பரீட்சையும் பிரார்த்தனையும்

பரீட்சையை எதிர்கொள்வதற்கென்று  தனியான எந்தப் பிரார்த்தனையும் மார்க்கத்தில் இல்லை. ஆனால் பொதுவாக பயனுள்ள கல்வியைக் கேட்பதும் பயனற்ற கல்வியில் இருந்து பாதுகாப்புத் தேடுவதும் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கஷ்டங்களை இலகுபடுத்துமாறு வேண்டும்  துஆக்கள் போன்ற பிரார்த்தனைகளைத் தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முடியும். அதேபோன்று பொதுவாக ஒரு முஸ்லிம் தன்னுடைய தேவைகளை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப  தனக்குப் புரியும் பாசையில் அல்லாஹ்விடத்தில் முன்வைத்துப் பிரார்த்திப்பது முக்கியமானது. மேலும், நபி வழியில் இடம்பெற்றிருக்கும் குறைந்த வார்த்தையில் நிறைந்த அர்த்தங்களைத் தரக்கூடிய பிரார்த்தனைகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 {رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25) وَيَسِّرْ لِي أَمْرِي} [طه: 25، 26] 

20:25. என் இரட்சகனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி, மனக்கஷ்டங்களை நீக்கி) விரிவாக்கித் தருவாயாக!

20:26. என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

 {رَبِّ زِدْنِي عِلْمًا} [طه: 114] 

20:114. என் இரட்சகனே! எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக!

 «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا».

அல்லாஹ்வே! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், தள்ளாமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக் கொள்கின்றேன். அல்லாஹ்வே! எனது உள்ளத்திற்கு* (உன் தண்டனை பற்றிய) *அச்சத்தைத் தந்துவிடு! மேலும்,* (அனைத்துக் குறைகள், துர்க்குணங்கள், பாவங்கள் போன்றவையில் இருந்தும்) *அதனைத் தூய்மைப்படுத்துவாயாக! நீயே அதனைத் தூய்மைப்படுத்துவோரில்  மிகச் சிறந்தவன். நீயே அதன் பாதுகாவலனும் அதன் உரிமையாளனுமாவாய். அல்லாஹ்வே!* (இஃலாஸ் இன்மை, தேவையின்மை போன்ற காரணங்களால்) *பயனளிக்காத கல்வியிலிருந்தும்* (வன்மையடைவதன் காரணமாக உனக்கு) *பணிந்து அமைதியாகாத  உள்ளத்திலிருந்தும்* (உலகாதாயங்களில் பேராசை கொண்டு) *பசிதீராத* (அதாவது நிறைவடையாத) *மனதிலிருந்தும்* (நிபந்தனைகளைப் பேணாததினாலோ, என்னில் அல்லது என் வேண்டுதலிலுள்ள ஒரு தீமைக்காகவோ) *பதிலளிக்கப்படாத* (அதாவது ஏற்றுக்கொள்ளப்படாத) *பிரார்த்தனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக் கொள்கிறேன்!*
அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (றழியல்லாஹு அன்ஹு).
முஸ்லிம்: (6906)


  «اَللَّهُمَّ إِنِّيْ أسْأَلُكَ عِلْمًا نافِعًا وَأَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَعُ».

அல்லாஹ்வே! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும், பயனளிக்காத கல்வியில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக் கொள்கின்றேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (றழியல்லாஹு அன்ஹுமா).
 இப்னு ஹிப்பான்: (82) 
* حسنه الألباني وش الأرناؤوط.

 «اللَّهمَّ لا سَهْلَ إلّا ما جعلتَه سَهلًا وأنتَ تجعلُ الحزنَ إذا شِئتَ سَهْلًا».

அல்லாஹ்வே! நீ இலகுவாக்கியதைத் தவிர இலகுவானது கிடையாது. நீயோ நீ நாடினால் கரடு முரடான பூமியை  இலகுவான பூமியாக மாற்றுகிறாய்!
அறிவிப்பவர்: அனஸ் (றழியல்லாஹு அன்ஹு).
இப்னு ஹிப்பான்: (974), அத்-தஃவாதுல் கபீர் - பைஹகீ: (266)
* صححه الألباني، والوادعي، وش الأرناؤوط.

-ஸன்னாஹ் அகாடமி

أحدث أقدم