நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் மகத்தான ஒரு செயல்


بسم اللــــه الرحمـــــــــن الرحيم
 
ஸஹீஹ் அல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸ், அதீ இப்னு ஹாத்திம் ரழியல்லாகு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

மற்றோர் அறிவிப்பில் 'ஒரு நற்சொல்லைக் கொண்டாவது' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் :

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளவாறு :

படைப்பினங்களுக்கு நல்ல வார்த்தைகளைக் கொண்டும் சொத்து செல்வங்களைக் கொண்டும் நல்லுபகாரம் செய்வது நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் மிக மகத்தான ஒரு செயல் ஆகும்.

நூல்: பஹ்ஜது குலூபில் அப்ரார் : 1/181

Previous Post Next Post