ஸலபுகளிடமிருந்து.. பகுதி 02

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..


01. "மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட
 அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள்.
ஏனெனில் மனிதன் ஒரு நாளில்
உணவு மற்றும் குடிபானம் ஆகியவற்றில்
ஒரு தடவை அல்லது இரு தடவைகள்
நாட்டமுடையவனாக இருக்கின்றான்.
மாற்றமாக அவன் அறிவின்பால் ஒரு நாளில்
விடும் மூச்சுக்களின் அளவு
நாட்டமுடையவனாக இருக்கின்றான்." 

- இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ்

قال الإمام ابنُ الـقـيـم - رحمه اللهُ تعالى - :

• -‏ ‌‏النّاسُ محتاجون إلى العلم أكثر من حاجتهم إلى الطعام والشراب؛ 

• -‏ لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرة اأو مرتين والعلم يحتاج إليه بعدد الانفاس.

مفتاح دار السعادة ( ٢٤٨/١ )


02. ஹபீப் அல்ஆபித் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:
நான் பஸராவுக்குச் சென்றேன். அங்கே உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. அப்போது நான் சிலரிடம் "இன்று உங்களுக்கு நான் அறிந்திராத ஒரு பெருநாள் தினமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்களோ "இல்லை! ஆனால் இன்று அறிஞர் ஹஸனுல்பஸரீ அவர்கள் பள்ளிவாசலில் மக்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்" என பதிலளித்தார்கள்.

- நூல்: அல்மவாஇள் வல்மஜாலிஸ்: 181


03. இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்
மறுமைக்கான பாதையில் நெருக்கடியை ஏற்படுத்தும் உலக வசதி வாய்ப்புக்களில் எந்த நலவுமில்லை.

- ஸைதுல் ஹாதிர்: 629


04. இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அதிகமான நோயாளிகள் மாத்திரைகளின்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவைக் கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப் பார்த்தல் முறையைக் கொண்டு அல்லது உள்ளத்தில் உள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள சிறந்த நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுவர்.

- மஜ்மூஉல் பதாவா: 12/563


05. இமாம் ஷஃபீ (ரஹிமஹுல்லாஹ்) ஒரு விடயத்தைப் பற்றி கேட்கப்பட்டார். அவரோ "எனக்குத் தெரியாது" என்று கூறினார். அப்போது அவரிடத்தில் "நீங்கள் ஈராக் நாட்டின் மார்க்க மேதையாக இருக்கிறீர்கள், "எனக்குத் தெரியாது" என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று கூறப்பட்டது.
அதற்கு அவர் "வானவர்கள் (அல்லாஹ்விடம்) (உன்னை நாம் துதி செய்கிறோம், நீ கற்றுத்தந்த அறிவைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை) என்று கூறும்போது அவர்களும் வெட்கப்படவில்லையே" என்று பதிலளித்தார்கள்.

- அல்பகீஹ் வல்முதபக்கிஹ்: 2/370


06. எமது முன்னோர்களில் ஒருவர் அவருடைய வீட்டை விட்டு வெளியேறும் போது அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் "ஹராமான சம்பாத்தியத்தை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், ஏனெனில் எம்மால் பசியைத் தாங்கலாம், ஆனால் நரக நெருப்பைத் தாங்க முடியாது" எனக் கூறுவார்கள்.

- முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன் (2/16)


07. அஃமஷ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:
நாம் ஜனாஸாவில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தோம். அதிகமானோர் அழுது கொண்டிருந்ததால் யாருக்கு ஆறுதல் கூறவேண்டும் என்பதை நாம் அறியாமல் இருந்தோம். (காரணம்) அவர்கள் அவர்களின் நிலைமையை நினைத்தே அழுதார்கள். மரணித்தவருக்காக அவர்களுடைய அழுகை இருக்கவில்லை.

- அல்ஆகிபா: 154
குறிப்பு: அஃமஷ் (ரஹிமஹுல்லாஹ்) ஹிஜ்ரி 61ம் ஆண்டு பிறந்த தாபிஈன்களில் ஒருவராவார்


08. அறிஞர் அபூஹாஸிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் "பொருட்களின் விலை உயர்ந்து விட்டதே! நீங்கள் கவனிக்கவில்லையா?" எனக் கூறப்பட்டது.
அதற்கு அபூஹாஸிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "அது விடயத்தில் உங்களுக்கு என்ன கவலை? விலை குறைந்த நேரத்தில் எமக்கு ரிஸ்க் அளித்த அல்லாஹ் தான் விலை உயர்ந்த நேரத்திலும் ரிஸ்க் அளிப்பான்" என பதிலளித்தார்கள்.

- நூல்: ஹில்யதுல் அவ்லியா : 526


09. இப்னுல் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:
தன்னிடம் காணப்படும் குறைபாடுகளை அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், அதுபற்றி கவலைப்படாமல் இருப்பதுவே மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரும் சோதனையாகும்.

- (ஷூஅபுல் ஈமான்: 876)


10. நேர்வழியைப் பின்பற்று! அதில் செல்வோர் சொற்பம் என்பது உன்னைப் பாதிக்காது, வழிகேட்டைவிட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்! அதில் அழிந்து போவோர் அதிகம் என்பதால் ஏமாறிவிடாதே!

-     இமாம் புழைல் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ்


11. மனோ இச்சையுடையோருடன் உட்காராதீர்கள்! ஏனெனில், அவர்களுடன் உட்காருவது உள்ளங்களை நோயுறச் செய்யும்.

-     அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா



12. ஜமாஅத் என்பது சத்தியத்திற்கு உடன்பட்டதாகும், அதில் நீ மாத்திரம் இருந்தாலும் சரியே!

-     அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு



13. எவர் அல்லாஹ்வை மிகவும் அறிந்தவராக உள்ளாரோ அவர் அவனை மிகவும் அஞ்சுபவராக இருப்பார்.

-     இமாம் அஹ்மத் இப்னு ஆஸிம் அல்அன்தாகி ரஹிமஹுல்லாஹ்



14. மனிதர்கள் அனைவரையும் திருப்தியடைய வைப்பது அடையமுடியாத ஓர் இலக்காகும்.

-     இமாம் ஷாபிஇ ரஹிமஹுல்லாஹ்



15. வாழ்வின் ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியா முத்தாகும். அதனைக் கொண்டு என்றென்றும் நிறைவுறாத இன்பத்தை வாங்க முடியும்.

-    இமாம் இப்னுல் கையிம்



16. எனது உடல் குளிரைத் தாங்காது மற்றும் கடும் சூட்டையும் தாங்காது எவ்வாறு மனிதர்களும் கற்களும் விறகாகும் நெருப்பைத் தாங்கும்?!

-    இமாம் ஷாபி 


17. உங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்து விட்டால் திருமணம் செய்து வையுங்கள், அவர்களுடைய பாவச் சுமையை நீங்கள் சுமக்காதீர்கள்.

- உமர் பின் அல் கத்தாப் (ரழி)
أحكام النساء لابن الجوزي


18. அல்லாஹ் உனக்காக நீ விரும்புகின்ற அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால், நீ அவனுக்காக அவன் விரும்புகின்ற அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

இமாம் அஹ்மத் (றஹிமஹுல்லாஹ்)
الآداب الشرعية لابن مفلح ج1 / ص104


19. இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்

ஸலபுஸ்ஸாலிஹீன்களில் சிலர் தமது தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடம் தொழுகையில் கேட்பார்கள். மாவுக்குத் தேவையான உப்பையும் ஆட்டுக்குத் தேவையான தீனியையும் அல்லாஹ்விடமே கேட்டு முறையிடுவார்கள்.

ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்: 2/29


20. இமாம் சலாமத் பின் அப்துல் மாலிக் (ரஹ்) கூறினார்கள் 

மூஃமீனான ஆண்களின் கண்கள் மற்றும் கைகளுக்கு சிறந்தவள் சாலிஹான பெண்

நூல் : ஹுஸ்னுல் மாஹாஸினில் ஷாஹ்லி : 368


21. இமாம் அஹ்மத் (ரஹ்), அவரது மனைவி உம்மு சாலிஹ் பற்றி கூறினார்

"உம்மு சாலிஹ் என்னுடன் இருபது வருடங்கள் இருந்தார் (திருமணத்தில்), நாங்கள் ஒரு வார்த்தையில் வேறுபடவில்லை."

- இப்னு அபி யாலாயின் தபாகத் அல்-ஹனாபிலா


22. "தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிப்பது உள்ளத்திற்கு ஒரு இழிவாகும். மன்னிப்பது உள்ளத்திற்கு ஒரு கண்ணியமாகும். 

- இமாம் இப்னு தைமிய்யா ரஹுமஹுல்லாஹ்
நூல்: மஜ்மூல் பதாவா


23. ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"யார் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவரை அல்லாஹ் அசத்தியத்தை ஏற்றுக் கொள்வதைக் கொண்டு சோதிப்பான்".

நூல்: மஜ்மூஉல் பதாவா


24. யாரையும் பார்க்க வேண்டாம்! சத்தியத்தை தெளிவுபடுத்துங்கள்!*

ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நாம் தெளிவுபடுத்துவது கடமையாகும். ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்! கோபிப்பவர்கள் கோபித்துக்கொள்ளட்டும்!" - அல்அஜ்விபதுல் முபீதா: 101


25. இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

(சத்தியத்தைப் புறக்கணித்து, அசத்தியத்தில் பிறரைக்) கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அறிவிலி குறித்து நீ அலட்டிக் கொள்ளாதே..

(நூல்: அஸ்ஸவாஇகுல் முர்சஸலா)


26. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களே கூறுவார்கள்:

நான் இலக்கை நோக்கி குறி வைத்து பத்து அம்புகளை எய்கிறேன் என்றால் ஒன்பது அம்புகள் மிகச் சரியாக இலக்கை சென்று அடைந்து விடும், ஒரு அம்பு தான் இலக்கில் இருந்து தவறும்”.

நூல்: தபகாத்துஷ் ஷாபிஈ


27. இமாம் இப்ராஹீம் அன்னஹஇ(ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"உங்களில் யாராவது பிறர் வீட்டிற்குள் நுழைந்தால் அந்த வீட்டார்கள் அமரவைக்கும் பகுதிகளில் அவர் அமர்ந்து கொள்ளட்டும், ஏனென்றால் தகாத பகுதிகளை) நன்கறிவார்கள்."

நூல்: (முஸன்னப்f இப்னி அபீ ஷைபா/25593)


28. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

"பெண்களை அவர்களின் அழகுக்காக மட்டும் திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய அழகு அவர்களை அழித்து விடக்கூடும்! 

பெண்களை அவர்களின் செல்வ வளத்திற்காக மட்டும் திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும், அடங்காத தன்மையிலும் அவர்களை ஆழ்த்தி விடக்கூடும்.

மாறாக, மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கருப்பு நிறஅடிமைப் பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப் பற்றில்லாக் குடும்பப் பெண்ணை விடச் சிறந்தவள் ஆவாள்”. " என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 (நூல்: அல் முன்தகா)


29. அறிவின் ஆரம்பம் தன்னில் துரிதமாற்றத்தை ஆதரவு வைக்கக் கூடியதும் பரபரப்பானதுமாக இருக்கும். அதன் இறுதி அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதும் அடக்கத்தை உண்டுபன்னக் கூடியதுமாக இருக்கும்.”

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

 நூல்: அஷ்ஷர்ஹுல் மும்திஃ (9/25)


30. வகீ இப்னு அல்-ஜர்ரா رحمه الله கூறினார்கள்:

” ஓர் ஈத் பெருநாள் அன்று ஸுஃப்யான் அல்-தவ்ரீயுடன் நாங்கள் வெளியில் சென்றிருந்தோம் மேலும் அவர் கூறினார் : “எங்களுடைய இந்நாளில் நாங்கள் முதலில் செய்வது எங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்வதை தான்.”

[கிதாப் அல்-வரா, கட்டுரை 66]


31. இமாம் இப்னுல் கையிம் கூறுகிறார்:

எவர் இஸ்லாமை வளர்ப்பதற்காக  கல்வியைத் தேடுகிறாரோ அவர் சித்தீக்கீன்க(ள் எனும் உண்மையாளர்க)ளில்  உள்ளவர். 

அவரின் அந்தஸ்து நபித்துவத்தின் அந்தஸ்துக்கு அடுத்திருக்கிறது.
 
நூல்: 
مفتاح دار السعادة (1/ 121)

قال ابن القيم رحمه الله: 
"فمن طلب العلم ليحيي به الإسلام، فهو من الصديقين ودرجته بعد درجة النبوة" 


32. உமர் ( ரலி)  அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தமக்காக பாவ மன்னிப்பு கேட்கும்படி கூறுவார்கள்

ஏனென்றால் நீங்களெல்லாம் பாவமற்றவர்கள் உள்ளம் தூய்மையானவர்கள் என்பார்களாம்.

நூல்: இஸ்தீஆப்


33. நபி தோழா்களை போன்று முன்பு ஒரு கூட்டம் இதற்கு முன்பாக இருந்தது இல்லை.. இனி இருக்க போறதும் இல்லை...

-இமாம்  இப்னு தைமிய்யா றஹிமஹுல்லாஹ்:
நூல் :அல்வாஸிதிய்யா


34. இமாம் அபூ நுஐம் றஹிமஹுல்லாஹ்  கூறுகிறார்கள்:

என்னிடத்திலே உள்ள உறுதிமிக்க அமல் நபி ஸல்லலாஹு அலைஹி  வஸ்ல்லம் அவா்களுடைய தோழா்கள்  மீதுள்ள அன்பாகும்...

நூல்: அல் ஹீல்யா


35. ஒருவர் கல்வியைத் தேட

ஆரம்பித்துவிட்டால் அவரிடம் பணிவு, சீர்மிகு நடை, சொல்வளம், அகப்பார்வை, இறைப்பற்று இவையெல்லாம் காலதாமதமின்றி மிக விரைவில் காணப்படும்.

-ஹசன் பஸரீ (ரஹ்)


36. அல்-இமாம் இப்னு அல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

தொழுகை என்பது உலக வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கையின் நன்மைகளை பெற்றுத் தருவதற்க்கு மிகப்பெரும் உதவிகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

அதேபோல் உலக வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை தடுப்பவையாகவும் திகழ்கின்றது.

மற்றும் அது பாவம் செய்வதிலிருந்து தடுக்கின்றது.

உள்ளத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கின்றது.

உடலில் ஏற்படும் நோய்களை வெளியேற்றுகின்றது.

உள்ளத்தை ஒளிரச்செய்கிறது.

முகத்தை மிளிரச்செய்கிறது. மற்றும் உடலையும் உயிரையும் புத்துணர்வாக வைக்கின்றது.

நூல்: ஸாதுல் மஆத் (192/4).


37. ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் அரசாங்கப் பொது நிதியில் இருந்த ஒட்டகங்களுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். 'அமீருல் முஃமினீன் அவர்களே! இப்பணியை வேறு யாரேனும் வேலைக்காரர்களிடம் அளிக்கக் கூடாதா?' என்றொருவர் வினவினார்.

'என்னைவிட சிறந்த அடிமை யார் இருக்க முடியும்? முஸ்லிம்களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவன் அவர்களுடைய சிறந்த பணியாளாகவும் இருந்தாக வேண்டும்' என அதற்கு பதிலளித்தார்கள்.

(கன்ஸுல் உம்மால் பாகம்: 6 பக்கம்: 353)


38. இப்னுல் ஜவ்ஸி (ரஹ்)  கூறினார்கள்:

"(அநியாயமாக) புறம் பேசுபவரின் உதாரணம் (தனக்கு தானே) ஒரு கவண் அமைத்து கொண்டவரைப் போல, (கவண் தன் மீது வைக்கும் பொருளை நான்கு திசைகளிலும் சிதரடிப்பதைப் போன்று) புறம் பேசுவது ஒருவரது நல்ல செயல்களை (அவரிடமிருந்து விலக்கி) வலது, இடது, கிழக்கு, மேற்கு என (நான்கு திசைகளிலும்) வீசி எறிந்துவிடும் (அதாவது அவர் நற்செயல்களை அழித்துவிடும்)."

- (பஹ்ர் அக்-துமூஃ '131)


39. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) கூறினார்கள்: 

"நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடிணமானது,

 ஏனென்றால் நேரத்தை வீணடிப்பது உங்களை அல்லாஹ்விடமிருந்தும்  மறுமையிலிருந்தும் துண்டிக்கிறது,   

மரணமோ உங்களை இந்த உலகத்திலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் துண்டிக்கிறது". 

(கிதாபுல் ஃபவாயிது - பக்கம்:31).


40. இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:

எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை அவனுக்கு விருப்பமான காரியங்களில் செயற்படவைப்பான். 


‏قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :

من كـــان الله يحبه
استعمله فيما يحبه.

العبودية (صـ١١٣)


41. அலீ (ரலி) கூறுகிறார்: இஸ்லாமை அறிந்த ஒருவர், ஆயத்துல் குர்ஸீ மற்றும் அல் பகராவின் இறுதி இரு வசனங்களை ஓதாமல் உறங்கி விடுவார் என்று ஒரு போதும் நான் எண்ண மாட்டேன்.

ஏனெனில், இவை அர்ஷு இறை அரியாசனத்தின் கீழ் உள்ள கருவூலத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன

-தஃப்சீர் இப்னு மர்தவைஹி


42. மக்காவில் இருந்த ஆட்சியாரளர்கள் அங்கு கட்டப்பட்ட கப்றுகளைத் தகர்ப்பதைக் கண்டேன், 

மார்க்க அறிஞர்கள் அதைக்குறைகூற நான் காணவில்லை 

என இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 (பார்க்க: அல்உம்மு. பாகம்: 1 பக்கம்: 316).


43. இஸ்லாத்தின் கைப்பிடிகள் ஓவ்வொன்றாக உடைந்து போகும்.

எப்பொழுது இந்த இஸ்லாத்தில் ஜாஹிலியத்தை (ஷிர்க், குப்ர், தீமை அதனுடைய வகைகள் )  தெரியாத மக்கள் வளர்ந்து வரும் போது 

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அல் மபாதிவுல் முபீதா (விளக்கம்) 


44. இமாம் இப்றாஹீம் இப்னு ஹானி ( ரஹ்) அறிவிக்கிறார்கள். 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் மூன்று நாட்கள் என்னிடம் எனது பாதுகாப்பின் கீழ் மறைந்திருந்தார்கள். 

அதன் பின் "நான் இடம் மாறி இருப்ப தற்கு வேறொரு இடத்தைப் பார்" என்று என்னிடம் இமாமவர்கள் கூறினார்கள். 

அப்போது நான் வேறொரு இடத்தில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க எனக்கு முடியாது. 

வேறொரு இடம்கிடைத்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, அவருக்காக (பொருத்தமான) இடத்தினைப் பார்த்து சொன்னேன். 

அவர்கள் என் வீட்டி லிருந்து வெளியேறும்போது

 "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் மூன்று நாட்கள் தங்கி விட்டு இடம் மாறினார்கள். 

செழிப்பிலும் கஷ்டத்திலும் அல்லாஹ்வின் (ஸுன்னாவை) தூதரின் நாம் வழிமுறையை பின் பற்றுவதே போதுமானதாகும்'' எனக் கூறினார்கள்.

 (நூல்: ஹில்யதுல் அவ்லியா 9 \ 180, 
தபகாதுல் ஹனாபிலா 1\97)


45. முஆவியா (ரலி) அவர்களிடம் “அலீ (ரலி) அவர்களின் பிரிவை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். ளிரார் அவர்கள் 

அதற்கு முஆவியா ரழி அவா்கள்

  “தாயின் மடியில் இருக்கிற ஒரு குழந்தையை தாயின் கண் முன்னால் அறுத்தால் அந்த தாயின் நிலை எவ்வாறு இருக்குமோ அவ்வாறு தான் எங்களின் நிலையும் இருக்கின்றது” என்று பதில் கூறினார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபதில் அஸ்ஹாப், இஃலாமுல் மூக்கியீன் )


46. ஒரு நாள் ஒருவர் மிகவும் பதற்றட்டத்துடன் மாலிக் (ரஹ்) அவர்களின் சபைக்கு வந்தார். வந்தவர் “இமாம் அவர்களே! நானும் எனது மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம். இருவரில் யார் அழகு என்கிற பேச்சும் வந்தது.

அப்போது, அவள் தன்னுடைய அழகை பெருமையடித்து நான் நிலவை விட அழகானவள் என்று சொன்னாள். 

எனக்கு கோபம் வந்து, கோபத்தில் ”அப்படி இல்லை எனில் நீ தலாக் என்று சொல்லி விட்டேன்” என்ன செய்வது? தலாக் நிகழ்ந்து விடுமா? என்று கேட்டார்.

நீண்ட மௌனத்துக்குப் பின்னர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தலாக் நிகழ்ந்து விட்டது என்றார்கள்.
கவலையோடு அங்கிருந்து வெளியேறினார் அம்மனிதர். ஏதோ வேலை காரணமாக வெளியே சென்ற ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் உள்ளே நுழையும் போது கவலையோடு செல்லும் அவரை அழைத்து காரணம் என்ன என்று வினவினார்கள்.

அவர் நடந்த சம்பவத்தை விவரித்தார். கையோடு அவரை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தி, இதற்கு நான் வேறு தீர்வை கூற முடியும் என்றார்கள்.

என்ன தீர்வு என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வினவ, “இமாம் ஷாஃபிஈ அவர்கள் “திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்” எனக் கூறுகின்றான்.

எனவே, அவரின் மனைவி நிலவை விட அழகானவள் தான். ஆகவே, தலாக் நிகழாது என்று கூறினார்கள்.

இது கேட்ட இமாம் மாலிக் (ரஹ்) தாங்கள் அளித்த தீர்ப்பை திரும்பப் பெற்றதோடு “இமாம் மாலிக் தவறிழைத்து விட்டார், இமாம் ஷாஃபிஈ மிகச் சரியான தீர்ப்பை சொல்லி விட்டார்” என்று அறிவிப்பு செய்தார்கள்.

அதன் பின்னர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானும் இமாம் மாலிக் (ரஹ்) அனுமதி இன்றி சபைக்குள் நுழையும் அனுமதியை வழங்கினார்கள்.        
               
(நூல்: தபகாத்துஷ் ஷாஃபிஈ)


47. ஷெய்க் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் இபாதா என்றால் என்ன ? அதன் வரைவிலக்கணம் ?  என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கூறினார்கள். 

இபாதத் என்பது அல்லாஹ்வால் நேசிக்கக்கூடிய (பொருந்தி கொள்ளக்கூடிய) அனைத்து சொற்களையும் செயல்களையும் ஒன்று சேர்க்ககூடிய ஒரு பெயர்சொல் தான் இபாதத் 

நூல் : அல் உபூதியா


48. அல்லாஹ் உம்மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான். (அல்குர்ஆன் 4:113)

இமாம் ஷாஃபியீ அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ் அல்குர்ஆனில் அல்கிதாப் என்கிறான்.

அது அல்குர்ஆனை குறிக்கும். 

மேலும் அல்ஹிக்மா என்று கூறுகிறான். 

அல்குர்ஆன் கல்வியை நன்றாக கற்றுத் தேர்ந்த கல்விமான்களிடம் அல்ஹிக்மா என்பதைப் பற்றி வினவியபோது, அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் சுன்னாவே அல்ஹிக்மா ஆகும் என்றார்கள். 

(நூல்: அர்ரிஸாலா, பக்கம் - 78)


49. உண்மையான மார்க்க அறிஞர் யார்?

இம்ரானுல் கஸீர் அறிவிக்கிறார் : 

ஒரு மனிதர் இமாம் ஹசன் அவர்களிடம் வந்து சில சட்டங்களைப் பற்றி கேள்வி கேட்டார்.

அவருக்கு இமாம் அவர்கள் பதில் கூறினார்கள். 

அதற்கு அந்த மனிதர் கூறினார் அபூ ஸயீது அவர்களே! 

நிச்சயமாக ஃபகீஹ் மார்க்க சட்ட அறிஞர்கள் இவ்வாறு, இவ்வாறு கூறுகிறார்களே!. 

அதற்கு இமாம் ஹசன் அவர்கள் அவரிடம் கூறினார்கள் : 

நீ உனது கண்ணால் ஃபகீஹ் - மார்க்க சட்ட அறிஞரை பார்த்திருக்கின்றாயா? 

நிச்சயமாக மார்க்க சட்ட அறிஞர் யாரென்றால் அவர் இந்த உலக வாழ்க்கையில் பற்றில்லாமல் இருப்பவர், மறுமை வாழ்க்கையில் ஆர்வம் உள்ளவர்.

தனது பாவங்களை உற்று நோக்கக் கூடியவர், தனது இறைவனை வணங்குவதில் முழுமையாக நிரந்தரமாக ஈடுபட்டிருப்பவர் ஆவார்.

- இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி அவர்களின் கூற்று. எண் : 1486


50. நற்பண்புகள் مكارم الأخلاق

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

لما عـفوت ولم أحقـد على أحدٍ 
أرحـت نفسي من هم العداوات !!

யார் மீதும் குரோதம் கொள்ளாது, யாவரையும் மன்னித்து நடப்பதால், பகைமை இன்றி நிம்மதியாய் இருக்கிறேன் !!

إني أحيي عـدوي عنـد رؤيتـه 
أدفـع الشـر عـني بالتحيـات !!

என் எதிரியை பார்க்கும் போது, அவனுக்கு முகமன் கூறுவதால், அவன் தீங்கை விட்டும் தப்பித்துக் கொள்கிறேன் !!

وأظهـر البشر للإنسان أبغضـه 
كمـا أن قد حشـى قلبي محبات !!

என் உள்ளம் அன்பால் நிரம்பி இருப்பதால், வெறுப்பவனுடனும் நான் புன்னகைக்கிறேன் !!

الناس داء ودواء الناس قربـهم 
وفي اعتزالهـم قطـع المـودات !!

மக்கள் ஒரு வியாதியெனில், அவர்களுடன் நெருங்கிப் பழகுவதே அதற்கு சிகிச்சையாம். அவர்களை விட்டும் ஒதுங்கி நடப்பதால் அன்பை இழக்க நேரிடும்.

 (ديوان الإمام الشافعي ص 36).
(இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் கவிதைகளின் தொகுப்பு- பக்கம்:36.)

51. அல்லாமா முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

" நீ (முதலில்) ஸுன்னாவை அறிந்துகொள் (அவ்வேளையில்) மக்களால் மார்க்கத்தில் இல்லாதவற்றை உள்ளதாக கொண்டுவரபட்டவற்றை (பித்அத்தை) அறிந்துகொள்வாய், ஆனால் நீ பித்அத்தை மாத்திரம் அறிந்துகொண்டால் ஒருக்காலும் ஸுன்னாவை அறிந்துகொள்ளமுடியாது."   

அல்ஹுதா வன்னூர்: (715)


52. இமாம் அஸ் ஸூன்னாஹ், ஹதீஸ் மேதை, அஹ்மத் இப்னு ஹன்பல்(رحمه الله) தன்னுடைய மகனார் அப்துல்லாஹ்விற்கு பதினைந்தாயிரம் (15000) ஹதீஸ்களை கற்றுக்கொடுத்து அவை அனைத்தையும் மனப்பாடம் செய்யவைத்தார்கள்.! பிறகு இமாம் அவர்கள் கூறினார்கள், மகனே இவை அனைத்தும் நபிﷺஅவர்கள் கூறாதவை.! இவை அனைத்தும் நபியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறினார்கள்.!

(நூல்-شذرات الذهب في أخبار من ذهب)
ஷதரத் அத் தஹப்-2/203 | ஆசிரியர்-  இமாம் அப்த் அல்ஹய்ய் இப்னு அல் இமாத் அல் ஹன்பலி (رحمه الله)


53. இமாம் அஹ்மத் இப்னு ஹர்ப் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 
 
ஐம்பது வருடங்களாக அல்லாஹ்வை வணங்கினேன் மூன்று விஷயங்களை விடும் வரை இபாதத்தில் இன்பம் காண முடியவில்லை 
 
1. மக்களின் திருப்தியை பெறுவதை விட்டேன். சத்தியத்தை (துணிந்து) சொல்லும் ஆற்றலை பெற்றேன்.  

2. தீயவர்களின் தோழமையை விட்டேன்  நல்லவர்களின் தோழமையை பெற்றுக்கொண்டேன்.  

3. உலக இன்பங்களை விட்டேன் மறுமையின்  இன்பத்தை பெற்றுக் கொண்டேன்.  

நூல்: இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்வின்)
 ஸியறு அஃலாமுந் நுபலா  11/34


54. இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் கூறினார்கள்: 

ஒரு அடியான் அனைத்து விடயத்தையும்  அறிந்திருந்து ; மேலும் அவனுடைய இரட்சகனை அவன் அறிந்துக் கொள்ளவில்லையென்றால்; அவன் எந்த விடயத்தையும் அறியாதவனைப்  போன்றவனாவான். (ஏனெனில் நாளை மறுமையில் அவை அவனுக்கு பயனளிக்காது).

நூல்:இகாஸதுல் லஹ்பான் (1/139)


55. ஸஹாபாக்களுக்கு பிறகு மார்க்கத்தை சுமந்த தாபிஈன்களில் ஒருவரான இமாம் அல் ஃபுதைய்ல் இப்னு ஈய்யாத் (رحمه الله) கூறுகிறார்கள்:

ஓ ஏழை மனிதனே.! 

நீயோ பாவம் செய்கிறாய்.!ஆனால் நீயோ தன்னை அதிகம் நன்மை செய்பவராக நினைத்து கொள்கிறாய்.!

நீயோ அறியாமையில் இருக்கிறாய்.!ஆனால் நீயோ தன்னை பெரிய கல்வியாளர் என்று நினைத்து கொள்கிறாய்.! 

நீயோ கருமித்தனம் செய்கிறாய்.! ஆனால் நீயோ தன்னை அதிகம் தானம் செய்பவராக நினைத்து கொள்கிறாய்.!

நீயோ மடையன்.! ஆனால் நீயோ தன்னை பெரும் அறிவுள்ளவனாக நினைத்து கொள்கிறாய்.!

உனக்கோ இந்த துன்யாவின் வாழ்க்கைக்காலம் சிறிது.!ஆனால் நீயோ பெரிது என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.!

(நூல்-தரிக் அல் இஸ்லாம் 4/942 | ஆசிரியர்-இமாம் அத் தஹபி(رحمه الله)


56. மருந்து மாத்திரை இன்றியும் நிவாரணம் பெறலாம்

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

அதிகமான நோயாளிகள் மாத்திரைகள் இன்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவை கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப்பார்த்தல் முறையை கொண்டு அல்லது உள்ளத்திலுள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுகின்றனர்.

மஜ்மூஉல் ஃபதாவா: 12/563


57. ஆரோக்கியம் எனும் அருட்கொடையை நன்கறிந்தவர் யார்?

அல் அல்லாமா ஸாலிஹ் அல் fபவ்ஸான் ஹஃபிஸஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

யார் நோயைத் சுவைத்தாரோ அவரை தவிர வேறு யாரும் ஆரோக்கியத்தின் பெறுமதியை அறியமாட்டார்.

(இஆனதுல் முஸ்தபீத் 88)


58. இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

இல்ம் என்பது நேர்வழியை அதன் ஆதாரத்தோடு அறிந்து கொள்வதாகும். மேலும் தக்லீதும் (கண்மூடித்தனமாக பின்பற்றுவதும்) இல்மும் சமமாகாது.

(நூனிய்யது இப்னுல் கய்யிம்)


59. இமாம் இப்னு தைமிய்யாஹ் (رحمه الله)  கூறுகிறார்கள்-

"யாரெல்லாம் அல் குர்ஆனையும், அல்ஹதீஸ் (ஸுன்னாஹ்வையும்) ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதற்கு சுயமாக விளக்கம் கொடுக்கிறாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரிய பொய்யை இட்டுக்கட்டியுள்ளார்.!

இது அல்லாஹ்வின் வசனத்தை மறுக்கும் செயலாகும்.! இப்படி பேச்சை திரித்து சுயவிளக்கத்தை கொடுப்பது சரியான கொள்கையை விட்டு திருப்பும் செயலாகும்!

இப்படி செய்வது பெரும் தீமையை ஏற்படுத்தும்.! மேலும் இது போன்ற செயல்களால் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிரானவர்களுக்கும், அல்லாஹ்வை நம்ப மறுப்போருக்கும், அல்லாஹ்வின் மார்கத்தை சிதைத்து அதை குழப்புவதற்கு வழிவகுக்கும்!

ஆகையால் இது போன்ற பொய்யான வழிகேடுகளை அறிந்து அவைகளை கண்டிப்பாக இஸ்லாமை விட்டு துரத்தவேண்டும்!

(مجموعة الفتاوى(١٣/ ٢٤٣) لشيخ الإسلام ابن تيمية(رحمة الله عليه) 

(நூல்-மஜ்மஊ அல் பஃத்வா 13/243-ஆசிரியர் அஷ்ஷைக் அல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யாஹ்(رحمه الله)


60. இமாம் பர்பஹாரி (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும்! 

"நிச்சயமாக அறிவு என்பது அதிகமான அறிவிப்புகளையோ புத்தகங்களையோ வைத்திருப்பது அல்ல!

நிச்சயமாக அறிஞர் என்பவர் கல்வியையும், சுன்னாவையும் பின் பற்றுபவர் மட்டுமே ஆவார்!

அவர் குறைவான நூல்களையும், கல்வியையும் கொண்டவராக இருந்தாலும் சரியே!

யார் குர்ஆனுக்கும், சுன்னாவிற்கும் மாறு செய்வானோ, அவன் பித்அத்வாதி ஆவான்.

 அவன் அதிகமான கல்வியையும், நூல்களையும் வைத்திருந்தாலும் சரியே!

(ஷரஹுஸ் ஸுன்னா | இமாம் பர்பஹாரி رحمه الله)

قال الإمام أبو محمد البربهاري رحمه الله
واعلم رحمك الله أن العلم ليس بكثرة الرواية والكتب وإنما العالم من اتبع العلم والسنن وإن كان قليل العلم والكتب ومن خالف الكتاب والسنة فهو صاحب بدعة وإن كان كثير العلم والكتب

(شرح السنة)


61. இமாம் ஸாலிஹ் அல் ஃபௌஸான் ஹஃபிதஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

"பெண் பிள்ளைகள் சீரழிவதற்கான காரணங்களுள் மிகப்பிரதானமாது பெற்றோர் புறத்திலிருந்தாகும், அவர்கள் பெண் பிள்ளையை வெட்கம், பத்தினித்தனம், கண்ணியம் என்பவற்றுடன் பாதுகாத்து வளர்த்திருந்தால், சமுகத்தில் மதிக்கத்தக்க ஸாலிஹான பிரஜையாக ஆகியிருப்பாள், இத்தகைய முறையான வளர்ப்பின்றி சமூகம் சீரடைவது என்பது சாத்தியமற்றதாகும்."

நூல்: ஷர்ஹு கிதாபில் கபாஇர் (140)


62. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்-பெளஸான் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் :

(மார்க்க) கல்வியை தேடும் விடயத்தில் சலிப்படைந்து விடாதே, நீ அடைந்து கொள்ளும் அறிவு குறைவாக இருந்தாலும் சரியே, நீ கல்வியைத் தேடு.

(கல்வி) குறைவானதாக இருப்பினும், அதனுடன் இணைந்த நற்செயல்கள், அதில்தான் பரகத் (அபிவிருத்தி) உள்ளது. 

மேலும் அதில் தான் நலவும் இருக்கிறது.

கல்வியை தேடுவதில் தொடர்ச்சியாக இருப்பது எவ்வித சந்தேகமும் இல்லாமல் நிச்சயமாக அது ஒரு நல்ல விடயமாகும்.

மேலும் கல்வியை தேடுவது ஒரு வணக்க வழிபாடாகும்.

கல்வியை தேடுவது உபரியான தொழுகையை விட சிறந்தாக இருக்கிறது.

அல்இஜாபாத் அல்முஹிம்மா : 84.


63. அல்-இமாம் இப்னுல் கய்யிம் (رحم الله) அவர்கள் கூறினார்கள்:

 “உங்கள் இருதயத்தை மூன்று இடங்களில் தேடுங்கள்":

 அல்குர்ஆன் ஓதப்படும் இடத்திலும், அல்லாஹ்வை நினைவுகூறும் கூட்டங்களிலும், மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களிலும்.

 இந்த இடங்களில் நீங்கள் அதைக் 
(இருதயத்தை) காணவில்லை எனில், அல்லாஹ்விடம் இருதயத்திற்காக  மன்றாடுங்கள், ஏனென்றால் உங்களுக்கு இதயமே இல்லை!

 அல்-ஃபவாயித் 1/149  {அல்-இமாம் இப்னுல் கய்யிம் رحم الله }


64. இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ்

قال وسمعت الشافعي يقول وروى حديثا قال له رجل تأخذ بهذا يا أبا عبد الله فقال ومتى رويت عن رسول الله  صلى الله عليه وسلم حديثا صحيحا فلم آخذ به فأشهدكم أن عقلي قد ذهب وأشار بيده إلى رأسه (مختصر المؤمل ج: 1 ص: 57)

ஷாஃபி رحمه الله அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள்.

அப்போது ஒருவர் ஷாஃபி رحمه الله அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? 
என்று கேட்டார்.

அதற்கு இமாம் அவர்கள் 
''நீ என்னை இணைவைப்பாளன் என்று நினைக்கிறாயா? 
அல்லது என்னுடைய இடுப்பில் (நெருப்பு வணங்கிகளுக்குரிய) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா?
அல்லது தேவாலாயத்திலிருந்து வெளியேறிய (கிறிஸ்தவன்) என்று நினைக்கிறாயா? 
ஆம்.
நான் அதை பற்றிப் பிடிப்பேன்.
அதைப் பற்றிப் பிடிப்பேன். 
அதைப் பற்றிப் பிடிப்பேன்.
இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள்.

முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)


65. அறிஞர் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்: 

உடலின் ஆரோக்கியம் குறைவான உணவிலும் உயிரின் ஆரோக்கியம் குறைவான பாவத்திலும் நாவின் ஆரோக்கியம் குறைவான பேச்சிலும் இருக்கின்றன!

قال العلاَّمة ابن القيم رحمه الله:

‏"راحة الجسم في قلة الطعام، وراحة الروح في قلة الآثام، وراحة اللسان في قلة الكلام".
زاد المعاد 
ج٤ ص١٨٦


66. விடாப்பிடியாக கதவை தட்டிக்கொண்டே இருப்பவன் உள்ளே நுழைந்துவிடுவான்!

அலி இப்னு அபீ தாலிப் (ரழி)

நூல் : இரருல் ஹிகம் / 9160


67. எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்..!! என்று  நபி ஸல் அவர்களிடம் கூறினேன் (யாரையும் திட்டாதே என்று ஒரே வரியில் சொன்னார்கள்.)
அன்றுமுதல் நான் யாரையும் திட்டுவதில்லை...

-ஜாபிர் ரலி
(நூல் தப்ராணி)


68. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு ஆண் மகன் தனது காதலை தன் மனைவியிடம் வெளிப்படுத்துவதில் எவ்விது இழிவும் அவனை வந்தடைய போவதில்லை.

ஃபத்ஹுல் பாரி 16/159
 

69. நபி (ஸல்) கூறுகிறார்கள்:

 ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.

நூல்: தப்ரானி


70. இப்னுல் கைய்யூம் (ரஹ்) கூறினார்கள்:

"ஒரு முஸ்லிமின் துன்பப்படுதலைக் கண்டு மகிழ்ச்சியடைவதும், அவரின் துயரத்தைக் கண்டு மகிழ்வதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும்."

மதாரிஜ் அஸ்-சாலிகீன், 1/402


71. இமாம் மாலிக் رحمه الله அவர்கள் கூறினார்கள்:

அறியாமையை பகிரங்கப்படுத்தும் மடையன்

மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்

மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன்; இவன் நபிமொழியைக்கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே

நல்லவர், வணக்கசாலி, சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர் 

ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள் 

நூல் : இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162


72. அபுல்ஆலியா (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்: 

"பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்" என்பதற்கு, 

பூமியில் பாவங்கள் புரியாதீர்கள் என்று பொருள்.

நயவஞ்சகர்கள் அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள்.

நூல் : இப்னு கஸீர் 


 قال الإمام ابن القيم -رحمه الله-: 

‏العاصي وإن تنعم بأصناف النعم، ففي قلبه من الوحشة والذل والحسرات التي تقطع القلوب.

‏الداء والدواء ١/ ١٢٠

73. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:

பாவம் செய்தவன் பல இன்பங்களை அனுபவித்தாலும் அவனுடைய உள்ளத்தில் உள்ளங்களை வெட்டி துண்டாக்கிவிடும் மந்தமான நிலையும், இழிவும், கைசேதங்களும் இருக்கும். 

(நூல்: அத்தாவு வத்தவாவு, பாகம்: 01, பக்கம்: 120)


74. முத்தர்ரிஃப் பின் ‘அப்துல்லாஹ் (ரஹ்) கூறினார்கள்:

 " (நம்) செயல்களை சரிசெய்வதன் மூலமே உள்ளத்தை சரிசெய்ய இயலும்.   நோக்கத்தை (நிய்யத்தை)  சரிசெய்வதன் மூலமே செயல்களைச் சரிசெய்ய இயலும். ”

 ஹிலியதுல்-அவ்லியா, 2/199 |  அபு நு அய்ம் அல்-அஸ்பஹானி (ரஹ்)


قال الإمام الصنعاني -رحمه الله-:

خير الناس من أشاع الخير عن العلماء وأذاعه، ودافع عنهم قادحا فيهم. 

 التنوير (٥٢٨/٩) 

75. இமாம் ஸன்ஆனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:

மனிதர்களில் சிறந்தவர்கள் (மார்க்க) அறிஞர்களிடம் இருந்து நல்லதை பரப்பி, அவர்களை பற்றி குறை கூறக்கூடியவனிடம் இருந்து பாதுகாத்தவர்கள் ஆவர்

(நூல்: அத்தன்வீர், பாகம்: 9, பக்கம்: 528)


76. உங்கள் பிள்ளைகளின் பிறப்புக்கு முன்னதாக அவர்களுக்கு நீங்கள் நல்லுபகாரம் செய்ய வேண்டுமா?

அபுல் அஸ்வத் என்ற அறிஞர் தனது மகன்களை நோக்கி பின்வருமாறு கூறினார்: 

"நீங்கள் பெரியவர்களாக இருக்கும் போதும், சிறியவர்களாக இருக்கும் போதும், நீங்கள் பிறப்பதற்கு முன்னரும் நான் உங்களுக்கு நல்லுகாரம் செய்திருக்கிறேன்". அதற்கு அவர்கள்: "நாங்கள் பிறப்பதற்கு முன்னர் நீங்கள் எங்களுக்கு எப்படி நல்லுபகாரம் செய்திருக்கிறீர்கள்?" என வினவ, "நீங்கள் (பிற்காலத்தில்) திட்டாத விதத்தில் தாய்மார்களை நான் உங்களுக்காகத் தெரிவு செய்து தந்துள்ளேன்" என்றார்.

அதபுத் துன்யா வத்தீன்: 158


77. இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி வினவப்படுகின்றது : 

வினா : மக்கள் புறம் பேசும் ஒரு சபையில் அமர வேண்டி ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ?

பதில் : பாவம் செய்பவரைத் தடுத்து புறக்கணிக்கவில்லையாயின் உனக்கு பாவம் கிடைக்கும், அவ்வாறுஇல்லையாயின் அவர்களைப் பிரிந்து  செல்வதோடு, அவர்களுடன் சேர்ந்து உட்காராமல் இருப்பதுகடமையாகும்."

( மஜ்மூஊ பதாவீஹ் : 8/283)


78. இமாம் இப்றாஹீம் இப்னு ஹானி ( ரஹ்) அறிவிக்கிறார்கள். 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் மூன்று நாட்கள் என்னிடம் எனது பாதுகாப்பின் கீழ் மறைந்திருந்தார்கள். 

அதன் பின் "நான் இடம் மாறி இருப்ப தற்கு வேறொரு இடத்தைப் பார்" என்று என்னிடம் இமாமவர்கள் கூறினார்கள். 

அப்போது நான் வேறொரு இடத்தில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க எனக்கு முடியாது. 

வேறொரு இடம்கிடைத்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, அவருக்காக (பொருத்தமான) இடத்தினைப் பார்த்து சொன்னேன். 

அவர்கள் என் வீட்டி லிருந்து வெளியேறும்போது

 "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் மூன்று நாட்கள் தங்கி விட்டு இடம் மாறினார்கள். 

செழிப்பிலும் கஷ்டத்திலும் அல்லாஹ்வின் (ஸுன்னாவை) தூதரின் நாம் வழிமுறையை பின் பற்றுவதே போதுமானதாகும்'' எனக் கூறினார்கள்.

(நூல்: ஹில்யதுல் அவ்லியா 9 \ 180, 
தபகாதுல் ஹனாபிலா 1\97)


79. ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 

மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனால் மட்டுமே இரவில் நிம்மதியாக தூங்க முடியும்..

பழி வாங்கும் எண்ணம் கொண்டவனால் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது.

 நூல்: அதபுல் மஜாலிஸா லி இப்னி அப்துல் பர்ர் (ரஹ்)


80. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:  

“ஷைத்தான்  மனிதனுடைய அறிவு குறைவாக இருப்பதை வைத்து (அவனை) வழிகெடுக்கிறான்..”.

நூல்(அல்மஸ்லூஸ்)


81. இஸ்லாத்தின் கைப்பிடிகள் ஓவ்வொன்றாக உடைந்து போகும்.

எப்பொழுது இந்த இஸ்லாத்தில் ஜாஹிலியத்தை (ஷிர்க், குப்ர், தீமை அதனுடைய வகைகள் )  தெரியாத மக்கள் வளர்ந்து வரும் போது 

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அல் மபாதிவுல் முபீதா (விளக்கம்) 


82. இப்னுல் முபாறக் (ரஹ்) அவர்கள் “விபச்சாரம் புரிபவன் முஃமினான நிலையில் விபச்சாரம் புரிவதில்லை” என்ற ஹதீஸைக் கூறிய போது

ஒரு மனிதர் இந்த ஹதீஸின் கருத்தை மறுக்கும் தொனியில் என்ன இது என்று கேட்டார். 
இதனால் கோபப்பட்டவராக,

“இவர்கள் நபி(ஸல்) அவர்களது ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் எம்மைத் தடுக்கின்றனர். ஹதீஸின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளாத போதெல்லாம் ஹதீஸை நாம் விட்டுவிட வேண்டுமா? 

இல்லை. நாம் செவியேற்றது போல் ஹதீஸை அறிவித்துக் கொண்டே இருப்போம். (ஹதீஸை மறுக்காமல்) எங்களிடம்தான் அறியாமை இருக்கின்றது என ஏற்றுக் கொள்வோம் என்ற கருத்துப்பட கூறினார்கள்.”

(தஃழீமு கத்ருஸ் ஸலாத்: 1ஃ504)


83. நபித் தோழர்கள் எவரிடமாவது விதி பற்றிய நபிமொழிகளைக் கூறப்பட்டால் 

"நான் இப்போதைய நிலையை விட அமல்களின் பால் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கின்றது " என்றே கூறுவார்கள்.

நூல் : ஈமானிய கடமைகள்


84. இமாம் இப்னு கைய்யிம் –ரஹிமஹுல்லாஹ்– கூறுகிறார்கள்:

உள்ளம் பாழடைவது (அல்லாஹ்வின் தண்டனையில்) அச்சம் தீர்ந்திருப்பதாலும் பராமுகமாக இருப்பதாலுமாகும்.

அது வளமடைவது (அல்லாஹ்வின்) அச்சத்தாலும் (அவனை) திக்ர்-நினைவு கூர்வதினாலுமாகும்.

அல்-பாவாஇத் (பக் : 98)

"خراب الْقلب من الْأَمْن والغفلة وعمارته من الخشية وَالذكر"

الفوائد لابن القيم (ص: 98)


85. இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்...

திக்ர், துஆவை விடச் சாலச் சிறந்தது. ஏனென்றால் திக்ரு என்பது அல்லாஹ்வுடைய பெயர்களையும், அவனுடைய தன்மைகளையும் அழகான முறையில் புகழ்வதாகும். ஆனால் துஆ என்பது அடியார்கள் தத்தம் தேவைகளைக் கேட்பதாகும்.
இது எங்கே அது எங்கே?

அதனால்தான் ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிறது: எந்த அடியான் என்னை நினைவுகூர்வது என்னிடம் தன் தேவைகளைக் கேட்பதைவிட்டுப் புறக்கணிக்கச் செய்துவிட்டதோ அவனுக்கு, கேட்போருக்குக் கொடுப்பதைவிடச் சிறந்ததைக் கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நூல் : வாபிலுஸ் ஸய்யிப்... பக்கம்: 222


86. ஹசன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒரு நாள் கேட்கப்பட்டது:

மக்கள் உங்களைப் பற்றிப் பேசுவதை நீங்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை?

அதற்கு ஹசன் பஸரி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்:

நான் பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தேன்; 

நான் இறக்கும்போது தனியாகத்தான் இறக்க வேண்டும்;

கப்ரில் வைக்கப்படும்போது தனியாகத்தான் வைக்கப்படுவேன்; 

அல்லாஹ்வின் முன்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது தனியாகத் தான் கேட்கப்படுவேன்;

நான் நரகத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும்; 

சொர்க்கத்திற்குப் போனால் தனியாகத்தான் போக வேண்டும். 

இப்படி இருக்க மக்களோடு எனக்கு என்ன இருக்கிறது?

-ஹசன் பஸரி (ரஹ்)


87. முஆவியா பின் ஹைதா  ரலியல்லாஹு அன்ஹு 
கூறுகிறாா்கள் :

உன்  வீட்டிற்கு பழங்கள் வாங்கினால் உன் அண்டை வீட்டாருக்கும் கொஞ்சம் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால்  அதை மறைமுகமாக கொண்டு வர வேண்டும்!  உன் வீட்டு பிள்ளைகள்  அண்டை  வீட்டு பிள்ளைகள் பார்க்கும் படி கொண்டு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்!

{நபி ஸல்} நூல் : {இப்னு ஹீப்பான் தப்ராணி}


88. ஹிஜாப் என்பது ஒரு அழகான திரையாகும் 
அந்த திரையில் இருந்து வெளிவராதே!

ஷைத்தான் விரும்புவதெல்லாம் நீ அந்த திரையில் இருந்து வெளிவருதை விரும்புகிறான்!

{இமாம் ஸுஃப்யான் அத்தவரி ரஹ்}


89. இப்னு அப்பாஸ் {ரழி}
கூறுகிறாா்கள் :

விசு வாசிகளின் பெண்கள் ஏதும், தேவைக்கு. வெளியே சென்றால் தமது தலை முந்தானைகளையும் தாழ்த்தி தமது முகங்களை மறைக்குமாறு. அல்லாஹ் கட்டறையிடுகிறான்!

நூல் : அல் - அதபுல் முஃப்ரத்


90. சுப்யான் அஸ் ஸவ்ரி ரஹ்) கூறினார்கள்:

‘ஒரு நம்பிக்கையாளர் தனிமையில் நற்செயல்கள் செய்யும் போது, மற்றவர்களிடம் அது பற்றி தெரிவிக்கும் வரை ஷைத்தான் அவரிடம் முணுமுணுத்துக் கொண்டிருப்பான். ஷைத்தானின் இந்த தூண்டுதலுக்கு பலியாகி விட்டால் தனிமையில் நிறைவேற்றப்பட்ட அந்த வழிபாடு, பகிரங்கமாக நிறைவேற்றப்பட்ட ஒன்றாக மாறி விடுகின்றது.” 

நூல்: தல்பீஸ் இப்லீஸ்


91. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) கூறுகிறார்கள்…. 

‘அதிக அறிவு வளமுடையமனிதர்கள் பலரை ஷைத்தான் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளான்.

இவர்கள் நாள் முழுவதும் புத்தகங்களை எழுதுவதில் கழிப்பார்கள். இந்தப் பணியை இஸ்லாத்திற்காகத் தான் செய்கிறோம் என்ற எண்ணத்தை ஷைத்தான் அவர்கள் உள்ளத்தில் விதைக்கிறான். ஆனால் அவர்கள் புகழ் பெற வேண்டும். மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இப்பணியைச் செய்கிறார்கள்.

நூல் :தல்பீஸ் -இப்லீஸ்


92. "மனிதன் தேடுகிற மன அமைதியை, அல்லாஹு தஆலா குர்ஆனில் வைத்திருக்கிறான்..!!

(இமாம் இப்னுல் அல் கைய்யிம் ஜவ்ஸி (ரஹ்)

(தல்பீஸ் இப்லிஸ்)


93. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 

” *ஹம்மாதூன்* (மேன்மைமிகுந்த அல்லாஹ்வை அதிகமாக புகழ்பவர்) தான்‌ மறுமையில் (அல்லாஹ்வின்) உயர்வான அடியானாக இருப்பார்.” 

 ஸஹீஹ் அல்-ஜாமி 1571 | ஷேக் அல்-அல்பானி رحمه الله | ஸஹீஹ்


94. அலி இப்ன் அபூ தாலிப் (ரலி) கூறினார்:

“அறிவை நாடி செல்கின்ற ஒருவனை சொர்க்கம் நாடி செல்லும். கீழ்ப்படியாமையை நாடி செல்கின்ற ஒருவனை நரக நெருப்பு நாடி செல்லும்.

(இப்ன் ஹஜர் அல்-அஸ்கலானியின் தீர்ப்பு நாளுக்காக தயாராகுதல் பக்கம்-7)


95. அலி இப்னு அபுதாலிப் رضي الله عنه கூறினார்கள்:

“நல்லடியார்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களை தீமை செய்பவர்களிடம் இருந்து காக்கும்.”

(மன்ஹஜ் ‘அலி இப்னு அபீ தாலிப் பக்கம்.249)


96. ஷேக் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் حفظه الله கூறினார்கள்:

ஈத் தொழுகையை வெளிப்புறத்தில்
தொழுவதற்கான காரணம் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமின் வலிமையை காட்டுவதற்காக தான்

[அல்-முலகாஸ் அல்-ஃபிகி (1/211)]


97. பாவத்தின் தீய விளைவுகள்

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மனப்பான்மை மாறுபடுதல்.

அல்-ஃபுதய்ல் பின் அயாத் رحمه الله கூறினார்கள் : 

“என்னுடைய கழுதை, என்னுடைய பணியாட்கள் என்னுடைய மனைவியின்  நடத்தை மற்றும் என்னுடைய வீட்டின்  சூழ்நிலையில் மாற்றத்தை கண்டால், நான் அல்லாஹ்விற்கு கீழ்படியாமல் உள்ளேன் என்பதை அறிந்து கொள்வேன்.” 
[அல்-பிதாயா வந்-நிஹாயா (10/215)]


98. அப்துல்லா இப்னு முபாரக் رحمه الله கூறினார்கள்:

நான் அரஃபாவின் மாலையில் ஸுஃபியான் அத் தவ்ரியின் பக்கம் சென்ற போது அவர் மண்டியிட்டு அழுத நிலையில் இருந்தார். அவர் என் பக்கம் திரும்பிய போது நான் :

இன்று தோல்வியுற்றவர் யார் தெரியுமா?
என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் கூறினார்,

எவன் ஒருவன் அல்லாஹ் தன்னை மன்னிக்கமாட்டான் என்று நினைக்கிறானோ அவனே.

லதாயிஃப் அல் மஆரிஃப் பக்கம் 310


99. மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
(ஸூரா அன்னிஸா:28)

ஒரு மனிதர் ஸுஃப்யான் அத்-தவ்ரீயிடன் இந்த வசனத்தை பற்றி கேட்டார்கள்: “மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்….”

அவர் பதிலளித்தார்: “ஓர் ஆண் ஓர் பெண்ணை பார்க்கிறார். அவ்வாறு செய்வதனால் அவருக்கு எந்த பயனும் இல்லை என்ற போதிலும் கூட, அவரால் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்தவே முடியவில்லை.இதை விட பலவீனம் எது ?

ஆதாரம்: ஹில்யாத் அல்-அவ்லியா (வ.7, ப.68)


100. வகீ இப்னு அல்-ஜர்ரா رحمه الله கூறினார்கள்:

” ஓர் ஈத் பெருநாள் அன்று ஸுஃப்யான் அல்-தவ்ரீயுடன் நாங்கள் வெளியில் சென்றிருந்தோம் மேலும் அவர் கூறினார் : “எங்களுடைய இந்நாளில் நாங்கள் முதலில் செய்வது எங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்வதை தான்.”

[கிதாப் அல்-வரா, கட்டுரை 66]


101. இமாம் அஹ்மத் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: 

அல்லாஹ் உனக்காக நீ விரும்புகின்ற அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால், நீ அவனுக்காக அவன் விரும்புகின்ற அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

நூல்:
الآداب الشرعية لابن مفلح ج1 / ص104:

قال الإمام أحمد رحمه الله تعالى:
إذا أحببت أن يدوم الله لك على ما تحب فدم له على ما يحب.


102. இமாம் இப்னுல் கய்யிம்(رحمه الله) அவர்கள் கூறினார்கள்.. 

உள்ளம் பூமியைப் போன்றது. அதில் தவ்ஹீதும், அல்லாஹ்வின் மீதான நேசமும், அவனைக் குறித்த அறிவும், அவனைப் பற்றிய  நினைவும், பிரார்த்தனையும், இல்லாமல் போனால் அது வரண்டு விடுகிறது.

بسم الله الرحمن الرحيم وبه نستعين 
      *قال الإمام إبن القيم رحمه الله :-
*القلب كالأرض إنما ييبس إذا خلا من :
*توحيد الله ، وحبه ، ومعرفته ، وذكره ،و دعائه....*
*(أسرار الصلاة/ 60)*

நூல்: அஸ்ராருஸ் ஸலாத், பக்கம் 60


103. இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“சூனியத்தின் கல்வி, எகிப்து நகரங்களில் ஒன்றில் உள்ளது. அந்த இடம் ஃபரமா என்று சொல்லப்படும். யார் அதை(சூனியத்தை)ப் பொய்ப்பிக்கிறாரோ, அவன் நிராகரிக்கக்கூடியவன். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்ப்பிக்கக்கூடியவன். எதார்த்தத்தையும், கண்கூடாக அறியப்படுவதையும் மறுக்கக்கூடியவன்”, என்றார்கள்.

தஃப்ஸீர் குர்துபீ - பாகம் 2 , பக்கம் 46


104. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ் விமர்சிக்கும் அழகிய வியாபாரியாக மிளிர வேண்டும்..

நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் (ஸல்) பக்கம் 330


105. தீயவனின் தோழமை ஆபத்தானது

பிஷ்ருல்ஹாஃபி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்:

கெட்டவர்களுடன் தோழமை கொள்வது நல்லவர்களைப் பற்றிய தப்பெண்ணத்தை உருவாக்கும்.

நூல்: 
الآداب الشرعية لابن مفلح ٧٩/١

قال بِشر الحافي -رحمه الله-:
*صُحبةُ الأشرار أورثت سوء الظنِّ بالأخيار*.


106. “மற்றவர்களது குறைகளைத் தேடித் திரிபவன்
வாழ்வில் இறையருளை இழந்து விடுவான்”

-பேராசிரியர் நாஸிர் உமர்


107. உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:

நல்ல நட்புக்காக பலகாலம் காத்திருந்தேன்.

நூல் : இஸ்தீ ஆப்


108. ஹாதிம் அல்-அஸ்ஸாம் (ரஹ்) கூறினார்கள்:

"நான் மனித படைப்பைப் பார்த்தேன், (அதில்) ஒவ்வொரு நபருக்கும் அவருக்குப் (மிகவும்) பிரியமான ஒன்று இருப்பதை உணர்ந்தேன், ஆனால், அந்த (விருப்பமான) ஒன்று (அவர்) அவரது மண்ணறையை அடைந்ததும், அது அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது. ஆகையால், (நான்) எனக்கு மிகவும் பிரியமானதாக என் நற்செயல்களை ஆக்கிக் கொண்டேன், ஏனெனில், அவை என் மண்ணறையிலும் (பிரியாமல்) என்னுடன் இருக்கும்.

முக்தசர் மின்ஹாஜீல்-காசிதீன்| பக்கம் 28 | இமாம் இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்)


109. ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: 

ஒரு கூட்டம் தம் மார்க்க விஷயங்களில் அநாசாரம் ஒன்றை உருவாக்கினால், அதன் இடத்தை வகிக்கும் நபிவழியான சுன்னத்தை அல்லாஹ் அகற்றாமல் இருப்பதில்லை. பிறகு மறுமை நாள்வரை அந்த நபிவழி அவர்களிடம் திரும்பிவருவதே இல்லை.

 (தாரிமீ)


110. ‘நான் உலகத்தைச் சேர்ந்தவன் கிடையாது. 

உலகம் என்னைச் சார்ந்தது அன்று! 

(உலகத்திற்கும் எனக்கும் ஒட்டு உறவு எதுவுமில்லை) 

எனக்கு முன்னால் கியாமத் உள்ள நிலையில் நான் அனுப்பப்பட்டுள்ளேன்' 

(அனஸ்/ அல்அஹாதீஸுல் முஃக் தாரத்/ழியாஉ)


111. நானும் மௌனமாக (அமைதியாக) இருந்து, 

நீங்களும் அமைதியாக (மெளனமாக) இருந்தால், 

தெரியாதவர்களுக்கு யார் கல்வி கற்பிப்பது (சொல்லிக்கொடுப்பது) ?

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

நூல்: மஜ்மூல் பதாவா


112. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா கூறினார்கள்:

"துன்யாவில் மிகச் சிறந்த இன்பம் அல்லாஹ்வைப் பற்றிக் கற்றுக்கொள்வதாகும் மற்றும் மறுமையில் சிறந்த இன்பம் (அறிந்து கொண்ட அந்த உயர்ந்தோன்) அவனைப் பார்ப்பதாகும் ."

(மஜ்மு அல் ஃபதாவா 14/163)


113. உன் சகோதரனை பற்றி உன்னிடம். குறைசொல்லும்போது, அந்த இடத்தை விட்டு சிறிய (புன்னகையுடன்) அகன்றுவிடு..!!

(இப்னு கைய்யிம் ரஹ்)
[அல் பவாயித்]


114. அபூதர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

இல்மை (அறிவை)த் தேடுங்கள்.

உங்களால் முடியவில்லையென்றால் இல்மு (அறிவு)ள்ளோரை நேசியுங்கள். 

அவர்களை உங்களால் நேசிக்க முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவர்களை வெறுக்காதீர்கள்.

சிஃபத்து சஃப்வா 1/240


115. "(தொழுகை) நிம்மதியின் வாசலைத் திறக்கிறது..!!

(இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்)
(அல்பவாயித்)


116. இமாம் ஹஸன் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

வாழ்க்கையில் மூன்று விஷயங்களைத் தவிர
வேறு எதுவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியவை அல்ல.

அவை:

1. கியாமுல் லைல்.

 2.முஃமினான சகோதரரைச்
 சந்திப்பது.

 3.ஜமாஅத்துடன் தொழுவது.”

நூல் :ஹில்யத்துல் அவ்லியா


117. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

''இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது 

உடலுக்கு தீங்கு விளைவிக்கும்...!!

[ஜாத் அல்-ம’ஆத்தில் இப்னு அல்-கய்யிம் (4/367)]


118. அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

உங்களுள் ஒருவர் தம் சகோதரனின் கண்ணில் உள்ள சிறு துரும்பை பார்க்கிறார் (ஆனால்) தன் கண்ணில் உள்ள பெரும் கட்டையை மறந்துவிடுகிறார். (அடுத்தவர் களின் சிறிய குறையைக் கூட பெரிதாகப் பார்க்கிறார்கள் ஆனால் தன்னிடம் உள்ள பெரும் குறைகளை கண்டு கொள்வதில்லை)

 நூல் : அல்அதபுல் முஃப்ரத் 592


119. இமாம் இப்னு கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“ரமலான் மாதத்தில் தர்மம் செய்வது எவ்வாறு ஏனைய மாதங்களில் தர்மம் செய்வதை விடவும் சிறபானதோ அதே போன்று வெள்ளிக்கிழமையன்று தர்மம் செய்வது ஏனைய நாட்களில் தர்மம் செய்வதைவிடவும் சிறந்ததாகும்..!!

நூல் :அல்பவாயித்


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

قلبٌ شاكرٌ و لسانٌ ذاكرٌ و زوجةٌ صالحةٌ تُعينُك على أمرِ دنياك و دينِك خيرٌ ما اكْتَنَزَ الناسُ

صحيح الجامع ٤٤٠٩ | الشيخ الألباني رحمه الله | صحيح

120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூறும்) *நன்றியுள்ள இதயம்*, (அடிக்கடி) அல்லாஹ்வைக்  *திக்ரு செய்யக்கூடிய நாவு* மற்றும் உலக, மார்க்க விவகாரங்களில் உங்களுக்கு உதவக்கூடிய  *ஸாலிஹான மனைவி* . இவைதான் மனிதன் வைத்திருக்கக்கூடிய சிறந்த பொக்கிஷங்கள்."

சஹீஹ் அல்-ஜாமி '4409 | ஷேக் அல்பானி | ஸஹீஹ்


121. இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் : 

''உங்கள் மனைவியை அவா்கள் விரும்பும்  பெயரை கொண்டு, அழையுங்கள் அது (அன்பை) அதிகரிக்கும்..

 நூல் :  (பதாவா-அல்-ஸியாம்)


122. இமாம் ஸஅதி (ரஹ்) கூறுகிறார்கள் :

அல்லாஹ் மனிதனுக்கு இரண்டு கண்களை கொடுத்து, ஒரு கண்ணில் தனது குறையையும் மறுகண்ணில் மற்றவர்களின் நலவை பார்க்கவும்தான்.

இரண்டு கண்களாலும் பிறருடைய குறையை மட்டுமே பார்த்தால் தன் குறையை பார்க்க கண்ணே இல்லையே என்றுதான் கவலைப்படுகிறேன்.!!!

நூல் : தப்சீர் இப்னு கஸீர்


123. இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் நான் அல்லாஹ்வை 50 வருடங்களாக வணங்கிக் கொண்டிருக்கிருந்தேன், மூன்று விடயங்களை நான் விடாதவரை இபாதத்தில் இன்பத்தை உணர முடியவில்லை....

1- மக்களை திருப்தி படுத்துவதை விட்டுவிட்டேன், அவர்களிடத்தில் உண்மையை உரக்கச் சொல்வதற்கு சக்தி பெற்றேன்.

2- பாவம் புரிபவர்களின் சகவாசத்தை விட்டு விட்டேன், நல்லவர்களின் சகவாசம் கிடைத்தது.

3-உலகத்தின் இன்பத்தை விட்டு விட்டேன், மறுமையின் இன்பத்தை பெற ஆரம்பித்தேன்.

நூல் - ஸியர் அஃலாமுன் நுபலா- 11/34


124. வினை விதைத்தவன் வினை அறுப்பான்:

அஷ்-ஷெய்க், அல்-இமாம் அஸ்-ஸுன்னா, அல்-ஃபகீஹ், முஹம்மது பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் رحمه الله تعالى அவர்கள் கூறுவதாவது:

தன் குழந்தைகளை (இறையச்சத்தின் அடிப்படையில்) வளர்க்கும் விடயத்தில் அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய விடயங்களை எந்த பெற்றோராவது செய்ய தவறினால், அவர்களின் வயதான காலத்தில், அந்த குழந்தைகளும் அந்த பெற்றோர் விடயத்தில் அல்லாஹ் கடமையாக்கிய விடயங்களை செய்யமாட்டார்கள்.

_ நூல் : ஸிஃபத்துஸ் ஸலாஹ், பக்கம் 27_


125. ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உதய்மீன் رحمه الله கூறினார்கள்:
,,               
நீங்கள் (தர்மம்) கொடுக்கும்போது உங்கள் குழந்தைகள்  கைகளில் கொடுத்து அவற்றை கொடுக்கும்படி செய்யுங்கள்.

(ஷர்ஹ் அல் கஃபியா - 4/446)


126. அபூதர்தா (ரழியல்லாஹு அன்ஹு)  கூறுகிறார்கள் :

‘ஹராமான வழியில் உழைத்து தர்மம் செய்பவர் அனாதையின் செல்வத்தை அபகரித்து விதவைக்கு ஆடை அணிவித்தவரைப் போன்றவராவார்.’

 (நூல்: அஸ்ஸுஹ்த்- இமாம் அஹ்மத்)


127. இமாம் ஷாபிஈ ரஹிமஹில்லாஹு  அவர்கள் கூறுகிறார்கள் : 

இறையச்சம் இல்லாமல் வெறும் அறிவுக்கு மட்டும் அல்லாஹ்விடத்தில் சிறப்பு இருக்குமெனில், அல்லாஹ்வின் படைப்பினங்களில் இப்லீஸே சிறந்தவனாக இருந்திருப்பான்.

 (தபகாதுஷ் ஷாபிஇய்யதில் குப்ரா)


128. மகிழ்ச்சியை ஆபத்தென்றும் சோதனையை நிஃமத்தென்றும் கருதாதவன் மார்க்கத்தை அறிந்தவனாக இருக்க முடியாது.

[சுப்ஃயான் அத்தவ்ரீ ரஹ்]


129. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவா்களிடம் கேட்கப்பட்டது ,,

உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா என்று 

அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறது என்று 
பதிலளித்தார்கள்..!!

(தபகாத் இப்னு  அல் குப்ரா)


130. இமாம் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின் றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

'நீங்கள் உங்கள் மனைவியுடன்  அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையில்  ஒவ்வொருநாளும் அருள் நிறைந்த நாளாகும் ,,

நூல் :[ அல் மஜ்மூல் பதாவா ]


131. இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டில் இருக்கும்போது தன்னை நல்ல முறையில் அலங்கரித்துக் கொள்வார்கள்.

அதுபற்றி அவரிடம் வினவப்பட்டபோது

 “எனது மனைவி அழகாக, சுத்தமாக இருக்க வேண்டும் என நான் விரும்புவதைப் போல நானும் அழகாக, நேர்த்தியாக இருக்க வேண்டும் என எனது மனைவி விரும்புவாள். அதற்காகவே என்னை அலங்கரித்துக் கொள்கிறேன்” என்றார்கள்.

(தப்ஸீர் குர்தூபி).


132. இமாம் முஹம்மது ஸாலிஹ் அல்-உதய்மீன் رحمه الله அவர்கள் கூறுகிறார்கள்: 

உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குழந்தையாக மற்றும் நல்ல தந்தையாக மற்றும் மனைவியாக வாழ வேண்டும் என்றால்

உங்கள் குழந்தைகள் முன்னே நீங்கள் இருவரும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள்.. 

[ஃபதாவா-அல்-ஸியாம்]


133. “கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிப்பவன் பைத்தியக் காரனாகத்தான் இருப்பான்!” 

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு ..!!!

(தாரமீ) (ஸஹீஹ் அல்பானீ)


134. எனது அண்டை வீட்டார்
பசித்திருந்து, நான் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை..

அவா் மனம் விரும்பாத செயலை. நான் ஒரு போதும்  செய்ததும் இல்லை.

(இமாம் - அபூஹனீபா ரஹ்)


135. இப்னு அல் -ஜவ்ஸீ (رحمه الله) கூறினார்: 

நாங்கள் கிண்டல் மற்றும் கேலியுடன் சிரித்துக்கொண்டு தான் இருந்தோம் ஆனால் மக்கள் எங்களைப் பின்பற்றத் (ஒரு உதாரணமாக எடுக்கத்) தொடங்கிய போது நான் புன்னகை புரியக் கூட அஞ்சினேன்.

السير الذهبي 7/132


136. இப்னு உமர் (றழி) அவர்களிடம் ‘ஸஹாபாக்கள் சிரிப்பார்களா?’ என வினவப்பட்டபோது ‘ஆம் ஆனால் அவர்களது உள்ளங்களில் ஈமான் மலை போன்று இருந்திருக்கிறது’ என்றார்கள்.

(ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)


137. அபூ அப்திர் ரஹ்மான் சுலமி (ரஹ்) கூறுகிறார்கள் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) இன்னும் உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரழி) போன்றவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் கூறுவார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பத்து வசனங்களை கற்றுக் கொண்டால் அந்த பத்து வசனங்களில் உள்ள கல்விகளையும் அமல்களையும் கற்கின்ற வரை அவற்றுக்கு மேல் தாண்ட மாட்டார்கள். மேலும், அவர்கள் கூறுவார்கள், நாங்கள் குர்ஆனையும் இல்மையும் அமலையும் அனைத்தையும் ஒன்று சேர்த்து கற்றுக் கொண்டோம்.

நூல் : தஃப்ஸீர் தபரி


138. வஹ்ப் இப்னு முனப்பிஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்...

உடல் இச்சையை எவர் தன் காலால் மிதிக்கிறாரோ...

அவர் நிழலை நெருங்கவும் ஷைத்தான் அஞ்சுகிறான்.

நூல்: அல்- ஹில்யஹ்-49/2


139. இப்னு அல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

“அல்லாஹ்விற்காக என்ற தூய நோக்கத்துடன் ஒரு செயலைச் செய்து முடித்த பிறகு ரியாவினால் பாதிப்பு ஏற்படும் போது, அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமானது”

 நூல்: தல்பீஸ் இப்லீஸ்


140. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) கூறுகிறார்கள்.. 

‘அதிக அறிவு வளமுடையமனிதர்கள் பலரை ஷைத்தான் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளான்.

இவர்கள் நாள் முழுவதும் புத்தகங்களை எழுதுவதில் கழிப்பார்கள். இந்தப் பணியை இஸ்லாத்திற்காகத் தான் செய்கிறோம் என்ற எண்ணத்தை ஷைத்தான் அவர்கள் உள்ளத்தில் விதைக்கிறான். ஆனால் அவர்கள் புகழ் பெற வேண்டும். மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இப்பணியைச் செய்கிறார்கள்.

நூல் :தல்பீஸ் -இப்லீஸ்


141. இமமாம்  ஹஸன் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

நீ பாதை தவறுகின்றபோதெல்லாம் உனது பாவங்களை ஒருமுறை திரும்பிப்பார். நேரான வழியைக் கண்டுகொள் வாய்..!!!

நூல் - ஹில்யத்துல் அவ்லியா


142. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்  : 

எவர் மனம் திருந்தி நல்ல முறையில் இருக்க விரும்புகின்றாறோ அவருடைய வெளிப்படையான செயல்களை விட அவரது இரகசியமான செயல்கள் சிறந்ததாக (நல்லதாக) இருக்கட்டும்.

நூல் :  தர்தீபுல் மதாரீக்


143. ஷேய்க் ஸாலிஹ் அல் அஷ்-ஷேய்க் حفظ الله கூறினார்கள் : 

”உங்களை விட அதிகம் மனனம் செய்தவரை கண்டோ அல்லது உங்களை விட அதிக அறிவுள்ளவராக இருக்கிறார் என்றோ உங்களை காட்டிலும் (அல்லாஹ்வின்) அடிமைகளுக்கு அதிக  நன்மையளிக்க கூடியவராக இருக்கிறார் என்றோ அவர் மீது பொறாமை படாதீர்கள் மாறாக யாரோ ஒருவர் அல்லாஹ் (عزوجل) வின்  உரிமைகளையும் அடிமைகளின் உரிமைகளையும் நிலைநாட்டுகிறார் என சந்தோஷம் அடையுங்கள்.” 

(அத்-தாரிக் இலா அன்-நுபுக் அல்-‘இல்மி பக்கம் 115)


144. இப்னு மஸ்ஊது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

யார் தான்‌ அல்லாஹ்வை பிரியப்படுவதை ( பிரியத்தின் அளவை) அறிய விரும்புகிறாரோ அவர் குர்ஆனிடம் தன்னை எடுத்து காட்டட்டும்.

நூல் : ஜாமிஉல் பயான் இல்ம்


145. நபி (ஸல்) அவா்கள் கூறுகிறார்கள் : 

நீங்கள் அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூதின் ) நட்பைப் பற்றி பிடித்து கொள்ளுங்கள்!

நூல் : இப்னு ஹீப்பான் -தப்ராணி


146. தனியே நடந்து வந்தார். தனியே இருக்கும் போதுதான் மரணிப்பார்; நாளை மஹ்ஷரில் தனியாகத்தான் எழுப்பப்படுவார்! 

அபூதர் ரலியல்லாஹு அன்ஹு 

நூல்:  சீரத்- இப்னு ஹிஷாம்; பக்கம்:256


147. இமாம் மாலிக் رحمه الله கூறினார்:

எப்போது ஒரு மனிதன் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறாரோ அப்போதே அவருடைய கண்ணியம் அவரை விட்டு விலகிச்சென்று விடுகிறது.

[தர்தீபுல் மதாரிக்1/59]


148. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

உங்களுடைய பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! 

(நூல் : அஹ்மத் 20704)


149. இமாம் -முஹம்மது ஸாலிஹ் அல் உஸைமின்  ரஹிமஹுல்லாஹ் அவா்கள் கூறுகிறார்கள் :

நீங்கள் ஸதகாவை முற்படுத்துங்கள்! உங்களுக்கான (அருளின் வாசல்) எப்பொழுது வேணுமானாலும் திறக்கப்படலாம்!!

நூல் : (அஷ்ஷ ரஹ் அல் மும்திஃ)


150. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

 “உங்கள் மார்க்க விஷயத்தில் முதலில் நீங்கள் இழப்பது இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மையைத் தான். அப்போது, நீங்கள் பெருங்கூட்டத்தால் நிரம்பியிருக்கிற ஒரு மஸ்ஜிதுக்குள் நீங்கள் நுழைவீர்கள். ஆனால், இறையச்சத்தால் பணிந்து நடக்கும் தன்மை கொண்ட ஒருவரையும் நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்!

நூல் : அஸ்ஸுத் இமாம் அஹ்மது  ஹம்பல்


151. உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவா்கள் [சிறுவர்களை]கடந்து சென்றால் எனக்காக(தூவா)
செய்யுங்கள் என்று சொல்வார்கள்!

நூல் : அல் அதபுல் -முஃப்ரத்


152. காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் யர்மூக் யுத்தத்தில் பெண்களை

முஸ்லிம்களின் படைக்குப் பின்னால் நிற்கச் சொல்லி அவர்களிடம் வாள்களைக் கொடுத்து,

முஸ்லிம்களுள் எவரேனும் யுத்ததிலிருந்து புறமுதுகிட்டு ஓடினால் அவரைக் கொன்று விடும்படி ஏவினார்கள்...

அல்பிதாயா வந்நிஹாயா லி இப்னு கஸீர் 7/12


153. இமாம் இப்னு தைம்மியா ரஹ் கூறினார்கள்:

ஜும்ஆவிற்கு வரும் ஒருவர் இமாம் வெளியே வரும் வரை (அதாவது குத்பா நடத்துவதற்கு வரும் வரை) தன்னை தொழுகையில் மும்மரமாக ஈடுப்படுத்திக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும்

[مجموع الفتاوى ١٨٩/٢٤]


154. இமாம் ஹஸன் அல் பஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்)
கூறுகிறார்கள் :

பொறுமை நல்லவைகளின் பொக்கிஷமாகும்

அல்லாஹ் தனக்கு நெருங்கியவர்களுக்கு  மாத்திரமே அதை கொடுப்பான் வேறு எவருக்கும் கொடுக்க மாட்டான்!

நூல் : ஹில்யத்துல் அவ்லியா


155. நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்:

(இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாரிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். 

நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் – எண் : 29


156. மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர் மட்டுமே நம்முடைய கடைவீதிகளில் விற்றல் வாங்கலில் ஈடுபடவேண்டும்!

உமர் ரழியல்லாஹு அன்ஹு 

(நூல்: கன்ஜுல் உம்மால் - 9865)


157. அல்லாமா ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

ஹிஜாப் என்பது உங்களுக்கும்  மக்களுக்கும்  இடையிலான திரையல்ல!

இது உங்களுக்கும் மக்களின், கெடுதிக்கும் இடையிலான திரையாகும்!

நூல்  :  மஜ்மூல் பதாவா


158. உன்னுடைய நண்பனுடைய தேவையை பூர்த்திசெய்வது மிஸ்கீன்களுக்கு உதவுவைதவிட மிக மேலானது!

இமாம்  - இப்னு ஜவ்ஸி (ரஹ்)


159. உலகில் பிரபல்யம் இல்லா எத்தனையோ மனிதர்கள் அல்லாஹ்விடத்தில் மிகப் பிரபல்யம் பெற்றவர்கள். 

மிகச் சிறந்த அளவீடு தக்வா மாத்திரமே.

(முஹம்மத் அல் முஹைஸினி)


160. ஸதகா செய்வதைய்யும் (தவ்பா) செய்வதையும்  விரைவுபடுத்து ஏனெனில் உனக்கானவா் உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறாா் அவா் ஒரு நொடி முந்தவும் மாட்டார் பிந்தவும் மாட்டார்
சரியான நேரத்தில் வந்துவிடுவாா்!

-இமாம் - இப்னு அசாகீர் ரஹ்


161. இமாம் அப்துர் ரஹ்மான் அல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

நீ பாவம் செய்ததற்கு பிறகு உன்னுடைய இருதயத்தில் ஒரு இருளைக் கண்டால், அப்பொழுது உன்னுடைய இருதயத்தில் ஒளி இருக்கிறது. ஏனெனில் ,அந்த ஒளியால் தான் நீ இருட்டை உணர்கிறாய்”.

( ரவ்தத்துல் முஹிபீன், 2/112)


162. அபூல் ஹசன் அல்- முஜய்யன் கூறினார்கள்:

“*ஒருபாவத்திற்கு பின் செய்யப்படும் மற்றொரு பாவம்  முதல் செய்த பாவத்திற்கானத் தண்டனை. மேலும்,ஒரு நற்செயலுக்குப் பிறகு செய்யப்படும் மற்றொரு நற்செயல் முதல் செய்த நற்செயலுக்கான வெகுமதியாகும்*”.

 நூல் : ஸிஃபதுல் ஸஃப்வாஹ்,2/456


163. உங்கள் அறிவை நீங்கள் யாரிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் 

” இந்த அறிவு என்பது உங்களுடைய சதை மற்றும் இரத்தமாகும். இதை குறித்து நீங்கள் கேள்விக் கேட்கப்படுவீர்கள். எனவே யாரிடமிருந்து அதை பெறுகிறீர்கள் என்பதை பாருங்கள்.”

இமாம் மாலிக் رحمه الله 
நூல் : கிஃப்யா, எண்.21


164. மக்களை நாவாலும் கையாலும் தூற்றுபவர்கள், அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்.!!

யார் தெரியுமா {புறம் பேசுபவர்கள்}

இமாம் கத்தாதா {ரஹ்}
நூல் : தப்ஸீர் தபரீ


165. இக்ரிமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஓதுவதற்காக அல்குர்ஆனைத் திறந்தால்

அல்குர்ஆனை அவரது முகத்தில் வைத்து அழுதவாறு இது எனது இரட்சகனின் வார்த்தை, இது எனது இரட்சகனின் வார்த்தை எனக் கூறியவராக மயக்கமடைந்து விழுந்து விடுவார்கள்.

நூல் : இஸ்தீஆப்


166. அழுது, கண்ணீர் சிந்தியவன் இறை
அச்சமுள்ளவன் கிடையாது; 

மனோச்சைக்கு விருப்பமான ஹராமான செயலொன்றை செய்வதற்கு சக்தி பெற்றும் அதை தவிர்ந்தவனே இறை அச்சமுள்ளவன்

இமாம் இப்னு ரஜப் (ரஹ்) 
நூல் : ரஸாயில் 1:1 31


167. இப்னு ஹஜர் அல்அஸ்கலானி ரஹ் கூறுகின்றார்கள் : 

முஸ்லிம் பெண்கள் காலாகாலமாக அந்நிய ஆண்களை விட்டும் *முகத்தை மறைக்கும்* வழக்கமுடையோராகவே இருந்து வருகின்றனர். 

பத்ஹுல் பாரீ{ 9/424}


168. முஹம்மது இப்னு சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

சில மக்கள் கல்வி கற்பதையும் அறிஞர்களுடன்  பழகுவதையும் விட்டுவிட்டார்கள். தொழுகை இன்னும் நோன்பில் மட்டும் (வணக்க வழிபாட்டில் மட்டும்) ஈடுபட்டார்கள். அவர்களின் தோல் எலும்போடு ஒட்டும் அளவு காய்ந்துவிட்டது. பிறகு, (கல்வி இல்லாததால்) ஸுன்னாவிற்கு மாறு செய்து அழிந்துபோனார்கள். முஸ்லிகளை கொன்றார்கள். எந்த இலாஹைத் தவிர வேறு ஒரு இலாஹ் ( வனங்கத்தகுதியானவன்) இல்லையோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் அறியாமையில் அமல் செய்தால் அவர் சீர்திருத்தம் செய்ததைவிட அவர் சீர்கெடுத்ததுதான் அதிகமாக இருக்கும்.

நூல் : இமாம் இப்னு அப்தில் பர் அவர்களின் "அல் இஸ்தித்கார்"


169. அறிஞர் இப்னு அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

முழு உலகமும், அது அழியும் வரை உருவாக்கப்பட்டதிலிருந்து,  அதை விட சிறந்தது ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்கள்.

الكافية الشافية (2/4)


170. இமாம் இப்னுல் கையீம் (ரஹ்) கூறினார்கள்:

இந்த உலகத்தில் ஏற்பட்ட புதுமைகளும் (பித்அத்)  வழிகேடுகளும் சுன்னாவையும் வழிகாட்டுதலையும் வெளிப்படுத்தத் தவறியதற்குக் காரணங்களாகும்.

الصواعق المرسلة (3/1133)


171. எவ்வாறு நன்றியுள்ள அடியானாக இருப்பது?

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) கூறினார்கள்:

அடியான் நன்றி செலுத்துவது மூன்று அடிப்படைகள் மீது சுற்றி வருகின்றது. 

அவற்றை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றினாலே அன்றி, அவன் நன்றிமிக்க அடியானாக இருக்கமாட்டான். 

1- தனக்கு அல்லாஹ் அருளியிருக்கும் நற்பாக்கியத்தை ஒப்புக் கொள்ளுதல்.

2- அதற்காக அவனைப் புகழுதல்.

3- அந்நற்பாக்கியத்தின் உதவியைக் கொண்டு  (அதாவது அதனைப் பயன்படுத்தி, 

அதனை அருளிய) அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொள்வதற்கு முயற்சித்தல்.

நூல்:
عدة الصابرين (ص: 148)

قال الإمام ابن القيم: وشكر العبد يدور على ثلاثة أركان لا يكون شكورًا إلا بمجموعها

أحدها: اعترافه بنعمة الله عليه، والثاني: الثناء عليه بها، والثالث: الاستعانة بها على مرضاته.


172. உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார் :

அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுமாறு அறிவுரை கூறக்கூடியவர்கள் அதிகம் உள்ளனர், ஆனால், அதை கடைபிடிக்கக்கூடியவர்கள் (மிகவும்) குறைவானவர்கள்.

ஹில்யா அவ்லிய்யா : 5/267. 

‏قال عمر بن عبد العزيز رحمه الله : 

إن تقوى الله، 
الواعظين بها كثير، والعاملين بها قليل

رواه أبو نعيم في الحلية (٥/٢٦٧)


173. ஒரு மனிதனிடம் கிட்டத்தட்ட 700 பெரிய பாவங்கள் உள்ளன!

அவன்  மனந்திரும்பினால் அதில் ஒன்றும் பெரியது அல்ல, அவை தொடர்ந்தால் ஒன்றும் சிறியது அல்ல." 

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு 
நூல் : இமாம்  தஹபி சியருன் அலா பின் நுபலா


174. இமாம் இப்னு அல் ஜவ்ஸி (ரஹ் ) கூறினார்கள் : 

எவன் ஒரு  முஸ்லிமின்  மானத்தின் மீது தன் நாவை விட்டுவிட்டு அவர்களின் குறைகளைத் தேடுகிறாரோ, 

அவருடைய நாவை மரணத்தின் போது அல்லாஹ் ஷஹாதாவைச் சொல்லவிடாமல் தடுத்துவிடுவான்!

நூல் : சைதில் அல் காதிர்


175. இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

நல்லதையே சொல்லுங்கள்; 

(அதனால்) அதனைக்கொண்டு (மக்களிடம்) அறியப்படுவீர்கள். 

நல்லதையே செய்யுங்கள்; 

நல்லோர்களின் நீங்களும் இருப்பீர்கள்.

*(இரகசியங்களையும் மற்றவர்களின் பேச்சுக்களையும்) வெளிப்படுத்துகின்ற (செவிமடுப்பதையெல்லாம்) பரப்புகின்ற அவசரக் குடுக்கைகளாக இருக்காதீர்கள்.*

أبو داود في الزهد ١٤٦ 
قال عبدالله بن مسعود رضي الله عنه :
قُولُوا خَيْرًا تُعْرَفُوا بِهِ
واعْمَلُوا بِهِ تَكُونُوا مِنْ أَهْلِهِ
ولا تَكُونُوا عُجُلًا مَذَايِيعَ بذرًا.


176. இப்னு அப்பாஸ்: ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் 

குர்ஆனை மெதுவாக மெதுவாக அடைய  முயல்பவர்  அருள்  செய்யபடுவார் 

கடுமையாக அவசரமாக அடைய முயற்சிப்பவர் வீழ்ந்து விடுவார்!

நூல் : இமாம் தஹபி சியருன் அலா பின் நுபலா


177. திருமணமாகாத ஒருவர் அதற்காக கடுமையாகப் பாடுபடுவது கடமையாகும், ஏனெனில் அவ்வாறு செய்வதற்கான கட்டளை குர்ஆன் மற்றும் சுன்னாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இமாம் அல்பானீ (ரஹ்)
فتاوى جدة (19)


178. இமாம் -  முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

ஒரு வெள்ளைக்காரன் ஒரு கறுப்பின மனிதனை அவனது தோலின் நிறத்தால் கேலி செய்தால் இவ்வாறு கேலி செய்வது  இவைகளை படைத்த அல்லாஹ்வை கேலி செய்வதாகும். 

நூல்  :  ஸில்ஸிலத்துல் ஹுதா வந்நூர்


179. "உலக வாழ்க்கையைத் துறப்பவனை அல்லாஹ் நேசிக்கிறான்!

தீமைகளை நிராகரிப்பவனை மலக்குகள் நேசிக்கிறார்கள்!

பேராசையை விட்டுவிடுபவர்களை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்." 

[‘உஸ்மான் – இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு]


180. "என் குறையை மன்னிக்கும்படி அல்லாஹ்விடம்  நான் தொழாத எந்த  ஒரு தொழுகையையும் நான் தொழாமல் இருந்ததில்லை!

(உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு)


181. இமாம் இப்னு அல் கைய்யிம் அல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

"இமாம் அஹ்மத் ஒரு மில்லியன் ஹதீஸ்களை மனப்பாடம் செய்த போது பணிவுடன் இருந்தார்கள்

நீங்கள் சில ஹதீஸ்களை மனப்பாடம் செய்து விட்டு நீங்கள் எவ்வாறு  பெருமை அடையலாம் ?" 

நூல் : சையதில் அல் காதிர்


182. இமாம் அல் - வகீஃ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :

*யார் ஒருவன் தன்னுடைய கருத்தை வலுசேர்ப்பதற்காக ஹதீஸை தேடுவானோ, அவன் ஒரு பித்அத்வாதியாவான்.*

 தம் அல்கலாம் வ அஹ்லிஹி: 337.

قال وكيع -رحمه الله : من طلب الحديث ليقوي به رأيه فهو صاحب بدعة. 
* ذم الكلام وأهله : 337


وقال ابن القيم: 

أربعةٌ تجلب الرزق:

 قيام الليل، 

وكثرة الإستغفار بالأسحار،

 وتعاهد الصدقة، 

والذكر أول النهار، 

وآخره.

قيام الليل شرف المؤمن 

183. இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறினார்கள்: 

நான்கு விஷயங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டு வருகின்றன: 

இரவு வணக்கம், 

விடியற்காலையில் பாவமன்னிப்பு கேட்பது, 

தர்மம் செய்தல் மற்றும்

 பகலின் தொடக்கத்திலும் முடிவிலும் (திக்ர்) அல்லாஹ்வை நினைவுகூருதல்.

நூல் : கியாமுல் லைல் ஸர்ப் அல் முஃமீன்


184. இப்னு அப்பாஸ் (ரஹ்) கூறினார்கள் : 

இரவில் தொழுகையில்  நிற்பதை விட ஒரு மணி நேரம் அறிவை மனப்பாடம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமானது."

நூல் : இமாம் தஹபி சியருன் அலா பின் நுபலா


185. அப்துல்லாஹ் பின் மசூத் (ரலி) கூறினார்கள்

மக்களே, கற்றுக்கொள்ளுங்கள், அறிந்தவர்கள் அதை செயல்படட்டும்

(அபூ தாவூத் ஃபீ அஸ்-ஜுஹ்த் - 166)


186. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்கள் :

அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மக்களின்  உண்மையைப் பற்றி மிகவும் அறிந்தவர்கள்!

மற்றும் படைப்பின் மீது மக்களில் மிகவும் கருணையுள்ளவர்கள்!

[மின்ஹாஜுஸ் சுன்னா (5/158]


187. இமாம் இப்னு தைமியா (ரஹ்) 

(ஈமான்) நம்பிக்கை என்பது பேச்சு மற்றும் செயலாகும், 

அது கீழ்ப்படிதல் மற்றும் நல்ல செயல்களால் அதிகரிக்கிறது, 

மேலும் ஒரு நபர் எந்த அளவுக்கு நல்ல செயல்களைச் செய்கிறாரோ, 

அவ்வளவு அதிகமாக அவரது நம்பிக்கை அதிகரிக்கிறது. 

மஜ்மூவுல்  ஃபத்வாக்கள் [133/1]


188. ஷேக் அல்-உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்:

தொழுகை வாழ்வாதாரத்திற்கு ஒரு காரணம் என்று எல்லாம் வல்ல இறைவன் சொல்கிறான்.

 உன் குடும்பத்தாரை தொழ கட்டளையிட்டு பொறுமையாய் இரு. 

நாங்கள் உன்னிடம் வாழ்வாதாரத்தை கேட்கவில்லை, உனக்கே வாழ்வாதாரத்தை தருகிறோம், அதன் விளைவு தக்வா
 
 فتاوى نور على الدرب ۱۸۸


189. இமாம்  அல் ஹசன் (ரஹ்) கூறினார்கள்:

" ஆதாமின் மகனே, உன்னுடைய விருந்தாளியே உன்னுடைய நாள், எனவே அவனுக்கு நல்லவனாய் இரு.

 நீ அவனுக்கு நல்லவனாக இருந்தால், அவன் உன் புகழ்ச்சியோடு சென்று விடுவான். 

நீ அவனை புண்படுத்தினால், அவன் உன்னுடன் பயணிப்பான், உன் இரவும் அப்படியே.

الزهد للحسن البصري (١٤٠)


190. ஸயீத் பின் அல்-முஷைப் (ரஹ்) கூறினார்கள் : 

பெற்றோருடன் இருக்கும் நல்ல மனிதன் மோசமான மரணம் அடைவதில்லை.

تاریخ ابن معین [۲/۲۲۸]


191. இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்கள்: 

நீ என்ன நல்ல செயல்கள் செய்தாலும் உன்னையும் உன் செயல்களையும் மகிழ்ச்சியடையாதே, ஏனெனில் அல்லாஹ்வின் அருளை விட உனது செயல்கள் சிறியது) 

 [ரியாலுஸ் ஸாலிஹீன்  (575/1)


192. ஃபுதைல் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

"குறையற்ற சகோதரனைத் தேடுகிறவன்!

சகோதரனே இல்லாமல் இருப்பான்."

ரவ்லத்துல் - உக்லா) பக்கம் (169)


193. இமாம் - அஹ்மது பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

இஸ்லாத்தில் எதை எடுக்க  வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது போல் 

எதை எடுக்க க்கூடாது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்!

(ஜாமிஉல் இல்ம் - 435)


194. ஷேக் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஜான் حفظه الله கூறினார்கள்:

ஈத் தொழுகையை வெளிப்புறத்தில்
தொழுவதற்கான காரணம் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமின் வலிமையை காட்டுவதற்காக தான்

அல்-முலகாஸ் அல்-ஃபிகி (1/211)


185. இமாம் இப்னு கைய்யிம் ரஹ் கூறினார்கள் :

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவா்கள்
ஏழையாகதான் வாழ்ந்தார்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்கள் மற்றும் அச்சுறுத்தப்பட்டார்கள், ஆனால் அவரைப் போல மகிழ்ச்சியாக வாழ்ந்த  யாரையும் நான் பார்த்ததில்லை!

நூல் : அல் பவாயித்


186. அப்துல் ரஸாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

சுஃப்யான் அஸ்ஸவ்ரி (ரலி) அவர்கள் ரமலான் மாதம் வந்துவிட்டால் அனைத்து (உபரி) வணக்கங்களை விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதற்கு முற்படுவார்களாம்.

நூல் : லதாயிஃபுல் மஃஆரிஃபி லி இப்னு ரஜப் 171


187. அம்ர் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

ரமலானுக்கு முன்னால் தன்னைச் சீர்திருத்தம் செய்துக் கொண்டோருக்கு நற்செய்தி உண்டாகட்டும்.

நூல் : லதாயிஃபுல் மஃஆரிஃபி 138


188. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறினார்கள் : 

நோன்பாளிகளில் சிறந்தவர் நோன்பின் போது அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவர்கள் தாம்

நூல் : அல்வாபிலுஸ் ஸய்ப் : 104


189. இப்னு அப்துல் ஹகம் (ரஹ்) கூறினார்கள் 

மாலிக் (ரஹ்) அவர்கள் ரமலான் மாதம் வந்துவிட்டால் நபி மொழி படிப்பதிலிருந்தும், அறிஞர்கள் சபையில் அமர்வதிலிருந்து விரண்டு குர்ஆன் ஓதுவதில் முற்படுவார்களாம்.

நூல் : லதாயிஃபுல் மஃஆரிஃபி லி இப்னு ரஜப் 171


190. முஆத் (ரலி)அவர்கள் தன் மரணம் அடையும் இறுதி இருந்த போது எனக்குத் திருமணம் செய்து வையுங்கள், நான் அல்லாஹ்வை திருமணம் ஆகாத நபராக சந்திக்க வெறுக்கிறேன் என்று சொன்னார்கள்.

முஸன்னிஃப் லிஇப்னி அபீ ஷைபா 7/119


191. "இதயம் தூய்மையாக இருந்தால், ஒரு பாவம் செய்யும் போது அது கொந்தளிப்பாக இருக்கும்."

இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்)

நூல்:- அல் லதாயிஃப் ஃபில் வாயிஸ் பக்கம்-114


فضل الإستغفار :

قال الحافظ ابن كثير
رحمه الله تعالى (ت٧٧٤هــ) :

 ومن اتصف بهذه الصفة                             
  وهي الاستغفار والتوبة

 يَسَّرَ الله عليه رزقَه وسهل عليه            
  أمرَه وحفظ عليه قُوَّتَهُ.

 التفسير [٦٣٢/٣].

192. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுதல்)

பாவமன்னிப்பு தேடும் குணம்:

அல் ஹாபீஸ் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்:

பாவமன்னிப்புத் தேடுவதும், அல்லாஹ்விடம் வருந்துவதுமான இந்தப் பண்பு எவரிடமிருக்கிறதோ, அவருக்கு அல்லாஹ் அவனுடைய ரிஸ்க்கை எளிதாக்கி, அவனது காரியங்களை எளிதாக்கி, அவனது பலத்தைப் பாதுகாப்பான்.

தஃப்சீர் [3/632]


 ‏قَالَ ابنُ تَيمِيَّة رَحِمَهُ اللَّـهُ :
 
الخوفُ مِنَ الله مِنْ أعظم أسباب المغفرة.

 مِنهَاجُ السُّنَة (484/5)

193. இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு அஞ்சுவது மன்னிக்கப்படுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்றாகும்.

மின்ஹாஜுல் சுன்னாஹ் (484/5)


194. இமாம் சுஃப்யான் அத்தவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

நான் பணக்காரர்களுடன் சென்றேன், என்னை விட மனச்சோர்வடைந்த சோகமானவர் யாரும் இல்லை!

என்னை விட சிறந்த ஆடை மற்றும் சிறந்த வாசனையுடன் ஒரு மனிதனை நான் கண்டால், அது என்னை வருத்தும் துக்கப்படுத்தும்!

அதனால் நான் ஏழைகளுடன் சேர்ந்து  நிம்மதியாக இருக்கிறேன் ”

[அல் - ஹில்யா/ 2/95].


195. நான் அல்லாஹ்வின் தூதரை நேசிக்கிறேன் அதனால் நான் ஹதீஸ்களை (வூது) இல்லாமல் படிப்பதில்லை!

இமாம் - மாலிக் முஅத்தா /795/


196. அப்துல்லாஹ் இப்னு  மஸ்ஊத்  ரழியல்லாஹு அன்ஹு கூறினாா்கள் : 

இன்ஷாஅல்லாஹ்
நான் இன்னும் பத்து நாட்களின்  இறந்துவிடுவேன் என்று எனக்குத் உறுதியாக  தெரிந்தால்!

எனக்கு திருமணம் செய்து கொள்ள போதுமான நேரம் இருந்தால்!

(ஃபித்னாவுக்கு) பயந்து நான் திருமணம் செய்து கொள்வேன்.

நூல் :  அஹ்லுல் சுன்னா கட்டுரை - 43/


197. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

மனிதர்களில் சிலர் {ஈக்களை} போன்றவர்கள்!

(ஈ)எப்படி உடம்பில் உள்ள காயமான பகுதிகளை தேடி சென்று அமர்வது போல்

மனிதர்களில் சிலர் தன் சகோதரனிடம் உள்ள நலவுகளை மறந்து விட்டு அவனது  குறைகளை தேடி அலைகிறார்கள்!

நூல் : மஜ்மூஉல் /பஃதாவா /


198. இமாம் - மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

நான் சிறுவனாக இருக்கும் போதே,
என் தாயார் எனக்கு அறிஞர்களின் ஆடைகளை அணிவித்து அழகு பார்ப்பார்!

நூல் : தர்தீபுல் மதாரிக்


199. உன் சகோதரனை வெறுப்பதன் மூலம் நீ நல்லவன் என்று நினைத்து விடாதே!

காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை!

இமாம் ஹஸன் அல் பஸ்ரி {ரஹ்}
நூல் : ஹில்யத்துல் அவ்லியா


200. முஆவியா ரலி அவா்களை  விட சத்தியத்தின்படி ஆட்சி செய்த எவரையும் நான் பார்த்ததில்லை?

சஅத் பின் அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு

இப்னு அசாகீர் தாரீகுல் திமிஷ்க்


201. இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அழகிய கூற்று:

ஓ என் சகோதர/சகோதரிகளே, இந்த துன்யாவில் ஜாக்கிரதையாக இருங்கள், ஏனெனில் ஹாரூத் மற்றும் மாரூத்தை விட  இநத துன்யா ஆபத்தானது:

அவர்களின் மந்திரம் ஒரு ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த துன்யாவின் மந்திரம்
ஒரு அடிமைக்கும் அவனது இறைவனுக்கும் (அல்லாஹ்வுக்கு) இடையே பிரிவை ஏற்படுத்துகிறது..." 


202. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

நான் தினமும்  எனது  (ஈமானை) புதுப்பித்து வருகிறேன்!

இது வரை நான் என்னை  ஒரு நல்ல  முஸ்லிமாக இருப்பதாக நான் கருதவில்லை.!

நூல் : மதாரிஜுஸ் ஸாலிஹீன்  (1/218)


203. இமாம் - ஹஸன் அல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்!

ஒரு மனிதன் தன்னிடத்தில் உள்ள குறைகளை திருத்திக் கொள்வதாகும்!

நூல் : அல் - ஹில்யத்துல் அவ்லியா


204. இமாம் - முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமின் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

உண்மையில் அல்லாஹ்வுக்காக மட்டுமே இரண்டு பேர்  நேசிப்பவர்களாக இருந்தால்!

மரணத்தைத் தவிர வேறு எதுவும் அவர்களைப் பிரிக்க முடியாது. இன்ஷா அல்லாஹ்! 

ஆதாரம்: ரியாலுஸ் ஸாலிஹீன்  3/26


205. இமாம் - அஹ்மது பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

இஸ்லாத்தில் எதை எடுக்க  வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது போல் எதை எடுக்க க்கூடாது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்!

(ஜாமிஉல் இல்ம் - 435)


206. இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ்  அவர்களின் மகன் ஆயிரம் காசுகளுக்கு ஒரு மோதிரத்தை வாங்கியதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது! எனவே அவர் அவருடைய மகனுக்கு கடிதம் எழுதினார்!

"உண்மையில், நீங்கள் ஒரு மோதிரத்தை ஆயிரம் காசுகளுக்கு  வாங்கியதாக நான் கேள்விப்பட்டேன்! 

உடனடியாக  அதை விற்று, பட்டினியால் வாடும் ஆயிரம் பேருக்கு உணவளிக்கவும், 

ஒரு காசுக்கு இரும்பு வளையத்தை வாங்கவும். அதன் மேல், ‘அல்லாஹ் தனது இடத்தை அறிந்த ஒரு மனிதருக்கு கருணை காட்டுவானாக’ என்று எழுதுங்கள்! என்று கூறினார்!

ஆதாரம்: தஃப்சீர் அல்-குர்துபி 16:14


207. இமாம் மாலிக் - ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

ஒரு பெண் உங்களுக்கு முன்னால் சென்றால், அவள் கடந்து செல்லும் வரை உங்கள் கண்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்.

நூல் : (தர்தீபுல் -மதாரிக்)


208. அஹ்லுல் பித்ஆ பற்றி இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவா்களின் அழகிய கூற்று!

அஹ்லுல் பித்ஆ சேர்ந்தவா்கள்! தங்கள் கருத்துக்கு சரியாக இருந்தால்!

குர்ஆனை ஏற்றுக் கொள்வார்கள்!

சரியாக இல்லையென்றால்

குர்ஆனை ஒதுக்கி வைத்து விடுவாா்கள்!

நூல் :ஸில்ஸிலத்துல்  ஹுதா வன் நூர்//


209. புதைல் இப்னு இயாத் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : 

அல்லாஹ்வை அஞ்சுபவன் யாராலும் பாதிக்கப்படமாட்டான், 

அதே சமயம் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு பயப்படுபவன் யாராலும் உதவி செய்யப்பட மாட்டான்.

நூல் : ஷுஹுபுல் இமான்-2565


210. இமாம் இப்னு கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

குழந்தைகளின் தவறான வழிநடத்துதலுக்கும் எதிர்கால சிதைவுக்கும்  காரணங்களை யோசித்துப் பார்த்தால், அது பெரும்பாலும் பெற்றோரின் தவறு என்பதை நீங்கள் காண்பீர்கள்.

[  நூல் : மதாரிஜுஸ் ஸாலிஹின்]


211. இமாம் இப்னு அல்-கய்யிம் رحمه الله அவர்கள் கூறினார்கள்: 

“தர்மம் செய்பவர் தனது தர்மம் ஏழையின் கைக்கு முன்பாக அல்லாஹ்வின் கைகளில் விழுகிறது என்பதை அறிந்தால், கொடுப்பவரின் மகிழ்ச்சி பெறுபவரின் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கும்.” 

[மதாரிஜ் -ஸாலிக்ஹின் 1/26]


212. அப்துல்லா இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

மக்கள் தங்கள்  அறிவைப் அறிஞர்களிடமிருந்து பெறும் வரை அவர்கள் நன்றாக இருப்பார்கள்!

அவர்கள் அதை  அறிவு குறைவான  இளையவர்களிடம் இருந்து  எடுக்கும்போது, ​​அவர்கள் அழிந்து போவார்கள்!

ஜாமி உல்  பயான் அல்-இல்ம்


213. உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

“யா அல்லாஹ், சத்தியத்தை எனக்கு உண்மையாகக் காட்டி, அதைப் பின்பற்ற எனக்கு வழிகாட்டு

பொய்யை பொய்யாகக் காட்டி, அதைத் தவிர்க்க எனக்கு வழிகாட்டு!

ஆதாரம்: ஷர்ஹ் அல்-முன்தஹா( 3/497)


214. இமாம் ஹஸன் அல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

"நீங்கள் அதிகமாக வணங்குவதால்  பெருமை மட்டும் கொள்ளாதீர்கள்!

ஏனெனில் இப்லீஸ்  வணக்கத்தில் அதிக நேரம் செலவிட்ட பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்."

 நூல் :அல் ஹில்யத்துல் அவ்லியா/


215. இமாம் முஹம்மது பின் ஸாலிஹ்  அல்-உஸைமீ்ன்  ரஹிமஹுல்லாஹ் பற்றி சில சிறப்பு அம்சங்கள்!

அவரது மனைவியின் அழகிய பேட்டி.

1) மாதத்தின் மூன்று நாட்களும் அவர்  தொடர்ந்து  நோன்பு இருப்பார்கள்!

2) அவா்கள் தனது மாணவர்களை தனது குழந்தைகளைப் போலவே நடத்துவார்கள்!

3) அவரது திருமணம் என்னுடன் மட்டுமே! நடந்துள்ளது!

4)அவர் ஒரு நல்ல கணவனாக 
இருக்கிறார்கள்!

நூல் : இப்னு உஸைமீன் இஸ்லாமிய விழிப்புணர்வு  -23/


216. இமாம்  புலைல்  பின் இயாழ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

இரண்டு விஷயங்கள் இதயத்தை கடினமாக்குகின்றன, அதிகமாக பேசுதல் மற்றும் அதிகமான  உணவு உன்னுதல்!

- சுன்னா முஹம்மதிய்யா 1949


217. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

நோன்பு ஷைத்தானை அவமானப்படுத்துகிறது  பலவீனப்படுத்துகிறது!

நூல் : மஜ்மூஉல் பதஃவா


218. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

ஷியாக்கள் தங்கள் இமாம்கள் மீது கொண்டிருக்கும் அதே தீவிரபற்றுதான்!

பலருக்கும் தங்கள் அறிஞர்கள் மீது உள்ளது!

நூல் : 
மின்ஹாஜ் அஸ்- ஸுன்னா அன் நபவிய்யா)


219. உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ்
கூறினார்கள் : 

"பொய் சொல்வது பொய்யனை மோசமாக பாதிக்கும் என்பதை அறிந்ததிலிருந்து நான் ஒருபோதும் பொய் சொன்னதில்லை" 

(இமாம் தஹபி சியருன் அலா -  பின் நுபாலா 5/121)


220. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

ஏழுபது அறிஞர்கள் நான் (ஃபத்வா) கொடுப்பதற்கு, தகுதியானவன் என்று சொன்ன பின்புதான்.

நான் மக்கள் மத்தியில் (ஃபத்வா) கொடுக்க  ஆரம்பித்தேன்) 

அதற்கு முன்பு வரை நான்( ஃபத்வா) கொடுக்க தொடங்கவில்லை!

நூல் : இமாம் தஹபியின்  தாகிரத்துல் ஹஃப்பாத்]


221. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

பெருமை மற்றும் பொறாமை நிறைந்து இருக்கும்.!

இதயத்தில் ஈமானின் உண்மை நுழைவதில்லை!

நூல் : மஜ்மூஉல் அல் பதாஃவா


222. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

யூதர்கள் ஒரு ஊருக்குள்ளே
பிரவேசிக்க வேண்டுமாயின் அவா்கள்!

ஷீஆக்கள் 
என்னும் (கழுதையின்)வாயிலாகவே அவ்வூருக்குள்ளே
பிரவேசிப்பார்கள்!

நூல் : மின்ஹாஜுல் ஸுன்னா }


223. இமாம் ஹஸன் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

ஒவ்வொரு தேசத்திலும்

ஒரு சிலை இருக்கிறது

அது பூசப்பட்டிருக்கிறது
  
இந்த தேசத்தின் சிலையானது 

தீனார் மற்றும் திர்ஹம் ஆகும்!

நூல் : அல் - அஷ் ஷரிய்யா


224. இமாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

யாராவது என்னை காயபடுத்தினால் அது

எனக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன்.

அல்லாஹ் எனக்கு பணிவை கற்பிக்கிறான்என்று நினைத்து கொள்வேன்.!

நூல் : மஜ்மூல் பஃதாவா 


225. அபூ அல்- ஆலியா (அல்லாஹ் அவர் மீது இரக்கம் காட்டுவானாக) அவர்கள் 
அறிவித்திருப்பதாவது :
 
ஓர் நோன்பாளி புறம்பேசாதவரை அவர் வழிபாடு செய்யும் நிலையிலேயே இருப்பார், அவர் மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்தாலும் சரி. 

அல்-இமாம் அஹ்மத், அல்-ஜீஹ்த் பாகம்.4 ப313.


226. உபைத் பின் (உமைர்) அவர்கள்  அறிவிக்கிறார்கள் :

குளிர்காலம் வரும் பொழுதெல்லாம் இவ்வாறு கூறப்படும்:

குர்ஆனின் மக்களே, இரவின் நீளம் அதிகரிப்பதால் நீங்கள்- இரவில் (அதிகமாக) வணங்குங்கள் ,மேலும் நீங்கள் நோன்பு நோற்பதற்கு பகலின் நீளம் குறைகிறது.

நூல் : ஹில்யத் அல்-அவ்லியா


227. இப்னு மஸ்வூது ரழியல்லாஹ் அன்ஹு கூறுகிறார்கள் :

பிறக்கும் போது யாரும் அறிவாளியாக பிறப்பதில்லை.

கற்றுக் கொள்வதன் மூலமே  
அறிவு பிறக்கிறது!

நூல் : ஜாமிவுல் பயான் / 200)


228. இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள் :

நான் எத்தனையோ பலரை பார்த்திருக்கிறேன், இருபது வருடங்களாக இரவுத் தொழுகையை தொடர்ந்து தொழுபவர்களை பார்த்திருக்கின்றேன்.

இப்போது சிலரை பார்க்கிறேன்;ஒரு நாள் தொழுதவுடனையே அன்றைய காலையிலே அவர்களுடைய முகத்தில் பெருமை தெரிகிறது என்று சொன்னார்கள்.

நூல் : ஹில்யத்துல் அவ்லியா


229. அல்லாமா முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமின் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

ஒரு இறையச்சமுள்ள பெண் அழகாக இல்லாவிட்டாலும்.

அவளது மார்க்கபற்றும் அவளது குணநலன்களும்  அவளை அழகுபடுத்தும்.!

நூல் :  ரியாளுஸ் ஸாலிஹீன்


230. ஸலபுகளில் ஒருவர் கூறினார்: 

குர்ஆன் கூறும் உவமைகளில் ஒன்றை நான் கேட்டு, அது எனக்கு விளங்கவில்லையாயின் எனது அறியாமையை நினைத்து நான் அழுது விடுவேன். ஏனெனில்,

وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ‌ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ‏

"இவை மக்களுக்கு நாம் கூறும் உவமைகள் ஆகும். அறிவாளிகளைத் தவிர வேறு யாரும் (இவற்றை) விளங்கிக்கொள்வதில்லை."
[அல் குர்ஆன், அல் அன்கபூத், 29:43]

என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கஸீர்


231. அபூ ஹாஸிம் அவர்கள் வழியாக இமாம் பைஹகீ (رحمه الله) தமா ஷுஉபுல் ஈமானில் கூறுகிறார்கள்:

மூன்று குணங்கள் உங்களிடம் ஏற்படாதவரை நீங்கள் அறிஞர் ஆக முடியாது.

ஒன்று, உங்களை விட மேலானவர்களைக் கீழே தள்ள முயலாதீர்கள்.

இரண்டு, உங்களை விடக் கீழானவர்களை இழிவாகப் பார்க்காதீர்கள்.

மூன்று, உங்கள் கல்விக்குப் பகரமாக உலக ஆதாயங்களை வாங்கிக்கொள்ளாதீர்கள்.

ஆதாரம்: ஷுஉபுல் ஈமான் - 2/288


232. இப்னுல் முபாரக் (رحمه الله) சொல்வதாவது:

அபூஹனீஃபா (رحمه الله) சொல்ல நான் இப்படிக் கேட்டிருக்கிறேன். அதாவது, ஏதேனும் நபி (ﷺ) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டால், அதை எடுத்துக் கொள்வோம். ஏதேனும் நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டால், அவர்களின் கருத்திலிருந்து தேர்வு செய்வோம். ஏதேனும் தாபிஈன் மூல் அறிவிக்கப்பட்டால், நாம் அதை அலசி ஆராய்வோம்.

ஆதாரம்: அஹ்பார் அபீஹனீஃபா 10


قال شيخ الاسلام رحمه الله: 

ومن أعمال أهل الجنه قراءه القرآن

(الفتاوي (423/10)

233. ஷேய்குல் இஸ்லாம் (ரஹ்) அவர்கள்  கூறினார்கள்:

குர்ஆன் ஓதுவது
சொர்க்கவாசிகளின் அமல்களில்  உடையது.

அல் ஃபத்வாஹ் (423/10)


234. இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

ஒரு சுன்னாவை பரப்புவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் (பரப்பி விடுங்கள்) (பரப்பிய) சுன்னாவின் கூலியும், தீர்ப்பு நாள் வரை அதைச் செய்பவரின் கூலியும் உங்களுக்குக் கிடைக்கும்....

ரியாலூஸ் ஸாலிஹீன்(4/215)


235. உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் 
அவர்கள் மக்களுக்கு உரையாற்றுகையில்.  

அல்லாஹ்வை போற்றி புகழ்ந்த
பின் கூறினார்கள். 

ஓ மனிதர்களே! 

உங்களது அந்தரத்தை (உள்ளத்தை) சீர்திருத்தங்கள் உங்களது வெளி ரங்கம் சீர்திருந்தும், 

மறுமைக்காக அமல் புரியுங்கள் உலக வாழ்வில் போதுமாக்க படுவீர்கள்.

ஆதாரம்: ஸுஹுத் இமாம் அஹ்மத்.


236. இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நரகம் படைக்கப்பட்ட காரணங்களில் ஒன்று கல்நெஞ்சங்களை உருக்கி கரைப்பதற்காகும்!

நூல் : அல்பவாஇத்


237. “பெறுபேகள் பற்றி நாம் விசாரிக்கப்படமாட்டோம். 

ஆனால், அவற்றை அடைய நாம் மேற்கொண்ட வழிமுறைகள் பற்றி விசாரிக்கப்படுவோம். 

மறுமையில் பல நபிமார்கள் வருவர். 

அவர்களுடன் யாருமே இருக்கமாட்டார்கள்."

- அத்ஹம் ஷர்காவி


238. "மனதிருப்தியே உண்மையான செல்வம். 

பேராசையே உண்மையான வறுமை. 

பல ஏழைகள் உன்னைவிட அதிக செல்வந்தர்களாக இருப்பர். 

இன்னும் பல செல்வந்தர்கள் உன்னை விட அதிக ஏழைகளாக இருப்பர்."

- முஸ்தபா அஸ்ஸிபாஈ


239. "ஒரு மனிதனுக்கு இவ்வுலகில் எது கொடுக்கப்பட்டாலும், 

"அதையும், அதனுடன் அதுபோன்ற ஒரு கவலையும் எடுத்துக்கொள்” என்றும் கூறப்படும்"

- இமாம் சுப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)


240. "உன்னை நீ அறிந்துகொண்டுவிட்டால், 

உன்னைப் பற்றிக் கூறப்படுபவைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது"

- இமாம் சுப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)


241. "வீண்தர்க்கம், கோபம், பேராசை 

என்பவற்றை விட்டும் பாதுகாக்கப்பட்டவன் வெற்றி பெற்றுவிட்டான்"

- உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)


242. "உள்ளத்திலிருந்து வெளிப்படுபவை மாத்திரமே உள்ளத்திற்கு பயன்தரும்”

- உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)


243. ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) கூறினார்கள்:

“...பாடல்கள் மற்றும் இசையை வானொலியில் ஒலிபரப்ப அனுமதிப்பது முஸ்லிம்களை அவர்களின் மதம் மற்றும் உலக விவகாரங்களில் எதிர்மறையாக பாதிக்கும் என்பதை மறுக்க முடியாது. 

எனவே, நமது அதிகமான ஊடகங்கள் இதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், 

மேலும் இஸ்லாத்திற்கு சேவை செய்வதற்கும் உண்மையை பரப்புவதற்கும் அதற்காக அழைப்பு விடுப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

[மஜ்மூ அல்-ஃபதாவா இப்னு பாஸ், தொகுப்பு: 3; பக். 431]


244. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது:

சுஜூதின் நெற்றியில் ஏற்படும் குறி நல்லவர்களின் அடையாளம் என்று ஏதேனும் அறிக்கை உள்ளதா?

அவர் பதிலளித்தார்,

இது நீதியின் அடையாளங்களில் ஒன்றல்ல; 

அடையாளம் என்பது முகத்தில் தோன்றும் ஒளி (நூர்) மற்றும் திருப்தியாகவும் அமைதியாகவும் இருப்பது,

 நல்ல அணுகுமுறை போன்றவை.

முகத்தில் சுஜூத் செய்த அடையாளத்தைப் பொறுத்தவரை, 

கடமையான தொழுகையைக் கூடத் தொழாதவர்களின் முகத்தில் அது தோன்றும், 

அவர்களின் தோல் மிகவும் மென்மையாகவும், உணர்திறன் உடையதாகவும் இருந்தால்,

 அது தொழும் நபர்களின் முகத்தில் தோன்றாது.

 நிறைய மற்றும் நீண்ட சுஜூது செய்யுங்கள்.

(ஃபதாவா இஸ்லாமிய்யா, 1/484)


245. ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் ஹஃபிலஹுல்லாஹ் கூறினார்கள்:

"உண்மையை விரும்புபவன் அறிவுரைகளால் மகிழ்ச்சியடைகிறான், 

அவன் தவறு பற்றி எச்சரிக்கும் போதெல்லாம் அவன் மகிழ்ச்சியடைகிறான்."

[ஷரஹ் அல் - உபூதிய்யா  பக்கம் - 252]


246. “சிலபோது நலவுகள் உன்னைத் தேடி வரும்.

பிறிதொருவருக்கு அவை கிடைக்கவேண்டும் என நீ ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால்!"

- அத்ஹம் ஷர்காவீ (ரஹ்)


نعيب زماننا والعيب فينا وما لزماننا عيب سوانا ونهجو ذا الزمان بغير ذنب ولو نطق الزمان لنا هجانا

247. கவிஞர் அபுல் ஹுஸைன் அல் பஸரி அவர்கள் கூறினார்கள்...

நாம் காலத்தை குறைகூறுகிறோம்.

குறை நம்மிடம் தான் உள்ளது நம்மைத் தவிர காலத்தின் மீது எந்த குறையும் இல்லை

குற்றம் செய்யாத காலத்தை ஏசுகிறோம் காலம் பேசக்கூடியதாக இருந்தால் அது நம்மை ஏசியிருக்கும்.


-قال العلامة صالح الفوزان -حفظه الله

تمسك بدينك ولو ضل أكثر الناس ولو أصبحت غريباً بين الناس إصبر على هذا » * ما دام أنك على الحق لا يهمل أن ترضي فلان أو تعصب فلان عليك

شرح كتاب الفتن والحوادث (ص۱۹۲)

248. அல்லாமா ஸாலிஹ் அல் ஃபௌஸான் (ஹஃபிலாஹுல்லாஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

அதிகமான மக்கள் வழி கெட்டுச் சென்றாலும் நீ உன்னுடைய மார்க்கத்தை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொண்டிரு;

அதனால் மக்களுக்கு மத்தியில் நீ அந்நியனாக மாறினாலும் சரியே;

நீ சத்தியத்தில் இருக்கும் காலமெல்லாம் இந்த மார்க்கத்தை பின்பற்றுவதில் பொறுமை காத்துக்கொள்.

பிற மனிதனின் திருப்தியை நீ நோக்கமாகக் கொள்ளாதே; பிறர் உன் மீது கோபம் கொள்வார்கள் என்பதையும் நோக்கமாகக் கொள்ளாதே.

நூல்:ஷரஹ் கிதாபில் ஃபிதனி வல் ஹவாதிஸி பக்கம் 192.


249. மக்களில் சிலர் தம்மைப் புகழ்வதை விரும்புகிறார்கள், ஆனால் அவர்களோ அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கை எடையளவுகூட (அவர்களது புகழ்) சமம் இல்லை.

- இமாம் அவ்ஸாஈ (ரஹ்)
ஹுலிய்யதுல் அவ்லியா


‏قال الحسن البصري :

إذا رأيت الرجل ينافس في الدنيا 
فنافسه في الآخرة

[ زوائد الزهد لأحمد 1544 ]

250. ஹசன் அல் பஸ்ரி (ரஹ்) அவர்கள்  கூறினார்கள்:

ஒரு மனிதன் இந்த வாழ்க்கைக்காக (துன்யாவிற்காக) போட்டியிடுவதை நீங்கள் கண்டால், 

அவருடன் அடுத்த வாழ்க்கைக்கு (ஆக்கிராவிற்காக) போட்டியிடுங்கள்.


251. "ஓர் அடியான் அல்லாஹ்வை நேசிக்கும் அளவுக்கேற்ப மக்கள் அவனை நேசிப்பார்கள்"

- இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்)


252. "இரு விடயங்களில் எது சரியானது என்பதை அறிந்துகொள்வதில் குழப்பநிலை ஏற்பட்டால். 

அவற்றில் தனது மனோஇச்சைக்கு நெருக்கமானதை அறிந்து. 

அதைத் தவிர்ப்பதே புத்திசாலியின் கடமையாகும்"

- இப்னுல் முகப்பஃ (ரஹ்)


253. இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"பெண்கள் முகத்தை மூடிய பின் அவளது வீட்டில் தங்குவதே சிறந்த ஹிஜாப்."

[இப்னு பாஸின் ஃபத்வாக்கள், (1:422)/அலிஃப்தா]


254. இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

யார் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அல்லாஹ் அவரை அசத்தியத்தை ஏற்கச் செய்து சோதிப்பான்.

-மஜ்மூஃ அல்ஃபதாவா


قال التابعي الشامي الواعظ بلال بن سعد :

‏استحيوا من الله ، واحذروا الله  ، ولا تأمنوا مكر الله ‏
‏ولا تقنطوا من رحمة الله 

‏[ البيهقي في الشعب٧٧٠ ]

255. தாபியீ பிலால் பின் சாத் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் வெட்கப்படுங்கள், 

கவனமாக இருங்கள் மற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், 

மேலும் அல்லாஹ்வின் திட்டத்திலிருந்து பாதுகாப்பாக உணராதீர்கள்.

மேலும் அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையை இழக்காதீர்கள்.


قال بلال بن سعد :

لا تكن ولياً لله في العلانية
 وعدوه في السريرة.

/ ابن أبي الدنيا في الإخلاص والنية ٢٣

256. பிலால் பின் சாத் கூறினார்கள் :

பகிரங்கமாக அல்லாஹ்வின் நண்பனாகவும்,

அந்தரங்கத்தில் அவனுடைய எதிரியாகவும் இருக்காதே.

நூல் : இப்னு அபீ அத் துன்யா ஃபீ அல் இஹ்லாஸ் வல் நியாஹ் / 23


قال الإمام أحمد بن حنبل رحمه الله

من ترك الوتر عمدا فهو رجل سـوء

درء تعارض العقل والنقل(٨/٦٧)

257. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

வேண்டுமென்றே வித்ரை கைவிடுபவன் கெட்டவன்


258. இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

"முகஸ்துதி, குரோதம், ஏமாற்றல், பொறாமை, வெறுப்புணர்வு என்பவற்றிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, 

அதனை ஈடேற்றமாக வைத்திருப்பது உறுப்புக்களால் செய்யப்படும் உபரியான வணக்கங்களை விடச் சிறந்தது."


259. இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வை நினைவு கூறுவதற்க்கு உமக்கு யார் உதவி செய்வாறோ அவரை தவிர வேறு யாருடனும் நீ தோழமை கொள்ளதே 

قال ابن مسعود رضي الله عنه :

 لا تصحب إلا من أعانك على ذكر الله "

. [الزهد لأبي داود (١-١٢٦


260. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

அல்லாஹுதாலா தன் தூதரை எந்த ஒன்றை கொண்டு அனுப்பினானோ அந்த கல்வியை அல்லாஹ்வின் திரு முகத்திற்க்காக (அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக) வேண்டி யார் கற்றுக்கொண்டு அதை கற்றும் கொடுப்பாறோ அவர் உண்மையாளர் ஆவார்.

நூல்: மஜ்மூஹ் அல் ஃபத்வா (171/28)

‏قال شيخ الإسلام ابن تيمية - رحمه الله -:

(من تعلم العلم الذي بعث الله به رسله وعَلَّمهُ لوجه الله كان صديقاً ).
 
 مجموع الفتاوى:(28/ 171)


‏ قال الحسن البصري رحمه الله : 

الدنيا كلها ظلمة إلا مجالس العلماء 

 [جامع بيان العلم (١١٤/١)]

261. ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அறிஞர்களின் கூட்டங்களைத் தவிர உலகம் முழுவதும் இருளாகும்."

நூல் : ஜாமிஹ் பயானுல் ஆலிம் ( 1/114)


262. “உனது நிலைமையில் ஒரு கலங்கத்தை எப்போதாவது கண்டால், 

நன்றிசெலுத்தப்படாத ஒர் அருளை,

அல்லது செய்யப்பட்ட ஒரு பாவத்தை நினைவுபடுத்தி பார்."

- இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்)


263. உள்ளத்தில் உருவாகும் உறுதிதான் இறைநம்பிக்கைக்கு அடிப்படையாகும். 

அந்த உறுதி ஏற்பட்டுவிட்டால்,

உடலுறுப்புகள் அனைத்தும் இறைவனுக்கு உவப்பான
செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடும்.

நூல் : (ஃபத்ஹுல் பாரீ)


264. அல்லாஹ் விரும்பக்கூடிய இடத்தில் நீங்கள் இருங்கள். அதனால் நீங்கள் மக்களை இழந்தாலும் பரவாயில்லை.

- அஷ்ஷேஹ் அப்துல் அஸீஸ் தரிஃபி


265. இஸ்லாம் எனும் மாளிகை ஐந்து தூண்கள்மீது நிற்கிறது. 

முதல் தூணான இறைநம்பிக்கைதான் மாளிகையின் மையத் தூணாகும். 

மற்றவை ஓரங்களில் உள்ளன. 

மையத் தூண் (இறைநம்பிக்கை) விழுந்தால் மாளிகையே தகர்ந்துவிடும். 

ஓரத் தூண்களும் விழக் கூடாது. 

அப்படி விழுந்துவிட்டாலும் மாளிகை நீடிக்கும். 

ஆக, எல்லாம் சேர்ந்ததுதான் மாளிகையே தவிர, அவற்றில் ஒன்று மட்டுமல்ல 

நூல் : ஃபத்ஹுல் பாரீ. 


265. 'வழிபாடு' என்பது, ஒன்று சொல்லாக இருக்கும்; 
அல்லது வேறொன்றாக இருக்கும். 

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை;
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என உறுதிமொழிவது முதல் வகை (சொல்) ஆகும். 

அடுத்து 'வேறொன்று' என்பது, கைவிடுவதாக இருக்கலாம்; அல்லது செயல்படுத்துவதாக இருக்கலாம். 

கைவிடுவதில் உள்ளதே நோன்பு. 

'செயல் படுத்துவது' என்பது ஒன்று உழைப்பால் இருக்கலாம்; அல்லது பொருளால் இருக்கலாம். 

உடலுழைப்பு தான் தொழுகை. 

பொருளாதார வழிபாடே ஸகாத். 

இரண்டும் சேர்ந்ததே ஹஜ்.

 நூல் : இர்ஷாதுஸ் ஸாரீ


266. யாரும் தமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே விரும்புவார். 

அவ்வாறே பிறருக்கும் நல்லதையே விரும்ப வேண்டும். 

அப்படியானால், தமக்கு வெறுப்பதை மற்றவருக்கும் வெறுக்க வேண்டும்.

அடுத்தவர் கெட்டுப்போவதை,

சீரழிவதை விரும்பக் கூடாது. 

இதுவே நிறைவான இறைநம்பிக்கை (ஈமான்) ஆகும்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ


الحافظ الذهبي رحمه الله 

«من أدمن الدعاء،
ولازم قرع الباب؛
فتح له

« سير أعلام النبلاء » (6 / 369)

267. அல்ஹாஃபிழ் அத் தஹபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

ஏவர் ஒருவர் துஆவில் நிரந்தரமாக நீடித்து இருப்பாரோ 

கதவை தட்டுவதை யார் அவசியயாக்கி கொள்வாரோ அவருக்கு ஒருநாள் திறக்கப்படும் 


268. இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) கூறினார்கள்:

"நிச்சயமாக ஸஹாபாவின் மனைவிகள் மறுமையைத் தேடினர், அதனால் அவர்கள் தங்கள் கணவர்களின்
வறுமையைப் பற்றி கவலைப்படவில்லை"

[ஸாஹிஹ் ஃபிக் அல்-சுன்னா 4/403]


269. முட்டாள் பெண் தன் கணவனைத் தனக்கு அடிமையாக்கி தான் அந்த அடிமைக்கு மனைவியாக இருந்து கொள்கிறாள்.....?

புத்திசாலிப் பெண் தன் கணவனை அரசனாக்கி தான் அந்த அரசனுக்கு அரசியாக பரிணமிக்கிறாள்

- அலி (ரலி)


270. இஸ்லாத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டு நபி (ஸல்)  அவா்களின் சுன்னாவை கொண்டு இஸ்லாம் நிலைநாட்டப்படும்

- அஸ்ஷேய்க் இப்னு பாஸ்  (ரஹ்)


271. நல்லதையே எண்ணும் காலமெல்லாம் நீங்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பீர்கள்!

- இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)


272. புத்தகங்களை சேகரிப்பவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரிப்பவர் போன்றவர்

- இமாம் அல்பானி رحمه الله
நூல்: اقتضاء العلم العمل


273. வயிறுநிறைய உணவு சாப்பிடுவது

1 உடல் பருமனை உண்டாக்கும்.

2 கல்நெஞ்சத்தை ஏற்படுத்தும்.

3 திறமையைப் போக்கிவிடும்.

4 தூக்கத்தை உண்டாக்கும்.

5 இறைவணக்கத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும்..

- இமாம் ஷாஃபிஈ (ரஹ்) 
 நூல் : சியருந் நுபலா


274. நீங்கள் நீண்ட நேரம் மௌனமாகவும், 

மனிதர்களை விட்டும் ஒதுங்கியும் இருக்கக்கூடிய ஒருவரை கண்டால் அவருடன் நெருங்கிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் அவர் ஞானம் கொடுக்கப்பட்டவர் ஆவார்.

- உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்)


275. உமர் (ரலி) அவர்கள் சொல்வார்கள்:

"மூன்று காரியம் மாத்திரம் இல்லை என்று சொன்னால் நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒரு போதும் விரும்பியிருக்க மாட்டேன்.

1. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது.

2. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது.

3. நல்லோர்களின் சபையில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் வாழ்வியல் தாக்கம்."

(நூல்: முஃக்தஸர் கியாமுல்லைல் லில் மர்வஸீ)


276. ஓர் ஆண்மகன் தனது காதலை தன் மனைவியிடம் வெளிப்படுத்துவதில் எவ்வித இழிவும் அவனை வந்தடைய போவதில்லை.

- ஃபத்ஹூல் பாரி 16/159


277. கணவன் மனைவிக்கிடையிலான மகிழ்ச்சியை பணத்தினாலோ அல்லது பரிசுகளாலோ மாத்திரம் புதிப்பிக்க முடியாது.

துரோகம் அறியாத தூய்மையான உள்ளத்திலிருந்து வெளியாகும் தூய்மையான வார்த்தை மூலமும் அதனைப் புதுப்பிக்க வேண்டும்”

- கலாநிதி ஜாஸிம் முதவ்வஃ


278. இமாம் ஹசன் பஸ்ரி (ரஹ்) கூறுவதாவது;

 "தாயின் முகம் பார்ப்பதே வணக்கம் என்றால், அவளுக்கு பணிவிடை செய்வது எப்பேர்ப்பட்ட வண்க்கமாக இருக்கவேண்டும்..." 

(அல்பிர்ரு வஸ்ஸிலது - 117) அல்மர்வஸிz


279. உங்கள் மனைவி கோபமாக இருந்தால், 

நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

ஒன்று நெருப்பாக இருக்கும்போது, 

மற்றொன்று தண்ணீராக இருக்க வேண்டும்.

- உமர் (ரலி)


280. வெற்றி என்பது நீ ஆசைப்பட்டதை பெற்றுக்கொள்வது..!

ஆனால், மகிழ்ச்சி என்பது :
உன்னிடம் இருப்பதை நீ நேசிப்பது..! 

- கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ


281. நான் வறுமையின் உச்ச நிலையில் இருந்த போதும் ஹலால் ஹராம் பேணி வாழ்ந்தேன்!

- இமாம் -அபூஹனிபா ரஹிமஹுல்லாஹ்


282. இல்மை தேடுவதில் சோம்பேறியாக இருக்க எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. 

அல்லாஹ் நமக்குத் தேடுவதற்கான எல்லா வழிகளையும் எளிதாக்கியுள்ளான்.!!

- அஷ்ஷெய்க்- ஸாலிஹ் அல்-பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்!


283. இமாம் ஸுப்யான் அத்தவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

ஒரு திருமண வீட்டிற்கு ஒரு  செல்வந்தர் வருகிறார் என்றால் மக்கள் ஓடிச் சென்று வரவேற்பார்கள்
அவரிடம் கை கொடுப்பார்கள்! அவா் உட்காருவதற்கு இடம் அளிப்பார்கள்!

ஒரு ஏழை திருமண வீட்டிற்கு வந்தால் மக்கள் அவரை, அலட்சியம் செய்வார்கள். அவருடைய ஏழ்மை நமக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுவார்கள்!

நூல் : இமாம் தஹபி சியருன் அலா பின் நூபலா


284. மக்களிலே உனக்கு நெருக்கமானவர் உன்னுடைய துணைவி தான்

- ஷேக் ராதிப் நாபில்ஸி


285. இரண்டு கவலைகளைத் தேடுபவர்கள்
ஒருபோதும் திருப்தி அடைவதில்லை:

1. அறிவைத் தேடுபவர்

 2. உலகத்தைத் தேடுபவர்.

ஆதாரம்: அல் மஜ்மூல் அல்கபீர் 102


286.  குர்ஆனின் வசனங்கள் மிக பெரிய பொக்கிஷங்கள் ஆகும்!

அதன் உள்ளே நுழைந்தால் அதில்

இருந்து எதையும் கற்று கொள்ளாமல் வெளியே வராதீர்கள்!

- இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்)


287. சதகா வழங்கும்போது பணிவாக கொடுங்கள் பெருமையுடன் கொடுக்காதீர்கள்!

இமாம் - இப்னு கைய்யிம் ரஹ்


288. ஒரு சுன்னாவைப் பற்றி ஒரு மனிதனிடம் கேட்டால் அவர் பதில் சொல்வார்  தெரியாது என்று!

ஒரு பித்அத்தை ஏன் நீங்கள் செய்கிறீர்கள் என்று ஒரு 
மனிதனிடம் கேட்டால் உடனடியாக பதில் தருவார்!

- இமாம் ஸயீது இப்னுல் முஸ்ஸயிப் (ரஹ்)


289. ஒரு முட்டாளிடம்  பேசும் போது அவனுக்குப் பதில் சொல்லாதே,

(அவனுக்கு) பதிலளிப்பதை விட மௌனமாக இருப்பது  சிறந்தது!

நீங்கள் அவனுக்கு பதிலளித்தால் அவனுக்கு உதவி செய்தபோல் ஆகிவிடும்!

நீங்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டால் அந்த சோகத்தில் கவலையிலே அவன் இறந்து விடுவான்!

- இமாம் ஷாபிஈ (ரஹ்)


290. இப்னு அவுன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

மக்களை நினைவு கூர்வது ஒரு நோய், 

அல்லாஹ்வை  நினைவு கூர்வது ஒரு மருந்து.

قال ابن عون  رحمه الله :

ذكر الناس داء، 

وذكر الله دواء .

- سير أعلام النبلاء ( ٣٦٩/٦)


291. என்னை ஏன் நீ நேசிக்கிறாய்? என்று நீங்கள் யாரிடமும் கேட்காதீர்கள். 

உன் மனதில் அவனைப் பற்றி என்ன உள்ளது என்று பார்! 

அதுவே அவன் மனதிலும் உள்ளது. 

ஆத்துமாக்கள் ஏற்கனவே கூடிக் குலாவிவிட்டன!

- இப்னு மஸ்ஊத் (ரழி)


292. தொழுகை நிம்மதியின் வாசலை திறக்கிறது!

இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்)
நூல் : அல்பவாயித்


293. பாவம் செய்யும் மக்களை ஆணவத்துடன் பார்க்காதீர்கள்!
 
அவர்களின் வழிகாட்டுதலுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

- இமாம் சுஃப்யான் அத்தவ்ரி ரஹ்


294. இப்னு ஹிப்பான் அல்-பஸ்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

லாபம் உள்ள வியாபாரம் அல்லாஹ்வை திக்ர் செய்வது 

வியாபாரத்தில் நஷ்டமானது மனிதர்களின் குறைகளை கூறுவது .

[بهجة المجالس (٨٦)]

و‏ﻗﺎﻝ ابن حبان البستي رحمه اللّٰه:
"ﺃﺭﺑﺢ اﻟﺘِّﺠﺎﺭﺓ ﺫِﻛْﺮ اﻟﻠﻪ،
ﻭﺃﺧْﺴَﺮ اﻟﺘِّﺠﺎﺭﺓ ﺫِﻛْﺮ اﻟﻨّﺎﺱ"


295. இமாம் ஹஸனுல் அல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

உங்கள் வாழ்வாதாரம், 

உங்கள் திருமணம், 

உங்கள் வேலை,

உங்கள் ஆரோக்கியம் 

ஆகியவற்றில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று நீங்கள் யோசித்தால்

உங்கள் தொழுகையைப் பாருங்கள். 

உங்கள் தொழுகை சரியாக இருந்தால் வெற்றி இல்லையேல் தோல்விதான்!

நூல் : ஹீல்யத்துல் அவ்லியா 


296. இமாம் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமின் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

மனிதர்கள் தங்கள் கை மற்றும் கால்கள் முகங்களை சுத்தமாக கழுவுகிறார்கள்!

ஆனால் அவர்களின் உள்ளமோ அசுத்தமாக இருக்கிறது அதனை கழுவ மறந்து விடுகிறார்கள்!

நூல் : மஜ்மூஉல் அல் பதஃவா


297. அஷ்ஷெய்க் இப்னு பாஸ் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறினார்கள்:-

"அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டட்டும்" என்று உனக்கு கூறப்பட்டால்,  

நீ மன நெருக்கடிக்கு உள்ளாகிவிடாதே. 

ஏனெனில், நீர் நேர்வழியின் பால் தேவையுள்ளவனாக இருக்கிறாய். 

மனிதர்களில் அல்லாஹ்வை அதிகம் பயன்படக்கூடியவனாகவோ, 

மிக அறிவாளிகளியாகவோ நீ இருந்தாலும்,  

மரணிக்கும் வரையில் நேர்வழியின் பால் நீ தேவையுள்ளவனாக  இருக்கிறாய். 

(الفتاوى- ٧/١٦٣)


298. ஒரு பெண் அவள் ஒரு மகளாக இருக்கும்போது, ​​அவள் தன் தந்தைக்காக ஜன்னாவின் கதவைத் திறக்கிறாள்.

மனைவியாக இருக்கும் போது கணவனுக்கு தீனின் பாதியை முடித்து விடுகிறாள்.

தாயாக இருக்கும் போது, ​​ஜன்னா அவள் காலடியில் கிடக்கிறது!

- இமாம் இப்னு கல்தூன் ரஹ்


299. அறிவைப் போன்ற சிறந்த  செல்வம் எதுவும் இல்லை!

அறியாமை போன்ற கடுமையான வறுமை எதுவும் இல்லை.

- அலி பின் அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு


300. இமாம் புதைல் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

நீங்கள் அறியப்படாதவராக இருக்க முடியுமானால், அப்படியே இருங்கள்!

 நீங்கள் அறியப்படாவிட்டாலும் பரவாயில்லை!

நீங்கள் பாராட்டப்படாவிட்டாலும் பரவாயில்லை. 

மக்களின் பார்வையில் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை!

வல்லமையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் நீங்கள் புகழுக்குரியவராக இருந்தால் போதும்!

நூல் : அல் ஸுஹுத் (100/)


301. ஸஹாபாக்களின்  இதயங்கள் உலகத்தை சிந்தனையை விட்டு மறுமை சிந்தனையால்  நிறைந்திருந்தன!

- இமாம் இப்னு ரஜப் அல் ஹம்பலி ரஹி


302. இமாம் இப்னு அல் கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட மோசமானது;

நேரத்தை வீணடிப்பதால்

அது உங்களை இறைவனிடமிருந்தும் மறுமையிலிருந்தும் துண்டித்துவிடும்.

மரணம் உங்களை உலகத்திலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பிரிக்கும்."

நூல் : அல் ஃபவாயித் : 458

إضاعة الوقت أشـد من المـوت؛

لأن إضاعـة الوقت

تقطعك عن الله والدار الآخرة،

والموت يقطعك عن الدنيا وأهلها 

الإمام ابن القيم رحمه الله

«الفوائد » (458)


موت القلوب اشد من موت الاجساد!! نسأل الله عز وجل السلامة العافية 

قال ابن القيم رحمه الله:

‏الرّجل هو الذي يخاف موت قلبه لا موت بدنه، إذ أكثر هؤلاء الخلق يخافون موت أبدانهم، ولا يُبالون بموت قلوبهم.

[ابن القيم، مدارج السالكين (2/248)]

303. இப்னு அல் கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் உடலின் மரணத்தைப் பற்றி அஞ்சுகிறார்கள், 

மேலும் தங்கள் இதயங்களின் மரணத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதால், 

அவரது இதயத்தின் மரணத்திற்கு அஞ்சுகிற மனிதன் தான், தனது உடலின் மரணத்தை அல்ல.

இப்னு அல் கையும் மதாரிஸ் அல்-சாலிஹீன் (2/248)


304. இப்ராஹிம் அந்நகயீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

உங்களுக்கு முன் அழிக்கப்பட்டவர்கள் மூன்று பண்புகளால் அழிக்கப்பட்டனர் 

1 அதிகப்படியான பேச்சு 

2 அதிகமாக உணவு அருந்தல் 

3 மற்றும் அதிகமான தூக்கம்

நூல் : இஸ்தீஆப் பாகம் 1/ பக்கம் : 19


305. இமாம் ஸுப்யான் அத்தவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

செல்வம் இந்த உம்மத்தின் நோய் ஆகும்!

அறிஞர் இந்த உம்மத்தின் மருத்துவர்கள் ஆவார்கள்!

அப்படியானால், மருத்துவர் தனக்குத்தானே நோயைக் கொண்டுவந்தால்

அவர் மக்களை எவ்வாறு குணப்படுத்துவார்!

நூல் : இமாம் தஹபி சியருன் அலா பின் நூபலா/ 243/


306. ஷாஃபிஈ இமாம் அவர்கள் கூறினார்கள். 

நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். 

நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். 

ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து விலகிவிட்டேன். 

அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்' என்று தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான். 

என்னுடைய இந்தப் புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், 

நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் விலகிவிட்டேன். 

(அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்)

(முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)


307. இமாம் இப்னு தைமியஹ் ரஹிமஹுல்லா அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மனிதனை உயர்த்துவதெல்லாம், 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை பற்றிப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கேற்ப (ஆகும்).

நூல் : துஹ்ஃபதுல் முஜிப் : 339

قال شيخ الاسلام ابن تيمية

إنما يرفع الله الشخص

بقـدرتمسكـه

بسنة الرسول ﷺ:

تحفة المجيب 339 )


308. இமாம் இப்னு உதைமின் ரஹிமஹூல்லா அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பெண் தொழாதவலாக இருந்தால்,
அவளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்வது ஹலாலாகாது."

நூல் : ரியாலுஸ் ஸாலிஹின் விளக்கம் 3/419

قال الشيخ ابن عثيمين رحمه الله

الأنثى إذا كانت لا تصلي  فلا يحـل لـمسلم أن يتزوجهـا

شرح ریاض الصالحين 419/3


309. "எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்கவில்லையோ (அப்போது) என்னுடைய அறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்' 

என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள். 

- இமாம் ஷாஃபிஈ (ரஹ்)

நூல்: முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57


310. சத்தியத்தை விரும்புபவர் (பிறர் தனக்கு கூறும்) அறிவுரையாலும், (தன்) தவறை (பிறர்) உணர்த்துவதாலும் மகிழ்வார்.

- அல்லாமா ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்,
நூல் : ஷரஹ் கிதாபுல் அபூதிய்யஹ், பக்கம் : 252


311. ஒரு பணக்காரன் தும்மினான். 
அவனைச்சுற்றி உள்ளவர்களெல்லாம் எங்களின் தோழர் இன்னும் சகோதரருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று கூறினார்கள்.

இன்னும் ஒரு ஏழை தும்மினான். 
அவர்கள் " யார் இவன்?
தன் சளியினால் நமக்கு தொந்தரவு செய்துவிட்டான் "என எரிச்சலடைந்தார்கள்.

- இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி.

الإمام الشافعي 

عطش الغني فقال ممن حوله
رجــم الإلـه حبيبنا وأخانا
وأتى الفقير بعطسة فتأففوا
مـن ذا الـذي بـرگامه آذانا


312. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

உடல் ஆரோக்கியத்தைப் பெற விரும்புபவர் அதிகம் உண்பதையும் குடிப்பதையும் குறைத்துக் கொள்ளட்டும். 

உள ஆரோக்கியத்தைப் பெற விரும்புபவர் பாவங்களை விட்டு விடட்டும்.

நூல்: ஸாதுல் மஆத் (4/156)


313. வானிலிருந்து வரும் 
சிறந்த வரப்பிரசாதம்;
அல்லாஹ்வின் அனுகூலமாகும்...

பூமியிலிருந்து போகும் 
சிறந்த நற்பேறு;
அடியானின்  மனத்தூய்மையாகும்...

- அலி இப்னு அபீ தாலிப் (ரழி)


314. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்  : 

அனைத்து  முஸ்லிம்களும் பூமி உருண்டையாகக்  இருப்பதாக  ஏற்று கொள்கிறார்கள்:

பல அறிஞர்கள் 
இது குறித்து ஒருமித்த கருத்தை கூறியுள்ளனா்!

அறிவில்லாதவர்கள் மட்டுமே பூமி உருண்டையாக இல்லை என்று கூறுகிறார்கள்.

 மஜ்மூஉல் பஃதாவா /6/586


315. இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மரணத்திற்கு பிறகு நற்செயல்கள் நின்றுவிடாமல் இருக்க வேண்டும் என எவர் விரும்புவாரோ அவர் மார்க்கத்தின் கல்வியை பரப்பட்டும்.

நூல்: அத்- தத்கிரா - 55


316. அபு தர்தா ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : 

யார் மரணத்தை அடிக்கடி நினைவு கூறுகிறாறோ!

அவருக்கு மகிழ்ச்சி மற்றும் பொறாமை எண்ணம்  குறைகிறது!

இமாம் தஹபி சியருன் அலா பின் நுபலா 2:353


317. யஹ்யா  இப்னு முஆத் رحمه الله கூறினார்கள்:

"இரவு நீளமானது, 

எனவே (அதில் அதிகம் அமல் செய்வதை கொண்டு அதற்கு உயிர் கொடுங்கள்) 

உங்கள் தூக்கத்தை கொண்டு சுருக்கிட வேண்டாம், 

(அதே போன்று) இஸ்லாம் தூய்மையானது, 

எனவே அதை உங்கள் பாவங்களால் மாசுபடுத்தாதீர்கள்."

நூல்: லா தாஇஃப் அல் மஆரிஃப்(La’tāif al-Ma’ārif), 
பக்கம் 326 |  இமாம் இப்னு ரஜப் அல்-ஹம்பலி رحمه الله

قال يحيى بن معاذ رحمه الله:

الليل طويل فلا تقصره بمنامك، والإسلام نقي فلا تدنسه بآثامك

لطائف المعارف ٣٢٦ لإبن رجب الحنبلي رحمه الله


318. இமாம் ஸலமா இப்னு தீனார் அவர்கள் கூறினார்கள்:

உலக விடயங்களில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் எனக்குத் தருவதை விட அதனை அவன் தடுத்துவிடுவது அவனுடைய அருட்கொடைகளில் மிக மகத்தானதாகும்.

 ஏனெனில், அப்படிப்பட்ட இன்பங்கள் எந்தவொரு கூட்டத்தினருக்கும் கொடுக்கப்பட்டால், 

அந்தக் கூட்டம் அழிந்து விடும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். 

பார்க்க: "(6/98) سير أعلام النبلاء


319. அபு தர்தா رضي الله عنه கூறுகிறார்கள்:

“ஒரு ஸாலிஹான தோழனோடு இருப்பது தனிமையில் இருப்பதை விட சிறந்தது, 

இருப்பினும் தனிமையில் இருப்பது, 

ஒரு தீய (வழிகெட்ட) தோழனுடன் இணைந்திருப்பதை விட மிகச் சிறந்தது.  

மௌனமாக இருப்பதை  விட நல்ல பேச்சு சிறந்ததாகும்,

 ஆனால் தீய (வழிகெட்ட) பேச்சை விட மெளனமாக  இருப்பதே மிகச் சிறந்தது.’’

நூல்: ரவ்தத் உல்-உகலா |  பக்கம் 56 |  இமாம் இப்னு ஹிப்பான் رحمه الله

فايز صالح: قَالَ أَبُو الدَّرْدَاءِ رضي الله عنه:

الصَّاحِبُ الصَّالِحُ خَيْرٌ مِنَ الْوَحْدَةِ وَالْوَحْدَةُ خَيْرٌ مِنَ الصَّاحِبِ السُّوءِ وَمُمْلِي الْخَيْرِ خَيْرٌ مِنَ السَّاكِتِ وَالسَّاكِتُ خَيْرٌ مِنْ مُمْلِي الشَّرِّ

روضة العقلاء ٥٦ لابن حبان رحمه الله فايز صالح


320. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: 

மனிதனே! மறுமையை எடுத்து உலகத்தை விற்றுவிடு, இரண்டிலும் நீ இலாபம் அடைவாய், உலகத்தை எடுத்து மறுமையை விற்று விடாதே, இரண்டிலும் நீ நஷ்டம் அடைவாய். 

நூல்: அல் வாபிலுஸ் ஸய்யிப், பக்கம்: 24

قال الإمام ابن القيم -رحمه الله-:

ابن آدم، بع الدنيا بالآخرة تبرحهما جميعاً، ولا تبع الآخرة بالدنيا تخسرهما جميعاً .

الوابل الصيب ص(٢٤)


321. என் (ஈமானிய) சகோதரர்களே,

இந்த உலக வாழ்க்கையைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், 

ஏனெனில் அதன் சூழ்ச்சியானது ஹாரூத் மற்றும் மாரூத் ஆகியோரின் சூழ்ச்சியை விட ஆபத்தானது;

அவர்களின் சூழ்ச்சி ஒரு மனிதனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தியது.

 ஆனால் இந்த உலக வாழ்க்கையின் சூழ்ச்சியானது ஒரு அடியானுக்கும் அவனுடைய இறைவனுக்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்துகிறது.”

-இமாம் இப்னுல் ஜவ்ஸி رحمه الله 
நூல்: அல்-முதிஷ் |  பக்கம் 386


322. இமாம் ஹஸன் பஸரி رحمه الله அவர்கள் கூறினார்கள் 

தூய்மையான தவ்பா என்பது பாவத்தை நீ நேசித்தது போன்று பாவத்தை நீ வெறுக்க வேண்டும். 

பாவத்தை நீ நினைவு கூர்ந்தால் இஸ்திஃபார் செய்ய வேண்டும். 

நூல்: தஃப்ஸீர் இப்னுகஸீர் 8/169


323. ஷெய்க் உல்-இஸ்லாம் இப்னு தைமியா رحمه الله கூறுகின்றார்கள்

"அல்லாஹ்வை அதிகம் அதிகம்  நினைவுகூருவதும், 

அவனிடம் அதிகம் அதிகம் துஆ செய்வதுமே (நம் வாழ்வின் அனைத்து) நன்மைகளுக்கான திறவுகோளாகும்."

நூல்: மஜ்மா அல்-ஃபத்தவா, 10/661 


نصيحة من ذهب

سئل الشيخ الشعراوي بماذا نصحت ابنك

حين تزوج ؟ قال : " يا بني هذه المـرأة تركت الأب والأم والأخ والأخـت ، وجاءت لتكون لك وحدك ، فكن لها كل هؤلاء ! ".

من أقوال الشيخ الشعراوي رحمه الله

324. பொன்னான அறிவுரை

உங்கள் மகனுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுகிறீர்கள் என்று ஷேக் அல்-ஷாரவியிடம் கேட்கப்பட்டது.

அவர் திருமணம் செய்து கொண்டபோது 

"என் மகனே, இந்த பெண் அப்பா, அம்மா, சகோதரன் மற்றும் சகோதரியை விட்டுவிட்டு, உங்களுக்காக தனியாக வந்தாள், எனவே இவை அனைத்துமாக அவளுக்கு இரு!"

-ஷேக் அல்-ஷாராவி (ரஹ்) அவர்களின் அறிவுரைகள்.


325. ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உலகத்தில் உலமாகள் இல்லை என்றால் ஒட்டு மொத்த மக்களும் விலங்கினங்களாக மாறியிருப்பார்கள் 

எனவே நீங்கள் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் அது இறையச்சத்தை உருவாக்கும்.

மற்றும் அதை தேடுவது இபாதத் (வணக்கம்).

அதை கற்பது தஸ்பீஹ் (திக்ர்).

அதில் நீங்கள் ஆய்வோடு இருப்பது ஜிஹாத்.

மேலும் அறியாதவர்களுக்கு நீங்கள் கல்வியை கற்றுக் கொடுப்பது ஸதகா (தர்மம்)


غفر الله لنا و له

326. அல்லாஹ் நம்மையும் அவரையும் மன்னிக்கட்டும்

ஒருவரின் பாவத்தை பற்றி யாராவது உன்னிடம் பேசினால் அல்லாஹ் நம்மையும் அவரையும் மன்னிப்பானாக என்று கூறிவிடு அதற்க்கு மேல் எதுவும் பேசாதே...!

الشيخ نبيل رحيم (حفظه)
-அஷ்ஷெய்க் நஃபீல் ரஹீம் (ரஹ்) 


327. இமாம் ஹஸன் அல் பஸரி ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் கூறுகிறார்கள் : 

ஒரு இறை விசுவாசியின் சிறந்த பண்புகளில் ஒன்று!

1} பேச்சில் நிதானம் இருக்கும்!

2} உணவு குறைவாக சாப்பிடுவார்!

3} பானம் குறைவாக அருந்துவார்!

ஒரு பாவியின் மோசமான பண்புகளில் ஒன்று!

1} அதிகமாக பேசுவார்

2} வயிறு நிரப்ப உணவு உண்ணுதல்!

3} அதிகமாக பானம் அருந்தல்!

நூல் :  இப்னு அபி துன்யா


328. இமாம் இப்னுல் கய்யிம் رحمه الله கூறுகிறார்கள்: 

அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்தல் நயவஞ்சகத்தனத்திலிருந்து பாதுகாப்பாகும், 

ஏனென்றால் நயவஞ்கக்காரர்கள் அல்லாஹ்வை குறைவாக நினைவு கூரக்கூடியவர்கள். 

நூல்: அல் வாபிலுஸ் ஸய்யிப், பக்கம்: 161


329. எப்பொழுது மக்கள் உலமாக்களின் பக்கம் திரும்புவதை (நல்லதையும், தீயதையும் கேட்டு விளங்குவதை) விட்டும் (தம்மை) தடுத்துக்கொண்டார்களோ அப்பொழுது அவர்கள் சோதனையில்,

 பிரச்சினையில் சிக்கிக்கொண்டார்கள்.

-இமாம் முக்பில் இப்னு ஹாதி அல்வாதீ (ரஹிமஹுல்லாஹ்)


قال الحسن البصري رحمه الله : 

من أحسن عبادة الله في شبيبته لقاه الله الحكمة عنـد كبر سنه، 

330. ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

இளமையில் சிறந்த முறையில் அல்லாஹ்வை வணங்குபவர்களுக்கு 

முதுமையில் அல்லாஹ்வை அவர் ஞானத்துடன் சந்திப்பார், 

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌  وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
அவர் வாலிபத்தையடைந்து, 

(வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலையைப் பெற்றபோது அவருக்கு ஞானத்தையும்,

கல்வியையும் நாம் வழங்கினோம், 

இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் (நற்) கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன் : 28:14)
 

331. இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறும் 04 வாழ்வியல் தத்துவங்கள்!

சோதனைகளும், பிரச்சனைகளும் தீர இவற்றை பின்பற்றுங்கள்!

1. எனக்குரிய ரிஸ்க் (உணவை, வாழ்வாதாரத்தை) நான் பிறப்பதற்கு முன்பே அல்லாஹ் எழுதி விட்டான். எனவே என்னுடைய ரிஸ்க்கை யாராலும் எடுக்கவும் முடியாது பறிக்கவும் முடியாது என்பதை நான் அறிவேன், 

எனவே நான் கவலை கொள்வது இல்லை.

2. எனக்குரிய அமலை நான் தான் செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன்,

எனவே நான் அமல்களை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

3. என் வாழ்வில் எல்லா நிலைகளிலும் என்னை கண்காத்து பின் தொடரும் என் இறைவன் அல்லாஹ் என்பதை நான் அறிவேன், 

எனவே அது நான் பாவங்கள் குற்றங்கள் செய்யத் தடையாக இருக்கிறது. அல்லாஹ் என்னைப் பார்கிறான் என்பதை நான் அறிவேன்.

4. என்னுடைய மவூத் (மரணம்) என்னை தெடர்கிறது என்பதை நான் விளங்கி வைத்துள்ளேன்.

எனவே நான் வாழும் காலம் எத்தனை, மாதங்கள் எத்தனை, வருடங்கள் எத்தனை, நிமிடங்கள் எத்தனை, நான் இனி விடும் மூச்சு எத்தனை என்பது எனக்குத் தெரியவில்லை, எனவே நான் என் மவூத்துக்காக தயாராகி கொள்கிறேன்.


332. இமாம் ஹசன் பஸ்ரி (ரஹ்) கூறுவதாவது ;

"தாயின் முகம் பார்ப்பதே வணக்கம் என்றால், அவளுக்கு பணிவிடை செய்வது எப்பேர்ப்பட்ட வண்க்கமாக இருக்கவேண்டும்..."

(அல்பிர்ரு வஸ்ஸிலது - 117) அல்மர்வஸிz


333. இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் நான் அல்லாஹ்வை 50 வருடங்களாக இபாதத் செய்து கொண்டிருக்கிறேன், மூன்று விடயங்களை நான் விடாதவரை இபாதத்தில் இன்பத்தை உணர முடியவில்லை....

1- மக்களை திருப்திப் படுத்துவதை விட்டுவிட்டேன் , அவர்களிடத்தில் உண்மையை உரக்கச் சொல்வதற்கு சக்தி பெற்றேன்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏
(ஆகவே) விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், நேர்மையான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன் : 33:70)

يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏
(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்குச் சீர் படுத்தி வைப்பான், உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான், மேலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப் படிகின்றாரோ அப்போது அவர், திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றியடைந்து விட்டார்.
(அல்குர்ஆன் : 33:71)

2- பாவம் புரிபவர்களின் சகவாசத்தை விட்டு விட்டேன், நல்லவர்களின் சகவாசம் கிடைத்தது.

3-உலக இன்பத்தை விட்டு விட்டேன், மறுமையின் இன்பத்தை பெற ஆரம்பித்தேன்.

நூல் - ஸியர் அஃலாமுன் நுபலா- 11/34


334. இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்டபோது, அவர் அவர்களிடம் கூறுவார்:

"இறை தூதர்கள் பெரும்பாலும் மகள்களின் தந்தையாக இருந்தார்கள்."

سير اعلام النبلاء ٤٢٤/٩ - ٥٣٧


335. இமாம் அல்-அஜுரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அறிவு இல்லாமல் வழிபாடு சாத்தியமில்லை.

எனவே அறிவைத் தேடுவது கட்டாயமானது மற்றும் அறியாமை இறைநம்பிக்கையாருக்கு ஒரு நல்ல நிலை அல்ல.

அதனால் அறியாமையை தன்னிடமிருந்து அகற்றி,

அல்லாஹ் கட்டளையிட்ட வழியில் அல்லாஹ்வை வணங்குவதற்கு அவன் அறிவைத் தேடுகிறான்..."

[அஹ்லாக் அல்-உலமா பக்.42-43]


336. உமர் இப்னு அல்-கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவருக்கு நரகத்தின் உண்மைத் தன்மை எங்கே தெரியும் என்றால்,

அவர் குரல் துண்டிக்கும் வரை சத்தம் போடுவார், 

முதுகு உடைக்கும் வரை பிரார்த்தனை செய்வார்."

[அஸ்ஸுஹத் இப்னு  அல் முபாரக்]


337. இப்ராஹீம் அல் நகயி ரஹிமஹுல்லாஹ்  கூறினார்கள் : 

பல ஆண்கள் தங்கள் மனைவிகளை எப்படி அடிக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்!

ஆனால் என் கை என் மனைவி ஜைனப்பை அடித்தால் என் கை செயலிழந்து போகட்டும் என்று கூறுவேன்!

நூல் :  அஹ்காம் 1/462


338. இமாம் - அல்பானி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

இன்றைய குடும்பங்களையும் மற்றும்,

குழந்தைகளையும் அழிக்கூடியது

தொலைக்காட்சி (டீவி) ஆகும்!

- ஃபத்வா தொகுப்பு (288)


339. அஷ்ஷெய்க் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:


குர்ஆன் ஓதாமலும், திக்ர் செய்யாமலும், துஆ (பிரார்த்தனை) கேட்காமலும் மௌனமாக (ஒரு) இடத்தில் அமர்ந்து இருப்பது வணக்கவழிபாடாகவோ, மார்க்கத்தில் ஏவப்பட்ட விடயமாகவோ இல்லை.


மாறாக, இப்படியானநிலை சந்தேகம் எனும் கதவைத்தான் திறந்துவிடும்.


எனவே, அல்லாஹ்வை நினைவுபடுத்துவதைக் கொண்டு செயற்படுவது என்பது மௌனமாக இருப்பதை விடச் சிறந்தது.


நூல்: அல்-பதாவா அல்-குப்ரா (2/298)



340. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:


“மக்களை ஏமாற்ற அல்லது வழிகெடுக்க இப்லீஸ் (ஷைத்தான்) கையாளும் முதல் ஆயுதம், 


அவர்களை அறிவை தேடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவதே ஆகும்.


ஏனென்றால் அறிவு என்பது (நேர்வழியின்) ஒளியாகும். 


இப்லீஸ் (ஷைத்தான்) அந்த (ஒளியால் ஆன) விளக்குகளை அணைப்பதன் மூலம் அவன் அவர்களை இருளில் வழிதவறச் செய்து அந்த இருளிலேயே அவர்களை விட்டு விடுகிறான், 


பின்பு அவர்களை அவன் விரும்பிய வழியில் தாக்குவான்”


நூல்: தல்பீஸ் இப்லீஸ் 1/289 


Previous Post Next Post