கிஸ்ராவின் வாரிசுகள்

ஷியாக்கள் என்போர் இன்று இஸ்லாமிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். வெளித்தோற்றத்தில் அவர்கள் முஸ்லிம்கள் போன்று காட்சியளித்தாலும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் அலி(ரலி) அவர்களுடைய மகன் ஹுஸைன் அவர்களை அல்லாஹ்வுடைய அந்தஸ்திற்கு உயர்த்தி அவர்களை வணங்குகின்றனர். அவரை மட்டுமே வானளாவ புகழ்கின்றனர். எல்லாநிலையிலும் யாஹுஸைன், யாஹுஸைன் என்று அபயக்குரல் எழுப்புகின்றனர். இவர்களை பொறுத்தவரையில் அலி(ரலி) அவர்களின் மற்ற பிள்ளைகள்யாரையும் இப்படி நேசிப்பதில்லை. எதற்காக இவர்களின் இந்த நிலை என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும். இதை அறிவதற்குமுன்னால் அலி (ரலி) அவர்களுடைய பிள்ளைகள் பற்றிய விவரத்தை அறிவோம்.

ஆண் பிள்ளைகள்:

ஹஸன்

ஹுஸைன்

முஹ்ஸின்

அப்பாஸ்

ஹிலால்

அப்துல்லாஹ்

ஜாபர்

உதுமான்

உபைதுல்லாஹ்

அபுபக்கர்

உமர்

இவர்கள் அலி (ரலி) அவர்களின் ஆண்பிள்ளைகள், இவர்கள் யாருடைய பெயரையாவது அவர்களுடைய கொடிகளில் பதியப்பட்டதை பார்க்க முடியாது. ஹுஸைனைத் தவிர வேறுயாரையும் அழைத்து அபயம் தேடுவதில்லை, ஹுஸைன் (ரலி) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களின் உடன் பிறந்த சகோதரர். பாத்திமா (ரலி) அவர்களுக்கு இருவரும் பிறந்தார்கள். அப்படி இருக்க ஹுஸைனை மட்டும் இந்த அளவு வானளாவ அவர்கள் உயர்த்த காரணம் என்ன-?

ஷிஆக்களின் நம்பிக்கையில் உள்ள பனிரண்டு இமாம்கள் இவர்கள் எல்லோருமே ஹுஸைன் (ரலி) அவர்களின் சந்ததிகள். ஹுஸைன் ஈரான் பாரசீக குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார். “எஸ்தாஜர்த்” என்ற ஈரானிய மன்னரின் மகளான ஷாஹிர்னா என்ற பெண், பாரசீகத்தை உமர் (ரலி) அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் வெற்றி கொண்டபோது அந்நாட்டு மன்னரான “எஸ்தஜர்த்” கொல்லப்பட்டான். அவனுடைய பெண் மக்கள் கைதிகளாக முஸ்லிம்கள் வசம் வந்தனர். இந்த பெண்களில் ஒருவரான “ஷாஹிர்னா” என்ற பெண்ணை உமர் (ரலி) அவர்கள் ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள். அவளை ஹுஸைன் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணத்தினால் தான் ஷிஆக்கள் ஹுஸைன் அவர்களைப் புனிதப்படுத்துகின்றனர்.

ஷிஆக்கள் நம்பியுள்ள பனிரண்டு இமாம்கள் என்பவர்கள் ஹுஸைன் அவர்களுடைய பிள்ளைகள் அவர்கள் எல்லோரும் பாரசீகத்தாயிக்கு பிறந்தவர்கள் என்பதாலும் அவர்கள் எல்லோருடைய பாட்டனார் பாரசீக மன்னர் ‘எஸ்தஜர்த்’ என்பதாலும் இந்த இன வெறி அவர்களிடதில் காணப்படுகிறது. பாரசீகத்தை உமர் (ரலி) அவர்கள் கைப்பற்றி அந்நாட்டு மன்னரான “யஸ்தஜர்த்” என்பவனை கொன்ற காரணத்தினாலும் உமர்(ரலி) அவர்களை கேவலமாக ஏசிவருகின்றனர். மீண்டும் பாரசீக இனவாதத்தை தலைதூக்கச் செய்வதற்காகத்தான் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். நபிவழியைப் பின்பற்றும் “சன்னிகளை” கடுமையான எதிர்க்கின்றனர். அவர்களை கொலை செய்வதை புனிதமாகக்கருதுகின்றனர்.

இந்த அவர்களது வெறித்தனமான போக்கைப் புரியாத இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களை புரட்சியாளர்களாக நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் ஈரானின் ஷிஆக்கள் “நாங்கள் பாரசீக மன்னன் கிஸ்ராவின் வாரிசுகள், யஸ்தஜர்த் என்பவன்தான் எங்கள் பாட்டன்” என்று நினைத்து பெருமையடிக்கிறார்களே தவிர, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையின் சந்ததிகள் என்று பெருமைப்படுவதில்லை. இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட நினைப்பதை விட, தங்கள்பாரசீக சாம்ராஜியத்தை தங்கள் பிராந்தியத்தில் நிலை நாட்ட துடிக்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் புரிய வேண்டும்.

—-அபூ உஸாமா
أحدث أقدم