தொகுப்பு & தமிழாக்கம்:
அபூ நுஹா அப்துர் ரஹ்மான் அல் ஹிந்தி وفقه الله
1. உபரியா(நஃபிலா)ன தொழுகையை விட...
قال الإمام الشافعي رحمه الله :
طلب العلم أفضل من صلاة النافلة.
حلية الأولياء (١١٩/٩)
இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
(மார்க்க)அறிவைத் தேடுவது (என்பது), உபரியா(நஃபிலா)ன தொழுகையை விட சிறந்ததாகும்.
நூல்: ஹில்யத்துல் அவ்லியா (119/9)
2. நீ அல்லாஹ்வை பயப்படுகிறாயா..?
قال فضيل بن عياض رحمه الله :
إذا قيل لك هل تخاف الله..؟
فقل : نسأل الله ذلك.
فإنك إن قلت "نعم" كذبت ؛
وإن قلت "لا" كفرت.
تزكية النفوس (١١٧)
ஃபுழ(ض)ய்ல் இப்னு இயாழ்(ض) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வை பயப்படுகிறாயா..? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால்...
(அதன் பதிலாக) நீ கூறு : நாங்கள் அ(அல்லாஹ்வை பயப்படுவ)தற்காக அல்லாஹ்விடம் கேட்(பிரார்த்திக்)கிறோம்.
ஏனென்றால், நீ "ஆம்" என்று (பதில்) கூறினால், "பொய்" கூறியவனாவாய்.
"இல்லை" என்று பதில் கூறினால், (அல்லாஹ்வை) "நிராகரித்தவன்" ஆவாய்.
நூல் : தஸ்(ز)கியத்துன் நுஃபூஸ் (117)
3. பாவங்கள்
قال الإمام ابن عثيمين رحمه الله :
الذنوب تمنع رؤية الحق.
شرح الممتع (٢٣)
இமாம் இப்னு உஸ(ث)ய்மீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
பாவங்கள் சத்தியத்தை பார்ப்பதை(விட்டும்) தடுக்கின்றன.
நூல்: ஷர்ஹ் அல் மும்திஃ (23)
4. மார்க்கத்தை இழந்தால்...
قال العلامة صالح الفوزان حفظه الله :
”الدنيا إذا زالت يعوض الله عنها؛ لأن الرزق بيد الله، لكن الدين إذا زال ما الذي يعوضه ؟!“
[شرح رسالةالدلائل(٨٠)]
அல் அல்லாமஹ்.
ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ஹஃபிழஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் :
இந்த உலக வாழ்க்கை இல்லாமல் (அதை இழந்து)போனால் , அல்லாஹ் (சுபஹான ஹூவ தஆலா) அதற்கு ஈடாக (எதையும்) கொடுப்பான்; ஏனென்றால், வாழ்வாதாரம் அல்லாஹ்வின் கையில் (தான்) உள்ளது. ஆனால், மார்க்கத்தை இழந்தால் அதற்கு ஈடாக என்ன செய்வது.?..!
நூல்: ஷர்ஹ் ரிஸாலத்து த(د)லாஇல் (80)
5. ஒரு முஃமினுடைய செயல் நிலையானதாகும்.
قال الشيخ ابن عثيمين رحمه الله :
عمل المؤمن عمل دائب لا ينقضي إلا بالموت.
تفريغ من خطبة (وماذا بعد رمضان)
ஷெய்க்.
இப்னு உஸய்மீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஃமினுடைய செயல் அயராத(நிறைவு பெறாத) செயலாகும். (அவருக்கு) மரணம் வந்தாலே தவிர, அது(அந்த செயல்) முடிவடையாது.
இது (ரமழானிற்கு பிறகு என்ன.? என்ற) ஒரு ஜுமுஆ குத்பாவிலிருந்து எடுக்கப் பெற்ற குறிப்பாகும்.
6. அல் ஹிஸ்(ز)பிய்யஹ் (இயக்கவாதம்) மரணித்து விடும்...
قال الإمام مقبل بن هادي الوادعي رحمه الله :
ستموت الحزبية ؛ وتبقى سـنـة رسـول الله(ﷺ).
فضائح ونصائح (٩٣)
இமாம் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
அல் ஹிஸ்(ز)பிய்யஹ் (இயக்கவாதம்) மரணித்து விடும் ; நபி (ﷺ) அவர்களின் சுன்னா(மட்டுமே) நிலைத்து(நீடித்து)இருக்கும்.
நூல் : ஃபழாயிஹ் வ நஸாயிஹ் (93)
7. கீழ்படியாமல் இருப்ப(மாறு செய்வ)து.
قال الشيخ ابن عثيمين رحمه الله :
المعصية بعد النعمة أشد من المعصية قبل النعمة.
لقوله تعالى :
"وعصيتم من بعد ما أراكم ما تحبون"
سورة آل عمران (٣:١٥٢)
تفسير سورة آل عمران (٣١٣/٢)
இப்னு உஸ(ث)ய்மீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
ஒரு அருட்கொடை(நமக்கு கிடைப்பதற்)கு முன் அல்லாஹ்விற்கு கீழ்படியாமல் இருப்ப(மாறுசெய்வ)தை விட, ஒரு அருட்கொடை(நமக்கு கிடைத்ததற்)கு பின் அல்லாஹ்விற்கு கீழ்படியாமல் இருப்ப(மாறு செய்வ)து என்பது, மிகவும் கடுமையானதாகும்.
உயர்ந்தவனாகிய அல்லாஹ் சுபஹான ஹூவ தஆலா கூறுகிறான் :
நீங்கள் எதை விரும்பினீர்களோ அதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறு செய்யலானீர்கள்.
சூரா ஆல இம்ரான் (3:152)
நூல்: தஃப்ஸீர் சூரா ஆல இம்ரான் (313/2)
8. உன்னுடைய அகீதா உறுதியாக இருந்தால்...
قال الإمام مقبل بن هادي الوادعي رحمه الله :
فإذا كنت قوي العقيدة الجني والشيطان سيخافاً منك ؛ وإذا كنت مزعزع العقيدة ربما تخـاف مـن ظـلك.
قمع المعاند (٤٨)
இமாம் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
நீ அகீதாவி(நம்பிக்கை சார்ந்த விடயங்களி)ல் பலமாக(உறுதியாக) இருந்தால், ஜின்னும், ஷைத்தானும் உன்னைக் கண்டு பயப்படும்; (மாறாக) நீ அகீதாவில் பலவீனமாக(உறுதி இல்லாமல்) இருந்தால், சிலவேளை நீ உன்னுடைய நிழலைக் கண்டு(கூட) பயப்படுவாய்.
நூல் : கம்உல் முஆனித்(د) (48)
9. நம்முடைய பரக்கத்(அபிவிருத்தி) அழிந்துவிடும்.
قال الإمام ابن القيم رحمه الله :
المعاصي تمحـق بركة العمر ، وبركة الرزق ، وبركة العلم ، وبركة العمل ، وبـركة الطاعة.
الجواب الكافي (١٠١)
இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
(அல்லாஹ்விற்கு) கீழ்படியாமல் இருப்ப(மாறு செய்வ)து என்பது, வாழ்க்கையின் பரக்கத்தை(அபிவிருத்தியை) , வாழ்வாதாரத்தின் பரக்கத்தை , அறிவுடைய பரக்கத்தை , அமல் செய்வதுடைய பரக்கத்தை , கீழ்ப்படிந்து நடப்பதுடைய பரக்கத்தை இல்லாமல் ஆக்கி(அழித்து)விடும்.
நூல்: அல் ஜவாபுல் காஃபீ (101)
10. நன்மையின் கதவு திறக்கப்பட்டுதான் இருக்கிறது.
قال العلامة صالح الفوزان حفظه الله تعالى :
" من كان أمضى هذه الأيام في خير وطاعة فليحمد الله، وليستمر على فعل الخير في بقية الشهر وفي بقية العمر وفي بقية الدنيا فالباب مفتوح ولله الحمد ليلا ونهار للتائبين والمستغفرين والمجتهدين والعابدين ".
[كلمات رمضانية(١٠ رمضان١٤٣٩هـ)
அல் அல்லாமஹ்.
ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
யார் இந்த (ரமழானுடைய) நாட்களை நன்மையிலும், (அல்லாஹ்விற்கு) கீழ்படிவதிலும் செலவிட்டாரோ, அவர் அல்லாஹ்வை புகழட்டும்; மீதமுள்ள மாதத்திலும், மீதமுள்ள வாழ்நாட்களிலும், மீதமுள்ள உலக விடயங்களிலும், அவர் நற்ச்செயல்களில் தொடரட்டும்; ஏனென்றால், அல்லாஹ்வின்பால் திரும்புகின்றவர்களுக்காகவும், பாவமன்னிப்பு தேடுபவர்களுக்காகவும், கடினமாக முயற்சி செய்பவர்களுக்காகவும், வணக்கசாலிகளுக்காகவும் இரவிலும், பகலிலும் (நன்மையின்) கதவு திறக்கப்பட்டுள்ளது; அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே..!
கலிமாத்து ரமழானிய்யஹ் (ஹிஜ்ரி.10/ரமழான்/1439)
11. லைலதுல் கத்ருடைய இரவை அடைந்தவர்.
قال العلامة ابن باز رحمه الله :
من قام العشر جميعاً أدرك ليلة القدر.
الفتاوى (٤٣٠/١٥)
இப்னு பாஸ்(ز) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
யார் (ரமழானின் கடைசி) பத்து நாட்களிலும் நின்று வணங்குகிறாரோ, அவர் லைலதுல் கத்ருடைய இரவை அடைந்துவிட்டார்.
நூல்: அல் ஃபதாவா (430/15)
12. லைலதுல் கத்ரை(மற்றவருக்கு கூறாது) மறையுங்கள்
من رأى ليلة القدر فليكتم ذلك.
قال الإمام النووي رحمه الله :
ويستحب لمن رآهـا كتمهـا.
المجموع (٤٥٣/٦)
யார் லைலதுல் கத்ரை கண்டாரோ, அதை அவர் (மற்றவருக்கு கூறாது) மறைத்து வைக்கட்டும்.
இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
யார் அதை (லைலதுல் கத்ரை) கண்டாரோ, அதை (மற்றவருக்கு கூறாது) மறைப்பது விரும்பத்தக்கதாகும்.
நூல்: அல் மஜ்மூஃ (453/6)
13. லைலதுல் கத்ருடைய இரவில் செய்யும் செயல்களின் கூலி..!
عن أنس رضي الله عنه قال :
العمل في ليلـة القـدر والصدقة والصلاة والزكاة أفضـل من ألف شهـر.
الدر المنثور (٣٧٠/٦)
அனஸ் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் கூறினார்கள்:
லைலதுல் கத்ருடைய இரவில் செய்யும் செயல், தர்மம், தொழுகை, ஸ(ز)காத் போன்றவை ஆயிரம் மாதங்க(ளில் செய்யும் செயல்க)ளை விட சிறந்ததாகும்.
அத்-துர்ருல் மன்ஸூ(ث)ர் (370/6)
14. ரமழான் மாதத்தில் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
قال الإمام ابن الجوزي رحمه الله :
اجتهدوا في هذا الشهر ،
تسعدوا في باقي الدهر ؛
واجتهدوا في هذه الأيام القليلة ،
تفوزوا بالنعم الجزيلة والراحة الدائمة الطويلة.
بستان الواعظين (٢٢٣)
இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
இந்த(ரமழான்) மாதத்தில் கடினமாக முயற்சி செய்யுங்கள்; மீதமுள்ள கால(நேர)ங்களில் மகிழ்ச்சியாக இருங்கள் ; (மேலும்) இந்த குறைவான நாட்களில் கடினமாக முயற்சி செய்யுங்கள்; ஏராளமான அருட்கொடைகளையும், நீண்ட(கால) நிலையான ஓய்வையும் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
நூல்: புஸ்தானுல் வாஇ(ع)ளீ(ظ)ன் (223)
15. (ரமழானின்) இறுதி பத்து நாட்கள் எப்பொழுது துவங்குகிறது..?
متى تبدأ العشر الأواخــــــــــــــر ؟
قال ابن عثيمين رحمه الله :
العشر الأواخر تبتدىء من غروب الشمـس يـوم عشريـن.
مجموع الفتاوى (١٧٠/٢٠)
இப்னு உஸய்மீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
ரமழானின் இறுதி பத்து நாட்கள், ரமழான் இருபதாம் நாளின் சூரியன் அஸ்தமிக்கும்(மறையும்) நேரத்தில் இருந்து துவங்குகிறது.
நூல்: மஜ்மூஉல் ஃபதாவா (170/20)
16. நன்மையின்பால் விரையுங்கள்
قال خالد بن معدان رحمه الله :
إذا فُتح لأحدكم باب الخير فليسرع إليه ؛
فإنه لا يدري متى يغلق عنه.
سير أعلام النبلاء (٤/٥٤٠)
ஹாலித் பின் மஃதான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு நன்மையுடைய கதவு(வாசல்) திறக்கப்பட்டால், அவர் (உடனே) அதன்பால் விரைந்து செல்லட்டும்; ஏனென்றால், அந்த(நன்மையுடைய) கதவு அவரை விட்டும் எப்பொழுது மூடப்படும் என்று அவருக்கு தெரியாது.
நூல்: ஸீர் அஃலாமு அந்-நுபலா (4/540)
17. ஒரு நோன்பாளி (நோன்பின் பொழுது) என்னென்ன செயல்களை செய்ய வேண்டும்..?
ماذا ينبغي على الصائم فعله..؟
قال العلامة ابن عثيمين رحمه الله :
ينبغي للصائم أن يشتغل بالصلاة والذكر والدعاء وقراءة القرآن الكريم ؛
حتى يجمع في صيامه عبادات شتى,
والإنسان إذا عود نفسه ومرنها على أعمال العبادة في حال الصيام سهل عليه ذلك.
فتاوى في الزكاة والصيام (٥٥٦)
அல் அல்லாமஹ் இப்னு உஸய்மீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
ஒரு நோன்பாளி தொழுகை, திக்ரு(அல்லாஹ்வை நினைவு கூர்தல்), துஆ(பிரார்த்தனை) செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்தி(மும்முரமாக்கி)க் கொள்வது அவசியம்;
பலதரப்பட்ட வணக்க வழிபாடு(இபாதத்)களை அவருடைய நோன்பின் மூலம் (அவற்றை) ஒன்று சேர்ப்பதற்காக வேண்டி,
ஒரு மனிதன் இபாதத்களுடைய அமல்களை நோன்புடைய காலத்திலே செய்வதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டால், அதன் பிறகு (அதைத் தொடர்ந்து செய்வதற்கு) அவருக்கு அது இலகுவாக இருக்கும்.
நூல்: ஃபதாவா ஃபி ஸ்(ز)ஸகாத்தி வஸ்-ஸியாம் (556)
18. உணவு தயார் செய்து கொடுப்பதற்கும் கூட கூலி கிடைக்கும்.
سؤال :
هـل تـؤجـر المرأة بطبخ الـفـطـور فـي رمضــــــــــان ؟
جواب : قال الشيخ صالح الفوزان :
نعم. هي مأجورة في هذا لأنها تعد الطعام للصائمين وهذا من التعاون على البر والتقوى فهي مأجـورة فـي هذا.
هذه الفائدة من كلام الشيخ صالح الفوزان حفظه الله تعالى
கேள்வி :
ரமழானில் (நோன்பாளியை) நோன்பு திறக்க செய்வதற்காக வேண்டி, அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுப்பதற்கு, பெண்கள் கூலி கொடுக்கப்படுவார்களா..?
பதில் :
ஷேக். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
ஆம். இந்த காரியத்திற்காக(வேண்டி) அவள் கூலி கொடுக்கப்படுகிறாள்; ஏனென்றால், நோன்பாளிகளுக்காக(வேண்டி) உணவு தயார் செய்வது என்பது, நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் காரியங்களில் உள்ள ஓர் அம்சமாகும். (அதனால்), அவள் இதற்காக(வேண்டி) கூலி கொடுக்கப்படுகிறாள்.
மேற்கண்ட இந்த பயனுள்ள குறிப்பு ஷேக். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலிலிருந்து எடுக்கப் பெற்றதாகும்.
19. ரமழான் மாதத்தின் மகத்துவம்
قال أبن الجوزي رحمه الله :
تاللّهِ لو قيل لأهلِ القبور : تــمــنَّــوا
لتمنوا يوماً من رمضان
التبصرة (٧٨/٢)
20. இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் மீது ஆணையாக..! மண்ணறை வாசிகளை நோக்கி "விரும்பு(ஆசை கொள்ளு)ங்கள்" என்று கூறப்பட்டால், நிச்சயமாக(அவர்கள்) ரமழானி(மாதத்தி)ன் ஒரு நாளையே விரும்பு(ஆசை கொள்)வார்கள்.
நூல்: அத்-தப்ஸிரஹ் (78/2)
21. ரமழான் மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.
قال الحافظ ابن رجب رحمه الله :
متى يصلح من لا يصلح في رمضان..؟
لطائف المعارف (٢٩٧)
அல் ஹாஃபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
ரமழானில் சீரா(சரியா)காதவர் பிறகு எப்போது சீரா(சரியா)குவார்..?
நூல்: லதாயிஃப் அல் மஆரிஃப் (297)
22. கல்வி சபைகளின் சிறப்பு
قال الإمام الحسن البصري رحمه الله :
الدنيا كلها ظلمة إلا مجالس العلماء.
جامع بيان العلم (١١٤/١)
இமாம் அல் ஹஸன் அல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
உலமாக்களுடைய (கல்வி)சபைகளைத் தவிர, (இந்த)உலகம் முழுவதும் இருள்சூழ்ந்த(இடம்) ஆகும்.
நூல்: ஜாமிஉ பயானுல் இல்ம் (114/1)
23. அல்-ஹிஸ்(ز)பிய்யஹ் (இயக்கவாதம்)
قال الإمام مقبل بن هادي الوادعي رحمه الله :
أركان الحزبية ثلاثة :
• التلبيس
• الخداع
• الكذب
رحلات دعوية (١١٤)
இமாம் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
ஹிஸ்பிய்ய(இயக்கவாத)த்தின் தூண்கள் மூன்று ஆகும்.
• வஞ்சக(ஏமாற்று)த்தனம்,
• மோசடித்தனம்,
• பொய்கூறுதல்.
நூல் : ரஹலாதுன் தஃவிய்யஹ் (114)
24. தமய்யுஸ்(ز)
قال العلامة مقبل بن هادي الوادعي رحمه الله :
ولن تقام سنة رسول الله(ﷺ) إلا بالتميز
تحفة المجيب ص(٨٥)
அல் அல்லாமஹ் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"தமய்யுஸ்[ز]"{{பித்அத்வாதிகள், மனோ இச்சையை பின்பற்றக்கூடியவர்களை விட்டும் தனித்து(வேறுபட்டு)}} இருந்தாலே தவிர, நபி(ﷺ) அவர்களின் ஸுன்னா நிலைநாட்டப்படாது;
நூல்: துஹ்ஃபதுல் முஜீப்(85)
25. இஸ்லாமும், ஸுன்னாவும்
قال الامام البربهاري رحمه الله :
اعلموا..! أن الإسلام هو السنة؛ والسنة هي الاسلام؛ ولا يقوم أحدهما إلا بالآخر.
شرح السنة للبربهاري (٣٥/١)
இமாம் பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
அறிந்து கொள்ளுங்கள்..! நிச்சயமாக இஸ்லாம் அதுதான் ஸுன்னா; ஸுன்னா அதுதான் இஸ்லாம்; அதில்(அந்த இரண்டில் ஏதாவது) ஒன்று இல்லையென்றாலும், மற்றொன்று நிறுவ(நிலை நாட்ட)ப்படாது.
நூல்: ஷர்ஹுஸ் ஸுன்னஹ் லில் பர்பஹாரி (35/1)
26. அஹ்லுஸ் ஸுன்னா - அஹ்லுல் பித்அஃ யார்..?
قال ابن عباس رضي الله عنه:
الرجل من أهل السنة يدعو إلى السنة وينهى عن البدعة
شرح أصول اعتقاد أهل السنة والجماعة (١١)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் கூறினார்கள்:
அஹ்லுஸ் ஸுன்னாவை சார்ந்த நபர் ஸுன்னாவின் பால் (மக்களை) அழைப்பார்; பித்அத்தை விட்டும் (மக்களை) தடுப்பார்.
நூல்: ஷர்ஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ் (11)
27. மார்க்க கல்வியை தேடிப் படிப்பதன் சிறப்பு
قال ابن قيم الجوزية رحمه الله:
فمن طلب العلم ليحيي به الاسلام فهو من الصديقين ودرجته بعد درجة النبوة
مفتاح دار السعادة (٣٩٦/١)
இமாம் இப்னு கய்யிம் அல்ஜவ்ஸீ(ز) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, யார் மார்க்க அறிவைத் தேடிப் படிக்கின்றாரோ, அவர் உண்மையாளர்களில் உள்ளவர் ஆவார். மேலும், அவருடைய அந்தஸ்து நுபுவ்வத்திற்கு (நபிமார்களுக்கு) பிறகுள்ள அந்தஸ்தாகும்.
நூல்: மிஃப்(ف)தாஹு தாருஸ் ஸஆதஹ் (396/1)
28. قال شيخ الإسلام ابن تيمية رحمة الله:
لا عيب على من أظهر مذهب السلف وانتسب إليه واعتزى إليه بل يجب قبول ذلك منه بالاتفاق. فإن مذهب السلف لا يكون إلا حقاً.
مجموع الفتاوى (١٢٤/١)
ஷெய்கு இஸ்லாம் இப்னு தய்மியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
மத்ஹபுஸ் ஸலஃபோடு தன்னை இணைத்துக் கொண்டு, அதனுடன் தொடர்புடையவராக தன்னை வெளிப்படுத்திக் காட்டுபவர் மீது எந்த குற்றமும் இல்லை; மாறாக, இவ்வாறு கூறுபவருடைய இந்த கருத்தை ஏற்றுக் கொள்வது, இஜ்மாவின்(உலமாக்களின் ஏகோபித்த முடிவின்) அடிப்படையில் கடமை(வாஜிப்) ஆகும். ஏனென்றால், நிச்சயமாக மத்ஹபுஸ் ஸலஃப்(என்பது), சத்தியத்தை தவிர வேறொன்றா(வழிகேடா)க இருக்க முடியாது.
நூல்: மஜ்மூஉல் ஃபதாவா (124/1)
قال الإمام ابن القيم رحمه الله:
أركان الكفر أربعة:
• الكبر
• والحسد
• والغضب
• والشهوة
الفوائد (١٥٦)
29. இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
குஃபுரி(நிராகரிப்பி)ன் தூண்கள் நான்கு ஆகும்.(அவை):
• பெருமை
• பொறாமை
• கோபம்
• மனோ இச்சை
நூல்: அல் ஃபவாஇத் (156)
قال الإمام مالك رحمه الله:
"من ابتدع في الإسلام بدعة يراها حسنة، فقد زعم أن محمدا (صلى الله عليه وسلم) خان الرسالة، لأن الله تعالى يقول:
{اليوم أكملت لكم دينكم} (المائدة:3)
فما لم يكن يومئذ دينا، فلا يكون اليوم دينا”
الإعتصام (٤٩/١)
30. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லா(மிய மார்க்க)த்தில் நன்மையாக கருதி, (மார்க்கத்தில் இல்லாத ஒரு) புதுமையை உருவாக்கினாரோ, அவர் "முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தூதுத்துவத்தில் மோசடி செய்து விட்டார்" என்று குற்றம் சாட்டுகின்றார். ஏனென்றால், உயர்ந்தவனாகிய அல்லாஹ் சுப்ஹானஹுவ தஆலா கூறுகின்றான்:
இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன்.
(சூரா அல் மாயிதா:3)
எனவே, "எந்த விடயம் அன்றைய நாளில் (ஸஹாபாக்களுடைய காலத்தில்) தீனாக இருக்கவில்லையோ, அந்த விடயம் இன்றைய தினத்தி(காலத்தி)லும் தீனாக இருக்க முடியாது."
நூல்: அல் இஃதிஸாம் (49/1)
31. யார் ஸலஃபி..?
قال الإمام الذهبي رحمه الله:
السلفي من كان على مذهب السلف
سير أعلام النبلاء (21/6)
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
யார் ஸலஃபு (முன்னோர்)களின் வழிமுறையில் இருக்கிறாரோ, அவர்(தான்) "ஸலஃபி" ஆவார்.
நூல்: ஸீர் அஃலாமு அந்-நுபலா (21/6)
32. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்
يقول شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى:
"إن أصل الدين هو الأمر بالمعروف والنهي عن المنكر و رأس المعروف هو التوحيد و رأس المنكر هو الشرك"
مجموع الفتاوى (٤٤٢/٢٧) ،
الجواب الباهر - ٣١٧
ஷய்கு(خ)ல் இஸ்லாம் இப்னு தய்மியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
நிச்சயமாக தீனுடைய அடிப்படை என்பது, நன்மையை(கொண்டு) ஏவுதலும், தீமையை(விட்டும்) தடுத்தலும் ஆகும். நன்மையை(கொண்டு) ஏவுதலில் மிகவும் தலையாயது "தவ்ஹீத்" ஆகும்; தீமையை(விட்டும்) தடுத்தலில் மிகவும் தலையாயது "ஷிர்க்" ஆகும்.
நூல்: மஜ்மூஉல் ஃபதாவா (442/27) ,
அல் ஜவாபுல் பாஹிரு - 317
قال الحافظ ابن حجر العسقلاني رحمه الله :
فالسعيد من تمسك بما كان عليه السلف واجتنب ما أحدثه الخلف
فتح الباري (٢٦٧/١٣)
33. ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
(இந்த உலகில் மிகவும்) மகிழ்ச்சிக்குரியவர் (யாரென்றால்), ஸலஃபுகள் எதில் (எந்த பாதையில்) இருந்தார்களோ, அதில் (அந்த பாதையில்) இருப்பவரே..! மேலும், (அதற்கு) பின்வந்தவர்கள் உருவாக்கியவை(பித்அத்)களை விட்டும் தவிர்ந்து இருப்பவரே..!
நூல்: ஃபத்ஹுல் பாரி (267/13)
34. பித்அத் மற்றும் அதனை சார்ந்தவர்(பித்அத்வாதி)களுக்கு எதிரான எச்சரிக்கை
قال ابن عباس رضي الله عنه:
لا تجالس أهل الأهواء فإن مجالستهم ممرضة للقلوب
الإبانة (٢/٤٣)
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹூ) அவர்கள் கூறினார்கள்:
மனோ இச்சையை பின்பற்றக்கூடியவர்களோடு (அவர்களின் சபையில்) அமராதே. ஏனென்றால், நிச்சயமாக அவர்களுடனான அமர்வானது, உள்ளங்களில் நோயை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
நூல்: அல் இபானஃ (2/43)
35. ஸலஃபுகளுடைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
قَالَ الإِمَامُ الأَوْزَاعِيُّ رحمه الله :
عَلَيْكَ بِآثارِ مَنْ سَلَفَ وإِنْ رَفَضَكَ النَّاسُ، وَإيَّاكَ وآراءَ الرِّجَالِ، وَإِنْ زَخْرَفُوهُ لَكَ بالقَوْلِ.
الشريعة للآجوري(١٢٤)
இமாம் அல் அவ்ஸா(ز)ஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
ஸலஃபுகளுடைய ஆஸார்களை (வழிமுறைகளை) கடினமாக(பற்றி)ப் பிடித்து கொள், மக்கள் உன்னை (ஏற்காமல்) மறுத்தாலும் சரியே; மேலும், நீ மனிதர்களுடைய (குர்ஆன்-சுன்னாவிற்கு முரணான) சிந்தனைகளை பின்பற்றுவதிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள், அவர்கள் அதை (அந்த சிந்தனைகளை) உனக்கு அழகுபடுத்தி(அலங்கரித்து) காண்பித்தாலும் சரியே..!
நூல்: அஷ்ஷரீஆ லில் ஆஜூரி(124)
قال الإمام الذهبي رحمه الله:
فالذي يحتاج إليه الحافظ أن يكون تقياً ذكياً نحوياً لغوياً زكياً حيياً سلفياً
سير أعلام النبلاء (٣٨٠/١٢)
36. இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
ஹாஃபிழ் அவருக்கு தேவையானது என்னவென்றால்,
தக்வா(பயபக்தி) உடையவராகவும்,
அறிவு(புத்தியு)டையவராகவும்,
(அரபு) இலக்கணத்தை அறிந்தவராகவும்,
(அரபு) மொழி தெரிந்தவராகவும்,
(பாவத்தை விட்டு தவிர்ந்து) தூய்மையுடையவராகவும்,
வெட்கமுடையவராகவும்,
ஸலஃபியாகவும்
(அவர்) இருக்க வேண்டும்.
நூல்: ஸீர் அஃலாமு அந்-நுபலா (380/12)
أبو حاتم الرازي رحمه الله قال:
علامة أهل البدعة: الوقيعة في أهل الأثر
شرح أصول اعتقاد أهل السنة والجماعة
37. அபூ ஹாதிம் அர்-ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
பித்அத்வாதிகளுடைய அடையாளம்:
உலமாக்(அஹ்லுல் அஸர்)களை திட்டுவது(குறைபேசுவது) ஆகும்.
நூல் : ஷர்ஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னஹ் வல் ஜமாஅஹ்.
قَالَ الإِمَامُ الأَوْزَاعِيُّ، رَحِمَهُ اللهُ تَعَالَى:
"اصْبر نفسك على السُّنَّة، وقفْ حيثُ وقفَ القوم، وقُلْ بما قالوا، وكفّ عمَّا كفّوا عنه، واسْلك سبيل سلفك الصَّالح، فإنَّهُ يسعك ما وسعهم."
شرح أصول اعتقاد أهل السنة والجماعة
38. இமாம் அல் அவ்ஸா(ز)ஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
சுன்னாவை பின்பற்றுவதில் நீ பொறுமையாக இருந்துக்கொள்; அந்த சமூகம் (ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள்) எந்த எல்லையில் நின்று கொண்டார்களோ (தீனுடைய விடயத்தில்), அங்கேயே நீயும் நின்று கொள்; அவர்கள் எதை கூறினார்களோ, அதையே நீயும் கூறு; அவர்கள் எதை தவிர்ந்து கொண்டார்களோ அதை நீயும் தவிர்ந்து கொள்; ஸலஃபு(ஸ்ஸாலிஹீன்)களின் வழியிலேயே செல்(நடைபோடு); அவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ, அது உனக்கும் போதுமானதாக இருக்கட்டும்.
நூல்: ஷர்ஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னஹ் வல் ஜமாஅஹ்
39. பித்அத்கள்(அனைத்தும்) வழிகேடாகும்.
قال ابن عمر رضي الله عنه:
كل بدعة ضلالة وإن رآها الناس حسنة
الإبانة(٢٠٥) أصول الإعتقاد(١١/٥٠)
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்கு) அவர்கள் கூறினார்கள்:
அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்; மக்கள் அதனை நல்லதாக(நன்மையாக) கண்டாலும்(சரியே).
நூல்: [அல் இபானஃ(205),
உஸூல் அல் இஃதிகாத்(11/50)}
40. இறைநம்பிக்கையாளரும் - நயவஞ்சகனும்.
قال الإمام الأوزاعي رحمه الله :
إن المؤمن يقول قليلا ويعمل كثيرا ؛ وإن المنافق يتكلم كثيرا ، ويعمل قليلاً.
سير أعلام النبلاء (١٢٥/٧)
இமாம் அல் அவ்ஸா(ز)ஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடியவர் - குறைவாக பேசக்கூடியவராகவும், அதிகமாக அமல் செய்யக்கூடியவராகவும் இருப்பார் ; (ஆனால்) நிச்சயமாக நயவஞ்சகனோ - அதிகமாக பேசக்கூடியவனாகவும், குறைவாக அமல் செய்யக்கூடியவனாகவும் இருப்பான்.
நூல் : ஸியரு அஃலாமிந் நுபலா (7/125)