முன்னுரை:
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது பேரருளும் சாந்தியும் இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களின் வழி நடந்த அனைத்துலக முஸ்லிம்கள் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
இறைத்தூதரின் நேரடி மாணவர்களான
நபித்தோழர்களிடம் பாடம் படித்த தாபியீன்களின் வழி வந்தோரிடம் ஷரீஆவைத் துறைபோகக் கற்றுத் தேறியவர்களில் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஒருவராகும்.
ஹதீஸ்கள் வாயிலாக ஃபிக்ஹ் விளக்கத்தை "முவத்தா" எனும் கிரந்தத்தை முதன் முதலில் தொகுத்தளித்ததன் ஊடாக
فقه الحديث
ஹதீஸ்கள் ஊடாக பெறப்படும் ஃபிக்ஹ் விளக்க வழிமுறை தொடர்பாக வழிகாட்டிய முன்னோடிகளில் ஒருவராக இமாம் மாலிக் ரஹி அவர்கள் கணிக்கப்படுகின்றார்கள் .
இமாம் மாலிக் ரஹி அவர்கள் பிரசித்திபெற்ற நான்கு மத்ஹபுகளில் ஒன்றான மத்ஹப் மாலிக்கீ மத்ஹபின் நிருவனராக நோக்கப்படுவதை நாம் அறிவோம்.
இமாம் மாலிக் (ரஹி) அவர்களின் மாணவரான இமாம் ஷாஃபிஈ அவர்கள் அல் உம்மு الأم என்ற தனது நூலுக்கு இமாம் மாலிகின் முன்னோடி நூலாக கொண்டதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அப்படியான சிறப்பு மிக்க ஒரு இமாமின் வாழ்க்கை, வரலாறு கல்வித்தேடல் பற்றி இங்கு சுருக்கமாக நோக்க உள்ளோம்.
இமாம் மாலிக்கின் குடும்ப மற்றும் வாழ்க்கைச் சுருக்கம்.
பெயர் மற்றும் பரம்பரை விபரம்:
மாலிக் பின் அன்ஸ் பின் மாலிக் பின் அபீ ஆமிர் அல் அஸ்புஹீ .
புணைப் பெயர்: அபூ அப்தில்லாஹ்.
சிறப்பு பெயர்: ஷைகுல் இஸ்லாம் இமாமு தாரில் ஹிஜ்ரா. ( ஹிஜ்ரத் நகரின் -மதீனாவின் இமாம்).
நபித்தோழர் வழி வந்த அறிவுப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் புனித மதீனாவில் ஹிஜ்ரி/ 93ல் கி.பி. 711ல் (93-179هـ ) பிறந்தார்கள்.
அதாவது நபி (ஸல்) அவர்களின் பத்துவருட பணியாளரான அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் மரணித்த தினம் மாலிக் பிறந்த நாளாகும்.
மரணம்:
இஸ்லாமிய உலகில் பல நூறு மாணவர்களை உருவாக்கி இஸ்லாமிய அறிவுச் சுடரேற்றி பல சாதனைகள் புரிந்த இமாம் அவர்கள் ஹிஜ்ரி 179 ல் கி.பி. (795 ல்) தனது 86வது வயதில் 20 தினங்கள் தொடராக நொய்வாய்ப்பட்ட நிலையில் மதீனாவிலேயே மரணித்தார்கள்.
رحمه الله رحمة واسعة وأسكنه الفردوس الأعلى.
அவன்னாரின் ஜனாஸா தொழுகையை அப்போதைய மதீனாவின் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின்
முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவரால் தொழுவிக்கப்பட்டு மதீனா பகீஃ பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
இமாம் மாலிகின் தாய், தந்தை மற்றும் பாட்டனார் பற்றிய விபரம்:
இமாம் அவர்களின் தந்தையின் தந்தை அனஸ் அவர்கள் மூத்த தாபியீன்களில் ஒருவராகவும் உஸ்மான் (ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்படுக் கிடந்த போது அவர்களை அடக்கம் செய்வதற்காக இரவில் சுமந்து சென்றவர்களில் ஒருவராகவும் காணப்படுவது இமாம் அவர்கள் நபிவழி நடந்த குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர் என்பதை உறுதி செய்கின்றது.
அவர்களின் தந்தையின் தந்தை (பாட்டனார்) அபூ மாலிக் (ரழி) அவர்கள் பத்ர் போர் தவிர்ந்த ஏனைய அனைத்து போர்களிலும் இறைத் தூதரோடு பங்கெடுத்தவர்கள்.
இமாம் மாலிகின் தாய் ஆலியா பின்த் ஷுரைக் பின் அப்திர் ரஹ்மான் அல்- அஸதிய்யா என்பதாகும்.
இமாம் மாலிக் அவர்களுக்கு #யஹ்யா, முஹம்மத், ஹம்மாத், ஃபாத்திமா ஆகிய நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் அறிவுத் தேடலில் சுசுறுப்பானவராகவும் அபார முயற்சியாளராகவும் சிறந்த அடைவுகளை அடைபவராகவும் காணப்பட்டார்கள்.
அவர்கள் தனது சிறு பராயத்திலேயே சங்கைமிக்க குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாஃபிழாக விளங்கியதன் விளைவாக மதீனா மஸ்ஜித் நபவியில் நடை பெறும் அறிவு மஜ்லிஸுகளில் கலந்து எழுதிப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அங்கு சென்று தொடர்ந்தும் இறைத் தூதரின் பொன்மொழிகளை மனனம் செய்ய ஆரம்பித்தார்கள்.
فقيه المدينة மதீனாவின் மார்க்க மாமேதை
என்றழைக்கப்படும் இமாம் ஹுர்முஸ் என்ற அறிஞரிடம் ஏழு வருடங்கள் தொடராக கல்வி கற்றுத் தேறினார்கள் என வரலாறு குறிப்பிடுகின்றது.
فقيه ومحدِّث ஃபகீஹ், முஹத்திஸ் என்ற இரு பெரிய சிறப்புப் பெயர்களோடு அறியப்பட்ட இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் முதன் முதலில் ஹதீஸ் நூலைத் தொகுத்தளித்தவர் எனப் போற்றப்பட்டுகின்றார்கள்.
இமாம் மாலிக் (ரஹி) பற்றி அவர்களின் ஆசிரியர்களின் ஒருவரான இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி (ரஹி) அவர்கள் குறிப்பிடுகின்ற போது:
" أنت من أوعية العلم، وإنك لنعم المستودَع للعلم"
"நீ அறிவுக் களஞ்சியங்களில் ஒரு களஞ்சியமாகும். அறிவுகளை வைப்புச் செய்ய நீயே சிறந்த பெட்டகம்" எனக் கூறினார்கள். ( இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி (ரஹி)
இமாம் அவர்களின் அதி சிரேஷ்ட மாணவரான இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் குறிப்பிடுகின்ற போது:
"مالك سيد من سادات أهل العلم، وهو إمام في الحديث والفقه، ومن مثل مالك؟ متبع لآثار من مضى، مع عقل وأدب "
அறிவுள்ள தலைவர்களில் இமாம் மாலிகும் ஒரு தலைவர். அவர் ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் ஆகிய இருதுறைகளின் இமாமும் கூட. கூடவே, آثار ஆதார் எனப்படும் நபி வழிச் சான்றுகளைப் பின்பற்றி நடப்பவர்களான ஸஹாபாக்கள் வழியில் நடப்பவர்
, ஒழுக்கமாகவும் , புத்தி சாதுரியத்தோடும் நடப்பவர் எனக் குறிப்பிடுகின்றார்கள். (இமாம் ஷாஃபிஈ)
மாமேதைகளான இமாம் மாலிகின் ஆசிரியர்கள்:
எண்ணில் அடங்காத பல நூறு தாபியீன்கள், தபவுத்தாபியீன்களிடம் பாடம் படைத்தவர்களாக விளங்கும் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் மதீனாவின் ஃபகீஹ் எனப் போற்றப்படும் ரபீஆ பின் அபீ அப்திர் ரஹ்மான், இப்னு உமர் ரழியின் பொறுப்பில் வளர்ந்த இமாம் நாஃபிஃ, இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி, அபுஸ் ஸுன்னாத், ஆயிஷா பின்த் ஸஃத் பின் அபீவக்காஸ், யஹ்யா பின் ஸயீத் அல் அன்ஸாரீ,
ஸயீத் அல் மக்புரீ, ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் சுபைர், அப்துல்லாஹ் பின் தீனார் போன்ற தலை சிறந்த அறிஞர்கள் உஸ்தாதுகளாக இருப்பது சிறப்பம்சமாகும்.
இமாம் மாலிகிடம் பாடம் படித்த மாணவர் உலகம்:
இமாம் மாலிகின் மாணவர்கள் பற்றிய நூலை தொகுத்தளித்த இமாம் காழீ இயாழ் (ரஹி) அவர்கள் இமாம் மாலிகின் மாணவர்கள் 1300 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதாக அறிஞர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள் .
இமாம் மாலிகின் மாணவர்கள் உலகில் திக்கு திசை எங்கும் பரவிக் காணப்பட்டனர். ஆபிரிக்கா நாடுகள், எகிப்து, தொனீஸியா, அந்தலூஸியா , ஈராக் , மதீனா நகர் போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களில் அறிவுப் பணியாற்றினர்.
எகிப்தில் இப்னுல் காஸிம், (ம.ஹி.191 ) அஷ்ஹப் (ம.ஹி.204 )
ஆபிரிக்காவில் அஸத் பின் ஃபுராத்.(ம.ஹி.214 )
இஸ்லாமிய இஸ்பைன் அந்தலூஸியாவில் யஹ்யா பின் யஹ்யா அல்லைஸீ.(ம.ஹி.224 )
ஈராக்கில்: அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ பின் அல்அன்பரீ (ம.ஹி.186 ), அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் அல்கஃனப் அத்தமீமீ அல்ஹாரிஸீ,
(ம.ஹி 220)
இந்த அறிஞர்கள் மூலம் மாலிக் இமாமின் ஃபிக்ஹ் மத்ஹபும் அகீதாவும் பரவியது.
அவர்களுடன் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, இமாமுஸ் ஸுன்னா முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ, அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹி) போன்ற அறிஞர்கள் மிக முக்கிய மாணவர் வட்டமாகும் .
இமாம் மாலிகின் அறிவுப் பணி:
ஹிஜ்ரா நகர இமாம் என்ற சிறப்புப் பெயருக்குரிய இமாம் மாலிக் (ரஹி) அவர்களிடம்
ஹஜ்ஜுக்காகச் சென்று வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் அறிவில் இருந்து நிறையவே பயன் பெற்றதுடன், தமது பிரதேசங்களுக்கும் அதனைச் சுமந்து சென்றனர்.
உலகில் நாலா பக்களில் இருந்தும் பல நூறு மாணவர்கள் இமாம் மாலிக்கின் அறிவு மஜ்லிஸையும் மார்க்க தீர்வையும் தேடிப் பெற புறப்பட்டு வருகை தந்ததன் விளைவாக இமாம் அவர்களின் பெயரும் புகழும் உலகெங்கும் பரவியது.
பார்க்க: இமாம் தஹபியின் அஸ்ஸியர்.
(سير أعلام النبلاء للذهبي جـ 8 صـ 49: 48).
முவத்தா பற்றிய சுருக்கப் பார்வை:
புனித குர்ஆனோடு ஹதீஸ்கள் கலப்பதால் இரண்டையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலங்களில் ஹதீஸ்களை எழுதுவதை தடை விதித்திருந்திருந்தாலும் பிரித்து விளங்கும் திறமை உள்ள குறிப்பிட்ட நபித் தோழர்களால் அவை ஏடுகளில் எழுதப்பட்டிருந்தன.
பெரிய நபித் தோழர்களின் மரணம், போர், வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசங்களில் குடியேறுதல், அல்லது இடம் பெயர்தல் போன்ற காரணிகளால் ஹதீஸ்களைத் திரட்டுவதும் அதற்கான பயணம் மேற்கொள்வதும் அறிவுத் தேடல் கட்டாயமான பணியாகக் கொள்ளப்பட்டது.
நபித்தோழர்கள் தாம் மனனம் செய்து வைத்திருந்த ஹதீஸ்களை தூரப் பிரதேசத்தில் உள்ள தமது சம தோழர்களிடம் உறுதி செய்வதற்காவும் நபித்தோழர்களைத் தேடிப் பயணம் செய்ததைப் போல தாபியீன்களும் மதீனாவிற்கு வெளியில் பயணங்கள் மேற்கொண்டு நம்பகமானோர் என அறியப்பட்டவர்களிடம் மிக மிக கவனமாக ஹதீஸ்களைத் தேடி பதிவு செய்தார்கள்.
இமாம் மாலிகின் நிலைமை அவ்வாறன்று. மூத்த மற்றும் நடுத்தரத் தாபியீன்கள் பலர் மதீனாவில் வாழ்ந்ததன் காரணமாக அவர்களிடம் சங்கைமிக்க மதீனாப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்கள்.
முவத்தா என்ற சொல்லின் பெயரும் பொருளும்:
فإن الموطأ سمي به كتاب الإمام مالك، ومعنى الموطأ: المهيأ والممهد والمسهل، لأن الإمام - رحمه الله - وطأه وسهله وقربه ورتبه للناس بالكتابة والتبويب والشرح والتعليق حتى أصبح ما جاء فيه من الأحاديث والأحكام سهل المنال موطأ, يأخذ منه كل طالب علم ما يحتاج إليه،
இமாம் மாலிக் அவர்கள் வைத்த பெயரே முவத்தஃ என்ற முவத்தா.
முவத்தாவின் பாட அத்தியாயங்கள், விளக்க உரைகள், குறிப்புக்கள் , இலகுவான முறையில் ஹதீஸ்களைத் தேடும் முறை என்பன அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக்கப்பட்டிருப்பததைக் கருத்தில் கொண்டு
இலகுபடுத்தப்பட்டது,எளிமையாக்கப்பட்டது, வழியமைக்கப்பட்டதுபோன்ற பொருள் தருகின்ற #முவத்தா என்ற பெயரை இமாம் அவர்கள் சூட்டியதற்கான நோக்கமாக கருதப்படுகின்றது.
وقيل: هو من المواطأة أي الموافقة، فقد جاء في مقدمة تحقيق كتاب الموطأ لمحمد فؤاد عبد الباقي:
وقال مالك: عرضت كتابي هذا على سبعين فقيهًا من فقهاء المدينة فكلهم واطأني - وافقني - عليه فسميته الموطأ. والله أعلم.
இது واطأ
வாதஅ ஒப்புதல் அழித்தான் என்ற இறந்த கால சொல்லைக் கவனத்தில் கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற பொருளில்
முவத்தா என்று பெயர் சூட்டப்பட்டது என்றும்,
இந்நூலைக் கோர்வை செய்து மதீனாவில் வாழ்ந்த தனது ஆசான்களான 70 ஃபகீஹ்களிடம் தெரியப்படுத்திய போது
فكلهم واطأني - وافقني அவர்கள் அனைவரும் அதற்கு ஒப்புதல் அளித்து, உடன்பட்டனர், அதனால் அதற்கு முவத்தா என நான் பெயர் சூட்டினேன் என இமாம் மாலிக் ரஹி அவர்கள் குறிப்பிடும் கருத்தும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
(ஃபுஆத் அப்தில் பாகீ- அவர்களின் முவத்தாவின் அடிக் குறிப்பில் இருந்து )
முவத்தா கோர்வை செய்யப்பட்டது பற்றிய கதை:
அப்பாஸிய கலீஃபா அபூ ஜஃபர் அல்மன்சூர் அவர்கள் ஹஜ் செய்ய வந்த போது இமாம் மாலிகின் பாட விரிவுரைகள் பற்றி செவிமடுத்த பின்னர், மக்களுக்கு இலகுவாக விளங்கும் அமைப்பில் நபியின் மொழிப் பேழை ஒன்றை தொகுத்தால் நன்றாக இருக்கும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியதன் பயனாக இமாம் மாலிக் தனது முவத்தாவைக் கோர்வை செய்ததாக கூறப்படும் செய்தி
والله أعلم எந்த அளவு ஆதாரபூர்வமானது என்பது தெரியாது.
ஏனெனில் இமாம் காழீ இயாழ் (ரஹி) அவர்கள் முவத்தா தொகுப்பு பற்றி பிறிதொரு விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
"قال القاضي عياض: «أول من عمل الموطأ عبد العزيز بن الماجشون عمله كلاماً بغير حديث، فلما رآه مالـك قـال: ما أحسن ما عمل، ولو كنت أنا لبدأت بالآثار، ثم شـددت ذلـك بالكـلام, ثم عـزم على تصنيف الموطأ»([ترتيب المدارك (1 / 101ـ 103]
இமாம் அப்துல் அஸீ(ஜீ)ஸ் அல் மாஷஜூன் (ரஹி) அவர்கள் "முவத்தா" என்ற நூலை முதலாவதாக தொகுத்ததைக் கண்ட இமாம் மாலிக் அவர்கள் ; அதனை இவ்வாறு தொகுக்காமல் வேறுவிதமாகத் தொகுத்தளித்திருக்காலமே. நானாக இருந்தால் இறைத் தூதரின் பொன்மொழிகளை முன்படுத்தி, அதைக் கடைப்பிடிப்பது பற்றி கடுமையாக பேசி இருப்பேன் எனக் கூறினார்களாம். அதன் பின்பே முவத்தாவைத் தொகுக்கு உறுபூண்டார்கள்.
https://almoqtabas.com/ar/topics/view/26085224479720032
முதல் ஹதீஸ் தொகுப்பாக வெளிவந்த முவத்தா:
இறைத் தூதரின் பொன்மொழிகள் ஸஹாபாக்களின் மனங்களில் மனனம் செய்யப்பட்டு சிறு சிறு ஏடுகளிலும் பதியப்பட்டிருந்தன. அவை பின் வந்த காலங்களில் நூலுருப் பெற்றன. அந்த வகையில் முவத்தா முதல் முன்னோடி நூலாகும்.
முவத்தா கிரந்தம் இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டத்தை ஹதீஸ்கள் ஊடாக தொகுத்தளித்த முதல் தொகுப்பு கிரந்தமாக இஸ்லாமிய வரலாற்றில் கொள்ளப்படுகின்றது.
அது பின்வரும் பொறிமுறைக் கோட்பாடுகள் ஊடாக கட்டமைக்கப்பட்டிருந்து.
ஹதீஸில் இருந்து ஃபிக்ஹ் விளக்கம் பெறப்பட்ட நூலாக இருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
ஒரு மார்க்க விஷயமாக இடம் பெறும் பல ஹதீஸ்கள் ஒரு இடத்தில் கொண்டு வரப்பட்டு விளக்குதல்,
மதீனா மக்கள் நபிவழியில் நடப்பவர்கள் என்ற பொதுப்பார்வையில் ஹதீஸ்கள், குறித்த ஒரு செய்தி தொடர்பாக விளக்கம் கிடைக்காத போது மதீனா மக்களின் நடைமுறையை துணையாக நோக்குதல் ,
பின்னர் ஸஹாபாக்கள், தாபியீன்களின் நிலைப்பாடுகள் பற்றிய விளக்கத்தை எடுத்துக் கூறுதல்,
இறுதியில் தனது விளக்கவுரை ,கருத்துரை, நிலைப்பாடுகள் பற்றி விளக்குதல் போன்ற படிமுறை அம்சங்கள் ஊடாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக இந்நூலின் போக்குப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இமாம் மாலிக்கின் கிரந்தத்தின் கட்டமைப்பை நோக்குகின்ற போது:
குறித்த நிபந்தனைகளையும் வரையறைகளையும் கொண்ட ஹதீஸ் தெரிவு,
இறைத் தூதரின் ஹதீஸ் ஊடாக பெறப்படும் ஃபிக்ஹ் சட்ட விளக்கம் ,
மதீனாவாசிகளின் நடைமுறை, ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் நிலைப்பாடுகள் ஊடாக நிறுவுதல் போன்ற அடிப்படைகளைத் தழுவி ஆராயப்பட்டிருப்பதானது ஷரீஆவின் விளக்கப் படிமுறையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வழிகாட்டல்களாகும்.
ஃபிக்ஹ் என்பது குர்ஆன், ஹதீஸில் இல்லை என்பது போன்ற மத்ஹபு வாதிகளின் தவறான பிரச்சாரத்தையும் நபித்தோழர்கள், தாபியீன்களின் விளக்கம் அவசியமற்றது என்ற அறியாமைக் கருத்தையும் முறியடித்து குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ் ஆகிய இரு மூலாதாரங்களில் இருந்தும், துணைக்காக மதீனா மக்களின் நடைமுறை மற்றும் நபித்தோழர்கள், தாபியீன்களின் தீர்ப்புக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெறப்படும் ஃபிக்ஹ் விளக்கம்,
கருத்து முரண்பாடுகளில் உடன்பாட்டு ஃபிக்ஹ் முறையை அறிமுகம் செய்தல் போன்ற நடைமுறைகளை இமாம் மாலிக் அறிமுகம் செய்திருப்பதைக் கவனித்தால் மார்க்க சட்ட விவகாரங்களில் ஷரீஆ கற்கை மாணவர் ஒருவர் எவ்வாறான வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிமுகப்படுத்திய முன்னோடி அறிஞரே இமாம் மாலிக் என்றும்; அவ்வாறான நூலே முவத்தா என்றும் கருத்துக்களில் ஊர்ஜிதமான கருத்தை தெரிவு செய்யும் முக்கிய வழிமுறையை இமாம் மாலிக் எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும்
கற்றுத் தேற முடியும்.
இமாமவர்கள் தெரிவு செய்த நபிமொழிகள் மற்றும் தாபியீன்களின் கூற்றுக்களை உள்ளடக்கிய பெறுமதிமிக்க தனது முவத்தா கிரந்தத்தை சரி செய்து, தவறுகளை அகற்றி, மீளாய்வு செய்து நாற்பது ஆண்டுகாலம் மதீனாப் பள்ளியில் பாடப் போதனை செய்ததன் ஊடாக ஆலிம் உலமாக்களுக்கு இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் முன்வைக்கும் செய்தி என்ன என்பது தெரியவருகின்றது.
முவத்தா நூல் பற்றிய இமாம் மாலிகின் கொள்கைப் பிரகடனம்:
كتاب "الموطأ"، وبيان ما اشتمل عليه من الأحاديث والآثار قائلا: "فيه حديث رسول الله صلى الله عليه وسلم وقول الصحابة والتابعين ورأيي. وقد تكلمت برأيي وعلى الاجتهاد، وعلى ما أدركت عليه أهل العلم ببلدنا، ولم اخرج من جملتهم إلى غيره"(1).
முவத்தா கிரந்தமானது இறைத் தூதரின் ஹதீஸ்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள் அறிவிப்புக்கள் என்பவற்றோடு எனது இஜ்திஹாத், எனது கருத்துடன், நபியின் வழி நடப்பவர்கள் என்ற அடிப்படையில் மதீனாவாசிகளின் நடைமுறையையும் உள்ளடக்கியதாகும். அவர்கள் தவிர்ந்த வேறு எவரிடமும் நான் ஹதீஸ்களை அறிவிக்கவில்லை என இமாம் அவர்கள் குறிப்பிட்டு தனது நூலின் உள்ளடக்கத்தின் வழிமுறை பற்றி விளக்கி உள்ளார்கள்.
முவத்தா கிரந்தம் :
الروايات المرفوعة
மர்ஃபூஆத்- அறிவிப்பாளர் தொடர் அறுபடாத- அறிவிப்புக்கள்,
الروايات المرسلة
தாபியீன்களின் வழியில் வந்த ரிவாயாத் முர்ஸலா- ஸஹாபியோடு ஓரிரு அறிவிப்பாளர் விடுபட்ட- அறிவிப்புக்கள்,
الرايات المقطوعة
ரிவாயாத்- மக்தூஆ- எனப்படும் அறிவிப்பாளர் மத்தியில் தொடர் அறுந்த அறிவிப்புக்கள், அல்லது தாபியீன்களின் கூற்றுக்கள்,
பலாகாத்
بلاغات
இறைத் தூதரைத் தொட்டும் நம்பகமான அறிவிப்பாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டவை, அல்லது இமாம் மாலிக் அவர்களுக்கு கிடைத்தவை என்ற பெயரில் அறியப்பட்டவை .
இவை بلاغات الإمام مالك என அறியப்படுகின்றன. இவை 61 ஹதீஸ்கள் எனக் கூறப்படுகின்றது.
கலீஃபா உமரின் மார்க்க மற்றும் அரசியல் பொருளாதார, சமூகசார் தீர்ப்புக்கள்,
இப்னு உமரின் மார்க்க ஃபத்வாக்கள்,
சமகால அறிஞர்களாக அறியப்பட்ட மதீனாவின் பிரசித்திபெற்ற ஏழு ஃபுகஹாக்கள்
سعيد بن المسيب ، وعروة بن الزبير، والقاسم بن محمد بن أبي بكر الصديق ، وعبيد الله بن عتبة بن مسعود ، وخارجة بن زيد بن ثابت ، وسليمان بن يسار
என்போரின் நிலைப்பாடுகள்,
மதீனாவின் மேதைகளின் நீதிபதிகளின் தீர்ப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய கிரந்தமாக விளங்கும் அதேவேளே; ஸைத் பின் அஸ்லம் என்ற தாபிஈ அவர்களின் அறிவிப்புக்கள் அதன் இறுதியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் ஆய்வாளர்கள் :
ولما سئل عن حكمة ذلك قال: إنها كالسراج تضيء لما قبلها
இமாம் மாலிகிடம் அது பற்றி வினவிய போது அவை அவற்றிற்கு முன்னால் உள்ளவைகளுக்கு தீச்சுடர் போன்று வெளிச்சம் தரவல்லது எனப் பதில் அளித்ததாக சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
இமாம் மாலிக் அவர்கள் நம்பகமான ஹதீஸ் அறிவிப்பாளர்கள், அறிவுத் தேடலில் நல்ல நிலையில் உள்ளவர்கள் என அறியப்பட்டவர்கள் மூலமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.
ஒருவர் அறிவிப்பதில் நம்பகமானவராக இருக்க வேண்டும் என்பதற்காக அறிவிப்பாளர்கள் அறிவுத் தேடலிலும் அதனை கவனமாக எடுப்பதிலும் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களாக இருப்பதும் இமாம் மாலிகின் நிபந்தனைகளில் ஒன்றாகும்.
இது தற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஷரீஆ Short Course குறுகிய கால (குழப்பமான) அறிவுத் தேடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஷரீஆவின் ஆழ்ந்த புலமையை இலக்காகக் கொண்ட வழிமுறையாகும்.
இமாம் மாலிக் (ரஹி) அவர்களின் கிரந்தம்
எவ்வாறு அமைகின்றது என்பதை விளக்கும் இமாம் ஹாஃபிழ் இராக்கி அவர்கள்
وقال الحافظ العراقي رحمه الله : " إن مالكا رحمه الله لم يفرد الصحيح ، بل أدخل فيه المرسل والمنقطع والبلاغات ، ومن بلاغاته أحاديث لا تعرف كما ذكره ابن عبد البر " انتهى من "التقييد والإيضاح شرح مقدمة ابن الصلاح (1/ 25).
இமாம் மாலிக் அவர்கள் ஸஹீஹான அறிவிப்புக்களை மாத்திரம் முவத்தாவில் இடம் பெறச் செய்ய வில்லை. மாற்றமாக முர்ஸல், முன்கதிஃ, பலாகாத் بلاغات வகையில் அறிவிப்பாளர் தொடர்புகள் அறுந்த பலவீனமான அறிவிப்புக்களையும் அதில் அறிவித்துள்ளதாகவும் கூடவே; பலாகாத் بلاغات வகையில் எந்த வகை அறிவிப்பு என்றே அறியப்படாத பல செய்திகளும் இடம் பெட்டிருக்கின்றன என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
(அத்தக்யீத் வல் ஈழாஹ்)
இமாம் மாலிக் ரஹி அவர்கள் பின்வருவோரைத் தொட்டும் ஹதீஸ் அறிவிப்பதைத் தவிர்த்தார்கள்:
(1) மந்த புத்தி உள்ள, நிர்வாகத் திறமை அற்றவன்,
(2) மனோ இச்சையோடு சான்றுகளை அணுகுபவன்,
(3) மக்களோடு பேசும் போது பொய்யாக பேசுபவன் ஆகிய மூவருடன்,
(4) ஸாலிஹான ஷைக் என அறியப்பட்ட ஹதீஸ் பற்றிய அறிவில்லாத வணக்கசாலி,
(5) கவாரிஜ், ஷீஆ, முர்ஜிஆ, கத்ரியா போன்ற கொடிய பித்ஆவாதிகள் அகியோரிடம் இருந்தும் ஹதீஸ்களை அறிவிப்பதைத் தவிர்த்தார்கள்.
عن مالكِ بنِ أنس، قال: لقد ترَكْتُ جماعةً من أهلِ المدينةِ ما أخذْتُ عنهم من العلْم شيئًا، وإنَّهم لممَّن يُؤخَذُ عنهم العلْمُ، وكانوا أصنافًا؛ فمنهم مَن كان كذّابًا في غيرِ علْمِه، تَركْتُه لكذبِه، ومنهم مَن كان جاهِلًا بما عندَه، فلم يكُنْ عندِي مَوْضِعًا للأخْذِ عنه؛ لجَهْلِه، ومنهم من كان يَدِينُ برأي سوء (٦).
மதீனாவாசிகளில் பின்வரும் வகையினரிடம் இருந்து தான் ஹதீஸ்களை அறிவிப்பதில்லை எனக் குறிப்பிடும் இமாம் மாலிக் அவர்கள்: தனக்குத் தெரியாத ஒன்றில் பொய் பேசுபவனின் பொய்க்காக விட்டுள்ளேன். ஹதீஸ் பற்றிய அறியாதவனை அவனது மடமைக்காக அறிப்பதில்லை, மார்க்கத்தில் நல் அபிப்பிராயம் இல்லாதவன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (துராஸ் இணையம்)
மேலும் الغريب கரீப்- தனி நபர்கள், குறைந்த அறிவிப்பாளர் மூலமான அறிவிப்புக்களைத் தவிர்த்ததோடு, அதனை வெறுக்கவும் செய்தார்கள்.
இமாம் அவர்கள் மற்ற அறிஞர்களின் அறிவிப்புக்களை மனசாந்திகாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் உடையவராக காணப்பட்டார்கள்.
சுருக்கமாக நோக்கினால் பின்வரும் அடிப்படைகளைத் தழுவியதாக முவத்தா தொகுப்பு அமையப் பெற்றதாக அறிஞர்கள் சுட்டி காட்டுகின்றார்கள்.
القرآن الكريم، والسنة النبوية، والإجماع، وعمل أهل المدينة، والقياس، والمصالح المرسلة، والاستحسان، والعرف، والعادات، وسد الذرائع، والاستصحاب.
முவத்தாவின் அத்தியாய மற்றும் பாட அமைப்பு முறை:
முவத்தா கிரந்த பாட அத்தியாயங்கள் பொதுவாக முஸ்லிம் மக்களுக்குத்தேவையான இபாதாத் வணக்க வழிபாடுகள், மற்றும் முஆமலாத் கொடுக்கல் வாங்கல் நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்.
அந்த வகையில் அது பெரும்பாலும் ஃபிக்ஹ் கிரந்த பாட அத்தியாய மற்றும் பாடத் தலைப்புகளின் அடிப்படைகளை தழுவியதாக அமைக்கப்பட்டுள்ளது.
وقد بين القاضي "أبو بكر بن العربي" أن مالكا بوب الموطأ بحسب ما يراه من الحكم، فإذا كان الجواز قال: ما جاء في جواز كذا، وإذا كان ممنوعا قال تحريم كذا، وإذا أراد إخراج ما روي في الباب مع احتمال الأمرين أرسل القول كقوله: "باب الاستمطار في النجوم.
இமாம் மாலிக் அவர்கள் சட்ட விசயத்தில் தான் அனுமதி எனக் காண்பதை அனுமதி என்றும்,
தடையாகக் காண்பதை தடை செய்யப்பட்டது என்றும் அவை இரண்டிலும் ஒரு நிலைப்பாடு இல்லாத போது அனுமதி, தடை என எதுவும் பேசாமல் பாடத் தலைப்பிட்டிருப்பதாக இமாம் அபூபக்கர் இப்னுல் அரபி அவர்கள் சுட்டிக் காட்டியது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முவத்தாவின் பாடங்கள் ஏனைய ஃபிக்ஹ் நூல்களின் பாட அமைப்பில் இருந்து சற்று வேறுபட்டிருக்கின்றது.
61 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, 703 பாடத் தலைப்புக்களில் முவத்தா ஆராயப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயமாக
كِتَابُ وُقُوتِ الصَّلَاةِ
தொழுகை அத்தியாயம் என்ற தலைப்பில் தொழுகை நேரங்கள் எனத் தோடங்கி
சுத்தம்,
தொழுகை,
தொழுகையில்
மறதி ஆகிய அத்தியாயங்கள் என்ற அமைப்பில் இருந்து தொடராக அமைக்கப்பட்டு அல்ஜாமிஃ என்ற தனியான அத்தியாயத்தோடு முடிவடைந்துள்ளது.
இது வேறு ஃபிக்ஹ் கிரந்தங்களில் காணப்படாத பிரத்தியேகமான அத்தியாயமாகும்.
அதில் பேச்சு, நற்குணம் , அனுமதி கோரல் போன்ற
மேலும் பல்வேறுபட்ட பாடத் தலைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதாவது ஃபுகஹாக்கள் எனப்படுவோர் பிற்காலத்தில் அமைத்துள்ள பாடமுறைகள் சிலவற்றில் இருந்து மாறுபட்ட பாடமுறையைக் கொண்ட நூலாகும்.
முவத்தாவின் பாடவிதானங்கள்
பின்வருமாறு அமைந்துள்ளது
➔ موطأ مالك - رواية يحيى - ت عبد الباقي — مالك بن أنس (ت ١٧٩)
١/٣١ - كتاب وقوت الصلاة
١/١٨٢ - كتاب الطهارة
١/٦٧٣ - كتاب الصلاة
١/١٠٠٤ - كتاب السهو
١/١٠١٥ - كتاب الجمعة
١/١١٣٦ - كتاب الصلاة في رمضان
١/١١٧٧ - كتاب صلاة الليل
١/١٢٩٨ - كتاب صلاة الجماعة
١/١٤٣٩ - كتاب قصر الصلاة في السفر
١/١٧٧١٠ - كتاب العيدين
١/١٨٣١١ - كتاب صلاة الخوف
١/١٨٦١٢ - كتاب صلاة الكسوف
١/١٩٠١٣ - كتاب الاستسقاء
١/١٩٣١٤ - كتاب القبلة
١/١٩٩١٥ - كتاب القرآن
١/٢٢٢١٦ - كتاب الجنائز
١/٢٤٤١٧ - كتاب الزكاة
١/٢٨٦١٨ - كتاب الصيام
١/٣١٢١٩ - كتاب الاعتكاف
١/٣٢٢٢٠ - كتاب الحج
٢/٤٤٣٢١ - كتاب الجهاد
٢/٤٧٢٢٢ - كتاب النذور والأيمان
٢/٤٨٢٢٣ - كتاب الضحايا
٢/٤٨٨٢٤ - كتاب الذبائح
٢/٤٩١٢٥ - كتاب الصيد
٢/٥٠٠٢٦ - كتاب العقيقة
٢/٥٠٣٢٧ - كتاب الفرائض
٢/٥٢٣٢٨ - كتاب النكاح
٢/٥٥٠٢٩ - كتاب الطلاق
٢/٦٠١٣٠ - كتاب الرضاع
٢/٦٠٩٣١ - كتاب البيوع
٢/٦٨٧٣٢ - كتاب القراض
٢/٧٠٣٣٣ - كتاب المساقاة
٢/٧١١٣٤ - كتاب كراء الأرض
٢/٧١٣٣٥ - كتاب الشفعة
٢/٧١٩٣٦ - كتاب الأقضية
٢/٧٦١٣٧ - كتاب الوصية
٢/٧٧٢٣٨ - كتاب العتق والولاء
٢/٧٨٧٣٩ - كتاب المكاتب
٢/٨١٠٤٠ - كتاب المدبر
٢/٨١٩٤١ - كتاب الحدود
٢/٨٤٢٤٢ - كتاب الأشربة
٢/٨٤٩٤٣ - كتاب العقول
٢/٨٧٧٤٤ - كتاب القسامة
٢/٨٨٤٤٥ - كتاب الجامع
٢/٨٩٨٤٦ - كتاب القدر
٢/٩٠٢٤٧ - كتاب حسن الخلق
٢/٩١٠٤٨ - كتاب اللباس
٢/٩١٩٤٩ - كتاب صفة النبي ﷺ
٢/٩٣٨٥٠ - كتاب العين
٢/٩٤٧٥١ - كتاب الشعر
٢/٩٥٦٥٢ - كتاب الرؤيا
٢/٩٥٩٥٣ - كتاب السلام
٢/٩٦٣٥٤ - كتاب الاستئذان
٢/٩٨٢٥٥ - كتاب البيعة
٢/٩٨٤٥٦ - كتاب الكلام
٢/٩٩٤٥٧ - كتاب جهنم
٢/٩٩٥٥٨ - كتاب الصدقة
٢/١٠٠٢٥٩ - كتاب العلم
٢/١٠٠٣٦٠ - كتاب دعوة المظلوم
٢/١٠٠٤ ٦١ - كتاب أسماء النبي ﷺ
https://app.turath.io/book/1699#:~:text=%E2%9E%94,%D8%A3%D8%B3%D9%85%D8%A7%D8%A1%20%D8%A7%D9%84%D9%86%D8%A8%D9%8A%20%EF%B7%BA
முவத்தா பற்றிய பொதுவான பார்வை:
இமாம் மாலிகின் முவத்தா கிரந்தம் தனியான ஒரு ஹதீஸ் நூல் கிடையாது. மாறாக ஹதீஸ்கள் ஊடாக ஃபிக்ஹ் விளக்கத்தை உள்ளடக்கிய பெறப்படும் நூலாகும்.
அது ஹதீஸ் தொகுப்பில் முதலாவது கிரந்தமாக கணிக்கப்பட்டாலும் இருப்பினும் அதற்குப் பின்னால் தொகுக்கப்பட்ட இமாம் புகிரியின் ஸஹீஹ் புகாரி கிரந்தம் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் கடுமையான நிபந்தனைகளோடும் முவத்தாவின் அறிவிப்பாளர்களை விட நம்பகத் தன்மையில் உயர்நிலையில் இருப்பதாலும்
ஸஹீஹான ஹதீஸ் தொகுப்பில் தனியான கிரந்தமாக இருப்பதாலும் ஹதீஸ் கலை அறிஞர்களால்
புகாரி குர்ஆனுக்கு அடுத்த நிலையில் மதிக்கப்பட வேண்டிய முதல் தரவரசையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முவத்தா கிரந்தம் ஹதீஸ்களை உள்ளடக்கியதால் ஹதீஸ் நூல்களோடும், ஃபிக்ஹ் சட்டங்களை உள்ளடக்கி இருப்பதால் ஃபிக்ஹ் நூல்களோடும் இணைக்கப்பட தகுதியான நூலாகும்.
முவத்தா கிரந்த ஹதீஸ்களின் எண்ணிக்கை:
முவத்தாவின் அறிவிப்பாளர் வழிகளில் காணப்படும் வேறுபாட்டைக் கருத்தில் கொண்டும் ஸஹாபாக்கள், தாபியீன்களின் அறிவிப்புக்களை ஹதீஸ்களில் உள்ளடக்குவதா ? இல்லையா? அல்லது அவற்றைத் தனி அறிவிப்புக்களாகப் பார்ப்பதா என்பதைக் கவனத்தில் கொண்டும் அதன் ஹதீஸ்களின் எண்ணிக்கையிலும் வேறுபாடு காணப்படுகின்றது.
முவத்தா கிரந்தமானது இமாம் மாலிகின் இரு மாணவர்களின் அறிவிப்பின் அடிப்படையில் அறிமுகமாகி இருக்கிறது.
முதலாவது : யஹ்யா அல்லைஸீ அவர்களின் வழியான அறிவிப்பு முவத்தா.
அஷ்ஷைக் கலீல் மஃமூன் ஷீஹாவின் கணிப்பின் பிரகாரம் முவத்தாவில் 1942 அறிவிப்புக்கள்.
இரண்டாவது அறிவிப்பு: இமாம் அபூ முஸ்அப் அஸ்ஸுஹ்ரியின் அறிவிப்பு.
அர்ரிஸாலா நிர்வனத்தின் உறுதியான இலக்க அமைப்பின் பிரகாரம் இதில் அனைத்தும் உள்ளடங்கலாக 3069 ஹதீஸ்களாகும்.
முவத்தாவின் விரிவுரைகள்:
1)الاستذكار والتمهيد كلاهما لابن عبد البر،
2) المنتقى لأبي الوليد الباجي،
3) تنوير الحوالك للسيوطي، : شرح الزرقاني
முக்கிய விரிவுரை நூல்களாகக் கொள்ளப்படுகின்றன.
அவற்றில் இமாம் இப்னு அப்தில் பர்ரின் அத்தம்ஹீத் உலகப் புகழ் பெற்ற, பலநூறு பயன்களை உள்ளடக்கிய விரிவுரையாரிகும்.
இமாம் மாலிகின் அல்-முதவ்வனா அல்குப்ரா:
இமாம் மாலிக் (ரஹி) அவர்களின் முவத்தாவிற்கு வெளியில் உள்ள தீர்ப்புகளை விட முவத்தா கிரந்தத்தில் உள்ளடக்கிய ஃபிக்ஹ் சட்ட விளக்கங்களுக்கென தனியான சிறப்புக்கள் உண்டு. மாலிகி மத்ஹபு மக்களிடம் முவத்தாவின் தரம் தனியானது. அலாதியானது. அதன் காரணமாகவே புகாரிக் கிரந்தம் தொகுக்கப்படுவதற்கு முன்னால் முவத்தா பற்றி கூறும் அறிஞர்கள்:
يروى أنه ما بعد كتاب الله كتاب أصح من موطأ مالك ولا بعد الموطأ ديوان أفيد من المدونة
அல்லாஹ்வின் வேதத்திற்கு அடுத்த நிலையில் சரியான செய்திகளைக் கொண்டதாக முவத்தாவும் அதற்கு அடுத்த படியாக அவர்களின் ஃபிக்ஹ்விளக்கங்களை உள்ளடக்கிய முஹம்மத் பின் காஸிம் அவர்கள் இமாம் மாலிக் வழியாகத் தொகுத்தளித்த நூலான "முதவ்வனா"வும் மிகப் பயனுள்ள நூலாகக் காணப்படுவதாகவும் புகழ்ந்து பேசினர் என்பது இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
முவத்தா தவிர்ந்த இமாம் மாலிகின் பிற நூல்கள்:
1)رسالته في القدر، والرد على القدرية،
2)كتابه في النجوم، وحساب مدار الزمان ومنازل القمر،
3)رسالته في الأقضية، كتب بها إلى بعض القضاة عشرة أجزاء،
4) رسالته المشهورة في الفتوى، أرسلها إلى أبي غسان محمد بن مطرف،
4) رسالته المشهورة إلى هارون الرشيد في الآداب والمواعظ،
كتابه في التفسير لغريب القرآن الذي يرويه عنه خالد بن عبد الرحمن المخزومي.
5).“السِّيَر” من رواية القاسم عنه."
முவத்தாவின் விரிவுரை நூல்கள்:
التمهيد " ، و " الاستذكار " ، للشيخ أبي عمر بن عبد البر النمري القرطبي، رحمه الله
இமாம் மாலிகின் அகீதா கோட்பாடு:
இமாம் மாலிக் நபி வழி நடக்கும் அகீதாவாதி என்பதை அவரது கூற்றுக்கள், மார்க்க தீர்ப்புக்கள் தெளிவாக விளக்கி நிற்கின்றன.
அல்லாஹ் அர்ஷின் மீதிருக்கிறான், அவன் எப்படி இருக்கின்றான் எனக் கேட்கப்பட்ட போது இமாம் அவர்கள்:
الكيف منه غير معقول ، والاستواء منه غير مجهول ، والإيمان به واجب ، والسؤال عنه بدعة وأظنك صاحب بدعة وأمر به فأخرج ) . [الحلية (6/ 326،325)].
எப்படி என்ற முறை அறியப்படவில்லை; அர்ஷின் மீதிருத்தல் என்ற இஸ்திவா என்பது (அரபியில்) பொருள் அறியப்பட்டது. அதனைக் கொண்டு ஈமான் கொள்வதே கடமை. அது பற்றி கேள்வி கேட்பது பித்ஆவாகும். (அபூ நுஐம்- அல்ஹுல்யா- ) .
மற்றொரு நிலைப்பாடு :
وأخرج الدارقطني عن الوليد بن مسلم قال : ( سألت مالكاً والثوري والأوزاعي والليث بن سعد عن الأخبار في الصفات فقالوا: أمروها كما جاءت ) . [أخرج هذا الدارقطني في الصفات ص 75 ، والآجري في الشريعة ص 314 ، والبيهقي في الاعتقاد ص 118 ، وابن عبد البر في التمهيد (7/149)] .
இமாம் தாரகுத்னீ ரஹி அவர்கள் இமாம் வலீத் பின் முஸ்லிமைத் தொட்டும் அறிவிப்பது:
இமாம்களான மாலிக், ஸவ்ரீ, அவ்ஸாயீ, லய்ஸ் பின் ஸஃத் ஆகியோரிடம் அல்லாஹ்வின் பண்புகளோடு நடந்து கொள்வது பற்றி நான் கேட்டபோது அவை வந்திருப்பதைப் போலவே பொருள் கொண்டு நடத்துங்கள் என அவர்கள் கூறினர் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
மேலும் அறிந்து கொள்ள:
http://www.khayma.com/kshf/h/malek.htm#:~:text=(1)%20%D8%A3%D8%AE%D8%B1%D8%AC%20%D8%A7%D9%84%D9%87%D8%B1%D9%88%D9%8A%20%D8%B9%D9%86%20%D8%A7%D9%84%D8%B4%D8%A7%D9%81%D8%B9%D9%8A,%D8%A8%D9%87%20%D8%A7%D9%84%D9%85%D8%A7%D9%84%20%D9%88%D8%A7%D9%84%D8%AF%D9%85%20%D8%AD%D9%82%D9%8A%D9%82%D8%A9%20%D8%A7%D9%84%D8%AA%D9%88%D8%AD%D9%8A%D8%AF%20)%20.
இமாம் மாலிகின் பிபல்யமான கூற்றுக்களில் சில:
---
إنما أنا بشر أخطئ وأصيب، فانظروا في رأيي، فكل ما وافق الكتاب والسنة فخذوا به، وما لم يوافق الكتاب والسنة فاتركوه.
1) நானும் மனிதனே! நான் தவறும் செய்வேன். சரியாகவும் கூறுவேன். எனது கருத்தை நீங்கள் ஆழ்ந்துணர்ந்து அதில் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் உடன்பாடானவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் உடன்பாடாதவைகளை விட்டுவிடுங்கள்.
2) كل أحد يؤخذ من قوله ويترك إلا صاحب هذا القبر -صلى الله عليه وسلم.
உலகில் உள்ள அனைவரும் அவரது கூற்று எடுக்கப்படுவர், தவறுக்காக விடப்படுவர், இந்த மண்ணறையில் அடக்கப்பட்டுள்ள இறைத் தூதரைத் தவிர.
சூஃபிகள் பற்றி இமாம் மாலிக்:
சூஃபிகள் நடவடிக்கை பற்றி எடுத்துக் கூறி அவர்கள் தொடர்பாக வினவப்பட்ட போது வாய் விட்டுச் சிரித்தது ஏன் ? என்ற விபரம் பின்வருமாறு கூறப்படுகின்றது .
*لم يضحك الإمام مالك في مجلس أصحابه نيفاً وثلاثين سنة إلا مرة واحدة ، فما الذي أضحكه ؟
"قال عبد الله بن يوسف
: كنا عند مالك بن أنس ، فقال له رجل من أهل نصيبين ، يا أبا عبد الله ،
عندنا قومٌ يقال لهم الصوفية ، يأكلون كثيراً ، فإذا أكلوا أخذوا في القصائد ، ثم يقومون فيرقصون ،
قال مالك : هم مجانين ؟ فقال لا ، قال هم صبيان ؟ قال لا هم مشائخ عقلاء ، قال مالك : ما سمعنا أن أحداً من أهل الإسلام يفعل هكذا ،
قال الرجل : بل يأكلون ثم يقومون ، فيرقصون يلطم بعضهم رأسه وبعضهم وجهه فضحك مالك وقام إلى منزله .
فقال أصحاب مالك : يا هذا أدخلت والله مشقة على صاحبنا ، لقد جالسناه نيفاً وثلاثين سنة ، فما رأيناه يضحك إلا هذا اليوم" اهــ.
-------------
[ترتيب المدارك للقاضي عياض (٥٤/٢)]
இமாம் மாலிக் (ரஹி) அவர்களின் முப்பது சொச்சம் வருட கால கல்விப் போதனையில் ஒரேயோரு தடவை மாத்திரம்தான் வாய்விட்டுச் சிரித்ததார்களாம்.
விபரம் கீழே:
இமாம் மாலிகின் அதி சிரேஷ்ட மாணவரான இமாம் அப்துல்லாஹ் பின் யூசுஃப் (ரஹி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்
நாம் அனஸ் பின் மாலிகின் மஜ்லிஸில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது ஈராக் அல்லது எமன் பிரதேச கிராம மனிதர்களில் ஒருவர், அபூ அப்தில்லாஹ் (இமாம்) அவர்களே!
எங்கள் பிரதேசத்தில் ஒரு கூட்டம் இருக்கின்றனர். அவர்களுக்கு சூஃபியாக்கள் என்று கூறப்படும். அவர்கள் நன்னாக உண்ணுவார்கள், உண்டு முடிந்ததும் பாட ஆரம்பித்து விடுவார்கள். பின்னர், எழுந்து நாட்டியம் ஆடுவார்கள் எனக் கூறினார்.
அதற்கு இமாம் மாலிக் அவர்கள், அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா ? எனக் கேட்க; அவரோ இல்லை என்றார் .
அவர்கள் சிறுவர்களா? எனக் கேட்டகவே அதற்கும் அவர் இல்லை; அவர்கள் புத்தி உள்ள பெரிய மனிதர்கள்தான் என்றார். அதனைக் கேட்ட இமாம் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் ஒருவர் கூட இவ்வாறு செய்தது பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை எனக் கூறியதும்
தொடர்ந்து அம்மனிதர், அது மட்டுமின்றி, அவர்கள் நன்றாக உண்ணுவார்கள், பின்னர் எழுந்து அவர்களில் ஒருவர் மற்றவரின் கன்னத்திலும் மற்றும் சிலர் சிலரின் தலையிலும் அடித்து கூத்துக் கும்மாளம் போடுவார்கள் என்றதும் இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் வாய் விட்டுச் சிரித்து விட்டு, மஜ்லிஸில் இருந்து வெளியேறி தனது வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்கள்.
இதனை அவதானித்த இமாம் மாலிகின் பிரத்தியேக மாணவர்கள் முப்பது சொச்சம் ஆண்டுகளாக நமது இமாம் அவர்களை அவர்களின் மஜ்லிஸில் இருந்து எழுப்பி விட்டீரே ! இன்றுதான் அவர்கள் இவ்வாறு சிரிக்கக் கண்டோம் என ஆதங்கமாகப் பேசிக் கொண்டனராம்.
ஆதார நூல்:
[ترتيب المدارك للقاضي عياض (٥٤/٢)]
உசாத்துணைகள்
https://islamqa-info.cdn.ampproject.org/v/s/islamqa.info/amp/ar/answers/225018?amp_gsa=1&_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM%3D#amp_tf=From%20%251%24s&aoh=16912971195112&referrer=https%3A%2F%2Fwww.google.com&share=https%3A%2F%2Fislamqa.info%2Far%2Fanswers%2F225018%2F%25D9%2585%25D9%2586-%25D9%2587%25D9%2585-%25D8%25A7%25D9%2584%25D9%2581%25D9%2582%25D9%2587%25D8%25A7%25D8%25A1-%25D8%25A7%25D9%2584%25D8%25B3%25D8%25A8%25D8%25B9%25D8%25A9
https://www.alukah.net/
culture/0/133602/%D8%AD%D9%8A%D8%A7%D8%A9-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85-%D9%85%D8%A7%D9%84%D9%83-%D8%A8%D9%86-%D8%A3%D9%86%D8%B3-%D8%B1%D8%AD%D9%85%D9%87-%D8%A7%D9%84%D9%84%D9%87-93-179%D9%87%D9%80/#ixzz89V3NqnT7
https://www.habous.gov.ma/2012-01-26-16-13-00/51-2012-08-28-14-34-54.html#:~:text=%D9%85%D9%86%20%D8%A7%D9%84%D9%85%D8%B1%D8%AC%D8%AD%20%D8%A3%D9%86%20%D9%83%D8%AA%D8%A7%D8%A8%20%D8%A7%D9%84%D9%85%D9%88%D8%B7%D8%A3,%D8%A7%D9%84%D8%A7%D8%B3%D8%AA%D8%AF%D9%84%D8%A7%D9%84%20%D8%A8%D8%A7%D9%84%D8%AD%D8%AF%D9%8A%D8%AB%20%D8%B9%D9%84%D9%89%20%D8%A7%D9%84%D8%AD%D9%83%D9%85%20%D8%A7%D9%84%D9%81%D9%82%D9%87%D9%8A.
https://mawdoo3.com/%D9%85%D9%86%D9%87%D8%AC_%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85_%D9%85%D8%A7%D9%84%D9%83_%D9%81%D9%8A_%D8%A7%D9%84%D9%85%D9%88%D8%B7%D8%A3
https://almoqtabas.com/ar/topics/view/26085224479720032
http://www.khayma.com/kshf/h/malek.htm#:~:text=(1)%20%D8%A3%D8%AE%D8%B1%D8%AC%20%D8%A7%D9%84%D9%87%D8%B1%D9%88%D9%8A%20%D8%B9%D9%86%20%D8%A7%D9%84%D8%B4%D8%A7%D9%81%D8%B9%D9%8A,%D8%A8%D9%87%20%D8%A7%D9%84%D9%85%D8%A7%D9%84%20%D9%88%D8%A7%D9%84%D8%AF%D9%85%20%D8%AD%D9%82%D9%8A%D9%82%D8%A9%20%D8%A7%D9%84%D8%AA%D9%88%D8%AD%D9%8A%D8%AF%20)%20.
அரபி மூலமான உசாத்துணைகளுக்காக
(1)- ترتيب المدارك، للقاضي عياض
(2)- التمهيد، لابن عبد البر،
(3) - المدارك
(4)- كشف المغطى لابن عاشور
(5)- القبس “شرح الموطأ- ابن العربي المعافري
(6)- المقدمات الممهدات
போன்ற பல நூல்கள் காணப்படுகின்றன.
-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி