தெளஹீதும் இஸ்திஃபாரும்


          ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          “மார்க்கத்தின் அடிப்படை, அதன் கிளை, அதன் மூலப் பகுதி என இஸ்லாத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று சேரப் பெற்றிருப்பதுதான் இந்த 'தெளஹீத்' எனும் ஏகத்துவம்! இதுதான் அனைத்தினதும் நலவுமாகும். 'இஸ்திஃபார்' (பிழை பொறுக்கத் தேடுதல்) என்ற இவ்விடயம் தீங்குகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. எனவே, (தெளஹீத், இஸ்திஃபார் எனும்) இவ்விரு விடயங்கள் மூலம் நன்மைகள் அனைத்தும் கிடைத்து, தீங்குகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன!. 

         இறைவிசுவாசிக்கு ஏற்படுகின்ற தீங்குகள் அனைத்தும் அவனது பாவங்கள் மூலமாகத்தான் சம்பவிக்கின்றன. *'அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும்போது அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை!'*(அல்குர்ஆன், 8: 33) என்று அல்லாஹ்  கூறுவது போல அப்பாவங்களை அழித்து, வேதனையை நீக்குவது இந்த இஸ்திஃபார்தான்!”.

{ நூல்: 'ஜாமிஉல் மசாயில்', 7/274 } 


         قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى: [ فالتوحيد هو جماع الدين الذي هو أصله وفرعه ولبّه، وهو الخير كله، فيحصل من هذين جميع الخير، وزوال جميع الشر، وكل ما يصيب المؤمن من الشر فإنما هو بذنوبه.

والإستغفار يمحو الذنوب فيزيل العذاب، كما قال تعالى:« وما كان الله معذبهم وهم يستغفرون » 

{ جامع المسائل،  ٧/٢٧٤ }

➖➖➖➖➖➖➖➖➖➖

❇ ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: “எவரொருவர் தனது பேச்சிலோ, அல்லது  தனது செயலிலோ, அல்லது தனது நிலைமையிலோ, அல்லது தனது வாழ்வாதாரத்திலோ, அல்லது தனது உள்ளம் திரும்பியிருக்கும் விடயத்திலோ குறைபாடொன்றை  உணர்கிறாரோ அவர் தெளஹீதையும் இஸ்திஃபாரையும் கடைப்பிடித்துக்கொள்ளட்டும்! இவ்விரண்டும் உண்மையாகவும் உளத்தூய்மையாகவும் இருக்குமாக இருந்தால் இவ்விரண்டிலும்தான் நிவாரணியே இருக்கும்.

            இவ்வாறுதான் உறவினர்கள், குடும்பத்தார்கள், பிள்ளைகள், அண்டை வீட்டார்கள், சகோதரர்கள் ஆகியோர்களது உரிமைகளை நிறைவேற்றுவதில் குறைபாட்டை ஒரு மனிதன் கண்டு கொண்டால் அவர்களுக்காக அவன் பிரார்த்தித்து, இஸ்திஃபார் செய்து கொள்வதும் அவனுக்கு அவசியமாகும்!”.

{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 12/698 }


            قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى: [ فمن أحسّ بتقصير في قوله أو عمله أو حاله أو رزقه أو تقلب قلبه فعليه بالتوحيد والإستغفار؛ ففيهما الشفاء إذا كانا بصدق وإخلاص.

       وكذلك إذا وجد العبد تقصيرا في حقوق القرابة والأهل والأولاد والجيران والإخوان فعليه بالدعاء لهم والإستغفار ] .

{ مجموع الفتاوى،  ١٢ /٦٩٨ }

☘➖➖➖➖➖➖➖➖☘ 

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post