பெரும்பான்மை,ஒருபோதும் சத்தியத்திற்கான அளவுகோல் ஆகாது!


ஒருவருடன் நீ கருத்துப் பரிமாற்றம் செய்கின்றாய்.அப்போது அவர் உன்னிடம்," மனிதர்களில் அதிகமானோர்இதைத்தான் செய்கின்றார்கள்!" என்று சொன்னால் அவருக்கு நீ கூறு:

      "அல்குர்ஆனில் இடம்பெறுகின்ற,'மனிதர்களில் அதிகமானோர்' என்ற வார்த்தையை நீ ஆய்வு செய்துபார்த்தால் அதற்குப் பின்னர், 'அவர்கள் அறியமாட்டார்கள்; நன்றி  செலுத்தமாட்டார்கள்; நம்பிக்கைகொள்ளமாடார்கள்' என்றிருப்பதையே நீ பெற்றுக்கொள்வாய்.

         மேலும்," அவர்களில் அதிகமானோர்" என்று வருகின்ற வார்த்தைக்குப் பின்னால்," அவர்கள்  பாவிகள்; அறிவீனமாக நடந்து கொள்கின்றார்கள்; அவர்கள் புறக்கணிப்பாளர்கள்; சிந்திக்கமாட்டார்கள்; செவிமடுக்கமாட்டார்கள்! "  என்றிருப்பதையே நீ பெற்றுக் கொள்வாய்.

        ஆதலால் நீ, அல்லாஹ் கூறும் சொற்ப தொகையினரோடு இருந்து கொள்! "எனது அடியார்களில் நன்றிசெலுத்துவோர் சொற்பத் தொகையினரே!" (அல்குர்ஆன், 34:13)

       "சொற்பத் தொகையினரே அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தனர்".(அல்குர்ஆன்,11:40)

        "அருள் நிறைந்த சுவனச் சோலைகளில் அவர்கள்  இருப்பார்கள்.முன்னுள்ளவர்களில் ஒருகூட்டத்தினரும்,பின்னுள்ளவர்களில் சொற்பத் தொகையினரும்(இதில் அடங்குவர்)".(அல்குர்ஆன்,56:12-14)

       பெரும்பான்மை,ஒருபோதும் சத்தியத்திற்கான அளவுகோல் ஆகாது!!  (முகநூலில்  أبا حذيفة الأثري)

🌿➖➖➖➖➖➖➖➖🌿

إذا تناقشت مع أحد فقال لك:

"أكثر الناس يفعلون هذا! ".. فقل له: لو بحثت عن كلمة "أكثر الناس" فى القرآن الكريم لوجدت بعدها  (لايعلمون - لايشكرون - لا يؤمنون) !.

     ولو بحثت عن كلمة"أكثرهم" لوجدت بعدها (فاسقون - يجهلون - معرضون - لايعقلون - لايسمعون) !!

       فكن أنت من القليل الذين قال الله تعالى فيهم :

{وقليل من عبادي الشكور}،{وما آمن معه إلا قليل} ،{ في جنات النعيم ، ثلة من الأولين، وقليل من الآخرين} .

فالكثرة ليست معيارا للحق دائما...!

🌿➖➖➖➖➖➖➖➖🌿

            ✍தமிழில்✍

             அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

             

Previous Post Next Post