ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் ஆகிரத்துக்குரிய அமல்களை ஆயத்தப்படுத்துங்கள்


         இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           “மனிதனுக்கு இவ்வுலகில் இறங்கும் சோதனைகளில் மிகப்பெரியது மரணம்தான்! நன்மையின் பக்கம் சென்றதாக அவனது வாழ்க்கை இல்லையென்றிருந்தால் மரணத்திற்குப் பின்னர் உள்ள வாழ்க்கை மரணத்தை விட ரொம்பக் கஷ்டமாகி விடும்!.

          எனவே, மரணத்திற்காகவும், அதற்குப் பின்னர் உள்ள வாழ்க்கைக்காகவும் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் இறையச்சம், மற்றும் நற்செயல்கள் மூலம் ஆயத்தமாகிக்கொள்ள வேண்டியது இறைவிசுவாசிக்கு அவசியமானதாகும்!. அல்லாஹ் கூறுகிறான்: « நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்; (மறுமை) நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும்; அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் » (அல்குர்ஆன், 59: 18)

{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f ', 1/565 }


🌿➖➖➖➖➖➖➖➖🌿

             قال الإمام إبن رجب الحنبلي رحمه الله تعالى: *[ أعظم الشدائد التي تنزل بالعبد فى الدنيا الموت، وما بعده أشد منه إن لم يكن مصير العبد إلى خير.*

             *فالواجب على المؤمن الإستعداد للموت وما بعده في حال الصحة بالتقوى والأعمال الصالحة. قال الله تعالى: « يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ».*

{ لطائف المعارف، ١/٥٦٥ }

➖➖➖➖➖➖➖➖➖

❇👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: *“நீங்கள் உங்களுக்காக முன் கூட்டி அனுப்பி வைக்கும் எந்தவொரு நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்!”*(அல்குர்ஆன், 2: 110)

🌿➖➖➖➖➖➖➖➖🌿


               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post