத்திற்கும்‌ முஸ்லிம்‌ உலகுக்கும் எப்படிப்பட்ட துரோகிகள்‌ என்பதை அறிவியல்‌ மூலமும்‌ அனுபவம்‌ மூலமும்‌ அறிந்த முன்‌ சென்ற அறிஞர்கள்‌ எழுதிவைத்துள்ள முன்னெச்சரிக்கைகளை ஜமாஅத்தே இஸ்லாமி, அல்‌ இக்வானுல்‌ முஸ்லிமூன்‌ இயக்கங்களைச்‌ சார்ந்த சிந்தனையாளர்கள்‌ புறக்கணித்தது இந்த இயக்கங்களின்‌ சிந்தனையால்‌ பாதிக்கப்பட்ட அஹ்லுஸ்‌ ஸுன்னா வாழும்‌ நாடுகளில்‌ ஷீஆக்கள்‌ ஊடுருவ கணிசமாக உதவியுள்ளது என்பதை யாரும்‌ மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில்‌ இந்த ஷீஆக்களின்‌ முகத்திரையைக்‌ கிழித்து அவர்களது வேஷத்தைக்‌ கலைத்து முஸ்லிம்களுக்கு அடையாளப்படுத்துவது ஒரு கட்டாயத்தேவை ஆகும்‌.

எனவே, உண்மையான அஹ்லுல்‌ பைத்‌ யார்‌? அவர்களை உண்மையாக மதித்து நேசிப்பவர்கள்‌ யார்‌? அஹ்லுல்‌ பைத்‌ விடயத்தில்‌ வழிதவறிப்‌ போனவர்கள்‌ யார்‌? அஹ்லுல்‌ பைத்திற்குத்‌
துரோகம்‌ செய்தவர்கள்‌ யார்‌? போன்ற பல்வேறு அம்சங்களை அழகாக ஒழுங்குபடுத்தி நூலாசிரியர்‌ அன்பிற்கினிய சகோதரர்‌ இஸ்மாயில்‌ (மதனி) அவர்கள்‌ அல்குர்‌ஆனையும்‌, அஸ்‌ஸுன்னாவையும்‌ முன்னோர்களின்‌ நூற்களையும்‌ ஆழமாக ஆய்ந்து, ஆதாரங்களை முன்வைத்து, நேர்மையாகவும்‌, தர்க்க ரீதியாகவும்‌, எளிய நடையிலும்‌ முன்வைத்துள்ளார்கள்‌. இதன்‌ மூலம்‌ சராசரி மனிதனுக்கு ஷீஆக்களின்‌ கோரமுகத்தைக்‌ அடையாளங்‌ காட்டியுள்ளார்‌. அல்ஹம்துலில்லாஹ்‌. 

இந்நூல்‌ ஷீஆக்களின்‌ பிற்போக்குத்தனத்தை படம்‌ பிடித்துக்‌ காட்டும்‌ ஓர்‌ அருமையான பதிவாகையால்‌, இந்நூலின்‌ மூலம்‌ ஷீஆக்களால்‌ ஏமாற்றப்பட்டவர்கள்‌ நேர்வழி பெறவும்‌, ஏனையோர்‌ பாதுகாக்கப்படவும்‌ அல்லாஹ்‌ அருள்‌ புரிவானாக. ஆமீன்‌.

Mou.Dr.SM. Raeesuddeen Ash Sharee BUMS, MD 03.05.2017



முன்னுரை

அளவற்ற அருளாளன்‌ நிகரற்ற அன்புடையோன்‌ அல்லாஹ்வின்‌ திருப்பெயரால்‌,... 

ஸலவாத்தும்‌ ஸலாமும்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்) அவர்கள்‌ மீதும்‌ அவர்களின்‌ தோழர்கள்‌, குடும்பத்தார்‌, மறுமைவரை அவரது வழியைப்‌ பின்பற்றி வாழ்வோர்‌ அனைவர்‌ மீதும்‌ உண்டாவதாக... ஆமீன்‌.

அல்லாஹ்வின்‌ உதவியால்‌ முன்னெப்போதும்‌ இல்லாத அளவு இன்று உலகில்‌ ஷீஆக்களின்‌ உண்மை முகம்‌ வெளுத்து வருகின்றது. இதற்கு எமது இலங்கையும்‌ விதிவிலக்கல்ல!

அண்மைக்காலமாக இலங்கையின்‌ பல பாகங்களிலும்‌ அமைப்பு வேறுபாடின்றி ஷீஆக்களின்‌ கொள்கைகள்‌ பற்றி மக்களுக்கு தெளிவூட்டி அவர்களின்‌ ஈமானைப்பாதுகாக்கும்‌ முயற்சியில்‌ உலமாக்கள்‌ ஈடுபட்டுவருகின்றனர்‌. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்‌.

முன்பெல்லாம்‌ நாம்‌ ஷீஆக்கள்‌ அல்ல என்று தகிய்யா வேஷத்தில்‌ இருந்த ஷீஆக்களில்‌ சிலர்‌ தற்போது பகிரங்கமாக ஷீஆக்‌ கொள்கையை பிரச்சாரம்‌ செய்வதைத்‌ தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்‌ பொறுப்புக்களைப்‌ பகிர்ந்து கொள்கைப்‌ பிரச்சாரம்‌ செய்து வருகின்றனர்‌. 

தங்களை அஹ்லுல்‌ பைத்தின்‌ நேசர்களாகக்‌ காட்டிக்கொள்ளும்‌ அவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றுவதாகவும்‌ அவர்களையே பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ பிரச்சாரம்‌ செய்துவருகின்றனர்‌. 

இதற்கு எமது அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஜமாஅத்தின்‌ கிரந்தங்களில்‌ உள்ள சில செய்திகளை ஆதாரமாகக்‌ காட்டுகின்றனர்‌. இதனால்‌ அஹ்லுல்‌ பைத்‌ பற்றிய ஷீஆக்களின்‌ நிலைப்பாட்டைத்‌ தெளிவுபடுத்துவதும்‌ இஸ்லாமிய வரலாற்றில்‌ அஹ்லுல்‌ பைத்தைக்‌ குறிவைத்து ஷீஆக்கள்‌ மேற்கொண்ட தாக்குதல்களை விளக்குவதும்‌ இக்காலத்தில்‌ வாழ்வோருக்கு அவசியமாகியுள்ளதால்‌ இந்நூல்‌ தொகுக்கப்பட்டுள்ளது.

எமக்கு முன்சென்ற பல உலமாக்களின்‌ முயற்சிகளையும்‌ கருத்துக்களையும்‌ படித்து அதில்‌ உள்ளவற்றையே நான்‌ சுருக்கமாக இதில்‌ முன்வைத்துள்ளேன்‌. அல்ஹம்துலில்லாஹ்‌.

இந்நூலை எழுதுவதற்கு துணை செய்த அல்லாஹ்வைப்‌ புகழ்வதுடன்‌ அதனை அச்சிட்டு வெளியிட்ட சர்வதேச இஸ்லாமிய கலாசார மையத்தின்‌ அமானதுத்‌ தஃவாப்பகுதிக்கான தலைவர்‌ செயலாளர்‌, மற்றும்‌ அதன்‌ உறுப்பினர்கள்‌ போசகர்கள்‌, ஊழியர்கள்‌ அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌. 

அல்லாஹ்‌ அவர்கள்‌ அனைவருக்கும்‌ நீண்ட ஆயுளையும்‌ இஹ்லாஸுடன்‌ அமல்‌ செய்யும்‌ பாக்கியத்தையும்‌ வழங்குவானாக.

இதை வாசிக்கும்‌ நீங்கள்‌ இதன்‌ மூலம்‌ முழுமையான பயனைப்‌ பெற்று ஈருலகிலும்‌ சிறக்க இறைவனைப் பிரார்த்திப்பதுடன்‌ இதில்‌ நீங்கள்‌ காணும்‌ குறைகளை சுட்டிக்காட்ட மறவாதீர்கள்‌ எனவும்‌ வேண்டிக்‌ கொள்கின்றேன்‌. 

அல்லாஹ்‌ நம்‌ அனைவரின்‌ பணிகளையும்‌ ஏற்றுக்கொண்டு அருள்‌ புரிவானாக.

M.B.M. இஸ்மாயில் (மதனி) M.A (Cey)
அதிபர்‌, தாறுஸ்ஸலாம்‌ அரபுக்கலாபீடம்‌
ஓட்டமாவடி, ஸ்ரீலங்கா.
12.04.2017.


 

அஹ்லுல்‌ பைத்‌ என்போர்‌ யார்‌?

“அஹ்லுல்‌ பைத்‌” எனும்‌ வார்த்தை அரபு வார்த்தையாக இருந்தாலும்‌ இஸ்லாமிய வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையதாகவும்‌ பெரும்‌ விளைவுகளுக்கு காரணமானதாகவுமிருக்கிறது. 

அத்தோடு நபியவர்களுடன்‌ இது தொடர்புபடுத்தப்பட்டு புதிய சிக்கல்களும்‌ உருவாக்கப்படுகின்றன. இதனால்‌, அது தொடர்பில்‌ மிகுந்த அவதானத்துடன்‌ ஆய்வு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது.

எனவே, இந்த வாசகத்தின்‌ சரியான அர்த்தத்தை சந்தேகமின்றி அறிந்துகொள்வதற்கு பின்வரும்‌ 04 முறைகளில்‌ ஆய்வு செய்வோம்‌.

01) மொழி 

02) வழக்கு 

03) அல்‌-குர்‌ஆன்‌ 

04) அல்‌ ஹதீஸ்‌



மொழி:

“அஹ்லுல்‌ பைத்‌” எனும்‌ அரபுப்பதம்‌ “அஹ்ல்‌”, “பைத்‌” எனும்‌ இரண்டு சொற்களின்‌ பிணைப்பால்‌ உருவானதாகும்‌.

“அஹ்ல்‌' என்றால்‌ சொந்தக்காரன்‌ என்பது பொருள்‌. இது ஒரு பொதுவான சொல்‌ இது எதனோடு இணைக்கப்படுகிறதோ அதனோடு இணைந்து கருத்தைக்‌ கொடுக்கும்‌. உதாரணமாக

“அஹ்லுல்‌ அம்ர்‌' என்றால்‌ அதிகாரத்தின்‌ சொந்தக்காரன்‌ அதாவது ஆட்சியாளன்‌ எனும்‌ கருத்தைக்கொடுக்கும்‌. “அஹ்லுல்‌ ஜன்னாஹ்‌”என்றால்‌ சுவர்க்க வாசிகள்‌ என்றும்‌ “அஹ்லுந்நார்‌' என்றால்‌ நரகவாதிகள்‌ என்றும்‌ பொருள்‌ தரும்‌. “அஹ்லுல்‌ மத்ஹப்‌” என்றால்‌ மத்ஹபின்‌ சொந்தக்காரர்கள்‌ அதாவது குறித்த மத்ஹபின்படி நடப்பவர்கள்‌ “அஹ்லுர்ரஜுல்‌' ஒரு மனிதனின்‌ சொந்தக்காரர்கள்‌ அதாவது அவனின்‌ குடும்பம்‌.

“அஹல' என்றால்‌ திருமணம்‌ செய்தான்‌ என்ற அர்த்தமும்‌ உள்ளது. “அஹ்ஹலகல்லாஹ்‌' என்றால்‌ அல்லாஹ்‌ உனக்கு திருமணம்‌ முடித்ததுத்தருவானாக! உன்னை குடும்பஸ்தனாக மாற்றுவானாக! என்ற பொருள்படும்‌ பிரார்த்தனையாகும்‌.



வழக்காறு:

பொதுவாக “அஹ்லுல்பைத்‌' எனும்‌ இந்த வார்த்தை பரிபாசையில்‌ மனைவி என்ற கருத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.“அவன்‌ தன்‌ வீட்டாரோடு வந்தான்‌' என்று சொன்னால்‌ அவனது மனைவியோடு அவன்‌ வந்திருக்கிறான்‌ என்று நாம்‌ விளங்குவோம்‌. “தன்‌ குடும்பத்தோடு வந்தான்‌' என்று சொன்னால்‌ மனைவியோடும்‌ பிள்ளைகளோடும்‌ வந்திருக்கிறான்‌ என்றே விளங்குவோம்‌. ஒருவன்‌ தன்‌ மனைவியை விட்டுவிட்டு பிள்ளைகளோடு மாத்திரம்‌ வந்தால்‌ தன்‌ குடும்ப சகிதம்‌ வந்தான்‌ என்று பயன்படுத்துவது மிகவும்‌ குறைவு, தன்‌ பிள்ளைகளோடு வந்தான்‌ என்றே பெரும்பாலும்‌ சொல்வோம்‌.

திருமணம்‌ முடித்து பிள்ளை இல்லை என்றாலும்‌ தன்‌ மனைவியோடு வந்தால்‌ “குடும்பத்துடன்‌ வந்திருக்கிறார்‌' என்று சொல்வோம்‌. எனவே குடும்பம்‌ என்ற வார்த்தை பரிபாசையில்‌, மக்களுக்கு மத்தியில்‌ மனைவியைக்‌ குறிக்கவே பிதானமாக அரபியிலும்‌ தமிழிலும்‌ பயன்படுத்தப்படுகிறது. 

“குடும்பம்‌” என்ற வார்த்தை பிள்ளைகளைக்‌ குறிக்க மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது என்று எவராவது சொன்னால்‌ அவருக்கு மொழி அறிவோ, அல்லது மக்கள்‌ அந்த வார்த்தையைப்‌ பயன்படுத்தும்‌ முறையோ தெரியவில்லை என்பதே அதன்‌ அர்த்தமாகும்‌.


அல்‌-குர்‌ஆன்‌:

அல்‌-குர்‌ஆனில்‌ அல்லாஹ்‌ “அஹ்ல்‌' என்ற வார்த்தையை ஏராளமான இடங்களில்‌ பயன்படுத்துகின்றான்‌. இந்த வார்த்தை அல்‌-குர்‌ஆனில்‌ உயர்திணையோடு இணைக்கப்படும்‌ இடங்களிலெல்லாம்‌ பெரும்பாலும்‌ மனைவி, வீட்டார்‌ என்ற கருத்துக்களில்‌ பயன்படுத்தப்‌பட்டுள்ளது.

“அல்‌-கஸஸ்‌' எனும்‌ அத்தியாயத்தில்‌ மூஸா (அலை) அவர்களின்‌ வரலாற்றைச்சொல்லும்‌ போது 12 வது வசனத்தில்‌ மூஸா (அலை) அவர்களை அவரது தாய்‌ பெட்டியில்‌ வைத்து நதியில்‌ விடுகிறார்‌ பிர்‌அவ்ன்‌ அந்தக்குழந்தையை தத்தெடுக்கிறான்‌. அதற்கு பால்‌ கொடுக்கவென ஒரு பெண்ணை தேடுகிறார்கள்‌. எல்லாப்‌ பெண்களிடமும்‌ பால்‌ குடிக்க அந்தப்பிள்ளை மறுக்கிறது, அப்போது அந்தக்குழந்தையை பின்‌ தொடர்ந்த அதன்‌ சகோதரி “அந்தக்‌ குழந்தையை நம்பிக்கையாக பராமரிக்கக்கூடிய ஒரு வீட்டாரை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்‌. இங்கே வீட்டார்‌' என்பதற்கு “அஹ்லுல்‌ பைத்‌' என்ற சொல்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன்‌ மூலம்‌ மூஸா(அலை) அவர்களின்‌ தாயையே நாடப்படுகின்றது. எனவே இங்கு ஒரு பெண்ணைக்‌ குறிக்க “அஹ்லுல்‌ பைத்‌” என்ற சொல்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதே அத்தியாயத்தின்‌ 29வது வசனத்தில்‌ “மூஸா(அலை) அவர்கள்‌ குறித்த தவணையை முடித்த பின்பு தன்‌ குடும்பத்துடன்‌ சென்றார்‌” என்று வந்துள்ளது. இதில்‌ குடும்பம்‌ என்பதற்கு “அஹ்ல்‌' என்ற சொல்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மூஸாவுடன்‌ அவரது குடும்பம்‌ என்று அவரது மனைவியைத்தவிர வேறு எவரும்‌ இருக்கவில்லை. எனவே இங்கே மனைவியைக்‌ குறிக்க “அஹ்ல்‌' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, அதே 29ம்‌ வசனத்தில்‌ மூஸா (அலை) அவர்கள்‌ தூர்ஸீனாவிற்கு பக்கத்தில்‌ ஒளியைக்‌ கண்டபோது “தன்‌ குடும்பத்திற்கு (இங்கே) நில்லுங்கள்‌” என்று சொன்னார்‌ என்றுள்ளது. இங்கும்‌ அவரது மனைவியைக்குறிக்கும்‌ குடும்பம்‌ என்ற அடைமொழிக்கு “அஹ்ல்‌' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

“ஹுத்‌' எனும்‌ அத்தியாயத்தில்‌ அல்லாஹ்‌ இப்றாஹீம்‌(அலை) அவர்களின்‌ வரலாற்றைச்‌ சொல்கிறான்‌. அவரின்‌ மனைவி நீண்ட காலமாக பிள்ளை இல்லாமல்‌ இருக்கிறார்‌. அல்லாஹ்‌ வானவர்களை அனுப்பி அவர்களுக்குப்‌ பிள்ளை கிடைக்க இருக்கும்‌ சந்தோசமான செய்தியைச்‌ சொல்கிறான்‌. அப்போது, அவரின்‌ மனைவி “எனக்குப்‌ பிடித்த கேடே எனக்கு பிள்ளை பிறப்பதா? நானோ இயலாத மூதாட்டியாக இருக்கிறேன்‌ என்னுடைய கணவரும்‌ வயோதிபராக உள்ளார்‌. நிச்சயமாக இது ஆச்சரியமான ஒரு விடயமே! என்கிறார்‌. (அதற்கு வானவர்‌) அல்லாஹ்வின்‌ விவகாரத்தில்‌ நீங்கள்‌ ஆச்சரியப்படுகிறீர்களா? அஹ்லுல்‌ பைத்தினரே! உங்கள்‌ மீது அல்லாஹ்வின்‌ அருளும்‌ அபிவிருத்தியும் உண்டாவதாக. நிச்சயமாக அவன்‌ புகழுக்குரியவனும்‌ மிகுந்த கொடையாளியுமாவான்‌'” என்று கூறினார்கள்‌. (ஹூத்‌: 72,73)

இங்கே, வானவர்‌ இப்ராஹீம்‌ (அலை) அவர்களின்‌ மனைவிக்கு பதில்‌ சொல்லும்போது: “அஹ்லுல்‌ பைத்‌” என்ற வாசகத்தைப்‌ பயன்படுத்துகின்றார்‌. எனவே இங்கு இப்றாஹீம்‌ (அலை) அவர்களும்‌ அவரின்‌ மனைவியையும்‌ தவிர வேறு எவரும்‌ இல்லாத வேளையில்‌ அவரின்‌ மனைவிக்கு பதில்‌ சொல்லும்‌ போது அவருக்காக பிரார்த்தித்த வேளை அவரைக்குறிக்க “அஹ்லுல்‌ பைத்‌” எனும்‌ வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

யூஸுப்‌ என்ற அத்தியாயத்தில்‌ அல்லாஹ்‌ யூஸுப்‌ (அலை) அவர்களின்‌ வரலாற்றைக்‌ குறிப்பிடுகிறான்‌. அதிலே யூஸுப்‌ (அலை)  அவர்களை ஒரு அரசன்‌ வளர்த்து வருகிறான்‌. அவர்‌ கட்டிளமைப் பருவத்தை அடைகிறார்‌. மிகப்பெரும்‌ பேரழகனாக திகழ்கிறார்‌. அவரை வளர்த்த அரசனின்‌ மனைவி அவர்‌ மீது மோகம்‌ கொள்கிறாள்‌. எப்படியாவது அவரை அடைந்து விடவேண்டும்‌ என்பதற்காக, கதவை மூடிவிட்டு அவரை தப்பான வழிக்கு அழைக்கிறாள்‌. ஆனால்‌ யூஸுபோ அதற்கு மறுக்கிறார்‌. அவள்‌ வலுக்கட்டாயமாக இழுக்கிறாள்‌. யூஸுப்‌ இதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடுகிறார்‌. பின்னால்‌ அரசனின்‌ மனைவி துரத்துகிறாள்‌. இருவரும்‌ கதவை அடைகிறார்கள்‌ அரசனும்‌ அந்த வேளையில்‌ கதவின்‌ பக்கம்‌ வருகிறான்‌. மூவரும்‌ சந்தித்துக்‌ கொள்கிறார்கள்‌. அப்போது, அரசனின்‌ மனைவி அரசரை பார்த்து “உன்னுடைய “அஹ்லுடன்‌' தப்பாக நடந்து கொள்ள நினைப்பவர்களுக்கு சிறைசெய்தல்‌ அல்லது கொடூரமாக தண்டித்தல்‌ என்பதைத்தவிர வேறு என்ன கூலி இருக்கிறது” என்கிறாள்‌.

இங்கே, “அஹ்ல்‌” என்ற வார்த்தை மனைவி என்ற அர்த்தத்தில்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குப்‌ பிள்ளை இல்லை இதனால்தான்‌ யூஸுபை வளர்த்து வந்தனர்‌.

பின்வரும்‌ வசனங்கள்‌ யாவும்‌ லூத்‌ (அலை)  அவர்களின்‌ வரலாற்றைப்‌ பற்றி பேசுகின்றன. அதிலும்‌ குறிப்பாக “அஹ்லுல்பைத்‌” என்ற வார்த்தைக்குள்‌ மனைவியே பிரதான பாத்திரம்‌ என்பதைச்‌ சொல்கின்றது.

அஃராப்‌:23, அந்நம்ல்‌:57, அஷ்ஷூஅரா: 170,171

“நாங்கள்‌ அவரையும்‌ அவரின்‌ குடும்பத்தையும்‌ (அஹ்லுல்‌ பைத்தையும்‌) காப்பாற்றினோம்‌. ஆனால்‌ அவரின்‌ மனைவியைத்தவிர” அல்‌-அன்கபூத்‌:32,33

இப்றாஹீம்‌ (அலை)  அவர்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த வானவர்கள்‌ “தாங்கள்‌ ஒரு பிரதேசத்தை அழிப்பதற்காக இறைவனால்‌ அனுப்பப்பட்டுள்ளோம்‌” என்ற செய்தியை இப்றாஹீம்‌ நபியிடம்‌ சொல்கின்றனர்‌. அப்போது இப்றாஹீம்‌ நபியவர்கள்‌. “அந்தக்கிராமத்திலே லூத்‌ (அலை)   அவர்கள்‌ இருக்கின்றார்கள்‌” என்றார்கள்‌ (அதற்கு வானவர்கள்‌) “அதில்‌ உள்ளவர்கள்‌ பற்றி நாம்‌ அறிவோம்‌. அவரையும்‌ அவரின்‌ குடும்பத்தையும்‌ (அஹ்லையும்‌) நாம்‌ காப்பாற்றுவோம்‌ ஆனால்‌ அவரின்‌ மனைவியைத்தவிர என்று கூறினர்‌.”

லூத்‌ (அலை)  அவர்களின்‌ சமூகத்தாரை அழிக்க மலக்குகள்‌ வருகிறார்கள்‌. அந்த சமூகத்தார்‌ மலக்குகளோடும்‌ தப்பாக நடக்க முயற்சிக்கின்றனர்‌. லூத்‌ (அலை)  அவர்கள்‌ தன்‌ பெண்‌ மக்களை (மணம்‌ செய்யக்‌) கொடுத்து “என்‌ விருந்தாளிகளை விட்டுவிடுங்கள்‌ என்று கெஞ்சுகிறார்கள்‌. ஆனால்‌, அவரின்‌ கூட்டம்‌ அதை ஏற்றுக்‌ கொள்வதாக இல்லை. லூத்‌ (அலை) அவர்கள்‌ செய்வதறியாது திகைக்கிறார்‌. அப்போது வந்த வானவர்கள்‌ சொன்னார்கள்‌:

“லூத்தே! நாம்‌ உமது இரட்சகனின்‌ தூதுவர்கள்‌. அவர்கள்‌ ஒருபோதும்‌ உம்மை வந்தடையவே மாட்டார்கள்‌. “நீர்‌ உமது குடும்பத்தோடு (அஹ்லோடு) இரவில்‌ சென்றுவிடு. உமது அஹ்லில்‌ உனது மனைவியரைத்தவிர வேறு எவரும்‌ திரும்பிப்‌ பார்க்க வேண்டாம்‌. ஏனெனில்‌, அவர்களுக்கு என்ன நடக்குமோ அது அவளையும்‌ பிடித்துக்கொள்ளும்‌'” என்றனர்‌. (ஹுத்‌:81) (அஸ்ஸாப்பாத்‌: 133-135)

இந்த அத்தியாயத்தில்‌ வரும்‌ வசனங்கள்‌ லூத்‌ (அலை) அவர்களையும்‌ அவரின்‌ குடும்பத்தையும்‌ மலக்குகள்‌ பாதுகாப்பதாகவும் அவரின்‌ மனைவியைப்‌ பாதுகாக்கமாட்டோம்‌ என்று வானவர்கள்‌ கூறியதாக குறிப்பிடுகின்றன. அதில்‌ குடும்பம்‌ என்பதற்கு “அஹ்ல்‌” என்ற வார்த்தையை அல்லாஹ்‌ பயன்படுத்துகின்றான்‌.

மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களிலெல்லாம்‌ குடும்பம்‌ என்பதற்கு அல்லாஹ்‌ “அஹ்ல்‌' என்ற வார்த்தையைப்‌ பயன்படுத்துகின்றான்‌ அதுபோலவே “அஹ்ல்‌' என்பதில்‌ தவிர்க்கமுடியாத அங்கம்‌ மனைவி என்பதையும்‌ தெளிவாக உணர்த்துகிறான்‌.

குடும்பத்தில்‌ பிரதானமான ஒருவராக மனைவி இல்லாவிட்டால்‌ “குடும்பத்தைக்‌ காப்பாற்றுவோம்‌” என்று சொல்லிவிட்டு “உன்‌ மனைவியைக்‌ காப்பாற்ற மாட்டோம்‌” என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. குடும்பத்தின்‌ தலையாய பாத்திரங்களில்‌ ஒன்றாக மனைவி இருப்பதனால்தான்‌ “ஆனால்‌ உன்‌ மனைவியைத்தவிர” என்று அல்லாஹ்‌ குறிப்பிடுகிறான்‌.


ஹதீஸ்‌:

ஹதீஸ்களிலும்‌ “அஹ்லுல்‌ பைத்‌' எனும்‌ வார்த்தை மனைவியைக்‌ குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள்‌ ஒரு தடவை ஆயிஷா (ரலி) அவர்களின்‌ அறையில்‌ நுழைந்தார்கள்‌ அப்போது அஹ்லுல்‌ பைத்தினரே அஸ்ஸலாமு அலைக்கும்‌ என்று சொன்னார்கள்‌. (புகாரி 4793)

ஆயிஷா (ரலி) அவர்கள்‌ மட்டும்‌ வசிக்கும்‌ அறையில்‌ நுழையும்‌ போது அஹ்லுல்‌ பைத்தினரே என்று அழைத்தது ஆயிஷா (ரலி) அவர்களைக்குறிக்கவே என்பது தெளிவாகத்‌ தெரிகிறது.



நாம்‌ மேலே குறிப்பிட்ட நான்கு விதமான ஆய்வுகளின்‌ அடிப்படையிலும்‌ பகுத்தறிவின்‌ படியும்‌ “அஹ்லுல்பைத்‌” என்ற வார்த்தை ஒரு மனிதனின்‌ குடும்பத்தைக்‌ குறிக்க பயன்படுத்தப்‌படுகிறது என்பதையும்‌ குடும்பத்தின்‌ தவிர்க்க முடியாத அங்கமே மனைவி என்பதையும்‌ விளங்கலாம்‌.



நபி (ஸல்) அவர்களின்‌ அஹ்லுல்‌ பைத்‌

“அஹ்லுல்‌ பைத்‌' என்பது பொதுவான ஒரு வார்த்தையாக இருந்தபோதும்‌ வழிகெட்ட சில இயக்கங்களின்‌ தாக்கத்தினால்‌ அது நபியவர்களின்‌ குடும்பத்தைக்‌ குறிக்கும்‌ சொல்லாகவே அறிமுகமாகியுள்ளது. அத்தோடு இதில்‌ பல பிரச்சினைகளும்‌ உருவாக்கப்பட்டுள்ளது.

“நபியவர்களின்‌ குடும்பம்‌ எனும்‌ போது முதலில்‌ நுழைபவர்கள்‌ அவரின்‌ மனைவியர்‌ என்பதை நாம்‌ மேலே குறிப்பிட்ட ஆய்வு தெளிவுபடுத்துகிறது. அஹ்ஸாப்‌ எனும்‌ அத்தியாயத்தில்‌ வரும்‌ பலவசனங்களும்‌ ஆலுஇம்றான்‌ எனும்‌ அத்தியாயத்தின்‌ 121ஆவது வசனமும்‌ அதையே சுட்டிக்காட்டுகிறது.

(“நபியே!) நீர்‌ உம்‌ குடும்பத்திலிருந்து அதிகாலையில்‌ புறப்பட்டுச்சென்று விசுவாசங்‌ கொண்டவர்களை (உஹது யுத்த களத்தில்‌) போருக்காக (அவரவருக்குரிய) இடங்களில்‌ அமர்த்தி (ஒழுங்குபடுத்திக்‌ கொண்டிருந்ததை (நினைத்துப்பார்ப்பீராக யாவற்றையும்‌) அல்லாஹ்‌ செவியுறுகிறவன்‌ நன்கறிபவன்‌'” (ஆலு இம்றான்‌ :121)

இங்கே, குடும்பம்‌ என்பதற்கு “அஹ்ல்‌' என்ற வார்த்தையை அல்லாஹ்‌ பயன்படுத்தியுள்ளான்‌. நபியவர்கள்‌ மதீனாவில்‌ தன்னுடைய வீட்டிலிருந்து உஹதுக்களத்திற்கு செல்லும்‌ போது அவரது மனைவியர்கள்‌ மட்டுமே நபியவர்களின்‌ வீட்டில்‌ இருந்தார்கள்‌. அவரது பிள்ளைகளில்‌ பாத்திமா (ரலி)‌ அவர்களைத்தவிர எல்லோருமே மரணித்திருந்தனர்‌. பாத்திமா (ரலி) அவர்கள்‌ கூட அலி (ரலி) அவர்களை மணந்துகொண்டு தனியாக இருந்தார்கள்‌.

எனவே இங்கே “அஹ்ல்‌' என்ற வார்த்தை நபியவர்களின்‌ குடும்பத்தில்‌ மனைவியரைக்‌ குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல்‌ ஸைத்‌ பின்‌ அர்க்கம்‌ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ செய்தியில்‌, அவரிடம்‌ நபியவர்களின்‌ மனைவியர்‌ அவரின்‌ குடும்பமா? என்று கேட்கப்பட்டது, அதற்கு: “நபியவர்களின்‌ மனைவியர்‌ அவரின்‌ குடும்பத்தினர்தான்‌. ஆனால்‌, ஸகாத்‌ பொருட்களைப்‌ பெற்றுக்‌ கொள்வது ஹராமாக்கப்பட்ட நபியவர்களின்‌ குடும்பம்‌ எனும்‌ போது: அவரின்‌ குடும்பம்‌, ஜஃபரின்‌ குடும்பம்‌, உகைலின்‌ குடும்பம்‌, அப்பாஸின்‌ குடும்பம்‌ என்று எல்லோரும்‌ அடங்குவர். (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, முஸ்லிம்‌ இப்னு ஹஜ்ஜாஜ்‌ அந்நைஸாபூரி, தாரு இஷஹ்யாயில்‌ குதுப்‌ அல்‌ அரபியப்யா, அறிவிப்பவர்‌: ஸைத்‌ பின்‌ அர்க்கம்‌, ஹ.இல: 2408)

நபியவர்கள்‌ ஒரு தடவை அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்‌ (ரலி), ஹுஸைன்‌ (ரலி) போன்றோரை ஒரு போர்வையினால்‌ மூடிவிட்டு “இறைவா! இவர்கள்‌ எனது குடும்பத்தினர்‌; அவர்களை நீ தூய்மைப்படுத்து” என்று பிரார்த்தித்தார்கள்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, அறிவிப்பவர்‌: ஆயிஷா (ரலி), ஹ.இல: 2424)

அப்துல்‌ முத்தலிப்‌ பின்‌ றபீஆ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ ஒரு நீளமான செய்தி, ஹாஷிம்‌ கிளையார்‌ அனைவருமே நபியவர்களின்‌ குடும்பத்தினர்‌ என்பதையும்‌, அவர்கள்‌ அனைவருமே ஸகாத்‌ பெறத்‌ தடைசெய்யப்பட்டவர்கள்‌ என்பதையும்‌ உணர்த்துகின்றது. “ரபீஆ (ரலி), அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ இருவரும்‌ ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக இந்த இரு சிறுவர்களையும்‌ (அப்துல்‌ முத்தலிப்‌ பின்‌ ரபீஆ, பழ்ழு பின்‌ அப்பாஸ்‌) நாம்‌ நபியவர்களிடம்‌ அனுப்பினால்‌ அவர்கள்‌ இருவரும்‌ நபியவர்களிடம்‌ பேசி இருவருக்கும்‌ நபியவர்கள்‌ ஸகாத்‌ நிதியை சேகரிக்கும்‌ பொறுப்பை வழங்கினால்‌, மனிதர்கள்‌ கொடுப்பதை அவர்கள்‌ கொடுத்து (மற்றவர்கள்‌ இதை) சேகரிப்பதால்‌ எதை அடைந்து கொள்வார்களோ? அதை பெற்றுக்கொள்வார்களே என்று இருவரும்‌ பேசிக்கொண்டிருந்தனர்‌. அப்போது அலி (ரலி) அவர்கள்‌ அவ்வழியாக வந்தார்கள்‌.

அவர்கள்‌ இருவரும்‌ இவ்விடயத்தை அலி (ரலி) அவர்களுக்குச்‌ சொன்னார்கள்‌. அலி (ரலி) அவர்கள்‌; நீங்கள்‌ இவ்வாறு செய்யாதீர்கள்‌ அல்லாஹ்வின்‌ மீதுஆணையாக நபியவர்கள்‌ உங்கள்‌ கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள்‌ என்றார்‌.

ரபீஆ (ரலி) அவர்கள்‌ அவரை எதிர்த்தார்கள்‌: “அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக எங்கள்‌ மீது கொண்ட பொறாமையினால்தான்‌ இதை சொல்கிறாய்‌. நீ நபியவர்களின்‌ மருமகனானாய்‌, இறைவன்‌ மீது ஆணையாக நாம்‌ அதற்காக உன்‌ மீது பொறாமைப்படவில்லை' என்று சொன்னார்கள்‌. அலி (ரலி) அவர்கள்‌ (அப்படியென்றால்‌) “அவர்கள்‌ இருவரையும்‌ அனுப்பிவிடுங்கள்‌' என்று சொல்லிவிட்டு ஒருக்கணைத்து சாய்ந்து கொண்டார்கள்‌.

அப்துல்முத்தலிப்‌ பின்‌ ரபீஆ (ரலி) அவர்களும்‌, பழ்‌ பின்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களும்‌ சொல்கிறார்கள்‌: “நபியவர்கள்‌ லுஹர்‌ தொழுகையை முடித்த போது இருவரும்‌ நபியவர்களது வீட்டின்‌ கதவருகில்‌ சென்று நின்று கொண்டோம்‌. நபியவர்கள்‌ எம்மிடம்‌ வந்து எம்‌ காதுகளைப்‌ பிடிக்கும்‌ வரை நாம்‌ நின்றோம்‌. பின்பு “என்ன சொல்ல நினைக்கிறீர்களோ! அதை சொல்லுங்கள்‌” என்றார்கள்‌. அன்றைய தினம்‌ வழக்கம்போல்‌ நபியவர்கள்‌ செல்லும் அவரின்‌ மனைவி ஸைனப்‌ பின்த்‌ ஜஹ்ஸிடம்‌ நுழைந்தார்கள்‌, நாமும்‌ நுழைந்தோம்‌. அப்துல்‌ முத்தலிப்‌ பின்‌ ரபீஆக்‌ அவர்கள்‌ சொல்கிறார்கள்‌: நாம்‌ இருவரும்‌ மற்றவர்‌ பேச வேண்டும்‌ என்று நினைத்தோம்‌. பின்பு எங்களில்‌ ஒருவர்‌ பேசினார்‌. 

“அல்லாஹ்வின்‌ தூதர்‌ அவர்களே! மனிதர்களில்‌ அதிகம்‌ நன்மை செய்பவர்‌ நீங்கள்‌, மனிதர்களில்‌ தங்கள்‌ குடும்ப உறவுகளை அதிகம்‌ சேர்த்து வாழ்பவர்‌ நீங்கள்‌. நாமோ பருவ வயதை அடைந்து விட்டோம்‌. ஸகாத்‌ நிதியை சேகரிக்கும்‌ பொறுப்புக்களில்‌ எங்களை நீங்கள்‌ நியமிக்க வேண்டும்‌ என்று பேச வந்துள்ளோம்‌. மனிதர்கள்‌ அவைகளை சேகரித்து உங்களிடம்‌ ஒப்படைப்பதைப்போல நாமும்‌ ஒப்படைப்போம்‌. அப்போது இதற்காக மக்கள்‌ அடைந்து கொள்ளும்‌ பங்கைப்போல நாமும்‌ அடைந்து கொள்வோம்‌” என்றனர்‌. அப்துல்‌ முத்தலிப்‌ சொல்கிறார்‌: நாம்‌ அவரிடம்‌ (திரும்பவும்‌) பேசுவோமா? என்று நினைக்குமளவு நபியவர்கள்‌ மெளனமாக இருந்தார்கள்‌. அப்போது அவரின்‌ மனைவி ஸைனப்‌ (ரலி) அவர்கள்‌ பேசவேண்டாம்‌ என்று திரைக்குப்பின்னால்‌ இருந்து சுட்டிக்காட்டினார்கள்‌. பின்பு நபியவர்கள்‌ சொன்னார்கள்‌: ஸகாத்‌ பொருட்கள்‌ என்பது முஹம்மதின்‌ குடும்பத்தினருக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அவை மனிதர்களின்‌ அழுக்குகள்‌.”(ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, அறிவிப்பவர்‌: அப்துல்‌ முத்தலிப்‌, பழ்ல்‌ பின்‌ அப்பாஸ்‌ (ரலி) ஹ.இல: 1072)

ரபீஆ பின்‌ ஹாரித்‌ (ரலி) அவர்கள்‌ நபியவர்களின்‌ மாமா ஹாஷிமின்‌ குடும்பத்தைச்சேர்ந்தவர்‌. எனவே பனூஹாஷிம்‌ கிளையார்‌ அனைவரும்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ என்பது இதன்‌ மூலம்‌ தெளிவாகின்றது.


மேலே நாம்‌ கூறியவற்றைச்‌ சுருக்கமாக நோக்கினால்‌,

பின்வருவோர்‌ நபி (ஸல்)‌ அவர்களின்‌ குடும்பத்தினர்‌ எனலாம்‌.

1. நபியவர்களின்‌ மனைவியர்‌, பிள்ளைகள்‌...

2. திருமண உறவுகள்‌.

3. அலியின்‌ குடும்பம்‌, ஜஃபரின்‌ குடும்பம்‌, உகைவின்‌ குடும்பம்‌, அப்பாஸின்‌ குடும்பம்‌.

4. பனூ ஹாஷிம்‌ கிளையார்‌. 



விதண்டாவாதமும்‌ விளக்கமும்‌:

நாம்‌ மேலே நபியவர்களின்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ யார்‌?என்பதை குர்‌ஆன்‌ ஹதீஸ்‌ அடிப்படையில்‌ சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில்‌ தெளிவாக அவதானித்தோம்‌. ஆனால்‌ ஷீஆக்கள்‌ நபியவர்களின்‌ அஹ்லுல்‌ பைத்தினரை முற்றிலும்‌ குர்‌ஆன்‌, ஹதீஸுக்கு முரண்படுகின்ற அடிப்படையில்‌ தீர்மானிக்கின்றனர்‌. அவர்கள்‌ யார்‌? என்பதையும்‌, அவர்களின்‌ ஆதாரங்களுக்கான தெளிவான பதில்களையும்‌ இங்கு அவதானிப்போம்‌.

அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்‌ (ரலி), ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ குடும்பத்தில்‌ வந்த சிலர்‌ மாத்திரமே தங்கள்‌ மதத்தின்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ என்று ஷீஆக்கள்‌ நம்புகின்றனர்‌.

நபியவர்களின்‌ இரண்டு மகளை திருமணம்‌ செய்த உஸ்மான்‌ (ரலி) அவர்களை அஹ்லுல்‌ பைத்தாக ஷீஆக்கள்‌ கணிப்பிடுவதில்லை. ஆனால்‌ ஒரு மகளைத்‌ திருமணம்‌ செய்த அலி (ரலி) அவர்களை நபியவர்களின்‌ குடும்பத்தின்‌ தலைவரைப்போலவும்‌, நபியவர்களின்‌ குடும்பத்தில்‌ அவரின்‌ இடத்தைப்போன்ற இடம்‌ எவருக்கும்‌ கிடையாது என்பதைப்போலவும்‌ மதிக்கின்றனர்‌.

முஸ்லிம்களிடம்‌ சிந்தனைச் சிக்கல்களை உருவாக்கும்‌ நோக்கில்‌ ஷீஆக்களால்‌ உருவாக்கப்பட்ட இக்கொள்கைக்கு அவர்கள்‌ ஆதாரமாகச்‌ சொல்பவற்றின்‌ உண்மை நிலையை இனி அவதானிப்போம்‌.



ஆதாரம்‌: 01

ஆயிஷா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

“நபி (ஸல்) அவர்கள்‌ ஒரு காலைப்பொழுதில்‌ வெளியானார்கள்‌. அவர்கள்‌ மீது ஒரு போர்வை இருந்தது. அதிலே அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்‌ (ரலி), ஹுஸைன்‌ (ரலி) ஆகியோரை நுழைத்தார்கள்‌. பின்பு அல்‌ அஹ்ஸாப்‌: 33ம்‌ வை ஓதினார்கள்‌. பின்பு “அஹ்லுல்‌ பைத்‌” (எனும்‌ நபியின்‌ குடும்பத்‌) தினராகிய உங்களை விட்டும்‌ அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும்‌ பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ்‌ விரும்புகின்றான்‌.” என்று கூறினார்கள்‌.” (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, அறிவிப்பவர்‌: ஆயிஷா, ஹ.இல‌: 2424)

இந்த ஹதீஸின்‌ சில அறிவிப்புக்களிலே உம்மு ஸலமா(ரலி) அவர்கள்‌, நானும்‌ போர்வைக்குள்‌ வரலாமா? என்று அனுமதி கேட்டதாகவும்‌ அதாவது நானும்‌ உங்களின்‌ அஹ்லுல்‌ பைத்‌ இல்லையா? என்று சொன்னதாகவும்‌ அதற்கு நபியவர்கள்‌ “நீங்கள்‌ உங்கள்‌ இடத்தில்‌ இருங்கள்‌ நீங்கள்‌ எல்லோரும்‌ நன்றாகவே இருக்கிறீர்கள்‌” என்று சொன்னார்கள்‌ என்றும்‌ இடம்பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை ஷீஆக்கள்‌ வைத்துக்கொண்டு இந்தப்‌ போர்வைக்குள்‌ நபியவர்கள்‌ நுழைத்தவர்கள்‌ மாத்திரம்தான்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ என்றும்‌ அவர்கள்‌ தவிரவுள்ள எவரும்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ அல்ல என்றும்‌ வாதிடுகின்றனர்‌. அதாவது பாத்திமா (ரலி) அவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ இருக்கிறார்களாம்‌. அவர்கள்‌ பிறப்பதற்கு காரணமாக இருந்த நபியவர்களின்‌ மனைவி ஹதீஜா (ரலி) அவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ இல்லையாம்‌.

இதற்கான பதிலை தெளிவாக நோக்குவோம்‌.

01) நபியவர்களின்‌ 23 வருடகால வாழ்க்கையில்‌ நபியவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்‌ பற்றி இந்த ஹதீஸில்‌ மாத்திரமே சொல்லியிருப்பதைப்போன்று ஷீஆக்கள்‌ பேசுகின்றனர்‌.

நபியவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்‌ தொடர்பாக சொன்ன சில செய்திகளை அஹ்லுல்‌ பைத்‌ பற்றிய அறிமுகத்திலே நாம்‌ குறிப்பிட்டோம்‌. எனவே அவைகளையெல்லாம்‌ கவனித்தே முடிவுகளை செய்யவேண்டும்‌.

02) இங்கே நபியவர்களின்‌ வார்த்தை மற்றவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ அல்ல என்பதையோ இவர்கள்‌ மாத்திரம்தான்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ என்பதையோ உணர்த்தவில்லை. ஒருவருக்கு 06 நண்பர்கள்‌ இருக்கும்‌ போது மூன்று பேரைக்காட்டி இவர்கள்‌ எனது நண்பர்கள்‌ என்று சொல்வதனால்‌ மற்ற மூவரும்‌ எனது நண்பர்கள்‌ அல்ல என்றாகாது. ஒருவர்‌ தன்‌ சகோதரனைக்காட்டி இவர்‌ எனது தம்பி என்றால்‌ அவருக்கு அண்ணன்‌ இல்லை என்றோ வேறு எந்த சகோதரர்களும்‌ இல்லை என்றோ, அவர்கள்‌ குடும்பத்தில்‌ இருவர்‌ மாத்திரம்தான்‌ என்றோ நாம்‌ சொல்ல மாட்டோம்‌. இந்த வார்த்தையை மாத்திரம்‌ வைத்து அவ்வாறு சொல்ல முயல்பவர்களை நாம்‌ சிந்திக்கத்‌ தெரிந்தவர்கள்‌, அறிவாளிகள்‌ என்றும்‌ சொல்வதில்லை.

அல்குர்‌ஆனில்‌ இவ்வாறான வார்த்தைகள்‌ பிரயோகிக்கப்பட்டுள்ளது.

“நிச்சயமாக அல்லாஹ்‌ விடத்தில்‌ மாதங்களின்‌ எண்ணிக்கை 12 ஆகும்‌. வானம்‌ பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவனின்‌ வேதத்தில்‌ இவ்வாறே உள்ளது. அதில்‌ நான்கு மாதங்கள்‌ சங்கை பொருந்தியதாகும்‌. அதுதான்‌ உறுதியான மார்க்கமாகும்‌.” (அத்தவ்பா: 36)

இந்த வசனத்தை ஒருவர்‌ வைத்துக்கொண்டு இந்த வசனத்தில்‌ குறிப்பிடப்படுவதுதான்‌ மார்க்கம்‌ வேறு எதுவும்‌ மார்க்கம்‌ அல்ல என்று சொன்னால்‌ நாம்‌ யாராவது அவரை ஏற்றுக்கொள்வோமா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்‌ இந்தக்‌ கருத்திலமைந்த பல வசனங்களும்‌ ஹதீஸ்களும்‌ உள்ளன இவற்றையெல்லாம்‌ நாம்‌, அவை மாத்திரம்தான்‌ மார்க்கம்‌. வேறு விடயங்கள்‌ எதுவும்‌ மார்க்கத்தில்‌ இல்லை என்ற அடிப்படையில்‌ விளங்குவதில்லை. மாறாக இதுவும்‌ மார்க்கம்தான்‌ அதுபோலவே ஏனைய விடயங்களும்‌ மார்க்கத்தில்‌ உள்ளவைதான்‌ என்று சொல்வோம்‌.  

இது போலவே நபியவர்கள்‌, இவர்கள்‌ எனது குடும்பத்தினர்‌, என்று சொல்வதையும்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. அதாவது இவர்களும்‌ குடும்பமே ஏனையவர்களும்‌ நபியவர்களின்‌ குடும்பத்தில்‌ இருக்கின்றனர்‌ என்றே விளங்க வேண்டும்‌.

03) இந்த ஹதீஸில்‌ வரும்‌ அடிப்படையில்‌ போர்வையின்‌ உள்ளிருந்தவர்கள்‌ மாத்திரமே அஹ்லுல்‌ பைத்தின்‌ அங்கத்தவர்கள் என்றால்‌ ஏனையவர்கள்‌ எவரையும்‌ அதிலே வெளியிலிருந்து நுழைக்க முடியாது என்றால்‌, ஷீஆக்களினால்‌ அஹ்லுல்‌ பைத்‌ என்றும்‌ தங்களின்‌ இமாம்கள்‌ என்றும்‌ இனங்காட்டப்படுபவர்களில்‌ மீதமுள்ள ஒன்பது பேரையும்‌ எந்த அடிப்படையில்‌ நுழைகிறார்கள்‌ என்றே தெரியவில்லை.

இவ்வாறு நாம்‌ கேட்டால்‌ பாத்திமாவும்‌ அலியும்‌ இருந்தார்கள் ஹஸன்‌ (ரலி)  ஹுஸைன்‌ (ரலி)  இருவருமே இருந்தார்கள்தானே! எனவே அவர்களின்‌ பிள்ளைகளும்‌ இதில்‌ அடங்குவார்கள்‌ என்று சொல்வர்‌. அப்படியென்றால்‌ பாத்திமாவின்‌ தாய்‌ நபியவர்களின்‌ மனைவி கதீஜாவும்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ அடங்குவார்தானே என்று நாம்‌ சொல்வோம்‌. இதை ஆம்‌ என்று ஏற்றுக்கொண்டால்‌ நபியவர்களின்‌ மனைவி கதீஜாவை அவரின்‌ குடைம்பம்‌ என்று ஏற்றுக்கொள்ளும்‌ நீங்கள்‌ மற்றைய மனைவியரை ஏன்‌ ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்‌..? என்று கேட்க முடியும்‌. 

இவ்வாறு ஷீஆக்களின்‌ இந்த தவறான கொள்கையினால்‌ அவர்களால்‌ பதில்‌ சொல்லமுடியாத பல கேள்விகளில்‌ சிக்கித்‌ தவிக்கிறார்கள்‌.

ஹஸன்‌, ஹுஸைன்‌ இருவரின்‌ பரம்பரையும்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ அடங்கும்‌ என்று ஷீஆக்கள்‌ சொல்வார்கள்‌. ஆனால்‌ தங்களின்‌ இமாம்கள்‌ என்றும்‌, அஹ்லுல்‌ பைத்‌ என்றும்‌ இனங்காட்டும்‌ போது ஏன்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ பரம்பரையை மட்டும்‌ எடுத்துக்கொள்கின்றனர்‌. அவர்களின்‌ வாதத்தில்‌ அவர்கள்‌ உண்மையாளர்களாக இருந்தால்‌ இருவரின்‌ பரம்பரையில்‌ வருவோரையும்‌ தங்களின்‌ இமாம்களாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்‌. ஆனால்‌ ஹஸன்‌. அவர்களின்‌ பரம்பரையிலிருந்து ஷீஆக்கள்‌ எந்த இமாமையும்‌ எடுத்துக்கொள்ளவில்லை.

அதுபோலவே தங்கள்‌ பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ ஹுஸைன் (ரலி) ‌ அவர்களை மையப்படுத்தியே செய்கின்றனர்‌.

எனவே, நாம்‌ மேலே குறிப்பிட்ட அடிப்படையில்‌ இந்த போர்வை ஹதீஸ்‌: இவர்களும்‌ எனது அஹ்லுல்‌ பைத்தினர்தான்‌ என்பதைக்குறிக்குமே தவிர இவர்கள்தான்‌ எனது குடும்பத்தினர்‌ வேறு எவரும்‌ இல்லை என்பதைக்குறிக்காது.



ஆதாரம்‌: 02




“நபியின்‌ மனைவியர்களே! நீங்கள்‌ வேறு எந்தப்‌ பெண்ணைப்‌ போன்றவர்களுமல்ல... நபியின்‌ குடும்பத்தினரே! உங்களை அசுத்தத்திலிருந்து தூய்மைப்படுத்தவும்‌ பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ்‌ விரும்புகிறான்‌.” (அல்‌-அஹ்ஸாப்‌: 32,33)

நாம்‌ இந்த வசனத்தில்‌ கோடிட்டுக்காட்டியுள்ள “كم” என்ற வார்த்தை அரபியில்‌ ஆண்பாலுக்கு “நீங்கள்‌” எனும்‌ கருத்தில்‌ பயன்படுத்தப்படும்‌ வார்த்தையாகும்‌. பெண்களைப்பார்த்து “நீங்கள்‌” என்பதற்கு “كن” என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்‌ இதை வைத்து ஷீஆக்கள்‌ பின்வருமாறு வாதிடுகின்றனர்‌.

இந்த வசனத்தில்‌ அல்லாஹ்‌ “كم” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான்‌ இது ஆண்களைக்குறிக்க பயன்படுத்தப்படும்‌ வார்த்தையாகும்‌. பெண்களைப்பற்றிப்‌ பேசிவிட்டு திடீரென்று ஆண்களைப்பற்றிப்‌ பேசுவதன்‌ மூலம்‌ பெண்களை இதிலிருந்து நீக்கியுள்ளான்‌ என்பது தெளிவாகின்றது. அத்தோடு ஆரம்பத்தில்‌ நபியவர்களின்‌ மனைவியர்கள்‌ பற்றிப்‌ பேசும்போதெல்லாம்‌ பெண்பாலைக் குறிக்கும்‌ வார்த்தைகளைப்‌ பயன்படுத்திவிட்டு அஹ்லுல் பைத்தினர் பற்றி பேசும்‌ போது ஆண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தையை பயன்படுத்தியிருப்பதே நபியின்‌ மனைவியர்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ இல்லை என்பதை தெளிவுபடுத்தவும்‌, அஹ்லுல்‌ பைத்திலிருந்து அவர்களை நீக்குவதற்காகவுமே என்று குறிப்பிடுகின்றனர்‌. 

இந்த வாதம்‌ தவறானது என்பதை பின்வருமாறு விளக்க முடியும்‌.


01) அரபு மொழியில்‌ ஆண்பாலில்‌ பேசும்‌ போது பெண்களையும்‌ அது உள்ளடக்குகின்றது. ஆனால்‌, பெண்களைக்குறிக்கும்‌ வார்த்தைகளை பயன்படுத்தும்போது அது ஆண்களை உள்ளடக்‌குவதில்லை. இது அரபு மொழி தெரிந்த யாவரும்‌ அறிந்திருக்கின்ற ஒரு விடயம்‌. இது எவ்வாறு ஷீஆக்களுக்கு தெரியாமல்‌ போனதோ தெரியவில்லை.

அல்‌-குர்‌ஆன்‌, அல்ஹதீஸில்‌ உள்ள ஏராளமான கட்டளைகள்‌ ஆண்பாலிலேயே பேசப்படுகிறது ஆனாலும்‌ அது பெண்களுக்கும்‌ உரியது. பெண்பாலில்‌ பேசப்படுபவை அவர்களுக்கே உரிய விடயங்களாகவே உள்ளன.

உதாரணமாக, “அந்நிஸா' என்ற அத்தியாயத்தில்‌ வரும்‌ 26,27,28ம்‌ வசனங்களைக் குறிப்பிடலாம்‌.



“அல்லாஹ்‌ (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத்‌ தெளிவாக விளக்கவும்‌ உங்களுக்கு முன்னிருந்த நல்லவர்கள்‌ சென்ற நேரான வழிகளில்‌ உங்களையும்‌. ...”

இந்த வசனத்திலே நாம்‌ கீழ்கோடிட்டுக்‌ காட்டியபடி அனைத்து வார்த்தைகளும்‌ ஆண்களைக்குறிக்கும்‌ வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையும்‌ இது போன்றதையும்‌ எவரும்‌ ஆண்களுக்கு மாத்திரம்‌ உரியது, பெண்கள்‌ இதில்‌ நுழையமாட்டார்கள்‌ என்று பிரச்சாரம்‌ செய்வதில்லை.

அல்‌-கஸஸ்‌ அத்தியாயத்தின்‌ 2வது வசனத்தில்‌ அல்லாஹ்‌ பின்வருமாறு குறிப்பிடுகிறான்‌.

“ஆகவே மூஸா தன்‌ தவணையை முடித்துக்கொண்டு தன்‌ குடும்பத்தினருடன்‌ இரவில்‌ பயணம்‌ செய்து கொண்டிருந்த பொழுது”

இந்த வசனத்திலும்‌ இது போன்ற வசனங்களிலும்‌ ஆணி்களைக்குறிக்கும்‌ வார்த்தைகள்‌ பயன்படுத்தப்பட்டாலும்‌ பெண்களும்‌ அதில்‌ உள்ளடக்கப்படுவார்கள்‌. இதுபோலவே அஹ்லுல்‌ பைத்‌ தொடர்பாக அஹ்ஸாப்‌ அத்தியாயத்தில்‌ வரும்‌

வசனத்தில்‌ ஆண்களைக்குறிக்கும்‌ “كم” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும்‌ அது பெண்களையும்‌ குறிக்கும்‌ என்று விளங்கிக்‌ கொள்ளலாம்‌.

02) மேலே நாம்‌ குறிப்பிட்ட அஹ்ஸாப்‌ அத்தியாயத்தில்‌ வரும்‌ வசனத்தின்‌ ஆரம்பத்தில்‌ முழுக்க முழுக்க பெண்பாலில்‌ பேசப்படுகிறது. நேரடியாக பெண்களுக்கு (நபியவர்களின்‌ மனைவியர்களுக்கு) அந்தக்‌ கட்டளைகள்‌ முன்வைக்கப்படுகின்றன.

அந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனத்திலும்‌ முழுக்க முழுக்க பெண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தைகளே பயன்படுத்தப்‌ பட்டுள்ளன.

ஆனால்‌, அஹ்லுல்‌ பைத்தினர்‌ பற்றிப்பேசும்போது மட்டும்‌ ஆண்பாலைக்‌ குறிக்கும்‌ كم  என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஏன்‌ இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று யோசித்தால்‌, அஹ்லுல்‌ பைத்தில்‌ நபியவர்கள்‌ அங்கம்‌ வகிக்கிறார்கள்‌. அவர்கள்தான்‌ அதன்‌ தலைவராகவும்‌ இருக்கிறார்கள்‌. எனவே இந்த சந்தர்ப்பத்தில்‌ பெண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தை பயன்படுத்தப்பட்டால்‌ நபி(ஸல்) அவர்கள்‌ அஹ்லுல்பைத்திலிருந்து நீக்கப்பட்டதாகிவிடும்‌. எனவே, ஆண்பாலைக்குறிக்கும்‌ كم என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. அது நபியவர்களையும்‌ அவரின்‌ மனைவியரையும்‌ உள்ளடக்கும்‌. ஆண்களையும்‌ பெண்களையும்‌ உள்ளடக்கிய ஒரு விடயத்தை சொல்லும்போது ஆண்பால்‌ வார்த்தைகளை பயன்படுத்தும்‌ அரேபியர்களின்‌ வழமைக்கு இது நிகரானது. இது போன்று அல்குர்‌ஆனில்‌ ஏராளமான வசனங்கள்‌ உள்ளன.

இப்றாஹீம்‌ (அலை) அவர்களின்‌ வீட்டுக்கு வானவர்கள்‌ வருகிறார்கள்‌. அவருக்கு ஒரு குழந்தை பிறக்க இருப்பதாக நன்மாராயம்‌ கூறுகின்றனர்‌ இதைக்கேட்ட இப்றாஹீம்‌ (அலை) அவர்களின்‌ மனைவி ஆச்சரியமடைகிறார்‌. “நான்‌ மூதாட்டி எனது கணவர்‌ இப்றாஹீமோ வயோதிபராக இருக்கிறார்‌. இந்த நிலையில்‌ எவ்வாறு குழந்தை பிறக்கும்‌?” என்று கூறினார்‌. அதற்கு மலக்குகள்‌ பதில்‌ சொல்லும்போது.



“அ(தற்க)வர்கள்‌, “அல்லாஹ்வின்‌ கட்டளை குறித்தா நீர்‌ ஆச்சரியப்படுகின்றீர்‌? வீட்டாரே! அல்லாஹ்வின்‌ அருளும்‌, அவனது பாக்கியங்களும்‌ உங்கள்‌ மீது உண்டாவதாக! என்று கூறினர்‌.”(ஹூத்: 73)

இங்கே இப்றாஹீம்‌ நபியின்‌ மனைவியோடு பேசும்‌ போதுமலக்குகள்‌ ஆரம்பத்தில்‌ பெண்பாலைக்குறிக்கும்‌ تعجبين என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்‌. ஆனால்‌ அதற்கு பின்‌ அவரின்‌ அஹ்லுல்‌ பைத்தினருக்கு பிரார்த்திக்கும்‌ போது  كم என்ற ஆணி்பாலுக்கு பயன்படுத்தப்படும்‌ வார்த்தையை உபயோகிக்கின்றனர்‌. காரணம்‌, ஆரம்பத்தில்‌ இப்றாஹீம்‌ (அலை) அவர்களின்‌ மனைவியோடு மட்டும்‌ பேசுகின்றனர்‌. ஆனால்‌, பின்பு இப்றாஹீம்‌ (அலை) அவர்களின்‌ குடும்பம்‌ பற்றி பேசுகின்றனர்‌.அவரது குடும்பத்தின்‌ தலைவர்‌ இப்றாஹீம்தான்‌. இதனால்தான்‌ ஆண்பாலைக்குறிக்கும்‌ “ கும்‌” என்ற அரபு வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்‌. அதில்‌ அவரது மனைவியும்‌ நுழைகின்றார்‌. 

இதேவேளை, பெண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தையை பயன்படுத்தினால்‌, அதில்‌ இப்றாஹீம்‌ (அலை)  அவர்கள்‌ நுழையமாட்டார்கள்‌. இங்கே, இப்றஹீம்‌ நபியின்‌ மனைவி அஹ்லுல்‌ பைத்தில்‌ நுழையமாட்டார்‌ அதனால்தான்‌ ஆண்பாலில்‌ மலக்குகள்‌ உபயோகித்துள்ளனர்‌ என்று வாதிடமுடியாது காரணம்‌ “கும்‌' என்ற வார்த்தை பன்மைக்கு பயன்படுத்தப்படுவது. ஒருமைக்கு பயன்படுத்துவது அல்ல இப்றாஹீம்‌ நபியுடன்‌ அவரது மனைவியைத்தவிர வேறு எவரும்‌ இருக்கவில்லை. எனவே அவரது மனைவியையும்‌ சேர்த்தே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோலவே நபியவர்களின்‌ குடும்பத்தில்‌ அவர்களே தலைவர்‌ என்பதால்‌ “அஹ்ஸாப்‌” அத்தியாயத்தில்‌ ஆண்பாலைக்‌ குறிக்கும்‌ “كم” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

ஜஃபர்‌ பின்‌ அபீதாலிப்‌ (ரலி) அவர்கள்‌ போராட்டத்தில்‌ கொலை செய்யப்பட்டபோது நபியவர்கள்‌ ஸஹாபாக்களுக்கு சொல்கிறார்கள்‌:



“நீங்கள்‌ ஜஃபரின்‌ குடும்பத்தினருக்கு உணவு செய்து கொடுங்கள்‌ ஏனெனில்‌ அவர்களை (உணவை விட்டும்‌) திருப்பும்‌ ஒரு விடயம்‌ (மரணம்‌) நடந்திருக்கிறது'” (ஸுனன்‌ அபீதாவுத்‌, ஸாலைமான்‌ இப்னுல்‌ அஸ்‌அத்‌ அஸ்ஸிஜ்ஸ்தானி, பதிப்பு: அல்மக்தபா அல்‌ அஸ்ரிய்யா, அறிவிப்பவர்‌: அப்துல்லாஹ்‌ பின்‌ ஜஃபர்‌, ஹ.இல:3132) 

இந்த ஹதீஸிலே நாம்‌ கோடிட்டுக்காட்டியுள்ள  هم என்ற வார்த்தை ஆண்பாலைக்‌ குறிக்க பயன்படுத்தப்படும்‌ வார்த்தையாகும்‌.
இதனால்‌ ஜஃபரின்‌ குடும்பத்தில்‌ உள்ள பெண்களுக்கு உணவு சமைத்துக்‌ கொடுக்க நபியவர்கள்‌ சொல்லவில்லை. ஆண்களுக்கு மாத்திரமே உணவு கொடுங்கள்‌ என்று சொன்னார்கள்‌ என்று யாரும்‌ சொல்வதில்லை,

அல்லது ஜஃபரின்‌ குடும்பத்தில்‌ பெண்கள்‌ இல்லை ஆண்கள்‌ மட்டுமே இருந்தார்கள்‌. அதனாலேயே நபியவர்கள்‌ هم என்று ஆண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தையைப்‌ பயன்படுத்தினார்கள்‌ என்றும்‌ சொல்ல முடியாது.

எனவே, ஆண் பாலைக்குறிக்கும்‌ வார்த்தையை பயன்படுத்தும்போது பெண்களும்‌ அதில்‌ நுழைந்து கொள்வார்கள்‌. இது ஸஹாபாக்களிடமும்‌, மற்ற எல்லோரிடமும்‌ பிரபல்யம்‌ அடைந்திருந்த ஒரு விடயமாகும்‌. இதனாலேயே நபியவர்களும்‌ அவ்வாறு ஆண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தையைப்‌ பயன்படுத்தினார்கள்‌.

இதுபோலவே அஹ்ஸாப்‌ அத்தியாயத்தின்‌ வசனத்தையும்‌ நாம்‌ விளங்கிக்‌ கொள்ளவேண்டும்‌.



03) நாம்‌ ஆரம்பத்தில்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ என்றால்‌ யார்‌? என்பது பற்றி தெளிவுபடுத்தும்‌ போது, மனைவியரும்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ நுழைவார்கள்‌. ஒரு வகையில்‌ அவர்கள்தான்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ பிரதான அங்கமாக உள்ளனர்‌. என்பதை தெளிவாக விளக்கினோம்‌, அதுவும்‌ இந்த வசனத்தை விளக்குவதாக உள்ளது.

அதுபோல்‌ அல்லாஹ்‌ இப்றாஹீம்‌ (அலை) அவர்களின்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ அவரின்‌ மனைவி ஓர்‌ அங்கம்‌ என்று குறிப்பிடுகிறான்‌. மூஸா (அலை) அவர்களின்‌ மனைவி அவரின்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ ஓர்‌ அங்கம்‌ என்று குறிப்பிடுகிறான்‌. இது மாத்திரமல்லாமல்‌ இந்த உலகத்தில்‌ பிறக்கும்‌ எல்லோருடைய மனைவியும்‌ அவருடைய குடும்பத்தின்‌ பிரதான பகுதி என்பது எல்லோரும்‌ அறிந்த விடயம்‌.

இவ்வாறிருக்க சங்கைக்குரிய நபியவர்களின்‌ மனைவியரை அவரின்‌ குடும்பத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றமுடியும்‌.!!



04) அல்‌- அஹ்ஸாப்‌ அத்தியாயத்தில்‌ வரும்‌ அஹ்லுல்‌ பைத்‌ பற்றிய வசனத்திற்கு முன்னாலும்‌ பின்னாலும்‌ வரும்‌ ஏராளமான வசனங்கள்‌ நபியவர்களின்‌ மனைவியரைப்‌ பற்றியே பேசுகிறது இதன்‌ மூலமும்‌ நாம்‌ அஹ்லுல்‌ பைத்‌ என்பதன்‌ அர்த்தத்தைப்புரிந்து கொள்ளமுடியும்‌.

அல்குர்‌ஆனை விளக்கும்போது குறித்த வசனத்திற்கு முன்‌, பின்‌ உள்ள வசனங்கள்‌ கவனத்தில்‌ கொள்ளப்படும்‌.

பொதுவாக ஒருவரின்‌ பேச்சை விளங்க அவர்‌ முன்னால்‌ பேசியதும்‌, பின்னால்‌ சொன்னதும்‌ தேவைப்படுகிறது. அவ்வாறில்லாமல்‌ பெறப்படும்‌ விளக்கம்‌ பெரும்பாலும்‌ தவறானதாக அமைந்துவிடும்‌.



05) அஹ்ஸாப்‌ அத்தியாயத்தில்‌ வரும்‌ வசனத்தில்‌ “அஹ்லுல்‌ பைத்‌” என்பதை குறித்து  كم என்ற ஆண்பாலைக்குறிக்கும்‌ வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால்‌ நபியவர்களின்‌ மனைவியர்‌ அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்‌ என்று பிரச்சாரம்‌ செய்யும்‌ ஷீஆக்கள்‌ பாத்திமா (ரலி)‌ அவர்களை அந்த அஹ்லுல்‌ பைத்தின்‌ அங்கமாகவும்‌, அந்த வசனம்‌ அவரை உள்ளடக்கும்‌ என்றும்‌ குறிப்பிடுகின்றனர்‌. இது எவ்வாறு அவர்களுக்குச்‌ சாத்தியமானது?

பாத்திமா (ரலி) ஆண்‌ தான்‌ ஆனால்‌ பெண்ணின்‌ தோற்றத்தில்‌ இருக்கிறார்‌ என்று இவர்கள்‌ இதற்கு பதில்‌ சொல்வார்கள்‌ போலும்‌.

எனவே, இத்தகைய விடயங்களிலிருந்து ஷீஆக்களின்‌ விமர்சனங்களும்‌ விவாதங்களும்‌ உள்நோக்கம்‌ கொண்டவை என்பதைப்‌ புரிந்துகொள்ளலாம்‌.

பாத்திமா (ரலி) உள்ளிட்ட ஏனையவர்கள்‌ நபியவர்களின்‌ போர்வை ஹதீஸின்‌ மூலம்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ நுழைகின்றனர்‌. அவரின்‌ மனைவியர்களோ அஹ்ஸாபின்‌ வசனத்தின்‌ படியும்‌ ஏனைய நாம்‌ குறிப்பிட்ட ஆதாரங்களின்படியும்‌ அஹ்லுல்‌ பைத்தினராகின்றனர்‌. ஷீஆக்களின்‌ சீர்கெட்ட கொள்கைகளிலிருந்து எம்மனைவரையும்‌ அல்லாஹ் பாதுகாப்பானாக.



அஹ்லுல்‌ பைத்தும்‌ ஸஹாபாக்களும்‌

அஹ்லுல்பைத்களான நபியவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ ஏனைய ஸஹாபாக்களுக்கும்‌ மத்தியில்‌ பெரிய இடைவெளி இருப்பதாகவும பிளவுகள்‌ இருப்பதாகவும்‌, நல்ல உறவு அவர்களுக்கு மத்தியில்‌ இருக்கவில்லை என்றும்‌ ஷீஆக்கள்‌ பிரச்சாரம்‌ செய்கின்றனர்‌.

இதன்‌ உண்மை நிலையை இங்கே அவதானிப்போம்‌.

நபியவர்களின்‌ குடும்பம்‌ என்பது ஷீஆக்களின்‌ பாரசீக மோகத்தால்‌ குறுகிய வட்டத்திற்குள்‌ சுருக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நபியவர்களின்‌ குடும்பத்தினரை நேசிப்பதாகவும்‌ அவர்கள்‌ மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும்‌ மார்‌ தட்டிக்கொள்ளும்‌ ஷீஆக்கள்‌ மற்றைய ஸஹாபாக்களை ஏசியும்‌, தூற்றியும்‌ வருகின்றனர்‌. ஆனால்‌, ஷீஆக்களால்‌ ஏசப்படும்‌ ஸஹாபாக்களில்‌ அதிகமானவர்கள்‌ நபியவர்களின்‌ குடும்பத்தினர்‌ என்பதை அதிகமானவர்கள்‌ அறிந்து கொள்வதில்லை.

நபியவர்களின்‌ குடும்பம்‌ என்றால்‌ அபூஜஹ்லும்‌ வருவானே! என்று சிலர்‌ விதண்டாவாதம்‌ செய்யலாம்‌. அபூ ஜஹ்ல்‌ மட்டுமல்ல மக்காவில்‌ நபியவர்களுக்கு எதிராகச்செயற்பட்ட முக்கிய புள்ளிகளில்‌ அதிகமானவர்கள்‌ நபியவர்களின்‌ குடும்பத்தினர்தான்‌. ஆனால்‌, குடும்பம்‌ என்றாலும்‌ கொள்கையளவில்‌ வேறுபட்டால்‌ அவர்களுக்கு நல்லவர்களுடைய, நபியவர்களுடைய குடும்பத்துடன்‌ தொடர்பு இல்லை என்று அருள்மறை சொல்கிறது. (ஹூத் : 45, 46)

நபியவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ ஏனைய ஸஹாபாக்களுக்கு மத்தியிலும்‌ பரம்பரை அடிப்படையில்‌ பலமான தொடர்பு காணப்படுகிறது.

ஸஹாபாக்களில்‌ முக்கியமான இடத்தைப்‌ பிடித்திருப்பவர்கள்‌ நபியுடைய பரம்பரையோடு நெருக்கமான தொடர்பைக்‌ கொண்டவர்களாகவே இருக்கின்றனர்‌. உதாரணமாக அபுபக்ர் (ரலி)‌, உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்றவர்களைக்‌ குறிப்பிடலாம்‌.

குறிப்பாக, அப்துமனாபின்‌ பரம்பரையில்‌ வருபவர்கள்‌ நபியவர்களின்‌ குடும்பத்தினராகவே கருதப்படுவார்கள்‌. அதுபோலவே, பனூ ஹாஸிம்‌ கிளையைச்‌ சார்ந்தவர்கள்‌ நபியவர்களின்‌ நெருங்கிய உறவினர்களாக கருதப்படுவர்‌...

“அல்லாஹ்‌ இஸ்மாயிலின்‌ சந்ததியிலிருந்து கினானா கோத்திரத்தாரை தேர்வு செய்தான்‌. கினானாவிலிருந்து குறைஷிகளை தேர்வு செய்தான்‌. குரைஷிகளிலிருந்து பனூ ஹாஷிம்‌ கிளையாரைத்‌ தேர்வு செய்தான்‌. பனூ ஹாஷிமிலிருந்து என்னைத்‌ தேர்வு செய்தான்‌.” (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, அறிவிப்பவர்‌: வாதிலதுப்னு அஷ்கஃ”., ஹ.இல: 2276)

இதன்‌ அடிப்படையில்‌ ஏராளமான ஸஹாபாக்களை நபியவர்களின்‌ குடும்பத்தினர்‌ என்று சொல்ல முடியும்‌. உதாரணமாக: உஸ்மான்‌ இப்னு மழ்ஊன்‌, உஸ்மான்‌ இப்னு அப்பான்‌, ஸுபைர்‌ இப்னு மழ்ஊன்‌, ஹாதிப்‌ பின்‌ அம்ர்‌, அப்துல்லாஹ்‌ பின்‌ அபீ ஸர்ஹ்‌, இப்னு உம்மி மக்தூம்‌, அபூ அர்க்கம்‌ இப்னு அபில்‌ அர்க்கம்‌, உம்மு ஸலமா, அப்துர்ரஹ்மான்‌ இப்னு அவப்‌, ஸஃத்‌ பின்‌ அபீ வக்காஸ்‌, ஸுபைர்‌ இப்னுல்‌ அவாம்‌, கதீஜா பின்த்‌ குவைலித்‌, உபைத்துப்னு ஹாரிஸ்‌, பாதிமா பின்த்‌ அஸத்‌, அல்‌ அப்பாஸ்‌, ஹம்ஸா பின்‌ அப்தில்‌ முத்தலிப்‌, உப்பாதிப்னு ஸாபித்‌, அல்‌ ஹாரிஸிப்னு ஹுஸைமா, ஸஃத்‌ பின்‌ உஸ்மான்‌ ரழியல்லாஹு அன்ம்‌. போன்ற ஏராளமான ஸஹாபாக்கள்‌ நபியவர்களின்‌ பரம்பரையோடு தொடர்புபடுகின்றனர்‌.

எனவே, நபியவர்களின்‌ குடும்பத்தினருக்காக போராடுவதாக கூக்குரலிடும்‌ ஷீஆக்கள்‌ உண்மையில்‌ அவர்களை நேசிப்பவர்களாக இருந்தால்‌ நபியவர்களின்‌ தூரமான சொந்தமாக இருந்தாலும்‌ நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும்‌ எல்லோரிடத்திலும்‌ அன்பு காட்டவேண்டும்‌, எல்லோரையும்‌ நேசிக்க வேண்டும்‌.

ஷீஆக்களால்‌; ஷைத்தானைவிட மிகவும்‌ எதிரியாக வர்ணிக்கப்படும்‌ ஸஹாபாக்களின்‌ பெயர்களை நபியவர்களின்‌ குடும்பத்தினர்‌. தங்களின்‌ பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள்‌. அபூபக்ர்‌, உமர்‌, உஸ்மான்‌, ஆயிஷா போன்றவை அஹ்லுல்‌ பைத்தின்‌ பரம்பரையில வந்தவர்கள்‌ விரும்பி தங்களின்‌ பிள்ளைகளுக்கு சூட்டிக்கொண்ட பெயர்களாகக்‌ காணப்படுகின்றன.

ஸஹாபாக்களும்‌, அஹ்லுல்‌ பைத்தினரும்‌ ஒருவருக்கொருவர்‌ நேசம்‌ வைத்திருந்ததற்கான சான்றாகவே இது காணப்படுகின்றது.

தங்கள்‌ பிள்ளைகளுக்கு பெயர்‌ சூட்டும்போது அந்தப்பெயரின்‌ சொந்தக்காரர்கள்‌ வாழ்ந்ததைப்போலவும்‌, அவர்‌ மார்க்கத்தைப்‌ பின்பற்றியதைப்போலவும்‌, அவர்‌ இறை பாதையில்‌ போராடியதைப்‌ போலவும்‌ எங்கள்‌ பிள்ளைகளும்‌ உருவாக வேண்டும்‌ என்பதற்காகவே அந்தப்‌ பெயர்களை வைத்தார்கள்‌. இதை ஷீஆக்கள்‌ மறுத்தால்‌, அஹ்லுல்‌ பைத்களை குறைகாண்பதாக அமைந்துவிடும்‌. தான்‌ எதிர்க்கின்ற, வெறுக்கின்ற மோசமான ஒருவரின்‌ பெயரை தன்‌ பிள்ளைக்கு வைத்ததன்‌ மூலம்‌ வரலாற்றில்‌ எந்த மனிதனும்‌ செய்யாத இழி செயலை எமது இமாம்கள்‌ செய்துவிட்டார்கள்‌ என்று சொல்வதற்கு ஷீஆக்கள்‌ நிர்ப்பந்திக்கப்படுவார்கள்‌.

ஸஹாபாக்களுக்கும்‌ அஹ்லுல்‌ பைத்தினருக்கும்‌ இடையில்‌ இருந்த நெருக்கமான உறவின்‌ இன்னொரு வெளிப்பாடகவே அவர்களுக்கு மத்தியில்‌ இருந்த திருமண ரீதியான உறவுகள்‌ காணப்படுகின்றன.

ஸஹாபாக்களின்‌ பிள்ளைகளைத்‌ திருமணம்‌ முடித்திருந்த அஹ்லுல்‌ பைத்தினர்‌ ஸஹாபாக்களுக்கு தங்களின்‌ பிள்ளைகளை திருமணம்‌ செய்துவைத்தனர்‌. இது நேசத்தின்‌ மிகவும்‌ உயர்ந்த நிலையாகும்‌. அபூபக்ர்‌ (ரலி), உமர்‌ (ரலி) ஆகியோரின்‌ மகள்மாரை நபி (ஸல்) அவர்கள்‌ திருமணம்‌ செய்திருந்தார்கள்‌.

உஸ்மான்‌ (ரலி) அவர்களுக்கு தன்‌ இரண்டு மகளைத்‌ திருமணம்‌ செய்து வைத்தார்கள்‌ இரண்டாவது மகளும்‌ மரணித்த போது எனக்கு வேறு பிள்ளைகள்‌ இருந்திருந்தால்‌ அதையும்‌ உங்களுக்கு நான்‌ திருமணம்‌ செய்து வைத்திருப்பேன்‌ என்று கூறினார்கள்‌.

இது கெளரவத்தின்‌ உயர்ந்த நிலை என்று கூறலாம்‌. 

அலி அவர்கள்‌ தன்‌ மகளை உமர் (ரலி) க்கு திருமணம்‌ செய்துவைத்தார்கள்‌. அபூபக்ர்‌ (ரலி) மரணித்ததும்‌ அவரின்‌ மனைவிக்கு அலி (ரலி) வாழ்க்கை கொடுத்தார்கள்‌. உமர் (ரலி) மரணித்ததும்‌ அவரின்‌ மனைவிக்கு ஹுஸைன்‌ (ரலி) வாழ்க்கை கொடுத்தார்கள்‌. அலி (ரலி) அவர்களைப்‌ பார்த்து அபூபக்ர்‌ (ரலி) அவர்கள்‌ சொன்னார்கள்‌:

“அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக நபியவர்களின்‌ குடும்பம்‌ எனது குடும்பத்தை நான்‌ சேர்ந்து நடப்பதை விடவும்‌ எனக்கு விருப்பத்திற்குரியதாகும்‌.” (ஸஹீஹுல்‌ புஹாரி, முஹம்மத்‌ இப்னு இஸ்மாயில்‌ அல்புஹாரி, தாரு இப்னு கதீர்‌ 1993, ஹ.இல: 3998)

 



அஹ்லுல்‌ பைத்தினர்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ஜமாஅத்தினரா? அல்லது ஷீஆக்களா?

இந்த நூலில்‌ அதிகமான தலைப்புக்கள்‌ ஷீஆக்களுக்கும்‌ அஹ்லுல்‌ பைத்தினருக்கும்‌ எத்தகைய தொடர்புமில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால்‌ ஷீஆக்களோ அவர்களை அஹ்லுல்‌ பைத்தின்‌ நேசர்கள்‌ என்று கூறிக்கொண்டு முஸ்லிம்‌ சமூகத்தைக்‌ கூறுபோடுவதிலே ஈடுபட்டுள்ளனர்‌. அதனால்‌, ஷீஆக்களுக்கும்‌ அஹ்லுல்‌ பைத்தினருக்கும்‌ எந்தத்‌ தொடர்புமில்லை அஹ்லுல்‌ பைத்தினர்‌ அஹ்லுஸ்ஸுன்னாவாகவே இருந்து மரணித்தார்கள்‌ என்பதற்கான ஆதாரங்களை சுருக்கமாக நோக்குவோம்‌.

01. ஸஹாபாக்களின்‌ ஓர்‌ அங்கமான அஹ்லுல்‌ பைத்தினர்‌ ஷீஆக்கள்‌ என்பதற்கான எந்த ஆதாரமும்‌ இல்லை அவர்கள்‌ அல்குர்‌ஆன்‌ அல்ஹதீஸைப்‌ பின்பற்றுபவர்களாக இருந்தார்கள்‌.

02. அஹ்லுல்‌ பைத்தினர்‌ ஷீஆக்‌ கொள்கையைப்‌ பிரச்சாரம்‌ செய்தவர்களை, ஏற்றுக்கொண்டவர்களை தண்டித்ததோடு, ஏற்றுக்‌ கொள்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாகவும்‌ எச்சரிக்கை செய்தார்கள்‌.

03. அஹ்லுல்‌ பைத்தினர்‌ ஒருபோதும்‌ ஸஹாபாக்களை வெறுக்கவுமில்லை அவர்களுக்கு எதிராக செயற்படவுமில்லை. ஆனால்‌ ஷீஆக்கள்‌ ஸஹாபாக்களை முஸ்லிம்கள்‌ என்றே ஏற்றுக்கொள்வதில்லை.

04. முஆவியா (ரழி) அவர்களையும்‌ அவர்களது ஆட்சியையும்‌ மிகக்‌ கடுமையாக விமர்சிப்பவர்கள்‌ ஷீஆக்கள்‌. ஆனால்‌ ஹஸன்‌ (ரழி) அவர்கள்‌ முஆவியா (ரழி)க்கு ஆட்சியை வழங்கியதுடன்‌ அவரைப்‌ புகழவும்‌ செய்தார்கள்‌.

05. உமைய்யா, அப்பாசிய ஆட்சி அஹ்லுல்‌ பைத்தினருக்கு எதிரான ஆட்சி என்று ஷீஆக்கள்‌ விமர்சிக்கின்றனர்‌. ஆனால்‌ அவை அஹ்லுல்‌ பைத்தினரின்‌ ஆட்சியாகும்‌. இவ்வாட்சிகளில்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ அரச கொடைகளைப்‌ பெற்று வாழ்ந்தார்கள்‌.

06. அஹ்லுல்‌ பைத்தினர்‌ விடயத்தில்‌ ஷீஆக்களே பொய்களை இட்டுக்கட்டுவதாக அஹ்லுல்‌ பைத்தினர்‌ மக்களை எச்சரித்தனர்‌.

07. அஹ்லுல்‌ பைத்தினர்‌ கொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள்‌ ஷீஆக்களாகும்‌.

08. அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகளைப்‌ பாதுகாத்தவர்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களே. ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ இட்டுக்கட்டிக்கொண்டார்களே தவிர அவர்கள்‌ சொன்ன செய்திகளைப்‌ பாதுகாக்கவில்லை.

09. அஹ்லுல்‌ பைத்தினரை உண்மையில்‌ மதிப்பவர்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்கள்தான்‌ இன்றுவரை அவர்களுக்காக துஆச்செய்பவர்களாகவும்‌ அவர்கள்‌ காணப்படுகின்றனர்‌. ஆனால்‌ ஷீஆக்களோ தங்களின்‌ பாரசீக மோகத்தின்‌ விளைவாக சில அஹ்லுல்‌ பைத்தினரை அதற்கு பகடைக்காயாக்குகின்றனர்‌.

10. அஹ்லுல்‌ பைத்தினர்‌ ஸஹாபாக்களின்‌ மக்களைத்‌ திருமணம்‌ செய்துகொண்டார்கள்‌ ஸஹாபாக்கள்‌ அஹ்லுல்‌ பைத்‌ பரம்பரையில்‌ வந்த பெண்களைத்‌ திருமணம்‌ செய்துகொண்டார்கள்‌.

11. ஸஹாபாக்களுக்குப்‌ பிறகு வந்தவர்களும்‌ அஹ்லுல்‌ பைத்துடன்‌ நெருங்கிய திருமண உறவைக்‌ கொண்டிருந்தனர்‌.

அலி (ரலி) அவர்களின்‌ மகள்‌ றம்லா அவர்கள்‌ அபூ ஸுப்யானின்‌ மகன்‌ அப்துல்லாஹ்வை திருமணம்‌ செய்து கொண்டார்கள்‌. இவர்‌, மரணித்ததற்கு பின்‌ உமைய்யா வம்சத்தைச்‌ சேர்ந்த மர்வானின்‌ மகன்‌ முஆவியாவை திருமணம்‌ செய்து கொண்டார்கள்‌.

இன்று அஹ்லுல்‌ பைத்தை நேசிப்பதாகச்‌ சொல்லும்‌ ஷீஆக்கள்‌, இவ்வாறு பேசுவதையே பெரும்‌ பாவமாக நினைப்பார்கள்‌

அந்தளவுக்கு உமைய்யா வம்சாவளி, அபூஸுப்யான்‌ போன்றவர்களில்‌ அவர்களுக்கு எதிர்ப்புணர்வு இருக்கிறது. ஆனால்‌ அஹ்லுல்‌ பைத்களை நேசிப்பதாகவும்‌ பீற்றிக்கொள்கின்றனர்‌.

ஹுஸைன் (ரலி) அவர்களின்‌ மகள்‌ ஸகீனா, உஸ்மான்‌(ரலி) அவர்களின்‌ மகனின்‌ (உமரின்‌) மகன்‌ ஸைதை திருமணம்‌ செய்திருந்தார்‌. ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ அடுத்த மகள்‌ பாதிமா உஸ்மான் (ரலி) அவர்களின்‌ மகனின்‌ (அம்ரின்‌) மகன்‌ அப்துல்லாஹ்வை திருமணம்‌ செய்திருந்தார்‌.

அபூபக்ர்‌ (ரலி) அவர்களின்‌ மகன்‌ அப்துர்ரஹ்மானின்‌ மகள்‌ ஹப்ஸாவை, ஹுஸைன்‌ (ரலி) அவர்கள்‌ மணந்திருந்தார்கள்‌.

ஷீஆக்களின்‌ பிரதான இமாம்களில்‌ ஒருவரான ஜஃபருஸ்ஸாதிக்‌ கூட அபூபக்ர்‌ (ரலி) அவர்களின்‌ பரம்பரையில்‌ வந்தவரே இதனால்தான் ஜஃபருஸ்ஸாதிக்‌ அபூபக்ர் (ரலி) ‌‌ எனது பாட்டன்‌ என்று அடிக்கடி சொல்லக்கூடியவராகவும்‌ அவர்களைப்‌ புகழக்கூடியவராகவும்‌ இருந்தார்‌.

இவ்வாறு, அஹ்லுல்‌ பைத்களுக்கும்‌ ஏனைய ஸஹாபாக்‌களுக்கும்‌, அவர்களின்‌ பிள்ளைகளுக்கும்‌ மத்தியில்‌ உள்ள திருமண உறவு முறையைப்‌ பார்த்தால்‌ தனியான ஒரு புத்தகம்‌ எழுதுமளவு அதிகமாக உள்ளது. (இன்ஷா அல்லாஹ்‌ தேவைப்படின் பேனா பிடிப்போம்‌)

ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ நேசர்களாக இருந்திருந்தால்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ அவர்களின்‌ மக்களை திருமணம்‌ செய்ததோடு அவர்களுக்கு தங்கள்‌ பரம்பரையில்‌ திருமணம்‌ செய்தும்‌ வைத்திருப்பார்கள்‌. ஷீஆக்களின்‌ முக்கிய அறிவிப்பாளர்கள்‌ மற்றும்‌ தங்கள்‌ இமாம்களின்‌ சீடர்கள்‌ என்று சொல்லும்‌ எவருக்கும்‌ இத்தகைய திருமண உறவுகள்‌ கிடையாது. இது அஹ்லுல்‌ பைத்தினர்‌ எப்போதும்‌ அஹ்லுஸ்ஸுன்னாவாகவே இருந்தார்கள்‌ என்பதற்கு பெரும்‌ ஆதாரமாகும்‌. 

12. அஹ்லுல்‌ பைத்தில்‌ வந்த அறிஞர்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களிடமிருந்து இஸ்லாத்தைப்‌ படித்தனர்‌. அதுபோல்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களும்‌ அஹ்லுல்‌ பைத்‌ அறிஞர்களிடமிருந்து இஸ்லாத்தைக்‌ கற்றுக்கொண்டனர்‌.

13. அஹ்லுல்‌ பைத்தினர்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களைப்‌ புகழ்ந்ததுடன்‌ அவர்களைப்‌ போன்றே வாழவும்‌ ஆசைப்பட்டார்கள்‌.

14. அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயர்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ வைக்க அஹ்லுஸ்ஸுன்னாவின்‌ முக்கியமானவர்களின்‌ பெயர்கள்‌ தங்கள்‌ பிள்ளைகளுக்கு சூட்டுவதில்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ மகிழ்ச்சி அடைந்தனர்‌.



அஹ்லுல்‌ பைத்தினர்‌ விடயத்தில்‌ அஹ்லுஸ்ஸுன்னாவின்‌ கொள்கை

01. அஹ்லுல்‌ பைத்‌ என்பது நபியவர்கள்‌, அவரின்‌ மனைவியர்‌, அலி (ரலி) அவர்களின்‌ குடும்பம்‌, ஜஃபர்‌ (ரலி) அவர்களின்‌ குடும்பம்‌, அகீல்‌ (ரலி) அவர்களின்‌ குடும்பம்‌, அப்பாஸ்‌ (ரலி) அவர்களின்‌ குடும்பங்களைக்‌ குறிக்கும்‌ ஒரு பதமாகும்‌.

02. அஹ்லுல்‌ பைத்தினரை அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினர்‌ நேசிக்கின்றனர்‌.

03. நபியவர்கள்‌ அவரது குடும்பத்தின்‌ விடயத்தில்‌ சொன்ன வஸிய்யத்தைப்‌ பாதுகாக்கின்றனர்‌. 

நபியவர்கள்‌ தன்‌ குடும்பத்தின்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வைப்பயந்து கொள்ளுமாறும்‌ அவர்களது உரிமைகளை வழங்குமாறும்‌ வஸிய்யத்துச்‌ செய்தார்கள்‌ அதை அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினர்‌ நிறைவேற்றுகின்றனர்‌.

04. அஹ்லுல்‌ பைத்தின்‌ சிறப்புக்களும்‌ அவர்களின்‌ அந்தஸ்தும்‌ கெடும்‌ விதத்தில்‌ பேசுபவர்கள்‌, நம்புவர்களை விட்டும்‌ தூரமாகுவதுடன்‌ அவர்களிடமிருந்த அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ சிறப்பைப்‌ பாதுகாப்பதற்காக போராடுகின்றனர்‌.

05. அஹ்லுல்‌ பைத்தை எல்லை மீறிப்புகழ்பவர்கள்‌ மற்றும்‌ அவர்களை அவர்களின்‌ சிறப்பை விட உயர்த்துபவர்களை விட்டும்‌ நடு நிலை பேணுகின்றனர்‌. அல்லாஹ்வும்‌ அவனது தூதரும்‌ அவர்களுக்கு வழங்கிய சிறப்புடன்‌ நிறுத்திக்கொள்கின்றனர்‌.

(அல்‌அகீதா அல்வாஸிதிய்யா, இமாம்‌ இப்னு தைமிய்யா, அழ்வாஉஸ்ஸலப்‌, இரண்டாம்‌ பதிப்பு 1999, பக்கம்‌: 118)

06. கனீமத்‌(ஜிஹாதில்‌ எதிரிப்படை விட்டுச்‌ செல்லும்‌ சொத்துக்கள்) பொருட்களில்‌, பையிலும்‌(முஸ்லிம்களின்‌ எதிரிகளிடமிருந்து போராட்டம்‌ ஏதுமில்லாமல்‌ முஸ்லிம்களுக்கு கிடைக்கும்‌ சொத்து) அல்லாஹ்வும்‌ அவனது தூதரும்‌ அஹ்லுல்‌ பைத்தினருக்கு வழங்கிய பங்கினை வழங்குகின்றனர்‌. (அல்பதாவா, இமாம்‌ இப்னு தைமியா, பாகம்‌:3, பக்கம்‌:407) (பார்க்க: அன்பால்‌: 41, ஹஷர்‌:07)

07. அஹ்லுல்‌ பைத்தினருக்கு ஸகாத்‌ பணம்‌ ஹராமாகும்‌." (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, ஹ.இல:1784)

08. அஹ்லுல்‌ பைத்தை ஏசுவதும்‌ ஸஹாபாக்களை ஏசுவதும்‌ நிராகரிப்பதும்‌ ஒன்றுதான்‌ ஏனெனில்‌ அஹ்லுல்பைத்தினரை ஏசுவது கண்டிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டிருப்பதைப்‌ போல ஸஹாபாக்களை ஏசுவதும்‌ நபியவர்களால்‌ கண்டிக்கப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கின்றது.

09. (அஹ்லுல்‌ பைத்‌) நபியவர்களின்‌ குடும்பம்‌ என்பதனால்‌ மாத்திரம்‌ அவர்களுக்கு எந்தப்பயனும்‌ இல்லை. அவர்கள்‌ ஈமான்‌ கொண்டவர்களாக இருப்பதனால்‌ இரண்டும்‌ சேர்ந்த சிறப்புப்பொருந்தியவர்களாக அவர்களை ஆக்கி விடுகின்றது.” (பார்க்க: ஸஹீஹுல்‌ புஹாரி, ஹ.இல:2753)

10. ஸஹாபாக்களுக்கு மத்தியில்‌ சிறப்பில்‌ படித்தரங்கள்‌ இருப்பதைப்‌ போலவே அஹ்லுல்‌ பைத்தினருக்கிடையிலும்‌ சிறப்பில்‌ படித்தரங்கள்‌ உள்ளன.

11. நபி (ஸல்‌) அவர்களின்‌ மனைவியர்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ முக்கிய உறுப்பினர்கள்‌. அவர்கள்‌ இன்றி அஹ்லுல்‌ பைத்‌ இல்லை மேலும்‌ அவர்கள்‌ இவ்வுலகிலும்‌ மறுவுலகிலும்‌ நபியவர்களின்‌ மனைவியராகும்‌ அவர்கள்‌ முஃமீன்கள்‌ தாய்மாராகும்‌ அவர்களை ஏசுவதும்‌ தரக்குறைவாகப்‌ பேசுவதும்‌ அல்குர்‌ஆனை நிராகரிக்கும்‌ செயலாகும்‌.

12. அஹ்லுல்‌ பைத்தினருக்காகப்‌ பிரார்த்தனை செய்தல்‌. அஹ்லுல்‌ பைத்தினர்‌ எங்களை விடவும்‌ இஸ்லாத்தில்‌ ஈமானில்‌ முந்தியவர்கள்‌ என்ற அடிப்படையில்‌ அவர்களுக்காக பிரார்த்தனை செய்தல்‌ வேண்டும்‌.

“இறைவா! எங்களுக்கும்‌ ஈமானால்‌ எங்களுக்கு முந்தியவர்களுக்கும பாவ மன்னிப்பை வழங்குவாயாக, ஈமான்‌ கொண்டவர்கள்‌ விடயத்தில்‌ எங்கள்‌ உள்ளங்களில்‌ பொறாமையை ஏற்படுத்தாமல்‌ இருப்பாயாக என்று அவர்களுக்கு பின்வந்த இறைவிசுவாசிகள்‌ கூறுவார்கள்‌.” (அலஷஹுஷர்‌:10)



அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகளைப்‌ பாதுகாத்தது அஹ்‌லுஸ்ஸுன்னாக்களே

அஹ்லுல்‌ பைத்தின்‌ ஆணிவேரான அண்ணல்‌ நபி (ஸல்) அவர்களின்‌ செய்திகளைப் பாதுகாப்பதற்கு அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ எடுத்துக்‌ கொண்ட முயற்சியைப்போல இந்த உலகத்தில்‌ எந்த சமுதாயமும் தங்களின்‌ வரலாற்றைப்‌ பாதுகாப்பதற்கு முயற்சி செய்யவில்லை.

கீழைத்தேய ஆய்வாளர்கள்‌ இஸ்லாத்தின்‌ போதனைகளில்‌ சந்தேகங்களை உண்டாக்கி அதை இல்லாமலாக்குவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்‌ எதிர்பார்த்த விளைவுகளை எட்டாமலே போனதற்கு இது முக்கிய காரணமாகும்‌.

முஸ்லிம்கள்‌ செய்த முயற்சிகளைப்போல தங்கள்‌ மூதாதையர்களும்‌ முயற்சி செய்திருந்தால்‌ எமது கொள்கைகளுக்கும்‌ நீண்ட ஆயுள்‌ இருந்திருக்குமே என்று இன்றளவும்‌ அங்கலாய்க்கின்ற மாற்று மத அறிஞர்களை இன்றும்‌ நாம்‌ அவதானிக்கின்றோம்‌.

நபிகளாரின்‌ செய்திகள்‌ எனும்‌ போது அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னா எனும்‌ இரண்டு முக்கிய விடயங்கள்‌ இருக்கின்றன. இதில்‌ அல்குர்‌ஆன்‌ நபியவர்களின்‌ காலத்திலேயே முழுமையாக எழுதப்பட்டதோடு பெரும்பான்மையான ஸஹாபாக்களின்‌ உள்ளங்களிலும்‌ பாதுகாக்கப்பட்டது. அவற்றை நபியவர்களிடம்‌ காண்பித்து பிழை திருத்திக்கொள்பவர்களாகவும்‌ ஸஹாபாக்கள்‌ இருந்தார்கள்‌. 

நபியவர்களின்‌ மரணத்தின்‌ பின்‌ அபூபக்ர்‌ (ரலி) அவர்களின்‌ காலத்தில்‌ எல்லா வசனங்களும்‌ ஒரே ஏட்டில்‌ தொகுக்கப்பட்டு தற்போதிருக்கும்‌ அமைப்பில்‌ உருவாக்கப்பட்டது.

ஆனால்‌ முதலாம்‌ நூற்றாண்டின்‌ கடைசிப்பகுதி வரை ஹதீஸ்கள்‌ உள்ளங்களிலேயே பாதுகாக்கப்பட்டது, நபியவர்களின்‌ காலத்திலிருந்தே எழுதப்பட்ட சில சிறிய சிறிய ஏடுகளும்‌ இருந்தன.

பெரும்பாலும்‌ வாய்மொழி மூலமே ஹதீஸ்கள்‌ மற்றவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிற்பட்ட காலத்தில்‌ முஸ்லிம்களின்‌ நாகரிகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மாற்று சமுதாயத்தினர்‌ பல முனைகளில்‌ மேற்கொண்ட போது ஹதீஸ்களையும்‌ தொகுத்து பாதுகாக்க வேண்டும்‌ என்பது பலராலும்‌ உணரப்பட்டது. உமர்‌ இப்னு அப்துல்‌ அஸீஸ்‌ (ரஹ்) அவர்களின்‌ ஆட்சிக்காலத்தில்‌ அது நூலுருப்பெற்றது. மார்க்கத்தை பாதுகாக்கும்‌ பொறுப்பை ஏற்றுக்கொண்ட இறைவன்‌ ஹதீஸ்களை பாதுகாப்பதற்கென்று ஒரு பெரும்‌ குழுவையே உருவாக்கினான்‌.

ஹதீஸ்களை பாதுகாப்பதையே அவர்கள்‌ தங்கள்‌ வாழ்க்கையாகக் கொண்டு செயற்பட்டனர்‌ அதற்காக தங்கள்‌ நாடு, பொருள்‌, குடும்பம்‌, இன்பம்‌ அத்தனையையும்‌ இழப்பதற்கு தயாரானார்கள்‌, இழந்தார்கள்‌.

அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ ஹதீஸ்களை பதிவுசெய்யும்‌ போது சிலர்‌ நபியவர்களுடன்‌ கூடுதல்‌ தொடர்பு வைத்திருந்தார்கள்‌ என்பதற்காக அவர்களின்‌ வாழ்க்கை முழுக்க நபிகளாரின்‌ செய்திகள்தான்‌ என்று பார்க்கவில்லை. அல்லது நபியின்‌ குடும்பம்‌ என்பதற்காகவும்‌ அவர்களின்‌ வாழ்க்கை அனைத்தையும்‌ ஹதீஸ்‌ என்று பதிவு செய்யவில்லை. அவர்கள்‌ எதை ஹதீஸ்‌ என்று சொன்னார்களோ அதையே ஹதீஸ்‌ என்று பதிவு செய்தனர்‌.

ஸஹாபாக்களும்‌ ஹதீஸ்களை அறிவிப்பதில்‌ மிகுந்த பேணுதலுன் நடந்துகொண்டனர்‌. சிலர்‌ தங்களை நிர்வாகத்துறையில்‌ இணைத்துக்‌ கொண்டதனால்‌ ஹதீஸ்களை அறிவிப்பதற்கு பயந்தனர்‌ நாம்‌ இதில்‌ தவறிழைத்துவிடுவோம்‌ என்று நினைத்தனர்‌.

ஹதீஸ்களை பதிவு செய்தது மாத்திரமல்லாமல்‌ சரியான செய்திகளையும்‌ தவறான செய்திகளையும்‌ தெரிந்துகொள்வதற்கு துணைசெய்யும்‌ அத்தனை கலைகளையும்‌ வளர்த்தனர்‌ சுமார்‌ 1,000,000 ஹதீஸ்‌ அறிவிப்பாளர்களின்‌ வரலாறுகளை பதிவு செய்து பாதுகாத்தனர்‌. எந்தவொரு சமுதாயத்தினருக்கும்‌ இது போன்றதொரு சிறப்பு கிடைக்கவில்லை.

அஹ்லுல்‌ பைத்தின்‌ தலைவரான நபியவர்களின்‌ செய்திகளைப்‌ பதிவு செய்யும்‌ போது அதை அறிவிப்பவர்‌ அஹ்லுல்‌ பைத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்‌ என்ற நிபந்தனை போடப்படவில்லை. அவ்வாறு இடுவது அறிவுசார்‌ செயற்பாடுமல்ல, கல்விமான்களின்‌ கருத்தாகவும்‌ அது இருக்க முடியாது. நபியவர்கள்‌ உலகத்தார்‌ அனைவருக்குமுரியவர்‌ என்பதனால்‌ நபியுடன்‌ தோழமை கொண்டிருந்தவர்‌ எவராக இருப்பினும்‌ அவர்‌ ஊடாக வரும்‌ செய்திகள்‌ மிகுந்த அவதானத்துடன்‌ உறுதிப்படுத்தப்பட்டு நூல்களில்‌ பதிவு செய்து பாதுகாக்கப்பட்டது. 

இதன்‌ போது அஹ்லுல்‌ பைத்தைச்சேர்ந்த அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன் (ரலி)‌, ஹுஸைன் (ரலி), அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி)‌, நபியவர்களின்‌ மனைவியர்‌ போன்ற அஹ்லுல்‌ பைத்தின்‌ ஏனைய அங்கத்தவர்களின் செய்திகளும்‌ பதிவுசெய்யப்பட்டன. அதுபோல்‌ ஸஹாபாக்கள்‌ அறிவிக்கும்‌ செய்திகளும்‌ பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

இவைகளில்‌ அஹ்லுல்‌ பைத்‌, ஸஹாபாக்களால்‌ சொல்லப்படும்‌ ஹதீஸ்கள்‌ அல்லாத விடயங்களும்‌ இருந்தன. அவற்றுக்கு தனியான முக்கியத்துவத்தை வழங்கினார்கள்‌. ஆரம்பத்தில்‌ தாம்‌ எழுதும்‌ ஹதீஸ்‌ நூலிலேயே இவர்‌ இது தொடர்பாக இவ்வாறு சொல்கிறார்‌ என்று எழுதிப்பாதுகாத்தனர்‌. பின்பு அதற்கென தனியான கலைகளையும்‌ உருவாக்கி கூடுதல்‌ கவனம்‌ செலுத்தினர்‌.

ஆனால்‌, அஹ்லுல்‌ பைத்தினர்‌ மீது கூடுதல்‌ பாசம்‌ வைத்திருப்பதாகவும்‌ கூடுதல்‌ மரியாதை வைத்திருப்பதாகவும்‌ அவர்களை பின்பற்றுவதாகவும்‌ சொல்லும்‌ ஷீஆக்கள்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னாக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரின்‌ செய்திகளை பாதுகாக்கவில்லை என்று குறைகூறுவதோடு அவர்களை அஹ்லுல்‌ பைத்தினரின்‌ விரோதிகளாகவும்‌ சித்தரிக்க முனைகின்றனர்‌. இது தொடர்பான தெளிவினை சுருக்கமாக நோக்குவோம்‌.

01. அல்குர்‌ஆனுக்கு அடுத்து நம்பகமானதாக கருதப்படும்‌ புஹாரி, முஸ்லிம்‌ போன்ற நூல்களில்‌ அபூபக்ர் (ரலி) ‌, உமர் (ரலி) ‌, உஸ்மான்‌ போன்ற பெரும்‌ ஸஹாபாக்களுடன்‌ ஒப்பிடும்போது அலி (ரலி) அவர்களின்‌ செய்திகள்‌ அவர்களை விடவும்‌ கூடுதலாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அலி அவர்களின்‌ செய்திகளைப்‌ பாதுகாப்பதில்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நல்ல சான்றாகும்‌.

02. நபியவர்களின்‌ மனைவியரின்‌ செய்திகளைப்‌ பாதுகாத்தல்‌: வீட்டுடன்‌ தொடர்புபட்ட விடயங்களில்‌ நபியவர்களுடைய வழிகாட்டல்களைத்‌ தெரிந்துகொள்வதற்காக ஸஹாபாக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரையே அணுகினர்‌. அது தொடர்பில்‌ வரும்‌ கேள்விகளை நபியவர்களின்‌ மனைவியர்‌ கேட்டு அறிந்துகொள்ளுமாறு வழிகாட்டினார்கள்‌.

இதனால்‌ நபியவர்களின்‌ மனைவியரிடம்‌ படிப்பதற்கென்று பெரும்‌ மாணவர்‌ பட்டாளம்‌ இருந்ததைக்‌ காண முடிகின்றது. ஸஹாபியப்‌ பெண்களில்‌ அதிகமான ஹதீஸ்கள்‌ ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே பதிவு செய்யப்பட்டுள்ளது. நபியவர்களின்‌ விருப்பத்திற்குரிய மனைவியான அவர்களைத்‌ தொட்டும்‌ 2210 ஹதீஸ்கள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன, அவரை அடுத்து அஹ்லுல்‌ பைத்‌ பெண்களில்‌ அதிக ஹதீஸ்கள்‌ அறிவிப்புச்செய்துள்ள பெண்மனி நபியவர்களின்‌ இன்னுமொரு மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களாகும்‌.

03.அஹ்லுல்‌ பைத்தின்‌ வரலாறுகளை பாதுகாத்தல்‌.

அஹ்லுல்‌ பைத்தின்‌ சிறப்புக்கள்‌ அவர்களின்‌ வரலாறுகளையும்‌ இஸ்லாமிய அறிஞர்கள்‌ பாதுகாத்தனர்‌. அந்த வகையில்‌ பெரும்பான்மையான ஹதீஸ்‌ நூல்களில்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ சிறப்புக்களைச்‌ சொல்லும்‌ ஹதீஸ்கள்‌ பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம்‌ அலி (ரலி) அவர்களின்‌ சிறப்பு, ஹஸன் (ரலி) ‌ அவர்களின்‌ சிறப்பு, ஹுஸைன் (ரலி) ‌ அவர்களின்‌ சிறப்பு, பாதிமா (ரலி) அவர்களின்‌ சிறப்பு, முஃமீன்களின்‌ அன்னையர்‌ (நபியவர்களின்‌ மனைவியர்களின்‌) சிறப்பு என்று ஒவ்வொருவருக்கும்‌ தனித்தனியான தலைப்புக்களிட்டு அவர்கள்‌ பற்றி வந்துள்ள சிறப்புக்களை பதிவு செய்துள்ளனர்‌.

அதுபோலவே அஹ்லுல்‌ பைத்தினர்‌ பற்றி தனித்தனியான நூல்களும்‌ எழுதப்பட்டுள்ளன.

அஷ்ஷெய்க்‌ முஹம்மத்‌ இப்னு இப்றாஹீம்‌ அஷ்ஷெய்பானி அவர்கள்‌ எழுதிய “முஃஜமு மா உல்லிப அனிஸ்ஸஹாபதி வ உம்மஹாதில்‌ முஃமீனீன்‌ வ ஆலில்‌ பைத்‌ (ரலி)” (வெளியீடு மன்ஷாறாது மர்கஸில்‌ மஹ்தூதாதி வத்துராதி வல்‌ வதாயிக்‌, குவைத்‌, முதலாம்‌ பதிப்பு:1993 ) எனும்‌ நூற்கள்‌ பற்றிய அகராதியில்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ சிலர்‌ தொடர்பில்‌ எழுதப்பட்டுள்ள நூற்களின்‌ எண்ணிக்கைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்‌.

பெயர்,‌ அவர்‌கள் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களின்‌ எண்ணிக்கை.

ஹம்ஸா (ரலி) 4

அப்பாஸ்‌ (ரலி) 8

அலி (ரலி) 56

ஹதீஜா (ரலி) 10

பாதிமா (ரலி) 16

ஹஸன்‌ (ரலி) 5

ஹூஸைன்‌ (ரலி) 11

இவ்வாறு ஏனைய அஹ்லுல்‌ பைத்தினர்‌ பற்றியும்‌ எழுதப்பட்டுள்ள நூல்களை பட்டியலிடும்‌ அவர்‌ தன்‌ முன்னுரையில்‌ “இங்கு நான்‌ குறிப்பிடும்‌ நூல்கள்‌ இவர்கள்‌ பற்றி எழுதப்பட்டுள்ளவற்றில் மிகவும்‌ சொற்பமானதே மிகுதியை சேகரித்துக்கொண்டுள்ளேன்‌ அதை இரண்டாம்‌ பாகமாக வெளியிடவுள்ளேன்‌.” என்று குறிப்பிட்டுள்ளார்‌.

உண்மையில்‌ தனிமனிதர்களின்‌ வரலாறுகள்‌ பற்றி இந்தளவு அதிகமான நூல்கள்‌ எழுதப்பட்டிருப்பது அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ வரலாறுகளைப்‌ பாதுகாக்க எடுத்துள்ள முயற்சிகளை தெளிவாக உணர்த்துகின்றது.

அதேபோன்று தற்காலத்தில்‌ ஸஹாபாக்கள்‌ மற்றும்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ வரலாறுகளையும்‌ அவர்களது செய்திகளையும்‌ மக்கள்‌ மயப்படுத்தவும்‌ தற்கால நூல்‌ அமைப்பு மற்றும்‌ தொடர்பூடகங்களின்‌ போக்குக்கு அமைவாக அவைகளை ஒழுங்குபடுத்தவும்‌ குவைத்‌, பஹ்ரைனில்‌ “மபர்ரதுல்‌ ஆல்‌ வல்‌ அஸ்ஹாப்‌'' (இந்நிறுவனத்தின்‌ உத்தியோகபூர்வ இணையம்‌ www.almabarrah.net) என்றொரு நிறுவனமே இயங்குகின்றது இந்நிறுவனத்தினால்‌ 100க்கணக்கான புத்தகங்கள்‌ இறுவெட்டுக்கள்‌, துண்டுப்‌ பிரசுரங்கள்‌, சுவரொட்டிகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.



அஹ்லுல்‌ பைத்தினர்கான்‌ ஆட்சிக்குத்‌ தகுதியானவர்களா?

நபியவர்களுக்குப்பின்‌ அபூபக்ர்‌ (ரலி) அவர்கள்தான்‌ கலீபா என்பதில்‌ அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களுக்கு மத்தியில்‌ கருத்து முரண்பாடு கிடையாது. முஸ்லிம்களின்‌ ஏகோபித்த முடிவாகவும்‌ இது காணப்படுகிறது. ஆனாலும்‌, ஷீஆக்கள்‌ இதற்கு முரண்படுகின்றனர்‌.

அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு இவர்கள்‌ முரண்படுவதால்‌ இக்கருத்தில எந்த மாற்றமும்‌ ஏற்படாது. ஏனெனில்‌, ஷீஆக்கள்‌ முஸ்லிம்களின்‌ வட்டத்தை விட்டும்‌ வெளியேறியவர்கள்‌ என்று இமாம்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. ஆனாலும்‌, ஷீஆக்கள்‌ தங்கள்‌ கருத்துக்கு சில குர்‌ஆனிய வசனங்களையும்‌ சில ஹதீஸ்களையைம்‌ குறிப்பிடுகின்றனர்‌

அதனால்‌ அவர்கள்‌ குறிப்பிடும்‌ ஆதாரங்களின்‌ உண்மைத்‌ தன்மையைத்‌ தெரிந்துகொள்வது அவசியமாகும்‌.

“நபி (ஸல்) அவர்களுக்குப்‌ பிறகு ஆட்சி செய்வதற்கு தகுதியானவர்‌ அலி (ரலி) அவர்களும்‌ அவரின்‌ குடும்பத்தவருமாகும்‌. இதையே, நபியவர்கள்‌ ஸஹாபாக்களுக்கு வஸிய்யத்‌ செய்தார்கள்‌. ஆனால்‌, ஸஹாபாக்கள்‌ அதற்கு மாறுசெய்து அண்ணல்‌ நபியின்‌ குடும்பத்தினருக்கு துரோகம்‌ செய்துவிட்டனர்‌' என்று ஷீஆக்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. ஷீஆக்கள்‌ தங்களின்‌ இந்த கருத்துக்கு சொல்லும்‌ மிகவும்‌ பிரபல்யமான ஆதாரம்‌ “கதர்‌ கும்‌” எனும்‌ இடத்தில்‌ நடந்ததாகச்‌ சொல்லப்படும்‌ செய்தியாகும்‌.

இந்த செய்தியே ஷீஆக்களின்‌ பிரதான கொள்கையின்‌ அடிப்படையாகும்‌. இதை வைத்தே தங்களின்‌ அனைத்து பிரச்சாரங்களையும்‌ மேற்கொள்கின்றனர்‌. இந்த ஹதீஸை மாத்திரம்‌ வைத்தே பல நூல்களும்‌ உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஸைத்‌ பின்‌ அர்க்கம்‌ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ இந்த செய்தியை இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்‌ “மதீனாவிற்கும்‌ மக்காவிற்கும்‌ இடையில்‌ உள்ள “கதாக்கும்‌” எனும்‌ ஒரு இடத்தில்‌ நபியவர்கள்‌ எங்களுக்கு உரையாற்றுவதற்காக எழுந்தார்கள்‌;

அல்லாஹ்வைப்‌ புகழ்ந்து அவனைத்‌ துதித்தார்கள்‌. பின்பு “மனிதர்களே! நானும்‌ உங்களைப்போன்ற மனிதன்தான்‌. எனக்கும்‌ இறைவனின்‌ தூதர்‌ வந்து, என்‌ உயிரைக்‌ கைப்பற்றிவிடுவார்‌. நான்‌ உங்களுக்கு மத்தியில்‌ இரண்டு பெரும்‌ விடயங்களை விட்டுச்செல்கிறேன்‌. அதில்‌ முதன்மையானது இறைவேதமாகும்‌. அதில்தான்‌ நேர்வழியும்‌ வழிகாட்டலும்‌ இருக்கிறது. எனவே நீங்கள்‌ அல்லாஹ்வின்‌ வேதத்தைப்பற்றிப்பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌.”

(இவ்வாறு) இறைவனின்‌ வேதத்தைப்‌ பின்பற்றுவதைத்‌ தூண்டினார்கள்‌. அதை ஊக்குவித்தார்கள்‌.

பின்பு சொன்னார்கள்‌: எனது குடும்பத்தினர்‌ விடயத்தில்‌ உங்களுக்கு நான்‌ இறைவனை ஞாபகப்படுத்துகின்றேன்‌, என்று மூன்று தடவைகள்‌ குறிப்பிட்டார்கள்‌. இந்தச்‌ செய்தியை ஸைத்‌ அவர்களிடம்‌ இருந்து அறிவிக்கும்‌ ஹுஸைன்‌ (ரஹ்‌) அவர்கள்‌; “குடும்பம்‌ என்றால்‌ யார்‌? நபியவர்களின்‌ மனைவியர்‌, அவர்களின்‌ குடும்பம்‌ இல்லையா?” என்றார்‌. அதற்கு ஸைத் (ரலி) ‌ “ஆம்‌, யாருக்கு ஸகாத்‌ பெருவது ஹராமாக்கப்பட்டதோ: அவர்களே, நபியவர்களின குடும்பத்தினர்‌” என்றார்கள்‌. அதற்கு ஹுஸைன்‌ (ரஹ்‌) அவர்கள்‌:

“அவர்கள்‌ யார்‌? என்றார்‌. ஸைத்‌ (ரலி) அவர்கள்‌ சொன்னார்கள்‌: அலி (ரலி) அவர்களின்‌ குடும்பம்‌, உகைலின்‌ குடும்பம்‌, ஜஃபரின்‌ குடும்பம்‌, அப்பாஸின்‌ குடும்பம்‌. அதற்கு ஹுஸைன்‌ (ரஹ்) இவர்கள்‌ அனைவரும்‌ ஸகாத்‌ பெறுவதற்கு தடுக்கப்பட்டவர்களா? என்று கேட்டார்கள்‌. அதற்கு “ஆம்‌' என ஸைத் (ரலி) ‌ அவர்கள்‌ குறிப்பிட்டார்கள்‌.

இந்தச்‌ செய்தியை திர்மிதி, அஹ்மத்‌, நஸஈ, ஹாகிம்‌
போன்றவர்கள்‌ அறிவிக்கும்‌ போது நாம்‌ மேல்‌ குறிப்பிட்டதை சேர்த்து “யார்‌ என்னை நேசிக்கிறாரோ, அவன்‌ அலியை நேசிக்கட்டும்‌” என்று இடம்பெற்றுள்ளது. இந்த வாக்கியம்‌ தவிர்ந்த ஏனைய சில வாக்கியங்களும்‌ வேறு பல கிரந்தங்களில்‌ இடம்பெற்றுள்ளன. ஆனால்‌, அவை பலவீனமானவையாகும்‌.

இந்த ஹதீஸே ஷீஆக்களின்‌ பிரதானமான ஆதாரம்‌. அலி (ரலி) அவர்கள்‌ தனது ஆட்சிக்காலத்தில்‌ கூபாவில்‌ வைத்து இந்த சம்பவத்தைக்‌ கூறிவிட்டு இதை நபியிடம்‌ இருந்து கேட்டவர்கள்‌ யார்‌ என்றார்கள்‌. அதற்கு பத்ரில்‌ கலந்து கொண்ட 12 ஸஹாபாக்கள்‌, “நாங்கள்‌ கேட்டோம்‌' என்று சாட்சி சொன்னார்கள்‌. நபியவர்கள்‌ கொளுத்தும்‌ வெயிலில்‌ “கதீர்‌ கும்‌” என்ற இடத்தில்‌ மக்களை நிறுத்தியது; அலி (ரலி) அவர்கள்‌ பற்றிய இந்த சிறப்பை தெளிவு படுத்துவதற்கும்‌, நபியை கலீபாவாக ஏற்றுக்கொண்டவர்கள்‌ அவருக்கு பின்‌ அலியை கலீபாவாக ஏற்றுக்கொள்ளவேண்டும்‌ என்பதை தெளிவுபடுத்தவுமே என்று ஷீஆக்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. 

அத்தோடு இதிலே 100,000க்கும்‌ அதிகமான ஸஹாபாக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌ ஹஜ்ஜாஜிகள்‌ தங்கள்‌ ஊர்களுக்கு பிரிந்து செல்லும்‌ இடமாக இந்த “கதீர்‌ கும்‌” இருந்தது. எனவே, எல்லோருக்கும்‌ இத்தகவலைச்‌ சொல்வதற்காகவே நபியவர்கள்‌ இந்த இடத்தில்‌ நிறுத்தினார்கள்‌ என்றும்‌ ஷீஆக்கள்‌ சொல்கின்றனர்‌.

இந்த வாதங்களின்‌ உண்மை நிலையைத்‌ தெரிந்து கொள்வதற்கு முன்னர்‌ இச்‌ செய்தியை நபியவர்கள்‌ சொன்னதற்கான காரணத்தைத தெரிந்து கொள்வோம்‌.

ஷீஆக்கள்‌ சொல்வதைப்‌ போன்று அலி (ரலி) அவர்கள்‌ மற்றும்‌ அவர்‌ குடும்பத்தின்‌ தலைமைத்துவத்தை நிலைநாட்டுவதற்காக இந்த சந்திப்பை நபியவர்கள்‌ செய்யவில்லை. அவ்வாறு செய்து நபியவர்கள்‌ தெளிவுபடுத்தியிருந்தால்‌ அதை நடைமுறைப்படுத்துவதில ஸஹாபாக்கள்‌ போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டிருப்பார்கள்‌.

நபியவர்கள்‌ சொன்னதை நிறைவேற்ற தங்களின்‌ உயிரையும்‌ துச்சமாக மதித்து செயல்பட்டிருப்பார்கள்‌. அதுதான்‌ அவர்களின்‌ வரலாறு.

100,000க் கும்‌ அதிகமான ஸஹாபாக்கள்‌ ஒன்றுகூடி கேட்டார்கள்‌, பின்பு எவரும்‌ அதற்கு கட்டுப்படவில்லை எனும்‌ ஷீஆக்களின்‌ சித்திரம்‌ சற்று விநோதமும்‌ வேடிக்கையும்‌ நிறைந்தது. தங்கள்‌ உயிரையும்‌ விட மேலாக நபியை மதித்த ஸஹாபாக்கள்‌ விடயத்தில்‌ இவ்வாறு கற்பனை செய்வது வேதனைக்குரியது.


இந்த சந்திப்பை நபியவர்கள்‌ இரண்டு காரணங்களுக்காக செய்தார்கள்‌:

01) நபி (ஸல்) அவர்கள்‌ ஹாலித்‌ பின்‌ வலீத்‌ (ரலி) அவர்களை எமன்‌ பிரதேசத்திற்கு அனுப்பினார்கள்‌. அவர்‌ அதை வெற்றி கொண்டதன்‌ பின்பு அங்கு கிடைத்த கனீமத்‌ பொருட்களில்‌ நபியவர்களுக்கும்‌ அவரின்‌ குடும்பத்திற்கும்‌ சேரவேண்டிய பகுதியைப்‌ பெறுவதற்கு ஒருவரை அனுப்புமாறு நபியவர்களுக்கு செய்தி அனுப்பினார்‌.

நபி (ஸல்) அவர்கள்‌: அலி (ரலி) அவர்களை அனுப்பினார்கள்‌. அலி (ரலி) அவர்களிடம்‌ அந்த சொத்தைக்‌ கொடுத்த போது அலி (ரலி) அவர்கள்‌ உடனடியாக அதிலிருந்த ஒரு அடிமைப்‌ பெண்ணைத்‌ தேர்வு செய்து வீடு கூடிவிடுகிறார்கள்‌. கைமாறிய மறுகணமே இவ்வாறு நிகழ்ந்ததால்‌, ஸஹாபாக்களுக்கு சற்று அருவருப்பாக இருந்தது. புரைதா (ரலி) அவர்கள்‌, நான்‌ இதற்காக அலி (ரலி) அவர்களை கோபிக்கிறேன்‌' என்றார்கள்‌. ஹாலித்‌ (ரலி) அவர்களைப்‌ பார்த்து புரைதா ‌(ரலி) அவர்கள்‌, “பார்த்தீர்களா? அலியை' என்று கூறினார்கள்‌.

புரைதா (ரலி) அவர்கள்‌ சொல்கிறார்கள்‌: “நான்‌ நபியவர்களிடம்‌ வந்தபோது இதைச்சொன்னேன்‌. நபியவர்கள்‌ புரைதா அவர்களுக்குச்‌ சொன்னார்கள்‌: “புரைதாவே! நீ அலியை கோபிக்கிறாயா? அதற்கு புரைதா “ஆம்‌' என்றார்கள்‌. நபியவர்களோ “இல்லை' அவரை வெறுக்காதே. ஐந்தில்‌ ஒன்றில்‌ அவருக்கு சேரவேண்டிய பகுதி இதை விட அதிகமானது என்றார்கள்‌.” (புஹாரி 4350)

எனவே, அலி (ரலி) அவர்கள்‌ மீது மக்களுக்கு இருந்த இந்த கசப்புணர்வை நீக்கவே நபியவர்கள்‌ இந்த சந்திப்பைச்‌ செய்தார்கள்‌.



02) இமாம்‌ பைஹகி (ரஹ்‌) அவர்கள்‌ அபூ ஸஈத்‌ (ரலி) அவர்கள்‌ மூலம்‌ அறிவிக்கக்கூடிய செய்தியில்‌, அலி (ரலி) அவர்கள்‌ ஸகாத்துக்குரிய ஒட்டகங்களில்‌ ஏறிப்‌ பிரயாணம்‌ செய்வதற்கு தடைவிதித்தார்கள்‌. பின்பு அவைகளுக்கு ஒருவரைப்‌ பொறுப்பாக்கி விட்டு நபி (ஸல்) அவர்களிடம்‌ சென்றார்கள்‌. ஆனால்‌, வீதியில்‌ தான்‌ பொறுப்பாக்கியவரையும்‌ ஒட்டகங்களையும்‌ தனது கட்டளைக்கு முரணானதாகக்‌ காண்கிறார்‌. மற்றவர்கள்‌ அவைகளில்‌ ஏறிப்‌ பிரயாணம்‌ செய்வதற்கு பொறுப்பாளர்‌ அனுமதி வழங்கியிருந்தார்‌. அலி (ரலி) அவர்கள்‌ அவரை கண்டித்தார்கள்‌; கடிந்து கொண்டார்கள்‌. அபூ ஸஈத்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: நாம்‌ நபி (ஸல்) அவர்களை வந்தடைந்தபோது பிரயாணத்தில்‌ அலி அவர்களிடம்‌ நாம்‌ சந்தித்ததையும்‌ அவரது கடுமையையும்‌ நபியவர்களுக்கு எடுத்துச்‌ சொன்னோம்‌. அப்போது நபியவர்கள்‌ “அபூஸயிதே! கொஞ்சம்‌ பொறுங்கள்‌. உங்கள்‌ சகோதரன்‌ விடயத்தில்‌ அடக்கி வாசியுங்கள்‌. மேலும்‌, அவர்‌ அல்லாஹ்வின்‌ பாதையில்‌ நல்லதையே செய்திருக்கிறார்‌” என்று சொன்னார்கள்‌.

இமாம்‌ இப்னு கதீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ சொல்கிறார்கள்‌: இவ்வாறு அலி (ரலி) அவர்கள்‌ மீது விமர்சனங்கள்‌ அதிகரித்தபோது நபியவர்கள்‌ ஹஜ்‌ கடமைகளை முடித்ததற்குப்‌ பிறகு தன்‌ கடமைகளிலிருந்து ஓய்வுபெற்று மதீனாவிற்கு திரும்பிக்‌ கொண்டிருக்கும்‌ வழியில்‌ “கதீர்கும்‌” என்ற இடத்தில்‌ அலி (ரலி) அவர்கள்‌ மீது மனிதர்களுக்கு மத்தியில்‌ இருந்த கசப்புணர்வையும்‌, விமர்சனங்களையும்‌ நீக்கி அவரின்‌ புகழை உயர்த்தவும்‌, ஓங்கச்‌ செய்யவுமே இந்த சந்திப்பை செய்தார்கள்‌. அலி (ரலி) அவர்களின்‌ ஆட்சியைப்பற்றி முன்னறிவிப்புச்‌ செய்வதற்காக அல்ல.” (அல்பிதாயா வன்னிஹாயா 5:95)

நபி (ஸல்) அவர்கள்‌ இதற்காகவே மினாவிலோ, அரபாவிலோ இது பற்றிப்‌ பேசவில்லை “கதீர்கும்‌” எனும்‌ இடம்‌ வரைக்கும்‌ பிற்படுத்தினார்கள்‌. அதுபோன்று இந்த விடயம்‌ மதீனாவாசிகளுடன்‌ மாத்திரம்‌ தொடர்புடையதாகும்‌. காரணம்‌ அவர்களே அலி (ரலி) அவர்களுடன்‌ பிரச்சினையில்‌ தொடர்புடையவர்கள்‌ இதனால்‌, நபியவர்கள்‌ எல்லோருக்கும்‌ மத்தியில்வைத்து இந்த விடயம்‌ தொடர்பாக பேசாமல்‌ “கதீர்கும்‌” எனும்‌ இடம்‌ வரை பொறுமை காத்தார்கள்‌.

ஷீஆக்கள்‌ சொல்லுவதைப்‌ போன்று “கதீர்கும்‌” என்பது ஹஜ்ஜாஜிகள்‌ தங்கள்‌ ஊர்களுக்கு பிரிந்து செல்வதற்கான இடம்‌ கிடையாது.

ஹஜ்‌ முடிந்ததும்‌ மக்காவில்‌ வைத்தே அனைவரும்‌ திரும்பிச்‌ சென்றுவிடுவார்கள்‌. மக்காவாசிகள்‌ மக்காவிலேயே இருந்து விடுவார்கள்‌. மக்காவிலிருந்து 250கிலோமீற்றர்‌ தூரத்திலுள்ள “கதீர்கும்‌” எனும்‌ இடம்‌ வரை அவர்கள்‌ வரவேண்டிய அவசியமில்லை

அப்படி அவர்கள்‌ வருவதுமில்லை... ஹஜ்ஜாஹிகள்‌ கூடுவதும்‌ அவர்கள்‌ பிரிவதும்‌ மக்காவில்தான்‌. கூடும்‌ இடம்‌ மக்காவாகவும்‌ பிரியும்‌ இடம்‌ மக்காவிலிருந்து 250கிலோமீற்றர்‌ தூரமாகவும்‌ இருக்கவேண்டிய அவசியமில்லை. நபியவர்கள்‌ “கதீர்கும்‌” எனும்‌ இடத்தில்‌ நின்றார்கள்‌ மதீனா வாசிகளைத்‌ தவிற வேறு எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்களும்‌ அவர்களுடன்‌ இருக்கவில்லை. எனவே 100,000க்கும்‌ மேற்பட்ட ஸஹாபாக்களுக்கு மத்தியில்‌ வைத்து நபியவர்கள்‌ இதைச்‌ சொன்னார்கள்‌ என்று ஷீஆக்கள்‌ கதையளப்பது முழுப்‌ பொய்யாகும்‌.



03. நபி (ஸல்) அவர்கள்‌ “கதீர்கும்‌” எனுமிடத்தில்‌ நின்றதற்கு வேறு ஒரு காரணமும்‌ உள்ளது. அதாவது மக்காவிலிருந்து மதீனாவிற்குச்‌ செல்வதற்கு ஆறு அல்லது ஏழு நாட்கள்‌ எடுக்கும்‌ மிகவும்‌ நீண்ட பயணம்‌. இதனால்‌, இவ்வாறான பயணங்களின்‌ போது நபியவர்கள்‌ பலமுறை ஓய்வெடுப்பார்கள்‌. இதுபோலவே செல்லும்‌ வழியில்‌ ஓய்வெடுப்பதற்காக நபியவர்கள்‌ “கதீர்கும்‌” எனும்‌ இடத்தில்‌ இறங்கினார்கள்‌ மக்களுக்கு இறைமறை பற்றி உபதேசம்‌ செய்தார்கள்‌. அத்தோடு அந்த மக்களிடம்‌ அலி (ரலி) அவர்களைப்‌ பற்றியிருந்த தப்பான அபிப்பிராயத்தை நீக்குவதற்குரிய ஒரு சந்தர்ப்பமாகவும்‌ அதைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டார்கள்‌. அலி (ரலி) அவர்களுக்காகவே நபியவர்கள்‌ இந்த இடத்தில்‌ நின்றார்கள்‌ என்பது தவறாகும்‌.

அத்தோடு இந்தச்‌ செய்தியில்‌ நபியவர்களுக்குப்‌ பிறகு அலி‌ (ரலி) அவர்கள்தான்‌ கலீபா என்பதற்கான எந்த ஆதாரமுமில்லை. ஆனால்‌ ஷீஆக்கள்‌ இந்த செய்தியின்‌ ஒரு அறிவிப்பில்‌ வரும்‌ “மவ்லா' என்ற வார்த்தைக்கு, தலைவர்‌ ஆட்சியாளர்‌ என்ற அர்த்தத்தைக்‌ கொடுத்து நபியவர்கள்‌ அலி (ரலி) அவர்களை தலைவராக முன்மொழிந்தார்கள்‌ என்று குறிப்பிடுகின்றனர்‌.

இச்சொல்‌ பல கருத்துக்களைக்‌ கொண்டதாகும்‌. “உதவியாளர்‌, நேசர்‌, நண்பர்‌, தலைவர்‌..” எனும்‌ பல அர்த்தங்கள்‌ இதற்குள்ளன. இந்த வார்த்தைக்கு இந்த ஹதீஸிலே நேசர்‌ என்ற கருத்தே கொடுக்கப்படவேண்டும்‌ என்று எல்லா அறிஞர்களும்‌ குறிப்பிடுகின்றனர்‌.

ஆனால்‌, எல்லாவற்றிலும்‌ முரண்படுவதை வழமையாகக் கொண்ட ஷீஆக்கள்‌ மாத்திரம்‌ இதற்கு தலைவர்‌ என்று அர்த்தம்‌ கொடுக்கின்றனர்‌.

நபி (ஸல்) அவர்கள்‌: எல்லோருக்கும்‌ விளங்கும்‌ அடிப்படையில்‌ தெளிவாகப்பேசக்கூடியவர்‌ என்பது எல்லோரும்‌ அறிந்த விடயம்‌. எனவே, தலைமைத்துவம்‌ போன்ற மிகப்பெரும்‌ விடயங்கள்‌ பற்றி நபியவர்கள்‌ சொல்லுவதாக இருந்தால்‌ வேறு கருத்துக்களுக்கு
இடம்‌ கொடுக்காத வகையில்‌ அமைந்த பல வார்த்தைகள்‌ உள்ளன. அவைகளைப்‌ பயன்படுத்தியிருப்பார்கள்‌.

பல கருத்துக்களைக்கொண்ட இந்த வார்த்தையை நபியவர்கள்‌ இப்படி பெரியதொரு விடயத்தைப்‌ பற்றிப்‌ பேசுவதற்கு பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்‌. அந்த சந்திப்பில்‌ கலந்து கொண்ட எல்லா ஸஹாபாக்களும்‌ குறித்த சொல்லுக்கு நேசர்‌ என்ற கருத்தையே விளங்கிக்‌ கொண்டார்கள்‌. இதனாலேயே அவர்கள்‌ எவரும்‌ பிற்பட்ட காலத்தில்‌ அபூபக்ர்‌ (ரலி) அவர்களுக்கு எல்லோரும்‌ ஒன்றுசேர்ந்து அலி (ரலி) அவர்கள்‌ உட்பட பைஅத்‌ செய்து அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்‌. நபியவர்கள்‌ சொன்னதை மறந்ததால்‌ இவ்வாறு செய்தார்கள்‌ என்று சொல்ல முடியாது. காரணம்‌; அலி (ரலி) அவர்கள்‌ தன்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ இந்தச்‌ செய்தியைச்‌ சொல்லிவிட்டு, யாரெல்லாம்‌ இதை நபியவர்‌களிடமிருந்து கேட்டீர்கள்‌ என்றபோது பத்ரில்‌ கலந்துகொண்ட 12 ஸஹாபாக்கள்‌ நபியவர்களிடம்‌ இந்தச்‌ செய்தியை கேட்டதாகச்‌ சொன்னார்கள்‌. எனவே, இதன்‌ மூலம்‌ ஸஹாபாக்கள்‌ எல்லோருமே இந்த வார்த்தைக்கு நேசர்‌ என்ற கருத்தையே கொடுத்திருக்கிறார்கள என்பது தெளிவாகிறது.

இதனாலேயே, அஹ்லுல்‌ பைத்தினர்‌ எவரும்‌ எமக்கே ஆட்சி சொந்தமானது அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள்‌ என்று அபூபக்ர் (ரலி) உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ‌ போன்றோரிடம்‌ கேட்கவில்லை. அவர்களின்‌ ஆட்சியை ஏற்றுக்கொண்டார்கள்‌ அதைப்‌ புகழ்ந்தார்கள்‌ அவர்களின்‌ ஆட்சியில்‌ அமைச்சுப்‌ பொறுப்புக்களை வகித்தனர்‌. உஸ்மான் (ரலி) ‌ அவர்களின்‌ மரணத்தின்‌ பின்பு அலி‌ (ரலி) அவர்களிடம்‌ ஆட்சியைப்‌ பொறுப்பபேற்குமாறு சொன்னபோது. அதை அவர்கள்‌ மறுத்துவிட்டார்கள்‌. நான்‌ அமைச்சராக இருப்பதையே விரும்புகின்றேன்‌ என்று கூறினார்கள்‌. எனவே, இந்த ஹதீஸின்‌ கருத்தை அலி (ரலி) அவர்களை நேசித்தல்‌ என்றே அஹ்லுல்‌ பைத்தினரும்‌ விளங்கிக்‌ கொண்டார்கள்‌.

ஸஹாபாக்களோ, இமாம்களோ கொடுக்காத ஒரு விளக்கத்தைக்‌ கொடுத்து நடந்து முடிந்த ஒரு விடயத்தைச்‌ சொல்லி, ஸஹாபாக்கள விடயத்தில்‌ தப்பபிராயங்களை ஏற்படுத்தி எம்‌ சகோதரர்களின்‌ ஈமானுக்கு வேட்டுவைக்க ஷீஆக்கள்‌ முயற்சிக்கின்றனர்‌.

நபி (ஸல்) அவர்களுக்குப்‌ பிறகு அபூபக்ர்‌ (ரலி) அவர்களே ஆட்சிக்கு மிகவும்‌ தகுதியானவர்‌ என்பதற்கு பல ஆதாரங்களை அறிஞர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. அவைகளை இனி அவதானிப்போம்‌.



01) நபி (ஸல்) அவர்கள்‌ தனது மரண வேளையில்‌ நோயோடு இருக்கும்போது “அபூபக்ரை மக்களுக்குத்‌ தொழுகை நடத்தச்‌ சொல்லுங்கள்‌ என்றார்கள்‌. ஆனாலும்‌, ஆயிஷா (ரலி) அவர்கள்‌ மறுத்தார்கள்‌; அவரை விடவேண்டாம்‌ என்று தடுத்தார்கள்‌. நபியவர்களோ அபூக்ரையே தொழுகை நடத்தச்‌ சொல்லுங்கள்‌ என்று உறுதியாக்ச சொல்லிவிட்டார்கள்‌.” (ஸஹீஹால்‌ புஹாரி, அறிவிப்பவர்‌: அபூமூஸா அல்‌ அஷ்‌அரி (ரலி) ‌, ஹ.இல;3654)

அதாவது, நபியவர்கள்தான்‌ மக்களுக்கு தொழுகை நடத்தி வந்தார்கள்‌, அவர்‌ இல்லையென்றால்‌! அந்த இடத்தில்‌ அபூபக்ர்‌ இருக்க வேண்டும்‌ என்று நபியவர்கள்‌ விரும்பியிருக்கிறார்கள்‌.

அத்தோடு அவர்‌ இருக்கும்போது எவரும்‌ அவருடைய இடத்தில்‌ தொழுகை நடத்தவில்லை. ஆனால்‌, நபியவர்களே தான்‌ உயிருடன்‌ இருக்கும்போது அபூபக்ரை மக்களுக்கு தொழுகை நடத்துமாறு ஏவியுள்ளார்கள்‌, தொழுகை எனும்‌ ஆத்மீகக்‌ கடமைக்கு நபியவர்கள் அபூபக்ர்‌ (ரலி) அவர்களை தலைவராக ஆக்கி இருக்க, உலகக்‌ காரியங்களை நடத்துவதற்கு அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மிகவும்‌ வேடிக்கையானதாகும்‌.

02) நபி (ஸல்) அவர்களின்‌ காலத்திலே அவருக்கு அடுத்த படியான சிறப்பு அபூபக்ர்‌ (ரலி) அவர்களுக்குரியது என்றே ஸஹாபாக்கள்‌ எல்லோரும்‌ சொல்லி வந்தார்கள்‌. இது நபியவர்களுக்குத்‌ தெரிந்திருந்தும்‌ மெளனமாக இருந்து அதை உண்மைப்படுத்தியதோடு அதற்கு தனது முழுமையான அங்கீகாரத்தையும்‌ வழங்கினார்கள்‌. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌.” (ஸஹீஹுல்‌ புஹாரி, அறிவிப்பவர்‌: இப்னு உமர்‌க்‌ ஹூ.இல: 3455)

எனவே, முக்கிய பொறுப்புக்களில்‌ நபியவர்களால்‌ எவரும்‌ நியமிக்கப்படாதவிடத்து மிகவும்‌ சிறந்தவர்களை முற்படுத்துவதே மிகவும்‌ பொருத்தமானதாகும்‌.

03) நபி (ஸல்) அவர்களிடம்‌ ஒரு பெண்மணி வந்தார்‌. அவருக்கு நபியவர்கள்‌ மறுநாள்‌ வருமாறு பணித்தார்கள்‌. அப்போது, அந்தப்‌ பெண்மணி “நாளைக்கு ஒருவேளை நீங்கள்‌ இல்லை, என்றால்‌ என்ன செய்வது?” என்றார்‌. அதற்கு நபியவர்கள்‌ “நான்‌ இல்லை என்றால்‌ அபூபக்ரிடம்‌ செல்‌” என்றார்கள்‌. (ஸஹீஹுல்‌ புஹாரி, அறிவிப்பவர்‌: ஜாபைர்‌ இப்னு முத்‌இம்கூ ஹூ.இல: 34509)

இந்த செய்தியில்‌ நபியவர்கள்‌ தனக்குப்‌ பிறகு தனது பொறுப்புக்களை வகிக்கக்கூடிபவராகவும்‌, மக்களின்‌ பிரச்சினைகளை தீர்த்துவைக்கக்‌ கூடியவராகவும்‌ அபூபக்ர்‌ (ரலி) அவர்களை இனங்காட்டியிருக்கிறார்கள்‌.

4) நபி (ஸல்) அவர்கள்‌ தன்‌ மரணவேளை நெருங்கி நோய்‌ அதிகரித்தபோது ஆயிஷா (ரலி)‌ அவர்களுக்கு பின்வருமாறு சொன்னார்கள்‌:

“உனது தந்தையையும்‌ சகோதரனையும்‌ அழைப்பீராக!

நான்‌ தெளிவாக எழுதித்‌ தந்துவிடுகிறேன்‌. ஏனெனில்‌ சிலவேளை பேராசையுள்ள யாராவது வந்து, நான்‌ தான்‌ மிகத்தகுதியானவர்‌ என்று சொல்ல, முஃமீன்களும்‌, அல்லாஹ்வும்‌ அபூபக்ரைத்‌ தவிர எவரையும்‌ ஏற்றுக்கொள்ள மறுக்க (பிரச்சினைகள்‌ வந்துவிடுமோ என்று) நான்‌ அஞ்சுகிறேன்‌” (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, அறிவிப்பவர்‌: ஆயிஷா (ரலி)‌, ஹ.இல:2387)

இதிலே நபியவர்கள்‌ தனக்குப்‌ பிறகு அபூபக்ர்தான்‌ ஆட்சியாளர்‌ என்பதை முழுமையாக எவருக்கும்‌ சந்தேகம்‌ ஏற்படாத வகையில்‌ தெளிவாக சொல்லாவிட்டாலும்‌ ஓரளவு தெளிவாகச்‌ சொல்லியிருக்கிறார்கள்‌.

05) ஸஹாபாக்கள்‌ எல்லோரினதும்‌ ஏகோபித்த முடிவு: நபி (ஸல்) அவர்களுக்குப்‌ பின்‌ அபூபக்ர்‌ (ரலி)‌ அவர்கள்தான்‌ ஆட்சியாளர்‌ என்பதில்‌ ஸஹாபாக்களுக்கு மத்தியில்‌ எந்த விதமான கருத்துமுரண்பாடும்‌ இல்லை. அனைவரினதும்‌ ஒப்புதலிலும்‌, உடன்படிக்கையின்‌ பேரிலும்‌ அபூபக்ர்‌ (ரலி)‌ தலைவராக வந்தார்கள்‌. அலி (ரலி)‌ அவர்கள்‌, ஹஸன்‌ (ரலி)‌, ஹுஸைன்‌ (ரலி)‌ போன்றோரின்‌ கருத்தும்‌ இதுவே. இது ஸஹாபாக்களின்‌ நூறு வீத ஏகோபித்த முடிவாகும்‌.

எனவே, ஸஹாபாக்கள்‌ எவரும்‌ கருத்து முரண்படாத இந்த விடயங்களை நாம்‌ தர்க்கித்துக்கொள்வது எம்மை நேரான வழியிலிருந்து நீக்கிவிடலாம்‌.

(அல்லாஹ்‌ எம்மைப்‌ பாதுகாப்பானாக.)



அஹ்லுல்‌ பைத்தைத்தான்‌ பின்பற்ற வேண்டுமா?

அஹ்லுல்‌ பைத்‌ என்பதற்கு தவறான விளக்கம்‌ கொடுத்து உலகில்‌ எவரும்‌ சொல்லாத அடிப்படையில்‌ அல்‌ குர்‌ஆன்‌ அல்ஹதீஸுக்கு முரணான ஒரு கொள்கையை உருவாக்கிக்‌ கொண்ட ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தையே பின்பற்ற வேண்டும்‌

அல்குர்‌ஆன்‌ அல்ஹதீஸைப்‌ பின்பற்றுமாறு சொல்வது தவறான வாதம்‌ என்றும்‌ குறிப்பிடுகின்றனர்‌. எனவே, இது தொடர்பில்‌ அவர்கள்‌ முன்வைத்திருக்கும்‌ வாதங்களை இங்கு அவதானிப்போம்‌.

01.நபியவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றுமாறே சொன்னார்கள்‌.

02. அஹ்லுல்‌ பைத்தினரே பரிசுத்தமானவர்கள்‌.



பாமரர்களையும்‌, இஸ்லாம்‌ பற்றிய பூரண அறிவில்லாத வேறு துறைகளைப்‌ படித்தவர்களான சமூகத்தின்‌ புத்திஜீவிகளையும்‌ சந்திக்கும்‌ ஷீஆக்கள்‌ தாங்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ நேசர்கள்‌ என்றும்‌ அவர்களைப்‌ பின்பற்றுமாறே நபியவர்கள்‌ சொன்னார்கள்‌ என்றும்‌ அவர்களே பரிசுத்தமானவர்கள்‌ என்றும்‌ வாதிட்டு அவர்களிடம்‌ சந்தேகங்களை உருவாக்குகின்றனர்‌. இதனால்‌ இது தொடர்பாக விரிவாக அலசுவோம்‌.

நபி அவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றுமாறே சொன்னார்கள்‌.

நபி‌ அவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றுமாறே சொன்னார்கள்‌

என்று வாதிடும்‌ ஷீஆக்கள்‌ பின்வரும்‌ ஹதீஸ்களை அதற்கு ஆதாரமாகக்‌ காட்டுகின்றனர்‌.



01. ஹதீதுத்‌ தகலைன்‌:

இந்த ஹதீஸ்‌ ஷீஆக்களிடம்‌ பிரபல்யமானதாகும்‌. இது பலவாறாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்‌ சில அறிவிப்புக்கள்‌ பின்வருமாறு

“நான்‌ உங்களிடம்‌ இரண்டு விடயங்களை விட்டுச்செல்கின்றேன்‌ அதைப்‌ பின்பற்றும்‌ காலமெல்லாம்‌ வழி தவறமாட்டீர்கள்‌. ஒன்று அல்லாஹ்வின்‌ வேதமாகிய அல்குர்‌ஆன்‌, மற்றயது எனது குடும்பம்‌” (ஸுனன்‌ அத்திர்மிதி, இமாம்‌ திர்மிதி, ஹ.இல: 3786, முஸ்னத்‌ அல்‌ பஸ்ஸார்‌, இமாம்‌ பஸ்ஸார்‌, பாகம்‌:3 பக்கம்‌:89 ஹ.இல:864, அல்‌ முஃஜம்‌ அஸ்ஸகீர்‌, இமாம்‌ அத்தபரானி, பாகம்‌:1 பக்கம்‌:232 ஹு.இல:376)

“நான்‌ உங்களிடம்‌ இரண்டு விடயங்களை விட்டுச்‌ செல்கின்றேன்‌ அவை இரண்டும்‌ நீங்கள்‌ ஹவ்ளுல்‌ கவ்தர்‌ தடாகத்திற்கு என்னிடம்‌ வரும்வரை ஒன்றை ஒன்று பிரியாது. ஓன்று அல்குர்‌ஆன்‌ மற்றயது எனது குடும்பம்‌ அஹ்லுல்‌ பைத்‌” (அல்‌ முஸ்தத்ரக்‌ அலஸ் ஸஹீஹைன்‌, இமாம்‌ ஹாகிம்‌, பாகம்‌:3 பக்கம்‌: 118 ஹ.இல: 4576, அஸ்ஸானன்‌ அல்‌ குப்ரா, இமாம்‌ பைஹகீ, பாகம்‌: 5 பக்கம்‌:45, ஹ.இல:8148, முஸ்னத்‌ அஹ்மத்‌, இமாம்‌ அஹமத்‌ பின்‌ ஹம்பல்‌, பாகம்‌: 03, பக்கம்‌: 14, ஹ.இல:11119.)

“நான்‌ உங்களிடம்‌ இரண்டு விடயங்களை விட்டூச்‌ செல்கின்றேன்‌ அதில்‌ முதன்மையானது அல்குர்‌ஆன்‌ ஆகும்‌ அதிலே நேர்வழியும்‌, ஒளியும்‌ உள்ளது அதைப்பின்பற்றுங்கள்‌ அதை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌, அதைப்‌ பின்பற்றுமாறு ஏவினார்கள்‌ ஆசையுட்டினார்கள்‌. பின்பு எனது அஹ்லுல்‌ பைத்தினர்‌ அவர்கள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வை உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றேன்‌, அவர்கள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வை உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றேன்‌, அவர்கள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வை உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றேன்‌.'” (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, ஹ.இல:2408)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று அறிவிப்புக்களே இந்த ஹதீஸில்‌ வந்துள்ள பிரதானமான அறிவிப்புக்களாகும்‌. இதில்‌ முந்திய இரண்டு அறிவிப்புக்களின்‌ அறிவிப்பாளர்‌ வரிசை நம்பிக்கை தன்மை அற்றதாகும்‌ அதனால்‌ அது பலவீனமானதாகும்‌ இதை பல அறிஞர்கள்‌ குறிப்பிட்டுள்ளனர்‌.

மூன்றாவது அறிவிப்பு ஸஹீஹ்‌ முஸ்லிமில்‌ வரும்‌ அறிவிப்பு நம்பகமானதாகும்‌ இதன்படி நபியவர்கள்‌ அஹ்லுல்பைத்தினரைப்‌ பின்பற்றுமாறு சொல்லவில்லை அவர்கள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வைப பயந்துகொள்ளுமாறே சொல்கிறார்கள்‌. எனவே, அஹ்லுல்‌ பைத்தினரை மதித்தல்‌ அவர்களின்‌ உரிமைகள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வைப்‌ பயந்துகொள்ளுதல்‌ என்பதையே அது குறிப்பிடும்‌ விடயமாகும்‌. இது சாதாரணமாக ஒவ்வொருவரும்‌ பாவிக்கும்‌ ஒரு வாசக அமைப்பேயாகும்‌. தன்‌ பிள்ளைகள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்வைப்‌ பயந்துகொள்ளுமாறு ஒரு தந்தை ஆசிரியருக்கு சொல்கிறார்‌ அதனால்‌ ஆசிரியர்‌ அந்தப்‌ பிள்ளையை நான்‌ பின்பற்ற வேண்டும்‌ என்று விளங்கிக்கொள்வதில்லை மாறாக அந்தப்‌ பிள்ளையின்‌ உரிமைகள்‌ கடமைகள்‌ விடயத்தில்‌ நான்‌ கவனமாக இருக்க வேண்டும்‌ என்றே விளங்கிக்‌ கொள்வார்‌. அவ்வாறே நாம்‌ இந்த ஹதீஸையும்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌.

ஷீஆக்கள்‌ சொல்வதைப்போன்று அஹ்லுல்‌ பைத்தினரைப்‌ பின்பற்றுவதைத்தான்‌ இந்த ஹதீஸ்‌ குறிப்பிடுகிறது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரைப்‌ பின்பற்றுபவர்கள்‌ அல்ல அவர்கள்‌ பாரசீக நாகரீகம்‌ கலாச்சாரம்‌ என்பவற்றை இஸ்லாத்தின்‌ பெயரால்‌ பின்பற்றுபவர்கள்‌.

அஹ்லுல்‌ பைத்தினர்‌ அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னாவைப்‌ பின்பற்றினார்கள்‌ அவற்றைப்‌ பின்பற்றுமாறு சொன்னார்கள்.

ஆனால்‌ ஷீஆக்கள்‌ அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னாவைப்‌ பின்பற்றுபவர்கள்‌ அல்ல மக்களை வழிகெடுப்பதற்காக சில குர்‌ஆன்‌ வசனங்களையும்‌ ஹதீஸ்களையும்‌ கருத்து மாற்றிப்‌ பயன்படுத்துகிறார்கள்‌. அதனாலேயே அஹ்லுல்‌ பைத்தினர்‌ அவர்களைத்‌ தண்டித்தார்கள்‌, அவர்களை விட்டும்‌ மக்களை எச்சரித்தார்கள்‌.

அதுபோன்றே ஷீஆக்களின்‌ இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால்‌ அல்லாஹ்‌ நபியவர்களைப்‌ பின்பற்றுமாறு அல்குர்‌ஆனில்‌ சொல்ல நபியவர்கள்‌ என்னை விட்டுவிடுங்கள்‌ அஹ்லுல்‌ பைத்தைத்தான்‌ பின்பற்றுங்கள்‌ என்று சொன்னதாக சொல்ல வேண்டியேற்படும்‌.

இது அல்குர்‌ஆனையும்‌ நபியவர்களையும்‌ மோதவிடும்‌ ஒரு செயலாகும்‌. நபியவர்கள்‌ அல்லாஹ்வின்‌ கட்டளைக்கு மாறு செய்தார்கள்‌ என்றும்‌ சொல்ல வேண்டி ஏற்படும்‌ அல்லாஹ்‌ எம்மைப்‌ பாதுகாப்பானாக.



02. ஹதீஸ்‌ மதீனதில்‌ இல்ம்‌:

“நான்‌ அறிவின்‌ பட்டணமாக இருக்கிறேன்‌ அலி அதன்‌ வாயிலாக இருக்கிறார்‌ யார்‌ அறிவைத்‌ தேடுகிறாரோ அவர்‌ அதன்‌ வாயிலூடாக வரட்டும்‌.” (அல்முஃஜம்‌ அல்கபீர்‌, இமாம்‌ தபரானி, ஹ.இல:11061)

இந்த ஹதீஸ்‌ சில வார்த்தை வித்தியாசங்களுடன்‌ திர்மிதியிலும்‌ இடம்பெற்றுள்ளது அதை அறிவித்ததன்‌ பின்பு அவரே அதை பலவீனமானது எனக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

ஷீஆக்களின்‌ உரைகளில்‌ அதிகம்‌ இடம்பிடிக்கும்‌ செய்தி இதுவாகும்‌ ஆனால்‌ இது ஒரு பலவீனமான செய்தியாகும்‌ இது இட்டுக்கட்டப்பட்ட மவ்லூவான செய்தி என்றும்‌ சில அறிஞர்கள்‌ குறிப்பிட்டுள்ளனர்‌. அவ்வாறு குறிப்பிடும்‌ அறிஞர்களில்‌ சிலர்‌ பின்வருமாறு.

அல்‌ உகைலி (ரஹ்‌) (அல்லுஅபாஃ 3:149), 

இப்னுல்‌ கைஸரானி (ரஹ்‌), (தத்கிரதுல்‌ ஹுபாழ்‌ ப:137)

அபூபக்ர்‌ இப்னுல்‌ அரபி (ரஹ்‌), (அஷ்காமுல்‌ குர்‌ஆன்‌ 3:86)

இமாம்‌ ஷவ்கானி(ரஹ்‌), (அல்பவாயிதுல்‌ மஜ்மூஆ 349)

அல்‌அல்பானி(ரஹ்‌), (ஸில்ஸிலதுல்‌ அஹாதீத்‌ அல்லபபீபா 2955)

இமாம்‌ திர்மிதி (ரஹ்‌), (அஸ்ஸானன்‌ ஹ.இல: 3723)

இமாம்‌ இப்னு தைமியா (ரஹ்‌), (மஜ்மூ௨. பதாவா 4: 410-411)

இவ்வாறு பல அறிஞர்களும்‌ இதை ஏற்றுக்கொள்ள முடியாத தரத்தில்‌ அமைந்த பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்தி எனக்குறிப்பிட்டுள்ளனர்‌. எனவே, இதை ஆதாரமாகக்‌ கொள்ள முடியாது. இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதனால்‌ இன்னொரு சிக்கலும்‌ உருவாகும்‌. ஜிப்ரீல்‌ (அலை) அவர்கள்‌ எப்படி நபி அவர்களுக்கு செய்திகளைச்‌ சொல்லுமாறு அனுப்பப்பட்டாரோ அது போன்று நபியவர்கள்‌ அலி(ரலி) அவர்களுக்கு செய்திகளைச்‌ சொல்வதற்காக அனுப்பப்பட்டார்கள்‌. அலி (ரலி) அவர்களே மக்களுக்கு செய்திகளைச்‌ சொல்லும்‌, இஸ்லாத்தை எத்திவைக்கும்‌ பெறுப்புக்‌குரியவர்‌ என்றாகிவிடும்‌ இது மிகப்‌ பெரும்‌ அபத்தமாகும்‌.

அல்லாஹ்‌ நம்‌ அனைவரையும்‌ பாதுகாப்பானாக.



03. ஹதீஸ்‌ ஸபீனதுந்நஜா:

“என்னுடைய குடும்பத்திற்கு உங்கள்‌ மத்தியில்‌ உள்ள உதாரணம்‌ நூஹ்‌ நபி அவர்களின்‌ கப்பலுக்கு ஒப்பானதாகும்‌ அதில்‌ யார்‌ ஏறினாரோ அவர்‌ வெற்றி பெற்றார்‌ யார்‌ ஏறவில்லையோ அவர்‌ அழிந்துபோனார்‌.' (முஸ்தத்ரக்‌ அலஸ்ஸஹீஹைன்‌, இமாம்‌ ஹாகிம்‌ பாகம்‌:2 பக்கம்‌:373.)

இந்த செய்தியும்‌ மிகுந்த பலவீனமான செய்தியாகும்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ்கலை அறிஞர்கள்‌ எவரும்‌ இதை நம்பகமானது என்று சொல்லவில்லை, இட்டுக்கட்டுபவர்கள்‌, பொய்யர்கள்‌ என்று விமர்சிக்கப்பட்ட பல ஷீஆ அறிஞர்கள்‌ இதன்‌ அறிவிப்பாளர்‌ வரிசையில்‌ இடம்பெற்றுள்ளனர்‌.

எனவே, அஹ்லுல்‌ பைத்தையே பின்பற்ற வேண்டும்‌ என்ற ஷீஆக்களின்‌ வாதம்‌ தவறானதாகும்‌ என்பதைக்‌ கண்டோம்‌. அல்‌-குர்‌ஆனையும்‌, அஸ்ஸுன்னாவையுமே பின்பற்ற வேண்டும்‌ என்பதை அல்லாஹ்‌ அல்குர்‌ஆனின்‌ ஏராளமான இடங்களிலே குறிப்பிடுகின்றான்‌ உதாரணமாக: 

அல்‌ அஹ்ஸாப்‌:21,36,

அந்நிஸா:80, அந்நூர்‌:54,63, அத்தவ்பா:63, அல்ஹுஜுராத்‌:02,

அல்ஹஷர்‌:07 போன்ற வசனங்களைக்‌ குறிப்பிட முடியும்‌. 

இவை தவிர நபி(ஸல்) அவர்களைத்தான்‌ பின்பற்ற வேண்டும்‌ என்பதை அல்குர்‌ஆன்‌ 40க்கும்‌ அதிகமான இடங்களில்‌ குறிப்பிடுகின்றது என்பது இஸ்லாமிய அறிஞர்களின்‌ கருத்தாகும்‌. நபி (ஸல்) அவர்களும்‌ பல இடங்களில்‌ தனது வழிமுறையைப்‌ பின்பற்றுமாறு கட்டளையிட்டார்கள்‌.

இமாம்‌ ஷாபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ சொல்கிறார்கள்‌: “யாருக்கு நபியவர்களின்‌ வழிமுறை தெளிவாகத்‌ தெரிந்து விட்டதோ அவர்‌ எவருடைய கருத்துக்காகவும்‌ அதை விடுவது ஹராமாகும்‌ என்பதில்‌ முஸ்லிம்கள்‌ எல்லோரும்‌ ஏகோபித்த முடிவில்‌ உள்ளார்கள்‌ (இஜ்மா...) ” (இஃலாமுல்‌ மூகியீன்‌, இமாம்‌ இப்னுல்‌ கைய்யிம்‌, 2/282)

அலி (ஸல்) அவர்கள்‌ தொடக்கம்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ வந்த எந்தவொரு அறிஞரும்‌ அல்குர்‌ஆனோடு சேர்த்து அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றுமாறும்‌ ஸுன்னாவை விட்டுவிடுமாறும்‌ சொன்னதில்லை. ஸுன்னாவை விட்டு விட்டு நடைமுறைச்‌ சாத்தியமான ஒரு இஸ்லாத்தை கொண்டுவரவே முடியாது.

எனவே, ஷீஆக்களின்‌ இக்கொள்கையானது இஸ்லாத்தை முற்றாக நிராகரித்து விடுவதற்கான உபாயமே அன்றி வேறில்லை.

அஹ்லுல்‌ பைத்தைத்தான்‌ பின்பற்ற வேண்டும்‌ என்பதற்கு ஷீஆக்கள்‌ சொல்லும்‌ அடுத்த ஆதாரம்‌ அஹ்லுல்‌ பைத்தினரை அல்லாஹ்‌ பரிசுத்தப்படுத்திவிட்டான்‌ எனவே, மற்றவர்களை விடவும்‌ பரிசுத்தப்படுத்தப்பட்டவர்களைப்‌ பின்பற்றுவதே மிகவும்‌ ஏற்றமானது என்று வாதிடுகின்றனர்‌. இந்த வாதமும்‌ முந்தியதைப்‌ போல ஷீஆக்களின்‌ அறிவீனத்தையும்‌ குர்‌ஆன்‌ ஸுன்னாவை அவர்கள்‌ படிக்கவில்லை என்பதையும்‌ நிரூபிக்கும்‌ ஒன்றாகும்‌.



அஹ்லுல்‌ பைத்தே பரிசுத்தமானவர்கள்‌:

அல்லாஹ்‌ சுத்தப்படுத்தியதாக அல்குர்‌ஆனில்‌ அஹ்லுல்‌ பைத்தினரை மாத்திரம்‌ குறிப்பிடவில்லை அவர்கள்‌ அல்லாத பலரையும்‌ குறிப்பிட்டுள்ளான்‌. தூய்மைப்படுத்தப்படுவதால்‌ அல்லது அல்லாஹ்‌ தூய்மையாக்கியதால்‌ பின்பற்ற வேண்டும்‌ என்றால்‌ அஹ்லுல்‌ பைத்தினரை விடவும்‌ அதிகமான ஸஹாபாக்கள்‌ ஏனைய முஃமீன்கள்‌ அல்லாஹ்வால்‌ தூய்மைப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்‌. எனவே, அவர்களையும்‌ பின்பற்றுவது கடமையாகிவிடும்‌.

01. ஸகாத்‌ கொடுப்பவர்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்டவர்கள்‌:

“அவர்களது சொத்திலிருந்து ஸகாத்தைப்‌ பெற்று அவர்களைத்‌ தூய்மைப்படுத்துவாயாக சுத்தப்படுத்துவாயாக.” (அத்தவ்பா:103)

இந்த வசனத்தில்‌ ஸகாத்‌ கொடுப்பவர்கள்‌ அனைவரும்‌ தூய்மைப்படுத்தப்பட்டவர்கள்‌ என்று சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறு விளங்காவிட்டாலும்‌ குறைந்தது நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்‌ ஏவுவதனால்‌ நபியவர்கள்‌ யாரிடமெல்லாம்‌ ஸகாத்தைப்‌ பெற்றார்களோ அவர்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்டவர்கள்‌ என்று குறிப்பிடலாம்‌.

எனவே, ஷீஆக்களின்‌ வாதப்படி நபியவர்கள்‌ யாரிடமெல்லாம்‌ ஸகாத்‌ பெற்றார்களோ அவர்கள்‌ அனைவரையும்‌ பின்பற்றுவது கடமையாகும்‌.

02. தொழுகைக்காக முறையான அடிப்படையில்‌ வுழு செய்பவர்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்டவர்கள்‌:

“அல்லாஹ்‌ உங்களை வருத்தக்கூடிய எந்த சிரமத்தையும்‌ கொடுக்க விரும்பவில்லை ஆனால்‌, அவன்‌ உங்களைத்‌ தூய்மைப்படுத்தவும்‌, நீங்கள்‌ அவனுக்கு நன்றி செலுத்தவும்‌ தனது அருட்கொடையை உங்கள்‌ மீது முழுமையாக்க விரும்புகிறான்‌.” (அல்மாயிதா: 06)

இந்த வசனத்தின்‌ ஆரம்பத்தில்‌ முறையான அடிப்படையில்‌ தொழுகைக்காக சுத்தம்‌ செய்வது பற்றி அல்லாஹ்‌ குறிப்பிடுகின்றான்‌.

அவ்வாறு செய்பவர்களுக்கு பரிசாக அவர்களைத்‌ தூய்மைப்‌படுத்துவதையும்‌ தன்‌ அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்குவதையும்‌ குறிப்பிடுகின்றான்‌.

எனவே, ஷீஆக்களின்‌ வாதப்படி முறையான அடிப்படையில்‌ வுழூ செய்து கடமைகளை நிறைவேற்றுவோர்‌ தூய்மையானவர்களாக இருப்பதனால்‌ அவர்களைப்‌ பின்பற்றுவதும்‌ கடமையாகும்‌.

03. பத்ருப்போரில்‌ கலந்து கொண்ட ஸஹாபாக்கள்‌:

“நீங்கள்‌ அமைதியடைவதற்காக அவன்‌ சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்‌. இன்னும்‌ உங்களை அதன்‌ மூலம்‌ தூய்மைப்படுத்துவதற்காகவும்‌, ஷைத்தானின்‌ தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும்‌ உங்கள்‌ இருதயங்களைப்‌ பலப்படுத்தி உங்கள்‌ பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும்‌ அவன்‌ உங்கள்‌ மீது வானிலிருந்து மழை பொழியச்‌ செய்தான்‌.” அல்‌அன்பால்‌: 11

இங்கே, பத்ருப்போரில்‌ கலந்துகொண்ட 300க்கும்‌ அதிகமான ஸஹாபாக்கள்‌ அல்லாஹ்வால்‌ தூய்மைப்படுத்தப்பட்டவர்கள்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நபியவர்கள்‌ பத்ருப்போரில்‌ கலந்துகொண்டவர்களின்‌ அனைத்துப்‌ பாவங்களையும்‌ அல்லாஹ்‌ மன்னித்துவிட்டதாகக்‌ குறிப்பிடுகிறார்கள்‌.” (பார்க்க: புஹாரி. ஹ.இல: 6540, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌. ஹ.இல: 2494)

எனவே, தூய்மைப்படுத்தப்பட்டவர்களையே பின்பற்ற வேண்டும்‌ என்றிருந்தால்‌ பத்ரில்‌ கலந்துகொண்ட அனைத்து ஸஹாபாக்களும்‌ பின்பற்றப்படுவதற்கு தகுதியானவர்களே..



ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொன்றவர்கள்‌ யார்‌?

கிறிஸ்தவர்கள்‌ தங்கள்‌ கொள்கையினை வளர்க்க இயேசு சிலுவையில்‌ அறையப்பட்ட வரலாற்றைச்‌ சொல்லி கண்ணீர்‌ வர வைத்து அனுதாப அலையை உருவாக்கிக்‌ கொள்வதன்‌ மூலம்‌ தங்கள்‌ கொள்கையினை வளர்ப்பதைப்போல அவர்களின்‌ சகோதரர்களான ஷீஆக்கள்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்கள்‌ கர்பலாவில்‌ கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக்‌ குறிப்பிட்டே தங்களின்‌ கொள்கையினை வளர்க்கின்றனர்‌, அதுபோன்று அதை வைத்து அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு எதிராக ஷீஆக்களைத்‌ திரட்டுகின்றனர்‌.

ஓவ்வொரு மாதமும்‌ முஹர்ரம்‌ பத்தாம்‌ நாள்‌ என்பது முஸ்லிம்களிடம்‌ சந்தோசத்திற்குரிய நாளாக நபியவர்கள்‌ அடையாளப்படுத்தினார்கள் அதில்‌ நோன்பு நோற்குமாறும்‌ கட்டளையிட்டார்கள்‌. ஆனால்‌ அந்த நாளில்‌ ஹுஸைன் (ரலி) ‌ அவர்கள்‌ கொலை செய்யப்பட்டார்கள்‌ என்பதைக்‌ காரணம்‌ காட்டி நபியவர்களின்‌ ஸுன்னாவை மறுத்து அதில்‌ உண்டுகளிக்கும்‌ ஷீஆக்கள்‌ ஹுஸைன்‌ (ரலி) கஷ்டங்களை அனுபவித்ததைப்‌ போன்று நாமும்‌ கட்டாயம்‌ அனுபவிக்கவேண்டும்‌ என்ற ஒரு கொள்கையை உருவாக்கிக்‌ கொண்டு தங்களை கீறிக்கிழித்து இஸ்லாம்‌ தடைசெய்த விடயங்களில்‌ ஈடுபடுவது உலகறிந்த விடயமாகும்‌.

முஹர்ரம்‌ பத்தாம்‌ நாள்‌ என்பது முஸ்லிம்களுக்கு மத்தியில்‌ குரோதத்தையும்‌ விரோதத்தையும்‌ விதைக்கவேண்டும்‌ என்ற ஷீஆக்களின்‌ இலட்சியத்தை நோக்கிய நகர்வில்‌ முக்கியமான நாளாகும்‌. இதனால்‌ இந்த நாளில்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினருக்கு எதிராக ஷீஆக்களைத்‌ தூண்டிவிடுவதும்‌ அவர்கள்‌ விடயத்தில்‌ வெறுப்புணர்வை உருவாக்குவதும்‌ கட்சிதமாகச்‌ செய்யப்படும்‌ ஒரு காரியமாகும்‌. உமைய்யா, அப்பாஸிய ஆட்சியாளர்கள்‌ மற்றும்‌ அவர்களை தங்களின்‌ தலைவர்களாகக்‌ கொண்டுள்ள முஸ்லிம்கள்‌ அனைவரையும்‌ தங்களின்‌ எதிரிகளாக ஷீஆக்கள்‌ சித்தரிக்கின்றனர்‌. 

இத்தனைக்கும்‌ இவ்வாறு அநியாயமான முறையில்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்கள்‌ மாத்திரம்‌ மரணிக்கவில்லை பல அஹ்லுல்பைத்தினர்‌, நபிமார்கள்‌, ஸஹாபாக்கள்‌ மரணித்துள்ளனர்‌. ஹுஸைன் (ரலி)‌ அவர்கள்‌ மரணித்து ஆயிரம்‌ ஆண்டுகள்‌ சென்ற பின்பு அதை இன்றும்‌ வைரலாக்கும்‌ ஷீஆக்களின நோக்கம்‌ இதுதான்‌.

ஆனால்‌, உண்மையில்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்தவர்கள்‌ ஷீஆக்கள்தான்‌ என்பது பலரும்‌ அறிந்திடாத விடயமாகும்‌ அல்லது திட்டமிட்டு மறைக்கப்படும்‌ ஒன்றாகும்‌. ஷீஆ அறிஞர்களும்‌ இதை ஏற்றுக்கொள்கின்றனர்‌. ஒருவரை தாங்களே கொலை செய்துவிட்டு அதை மற்றவரின்‌ பெயரில்‌ போட்டு அதற்காக அவரை பழிவாங்கும்‌ கைங்கரியத்தை ஷீஆக்கள்‌ தற்போது செய்துவருகின்றனர்‌.



பின்வரும்‌ காரணங்களினால்‌ ஷீஆக்கள்தான்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்தார்கள்‌ என்று சொல்ல முடியும்‌.

01. ஷீஆ அறிஞர்களின்‌ சாட்சியங்கள்‌:

ஷீஆ அறிஞர்களே தங்களின்‌ நூல்களில்‌ ஹுஸைன்‌(ரலி) அவர்களைக்‌ கொலை செய்தது ஷீஆக்கள்தான்‌ என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்‌.

முர்தழா முதஹ்ஹரி (ஷீஆக்களின்‌ முக்கியமான அறிஞர்களில்‌ ஒருவர்‌, இவரது ஒரு நூல்‌ “நல்லோர்‌ கதைகள்‌: எனும்‌ தலைப்பில்‌ தமிழ்‌ மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை ஷீஆக்களால்‌ பகிரப்பட்டது.) : “நிச்சயமாக கூபாவாசிகள்‌ ஷீஆக்களாக இருந்தார்கள்‌ என்பதில்‌ எந்த சந்தேகமும்‌ இல்லை. மேலும்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்தவர்களும்‌ அவரது ஷீஆக்களே.” (அல்மல்ஹமா அல்‌ ஹுஸைனிய்யா பா:1 ப:129 3ம்‌ பதிப்பு 1992, இஸ்லாமிய கற்கைகளுக்கான மையம்‌, கும்‌, ஈரான்‌)

02. ஹஸன்‌ ‌(ரலி) அவர்களைக்‌ கொலை செய்ய முயற்சித்தமை:

ஹுஸைன்‌ ‌(ரலி) அவர்களுக்கு முன்னர்‌ ஹஸன்‌ ‌(ரலி) அவர்களையும்‌ கொலை செய்துவிடுவதற்கு ஷீஆக்கள்‌ முயற்சித்தார்கள்‌ இதுவும்‌ ஷீஆக்கள்தான்‌ ஹுஸைன்‌ ‌(ரலி) யைக்‌ கொலை செய்தார்கள்‌ என்பதை உறுதிப்படுத்தும்‌ இன்னுமொரு சான்றாகும்‌.

ஹஸன்‌ அவர்களை அவரது ஷீஆக்கள்‌ என்போர்‌ குத்தியபோது சொன்னார்கள்‌: “அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக இவர்களை விட முஆவியா எனக்கு சிறந்தவர்கள்‌ என்று கருதுகின்றேன்‌. இவர்கள்‌ என்‌ நேசர்கள்‌ என்று சொல்கிறார்கள்‌ (ஆனால்‌) என்னைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்‌, என்‌ பொருட்களை கொள்ளையடித்தார்கள்‌, என்‌ சொத்தை திருடினர்‌. அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக முஆவியாவுடன்‌ என்னைப் பாதுகாப்பதோடு என்‌ குடும்பத்தையும்‌ பாதுகாக்கும்‌ ஒரு ஒப்பந்ததை செய்துகொண்டு அவருடன்‌ சென்றுவிடுவது என்னையும்‌ என்குடும்பத்தை அஹ்லுல்பைத்தையும்‌ இவர்கள்‌ கொன்றுவிடுவதைவிடவும்‌ சிறந்ததாகும்‌.'” (அல்‌இஹ்திஜாஜ்‌ பா2, ப:9 தப்ரஸீக்குரியது, வெளியீடு: மன்சூராதிஸ்ஸரீப்‌ அர்ரழி)

03. மக்காவில்‌ இருந்த ஹுஸைன்‌ ‌(ரலி) அவர்களை கூபாவிற்கு வருமாறும்‌ அவருக்கு முழு உதவியையும்‌ செய்வதாகவும்‌ அவருக்கு பைஅத்‌ செய்து அவரை கூபாவுக்கு அழைத்தது அவரது ஷீஆக்களாகும்‌ பின்பு அவரது எதிரிப்படையுடன்‌ சேர்ந்துகொண்டு அவரைக்கொலை செய்து அவரின்‌ தூதுவரையும்‌ கொலை செய்தனர்‌.

கூபாவிற்கு வருமாறும்‌ தாம்‌ உங்களுக்காக எதையும்‌ இழக்கத்தயார்‌ என்றும்‌ வாக்களித்த அவரை வரவழைத்த ஒரு கூட்டம்‌ அவருக்கு உதவிக்குக்‌ கூட எவரும்‌ இல்லாமல்‌ அவரை விட்டுவிட்டு எதிரிகளுடன்‌ சேர்ந்துகொண்டு அவரைக்‌ கொலை செய்தமை இக்குற்றத்தில்‌ அவர்களும்‌ பங்காளிகளே என்பதை எடுத்துக்காட்டுகிறது.

04. நேரடியாக அவரின்‌ கொலையில்‌ தொடர்புடையவர்களும்‌ அவரை கூபாவிற்கு வருமாறு கடிதம்‌ எழுதியவர்களாகும்‌, மேலும்‌ அவர்கள்‌ அனைவருமே ஸிப்பீன்‌, மற்றும்‌ ஜமல்‌ போர்களில்‌ அலி(ரலி) ‌ அவர்களின்‌ தரப்பில்‌ கலந்துகொண்டவர்கள்தான்‌ என்பதை ஷீஆ அறிஞர்களே உறுதிப்படுத்துகின்றனர்‌.

ஹுஸைன்‌ (ரலி) யைக்‌ கொலை செய்தவர்களான ஷம்ர்‌ பின்‌ தில்‌ ஜவ்ஸன்‌, ஸலிப்த்‌ இப்னு ரிப்யி, ஸஹ்ர்‌ பின்‌ கைஸ்‌ அஸ்ஷீயி, கைஸ்‌ இப்னுல்‌ அஸ்‌அத்‌ பின்‌ கைஸ்‌, ஹஜ்ஜார்‌ இப்னுல்‌ அப்ஜர்‌, அம்ர்‌ இப்னுல்‌ ஹஜ்ஜாஜ்‌ அஸ்ஸபீதி, உர்வதுப்னு கைஸ்‌ போன்றோர்‌ அலி (ரலி), ஹுஸைன்‌ (ரலி) க்கு மிக நெருக்கமான ஷீஆக்களாக இருந்தவர்களாகும்‌.” (குறிப்பு: இது தொடர்பான பல அறிவிப்புக்கள்‌ ஷீஆக்களின்‌ முபீத்‌ என்பவருக்குரிய அல்‌ இர்ஷாத்‌ என்ற நூலிலும்‌ ஏனைய ஷீஆ நூல்களிலும்‌ காணப்படுகின்றது.)

05. ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ சாட்சியம்‌:

நாம்‌ மேலே குறிப்பிட்ட பலரின்‌ பெயர்களைச்‌ சொல்லி அழைத்த ஹுஸைன்‌ (ரலி) அவர்கள்‌ ஏற்கனவே நீங்கள்தானே எனக்கு கடிதம்‌ எழுதி இங்கே வர வைத்தீர்கள்‌ என்பதை ஞாபகப்படுத்தி அவர்களைக கண்டித்ததுடன்‌ அவர்களுக்கு எதிராக பிரார்த்தனையும்‌ செய்தார்கள்‌.

இந்தப்போராட்டக்களத்தில்‌ ஹுஸைன் (ரலி) ‌ அவர்கள்‌ ஷீஆக்களுக்கு "எதிராக செய்த பிரார்த்தனை பிரபல்யமானது.

“யா அல்லாஹ்‌ அவர்களை வாழ வைத்தால்‌ அவர்களை பல குழுக்களாக சிதைத்துவிடுவாயாக, அவர்களின்‌ தலைவர்களை ஒருபோதும்‌ பொருந்திக்கொள்ளாதே அவர்கள்‌ எமக்கு உதவி செய்வதாக எம்மை அழைத்தார்கள்‌ பின்பு எங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து எம்மைக்‌ கொலை செய்தார்கள்‌.” (முபீத்‌ என்பவருக்குரிய இர்ஷாத்‌ எனும்‌ நூல்‌ ப:241)

06. அஹ்லுல்‌ பைத்தின்‌ சாட்சியங்கள்‌:

அஹ்லுல்‌ பைத்தில்‌ உள்ள ஏனையவர்களும்‌ ஷீஆக்கள்தான்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்தார்கள்‌ என்பதை உறுதிப்படுத்துவதுடன்‌ அவர்களுக்கு எதிராகப்பிரார்த்தனையும்‌ செய்தனர்‌.

அலியிப்னுல்‌ ஹுஸைன்‌: தன்‌ தந்தையை ஷீஆக்களே கொலை செய்ததாகவும்‌, இன்று அழுது புலம்புவதாகவும்‌, மேலும்‌ அவரது சகோதரரான ஹஸன்‌ அவர்களின்‌ தீர்ப்பையும்‌ ஏற்றுக்கொள்ளாமல்‌ அவரைக்‌ குத்தியதாகவும்‌ குறிப்பிடுகின்றார்‌. (பார்க்க: ஷீஆக்களின்‌ அல்‌ இஹ்திஜாஜ்‌ எனும்‌ நூல்‌ ப:303)

ஸைனப்‌ அஸ்ஸாஹ்ரா: கூபாவாசிகள்‌ சூழ்ச்சி தந்திரம்‌ நிறைந்தவர்கள்‌ மோசடிக்காரர்கள்‌, அநியாயக்காரர்கள்‌ என்றும்‌ குறிப்பிடும்‌ அன்னை அவர்கள்‌ கூபாவாசிகளே அஹ்லுல்‌ பைத்தினரைக் கொன்றதாகவும்‌ அவர்களின்‌ பொருளாதாரத்தை சூறையாடியதுடன்‌ அஹ்லுல்‌ பைத்தினரையும்‌ நிராகரித்ததாக குறிப்பிடுகின்றார்‌. (பார்க்க: ஷீஆக்களின்‌ அல்‌ இஹ்திஜாஜ்‌ எனும்‌ நூல்‌ ப:302)

07. உபைதுல்லாஹ்‌ பின்‌ ஸியாத்‌: 

ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்யுமாறு ஏவியதாகச்‌ சொல்லப்படும்‌ உபைதுல்லாஹ்‌ பின்‌ ஸியாத்‌ பாரசீகனாவான்‌ அவனது தாய்‌ பாரசீகத்தைச்‌ சேர்ந்த ஒரு நெருப்பு வணங்கியாவாள்‌ மேலும்‌ அவன்‌ ஒரு நெருப்பு வணங்கியினாலேயே வளர்க்கப்பட்டான்‌” (பார்க்க: இமாம்‌ இப்னு கதீரின்‌ அல்‌ பிதாயா வந்நிஹாயா என்ற நூலின 8ம்‌ பாகத்தில்‌ இப்னு ஸியாதின்‌ சரிதை) என்று வரலாறு சொல்கின்றது. எனவே, ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ கொலைக்கும்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினருக்கும்‌ எந்தத்‌ தொடர்புமில்லை.

08. யெஸீத்‌ ஏவவில்லை: 

ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்யுமாறு யெஸீத்‌ ஏவியதற்கான எந்த வரலாற்று ஆதாரங்களும்‌ இல்லை. மாறாக ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ மரணச்செய்தி கேட்டு மிகவும்‌ அழுதவராகவே யெஸீத்‌ அவர்கள்‌ இருந்தார்கள்‌.

ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்தவர்களை சபித்ததோடு கைதிகளாக பிடிக்கப்பட்ட அஹ்லுல்‌ பைத்தினரை விடுதலை செய்து அவர்களுக்கு ஆறுதல்‌ கூறினார்கள்‌ அவர்களை பாதுகாப்பாக மதீனாவுக்கு அனுப்பிவைத்தார்கள்‌ அவர்களின்‌ தேவைகளை அரச நிதியிலிருந்து நிறைவேற்றினார்கள்‌.

எனவே, யெஸீத்‌, மற்றும்‌ அவரது தந்தையான முஆவியா (ரலி) அவர்களுக்கு எதிராக ஷீஆக்கள்‌ சொல்லுவது கட்டுக்கதைகளே அன்றி எந்த ஆதாரமும்‌ அதற்கு இல்லை.

09. அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஅத்தினர்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களின்‌ கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை இன்றும்‌ கூட அவர்கள்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களைக்‌ கொலை செய்தவர்களை விமர்சிப்பவர்களாகவே இருக்கின்றனர்‌.



ஷீஆக்களும்‌ நபியின்‌ மனைவியரும்‌

ஒரு மனிதனின்‌ குடும்பத்தில்‌ பிரிக்க முடியாத அங்கம்‌ அவனின்‌ மனைவியாகும்‌, மனைவியர்‌ இல்லாது குடும்பம்‌ என்பது சாத்தியமற்றது. ஆனால்‌ ஷீஆக்களோ நபியின்‌ மனைவியரை அவரின்‌ குடும்பத்தில்‌ சேர்ப்பதில்லை நபியின்‌ மனைவியர்‌ அவரின்‌ குடும்பமில்லை ஆனால்‌ அவர்களின்‌ மூலம்‌ கிடைத்த குழந்தைகள் நபியின்‌ குடும்பம்‌ என்பது ஷீஆக்களின்‌ வாதம்‌. ஒருவர்‌ அதிகம்‌ விரும்பும்‌ அவரது மனைவியை தரக்குறைவாகப்‌ பேசுவது அவரை விமர்சிப்பதற்கு சமமானது என்பது நாம்‌ அனைவரும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ விடயமாகும்‌. நபியவர்கள்‌ தன்‌ மனைவியரை அதிகம்‌ நேசித்தார்கள்‌ ஷீஆக்கள்‌ அவர்களை தப்பான நடத்தையுடையவர்கள்‌ என்று குறிப்பிடுகின்றனர்‌. அதிலும்‌ நபியவர்கள்‌ அதிகம்‌ நேசித்த ஆயிஷா (ரலி) அவர்களை அதிகமாக விமர்சிக்கின்றனர்‌. இதனால்‌ ஷீஆக்களிடம்‌ ஆயிஷா எனும்‌ பெயர்‌ கூட வெறுப்புக்குரியதாகவே கருதப்படுகின்றது. 

ஆயிஷா, ஹப்ஸா எனும்‌ பெயர்களைக்கொண்ட ஷீஆக்களை நாம்‌ காண முடியாது, அப்பெயர்களை தங்களின்‌ கால்நடைகளுக்கு சூட்டுவதன்‌ மூலம்‌ ஷீஆக்கள்‌ சந்தோசப்படுகிறார்கள்‌ அப்பெயர்கள்‌ கூறப்பட்டவுடன்‌ அவர்களுக்காக அல்லாஹ்விடம்‌ சாபமிடுவதுடன்‌ அவர்களிலிருந்து ஒதுங்குவதாக உறுதி கூறுகின்றனர்‌.

எனவே, இஸ்லாத்தை விட்டும்‌ ஒருவரை வெளியேற்றிவிடக்கூடிய ஷீஆக்களின்‌ இக்கொள்கை பற்றி அவர்களது நூல்களில்‌ வந்துள்ள அறிவிப்புக்கள்‌ சிலவற்றை அவதானிப்போம்‌.

ஷீஆக்களின்‌ முக்கிய அறிஞரான முஹம்மத்‌ ஹுஸைன்‌ ஸீராஸி அல்‌ கும்மி அவரது நூலில்‌ சொல்கிறார்‌ “ஆயிஷா காபிராவார்‌, நரக வாதியாவார்‌... யாரெல்லாம்‌ ஷீஆக்கொள்கையை ஏற்றுக்‌ கொண்டார்களோ அவர்கள்‌ அனைவரும்‌ ஆயிஷா நரகவாதி என்றும்‌ சாபத்திற்குரியவர்‌ என்றும்‌ சொல்கின்றனர்‌.'” (அல்‌ அர்பான்‌ பீ இமாமதில்‌ அத்ஹார்‌, முஹம்மத்‌ ஹுஸைன்‌ ஸஸீராஸி அல்‌ கும்மி, முதலாம்‌ பதிப்பு ஹி: 1418, மத்பஅதுல்‌ அமீர்‌, கும்‌, ஈரான்‌, பக்கம்‌: 615)

“அபூபக்ர்‌, உமர்‌, உஸ்மான்‌, முஆவியா ஆகிய நான்கு ஆண்கள்‌, ஆயிஷா, ஹப்ஸா, ஹிந்த்‌, உம்முல்‌ ஹகம்‌ ஆகிய நான்கு பெண்களை விட்டும்‌ அவர்களை பின்பற்றியவர்கள்‌ நேசர்களை விட்டும்‌ நீங்குவது ஷீஆக்களின்‌ கடமையாகும்‌ அவர்களே பூமியில்‌ மிகவும்‌ மோசமான படைப்பாகும்‌, அவர்களை விட்டும்‌ நீங்காமல்‌ ஈமான்‌ கொள்ள முடியாது.” (ஸக்குல்‌ யகீன்‌ (பேசியன்‌ மொழியில்‌, முஹம்மத்‌ பாகிர்‌ அல்‌ மஜ்லிஸி, பக்கம்‌:519, அரபியில்‌ fnoor இணையம்‌ 2017.04.12 http://www.fnoor.com/ main/articles.aspx?article_no=12250#.WO7mX0WGPDd)

“பாதிமாவுக்காக பலிதீர்க்கும்‌ முகமாக எங்கள்‌ மஹ்தி வந்தால்‌ ஆயிஷாவை கப்ரில்‌ இருந்து எழுப்புவார்‌ அவருக்கு ஹத்தும்‌ அடிப்பார்‌.” ஸக்குல்‌ யகீன்‌ (பேசியன்‌ மொழியில்‌, முஹம்மத்‌ பாகிர்‌ அல்‌ மஜ்லிஸி, பக்கம்‌:378, அரபியில்‌ fnoor இணையம்‌ 2017.04.12 http://www.fnoor.com/ main/articles.aspx?article_no=12250#.WO7mX0WGPDd

“ஆயிஷா, ஹப்ஸா அவர்கள்‌ இருவரின்‌ தந்‌தை மீதும்‌ சாபம்‌ உண்டாவதாக அவர்கள்‌ இருவரின்‌ தந்‌தை மீதும்‌ சாபம்‌ உண்டாவதாக அவர்கள்‌ நபியவர்களை நஞ்சூட்டிக்கொலை செய்தார்கள்‌.” (ஹயாதுல்‌ குலூப்‌, முஹம்மத்‌ பாகிர்‌ அல்‌ மஜ்லிஸி, பாகம்‌:02, பக்கம்‌:700)

“ஆயிஷா தப்பான வழியில்‌ சேகரித்த பணத்தில்‌ 40 தீனார்களை அலியின்‌ எதிரிகளுக்கு பகிர்ந்தளித்தார்” (மஷாரிகு அன்வாரில்‌ யகீன்‌, ரஜப்‌ அல்‌ புர்ஸி, பத்தாம்‌ பதிப்பு, பெய்ரூத்‌ லெபனான்‌, பக்கம்‌:86)

“ஜமல்‌ போரின்‌ போது ஆயிஷா தல்ஹாவை திருமணம்‌ செய்திருந்தார்‌” (தப்ஸீருல்‌ மஜ்லிஸி பாகம்‌:2 பக்கம்‌: 377)

இத்தகைய பெண்களுடன்‌ உறவு வைத்திருந்தமைக்காக நபியவர்களும்‌ நரகத்திற்கு சென்றுதான்‌ சுவர்க்கத்திற்கு வருவார்கள்‌ என்று ஷீஆக்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌.

அஸ்தஃபிருல்லாஹ்‌, அஸ்தஃபிருல்லாஹ்‌, அஸ்தஃபிருல்லாஹ்‌,

லாயிலாஹ இல்லல்லாஹ்‌ முஹம்மதுர்ரஸுலுல்லவில்லாஹ்‌.

அல்லாஹ்‌ எம்மனைவரையும்‌ பாதுகாப்பானாக. 

இத்தகைய விடயங்களை வாசிக்கும்‌ போது உண்மையில்‌ மனதிற்கு மிகவும்‌ கஸ்டமாக இருக்கிறது அனால்‌ அவ்லியாக்களைப்போன்று நடிக்கும்‌ வேடதாரிகளான ஷீஆக்களின்‌ இஸ்லாத்திற்கு எதிராக கருத்துக்களை தெளிவுபடுத்த இவைகளை வெளிக்கொணருவதைத்‌ தவிர வேறு வழியில்லை என்று நினைக்கின்றேன்‌.

ஆயிஷா(ரலி)‌ அவர்களின்‌ சிறப்பு எங்கள்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும ஆழமாகப்பதிந்துள்ளது, ஒருவரிடம்‌ ஈமான்‌ உள்ளது என்பதற்கான அடையாளமாகவும்‌ அது உள்ளது. ஆயிஷா (ரலி)‌‌, நபியவர்களின்‌ ஏனைய மனைவியர்கள்‌ விடயத்தில்‌ நாம்‌ இங்கே குறிப்பிட்டிருப்பது ஷீஆக்கள்‌ சொல்வதில்‌ நூற்றில்‌ ஒன்றுதான்‌ இது தவிரவும்‌ ஏராளமான அசிங்கங்களை நமது நபியின்‌ மனைவியர்‌ நம்‌ தாய்மார்கள்‌ விடயத்தில்‌ ஷீஆக்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

நிச்சயமாக நபியவர்களின்‌ மனைவியர்‌ விடயத்தில்‌ இத்தகைய கருத்துக்களை சொல்பவர்கள்‌ மதம்‌ மாறியவர்கள்‌ காபிர்கள்‌ என்பதில்‌ இஸ்லாமிய அறிஞர்களிடம்‌ கருத்து முரண்பாடு இல்லை. நபியவர்களுக்கு மிகவும்‌ விருப்பதிற்குரிய பெண்ணாக ஆயிஷா (ரலி)‌ ‌ அவர்கள்‌ இருந்தார்கள்‌.” (பத்ஹுல்‌ பாரி, இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌ அஸ்கலானி, தாருர்ரய்யான்‌ 1986, ஹ.இல:4100)

நபியவர்கள்‌ திருமணம்‌ செய்தவர்களில்‌ குமரியாக இருந்த ஒரே ஒருவர்‌ ஆயிஷா (ரலி)‌ அவர்கள்‌ மாத்திரமே, நபியவர்கள் மனைவியர்களில்‌ ஆயிஷா (ரலி)‌ அவர்களுடன்‌ இருக்கும்போதே அவர்களுக்கு வஹி அருளப்பட்டிருக்கிறது, அந்நூர்‌ என்ற அத்தியாயத்தின்‌ பல வசனங்களில்‌ அல்லாஹ்‌ அவரை பத்தினி என்று புகழ்வதுடன்‌ அவரை தப்பாகப்‌ பேசியவர்களை கடமையாகக்‌ கண்டிக்கிறான்‌, நபியவர்களின்‌ மனைவியர்‌ முஃமீன்களின்‌ அன்னையர்கள்‌ அவர்களுடன்‌ பேசும்போதும்‌ திரைக்குப்பின்னால்‌ நின்று பேசுமாறும்‌ அவர்களுடன்‌ பேச்சில்‌ கூட ஒழுக்கம்‌ பேணுமாறும் அல்குர்‌ஆன்‌ கட்டளையிடுகிறது. நபியவர்கள்‌ இவ்வுலகை விட்டுப்பிரியும்‌ போது தன்‌ அன்பு மனைவி ஆயிஷாவின்‌ மடியில்தான்‌ அவரது தலையை வைத்திருந்தார்கள்‌ அவரின்‌ எச்சில்‌ பட்ட மிஸ்வாக்கினால்‌ தன்‌ பற்களை சுத்தம்‌ செய்திருந்தார்கள்‌.

ஆனால்‌, ஷீஆக்களோ அல்லாஹ்வையும்‌ அவன்‌ தூதரையும்‌ மதிக்காததன்‌ பயனாகவும்‌ மறுமை மீது நம்பிக்கையில்லாததன்‌ வெளிப்பாடாகவும்‌ நபியவர்களின்‌ மனைவியர்‌ பற்றி இவ்வாறு இகழ்ந்துள்ளார்கள்‌. இத்தகையவர்களுக்கும்‌ இஸ்லாத்திற்கும்‌ எந்தத்‌ தொடர்புமில்லை என்பதை எவராலும்‌ மறுக்க முடியாது.



ஷீஆக்கள்‌ சொல்லும்‌ அஹ்லுல்‌ பைத்

ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரை மிகவும்‌ குறுகிய ஒரு வட்டத்திற்குள்‌ சுருக்கி விட்டனர்‌. நபியவர்கள்‌ அடங்கலாக பாத்திமா (ரலி), அலி (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன்‌ (ரலி) போன்ற ஐவரில்‌ அஹ்லுல்‌ பைத்‌ சுருக்கப்பட்டுவிட்டது, நபியவர்களின்‌ ஏனைய பிள்ளைகளோ, அவர்களின்‌ பிள்ளைகளோ அல்லது மருமக்களோ, ஏனைய உறவுகளோ ஷீஆக்களின்‌ அஹ்லுல்‌ பைத்‌ பட்டியலில்‌ இடம்பிடிக்கவில்லை. இதனால்‌ ஷீஆக்கள்‌ நபியின்‌ அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றவில்லை அலியின்‌ அஹ்லுல்‌ பைத்தையே பின்பற்றுகிறார்கள்‌ என்று சொல்லலாம்‌.

பாத்திமா (ரலி) அவர்களின்‌ பிள்ளைகளில்‌ ஹஸன்‌ (ரலி) அவர்களை ஷீஆக்கள்‌ போற்றுவதில்லை அவர்‌ கொலை செய்யப்பட்ட நாளை துக்க தினமாக அனுஸ்டிப்பதில்லை, அவரைப்‌ பற்றிய தகவல்கள்‌ அவர்களுடைய புத்தகங்களில்‌ அரிதாகவே உள்ளது. எதற்கெடுத்தாலும்‌ யா ஹுஸைன்‌ யா ஹுஸைன்‌ என்றே அழைக்கிறார்கள்‌ அவரை மையப்படுத்தியே தங்கள்‌ பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்‌ ஹுஸைன்‌ (ரலி) அவர்களைப்‌ பற்றிய பேச்சில்லாத ஷீஆக்களின்‌ எந்தவொரு சொற்பொழிவையும்‌ காண முடியாத அளவுக்கு ஹுஸைனே அவர்களிடம்‌ ஹீறோவாக கருதப்படுகிறார்‌.

அதுபோலவே பாத்திமா (ரலி) ‌ அவர்களின்‌ பெண்‌ பிள்ளைகளான ஸைனப்‌, உம்மு குல்தூம்‌ மற்றும்‌ அவர்களின்‌ இருவரின்‌ பிள்ளைகள்‌ அவர்களின்‌ பரம்பரை எதையும்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தில்‌ அடக்குவதில்லை.

அலி (ரலி) அவர்கள்‌ நபியவர்களின்‌ பெரியதந்தை அபூ தாலிபின்‌ மகனாகும்‌. அவரை அஹ்லுல்‌ பைத்தாக ஏற்கும்‌ ஷீஆக்கள்‌ அவரின்‌ சகோதரரை அஹ்லுல்‌ பைத்தில்‌ அடக்கவில்லை. அலி(ரலி) ‌ அவர்களுக்கு பாத்திமாக அவர்கள்‌ மூலம்‌ கிடைத்த நான்கு குழந்தைகள்‌ மாத்திரம்‌ இருக்கவில்லை அபூபக்ர்‌, உமர்‌, உஸ்மான்‌, முஹம்மத்‌, யஹ்யா, அப்பாஸ்‌, ஜஃபர்‌, அப்துல்லாஹ்‌, உபைதுல்லா போன்ற ஏராளமான ஆண்‌ குழந்தைகளையும்‌ பெண்‌ குழந்தைகளையும்‌ அல்லாஹ்‌ அவருக்கு வழங்கியிருந்தான்‌ அவர்களையோ அவர்களது பரம்பரையில்‌ வந்தவர்களையோ ஷீஆக்கள்‌ இமாம்கள்‌ என்று சொல்வதில்லை அவர்களை அஹ்லுல்‌ பைத்தில்‌ அடக்குவதுமில்லை.

ஹுஸைன்‌ (ரலி) அவர்களுக்கும்‌ அதிக குழந்தைகள்‌ இருந்தது எவரைப்பற்றியும்‌ சிறப்பாக ஷீஆக்கள்‌ பேசுவதில்லை அவருக்கு ஸஹர்‌ பானு என்ற அடிமைப்பெண்ணினால்‌ கிடைத்த குழந்தையான அலி என்பவரையே பெரிதுபடுத்தினார்கள்‌ அவரது பரம்பரையில்‌ வந்தவர்களையே தங்களின்‌ இமாம்களாக ஏற்றுக்கொண்டனர்‌.

இவ்வாறு ஷீஆக்களின்‌ அஹ்லுல்‌ பைத்‌ பட்டியலில்‌ பல திருகுதாளங்கள்‌ இருப்பதற்கு அறிஞர்கள்‌ பல காரணங்களைச்‌ சொல்கின்றனர்‌ அதில்‌ முக்கியமானவற்றை அவதானிப்போம்‌.

01. பழிவாங்கும்‌ திட்டம்‌ பலிக்காது.

உண்மையில்‌ நபியவர்களின்‌ குடும்ப உறுப்பினர்கள்‌ அனைவரையும்‌ அஹ்லுல்‌ பைத்தாக ஏற்றுக்கொண்டால்‌ யூதர்கள்‌ என்ன நோக்கத்திற்காக ஷீஆக்‌ கொள்கையை உருவாக்கினார்களோ அது நிறைவேறாது போய்விடும்‌ என்பது முதன்மைக்‌ காரணியாகும்‌. முஸ்லிம்களின்‌ தலைவர்களை அழிப்பதும்‌ முஸ்லிம்களுக்குள்ளேயே பிரச்சினைகளை உருவாக்குவதும்‌ அவர்களை இஸ்லாத்தின்‌ போதனைகளை விட்டும்‌ அப்புறப்படுத்துவதும்‌ ஷீஆக்களின்‌ முக்கிய நோக்கமாகும்‌. இந்நோக்கத்தை நிறைவேற்ற உஸ்மான்‌. அவர்களை அஹ்லுல்‌ பைத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது அவர்‌ நபியவர்களின்‌ இரண்டு மக்களைத்‌ திருமணம்‌ செய்தவராக இருந்தபோதிலும்‌ அவரை ஏற்றுக்கொண்டால்‌ அவரைக்‌ கொலை செய்தவர்களை நிராகரிக்க வேண்டி ஏற்படும்‌ இதனால்‌ முஸ்லிம்களுக்குள்‌ ஒற்றுமையைய உருவாக்க முடியும்‌.

அதுபோல்‌ அபூபக்ர்‌, உமர்‌ இருவரும்‌ நபியவர்களின்‌ மனைவியரின்‌ தந்தையாக இருந்தபோதிலும்‌ அவர்களை ஏற்றுக்‌ கொண்டால்‌ முஸ்லிம்களின்‌ பெரும்பான்மையான விடயங்களில்‌ எந்தக்‌ குறையும்‌ கண்டுபிடிக்க முடியாது. 

அதுபோலவே ஆயிஷா (ரலி) அவர்கள்‌ நபியவர்களின்‌ பாசத்திற்குரிய மனைவியாக இருந்த போதிலும்‌ அவரை அஹ்லுல்‌ பைத்தாக ஏற்றுக்கொண்டால்‌ நபியவர்களின்‌ அதிகமான போதனைகள்‌ பாதுகாக்கப்பட்டதாகிவிடும்‌ (பெண்களில்‌ அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்‌ அவர்‌) அதனால்‌ அவரையும்‌ ஏற்க முடியாது.

எனவே, இவர்களைப்‌ பற்றிய தப்பபிப்பிராபங்களை ஏற்படுத்துவதன்‌ மூலமே முஸ்லிம்‌ சமூகத்திற்குள்‌ தங்கள்‌ இலக்குகளை அடைந்துகொள்வது ஷீஆக்களுக்கு சாத்தியமாகும்‌ என்பதனால்‌ அஹ்லுல்‌ பைத்தை அவ்வாறு சுருக்கிக்‌ கொண்டனர்‌.

02. பாரசீகப்‌ பரம்பரையும்‌ நபியின்‌ பரம்பரையும்‌ ஒன்றிணைதல்‌:

பாரசீகப்‌ பேரரசு உமர்‌ அவர்களின்‌ ஆட்சிக்காலத்தில்‌ வீழ்த்தப்பட்டது அதன்‌ கடைசி மன்னன்‌ எஸ்தஜர்‌ முஸ்லிம்களுடன்‌ நடந்த போரில் கொலை செய்யப்பட்டான்‌ அவனது பெண்கள்‌ சிறைபிடிக்கப்பட்டார்கள் அதில்‌ ஸஹர்‌ பானு என்ற அவனது பிள்ளையும்‌ அடங்கும்‌ அவர்கள அனைவரும்‌ உமர் (ரலி) அவர்களிடம்‌ கொண்டுவரப்பட்டார்கள்‌.

நபியவர்களின்‌ குடும்பத்தினரை அதிகம்‌ நேசித்த உமர்‌ (ரலி) அவர்கள்‌ எஸ்தஜரின்‌ மகள்‌ ஸஹர்‌ பானுவை (அடிமைப்‌ பெண்‌) ஹுஸைன்‌ அவர்களுக்கு வழங்கினார்கள்‌. இவரின்‌ மூலம்‌ ஹுஸைன்‌ அவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு அலி எனப்பெயர்‌ சூட்டினார்கள்‌. இக்குழந்தையையே ஷீஆக்கள்‌ தங்களின்‌ நான்காவது இமாமாக குறிப்பிடுகின்றனர்‌.

பாரசீகப்பகுதிகளில்‌ வாழ்ந்தவர்களே பெரும்பாலும்‌ ஷீஆக்‌ கொள்கையின்‌ போசகர்களாக இருந்தனர்‌. பாரசீகர்கள்‌ எப்போதும்‌ அரேபியர்களை எதிர்ப்பவர்களாகவும்‌ தன்‌ பரம்பரையில்‌ அதிக பற்றுக்கொண்டவர்களாகவும்‌ இருந்தனர்‌. இனவெறி அவர்களிடம்‌ அதிகமாகக்‌ காணப்பட்டது இன்றுவரை பழைய பாரசீகத்தை உருவாக்குவதையே தங்களின்‌ இலட்சியமாகக்‌ கொண்டுள்ளனர்‌, அரபுக்கடலை பாரசீகக்‌ கடலாக பெயர்‌ மாற்றுமாறு சர்வதேச அளவில்‌ வாதிட்டு வருகின்றனர்‌.

பாரசீகர்கள்‌ தங்கள்‌ ஆட்சியாளர்களுக்கு இறைத்துவம்‌ இருக்கிறது என்றும்‌. தங்களின்‌ தேவைகளை நிறைவேற்ற அவர்களால்‌ மாத்திரமே முடியும்‌ என்றும்‌ நம்பி அவர்களுக்கு வணக்கங்களை செலுத்தக்‌ கூடியவர்களாக இருந்தனர்‌. தங்களின்‌ ஆட்சியாளரான எஸ்தஜரின்‌ மகள்‌ நபியவர்களின்‌ பேரன்‌ ஹுஸைனிடம்‌ இருந்தது அவர்களுக்கு பெரும்‌ சந்தோசத்தை ஏற்படுத்தியதுடன்‌ அவரை மதிக்கவும்‌ ஆரம்பித்தனர்‌. இங்குதான்‌ நபியின்‌ பரம்பரை தூய்மையானது எங்கள்‌ மன்னரின்‌ பரம்பரையும்‌ தூய்மையானது இதனால்‌ இரண்டும்‌ சேர்ந்தது என்று கதையளந்தனர்‌. இதன்‌ விளைவாக ஸஹர்‌ பானுவுக்கு கிடைத்த குழந்தையை வைத்து தங்களின்‌ மனதுக்கு ஏற்ற பழைய பாரசீக கொள்கைளை அஹ்லுல்‌ பைத்தின் பெயரில்‌ மாற்றிக்கொண்டார்கள்‌. அத்தோடு ஹுஸைன் (ரலி) அவர்களின்‌ ஏனைய பிள்ளைகள்‌ அனைவரையும்‌ களட்டி விட்டு அலி இப்னுல்‌ ஹூஸைன்‌ அவர்களின்‌ பரம்பரையில்‌ வந்தவர்களையே தங்களின்‌ இமாம்களாக சொன்னார்கள்‌.

இதனால்‌ இஸ்லாமிய அறிஞர்கள்‌ இவர்கள்‌ நபியின்‌ பரம்பரையைப் பின்பற்றவில்லை பாரசீகப்‌ பரம்பரையையே பின்பற்றுகின்றார்கள்‌ என்று குறிப்பிடுகின்றனர்‌.



அஹ்லுல்‌ பைத்தை அசிங்கப்படுத்தும்‌ ஷீஆக்கள்‌.

அஹ்லுல் பைத்தை நேசிப்பதாக ஷீஆக்கள்‌ சொன்னாலும்‌ அவர்கள்‌ சொன்னதாக ஷீஆக்களால்‌ சொல்லப்படும்‌ பொய்கள்‌ அனைத்தும்‌ அஹ்லுல்‌ பைத்தை அசிங்கப்படுத்துவதாகவே உள்ளது. 

இவைகள்‌ பொய்தான்‌ என்று ஷீஆக்கள்‌ ஏற்றுக்கொண்டால் நாம்‌ இங்கு பேச வேண்டியதில்லை ஆனாலும்‌ அதையே தங்களின் மார்க்கமாக அவர்கள்‌ கொண்டிருப்பதனால்‌ ஷீஆக்களால்‌ அஹ்லுல் பைத்‌ இழிவுபடுத்தப்படும்‌ முறைகள்‌ பற்றி இங்கு அவதானிப்போம்‌.

01. அல்லாஹ்வின்‌ அந்தஸ்தை அஹ்லுல்‌ பைத்திற்கு வழங்குதல்‌.

அஹ்லுல்‌ பைத்தை எல்லை மீறிப்புகழும்‌ ஷீஆக்கள்‌ அவர்களுக்கு இறைத்துவம்‌ இருப்பதாக வாதிடுகின்றனர்‌. அல்லாஹ்வுக்கே மட்டும்‌ உரிய மறைவானவை பற்றிய அறிவு, மரணித்தவர்களை உயிர்ப்பிப்பது, கேள்வி கணக்கு கேட்பது, நரகம்‌ சுவர்க்கத்தை பிரித்துக்கொடுப்பது, உணவளிப்பது, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது, பிள்ளை பாக்கியம்‌ கொடுப்பது போன்ற விடயங்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினருக்கு உரியது என்று குறிப்பிடும்‌ ஷீஆக்கள்‌ அல்லாஹ்வுக்கு மாத்திரம்‌ செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளை அஹ்லுல்‌ பைத்தில்‌ வரும்‌ சிலருக்கு செய்கிறார்கள்‌. 

கப்று வணக்கம்‌ என்பது ஷீஆக்களிடம்‌ விமர்சையாக நடக்கும்‌ ஒரு வணக்கமாக இன்றும்‌ காணப்படுகின்றது. (இது தொடர்பாக விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோர்‌ “யார்‌ இந்த ஷீஆக்கள்‌” எனும்‌ நூலை வாசிக்கவும்‌.)

நிச்சயமாக அஹ்லுல்‌ பைத்தில்‌ வந்த எவரும்‌ இதை விரும்பமாட்டார்கள்‌, அவர்கள்‌ உயிர்வாழ்ந்த காலத்தில்‌ அவர்களின்‌ அறிவுக்கு எட்டிய விதத்தில்‌ இவ்வாறு செய்ததை அவர்கள்‌ ஒருபோதும்‌ அங்கீகரிக்கவில்லை, இவ்வாறு செய்பவர்கள்‌ இணைவைப்பவர்கள்‌ என்பதில்‌ தெளிவாக இருந்தார்கள்‌, பிரச்சாரம்‌ செய்தார்கள்‌.

ஆனால்‌ அத்தகைய நல்லடியார்கள்‌ பெயரிலேயே இஸ்லாத்தில்‌ ஆணி வேரை அசைக்கும்‌ விதத்திலான செய்திகளைச்‌ சொல்வதன்‌ மூலம்‌ அவர்களை அசிங்கப்படுத்திவிட்டனர்‌.

02. அஹ்லுல்பைத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம்‌ செய்தல்‌:

ஷீஆக்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சிக்கும்‌ விடயங்களில்‌ ஒன்றுதான்‌ தாங்கள்‌ அஹ்லுல்‌ பைத்தைப்‌ பின்பற்றுவதாக செய்யும்‌ பிரச்சாரமாகும்‌. உண்மையில்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ முஃமீன்களாக இருந்தார்கள்‌ அவர்கள்‌ அல்குர்‌ஆனையும்‌ அஸ்ஸுன்னாவையுமே பின்பற்றினார்கள்‌ அதனால் இவ்வுலகிலும்‌ மறுவுலகிலும்‌ சிறப்புப்‌ பொருந்தியவர்களாகத்‌ திகழ்கின்றனர்‌.

அஹ்லுல்‌ பைத்தினருக்கு மறதி தவறு என்பன ஏற்படுவதில்லை அவர்கள்‌ சிறிய பெரிய பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்‌ அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வருகின்றது எனவே அவர்களையே நாம்‌ பின்பற்றவேண்டும்‌ என்பது ஷீஆக்களின்‌ வாதமாகும்‌. இது அஹ்லுல்‌ பைத்தை அசிங்கப்படுத்தும்‌ வாதமே அன்றி வேறில்லை.

03. அலி(ரலி) ‌நபியவர்களுடனும்‌ அவரது மனைவியுடனும்‌ ஒரே போர்வையில்‌ தூங்கினார்‌. 

அலி (ரலி) அவர்கள்‌ சொல்வதாக ஷீஆக்களின்‌ நூலில்‌ வரும்‌ செய்தியில்‌: “நான்‌ நபியவர்களுடன்‌ பிரயாணம்‌ செய்தேன்‌ அவர்களுக்கு என்னைத்‌ தவிர வேறு உதவியாளர்‌ இருக்கவில்லை அவருடன்‌ ஆயிஷா(ரலி)‌ அவர்களும்‌ இருந்தார்‌ அவரிடம்‌ ஒரே ஒரு போர்வைதான்‌ இருந்தது, அதில்‌ எனக்கும்‌ ஆயிஷாவுக்கும்‌ இடையில்‌ நபியவர்கள்‌ தூங்கினார்கள்‌ அவர்‌ தொழுகைக்கு எழுந்தால்‌ நடுவில்‌ போர்வையை அமத்தி விட்டு எழுவார்கள்”‌. (பிஹாருல்‌ அன்வார்‌, பா:2 ப:40)

நிச்சயமாக இது நமது மனைவியர்கள்‌ விடயத்தில்‌ நாம்‌ செய்ய ஒருபோதும்‌ நினைக்க மாட்டோம்‌ இங்கு நபியவர்கள்‌ தன்‌ மனைவி விடயத்தில்‌ செய்ததாக சொல்லப்பட்டிருப்பதும்‌ அதில்‌ அலி (ரலி) ‌ தூங்கினார்கள்‌ என்றிருப்பதும்‌ நபியவர்களையும்‌ அலி (ரலி)‌ யையும்‌ அவமதிப்பதைத்‌ தவிர வேறு எதுவாகவும்‌ இருக்க முடியாது.

04. முத்‌ஆ:

ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரை அவமதிக்கும்‌ இன்னும்‌ ஒரு முறைதான்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ முத்‌ஆ எனும்‌ விபச்சாரத்தை ஹலாலாக்கியதாகும்‌. சாட்சிகள்‌ ஏதுமற்ற, கட்டுப்பாடுகள்‌ அற்ற, ஒரு சிறுதொகைப்பணத்திற்கு, தான்‌ விரும்பும்‌ நேரத்தில்‌ ஒரு பெண்ணை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்‌ எனும்‌ இந்த முத்‌ஆ முறை முஸ்லிம்‌ பெண்களை மனபங்கப்படுத்த ஷீஆக்கள்‌ கைக்கொள்ளும்‌ ஆயுதமாகும்‌. 

உண்மையில்‌ இது அஹ்லுல்‌ பைத்தை அவமதிப்பதைத்‌ தவிர வேறில்லை. முத்‌ஆ தொடர்பாக அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ ஷீஆக்கள்‌ சொல்லும்‌ சில அறிவிப்புக்களைப்‌ பாருங்கள்‌.

“யார்‌ ஒரு தடவை முத்‌ஆ செய்தானோ அவனது மூன்றில்‌ ஒரு பகுதி நரகத்திலிருந்து விடுதலையாகிறது, இரண்டு தடவை முத்‌ஆ செய்தால்‌ அவனது மூன்றில்‌ இரண்டு பகுதி நரகிலிருந்து விடுதலையாகிறது, மூன்றாவது முறையும்‌ முத்‌ஆ செய்தால்‌ அவன்‌ முழுக்க நரகிலிருந்து விடுதலையாகிறான்‌.'” (தப்ஸீர்‌ மன்ஹஜாஸ்ஸாதிகீன்‌, பக்கம்‌: 492)

“யார்‌ ஒரு தடவை முத்‌ஆ செய்தானோ அவனது அந்தஸ்து ஹுஸைன்‌ (ரலி)  அவர்களுக்குரிய அந்தஸ்தை போன்றதாகும்‌ இரண்டு தடவை முத்‌ஆ செய்தால்‌ ஹஸன் (ரலி) அவர்களின்‌ அந்தஸ்தை அடைகிறான்‌, மூன்று தடவை முத்‌ஆ செய்தால்‌ அலி (ரலி)‌ அவர்களின்‌ அந்தஸ்தை அடைகிறான்‌, நான்கு தடவை முத்‌ஆ செய்தால்‌ நபியின்‌ அந்தஸ்தை அடைகிறான்‌”  (அ.ஃயானுஸ்ஷீஆ, அஸ்ஸெய்யித்‌ முஹ்ஸின்‌ அமீன்‌. ப:159)

நிச்சயமாக இத்தகைய அறிவிப்புக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தை அவமானப்படுத்துவதுதான்‌ என்பதை ரோசமுள்ளவர்‌ எவரும்‌ உணர்ந்துகொள்வார்‌.

“நெருப்பு வணங்கும்‌ பெண்ணுடனும்‌ முத்‌ஆ செய்யலாம்‌” (தஹ்தீபுல்‌ அஹ்காம்‌ பாகம்‌:7, பக்கம்‌:256)

“கெட்டவளுடனும்‌ முத்‌ஆ செய்யலாம்‌” (தஹ்தீபுல்‌ அஹ்காம்‌ பாகம்‌:7, பக்கம்‌:184)

“விபச்சாரிகளுடனும்‌ முத்‌ஆ செய்யலாம்‌” (தஹ்தீபுல்‌ அஹ்காம்‌ பாகம்‌:7, பக்கம்‌:253)

“திருமணம்‌ முடித்தவளாக இருந்தாலும்‌ அவளது கணவனின்‌ அனுமதி தேவையில்லை அவளுடனும்‌ முத்‌ஆ செய்யலாம்‌” (புரூஉல்‌ காபி, அல்குலைனி, பா:5, ப:462)

“நபியவர்களின்‌ குடும்பத்துப்‌ பெண்களுடனும்‌ முத்‌ஆ செய்யலாம்‌” (தஹ்தீபுல்‌ அஹ்காம்‌, பா:7, ப:272)

“ஒரு குமரியுடன்‌ முத்‌ஆ செய்ய அவளது தந்தையின்‌ அனுமதி தேவையில்லை” (தஹ்தீபுல்‌ அஹ்காம்‌, பா:7, ப:254)

“பத்து வயது பூர்த்தியானால்‌ முத்‌ஆ செய்யலாம்‌'” அல்‌ (இஸ்திப்ஸார்‌, அத்தூஸி, பா:3, ப:145)

“எத்தனை பெண்களுடனும்‌ செய்யலாம்‌ அதற்கென்று எந்தக்‌ கட்டுப்பாடும்‌ இல்லை” (அல்‌ இஸ்திப்ஸார்‌, அத்தூஸி, பா:3, ப:147)

லாயிலாஹ இல்லல்லாஹ்‌ இவைகள்தான்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ சொல்லும்‌ விடயங்கள்‌. நிச்சயமாக இந்தக்‌ கூட்டம்‌ அஹ்லுல்‌ பைத்தை நேசிப்பவர்கள்‌ அல்ல அவர்களை அசிங்கப்படுத்துபவர்கள்‌ என்பதற்கு இவைகள்‌ மிகப்பெரும்‌ சான்றுகளாகும்‌.

05. மனைவியைக்‌ கூட்டிக்கொடுத்தல்‌.

அஸ்தஃபிருல்லாஹ்‌ வாசகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்‌ ஷீஆக்களின்‌ உண்மை முகத்தை வெளிக்கொண்டுவரவே இத்தகைய விடயங்களையும்‌ பேசவேண்டியுள்ளது. இந்தவிடயத்தையும்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்‌ சொன்னதாகவே சொல்கின்றனர்‌.” (அல்‌ இஸ்திப்ஸார்‌ பா:3, ப:139)

நீங்களே சொல்லுங்கள்‌ இப்படியானவர்கள்தான்‌ அஹ்லுல்‌ பைத்தினரா? இவ்வாறு அஹ்லுல்‌ பைத்‌ சொன்னதாகச்‌ சொல்பவர்களை அஹ்லுல்‌ பைத்தினை மதிப்பவர்களா?

06.உதவியைப்‌ பெற உடன்‌ போகலாம்‌.

ஒரு பெண்‌ ஒரு ஆணிடம்‌ உதவியை நாடினால்‌ அவன்‌ அவளை அடைந்து கொண்டால்‌ மாத்திரமே அந்த உதவியைச்‌ செய்ய முடியும்‌ என்று கண்டால்‌ அதை அப்பெண்‌ செய்யலாம்‌ இதுவும்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ ஷீஆக்கள்‌ சொல்வதுதான்‌. 

இவர்கள்தான்‌ அஹ்லுல்‌ பைத்தை நேசிக்கின்றார்களாம்‌???

எவ்வளவு கெட்டுவிட்டது நம்‌ காதுகள்‌ பார்த்தீர்களா?

07. பெண்களை பித்தட்டில்‌ புணர்தல்‌.

பெண்களுடன்‌ மணவாழ்வில்‌ ஈடுபடும்‌ ஆண்கள்‌ அதை அல்லாஹ்‌ எவ்வாறு ஏவினானோ அவ்வாறு செய்வதே சிறந்ததாகவும்‌ அல்லாஹ்‌ அவன்‌ தூதரும்‌ தடுத்த விதத்தில்‌ செய்வது தடைசெய்யப்பட்டதாகும்‌.

ஆனால்‌ இங்கே ஷீஆக்கள்‌ அல்லாஹ்‌ அவன்‌ தூதரும்‌ தடுத்த முறையில்‌ பெண்களுடன்‌ குடும்ப வாழ்வில்‌ ஈடுபட முடியும்‌ என்று சொல்கின்றனர்‌. இதை அஹ்லுல்‌ பைத்‌ சொன்னதாகச்‌ சொல்கின்றனர்‌.” (புரூ௨ல்‌ காபி, பா:5, ப:40)

இவைதான்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தை நேசிக்கும்‌ முறை. இவ்வாறுதான்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தை அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்‌. அல்லாஹ்‌ எம்‌ அனைவரையும்‌ இத்தகைய நாசகார சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்‌.



சந்தேகங்களை உருவாக்குவதே ஷீஆக்களின்‌ பணி

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினருக்கு மத்தியில்‌ ஊடுருவும்‌ ஷீஆக்கள்‌ தங்களிடம்‌ உள்ள கொள்கைகளை அவர்களிடம்‌ பிரச்சாரம்‌ செய்வதில்லை மாறாக அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நூல்களில்‌ காணப்படும்‌ பொதுமக்களுக்குத்‌ தெரியாத சில செய்திகளைப்‌ பரப்பி அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ விடயத்தில்‌ தப்பபிப்பிராயத்தை உருவாக்குவதையே தங்களின்‌ முக்கிய இலட்சியமாகக்‌ கொண்டு செயற்படுகின்றனர்‌.

முஸ்லிம்கள்‌ ஏற்றுக்கொள்ளும்‌ அளவுக்கு ஷீஆக்களிடம்‌ எந்தக்கொள்கையும்‌ இல்லை நிச்சயமாக ஷீஆக்கள்‌ தங்கள்‌ கொள்கைகளை தெளிவுபடுத்துவார்களாக இருந்தால்‌ இஸ்லாம்‌ பற்றிய எந்த அறிவும்‌ இல்லாதவர்களும்‌ அவர்களை எதிர்க்கும்‌ நிலை உருவாகும்‌ அதனால்‌, முஸ்லிம்களை முதலில்‌ அவர்களின்‌ கொள்கைகளிலிருந்து தூரமாக்கும்‌ வேலையில்‌ ஈடுபடுகின்றனர்‌.

முஸ்லிம்களை இறை நம்பிக்கைக்கோ, தொழுகைக்கோ முக்கியத்துவம்‌ கொடுக்காதவர்களாகவும்‌ அதில்‌ பற்றில்லாதவர்‌களாகவும்‌ ஆக்கி அவர்களை மனோ இச்சையின்‌ காவலர்களாக மாற்றிவிடுகின்றனர்‌. பிறகு அவர்களின்‌ மூளை ஷீஆக்களிடம்‌ மாட்டிக்கொள்கின்றது பகுத்தறிவற்றதாகவும்‌ மாறிவிடுகின்றது.

இந்துக்களில்‌ பெரும்‌ படித்தவர்களும்‌ பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைக்கு அப்பாற்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்வதைப்‌ போல பகுத்தறிவை இழந்த இம்மனிதர்கள்‌ ஷீஆக்களின்‌ எத்தகைய கொள்கைகளையும்‌ ஜீரணிப்பவர்களாக மாறிவிடுகின்றனர்‌.

இவ்வாறு ஒரு மனிதன்‌ மாற்றம்‌ பெறுவதற்கு நீண்ட காலம்‌ எடுக்கும்‌ இதனாலேயே எல்லா சந்தர்ப்பங்களிலும்‌ பொய்‌ சொல்வதை நன்மை பயக்கூடிய இபாதத்தாக பின்பற்றுகின்றனர்‌. 

அல்லாஹ்‌ எம்மனைவரையும்‌ பாதுகாப்பானாக.

முஸ்லிம்களிடம்‌ தவறான கொள்கைகள்‌ சிந்தனைகள்‌ நுழைந்து விடாமல்‌ பெரும்‌ அரணாக இருப்பவர்கள்‌ ஸஹாபாக்களே அதனால் ஸஹாபாக்கள்‌ மீது தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்‌ ஷீஆக்களால்‌ மிகத்‌ தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதிலும்‌ குறிப்பாக யார்‌ ஸஹாபாக்களில்‌ அதிகம்‌ ஹதீஸ்களை அறிவித்தார்களோ, இஸ்லாத்திற்காக பாடுபட்டார்களோ அவர்கள்‌ பற்றியே அதிக ஐயங்கள்‌ ஷீஆக்களால்‌ தோற்றுவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின்‌ பிரதானமான ஹதீஸ்‌ நூல்களில்‌ வரும்‌ எல்லோருமே புலப்படாத, சரியான மார்க்க அறிவுப்‌ பின்புலம்‌ இல்லாமல்‌ எல்லோராலும்‌ விளங்க முடியாத சில செய்திகளைக்‌ குறிப்பிட்டு எமது அல்குர்‌ஆனையும்‌ அல்ஹதீஸையும்‌ முரண்பாடுடையதாகக்‌ காட்ட முயற்சிக்கின்றனர்‌ இவைகள்‌ மூலம்‌ மனித உள்ளங்களில்‌ சந்தேகம்‌ எனும்‌ நோய்‌ கிழறிவிடப்பட இஸ்லாத்தில்‌ பற்றுறுதி என்பது இல்லாமல்‌ போகிறது.

ஷீஆக்கள்‌ எந்த ஒரு விவாதத்திலும்‌ அவர்களது கொள்கைகள்‌ விவாதப்பொருளாக இருப்பதை விரும்புபவர்கள்‌ அல்ல மற்றவர்களின்‌ கொள்கைகளில்‌ கொள்கைகளில்‌ சந்தேகங்களை உருவாக்குவதையே எல்லா நேரங்களிலும்‌ கடைப்பிடிப்பர்‌. அவர்களிடம்‌ கேட்கப்படும்‌ கேள்விகளுக்கு நேரடியாக பதில்‌ சொல்வதைத்‌ தவிர்த்து அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ ஹதீஸ்‌ நூற்களில்‌ சந்தேகங்களை உருவாக்குவதற்கே அச்சந்தர்ப்பத்தைப்‌ பயன்படுத்திக்கொள்வார்கள்‌.

எனவே, ஷீஆக்களுடன்‌ தொடர்பிலுள்ளவர்களும்‌, அவர்களுடன்‌ பேசுபவர்களும்‌ இந்த நோய்‌ ஏற்படாமல்‌ இருக்க ஷீஆக்களின்‌ பிரச்சார முறைகள்‌ தொடர்பில்‌ தெளிவுடன்‌ இருப்பது அவசியமாகும்‌.



ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைக்தின்‌ செய்திகளைப்‌ பாதுகாக்கவில்லை

அஹ்லுல்‌ பைத்தினை நேசிப்பதாக வேஷம்‌ போடும்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகளைப்‌ பாதுகாக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமுமில்லை ஏனெனில்‌ அஹ்லுல்‌ பைத்தை அவர்கள்‌ பின்பற்றவில்லை அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ மக்களை வழிகெடுப்பதே அவர்களின்‌ நோக்கமாகும்‌.

ஷீஆக்களின்‌ அறிவிப்பாளர்‌ வரிசை என்பது யூதர்கள்‌, கிறிஸ்தவர்களால்‌ நிறைந்துள்ளது அவர்களின்‌ பிரதானமான அறிவிப்பாளர்கள்‌ கூட தங்களின்‌ இமாம்கள்‌ விடயத்தில்‌ பொய்‌ சொன்னார்கள்‌ என்று இமாம்களே விரட்டியதாக ஷீஆக்களின்‌ பிரதான நூல்கள்‌ குறிப்பிடுகின்றது.

அறிவிப்பாளர்‌ வரிசை கூட பின்வந்தவர்களால்‌ தாங்கள்‌ விரும்பிய செய்திகளுக்கு வைக்கப்பட்டது, அதற்கான விதிகள்‌ என்று நாம்‌ சொல்வதெல்லாம்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்‌ கொள்வதற்காகவே என்று ஷீஆ அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்‌.

அலி அவர்களிடமிருந்து குர்‌ஆனைக்‌ கற்று அதை அறிவிப்புச்‌ செய்தவர்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களே. அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ இல்லை என்றால்‌ அல்குர்‌ஆனின்‌ அறிவிப்புக்‌ கூட இருந்திருக்காது.

குர்‌ஆன்‌ மற்றும்‌ ஹதீஸ்களை முறையாகக்‌ கற்றுக்கொள்வதற்கான அறிவிப்பாளர்‌ வரிசைகள்‌ இன்றுவரை அஹ்லுஸ்ஸுன்னாக்களிடம்‌ பேணப்படுவது அவர்களின்‌ தனிச்சிறப்பாகும்‌.

ஷீஆக்களிடம்‌ அல்குர்‌ஆனுக்குக்‌ கூட அறிவிப்பாளர்‌ வரிசையில்லை. அவர்கள்‌ அல்குர்‌ஆனுக்கு முக்கியத்துவம்‌ கொடுப்பவர்களும்‌ அல்ல.

ஷீஆக்களின்‌ பிரதானமான நூல்களில்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ முக்கியஸ்தர்களான அலி, பாதிமா, ஹஸன்‌, ஹுஸைன்‌ அவர்களின்‌ செய்திகள்‌ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே உள்ளன.

எனவே, ஷீஆக்கள்‌ பொய்யுரைப்பவர்கள்‌ அவர்களின்‌ பொய்களை மறைத்துக்கொள்ள ஒரு கேடயமாக அஹ்லுல்‌ பைத்தினரைப்‌ பயன்படுத்திக்கொண்டார்கள்‌. மக்கள்‌ மார்க்கம்‌ பற்றி பெரும்பாலும்‌ தெளிவில்லாமல்‌ இருப்பதால்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ மக்களுக்கு மத்தியில்‌ ஊடுருவுவதும்‌ ஷீஆக்களுக்கு இலகுவாகிவிட்டது.



ஷீஆக்கள்‌ சொல்லும்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகள்‌ குறைவாக இருப்பதற்கான காரணம்‌ என்ன?

அஹ்லுல்‌ பைத்தின்‌ செய்திகள்‌ அதிகமாக ஹதீஸ்‌ நூல்களிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அப்துல்லாஹ்பின்‌ அப்பாஸ்‌ (ரழி) அவர்கள்‌ ஸஹாபாக்களில்‌ அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில ஒருவராவார்‌. ஆனால்‌ ஷீஆக்களின்‌ அஹ்லுல்‌ பைத்‌ என்பது பாதிமா (ரலி), அலி (ரழி) ‌, ஹஸன்‌(ரழி), ஹுஸைன்‌ (ரழி) போன்றவர்களாகும்‌.

இவர்களில்‌ பாதிமா (ரழி) ‌ அவர்கள்‌ நபியவர்கள்‌ மரணித்து 3மாதங்கள்‌ அல்லது 6மாதங்களில்‌ மரணித்துவிட்டார்கள்‌ அதனால்‌ அவர்களால்‌ அதிக ஹதீஸ்களை அறிவிக்க முடியவில்லை. இது பாதிமா‌ (ரழி) அவர்களுக்கு மாத்திரம்‌ உரியதல்ல நபியவர்களின்‌ காலத்தில்‌ மரணித்த நபியவர்களின்‌ பின்பு சில மாதங்களில்‌ மரணித்த எல்லோரின்‌ அறிவிப்புக்களும்‌ மிகவும்‌ குறைவாகவே உள்ளது.

நபியவர்களின்‌ ஆரம்ப காலத்திலிருந்தே நபியவர்களுடன்‌ கூடவே இருந்த அபூபக்ர் (ரழி) அவர்களின்‌ ஹதீஸும்‌ குறைவாகவே உள்ளது. பாதிமா (ரழி) ‌ அவர்கள்‌ உயிர்‌ வாழ்ந்த காலத்தில்‌ அறிவித்த செய்திகள்‌ புஹாரி, முஸ்லிம்‌, முஸ்னதுல்‌ இமாம்‌ அஹ்மத்‌, முஸ்னத்‌ அஷ்ஷாபீ, முஸ்னத்‌ அபீ எஃலா, முஸ்னத்‌ அத்தயாலிஸி போன்ற நூல்களில்‌ பதியப்பட்டுள்ளது.

ஹஸன்‌(ரழி), ஹுஸைன் (ரழி) ‌ இருவரையும்‌ பொருத்தவரை அவர்கள்‌ நபியவர்கள்‌ ஹிஜ்ரத்‌ செய்து முறையே 3,4காம்‌ வருடங்களிலேயே பிறந்தார்கள்‌. நபியவர்கள்‌ மரணிக்கும்போது அவர்களுக்கு 8,7ஆக இருந்தது. அதனால்‌, நபியவர்களிடமிருந்து அதிக செய்திகளை மனனமிடும்‌ வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு நபியவர்கள்‌ கற்றுக்கொடுத்த சீல துஆக்களை அறிவித்துள்ளார்கள்‌. அவை, அஹ்மத்‌, திர்மிதி, நஸாஈ போன்ற நூல்களில்‌ பதியப்பட்டுள்ளது

அலி (ரழி) அவர்களின்‌ அறிவிப்புக்கள்‌ அபூபகர்‌ (ரழி), உமர் (ரழி), உஸ்மான்‌(ரழி) போன்ற பெரும்‌ ஸஹாபாக்களின்‌ அறிவிப்புக்களை விடவும்‌ அதிகமாகவே உள்ளது. பொதுவாக நிருவாகத்‌ துறையில்‌ ஈடுபட்ட ஸஹாபாக்கள்‌ ஹதீஸ்களை அறிவிப்பதில்‌ ஆர்வம்‌ காட்டியது குறைவு அலி (ரழி) ‌ அவர்கள்‌ அவருக்கு முந்திய ஆட்சியாளர்களின்‌ காலத்தில்‌ முக்கிய பொறுப்புக்களை வகித்தார்கள்‌.

அவரது ஆட்சிக்காலம்‌ போராட்டம்‌, உள்நாட்டுப்பிரச்சினைகள்‌ அதிகமிருந்த காலமாக இருந்தமையால்‌ அவரால்‌ மிகவும்‌ அதிகமான செய்திகளை அறிவிக்க முடியாமல்‌ போனது.



ஷீஆக்கள்‌ சொல்லும்‌ 12 இமாம்களையும்‌ நபியவர்கள்‌ அடையாளப்படுத்தினார்களா?

ஷீஆக்களில்‌ தற்காலத்தில்‌ ஆட்பலமும்‌, அதிகாரம்‌, பணம்‌ என்பவற்றைக்‌ கொண்டவர்களாக இயங்கும்‌ ராபிழாக்கள்‌ தங்கள்‌ இமாம்கள்‌ 12 பேர்‌ என்றும்‌ நபியவர்கள்‌ இந்தப்பன்னிரெண்டு பேரையும்‌ வஸிய்யத்துச்‌ செய்தார்கள்‌ அவர்களே உண்மையான ஆட்சியாளர்கள்‌ அவர்களையே நாம்‌ பின்பற்றுகிறோம்‌ என்றும்‌ பிரச்சாரம்‌ செய்கின்றனர்‌. இதற்கு ஒரு ஹதீஸையும்‌ ஆதாரமாகக்‌ குறிப்பிடுகின்றனர்‌ அதன்‌ உண்மை நிலையை இங்கு அவதானிப்போம்‌.

“எனது சமூகத்தில்‌ 12கலீபாக்கள்‌ அல்லது அமீர்கள்‌ தோன்றும்‌ வரை இந்த இஸ்லாம்‌ கண்ணியம்‌ பொருந்தியதாக இருந்துகொண்டே இருக்கும்‌ அவர்கள்‌ அனைவரும்‌ குரைஷிகளாக இருப்பர்‌” (புஹாரி: ஹூ.இல: 7222, முஸ்லிம்‌: ஹ.இல: 1821)

இதுவே, ஷீஆக்கள்‌ தங்கள்‌ கொள்கைக்கு சொல்லும்‌ ஆதாரமாகும்‌. உண்மையில்‌ இந்த ஹதீஸை தங்களின்‌ கொள்கைக்கு ஷீஆக்கள்‌ ஆதாரமாகச்‌ சொல்வது அவர்களின்‌ அவர்களின்‌ முட்டாள்தனத்தைக்‌ எடுத்துக்காட்டுகின்றது. ஏனெனில்‌ இந்த செய்தி அவர்களின்‌ கொள்கைக்கு எதிரானதாகும்‌.

01. 12இமாம்கள்தான்‌ எங்கள்‌ தலைவர்கள்‌ என்பது ஆரம்ப கால ஷீஆக்களிடம்‌ இருந்த கொள்கை அல்ல ஆரம்பகால ஷீஆக்கள்‌ அலி (ரழி) ‌ அவர்களை மாத்திரமே இமாம்‌ என்று சொன்னார்கள்‌ பின்பு ஹஸன்‌ (ரழி)‌, ஹுஸை (ரழி)‌ அவர்களும்‌ சேர்த்துக்கொள்ளப்பட்டனர்‌ இவ்வாறு காலத்திற்கு காலம்‌ ஒரு சிலர்‌ சேர்க்கப்பட்டும்‌ மற்றும்‌ சிலர்‌ கழிக்கப்பட்டும்‌ வந்தனர்‌.

12பேர்‌ என்பது ஷீஆக்களிடம்‌ பிற்பட்ட காலத்தில்‌ உருவானதாகும்‌.

உண்மையில்‌ இந்த ஹதீஸைத்தான்‌ பின்பற்றுகிறார்கள்‌ என்று சொல்வதானால்‌ அவர்களிடம்‌ ஆரம்பத்திலிருந்து இது இருந்திருக்க வேண்டும்‌. எனவே, 12பேர்‌ என்று ஒரு கொள்கையை உருவாக்கிக்‌ கொண்டு அதை மக்களிடம்‌ பிரச்சாரம்‌ செய்வதற்காக இந்த ஹதீஸைப்‌ பயன்படுத்துகிறார்கள்‌ என்பதே உண்மையாகும்‌.

ஹதீஸில்‌ சொல்லப்பட்டதைப்‌ பின்பற்றுவதற்கும்‌ தானாக ஒரு கொள்கையை உருவாக்கிக்‌ கொண்டு குர்‌ஆன்‌ ஹதீஸை அதற்கு ஆதாரமாகக்‌ காட்டுபவருக்கும்‌ இடையில்‌ வேறுபாடு உள்ளது என்பது நாம்‌ அனைவரும்‌ அறிந்ததாகும்‌.

02. ஷீஆக்கள்‌ சொல்லும்‌ அவர்களின்‌ 12ஆவது இமாமும்‌ ஒரு கற்பனைப்‌ பாத்திரமாகும்‌. ஷீஆக்கள்‌ தங்களின்‌ 12ஆவது இமாம்‌ முஹம்மத்‌ இப்னுல்‌ ஹஸன்‌ அல்‌ அஸ்கரி (அல்மஹ்தி) (அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ எதிர்பார்த்திருக்கும்‌ மஹ்தி அல்ல இது ஷிஆக்களின்‌ மஹ்தி அவர்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களைக்‌ கொலை செய்யவே வர இருக்கிறார்‌ என்பது ஷீஆக்களின்‌ நம்பிக்கை) என்று குறிப்பிடுகின்றனர்‌.

ஆனால்‌, ஹஸன்‌ அல்‌ அஸ்கரி என்பவர்‌ குழந்தைகள்‌ இல்லாமல்‌ சிறுவயதிலேயே மரணித்து விட்டார்‌ என்பது வரலாற்று நூல்கள்‌ சொல்லும்‌ உண்மையாகும்‌. இந்த உண்மையை ஷீஆக்களின்‌ பிரதான நூல்களிலும்‌ காணலாம்‌. பிற்பட்ட காலத்தில்‌ ஹஸன்‌ அல்‌ அஸ்கரிக்கு ஒரு குழந்தை கிடைத்ததாகவும்‌ அதை மக்களின்‌ கண்களுக்குப்‌ படாமல்‌ மறைத்து வைத்தாகவும்‌ அவர்‌ தற்போதும்‌ உயிர்‌ வாழ்ந்து கொண்டிருக்கிறார்‌ அல்லாஹ்‌ நாடுகின்றபோது அவர்‌ தோற்றமளிப்பார்‌ என்றும்‌ ஒரு பொய்யை மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கிக்‌ கொண்டார்கள்‌. அவர்‌ 1100ஆண்டுகள் கடந்தும்‌ மக்களின்‌ கண்களுக்குப்‌ படாமல்‌ உயிர்‌ வாழ்கிறார்‌ என்று 60-70க்கும்‌ இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்டிருக்கும்‌ நபியவர்களின்‌ சமூகத்தில்‌ இருந்துகொண்டு பொய்யளக்கிறார்கள்‌

இதனால்‌, ஷீஆக்களின்‌ இமாம்களின்‌ பட்டியல்‌ 11 பேருடன்‌ முற்றுப்பெற்றுவிட்டது 12ஆவது ஒருவர்‌ இருக்கிறார்‌ என்பது மக்களை மடையர்களாக்கும்‌ கற்பனைக்‌ கதையாகும்‌. எனவே, இந்த ஹதீஸ்‌ 12ஆட்சியாளர்கள்‌ பற்றிப்‌ பேசுவதால்‌ ஷீஆக்களுக்கு எதிரானதாகவே உள்ளது.

03. இமாம்கள்‌ 12பேர்தான்‌ என்பதிலும்‌ ஷீஆக்களிடம்‌ ஒருமித்த கருத்து இல்லை அவர்களது மிகுந்த நம்பகமான நூல்களில்‌ 13இமாம்கள்‌ வருவார்கள்‌ என்றும்‌ பதியப்பட்டுள்ளது. ஷீஆக்களின்‌ இந்த வாதம்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களை ஏமாற்றுவதற்காகவே அன்றி வேறில்லை.

04. நபியவர்கள்‌ 12ஆட்‌சியாளர்கள்‌ வருவார்கள்‌ என்று சொன்னார்களே தவிர அவர்கள்‌ யார்‌ யார்‌ என்று எந்தவொரு நம்பகமான ஹதீஸிலும் குறிப்பிடவில்லை. இது ஏனைய நபியவர்களின்‌ முன்னறிவிப்பை ஒத்த செய்திகளாகும்.‌ 

உலகம்‌ அழிவதற்கு முன்னர்‌ கொலைகள்‌ பெருகும்‌ என்று சொன்னார்கள்‌ விபச்சாரம்‌ அதிகரிக்கும்‌ என்றார்கள் இது போன்று பல பெரும்‌ பாவங்களைச்‌ சொன்னார்கள்‌ ஆனால்‌ அதைச்‌ செய்பவர்கள்‌ யார்‌ யார்‌ என்று சொன்னதில்லை. அவ்வாறே இந்த செய்தியும்‌ அமைந்துள்ளது.

நபியவர்கள்‌ அந்த ஆட்சியாளர்களின்‌ பெயர்களைக்‌ குறிப்பிட்டுச்‌ சொல்லாததன்‌ காரணமாகவே, அவர்களைத்‌ தீர்மானிப்பதில்‌ அறிஞர்களிடம்‌ கருத்து முரண்பாடு நிலவுகின்றது. நபியவர்கள்‌ சொல்லியிருப்பின்‌ இத்தகைய கருத்து முரண்பாடுகள்‌ வருவதற்கான வாய்ப்புக்கள்‌ அரிது.

அது போல்‌ யார்‌ யார்‌ இமாம்கள்‌ என்று அடையாளப்படுத்துவதில்‌ ஷீஆக்களிடமும்‌ பலத்த கருத்து முரண்பாடுகள்‌ நிலவுகின்றன அதனால்‌ பல குழுக்களாக அவர்கள்‌ காணப்படுகிறார்கள்‌ ஒவ்வொரு குழுவும்‌ தங்களுக்குப்‌ பிடித்தவர்களை இமாம்‌ என்று சொன்னார்கள அவர்களை ஏற்காதவர்களைக்‌ காபிர்கள்‌ என்று குறிப்பிடுகின்றனர்‌.

ஆனால்‌, ராபிழாக்கள்‌ வலிந்து கட்டிக்கொண்டு இந்த ஹதீஸை தங்களின்‌ இமாம்களைத்தான்‌ இது குறிக்கின்றது என்று குறிப்பிடுகின்றனர்‌.

05. இந்த ஹதீஸில்‌ வரும்‌ 12ஆட்சியாளர்களும்‌ குரைஷிக்‌ குலத்தைச்‌ சேர்ந்தவர்களாக இருப்பார்கள்‌ என்று வந்துள்ளது. ஷீஆக்கள்‌ சொல்லும்‌ 12இமாம்களும்‌ அஹ்லுல்‌ பைத்தினராகும்‌.

இது இந்த ஹதீஸுக்கு முரண்படுகின்றது. அஹ்லுல்‌ பைத்தினரில்தான் அந்தப்‌ 12பேரும்‌ வருவார்கள்‌ என்று இருந்திருந்தால்‌ நபியவர்கள்‌ அதை தெளிவாக அஹ்லுல்‌ பைத்தில்‌ இருந்துதான்‌ வருவார்கள்‌ என்று சொல்லியிருப்பார்கள்‌ அதிலும்‌ அலியுடைய பரம்பரையில்‌ இருந்து வருவார்கள்‌ ஹுஸைனின்‌ சந்ததியிலிருந்தே அதிக ஆட்சியாளர்கள்‌ தோன்றுவார்கள்‌ என்று குறிப்பிட்டிருப்பார்கள்‌.

அவ்வாறு நபியவர்கள்‌ சொல்லவில்லை என்பதன்‌ மூலம்‌ அஹ்லுல்‌ பைத்தையும்‌ தாண்டி குரைஷிக் குலத்தின்‌ பரந்த வட்டத்திலிருந்து இந்த ஆட்சியாளர்கள்‌ வருவார்கள்‌ என்பது தெளிவாகின்றது.

எனவே, அலி (ரலி) அவர்களின்‌ பரம்பரையை மாத்திரம்‌ சேர்ந்த 12பேரை வைத்துக்‌ கொண்டு இந்த ஹதீஸை ஆதாரமாகக்‌ கொள்வது பொருத்தமற்றதாகும்‌. எல்லோரும்‌ உள்ள ஒரு சபையில் தமிழ்‌ பேசுபவர்களுக்கு நான்‌ 10,000 தருகிறேன்‌ என்று அறிவித்து விட்டு சிங்களவர்‌ ஒருவர்‌ தமிழ்‌ பேசினால்‌ இல்லை நான்‌ தமிழர்‌களைத்தான்‌ சொன்னேன்‌ உங்களுக்குத்‌ தர முடியாது என்பது முட்டாள்த்தனமாகும்‌. 

எனவே, தெளிவாகப்‌ பேசுவதில்‌ வல்லவரான நமது நபி‌ அவர்கள்‌ இவ்வாறு பேசியிருப்பார்கள்‌ என்பது அவரை அவமதிப்பதாகும்‌.

06. இந்த ஹதீஸில்‌ 12ஆட்சியாளர்கள்‌ வருவார்கள்‌ என்றுதான்‌ நபியவர்கள்‌ சொன்னார்கள்‌ ஷீஆக்கள்‌ சொல்லும்‌ இமாம்களில்‌ அலி (ரலி)‌, ஹஸன்‌ (ரலி) இருவரையும்‌ தவிர வேறு எவரும்‌ ஆட்சியாளர்களாக இருந்ததில்லை. எனவே, இந்த ஹதீஸை தங்களின்‌ கொள்கைக்கு ஷீஆக்கள்‌ ஆதாரமாகக்‌ காட்டுவது ஷீஆக்‌ கொள்கையையே முழுமையாக அழித்து விடுவதற்கும்‌ அது பொய்யான கொள்கை என்பதற்கும்‌ ஆதாரமாகும்‌.

07. இந்த ஹதீஸில்‌ வரும்‌ சில அறிவிப்புக்களில்‌ அந்த ஆட்சியாளர்கீளின் காலத்தில்‌ இஸ்லாம்‌ கண்ணியமானதாகவும்‌ பலம்‌ பொருந்தியதாகவும்‌ இருக்கும்‌ என்றுள்ளது ஷீஆக்கள்‌ சொல்லும்‌ இமாம்களில்‌ ஒருவர்‌ அல்லது இருவருடைய காலத்தைத்‌ தவிர வேறு எவருடைய காலத்திலும்‌ இவ்வாறு இருக்கவில்லை அவர்கள்‌ மக்களுக்கு அறிமுகமில்லாதவர்களாகவும்‌ மக்களின்‌ கண்களுக்குப்‌ படாதவர்‌களாகவும்‌ வாழ்ந்து வந்தார்கள்‌. எனவே, இந்த ஹதீஸ்‌ ஷீஆக்களுக்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

08. மற்றும்‌ சில அறிவிப்புக்களில்‌ மக்கள்‌ எல்லோரும்‌ அந்த ஆட்சியாளர்கள்‌ விடயத்தில்‌ கருத்து ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைந்திருப்பார்கள்‌ என்று உள்ளது. ஷீஆக்கள்‌ சொல்லும்‌ இமாம்களில்‌ மேலே குறிப்பிட்டதைப்‌ போல பலரும்‌ மக்களுக்கு அறிமுகமில்லாதவர்கள்‌ மக்களின்‌ கண்களுக்கு மறைந்திருந்தார்கள்‌. எனவே, மக்கள்‌ அவர்கள்‌ விடயத்தில்‌ ஒற்றுமைப்படுவது சாத்தியமில்லை. அவ்வாறு வரலாற்றில்‌ நிகழவுமில்லை.



ஷீஆக்களின்‌ தந்திரமான நகர்வு


 ஷீஆக்களின்‌ நூல்களில்‌ காணப்படும்‌ இத்தகைய அறிவிப்புக்களை நாம்‌ எடுத்துக்காட்டும்‌ போது ஷீஆக்கள்‌ சொல்லும்‌ ஒரே வாதம்‌ இது பொய்யானது இந்த செய்தி பலவீனமானது என்பதுதான்‌.

ஷீஆக்களின்‌ தந்திரமான இந்நகர்வைப்‌ பற்றிய தெளிவையும்‌ நாம்‌ பெற்றிருப்பது அவசியமாகும்‌.

உண்மையில்‌ ஷீஆக்களின்‌ புத்தகங்களில்‌ வரும்‌ அறிவிப்புக்களைத் தரம்பிரிப்பதற்கான அடிப்படைகள்‌ ஷீஆக்களிடம்‌ இல்லை, ஷீஆக்கள்‌ சொல்லும்‌ ஹதீஸ்கலை என்பது அவர்கள்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாக்களிடமிருந்து பிரதி செய்ததுதான்‌! இதை அஹ்லுஸ்‌ ஸுன்னாக்களின்‌ விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே செய்ததாக ஷீஆ அறிஞர்களே அவர்களது நூல்களில்‌ குறிப்பிடுகின்றனர்‌.

எனவே, ஷீஆக்கள்‌ சொல்லும்‌ லயீப்‌ இட்டுக்கட்டப்பட்டது போன்ற வாதங்கள்‌ எல்லாம்‌ அந்த சூழ்நிலையில்‌ தன்னைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ளவே அன்றி வேறில்லை.

முஸ்லிம்களின்‌ வரலாற்றில்‌ ஹதீஸ்களை பற்றிய விதிகள்‌ என்பது முதலாம்‌ நூற்றாண்டிலிருந்தே ஸஹாபாக்களாலும்‌ தாபியீன்களாலுமே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது அது நான்காம்‌ நூற்றாண்டில்‌ நூலுருப்பெற்றது. ஆனால்‌ ஷீஆக்களிடம்‌ அவர்களது அறிவிப்புக்களை தரம்பிரிப்பதற்கான விதிகள்‌ ஹி.10ம்‌ நூற்றாண்டில்தான்‌ தோற்றம்‌ பெற்றது அஷ்ஷஹீத்‌ அத்தானி என்பவரே இத்துறையில்‌ ஷிஆக்களின்‌ முதல்‌ நூலை எழுதினார்‌. எனவே, முஸ்லிம்களிடம்‌ ஹதீஸ்கலை தோன்றி வளர்ச்சி பெற்று அதன்‌ இலக்குகளை அடைந்ததன்‌ பிறகே அஹ்லுஸ்ஸுன்னாக்களின விமர்சனங்களை சமாளிப்பதற்காக ஷீஆக்களால்‌ இத்துனை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது எனலாம்‌.

வஸாயிலுஸ்ஷீஆ என்ற நூலில்‌ ஷீஆ அறிஞரான ஹார்ருல்‌ ஆமிலி சொல்லும்‌ போது நமது அறிவிப்புக்கள்‌ அனைத்தும்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான்‌ ஆனாலும்‌ அதற்கு அறிவிப்பாளர்‌ வரிசைகளை நாம்‌ சேர்த்திருப்பது அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ எம்மை விமர்சிக்காமல்‌ இருப்பதற்காகவே.

இமாம்‌ இப்னு தைமியா (ரஹ்‌) அவர்கள்‌ இப்னு முதஹ்ஹிர்‌ அல்ஹில்லி எனும்‌ ஷீஆவுக்கு மறுப்புரை எழுதும்போது மின்ஹாஜுஸ்ஸுன்னா என்ற நூலில்‌ ஷீஆக்களுக்கும்‌ செய்திகளைத் தரம்பிரிக்கும்‌ துறைக்கும்‌ இடையில்‌ உள்ள தொடர்பு பற்றி கடுமையாக விமர்சித்தார்‌ அவர்கள்‌ அந்த விடயத்தில்‌ மடையர்கள்‌ என்றும்‌ எழுதினார்‌. இதன்‌ பிறகே ஷீஆ அறிஞரான இப்னு முதஹ்ஹிர்‌ அல்ஹில்லி என்பவருக்கு “ஹுலாஸதுல்‌ அக்வால்‌ பீ மஃரிபதிர்ரிஜால்‌” எனும்‌ அறிவிப்பாளர்கள்‌ பற்றிய ஒரு நூலைத்‌ தொகுக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தம்‌ உருவானது.

அல்ஹுர்ருல்‌ ஆமிலி என்று அழைக்கப்படும்‌ இப்னு முதஹ்ஹிர்‌ அல்ஹில்லி அவர்களே ஷீஆக்களின்‌ செய்திகள்‌ பற்றிப்பேசும்‌ கலை என்பது அஹ்லுஸ்ஸுன்னாக்களிடமிருந்து காப்பி அடித்ததுதான் என்று குறிப்பிடுகின்றார்‌.” (அமலுல்‌ ஆமில்‌, அல்‌ ஹுர்ருல்‌ ஆமிலி, வெளியீடு: மக்தபதுல்‌ அந்தலுஸ் பக்தாத்‌, பாகம்‌:1, பக்கம்‌: 86, வஸாயிலுஷ்ஷீஆ பாகம்‌:30 பக்கம்‌:259)

இது தவிர இத்துறையில்‌ ஷீஆ அறிஞர்களுக்கு மத்தியில்‌ ஏராளமான முரண்பாடுகள்‌ காணப்படுகின்றது அனைத்து அறிவிப்புக்களையும்‌ ஏற்றுக்கொள்ள வேண்டும்‌ என்பது அவர்களின்‌ கொள்கையாக இருப்பதனால்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களிடம்‌ மாட்டிக்கொள்ளும்போது அவர்கள்‌ பொய்‌ சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்‌ அதனால்‌ அவர்களின்‌ கருத்துக்கள்‌ ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவதானிக்கலாம்‌.

ஷீஆக்கள்‌ ஒரு நம்பகமான செய்திக்கு சொல்லும்‌ வரைவிலக்கணத்தில் “நீதமானவராகவும்‌, ஷீஆவாகவும்‌, ஞாபக சக்தி உள்ளவராகவும்‌, அவரைப்போன்ற அறிவிப்பாளர்கள்‌ இமாம்‌ வரை இருத்தல்‌ வேண்டும்‌, குறைகள்‌, முரண்பாடுகள்‌ அற்றதாகவும்‌ (வுஸாலுல்‌ அஹ்யார்‌ இலா உஸாலில்‌ அஹ்பார்‌, ஹுஸைன்‌ அல்‌ அமிலி. மத்பஅதுல்‌ ஹியாம்‌. கும்‌. ஈரான்‌ ஹூ.1041. பக்கம்‌:93) இருக்க வேண்டும்‌ என்றுள்ளது.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு ஷீஆக்களின்‌ நூல்களை அலசினால் ஷீஆக்களிடம்‌ ஒரு நம்பகமான செய்தியையும்‌ உலகம்‌ அழியும்‌ வரை தேடினாலும்‌ கண்டுபிடிக்க முடியாது. இது அஹ்லுஸ்‌ ஸுன்னாக்களை ஏமாற்றுவதற்காக ஷீஆக்கள்‌ தொகுத்தவையே அல்லாமல்‌ வேறு இல்லை.

எனவே, ஷீஆக்கள்‌ பலம்‌ என்பதும்‌ பலவீனம்‌ என்பதும்‌ அவை தொடர்பில்‌ நம்மிடம்‌ இருக்கும்‌ அறிவுப்பின்னணியை பயன்படுத்தி தங்கள்‌ கொள்கையை வளர்ப்பதற்காகவே என்பதை நாம்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌ அவர்களின்‌ நூல்களில்‌ வந்துள்ள அனைத்து செய்திகளையும்‌ இன்று வரை அவர்கள்‌ நம்புகிறர்கள்‌ என்பதே அவர்களின்‌ தற்கால அறிஞர்களின்‌ பேச்சுக்களிலிருந்து நமக்குப்புலப்படும்‌ உண்மையாகும்‌.



ஒரு பொறி உங்களுக்கும்‌ உதவும்‌.

ஷீஆக்களின்‌ அறிவிப்புக்கள்‌ பற்றி நாம்‌ பேசும்போது ஷீஆக்கள்‌ இவ்வாறு தப்பித்துக்கொள்கிறார்கள்‌ அதனால்‌ அவர்களிடம்‌ இவ்வாறான கருத்துக்களைச்‌ சொல்லும்‌ தனிநபர்கள்‌ பற்றி என்ன நினைக்கிறீர்கள்‌ அவ்வாறான கருத்துக்களை அறிவிப்பவர்கள்‌ பற்றி என்ன நினைக்கிறீர்கள்‌, அவ்வாறான கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்களை இன்றும்‌ அச்சிடுபவர்கள்‌ பற்றி உங்கள்‌ கருத்து என்ன? என்று அவர்களிடம்‌ நாம்‌ வினவுவது கடமையாகும்‌.

அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னாவை நேரடியாக நிராகரிக்கின்ற இவ்வாறான கருத்துக்களைச்‌ சொல்பவர்கள்‌ அதைப்‌ பரப்புபவர்கள்‌ காபிர்களா? இல்லையா? என்று நாம்‌ அவர்களிடம்‌ வினவ வேண்டும்‌ அப்படி வினவும்போது அவர்கள் அசடு வழிவதை நீங்கள்‌ கண்டுகொள்வீர்கள்‌.

இதில்‌ இரண்டில்‌ ஒரு நிலைக்குத்தான்‌ அவர்கள்‌ வரவேண்டும்‌ ஒன்று அவ்வாறு சொல்பவர்கள்‌ காபிர்கள்‌ அல்ல என்று தன்‌ அறிஞர்களை காப்பாற்ற வேண்டும்‌ அல்லது அவ்வாறு சொல்பவர்க்ள காபிர்கள்தான்‌ என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. இதில்‌ மூன்றாவது கருத்துச்சொல்ல இடமளிக்கக்‌ கூடாது.

முதல்‌ கருத்தில்‌ அவ்வாறு சொல்வதனால்‌ அவரும்‌ இஸ்லாத்தை விட்டு சென்று விடுவார்‌ ஏனெனில்‌ அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னாவில்‌ அவருக்கும்‌ நம்பிக்கையில்லை என்பதை அது காட்டிவிடும்‌.

இரண்டாவது கருத்தைச்‌ சொன்னால்‌ அவர்‌ ஷீஆ அறிஞர்களில்‌ பெரும்பான்மையானவர்களை காபிர்கள்‌ என்று சொல்ல நிர்ப்பந்திக்கப்படுவார்‌. அதற்காக அவ்வாறான கருத்துக்களைச்‌ சொன்னவர்களின்‌ பட்டியலை ஒவ்வொருவராக அவரிடம்‌ நாம்‌ நிரூபிக்க வேண்டும்‌ அதன்‌ பிறகு அவர்‌ ஷீஆக்கொள்கையை விடுவதைத்‌ தவிர வேறு வழி அவருக்கு இருக்காது, ஷீஆக்களுக்கு வக்காலத்து வாங்கியதற்காக அல்லாஹ்விடம்‌ அவர்‌ தெளபாச்‌ செய்ய வேண்டிய நிலை உருவாகும்‌.

இவ்வாறான நிலையில்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நூல்களில்‌ வரும்‌ சம்பந்தமில்லாத அறிவிப்புக்களை விமர்சிக்க ஆரம்பிப்பார்கள்‌ இதுதான்‌ அவர்களின்‌ மூதாதையர்கள்‌ தொடக்கம்‌ இன்று வரை நடக்கும்‌ சம்பவங்களாக அமைந்துள்ளன.

 

ஷீஆக்களே அஹ்லுல்‌ பைத்தின்‌ விரோதிகள்‌

ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினை நேசிப்பதாகச்‌ சொன்னாலும்‌ அவர்கள்‌ உண்மையில்‌ அஹ்லுல்‌ பைத்தை நேசிக்கவில்லை தங்கள்‌ சுய தேவைகளுக்காக அஹ்லுல்‌ பைத்தைப்‌ பயன்படுத்திக் கொண்டார்கள்‌ தங்களின்‌ உள்‌ நோக்கங்களை நிறைவேற்றறவே இத்தகைய கோசங்களை எழுப்புகின்றனர்‌.

உண்மையில்‌ அஹ்லுல்‌ பைத்தை நேசிப்பவர்கள்‌ அல்குர்‌ஆனும்‌ அஸ்ஸுன்னாவும்‌ அவர்கள்‌ விடயத்தில்‌ எதைச்‌ சொல்கின்றதோ அதையே பின்பற்றுவார்கள்‌ அவை இரண்டையும்‌ பாதுகாத்துத்‌ தந்த ஸஹாபாக்களை மதிப்பார்கள்‌. ஆனால்‌ ஷீஆக்களோ ஸஹாபாக்களை மிதித்து அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னாவை புறக்கணித்து அஹ்லுல்‌ பைத்தை நேசிப்பதாகச்‌ சொல்கின்றனர்‌. உலகில்‌ உண்மையான எந்த முஸ்லிமும்‌ இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளமாட்டான்‌ என்பது திண்ணம்‌.

அஹ்லுல்‌ பைத்தின்‌ பெயரில்‌ பாரசீகர்களும்‌, யூதர்களும்‌ கிறிஸ்தவர்க்ளும தங்களின்‌ கருத்துக்களை முஸ்லிம்களுக்குள்‌ பரப்பினர்‌, முஸ்லிம்களை சிதைத்து அவர்களது தலைவர்களை அவர்களது கைகளாலேயே கொலை செய்ய வைப்பதற்கான ஒரு அடித்தளத்தை இதன்‌ மூலம்‌ இட்டனர்‌. அதன்‌ விபரீதங்களை முஸ்லிம்கள்‌ இன்று வரை அனுபவித்துக்‌ கொண்டிருக்கின்றனர்‌. இதனாலேயே அஹ்லுல் பைத்தினரும்‌ ஷீஆக்களை விட்டும்‌ மக்களை கடுமையாக எச்சரித்தனர்‌.

அதனால்‌ ஷீஆக்களின்‌ மூலம்‌ பல துன்பங்களையும்‌ அனுபவித்தனர்‌. நபியவர்களின்‌ மருமகன்‌ உஸ்மான்(ரலி) அவர்களைக்‌ கொலை செய்தது முதல்‌ அலி (ரலி) ஹஸன்(ரலி), ஹுஸைன்‌ (ரலி) போன்ற அஹ்லுல்‌ பைத்தின்‌ சிரேஷ்ட அங்கத்தவர்களின்‌ கொலைகளில்‌ ஷீஆக்களுக்கு மிக நெருக்கமான தொடர்புகள்‌ உள்ளது. நேரடியாக அதை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியவர்களாகவும்‌ வரலாறு அவர்களை இனங்காட்டுகின்றது.

எனவே, ஷீஆக்களே அஹ்லுல்‌ பைத்தின்‌ உண்மையான எதிரிகளாகும்‌.

 

ஷீஆக்களைத்‌ தூற்றும்‌ அஹ்லுல்‌ பைத்தினர்

ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரை நேசிப்பதாகச்‌ சொன்னாலும்‌ அவர்களது நேசம்‌ உண்மையானதல்ல தங்களின்‌ தவறான கொள்கைகளை முஸ்லிம்களுக்குள்‌ பரப்புவதற்கு அஹ்லுல்‌ பைத்தினரை ஒரு கேடயமாக எடுத்துக்கொண்டார்கள்‌ என்பதே உண்மையாகும்‌. முஸ்லிம்களுக்குள்‌ பல மோசமான திட்டங்களுடன் ஊடுருவிய இந்த யூத கும்பலை ஆரம்பத்தில்‌ இனம்கண்டவர்கள்‌ அஹ்லுல்‌ பைத்தினரே.

01. அலி (ரலி)‌ அவர்கள்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபாவையும்‌ அவன்‌ தோழர்களையும்‌ தண்டித்தமை.

அலி (ரலி)‌ அவர்கள்‌ மீதும்‌ அஹ்லுல்‌ பைத்‌ மீதும்‌ தற்போது ஷீஆக்கள் சொல்லும்‌ பல கொள்கைகள்‌ அன்று அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபாவினால்‌ சொல்லப்பட்டவைகளாகும்‌. அவனே ஷீஆக்களின்‌ இஸ்தாபகராகவும்‌ கருதப்படுகின்றான்‌.

தன்‌ விடயத்திலும்‌ தன்‌ குடும்பத்தின்‌ விடயத்திலும்‌ இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களைச்‌ சொல்லி தன்னை இறைத்துவம்‌ மிக்க மனிதராக பிரச்சாரம்‌ செய்யப்படுவதை உணர்ந்த அலி (ரலி) அவர்கள்‌ அவ்வாறு பிரச்சாரம்‌ செய்த அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபாவின்‌ தோழர்களை தண்டித்த வரலாறு பிரபல்யமானதாகும்‌.

பத்ஹுல்‌ பாரியில்‌ இது தொடர்பாக வரும்‌ செய்தியை இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தெளிவுபடுத்தியுள்ளார்கள்‌. அலி (ரலி) அவர்களை அல்லாஹ்வின்‌ இஸ்தானத்தில்‌ வைத்துப்‌ புகழ்ந்த மனிதர்கள்‌ பற்றிக்‌ கேள்வியுற்ற அவர்கள்‌ குறித்த விடயத்துடன்‌ தொடர்புடைய ஸபயிய்யாக்களுக்கு மூன்று தடவைகள்‌ பிரச்சாரம்‌ செய்தும்‌ அவர்கள்‌ திருந்தாததன்‌ காரணமாக அவர்களை நெருப்பிலிட்டு எரித்தார்கள்‌ என்று குறிப்பிட்டுள்ளார்கள்‌.”(பத்ஹுல்‌ பாரி ஹ.இல: 6524)

அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபாவை அலி (ரலி) ‌அவனுடைய தோழர்களுடன்‌ எரித்ததாக சில அறிவிப்புக்களிலும்‌ மற்றும்‌ சில அறிவிப்புக்களில்‌ பாரசீகப்பிரதேசங்களுக்கு நாடு கடத்தியதாகவும்‌ குறிப்பிடப்படுகின்றது.

அலி (ரலி)‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: “இறைவா! எங்களை எல்லை மீறி வெறுப்பவர்களையும்‌ எல்லை மீறி நேசிப்பவர்களையும்‌ சபிப்பாயாக!” (ஷரஹ்‌ உஸாலி இஃதிகாதி அஹ்லிஸ்ஸான்னா வல்‌ ஜமாஆ, அபுல்‌ காஸிம்‌ அத்தபரி, பதிப்பு: தாறுத்‌ தைபா 2003, செ.இல: 2681, பக்கம்‌: 1481)

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றோரை ஷீஆக்கள்‌ ஸஹாபிகளாகவே கணிப்பதில்லை அலி (ரலி) அவர்களையே சிறந்தவராக காண்கின்றனர்‌.

ஆனால்‌ அலி(ரலி) ‌அவர்கள்‌ சொல்கிறார்கள்‌. “எவராவது என்னை அபூபக்ர்‌, உமர்‌ ஆகியோரை விட சிறப்பித்துக்‌ கூறினால்‌ அவருக்கு நான்‌ இட்டுக்கட்டிய குற்றத்திற்காக தண்டனையை வழங்குவேன்‌. (கிதாப்‌ அஸ்ஸுன்னா, அப்துல்லாஹ்‌ பின்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌, முதலாம்‌ பதிப்பு 1985, தார்‌ இப்னுல்‌ கையிம்‌, செய்தி இல:1312)

அலி (ரலி)‌ அவர்கள்‌ தன்‌ மகனைப்‌ பார்த்து பின்வருமாறு கூறினார்கள்‌:

“அபூபக்ர் (ரலி)‌‌, உமர் (ரலி)‌‌ ஆகிய இருவரும்‌ எனது நண்பர்கள்‌, உனது மூதாதையர்கள்‌, நேர்வழிபெற்ற இமாம்கள்‌, இஸ்லாத்தின்‌ இரண்டு அறிஞர்கள்‌, இருவரும்‌ குறைஷிகள்‌, நபி(ஸல்) அவர்களுக்குப்‌ பிறகு அவர்கள்‌ இருவரையுமே (மக்கள்‌) பின்பற்றினர்‌. அவர்கள்‌ இருவரையும்‌ யார்‌ பின்பற்றுகிறாரோ அவர்‌ பாதுகாக்கப்படுவார்‌. அவர்கள்‌ இருவரின்‌ வழியை பின்பற்றுவோர்‌ நேர்வழி பெறுவார்கள்‌.” (ஷீஆ அறிஞரான அல்‌ பய்யாழ்‌ என்பவருக்குரிய ஸிராதுல்‌ முஸ்தகீம்‌ என்ற நூல்‌)



02. ஹஸன்‌ இப்னு அலி (ரலி):

“அம்ர்‌ இப்னுல்‌ அஸம்‌ சொல்கிறார்‌: நான்‌ ஹஸன் (ரலி) அவர்களிடம்‌ மறுமை வருவதற்கு முன்‌ அலி மீண்டும்‌ அனுப்பப்படுவார்கள்‌ என்று ஷீயாக்கள்‌ நம்புகிறார்களே என்று சொன்னேன்‌. அதற்கவர்கள்‌: அவர்கள்‌ (ஷீஆக்கள்‌) பொய்‌ சொல்கின்றனர்‌ அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக அவர்கள்‌ (ஷீயாக்கள்‌) அலியை நேசிப்பவர்கள்‌ அல்ல. (அலி(ரலி)‌ மீண்டும்‌ அனுப்பப்படுவார்‌ என்று நாம்‌ அறிந்திருந்தால் அவர்கள்‌ மனைவியரை மறு மணம்‌ செய்து வைத்திருக்க மாட்டோம்‌, அவரது சொத்தை பங்கிட்டிருக்கவும்‌ மாட்டோம்‌.” (ஸியரு அஃலாமின்‌ நுபலா.”., இமாம்‌ அத்தஹுபி, பதிப்பு: முஅஸ்ஸஸதுர்‌ ரிஸாலா 2001, பாகம்‌: 03 பக்கம்‌: 263)



03. ஹுஸைன்‌ இப்னு அலி (ரலி)

ஹுஸைன்‌ (ரலி) அவர்களை வரவழைத்து உதவி செய்வதாக வாக்களித்து பின்பு அவரை எதிரிகளின்‌ கையில்‌ ஒப்படைத்து விட்டு பிரிந்து சென்ற ஈராக்கிய ஷீஆக்களைப்‌ பற்றி இமாம்‌ ஹுஸைன் (ரலி) ‌ அவர்கள்‌ சொல்லும்போது: “இறைவா! ஈராக்‌ வாசிகள்‌ என்னை ஏமாற்றி விட்டார்கள்‌, எனக்கு மோசடி செய்துவிட்டார்கள்‌. எனது சகோதரன்‌ விடயத்தில்‌ எதையெல்லாம்‌ செய்ய வேண்டுமோ அதையெல்லாம்‌ செய்தார்கள்‌. இறைவா! அவர்களின்‌ அதிகாரத்தை பலவீனப்படுத்துவாயாக! அவர்களை அடியோடு அழிப்பாயாக!.” என்று குறிப்பிட்டார்கள்‌.” ஸியரு அஃலாமின்‌ நுபலா.”., (இமாம்‌ அத்தஹுபி, பதிப்பு: முஅஸ்ஸஸதுர்‌ ரிஸாலா 2001, பாகம்‌: 03 பக்கம்‌: 302)



04. அலி இப்னு ஹுஸைன்‌ ஸைனுல்‌ ஆபிதீன்‌ (ரஹ்)‌:

அஹ்லுல்‌ பைத்தினர்‌ விடயத்தில்‌ எல்லை மீறிய ஷீஆக்கள்‌ இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களை சொன்னபோத அலியிப்னுல் ஹுஸைன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு சொன்னார்கள்‌:

“ஈராக்வாசிகளே! இஸ்லாத்தை நேசிப்பது போன்று எங்களை நேசியுங்கள்‌, சிலைகளை நேசிப்பதைப்‌ போன்று எங்களை நேசிக்காதீர்கள்‌.“ (ஷரஹ்‌ உஸாலி இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னா வல்‌ ஐமாஆ, அபுல்‌ காஸிம்‌ அத்தபரி, பதிப்பு: தாறுத்‌ தைபா 2003, செ.இல: 2682, பக்கம்‌:1481)

“ஈராக்‌ வாசிகளே! நீங்கள்‌ எமக்காக அழுகிறீர்கள்‌ நீங்கள்தானே எங்களைக்‌ கொலை செய்தவர்கள்‌.” (தாரீஹ்‌ அல்‌எஃகூபி, பா:1 ப:245)



05. முஹம்மத்‌ இப்னு அலி அல்‌ பாகிர்‌ (ரஹ்‌) :

ஜாபிர்‌ அல்‌ ஜுஃபிக்கு இமாமவர்கள்‌ சொல்கிறார்கள்‌: “நிச்சயமாக ஈராக்கில்‌ ஒரு கூட்டம்‌ எம்மை நேசிப்பதாக நம்புகின்றனர்‌. அபூபக்ர்‌ (ரழி), உமர் (ரழி) ஆகியோரை (அவர்கள்‌ விரும்பிய விதத்தில்‌) கையாள்கின்றனர்‌, நான்‌ அப்படி அவர்களுக்கு கட்டளையிட்டதாகவும் நினைக்கின்றனர்‌.

நிச்சயமாக நான்‌ அவர்களை விட்டும்‌ நீங்கி அல்லாஹ்வின்‌ பால் மீளுகிறேன்‌, அவர்களை விட்டும்‌ அல்லாஹ்வும்‌ நீங்கிவிட்டான்‌. எவன்‌ கையில்‌ இந்த முஹம்மதின்‌ உயிர்‌ உள்ளதோ அவன்‌ மீது ஆணையாக நான்‌ (அவர்களுக்கு பொறுப்பாக) நியமிக்கப்‌பட்டால்‌ அவர்களைக்‌ கொலை செய்து அல்லாஹ்வின்‌ நெருக்கத்தைப் பெறுவேன்‌. அவர்கள்‌ இருவருக்காகவும்‌ பாவமன்னிப்புக்கோரி, அருள்வேண்டிப்‌ பிரார்த்திக்கவில்லை என்றால்‌ நபியவர்களின்‌ சிபாரிசு எனக்குக்‌ கிடைக்காது. அல்லாஹ்வின்‌ எதிரிகள்‌ அவர்கள்‌ இருவரைவிட்டும்‌ அலட்சியமாக இருக்கின்றனர்‌ என்று அவர்களுக்குச்‌ சொல்வாயாக.” (கிதாபுல்‌ இஃதிகாத்‌, அல்‌ பைஸுகி, பக்கம்‌: 361)

“மனிதர்கள்‌ எங்கள்‌ ஷீஆக்களாக இருந்தால்‌ அவர்களில் நான்கில்‌ மூன்று பகுதியினர்‌ எங்கள்‌ மீது சந்தேகத்தை உருவாக்குபவர்களாகவும் அடுத்த பகுதியினர்‌ மிகுந்த மடையர்களாகவும்‌ இருக்கின்றனர்‌.” (ரிஜாலுல்‌ திஸ்ஸி ப:179)



06. ஜஃபர்‌ இப்னு முஹம்மத்‌ (ஜஃபர்‌ அஸ்ஸாதிக்‌) (ரஹ்)‌:

ஷீஆக்களின்‌ கொள்கைகளைக்‌ கண்டித்த ஜஃபர்‌ ஸாதிக்‌ அவர்கள்‌ பின்வருமாறு கூறினார்கள்‌: “அல்லாஹ்‌ நாடினால்‌ நிச்சயமாக நீங்கள்‌ உங்கள்‌ நகரவாசிகளில்‌ (கூபா) சிறந்தவர்கள்‌.

நான்‌ சொன்னதாக ஈராக்வாசிகளுக்கு அறிவியுங்கள்‌: எவன்‌ நான்‌ பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட, கட்டாயம்‌ பின்பற்றப்பட வேண்டிய ஒரு இமாம்‌ என்று நம்புகிறானோ அவனை விட்டும்‌ நான்‌ நீங்கிவிட்டேன்‌, மேலும்‌ எவன்‌ நான்‌ அபூபக்ர்(ரழி), உமர்(ரழி) அவர்களை விட்டும்‌ நீங்கிவிட்டேன்‌ என்றும்‌ சொல்கிறானோ அவனை விட்டும்‌ நான்‌ நீங்கிவிட்டேன்‌.” (ஸியரு அஃலாமின்‌ நுபலாஃ‌., இமாம்‌ அத்தஹபி, பாகம்‌: 06 பக்கம்‌:259)

ஷீஆக்கள்‌ அபூபக்ர் (ரழி) ‌, உமர் (ரழி) போன்ற பெரும்‌ கலீபாக்களை நேசிப்பதில்லை ஆனால்‌ ஜஃபர்‌ ஸாதிக்‌ சொல்கிறார்கள்‌: “அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகிய இரு பெரும்‌ கலீபாக்களை புறக்கணிப்பவனை விட்டும்‌ அல்லாஹ்‌ நீங்கிவிட்டான்‌.” (ஸியரு அஃலாமின்‌ நுபலாஃ‌., இமாம்‌ அத்தஹபி, பாகம்‌: 06 பக்கம்‌:260)

இமாமவர்களிடம்‌ றாபிழி (ஷீஆ) நரகிலிருப்பானா? அல்லது சுவனத்திலிருப்பானா? என்று கேட்கப்பட்டது, அதற்கு இமாமவர்கள்‌ “நிச்சயமாக அவன்‌ நரகத்தில்‌ தான்‌ இருப்பான்‌.” என்றார்கள்‌.

பின்பு “அவன்‌ அல்குர்‌ஆன்‌ அஸ்ஸுன்னாவை மறுக்கின்றவன்‌ (நரகத்தில்‌ இருப்பான்‌) என்று நான்‌ எங்கிருந்து அறிந்துகொண்டேன்‌ என்று நீ அறிவாயா?” என்று கேட்டார்கள்‌. (தொடர்ந்து கூறினார்கள்‌)

“நான்‌ மறைவான விடயங்களை அறிவதாக அவன்‌ நம்புகிறான்‌, மறைவான விடயங்களை அல்லாஹ்வைத்தவிர வேறெவருக்கும்‌ தெரியும்‌ என்று ஒருவர்‌ நம்பினால்‌ அவன்‌ காபிராவான்‌, காபிர்‌ நரகத்தில்‌ இருப்பான்‌.”  (அத்தாரீஹ்‌ வல்‌ மஃரிபா, பஸவீ)

“அல்லாஹ்‌ முனாபிக்குகள்‌ விடயத்தில்‌ இறக்கிய எந்தவொரு வசனமும்‌ ஷீஆக்கொள்கையை பின்பற்றுபவர்‌ விடயத்தில்‌ பொருந்திப்போகிறது'” (ரிஜாலுல்‌ கிஷ்ஷி ப:254)



07. மூஸா பின்‌ ஜஃபர்‌ அல்காழிம்‌ (ரஹ்)‌:

“ஷிஆக்களை நான்‌ பரீட்சித்தால்‌ அவர்கள்‌ மதம்‌ மாறியவர்களாகவே இருப்பார்கள்‌.” அல்காபி பா:8, ப:191



08. ஹஸன்‌ இப்னு ஹஸன்‌ இப்னு அலி(ரஹ்‌):

இமாமவர்கள்‌ றாபிழி ஒருவனுக்குச்‌ சொன்னார்கள்‌: “உங்கள்‌ விடயத்தில்‌ அல்லாஹ்‌ எங்களுக்கு அதிகாரத்தைத்‌ தந்தால்‌ உங்களை மாறு கால்‌ மாறு கை துண்டித்துத்‌ தண்டிப்போம்‌, உங்கள்‌ தெளபாவை ஒருபோதும்‌ ஏற்றுக்‌ கொள்ள மாட்டடோம்‌,

அப்போது (இமாமவர்களே!) தெளபாவை ஏன்‌ ஏற்றுக்‌ கொள்ள மாட்டோம்‌ என்கிறீர்கள்‌? என்றபோது இமாமவர்கள்‌ உங்களைவிட இவர்கள்‌ (றாபிழாக்கள்‌) பற்றி அறிந்தவர்கள்‌ நாம்‌. இவர்கள்‌ நினைத்தால்‌ உங்களை உண்மைப்‌படுத்துவார்கள்‌. அல்லது பொய்ப்பிப்பார்கள்‌. தகிய்யா (இடத்திற்கேற்ப நடித்தல்‌) என்ற அவர்களின்‌ கொள்கைக்கு அமைய இது முடியும்‌ என்றும்‌ நம்புகின்றனர்‌.” என்றார்கள்‌.” (தஹ்தீபுல்‌ கமால்‌, இமாம்‌ மிஸ்ஸி, ஹஸன்‌ இப்னு ஹஸனின்‌ வரலாறு)



09. உமர்‌ இப்னு அலி இப்னு ஹுஸைன்‌ (ரஹ்‌):

“அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக இவர்கள்‌ றாபிழாக்கள்‌) எங்களை வைத்து வயிறு வளர்க்கின்றனர்‌.'” (பலாயிலுஸ்‌ ஸஹாபா, இமாம்‌ தாரகுத்னி)



10. அப்துல்லாஹ்‌ இப்னு ஹுஸைன்‌(ரஹ்‌):

“றாபிழாக்கள்‌ (ஷீஆக்கள்‌) இணைவைப்பாளர்கள்‌ என்று நான்‌ சாட்சி சொல்கிறேன்‌. அவர்கள்‌ எப்படி முஷ்ரிக்குகளாக இல்லாதிருக்க முடியும்‌ நபி(ஸல்)‌ அவர்கள்‌ பாவம்‌ செய்தார்களா? என்று நீங்கள்‌ அவர்களிடம்‌ கேட்டால்‌ “ஆம்‌” என்று சொல்வார்கள்‌. அல்லாஹ்‌ அவர்களின்‌ முந்திய பிந்திய பாவங்களை மனனித்து விட்டான்‌. அலி பாவம்‌ செய்தார்களா? என்று கேட்டால்‌ 'இல்லை” என்று சொல்வார்கள்‌ யார்‌ அப்படிச்‌ சொன்னானோ நிச்சயமாக அவன்‌ நிராகரித்துவிட்டான்‌.'” (ஷரஹுல்‌ இபானா, இப்னு பத்தா)

ஷீஆக்கள்‌, தாங்கள்‌ சொல்லும்‌ அத்தனை வழிகேடுகளையும்‌ அஹ்லுல்‌ பைத்தின்‌ முக்கிய அறிஞர்களான இவர்கள்‌ பெயரில்தான் கூறுகின்றனர்‌. எனவே, இந்த அறிஞர்கள்‌ ஷீஆக்கள்‌ பற்றிச்சொன்ன கருத்துக்களில்‌ சிலவற்றை நாம்‌ இங்கு அறிந்துகொண்டோம்‌.

உண்மையில்‌ ஷீஆக்கள்‌ அஹ்லுல்‌ பைத்‌ எனும்‌ பெயரைப்பயன்படுத்தி அதிகமான செய்திகளை இட்டுக்கட்டியிருக்கிறார்கள்‌. இதை ஆரம்பத்திலேயே உணர்ந்துகொண்ட அஹ்லுல்‌ பைத்தின்‌ இமாம்கள்‌ அன்றிலிருந்தே ஷீஆக்கள்‌ பற்றி எச்சரித்துள்ளார்கள்‌ என்பதை அவர்களின்‌ கருத்துக்கள்‌ எமக்குத்‌ தெளிவுபடுத்துகின்றன.

ஈஸா அவர்களுக்கும்‌ அவர்கள்‌ மீது எல்லை மீறி அவரின்‌ பெயரைப்பயன்படுத்தி அவர்‌ சொன்னதாக தங்களுக்குத்‌ தேவையானதை அல்லது அவர்‌ சொல்லாத கருத்துக்களை உருவாக்கிக்கொண்ட கிறிஸ்தவர்களுக்கும்‌ எவ்வாறு தொடர்பில்லையோ அதுபோலவே அஹ்லுல்‌ பைத்தினருக்கும்‌ அவர்கள்‌ பெயரில்‌ ஷீஆக்களால்‌ சொல்லப்படும்‌ விடயங்களுக்கும்‌ தொடர்பில்லை என்பது தெளிவாத் தெரிகின்றது.



துணை நின்றவை

01. அல்குர்‌ஆன்‌ அல்‌ கரீம்‌.

02. அல்‌அகீதா அல்வாஸிதிய்யா, இமாம்‌ இப்னு தைமிய்யா, அழ்வாஉஸ்ஸலப்‌, இரண்டாம்‌ பதிப்பு 1999.

03. அல்‌ முஸ்தத்ரக்‌ அல ஸ்ஸஹீஹைன்‌, முஹம்மத்‌ அல்‌ ஹாகிம்‌ அபூ அப்தில்லா அந்நைஸாபூரி, தாருல்‌ மஃரிபா 1998

04. அல்முஃஜம்‌ அல்கபீர்‌, ஸுலைமான்‌ இப்னு அஹ்மத்‌ அத்தபரானீ, மக்தபது இப்னு தைமியா.

05. அஹ்காமுல்‌ குர்‌ஆன்‌. அபூபக்ர்‌ இப்னுல்‌ அரபி, தாருல்‌ குதுப்‌ அல்‌ இல்மிய்யா, 3ம்‌ பதிப்பு:2003.

06. அல்பவாயிதுல்‌ மஜ்மூஆ பில்‌ அஹாதீதில்‌ மவ்லூஆ, முஹம்மது இப்னு அலி அஷ்ஷவ்கானி, தாருல்‌ கூதுப்‌ அல்‌ இல்மிய்யா, முதலாம்‌ பதிப்பு:1995

07. அல்‌ பிதாயா வந்நிஹாயா, இஸ்மாயில்‌ இப்னு உமர்‌ இப்னு கதீர்‌, மத்தபதுல்‌ மஆரிப்‌ பெய்ரூத்‌, 1990

08. அல்‌ இஃதிகாத்‌ வல்‌ ஹிதாயா இலா ஸபீலிர்ரஸாத்‌ அலா மத்ஹபிஸ்‌ ஸலப்‌ வ அஸ்ஹாபில்‌ ஹதீப்‌, அஹ்மத்‌ அபூபக்ர்‌ அல்‌ பைஹகி, தாருல்‌ ஆபாக்‌ அல்‌ ஜெதீதா, பெய்ரூத்‌, முதலாம்‌ பதிப்பு: ஹி,1401

09.அல்‌ மஃரிபா வத்தாரீஹ்‌, அபூ யூசுப்‌ யெ..கூப்‌ இப்னு ஸுப்யான்‌ அல்‌ பஸவீ, மக்தபதுத்‌ தார்‌ பில்‌ மதீனா அல்‌ முநவ்வரா, முதலாம்‌ பதிப்பு: ஹி,1410

10. அஷ்ஷீஅது வ அஹ்லுல்‌ பைத்‌, இஹ்ஸான்‌ இலாஹி லஹீர்‌, இதாரது துர்ஜுமானிஸ்‌ ஸுன்னா, பாகிஸ்தான்‌.

11. அஸ்ஸஹாபிய்யாத்‌ தாதுல்‌ ஹததிஸ்‌ வாஹிதி பீ ஸஹீஹையில்‌ இமாமைன்‌: அல்புஹாரி, முஸ்லிம்‌. கலாநிதி: முஹம்மது முஸ்தபா முஹம்மது நஜ்ம்‌, கிஸ்முத்திராஸாதில்‌ இஸ்லாமிய்யா, ஜாமிஅதுல்‌ அஸ்ஹர்‌.

12. அல்‌ அஸ்மாஃ வல்‌ முஸாஹராத்‌ பைன அஹ்லில்‌ பைதி வஸ்ஸஹாபா கூ, அஸ்ஸய்யித்‌ அஹ்மத்‌ இப்னு இப்றாஹீம்‌, மபர்ரதுல்‌ ஆலி வல்‌ அஸ்ஹாப்‌, இரண்டாம்‌ பதிப்பு:2007

13. அந்நஸபு வல்‌ முஸாஹராத்‌ பைன அஹ்லில்‌ பைதி வஸ்ஸஹாபா, அஸ்ஸய்யித்‌ அலாஉத்தீன்‌, தாருல்‌ அமல்‌, முதல்‌ பதிப்பு: 2000

14. அல்‌ இன்திஸார்‌ லிஸ்ஸஹ்பி வல்‌ ஆல்‌, கலாநிதி: இப்றாஹீம்‌ ஆமிர்‌ அர்ருஹைலி, மக்தபது தாருல்‌ உலூம்‌, 3ம்‌ பதிப்பு: ஹி,1423 (2003)

15. இஃலாமுல்‌ மூகியீன்‌ அன்‌ ரப்பில்‌ ஆலமீன்‌, முஹம்மது இப்னு கைய்யிம்‌ அல்‌ ஜவ்ஸிய்யா, தாருல்‌ குதுப்‌ அல்‌ இல்மிய்யா 1991

16. கிதாப்‌ அஸ்ஸுன்னா, அப்துல்லாஹ்‌ பின்‌ அஹ்மத்‌ பிஸ்மம்பல்‌, தார்‌ இப்னுல்‌ கையிம்‌, முதலாம்‌ பதிப்பு 1986.

17. ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, முஸ்லிம்‌ இப்னு ஹஜ்ஜாஜ்‌ அந்நைஸாபூரி, தாரு தைபா, முதலாம்‌ பதிப்பு, 2006

18. ஸஹீஹுல்‌ புஹாரி, முஹம்மத்‌ இப்னு இஸ்மாயீல்‌ அல்புஹாரி, தாரு இப்னு கதீர்‌ 1993.

19. ஷரஹ்‌ உஸாலி இ..திகாதி அஹ்லிஸ்ஸுன்னா வல்‌ ஜமாஆ, அபுல்‌ காஸிம்‌ அத்தபரி, பதிப்பு: தாறுத்‌ தைபா 2003.

20. ஷரஹுல்‌ இபானா, உபைதுல்லாஹ்‌ இப்னு பத்தா அல்‌ அப்கரி, மக்தபதுல்‌ உலூம்‌ வல்‌ ஹிகம்‌, முதலாம்‌ பதிப்பு:2002

21. ஸில்ஸிலதுல்‌ அஹாதீத்‌ அல்லயீபா வல்‌ மவ்லூஆ, முஹம்மது நாஸிருத்தீன்‌ அல்‌ அல்பானி, மக்தபதுல்‌ மஆரிப்‌, முதலாம்‌ பதிப்பு.

22. ஸியரு அஃலாமின்‌ நுபலஸ, இமாம்‌ அத்தஹபி, பதிப்பு: முஅஸ்ஸஸதுர்‌ ரிஸாலா 2001.

23. ஸுனன்‌ அபீதாவுத்‌, ஸுலைமான்‌ இப்னுல்‌ அஸ்‌அத்‌ அஸ்ஸிஜ்ஸ்தானி, பதிப்பு: அல்மக்தபா அல்‌ அஸ்ரிய்யா.

24. ஸூனன்‌ அத்திர்மிதி, இமாம்‌ திர்மிதி அபூ ஈஸா, தாருல்‌ கர்ப்‌ அல்‌ இஸ்லாமி, முதலாம்‌ பதிப்பு 1996

25. தத்கிரதுல்‌ ஹுபாழ்‌. முஹம்மது இப்னு அஹ்மத்‌ அத்தஹபி, தாயிரதுல்‌ மஆரிப்‌ அல்‌ உஸ்மானிய்யா, ஹி:1374

26. தஃமீமுஸ்ஸுன்னா வ மவ்கிபுஸ்ஸலபி மிம்மன்‌ ஆரழஹா, அப்துல்‌ கய்யூம்‌ அஸ்ஸுஹைபானி.

27. பத்ஹுல்‌ பாரி, இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌ அஸ்கலானி, தாருர்ரய்யான்‌ 1986,

28. பலாயிலுஸ்‌ ஸஹாபா வ மனாகிபுஹும்‌, அபுல்‌ ஹஸன்‌ அலியிப்னு உமர்‌ அத்தாரகுத்னி, மக்தபதுல்‌ ஹுரபாஃ அல்‌ அதரிய்யா, முதலாம்‌ பதிப்பு: 1998

29. பழ்மு அஹ்லில்‌ பைதி வ உலுவ்வி மகானதிஹிம்‌ இன்த அஹ்லிஸ்ஸுன்னதி வல்‌ ஜமாஆ, அப்துல்‌ முஹ்ஸின்‌ அல்‌ அப்பாத்‌, பதிப்பு: இப்னுல்‌ அதர்‌ அச்சகம்‌, ஸவுதி அரேபியா, ஹி:1422

30. பல்‌ ழலல்த கஷ்பு அபாதீலித்தீஜானி பீ கிதாபிஹி தும்மஹ்‌ ததைத்து, காலித்‌ அல்‌ அஸ்கலானி,

31. மஜ்மூ௨ பாதாவா ஸஷைஹில்‌ இஸ்லாம்‌ இப்னு தைமியா, அஹ்மத்‌ இப்னு தைமியா, முஜம்மஃ மலிக்‌ பஹ்த்‌ லி திபாஅதில்‌ முஸ்ஹப்‌ அஷ்ஷரீப்‌, 2004

32. முஃஜமு மா உல்லிப அனிஸ்ஸஹாபதி வ உம்மஹாதில்‌ முஃமீனீன்‌ வ ஆலில்‌ பைத்‌, அஷ்ஷெய்க்‌ முஹம்மத்‌ இப்னு இப்றாஹீம்‌ அஷ்ஷெய்பானி, மன்ஷுறாது மர்கஸில்‌ மஹ்தூதாதி வத்துராதி வல்‌ வதாயிக்‌, குவைத்‌, முதலாம்‌ பதிப்பு:1993



ஷீஆக்களின்‌ நூற்கள்‌:

01. அல்மல்ஹமா அல்‌ ஹுஸைனிய்யா 3ம்‌ பதிப்பு 1992, இஸ்லாமிய கற்கைகளுக்கான மையம்‌, கும்‌, ஈரான்‌.

02. அல்‌இஹ்திஜாஜ, தப்ரஸீ, மன்சூராதிஸ்ஸரீப்‌ அர்ரழி, முதலாம்‌ பதிப்பு, ஹி:1380

03. அல்‌ இர்ஷாத்‌, அஷ்ஷெய்ஹ்‌ அல்‌ முபீத்‌ முஹம்மது இப்னு நுஃமான்‌ அல்‌ பக்தாதி, 3ம்‌ பதிப்பு, 1993

04. அல்‌ அர்பான்‌ பீ இமாமதில்‌ அத்ஹார்‌, முஹம்மத்‌ ஹுஸைன்‌ ஸீராஸி அல்‌ கும்மி, முதலாம்‌ பதிப்பு ஹி: 1418, மத்பஅதுல்‌ அமீர்‌, கும்‌, ஈரான்‌

05. அஃயானுஸ்ஷீஆ, அஸ்ஸெய்யித்‌ முஹ்ஸின்‌ அல்‌ அமீன்‌, தாருத்‌ தஆருப்‌ லில்‌ மத்பூஆத்‌, பெய்ரூத்‌, லெபனான்‌.

06. அல்‌ இஸ்திப்ஸார்‌, பீ மா உஹ்துலிப மினல்‌ அஹ்பார்‌, முஹம்மது இப்னு ஹஸன்‌ அத்தூாஸி ஷெய்ஹுத்‌ தாயிபா, தாருல்‌ அழ்வாஃ, பெய்ரூத்‌, லெபனான்‌, இரண்டாம்‌ பதிப்பு 1992

07. அமலுல்‌ ஆமில்‌, அல்‌ ஹு்ருல்‌ ஆமிலி, வெளியீடு: மக்தபதுல்‌ அந்தலுஸ்‌ பக்தாத்‌,

08. தஹ்தீபுல்‌ கமால்‌ பீ அஸ்மாயிர்ரிஜால்‌, ஜமாலுத்தீன்‌ அபுல்‌ ஹஜ்ஜாஜ்‌ யூசுப்‌ அல்‌ மிஸ்ஸி, முஅஸ்ஸஸதர்ரிஸாலா, முதலாம்‌ பதிப்பு: 1983

09. தஹ்தீபுல்‌ அஹ்காம்‌, முஹம்மது இப்னு ஹஸன்‌ அத்தூஸி ஷெய்ஹுத்‌ தாயிபா, தாருத்‌ தஆருப்‌ லில்‌ மத்பூஆத்‌, பெய்ரூத்‌, லெபனான்‌, முதலாம்‌ பதிப்பு 1992

10. பிஹாருல்‌ அன்வார்‌, முஹம்மது பாகிர்‌ அல்‌ மஜ்லிஸீ, முஅஸ்ஸஸகதுத்‌ தூர்‌ லின்னஸுர்‌, தஹ்ரான்‌, முதலாம்‌ பதிப்பு1411

11. புரூஉல்‌ காபி, அல்குலைனி, தாருத்‌ தஆருப்‌ லில்‌ மத்பூஆத்‌, பெய்ரூத்‌, லெபனான்‌, முதலாம்‌ பதிப்பு 1992

12. மஷாரிகு அன்வாரில்‌ யகன்‌, ரஜப்‌ அல்‌ புர்ஸி, பத்தாம்‌ பதிப்பு, பெய்ரூத்‌ லெபனான்‌,

13. ரிஜாலுல்‌ கிஸ்ஸி, அபு அம்ர்‌ முஹம்மத்‌ இப்னு உமர்‌ அல்‌ கிஷிஷி, முதலாம்‌ பதிப்பு: 2009, முஅஸ்ஸஸதுல்‌ அஃலமி லில்‌ மத்பூஆத்‌, பெய்ரூத்‌, லெபனான்‌.

14. வுஸுலுல்‌ அஹ்யார்‌ இலா உஸுலில்‌ அஹ்பார்‌, ஹுஸைன்‌ அல்‌ ஆமிலி, மத்பஅதுல்‌ ஹியாம்‌, கும்‌, ஈரான்‌ ஹி.1041.

15. ஸிராதுல்‌ முஸ்தகீம்‌, ஸைனுத்தீன்‌ அல்‌ ஆமிலீ அல்‌ பய்யாழி, அல்‌ மத்தபா அல்‌ முர்தழவிய்யா லி இஹ்யாயில்‌ ஆதாரில்‌ ஜஃபரிய்யா, முதலாம்‌ பதிப்பு.

16. ஹக்குல்‌ யகீன்‌ பீ மஃரிபதி உஸுலித்தீன்‌, அஸ்ஸய்யித்‌ அப்துல்லாஹ்‌ அஷிஷிப்ர்‌, முதலாம்‌ பதிப்பு 1997, முஅஸ்ஸஸதுல்‌ அஃலமி லில்‌ மத்பூஆத்‌, பெய்ரூத்‌, லெபனான்‌.



இணையங்கள்‌:

01. http://friends4ever100.mam9.com/

02. https://ar.beta.islamway.net

03. https://ar-ar.facebook.com/aboansalwasabi/posts/ 161363007299422

04. islamqa.info

05. syriamylove.yoo7.com

06. www.ahlalhdeeth.com

07. www.alburhan.com

08. www.almabarrah.net

09. www.alrashead.net

10. www.al-shaaba.net

11. www.ansarh.com

12. www.dd-sunnah.net

13. www.fnoor.com

14. www.haqeeqa.net

15. www.wylsh.com



ஷீஆக்களின்‌ இணையங்கள்‌:

01. www.alqatrah.org 

02. www.aqaed.com 

03. www.islam4u.com 

04. www.shiaweb.org


Previous Post Next Post