தொழுகை தீமையிலிருந்து தடுப்பது

பலவீனமான/இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்

எவரது தொழுகை அவரை அளவுக்கு மீறிய  தீமைகளில் இருந்தும் பாவங்களில் இருந்தும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்விடம் இருந்து  தூரமாகுவதைத் தவிர (எதையும்) அதிகமாக்கிக்  கொள்ளவில்லை.

( தீர்ப்பு : ) தவறான செய்தி

அறிவிப்பாளர் வரிசை அடிப்படையிலும்  உள்ளடக்கத்திலும் சரியானதாக - ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

இது  இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றாக ஆதாரப்பூர்வமான அறிப்பாளர் வரிசையுடன் வந்துள்ளது.

இன்னார் இரவு முழுவதும் தொழுகிறார் அவர் காலைப்பொழுதை அடைந்தால்  திருடுகிறார் என்று அல்லாஹ்வின் தூதரிடம் சொல்லப்பட்ட போது  
அது (தொழுகை) நீர் குறிப்பிட்ட(தீமையில் இருந்து) அவனை பின்னர் தடுத்துவிடும் என்று (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.
இது சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெற்றுள்ளது.
(அஹ்மத்)

நூல் : ஸில்ஸிலதுல் ழஈபா (1/54-59) ஹதீஸ் எண் (2)
ஆசிரியர் : இமாம் அல்பானீ

٢ - (من لم تنهه صلاته عن الفحشاء والمنكر لم يزدد من الله إلا بعدا) .
باطل.
وهو مع اشتهاره على الألسنة لا يصح من قبل إسناده، ولا من جهة متنه. ...

سلسلة  الأحاديث  الضعيفة  والموضوعة وأثرها السيء في  الأمة (1/54-59) [2]
أحدث أقدم