பெண்களின் உடை ஒழுங்கு, திருமணம், மணவிலக்கு, பெண்கள் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் பத்வாக்கள் குறித்த கையேடு.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.அவனையே நாம் புகழுகின்றோம்.அவனிடமே உதவி கோருகின்றோம். மன்னிப்பையும் நேர்வழியையும் அவனிடம் நாடுகின்றோம். நம்மிடமிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்தும் நம்முடைய தவறான செயல்களிலிருந்தும் அவனிடம் அடைக்கலம் தேடுகிறோம். அல்லாஹ் எவரை நேர்வழியில் செலுத்துகின்றானோ அவரை எவரும் வழி கெடுத்திட இயலாது. அது போல் எவரை அவன் வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ அவரை எவரும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாரும் இல்லையென்றும் அவன் இணை துணையற்றவன் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அவனுடைய அடியாரும் ஆவார் எனவும் நான் சாட்சி பகர்கின்றேன்.

இஸ்லாமிய உடை ஒழுங்கை கடை பிடிப்பது இறை கட்டளையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் தேட்டங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக எப்பொழுதும் அது விளங்குகின்றது. அல்லாஹ்வின் தூதர் கூறிய பிரகாரம் ஒரு முஸ்லிம் பெண் உடையணியும் போது அவள் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிகின்றாள். அல்லாஹ் அத்தூதரின் புகழை மேம்படுத்துவானாக! தங்களின் உடல்களை மற்றறவர்களுக்கு காண்பிப்பதிலேயே குறியாக இருக்கும் முஸ்லிம் அல்லாத பெண்களிடமிருந்து தங்களை வேறு படுத்தி காட்டும் இந்த உடையை அணிவதில் முஸ்லிம் பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரையும் போன்று தானும் ஒரு நாள் இறைவனின் முன் கொண்டு வரப்பட்டு தான் செய்த ஒவ்வொரு காரியத்தை பற்றி கேள்வி கேட்கப்படுவோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னைச் சார்ந்த தன் குடும்ப உறுப்பினர்களை நல்ல முஸ்லிமாக வளர்க்க முயற்சி செய்தானா என்பது பற்றி ஒவ்வொரு ஆணும் கேள்வி கேட்கப்படுவர். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:- ஈமான் கொண்டவர்களே! மனிதர்களையும் கற்களையுமே தன்னுடைய எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பிலிருந்து நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தவரையும் காத்துக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 66:6)

இந்த தலைப்பு சம்பந்தமாக சற்று கூடுதல் விளக்கம் பெற டாக்டர் முஹம்மது இஸ்மாயில் அல் முகத்தம் என்பவரால் தொகுக்கப்பட்ட அவ்தத்துல் ஹிஜாப் (திரும்பி வரும் ஹிஜாப் இரண்டாம் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து ஒரு சில பத்திகளை எடுத்தாள விரும்புகின்றேன். அவருடைய அந்த புத்தகத்தில் ஹிஜாப் பற்றி மிகவும் அழகாக விவரிக்கின்றார்;. ஹிஜாபானது பெண்களை மந்தப்படுத்தி அவர்களுடைய பணியை நிறைவேற்றுவதிலிருந்து தடுக்கின்றது என தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலரும் முஸ்லிம் அல்லாதவர்களும் கூறும் கற்பனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி அதை டாக்டர் அவர்கள் மறுக்கின்றார்கள். தன் புத்தகத்தின் முன்னுரையில் அவர் கூறுகின்றார்:-

வீட்டில் தங்கியிருக்கும் பெண் சும்மாவே ஒன்றும் செய்யாமல் இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகின்றது. தன்னுடைய வீட்டை கொள்கை கோபுரமாக இஸ்லாத்தின் கோட்டையாக மாற்றுவதில் பெண்கள் மிகவும் முக்கியமான, புனிதமான பங்கு வகிக்கின்றனர் என்பதை இந்த ஆராய்ச்சி புத்தகம் தெளிவுபடுத்தி உறுதிப்படுகின்றது.

இஸ்லாத்தின் மேன்மைக்குரிய கொள்கைகள் ஏராளாமானவைகள். அது மற்றும மேலும் மேலும் அறிய அறிய இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மார்க்கம்தான் என்ற உறுதி உங்களுக்கு கூடிக் கொண்டே செல்லும்.

நம்முடைய இக்காலத்தில் முஸ்லிம்களின் இக்கட்டான நிலை குறித்து ஒவ்வொரு உண்மையான மூமினும் நன்கறிவர். இஸ்லாத்தை வாய்மையுடன் பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கும் அதே வேளைiயில் அது பற்றி பொடு போக்காக இருப்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.  பல இஸ்லாமிய கட்டளைகள் கைவிடப்பட்டு விட்டன அல்லது கைவிடப்படும் நிலையில் உள்ளன. துன்பம் எங்கும் பரவலாக காணப்படுகின்றது. உண்மையில் இதுதான் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்தது:  இஸ்லாம் (மக்கள் அறியாத) புதுமையான ஒன்றாக தொடங்கியது அது போல் (மக்கள் அறியாத) புதுமையான ஒன்றாக ஆகிவிடும். புதுமையான அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அவர்கள் கூறினார்கள். புதுமையான அவர்கள் யார் என அவர்களிடம் கேட்கப்பட்ட போது.  மக்கள் எனது சுன்னாவை அலட்சியப்படுத்தும் போது அதை பின்பற்றுபவர்களே அவர்கள் என கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நமது காலத்தில் முஸ்லிம்களின் நிலையை கருத்தில் கொண்டு பேசுவது போல் அவர்களின் முன்னறிவிப்பு தோன்றுகின்றது. துரதிருஷ்டவசமாக, இஸ்லாமிய உடை ஒழுங்கை கடை பிடிக்கும் பெண்கள் இன்று மிகவும் குறைவு.  அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:-

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.  ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரியாவான். (2:208)

இந்த ஆயத்திற்கு விளக்கமளித்து பேரறிஞர் இப்னு கதீர் அவர்கள் கூறுகின்றார்கள்:-

இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுமாறும் அதன் கட்டளைகள், ஈமானின் பிரிவுகள், சட்டங்கள் ஆகிய அனைத்தையும், எதையும் விடாமல், கடை பிடிக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஷைத்தானின் சதிகளைப்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு ஏவுகின்றான். ஏனெனில் நரகவாதிகளாக ஆகுவதற்காகவே தன்னைப் பின்பற்றுபவர்களை அவன் அழைக்கின்றான். (தப்ஸீர் இப்னு கதீர் பாகம் 2 பக் 261-262)

ஒரு முஸ்லிம் பெண் வாய்மையுடன் தன் தீனைப் பின்பற்றாதவரை தன் மார்க்கத்தை கடைப்பிடிப்பதில் பெருமிதம் கொள்ளும் ஒரு சந்ததியை உருவாக்கவோ அல்லாஹ்வின் தீனை இத்தரணியில் நிலை நாட்டவோ முடியாது. முஸ்லிம் பெண்ணை குறி வைத்தே இஸ்லாத்தின் எதிரிகள் இன்று வெறிகொண்ட ஒரு கலாச்சாரப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு செய்தி ஊடகங்களின் வழியாகவும் நம்முடைய தனிமையை அவர்கள் குலைக்கின்றனர்.

நாம் நம்முடைய தீனிற்கு உதவிடும் போதுதான் அல்லாஹ் தான் வாக்களித்துள்ள வெற்றியை நமக்களித்து இப்பூமியில் நம்மை நிலை நாட்டுவான். அவன் கூறுகின்றான்:-

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ''அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;"" (24:55)

முஸ்லிம் பெண்ணானவள் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு ஆற்றல் மிக்க பாகமாக விளங்குகின்றாள். அவளின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அவளின் கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம் அல்லாத சமூகத்தில் விசயமே வேறு. பெண் சுதந்திரம் என்று அங்கே அழைக்கப்படுவதெல்லாம் அவர்கள் கூறுவது போல் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை கொடுக்காமல் பெண்களைச் தங்களின் சுரண்டுலுக்கு பயன்படுத்துவதைத்தான் பெண் சுதந்திரம் என்று அவர்கள் அழைக்கின்றனர். மேற்கத்திய பெண்கள் காமப் பதுமைகளாக இருக்கும்படி உருவாக்கப்படுகின்றனர். தொலைக்காட்சிகள், செய்திப்பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைளில் வரும் விளம்பரங்கள் இதற்கு ஏராளமான ஆதாரங்களை தருகின்றன.

இதற்கு மாறாக, அவள் தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஏன் முழு சமூகத்தையும் காக்கும் விதத்தில் அறிவிற்குகந்த அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் அவளுக்கு வழங்கியுள்ளது. தம்முடைய குழந்தைகளை கவனித்து அவர்களை சமூகத்தின் மதிக்கத்தக்க உறுப்பினர்களாக உருவாக்குவதில் தாய்மார்களுக்கு சமூகத்தில் ஒரு தவிர்க்க இயலாத முக்கிய பங்கு உள்ளது. கூலிக்குக் குழந்தைகளை கவனிப்பவர்களோ அல்லது அவர்களைப் போன்றவர்களோ தாயின் இடத்தை ஒருக்காலும் அடைந்திட முடியாது. அவள் தன் வயோதிகத்தை அடையும் பொழுது பரிவுடன் கவனிக்கப்படும் வகையில் பெற்றோர்களை மரியாதை செய்யவும் கண்ணியப்படுத்தவும் மேன்மைக்குரிய அல்லாஹ் திருக்குர்ஆனில் கட்டளையிடுகின்றான்:-

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசவீராக! (17:23)

மேற்கத்தில் உலகில் கற்பழிப்பில் ஈடுபடுபவனை கண்டிக்கின்றனர். சரிதான். ஆனால் அந்தப் பெண்ணை கண்டிப்பதில்லை. ஏன் அரை நிர்வாணமாக வெளியேறுகின்றாள் என்றோ தன்னுடைய உடலை வெளிக்காட்டிடும் ஆடைகளை ஏன் அணிகின்றாள் என்றோ ஒருவரும் கேட்பதில்லை. அவள் எப்படி விரும்புகின்றாளோ அப்படி உடை உடுத்த அவளுக்கு சுதந்திரம் இருக்கின்றது என்று கூறி, கற்பழித்த இவன்தான் தன்னுடைய மிருக உணர்வை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்! என அவர்கள் கூக்குரலிடுகின்றனர்.  தான் விரும்பியவாறு உடையணிய அவளுக்குள்ள சுதந்திரத்தைத்தானே இந்த அப்பாவி பயன்படுத்தியிருக்கின்றாள். மற்றவர்கள் அதை ஏன் பார்க்கின்றனர் என யாரேனும் கூறினால் பின் ஏன் தன் உடல் அழகை வெளிப்படுத்தும் உடையை அணிந்து கொண்டு திரிகின்றாள்? என்று நாம் கேட்போம்.

இந்த காலத்தில் சாதாரணமாக ஒரு சிறிய பொருளை விற்பதற்குக் கூட இரண்டு கச்சைகளை மாத்திரம் அணிந்து உதட்டுச் சாயத்துடன் அசட்டுத்தனமாக சிரித்துக் கொண்டு அதுதான் சிறந்த பொருள் என்று விளம்பரம் செய்து மக்களை அதன் தயாரிப்பாளர் நம்பச் வைக்கின்றார். அட கழிப்பறையில் சுத்தம் செய்ய பயன்படும் தாள் மென்மையானது சௌகரியமானது என்று நம்ப வைப்பதற்கு கூட இளம் பெண்தான் தேவைப்படுகின்றது.

இன்டர்நெட் மூலமாகவும் மற்ற செய்தி ஊடகங்கள் மூலமாகவும், திருட்டு வீடியோக்கள், பாலுணர்வை தூண்டு டிவி நிகழ்ச்சிகள் இவையாவும் எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் உள்ளன. மனைவிகளாக உள்ளவர்களின் மதிப்பு மேற்கத்திய சந்தையில் நாளுக்கு நாள் மலிந்து வருகின்றது. இதன் காரணமாக மணவிலக்கு சதவிகிதம் பெருகி வருகின்றதோடு ஒரு பெற்றோர் குடும்பமும் கூடிக்கொண்டு வருகின்றது.  நாகரீக வளர்ச்சியில் உச்சத்திலிருக்கின்ற சமூகங்கள் நாங்கள் என்று குரலெழுப்பும் இந்த மேற்கத்தியர்களின் வாழ்வியலின் மறு பக்கத்தில் என்ன நடக்கின்றது என்று பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.

சமீபத்தில் யுஎஸ்ஏ டுடே (USA TODAY) என்ற வட அமெரிக்காவின் முன்னனி நாளிதழ், ஒரு முழுப்பக்க விளம்பரத்தை பிரசுரித்திருந்தது..!


பொழுது போக்கு துறைக்கு ஒரு வேண்டுகோள்.

வெட்கக்கேடான சினிமாக்கள், கேசட்டுகள், டிவி நிகழ்ச்சிகள்:

நாங்கள் சினம் கொண்டுள்ளோம்! இனி ஒரு ஒரு போதும் இதை சகித்துக் கொள்ள மாட்டோம்!

இன்றைய சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள், பாட்டு வீடியோக்கள் கேசட்டுக்கள் ஆகியன நம்முடைய குழந்தைகளையும் குடும்பங்களையும் நம்முடைய நாட்டையும் எந்த அளவிற்கு ஆபத்திற்குள்ளாக்கியுள்ளன என்பது குறித்து தாய்மார்கள், தந்தையர்கள், தாத்தா, பாட்டிமார்கள் மற்றும் இந்த தேசத்தவர்களான நாங்கள் சினம் கொண்டுள்ளோம்.  உதாரணத்திற்கு:-

ஒவ்வொரு வருடமும் 15 லிருந்து 19 வயதிற்குள்ள 11 லட்சம் பெண்கள் கர்ப்பமடைகின்றனர் என்பதை அறிந்து கோபமடைகின்றோம்.

15 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் பெறும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் திருமண உறவின்றி பிறந்த குழந்தைகள் என்று அறிந்து அதிர்ச்சியடைகின்றோம்.

எங்கெங்கும் வன்முறையும் குற்றங்களும் பரவும் முறையையும் அவைகள் நம் குழந்தைகளையும் குடும்பங்களையும் நம் இல்லங்களையும் அச்சுறுத்துவதைக் கண்;டு அஞ்சுகின்றோம்.

இதற்கான காரண கர்த்தா எதுவோ அதை குற்றம் சாட்டுவதற்கு இது சரியான நேரம் என கருதுகின்றோம்.

நம்முடைய பிள்ளைகளின் வணக்கத்திற்குரிய பதுமைகள் போல் ஆகி விட்ட இந்த பாடகர்களை பாடவிட்டு கண்மூடித்தனமாக காமத்தை தூண்டும் அவர்களின் கேசட்டுகளையும் இசை வீடியோக்களையும் பரவ விட்டு  காமத்தில் எந்த வயதிலும் ஈடுபடலாம் என்றும், ஒவ்வொருவரும் அதை செய்து கொண்டுதான் இருக்கின்றனர் என்றும், கட்டுப்பாடாக இருப்பது பழைய காலம் என்றும் இந்த இசைத் தொழில் நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றது. வெட்கக்கேடு!

கெட்ட பழக்கங்கள் நிர்வாணம், காமம், வன்முறை, கொலை ஆகியவற்றையே பிரதானமாக கொண்ட ஹாலிவுட் திரைப்படங்கள் தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது. வெட்கக்கேடு!  உதாரணத்திற்கு, வெற்றிப்படமான அடிப்படை உள்ளுணர்வு என்ற படம் உடலுறவு கொள்ளும் போதே கொலை செய்யும் காட்சியை காண்பித்து இன்றைய படங்களுக்கு புதிய வழிகேட்டு முன்மாதிரியை உண்டாக்கி விட்டது.

யுஎஸ்ஏ டுடே என்ற அந்த பத்திரிக்கையில் இது மாதிரியான பட்டியல் பக்கம் முழுவதும் இருக்கின்றது. அதன் ஓரத்தில் அந்த விளம்பரம் கொடுத்தவர்களின் வேண்டுகோள் இருக்கின்றது. பெரும் டிவி சேனல்களின் டைரக்டர்களுக்கும், சினிமா, இசை, கேசட் கம்பெனிகளுக்கும் இதை அனுப்பி வைக்குமாறு அதில் அவர்கள் வேண்டுகின்றார்கள்.

இந்த கெட்ட படங்களை நீக்கினால் மேற்குறிப்பிட்ட தீங்குகள் விலகிப் போகும் என்று இந்த விளம்பரத்தை கொடுத்தவர்கள் நினைக்கின்றார்கள் போலும். ஆனால், பிரச்னையின் அடிப்படை அவர்களின் சமூக அமைப்பில் இருக்கின்றது என்பதை அவர்கள் உணரவில்லை. அந்த சமூக அமைப்புத்தான் இரண்டு பாலரின் இயற்கை அமைப்பில் விளையாடி, ஆணின் உரிமை கடமைகளையும், பெண்ணின் உரிமை கடமைகளையும் குழப்பியுள்ளது என்பதை அவர்கள் உணரவில்லை. மேற்கில் இப்பொழுது இருப்பது போன்று இல்லாமல் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் குடும்ப உறுப்பினர்கள் தத்தமது கடமைகளை நிறைவேற்றி வந்த காலமெல்லாம் குடும்ப அமைப்பு மிகவும் பொருத்தமானதாக இருக்கத்தான் செய்தது. அப்பொழுது தங்களுக்கு சரிசம உரிமை வேண்டும் என்று பெண்கள் கோராமல் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கம் கொண்டிருந்தனர். இதுவல்லாமல், அந்தக் காலத்து பெண்கள் கெட்ட நடத்தைக்கு இடமளிக்காத அவர்களின் பராம்பரிய உடையை அணிந்து கொண்டிருந்தனர். இதனால் காமம் சம்பந்தமான குற்றங்கள் ஏறக்குறைய இல்லாமலே இருந்தது.

மறு பக்கமோ, இஸ்லாமானது ஆண் பெண் ஆகிய ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கடமைகளையும் உரிமைகளையும் அளித்து ஆண் பெண் ஆகியோரின் பாத்திரத்தை வரையறுத்து சமூகத்தில் சரியான இணக்க சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.  வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், பெண்ணானவள் தனக்குரிய கடமையை செய்து தனது சரியான உடை ஒழுங்கை கடை பிடித்து வரும் போது அவர்கள் சமூக ஒழுங்கிற்கும் அமைதிக்கும் அதன் முன்னேற்றததிற்கும் பெரும் பங்கை ஆற்றுகின்றனர். இந்த இணக்கம் அல்லாஹ்வின் வேதத்தின், அவன் தூதரின் (அவரின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக) சுன்னாவின் அடிப்படையில் உண்டாகின்றது.

மேற்கத்திய கலாச்சாரம் முஸ்லிம்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்த பிறகுதான் சில பெண்கள் அதற்கு ஆட்பட்டு தங்களுடைய இஸ்லாமிய அடையாளங்களை இழந்து மேற்கத்திய பெண்களுடன் போட்டி போடத் துவங்கி விட்டனர்.

ஜில்பாப் அல் மர்அதில் முஸ்லிமா என்ற தனது புத்தகத்தின் முன்னுரையை அறிஞர் அல்பானி அவர்கள் முஸ்லிம் அறிஞர்களுக்கு கீழ்கண்ட அறிவுரை கூறுவதோடு முடிக்கின்றார்கள்:-

ஹிஜாப் சம்பந்தமான இறைக்கட்டளையை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்திட வேண்டும். அவர்கள் மத்ஹபுகளிலிருந்தும் பரம்பரை பழக்கத்திலிருந்தும் ஆதாரத்தை தந்து கொண்டிருக்காமல் திருக்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும்; ஆதாரத்தை கொடுக்க வேண்டும். திருக்குர்;ஆன் சுன்னா ஆகியவற்றின் மூலமே மக்கள் பொய்யை உண்மையிலிருந்து பிரித்துக்காட்டி கூறிட முடியும். அவர்கள் அவ்வாறு செய்வார்களெனில் விசுவாசம் கொண்ட பெண்கள் அதை கட்டாயம் பின்பற்றுவர். இளம் பெண்களுக்கு பள்ளிவாசல்களிலும், பள்ளிக்கூடங்களிலும் பல்களைக்கழகங்களிலும் இஸ்லாமிய அறிவு புகட்டிட பெரும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் குணங்களை சீரழிக்கும் மோசமான செய்தி ஊடகங்கள் ஆபாச சஞ்சிகைகள் பரவுவதை தடுத்திட வேண்டும்.

இத்தகைய பெரு முயற்சிகளின் மூலமே நம்பிக்கை கொண்ட பெண்களின் சந்ததி வளர்ந்திட முடியும். அத்தகைய பெண்கள் அல்லாஹ்வின் கட்டளையான தங்களின் ஜில்பாபுகளை கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என நபியே நீங்கள் உங்கள் மனைவியருக்கும் உங்கள் பெண் மக்களுக்கும் மற்றும் விசுவாசம் கொண்ட பெண்களுக்கும் கூறுவீராக என்பதை கேட்டவுடன் அதை நிறைவேற்ற விரைவார்கள்.

முஸ்லிம் பெண்கள் என்றைக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுகின்றார்களோ அன்று முஸ்லிம்கள் தங்களின் புகழையும், சக்தியையும், அதிகாரத்தையும் திரும்பப் பெறுவார்கள். உண்மையில் பெண்களுக்கு முன்பு ஆண்கள்தான் இறைவனின் அந்தக் கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.  அல்லாஹ் கூறுகின்றான்:-

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (8:24)

 

இஸ்லாமிய ஜில்பாபிற்கு இருக்க வேண்டியவைகள்

பெண்களின் உடை ஒழுங்கை கடைப்பிடிப்பதை அது தொடர்பான திருமறை வசனங்களும் நபி மொழிகளும் மிகவும் வலியுறுத்துகின்றன. இஸ்லாமிய உடை ஒழுங்கை கடைப்பிடிப்பதின் மூலமே கண்ணியம் காக்கப்படமுடியும். ஆகவே முஸ்லிம் பெண் குறிப்பாக அவள் வெளியே செல்லும் போது அணிய வேண்டிய இஸ்லாமிய ஜில்பாப் (தடுக்கும் அல்லது மறைக்கும் ஒன்று என்பதே ஹிஜாப் என்பதன் நேரடி அர்த்தமாகும்.  ஏனெனில் அது (மற்றவர்கள்) பார்ப்பதிலிருந்து தடுக்கின்றது. ஆனால் இஸ்லாத்தில் பெண்களைப் பொறுத்தவரை அந்த வார்த்தை பெண்களின் வெளிப்புற ஆடையைக் குறிக்கின்றது.) அல்லது பெண்ணின் வெளிப்புற ஆடை எவ்வாறு இருக்க வேண்டும் என இஸ்லாம் வரையறுத்துள்ளது. ஒரு முஸ்லிம் பெண்மணி வெளியே செல்லும் போது அவளின் உள் ஆடைகளையும் அழகு ஆபரணங்களை மறைக்கும் விதமாக வெளிப்புற ஆடையை அணிய வேண்டும்.

கீழ்கண்டவாறு இல்லையெனில் பெண் அணிந்திருக்கும் ஜில்பாப் சரியானதென கருதப்படுவதில்லை:-

1 - முழு உடலையும் மறைக்கும் அளவிற்கு பெரியது.

2 - அலங்கரிக்கப்படாத பிளெய்னாக உள்ளது.

3 - நெருக்கி நெய்யப்பட்டது பின்னால் உள்ளதை காண்பிக்காததும்.

4 - ஆண்களின் உடையை ஒத்திருக்காதது.

5 - நிராகரிப்பவர்களின் உடையை ஒத்திருக்காதது.

6 - படோபடமற்றது.


1 - போதுமான அளவு பெரிதானது

இது பற்றிய குறிப்பு அல்லாஹ்வின் வாக்குகளில் உள்ளது.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்பது அடிமைப்பெண்ணையோ அல்லது ஆணையோ குறிக்கும்.), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (24:31)

வெளிக்காட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டவைகளைத் தவிர உள்ள மற்ற அனைத்து அலங்காரங்களையும் அந்திய ஆண்களிடமிருந்து மறைப்பது ஒரு பெண்ணின் கடமை என்பதை இந்த ஆயத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

கிமார் என்ற வார்த்தை தலை மறைப்பை குறிக்கும் அதே வேளையில் ஜுயூப் என்ற வார்த்தை (ஜெய்ப் என்ற வார்த்தையின் பன்மை) மார்பை மாத்திரம் குறிக்காமல் கழுத்தையும் சேர்த்து குறிக்கின்றது. மிகவும் சங்கைக்குரிய விரிவுரையாளரான இமாம் அல் குர்துபி அவர்கள் இந்த ஆயத்திற்கு கீழ்கண்டவாறு விளக்கமளிக்கின்றார்கள்:-

அந்தக்காலத்திலுள்ள பெண்கள் கிறிஸ்துவப் பெண்கள் செய்து வந்ததைப் போன்று கிமாரை கொண்டு தங்களின் தலைகளை மறைத்து அதன் ஓரங்களை தங்களின் பின்புறம் போட்டுக் கொள்வார்கள். பின்பு, முஸ்லிம் பெண்கள் கிமாரைக் கொண்டு தங்கள் மார்புகளின் மேல் பாகத்தையும் கழுத்;தையும் மறைக்குமாறு உத்தரவிட்டான்.

தங்களின் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் என்ற இறைவனின் வாக்கு பெண்கள் தங்களின் பாதத்தையும் மறைக்க வேண்டும் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.  அந்தக் காலத்தில் உள்ள பெண்கள் கால்களில் கொளுசு அணிந்து கொண்டு தாங்கள் நடக்கும் போது ஓசை உண்டாக்கி மற்றவர்களின் கவனத்தை கவர்ந்தனர்.

உமர் அல் கத்தாப் (ரலி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்.

பெருமையுடன் தன்னுடைய உடையை இழுத்துச் செல்பவரை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அப்படியானால் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர்கள் ஒரு ஜான் இறக்கிக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தனர்.  அப்படியிருந்தும் அவர்களின் பாதங்கள் திறந்திருக்குமே என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வினவினார்கள். அப்படியானால் ஒரு கையளவு இறக்கிக் கொள்ளட்டும். அதை விட நீளமாக இறக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் திர்மிதி)

அந்நிய ஆண்கள்-மஹர்ரம் (மஹர்ரம் என்ற அடுத்த அத்தியாயம் காண்க.) அற்ற உறவினர்கள் முன்னிலையில் -வீட்டிற்கு உள்ளிலோ அல்லது வெளியிலோ- ஒரு முஸ்லிம் பெண்மணி என்ன அணிய வேண்டும் என்பதை மேலுள்ள ஸுரத்துன் நூரில் உள்ள ஆயத் குறிப்பிட்ட தகவல்களை விபரமாக அளிக்கின்றது. பெண் யாருடன் சர்வசாதாரணமாக இருக்கலாம் என்ற பட்டியலையும் அந்த ஆயத் தருகின்றது. முஸ்லிம் பெண்மணி ஜில்பாப் எனப்படும் வெளிப்புற ஆடையை அணியுமாறும் அதை உடலைச் சுற்றி இறக்கி விடுமாறும் ஸுரத்துல் அஹ்ஸாப்பில் உள்ள பின் வரும் ஆயத் கட்டளையிடுகின்றது:-

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (33:59) (சுதந்திரமான பெண்கள் என்பதை அறியச் செய்யும் வகையிலும் முஸ்லிம் அல்லாத நிராகரிக்கும் பெண்கள் அடிமைககள் ஆகியவற்றிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் மற்வர்களால் தொல்லைக்கு ஆளாவதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும் முஸ்லிம் பெண்கள் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளனர்.)

அந்நிய ஆடவர்களின் முன்னிலையில் தங்களின் அழகையும் அலங்காரத்தையும், வெளிக்காட்ட அனுமதிக்கப்பட்ட மோதிரம், உடையின் கீழ் பார்டர் போன்றவற்றைத் தவிர, மறைப்பதை முதல் ஆயத் கட்டயமாக்குகின்றது.

முகத்தையும் கையையும் மறைப்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் துணைவியர்கள் மற்றும் தக்வா உள்ள மற்ற பெண்களின் வழமையாக இருந்து வந்துள்ளது.  ஆண்களிடமிருந்து எங்கள் முகத்தை நாங்கள் மறைத்து வந்தோம் என அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.  ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:-

அன்ஸாரி பெண்கள் மீது அல்லாஹ் அருள் புரியட்டும்.  தங்களின் ஜுயூப்களின் (மார்பு மற்றும் கழுத்து) மீது தங்களின் தலை மறைவை தொங்க விட்டுக் கொள்ளட்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளை வெளிப்பட்டவுடன் அவர்கள் உடையின் ஒரு பகுதியை கிழித்து அதை தங்களின் கிமார்களாக உபயோயோகித்துக் கொண்டனர். (ஸஹீஹ் அல் புஹாரி). 

2 - அலங்காரமற்றதும் பிளெய்னானதும்

தங்களின் அலங்காரங்களை அவர்கள் வெளிக் காண்பிக்கக்கூடாது என்ற அல்லாஹ்வின் வாக்கு பொதுவாக வெளிப்புற ஆடையைக் குறிக்கின்றது. அது அலங்காரமிக்கதாகவோ, வண்ணமயமானதாகவே, ------ அல்லது கண்ணைக் கவர்வதாகவோ இருக்கக் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான்:-

உங்களின் வீடுகளில் தங்கியிருங்கள். ஜாஹிலியா (முழு அறியாமை என்பது ஜாஹிலியா வார்த்தையின் நேரடி அர்த்தமாகும்.  ஆனால் திருக்குர்ஆனிலோ அல்லது சுன்னவிலோ உபயோகிக்கப்படும் பொழுது அது இஸ்லாத்திற்கு முந்தியுள்ள காலத்தை குறிக்கும்.) காலத்தில் செய்து வந்த தபர்ருஜ் போன்று தபர்ருஜ் செய்யாதீர்கள். (33:33).

பெண்களின் தபர்ருஜ் என்பது அவர்கள் தங்கள் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவர்களுக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ வெளிக் காட்டுவதும் பொது இடங்களில் மேக்அப்புடன் தோன்றுவதும் அல்லது ஆண்களின் இச்சையை தூண்டும் வேறு எந்த காரியத்தையும் தபர்ருஜ் என்ற வார்த்தை குறிக்கும்.

பெண்ணின் உடல் பாகங்களையும் தான் அழகாக தோன்றுவதற்காக செய்த அலங்காரங்களையும் மறைப்பதுதான் ஜில்பாபின் நோக்கமாகும். ஆனால் ஜில்பாபே வண்ணமயமானதாகவோ அல்லது அலங்காரமானதாகவோ இருப்பின் அதுவே ஒரு அழகாபரணம் போன்றாகி அது அணிவதன் நோக்கத்தையே அது தோற்கடித்து விடுகின்றது.

அல்கபாயிர் (மிகப்பெரும் பாவங்கள்) என்ற தனது நூலில் இமாம் அத்தப்பாபி அவர்கள் கூறுகின்றார்கள்:-

பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விசயங்களில் வெளிப்புற மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும் போது வாசனைத்திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதை செய்யும் பெண்களையும் வெறுக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவிற்கு தபர்ருஜ்மோசமானது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

அல்லாஹ்வின் தூதரவர்களிடம் தன்னுடைய இஸ்லாத்திற்கான சத்தியப் பிரமாணத்தை அளிப்பதற்காக ருக்கையா அவர்களின் மகளாரான உமைமா அவர்கள் வந்தார்கள். நீ அல்லாஹ்விற்கு இணை வைக்க மாட்டேன் என்றும், விபச்சாரம் செய்ய மாட்டேன் என்றும், உன் குழந்தைகளை கொலை செய்ய மாட்டேன் என்றும், புனைந்து அவதூறு சொல்ல மாட்டேன் என்றும், இறந்து போனவர்களுக்கு கூப்பாடு போட்டு அழ மாட்டேன் என்றும், அறியாமைக் காலத்து தபர்ருஜ் போன்று தபர்ருஜ் செய்ய மாட்டேன் என்றும் நீ உறுதியளித்தால் நான் உன்னுடைய சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறினார்கள். (இமாம் அஹ்மது).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. முஸ்லிம் உம்மத்திலிருந்து பிரிந்து தன்னுடைய இமாமிற்கு (முஸ்லிம்களின் ஆட்சியாளருக்கு) மாறு செய்து அதே நிலையில் இறப்பவன்: தன் எஜமானனிடமிருந்து ஓடிச் சென்று அவனிடம் திரும்புவதற்கு முன் இறப்பவன்: ஒரு பெண்ணிற்கு அவளிற்குத் தேவையானவைகளை அவள் அளித்து விட்டுச் சென்று விடுகின்றான். ஆனால் அவன் இல்லாத போது தபர்ருஜ் செய்து தன் அழகை வெளிப்படுத்துபவள். இத்தகையவர்களுக்காக வருத்தப்படாதீர்கள்.  (இமாம் அஹ்மது).

3 - நெருக்கமாக நெய்ததும் உள்ளே உள்ளவைகளை காண்பிக்காததும்

ஜில்பாபானது அதற்குக் கீழுள்ள ஆடைகளை மறைத்திட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி தொழும் போது உபயோகிக்கும் உடையும் இவ்வாறே இருக்க வேண்டும். மெல்லிய, உள்ளே உள்ளவைகளை காண்பிக்கக்கூடிய உடைகள் ஆண்களை கிளர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மெல்லிய உடையை அணியும் பெண்கள் உடை அணிந்தும் அணியாதவர்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  அவர்கள் கூறுகின்றார்கள்:-

உடை அணிந்தும் அணியாதது போன்றும், ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள்.  அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். (அல் தபரானி).

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை குறிப்பிட்டு கூறுகின்றார்கள்:-

அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம்).

இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்தி காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- நாணமும் ஈமானும் ஒன்றோடு ஒன்று சேர்;ந்ததாகும். ஒன்றை விட்டு ஒன்று விலகி விடுமெனில் மற்றொன்றும் அத்துடன் விலகி விடும். (அல் ஹாக்கிம்).

4 - வாசனைத் திரவியங்கள் பூசப்படாதது.

பொது இடங்களுக்கு செல்லும் போது வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை ஒரு பெண் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அப்பால் வாசனைத்திரவியங்கள் உபயோகிப்பதை தடுக்கும் பல நபி மொழிகள் உள்ளன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

வாசனைத் திரவியம் பூசிக் கொண்டு அதை நுகரும் மக்களுக்கிடையே நடந்து செல்லும் பெண் விபச்சாரியாவாள். (அல் நஸாயீ, அபூ தாவூது மேலும் மற்ற நூல்களும்).

மூஸா பின் யாஸர் அவர்கள் கூறுகின்றார்கள்:-

மிகவும் மணமுள்ள வாசனைத்திரவியத்தை பூசிய ஒரு பெண்மணி அபூஹுரைரா அவர்களை கடந்து சென்றார்கள். அப்பொழுது அவளை நோக்கி அவர்: வல்லமை மிக்கவனின் அடியாளே! நீ பள்ளிவாசலிற்கா செல்கின்றாய் என வினவினார்கள். ஆம் என அப்பெண்மணி பதிலளித்தார். இதற்காகவா நீ இவ்வாறு நறுமணம் பூசியிருக்கிறாய் என மேலும் அவர் வினவினார். அதற்கும் ஆம் என அப்பெண்மணி பதிலளித்தார். அதற்கு அவர் நீ வீட்டிற்கு சென்று குளித்து விடு. நறுமணம் பூூசிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் பெண்ணின் தொழுகையை, அவள் வீட்டிற்குச் சென்று அந்த திரவியத்தின் வாசத்தை கழுவாத வரை,  அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என கூறினார்கள். (அல் பைஹக்கீ பாகம் 3 பக்கம் 133).

பள்ளிக்குச் செல்லும் போதே ஒரு பெண் நறுமணம் பூசக்கூடாதெனில் பொது இடங்களுக்குச் செல்லும் போது அவள் கண்டிப்பாக நறுமணம் பூசக்கூடாதுதான். அவ்வாறு செய்வது அதை விட பெரிய பாவமாக ஆகி விடும். அல் ஹைதமி அவர்கள் வலியுறுத்திக் கூறுகின்றார்கள்:-

பொது இடத்திற்கு ஒரு பெண் மேக்அப்புடனும் நறுமணத்துடனும் சென்றால் அவள் மிகப் பெரும் பாவத்தை செய்தவளாவாள். இதை அவளின் கணவன் அனுமதித்தாலும் சரியே. (அல் ஸவாஜிர் பாகம் 2 பக் 7).

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:-

மது அருந்துபவனையும், தன் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாதவனையும், தன் மனைவியின் தவறான நடத்தையை அனுமதிப்பவனையும் (தையூத்) சுவனத்தை நுழைவதிலிருந்து அல்லாஹ் தடுத்து விடுவான். (இமாம் அஹ்மது, அல் முஸ்னது, பாகம் 2 பக்கம் 69).

தையூத் என்ற வார்த்தை ---------- என்பதையோ அல்லது தன் மனைவியின் துரோக செயல்களை அறிந்து அதை கண்டு கொள்ளாமல் இருப்பவனையோ அல்லது மேக்கப்புடனும் நறுமணத்துடனும் வெளியில் சென்று அவள் அறிந்தோ அல்லது அறியாமலோ மற்ற மற்ற ஆண்களை கிளர்ச்சிக் உள்ளாக்கும் அவனின் மனைவி பற்றி பொறாமைப்படாதவனையும் அந்த வார்த்தை குறிக்கும். 

5 - ஆண்களின் உடை போன்று இருக்கக்கூடாது

பெண்ணின் உடையை அணியும் ஆணையும் ஆணின் உடையை அணியும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (இமாம் அஹ்மது, இப்னு மாஜா மேலும் மற்றவர்களும்).

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:-

பெண்களை போன்று செயல்படும் ஆண்களும் ஆண்களைப் போன்று செயல்படும் பெண்களும் நம்மைச் சார்ந்தவர்களல்ல என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இமாம் அஹ்மது).

ஒரு பெண் ஆண்களின் உடையான பேண்ட், ஜீன்ஸ் அல்லது மற்ற உடைகள் ஆகியவற்றை அணியும் போது அல்லாஹ்வின் சாபத்திற்கும் அவனுடைய தூதரின் சாபத்திற்கும் உள்ளாகின்றாள்.  அதை அனுமதிக்கும் அவளுடைய கணவனையும் அந்த சாபம் பாதிக்கும். ஏனெனில் அவள் இஸ்லாமிய உடை ஒழுங்கை பின்பற்றுகின்றாளா என உறுதி செய்வது அவனுடைய கடமையாகும். மேன்மைக்குரிய அல்லாஹ் கூறுகின்றான்:-

விசுவாசம் கொண்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தவரையும் கற்களையும் மனிதர்களையும் தன் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். (66:6).

மேலும் நபி (ஸல்) அவர்களும் (அல்லாஹ் அவர்களின் புகழை மேம்படச் செய்வானாக) கூறுகின்றார்கள்:-

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாவீர்கள்.  ஒவ்வொருவரும் தங்களுக்கு கீழுள்ளவர்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். ஒரு ஆண் அவன் குடும்பத்திற்கு பொறுப்பாளி.  அவர்கள் விசயத்தில் மறுமை நாளில் அவன் விசாரிக்கப்படுவான்.  (ஸஹீஹ் அல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் மேலும் மற்றவர்களும்)

மேற்கில் வாழும் முஸ்லிம் பெண்கள் ஆண்களின் உடையை அணிவதில் தவறில்லை. ஏனெனில் இது மேற்கத்திய பெண்களின் உடையாகவே ஆகி விட்டது என சிலர் விவாதிக்கலாம். இந்த வாதம் சரியற்றது.  ஏனெனில் முஹம்மது (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்கள் ரஸுல்மார்களுக்கும் இறுதியானவர்கள் என்றும் அல்லாஹ் விதித்து விட்டான். அவன் வேதங்களில் கடைசி இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளிச் செய்யப்பட்டள்ளது. இஸ்லாத்தை மாத்திரமே தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீனாக அவன் தேர்ந்தெடுத்துள்ளான். இஸ்லாம் மனிதர்களின் ஆசைகளுக்கும் கருத்துக்களுக்கும் உட்பட்டதல்ல.  அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத சமூகத்தினரிடையே வாழ்வார்கள் என்று அல்லாஹ்விற்கு தெரியும்.  இருந்தும் ஆண்கள் வித்தியாசமாகவும் பெண்கள் வித்தியாசமாகவும்தான் தோன்ற வேண்டும் என கட்டளையிட்டுள்ளான்.

6 - நிராகரிப்பவர்களின் உடையை ஒத்திருக்கக் கூடாது

அல்லாஹ் கூறுகின்றான்:-

இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக் அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். (45:18)

அறியாமல் இருக்கின்றவர்கள் என்ற சொற்றொடர் முஹம்மது (ஸல்) அவர்களின் தீனை எதிர்க்கும் அனைவரையும் உள்ளடக்குகின்றது. அவர்களின் விருப்பங்கள் என்பது நிராகரிப்பவர்கள் தங்களின் மார்க்கமாக கொண்டிருக்கும் அனைத்து பொய்மையான கொள்கைகளையும் அவர்களின் அபிலாஷைகளையும் குறிக்கின்றது. ஆகவே முஸ்லிம்கள் நிராகரிப்பவர்களின் அபிலாஷைகளை பின்பற்றும் போது அவர்களின் மதத்தை மறைமுகமாக அங்கீகரிக்கின்றார்கள்.

மேன்மைக்குரிய அல்லாஹ் கூறுகின்றான்:-

ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன் அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். (57:16)

சேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள்:-

முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; என்ற சொற்றொடர் நிராகரிப்பவர்களை பொதுவாகப் பின்பற்றுவதை முற்றிலும் தடை செய்கின்றது மேலும் பாவங்கள் செய்வதின் காரணமாக இருதயங்கள் கடினமாகிப் போவதையும் தவிர்க்கின்றது. (இக்திதா ஸிராத்துல் முஸ்தகீம் பக்கம் 43)

இந்த ஆயத்திற்கு இப்னு கதீர் அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்:-

ஆகவே ஈமான் கொண்ட தன் அடியார்கள் நிராகரிப்பவர்களின் செயல்கள் பேச்சுக்கள் ஆகியவற்றை பின்பற்றுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். (தப்ஸீர் அல் குர்ஆன் அல் அதீம் பாகம் 1 பக்கம் 148).

சமூக வாழ்வில் மாத்திரம் நிராகரிப்பவர்களுக்கு மாறுபட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை மாறாக வணக்க வழிபாடுகளிலும் அவர்களுக்கு மாறுபடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். ஆகவே நாம் அல்லாஹ்வின் வாக்குகளை கேட்டுணர்ந்து அவன் தடுத்தவைகளை விட்டும் மிகவும் கவனமாக இருந்திட வேண்டும். நாம் நிராகரிப்பவர்களின் வாழ்க்கை முறையை அனுசரித்தோமெனில் உண்மையில் அவர்களின் இருதயங்களின் தன்மையில் நாமும் பங்கு பெற்றவர்களாக ஆகி விடுவோம். 

7 - படோபடமாக இருக்கக்கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:-

எவர் பகட்டிற்காக இவ்வுலகில் உடையணிகின்றார்களோ அவருக்கு மறுமை நாளில் அல்லாஹ் கேவலம் எனும் ஆடையை அணிவித்து நரகிற்கு அனுப்புவான்.

படோபட உடை என்பது ஒரு மற்றவரிலிருந்து தன்னை பிரித்துக் காட்டிக் கொள்வதற்காக அணியும் விலையுயர்ந்த ஆடையோ அல்லது கவனத்தை கவரும் ஆடையையோ ஆகும். தான் உலகத்தை துறந்து விட்டேன் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது நயவஞ்சகத்தின் காரணமாகவோ சிலர் கனத்த துணிகளை அணிந்து கொள்கின்றனர்.

இப்னு அதீர் அவர்கள் கூறுகின்றார்கள்:-

பகட்டு என்பது நிறங்களுக்கும் பொருந்தும். ஒருவர் கண்ணைக்கவரும் நிற துணிகளை அணியும் போது அவர்கள் மற்றவர்களின் கவனத்தை கவருமளவிற்கு தனித்து தோற்றமளிக்கின்றார்கள். (முஹம்மது அல் ஷவ்க்கானி நய்லுல் அவ்தார் பாகம் 2 பக்கம் 94).

ஜில்பாப் இருக்க வேண்டிய மேற்கூறப்பட்ட முறைகளை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிம் பெண்மணியின் கடமையாகும்.  ஒவ்வொரு முஸ்லிம் மனிதரும் தன்னுடைய மனைவி, மகள், சகோதரி அல்லது அவரைச் சார்ந்த எந்த பெண்ணும் இஸ்லாமிய உடை ஒழுங்கை அனுசரிக்கின்றார்களா என கவனிப்பது அவசியமாகும்.  அல்லாஹ்விற்கு கீழ்படிவதின் மூலமே நாம் வெற்றியடையவும் அவனின் மகிழ்ச்சியை பெறவும் அவனின் கோபத்தை தவிர்க்கவும் முடிவும்.

அல்லாஹ் நம்முடைய ஈமானை வலுப்படுத்தி அவனுக்கும் அவனுடைய திருத்தூதருக்கும் அதிகமதிகம் கீழ்ப்படியச் செய்து நரகத்தின் கொடு நெருப்பிலிருந்து நம்மை காத்திட உதவி செய்வானாக!


முஹர்ரமாத் (திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட பெண்கள்)

மனித இனத்திற்கான அல்லாஹ்வின் தூதுச் செய்தியே இஸ்லாமாகும்.  வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வழி காட்டும் உலகளாவிய செய்தியாகும் அது. அதன் உலகளாகவிய தன்மை கடைசிக்காலம் வரை பொருத்தமானதாக இருந்திட வேண்டும்.

சந்ததிகளை (சந்தேகத்திற்கிடமின்றி) காப்பது இஸ்லாத்தின் பெரும் இலட்சியங்களில் ஒன்றாக இருப்பதாலும், சந்ததிகள் சட்டப்பூர்வமான திருமணத்தின் மூலம் உருவாகுவதாலும் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் ஆரோக்கியமான உறவுகளை காக்கும் வகையில் சில பெண்களை திருமணம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளது.  இவைகளும் மற்ற கட்டளைகளும் இஸ்லாத்தை மற்றவைகளிலிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு எக்காலத்திலும் எவ்விடத்திலும் பின்பற்றக்கூடிய ஒன்றாகவும் அதை ஆக்குகின்றது.

மேன்மைக்குரிய அல்லாஹ் திருமணம் செய்ய தடுக்கப்பட்ட அனைவரையுமே ஒரே ஒரு ஆயத்தில் குறிப்பாக சுட்டிக்காட்டுகின்றான்:-

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். (4:23)

ஆண் திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் யார் யார் என மேலுள்ள ஆயத்து தெளிவாக கூறுகின்றது.  இந்த ஆயத்திலிருந்து பின்வருமாறு விளங்கலாம்:-

        1 - நிரந்தரமாக தடுக்கப்பட்டவர்கள்.

        2 - தற்காலிகமாக தடுக்கப்பட்டவர்கள்.

நிரந்தரமாக தடுக்கப்பட்டவர்களில் கீழ்கண்டவர்கள் வருகின்றனர்:-

அ . உறவின் முறையால் நிரந்தரமாக தடுக்கப்பட்வர்கள் நால்வர்:-

1 - தாயார், பாட்டிமார்கள் மற்றும் அவர்களின் ஏறு வரிசையிலுள்ளவர்கள்.

2 - புதல்விகள் மற்றும் அவர்களின் புதல்விகள் மகன்களின் புதல்விகள் அவர்களின் பேத்திகள் மற்றும் அவர்களின் வாரிசுகள்.

3 - சகோதரிகள், அவர்களின் புதல்விகள் அவர்கள் சகோதரர்களின் புதல்விகள்.

4 - தந்தை மற்றும் தாயின் சகோதரிகள்.

ஆ - திருமண உறவினால் நிரந்தமாக தடுக்கப்பட்வர்கள் நால்வராவர்:-

1 - மனைவியின் தாயார் மற்றும் பாட்டிகள்.

2 - மனைவியின் புதல்விகள் மற்றும் பேத்திகள்.

3 - தந்தை மற்றும் தாத்தாக்களின் மனைவிகள்.

4 - மருமகள்கள், மகனின் மனைவிகள், பேரன்களின் மனைவிகள் மற்றும் மகள் வழி பேரன்களின் மனைவிகள். 

இ - பால்குடி உறவால் நிரந்தரமாக தடுக்கபட்டவர்கள் எட்டு வகையினர்:-

     1. பால்குடித்தாய், அவர்களின் தாய்கள் மற்றும் பாட்டிகள்.

     2. பால்குடிப் புதல்விகள் மற்றும் பால்குடி மகன்களின் பேத்திகள்.

     3. பால்குடி சகோதரி சகோதரர்களின் புதல்விகள் அவர்களின் புதல்விகள் மற்றும் பேத்திகள்.

     4. மனைவியின் பால்குடித் தாயார்கள் மற்றும் அவர்களின் பாட்டிகள்.

     5. மனைவியின் பால்குடிப் புதல்விகள் மற்றும் அவளுடைய பால்குடி மகன்களின் புதல்விகள்.

     6. பால்குடித் தந்தையின் மனைவிகள் மற்றும் அவருடைய தாத்தாக்களின் மனைவிகள்.

     7. பால்குடி மகன்களின் மனைவிகள் மற்றும் அவர்கள் பேரன்களின் மனைவிகள். 

ஈ - தற்காலிகமாக தடுக்கப்பட்ட பெண்கள் எட்டு வகையினர்.

     1. (அ) திருமணமான அல்லது இத்தாவில் இருக்கும் பெண்.

(ஆ) கருவுற்றிருக்கும் பெண் - அவள் முறையான உறவின் மூலமோ அல்லது முறையற்ற உறவின் மூலமோ எப்படி கருவுற்றிருந்தாலும்.

     2. இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட மார்க்கத்தை சாராத (யூதரோ அல்லது கிறிஸ்தவரோ அல்லாத) நிராகரிக்கும், இணை வைக்கும்., இறை மறுக்கும், கம்யூனிச, புத்த, ஹிந்து, சீக்கிய, மதம் மாறிய, ஷிய, காதியானிய பெண்கள் அல்லது அவர்கள் போன்றவர்கள்.

     3. மீட்ட முடியாத மண விலக்கு செய்யப்பட்ட பெண் அவளுடைய முந்திய கணவரை மணக்க வேண்டுமானால், அப் பெண்ணை வேறு ஒருவர் மணந்து உடலுறவு கொண்ட பிறகு பின்பு அவரும் மண விலக்கு செய்த பிறகுதான் அவள் முந்திய கணவரை மணக்க முடியும்.

     4. ஏற்கனவே நான்கு மனைவிகள் உள்ள ஆணை மணப்பது.

     5. இரண்டு சகோதரிகளை, ஒரு பெண்ணையும் அவளின் சின்னம்மா மற்றும் மாமியையும், அவளின் பெற்றோர்களின் சின்னம்மா மற்றும் மாமியரை ஒரே நேரத்தில் மணத்தல்.

     6. சுதந்திர பெண்ணை மணந்த ஒரு ஆணை அடிமைப் பெண் மணப்பது.

     7. இஹ்ராமிலுள்ள பெண்ணை மணப்பது.

     8. ஒரு பெண் அடிமை தன் எஜமானனையோ அல்லது ஒரு ஆண் அடிமை தன் எஜமானியையோ மணப்பது.

ஒரு முஸ்லிம் நான்கு மனைவிகள் வரை, அவர்களின் பராமரிப்பு, உடை, உணவு, இருப்பிடம், தன் நேரம் ஆகியவற்றில் நீதி செலுத்தினால், திருமணம் செய்யலாம். அவன் நீதி செலுத்த முடியாது என அஞ்சினால் ஒன்றுக்கு மேற்பட்டு திருமணம் செய்வது ஹராம்.

கணவன் தொழாதவனாக இருந்தால் அவனோடு சேர்ந்திருப்பது மனைவிக்கு ஹராம். தொழுகையில் பாராமுகமாக இருத்தல் குப்ர் அல்லது நிராகரிப்பாகும். முஸ்லிம் பெண்ணிற்கு பாதுகாவலனாக ஒரு நிராகரிப்பவன் இருக்க முடியாது| என சட்டத்தீர்ப்பு கூறுகின்றது.

 

நிக்காஹ் பற்றிய கையேடு (திருமணம்)

முறையற்ற நிக்காஹ்:

1- நிக்காஹ் அல் முஅத்தா அல்லது இச்சைக்காக வேண்டி மாத்திரம் செய்யும் திருமணம். அது ஷதற்காலிக திருமணம் என்றும் அழைக்கப்படுகின்றது. அது வாய்வழி ஒப்பந்தந்தத்தின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, அதை சட்டவிரோதமென அறிவித்துள்ளார்கள்: இறுதி நாள் வரை அல்லாஹ் அதை தடுத்து விட்டான்.

ஒரு மணி நேரத்திற்கோ, ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒரு மாதமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ நீடிக்கும் இந்த வகையான திருமணம் அந்த காலக்கெடு நிறைவடைந்தவுடன் தானகவே முடிந்து விடுகின்றது. இந்த வகையான திருமணம் முறையற்றதும் சட்ட விரோதமானதுமாகும் ஏனெனில் இது பெண்ணை விபச்சாரி போன்றாக்கி விடுகின்றது. இத்தகைய முறையற்ற உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளையும் அது பாதித்து விடும். அவர்கள் வளரக்கூடிய பாதுகாப்பான வீடோ அல்லது அவர்கள் அறிந்த தந்தையோ இல்லாதவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.

முஅத்தா திருமணத்தின் இலட்சியம் இச்சையை நிறைவேற்றுதானே தவிர தங்களின் வாரிசுகளை உருவாக்குவதற்காக அல்ல. அது சட்ட விரோதமானது எனவும் முறையற்றது எனவும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த அனைத்து மத்ஹபுகளாலும் ஏகோபித்து கண்டனம் செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, முஅத்தா திருமணத்தை தடை செய்ததாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அதை கடைப்பிடித்து வரும் ஒரே பிரிவு ஷியாக்கள்தான்.  அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாவைச் சார்ந்தவர்களல்ல.

முஅத்தா நிக்காஹ் என்பது விபச்சாரத்தின் மற்றொரு வடிவமே தவிர வேறல்ல. இந்த வகையான திருமணத்தை மேற் கொண்ட பெண்கள் விபச்சாரிகளைப் போன்றுதான் நடத்தப்படுகின்றனர். அல்லாஹ்விற்கு அஞ்சி தன் கற்பை காக்கும் முஸ்லிம் பெண்மணி இந்த உண்மையை அறிந்து, பகிரங்க விபச்சாரத்திற்கு அழைக்கும் ஷைத்தானின் இந்த சூழ்ச்சி பற்றி தன் மற்ற மார்க்கச் சகோதரிகளுக்கு எச்சரிக்கை கொடுத்திட வேண்டும்.

2- நிக்காஹ் அஸ் ஸிகார்: தான் என் பெண்ணை உனக்குத் திருமணம் செய்து கொடுப்பேன். எந்த மஹரும் கொடுக்க வேண்டியதில்லை. அது போல் நீ உன் பொருப்பிலுள்ள பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும். எந்த மஹரும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின் தன் பொருப்பிலுள்ள ஒரு பெண்ணை மற்றவருக்கு திருமணம் செய்து கொடுத்தல். இந்த இரண்டு திருமணமுமே செல்லாததாகும். ஆனால் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏமாற்றும் எந்த எண்ணமுமில்லாமல் மஹர் நிர்ணயிக்கப்பட்டால் அது கூடும். அந்த இரு பெண்களில் ஒரே ஒரு பெண்ணுக்கு மாத்திரம் மஹர் நிர்ணயிக்கப்பட்டால் அந்த ஒரு பெண்ணின் திருமணம் மாத்திரமே கூடும்.

3- நிக்காஹ் அல் முஹல்லில்: மும்முறை மண விலக்கு செய்யப்பட்ட பெண்ணை, அவளுடைய முன் கணவன் அவளை மணப்பதற்குரிய சட்ட தடையை நீக்குவதற்காக, மண முடித்தவுடன் மண விலக்கு செய்வதாக நிபந்தனையுடன் திருமணம் முடிப்பது. அல்லாஹ் கூறுகின்றான்:

மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல.(2:230)

அவளுடைய முதல் கணவன் அவளை மணப்பதை சட்டபூர்வமாக ஆக்குவதற்காக புதிய கணவன் அவளை மணந்தாலோ அல்லது அவர்கள் அத்தகைய ஏற்பாட்டை செய்தாலோ அந்த திருமணம் செல்லாது மேலும் முதல் கணவன் அவளை மணப்பதற்கு தடுக்கப்பட்டவளாகவே அவள் தொடர்வாள்.  நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, இது பற்றி கூறினார்கள்:- முஹல்லிலையும் (சட்டபூர்வமாக ஆக்குவதற்காக திருமணம் செய்கிறவன்) முஹல்லல் லஹுவையும் (யாருக்காக திருமணம் செய்யப்படுகிறதோ) அல்லாஹ் சபிக்கிறான். (அஹ்மத், அபூதாவூது, திர்மிதி மேலும் மற்றவர்கள்).

அத்தகைய திருமணத்தை சஹாபாக்கள் முறையற்ற உறவு (விபச்சாரம்) என குறிப்பிட்டுள்ளனர். மூன்று முறை மணவிலக்கு செய்யப்பட்ட பெண் முதல் கணவனை மணப்பதற்கு முன் வேறொருவரை மணக்க வேண்டும். அந்த திருமணம்:-

1. உண்மையான திருமண ஒப்பந்தமாக இருந்திட வேண்டும்.

2. இந்த திருமணம் இரண்டாவது கணவனின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

3. அப்பெண்ணை மண விலக்கு செய்வதற்கு முன் இரண்டாவது கணவன் அவளுடன் உடலுறவு கொண்டிருக்க வேண்டும். உடலுறவிற்குப்பின் அப்பெண் அந்த இரண்டாவது கணவனிடம் தான் முதல் கணவனிடம் திரும்பும் பொருட்டு தன்னை மண விலக்கு செய்ய வேண்டும் என்று கோருவதில் தவறில்லை.  அப்படியான சூழ்நிலையில் அவளின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டுமென புதிய கணவனுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:-

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து  விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. (2:232)

4 - நிராகரிப்பவரைத் திருமணம் செய்வது.

முஸ்லிம் அல்லாதவரை, அவர் இணை வைப்பவரோ, கிறிஸ்துவரோ அல்லது யூதரோ யாராக இருப்பினும் அவரை திருமணம் செய்வது ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு ஆகுமானதல்ல. அத்தகைய திருமணம் நடக்குமாயின் அது செல்லாததாகும்.  அத்தகைய திருமணம் கட்டாயம் குலைக்கப்பட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி நிராகரிப்பவரின் பொறுப்பில் இருப்பது ஆகுமானதல்ல.

இது போன்ற எத்தகைய திருமணமும் முறையற்ற உறவாக கருதப்படும் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

5 - கிறிஸ்துவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணத்தல்

கிறிஸ்தவ பெண்ணையோ அல்லது யூதப்பெண்ணையோ திருமணம் செய்வது சட்ட பூர்வமானதுதான் என்றாலும், அத்தகைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளை கிறிஸ்துவ தாயார் கவனிக்கும் நிலை ஏற்படுவதால், அவ்வாறு செய்ய ஒரு போதும் பரிந்துரைக்கப்படவோ அல்லது ஊக்குவிக்கப்படவோ செய்யப்படுவதில்லை.  அக்குழந்தைகள் தங்கள் தாயாரிடமிருந்து வாரிசாக எதையும் பெறுவதோ அல்லது தாயார் அவர்களிடமிருந்து எதையும் வாரிசாகவோ பெறுவதும் கூடாது. அது போன்று தன்னுடைய முஸ்லிம் கணவரிடமிருந்து அவள் எதையும் வாரிசாகப் பெறவோ அல்லது அவள் சொத்திலிருந்து கணவர் வாரிசாகப் பெறவோ கூடாது.

மஹர், பராமரிப்பு, மண விலக்கு, இத்தா போன்ற காரியங்களில் முஸ்லிம் பெண்ணிற்குள்ள சட்டம்தான் நிராகரிக்கும் (யூத கிறிஸ்தவ) பெண்களுக்கும்.  கணவனிற்கு பிறந்த பிள்ளை மனைவியின் பிள்ளையை மணக்கக்கூடாது எனும் சட்டம் நிராகரிக்கும் பெண்ணின் பிள்ளைக்கும் பொருந்தும்.

நிராகரிக்கும் ஆண் பெண் தம்பதி ஒரே நேரத்தில் இஸ்லாத்தை தழுவினால் அவர்களின் திருமணம் தொடர்ந்து செல்லுபடியாகும் ஆனால் நிராகரிக்கும் பெண் அவளுடைய நிராகரிக்கும் கணவனுடன் வீடு கூடுவதற்கு முன் இஸ்லாத்தை தழுவினால் அவர்களுடைய திருமணம் செல்லுபடியாகாது.  ஏனெனில் ஏற்கனவே அவள் ஒரு முஸ்லிமாக ஆகி விட்டதால் நிராகரிப்பவரை திருமணம் செய்வது சட்ட பூர்வமானதாகாது.

திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் மாத்திரம் அல்ல மாறாக அல்லாஹ்வின் வேதத்திற்கும் அவன் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் இணங்க ஆணையும் பெண்ணையும் இணைக்கும் ஒரு வணக்க வழிபாடாகும்.

திருமணம் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரும் கொடையாகும். அவன் கூறுகின்றான்:- பூமியில் என்னுடைய கலீபாவை உண்டாக்குவேன் என்று உம்முடைய ரப்பு வானவர்களிடம் சொன்னதை நினைத்துப் பாருங்கள்

மனித இனம் பல்கிப் பெருகி இறைவன் எதற்காக அவர்களை படைத்துள்ளானோ அந்த இலட்சியம் நிறைவேறுவதற்காக அல்லாஹ் மனித இனத்திற்கு திருமணத்தை ஆகுமானதாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:- மனிதர்களையும் ஜின்னையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன்.

திருமணம் ஒன்றுதான் சந்ததி விருத்திக்கான சட்டபூர்வமான வழியாக இருப்பதால் அதன் முக்கியத்துவத்தை கருதி இஸ்லாம் கணவன் மனைவி ஆகியோருக்கிடையே உள்ள உறவிற்கு முறைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர்களுக்கிடையே உள்ள தொடர்பின் விளைவு அவர்களிருவரோடு மாத்திரம் நின்று விடாமல் அவர்களின் சந்ததிகள் மூலமாக முழு சமூகத்திலுமே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சட்ட நாயகன் திருமணத்திற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை வலியுறுத்திக் கூறியுள்ளான். நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, கூறுகின்றார்கள்:-

1. ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகின்றாள்:  செல்வம், அழகு, குடும்ப பராம்பரியம், மார்க்கம் ஆகியவை. ஆகவே மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள். (முஸ்லிம், அபூதாவூது மேலும் மற்றவர்களும்)

2. எவருடைய மார்க்கப்பற்றை குறித்து நீங்கள் திருப்தியடைகின்றீர்களோ அவர் உங்கள் மகளை மணக்க விரும்பினால்; அதற்கு அனுமதி அளியுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானில் பூமியில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும். (இப்னுமாஜா, திர்மிதி)

3. இணக்கமான, பிள்ளைகள் அதிகம் பெறக்கூடிய பெண்ணை திருமணம் செய்யுங்கள்.  ஏனெனில் கியாமத்து நாளில் மற்ற சமூகங்களுக்கிடையில் என் உம்மத்துக்கள் எண்ணிக்கையை கண்டு நான் பெருமிதம் அடைவேன். (அபூதாவூது, இப்னுமாஜா)

ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதிர்பார்ப்பதை நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, முதல் ஹதீதில் சுட்டிக்காட்டி மற்றவைகளுக்கு முன்னதாக ஈமானிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்கள்.

ஒரு பெண்ணை அவள் அழகுக்காக மாத்திரம் திருமணம் செய்வதை குறித்து அந்த ஹதீது எச்சரிக்கை செய்கின்றது. ஏனெனில் உடல் இச்சைமாத்திரம் அங்கு குறியாக கொள்ளப்படுகின்றது. அது போல் செல்வத்திற்கு மாத்திரம் திருமணம் செய்வது குறித்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது. செல்வம் தீர்ந்து விட்டால் அவர்களின் உறவை பலப்படுப்படுத்துவதற்கு அங்கு எதுவும் இருக்காது. அல்லாஹ் கூறுகின்றான்:-

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

இனவிருத்திக்கு  ----------- ஆகவே தான் மணக்கப் போகும் பெண் -----------

கடைசி ஹதீது இறையச்சமற்ற மனிதனை திருமணம் செய்வது குறித்து கடும் எச்சரிக்கை செய்கின்றது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில் பூமியில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறியதை விளங்க இயலாத சிலர் பூமியில் குழப்பம் உண்டாகுவதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என கேட்பர்.

சிலர் இருவரை இணைக்கும் ஒன்றுதான் திருமணம் என்று மாத்திரம் எண்ணுகின்றனர்.  சமூகத்தில் அது பொதுவாக ஏற்படுத்தும் விளைவுகளை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பெண்ணின் பொறுப்பாளர் இறையச்சமற்ற ஒருவருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் போது அத்தகைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவர்கள் போன்று வளர்க்கப்படுவர் மேலும் தந்தையைப் போன்றே இறையச்சமற்று இருப்பர்.  அவர்களின் எதிர்காலச் சந்ததியினரும் அவ்வாறே இருக்கும்.  இவ்வாறு தொடர் சங்கிலி போல் விளைவுகள் ஏற்பட்டு சமூகத்தில் இறையச்சமற்ற ஆட்கள் பெருகுவார்கள்.  இதுதான் உண்மையான குழப்பமாகும்.  மனிதன் அல்லாஹ்விற்கு மாறு செய்வதுதான் உண்மையான குழப்பமாகும்.  எவரேனும் தன் மகளை இறையச்சமற்றவனுக்கு திருமணம் செய்து வைத்தால் பூமியில் குழப்பத்தை வளர்ப்பதில் அவரும் பங்கெடுத்தவர் போன்றவராவார்.

மனித இனம் பல்கிப் பெருவதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு வணக்க வழிபாடே திருமணம் என்பதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:- மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. (4:1)

தம்பதிகளுக்கிடையேயான அன்பு மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யும் செய்யும் வகையில் இஸ்லாம் திருமண வாழ்வை ஒழுங்குபடுத்தி அதற்கேயான ஒரு புனிதத்தன்மையை உருவாக்குகின்றது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, இளைஞர்களை திருமணம் செய்யுமாறு ஆர்வமூட்டி கூறுகின்றார்கள்:-

இளைஞர்களே! உங்களில் எவரெவருக்கு திருமணம் செய்ய வசதி உள்ளதோ அவர் திருமணம் செய்யட்டும்.  ஏனெனில் அது பார்வையை தாழ்த்தி (பார்வையை தாழ்த்துகின்றது என்பது முறையற்ற பாலுறவில் ஈடுபடுவதை தடுக்கின்றது என்பதாகும்.) ஒழுக்கத்தை காக்கின்றது. எவருக்கு வசதியில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.  ஏனெனில் நோன்பு இச்சையை தனிக்கின்றது. (புஹாரி, முஸ்லிம் மற்றும் பலர்கள்.

திருமணத்தின் இலட்சியம்:

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில்ழூ உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

ழூ-அவனுடைய அத்தாட்சிகளில் என்ற சொற்றொடொர் எங்கெல்லாம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் அது அல்லாஹ் இருக்கிறான் என்பதையும் அவன்தான் அனைத்தையும் படைத்தான் என்பதற்கான அத்தாட்சியையே குறிக்கின்றது.

தன்னைச் சார்ந்த பெண் மக்களுக்கு இறையச்சமிக்க ஒரு ஆணை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமானது அவ்வளவு முக்கியமானது மண முடிக்கும் ஆண் மார்க்கப்பற்று மிக்க பெண்ணை தேர்ந்தெடுப்பதும். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, கூறுகின்றார்கள்:- ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகின்றாள்:  செல்வம், அழகு, குடும்ப பராம்பரியம், மார்க்கம் ஆகியவை.  ஆகவே மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள். (முஸ்லிம், அபூதாவூது மேலும் மற்றவர்களும்)

மேலும் அவர்கள் கூறுகின்றார்கள்: - எவருடைய மார்க்கப்பற்றை குறித்து நீங்கள் திருப்தியடைகின்றீர்களோ அவர் உங்கள் மகளை மணக்க விரும்பினால்; அதற்கு அனுமதி அளியுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானில் பூமியில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும். (இப்னுமாஜா, திர்மிதீ)

தன் பெண்ணை இறையச்சமற்ற ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுப்பதால் ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, எச்சரித்த குழப்பம் என்னவெனில் அத்தகைய மனிதன் தன் குழந்தைகளை நல்ல முஸ்லிம்களாக வளர்க்க மாட்டான் அதனால் இறையச்சமற்றவர்கள் இப்பூமியில் பெருகிவிடுவார்கள் என்பதேயாகும்.

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, நல்ல மனைவியை இவ்வாறு விவரிக்கின்றார்கள்: நீ அவளை நோக்கும் போது உன்னை மகிழ்விக்கின்றாள், நீ அவளுக்கு கட்டளையிடும் போது கீழ்ப்படிகின்றாள், அல்லாஹ்வின் பெயர் கூறி எதையும் நீ வேண்டும் போது அதை அவள் செய்கின்றாள், நீ வீட்டை விட்டு வெளியே போயிருக்கும் போது அவளையும் உன் சொத்துக்களையும் காக்கின்றாள். (அபூதாவூது, இப்னுமாஜா)

பொருத்தமான துணையை தேடுவது:

தன்னைச் சார்ந்த பெண்களுக்கு வாய்மையும், நற்குணமும், நல்ல தோற்றமுமுள்ள துணையை தேர்ந்தெடுப்பது பொறுப்பாளரின் கடமையாகும். அலி (ரலி) அவர்களின் மகனான ஹஸன (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து என் மகளிற்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டார். அதற்கு அவர்: அல்லாஹ்விற்கு அஞ்சுபவனிற்கு அவளை திருமணம் செய்து கொடுப்பீராக. அவளை அவர் விரும்பினால் அவளை அவர் கண்ணியப்படுத்துவார். அவளை அவர் வெறுத்தால, அவளை திட்டவோ அல்லது மோசமாக நடத்தவோ மாட்டார்.

திருமணம் செய்யப்போகும் பெண்ணை பார்ப்பது:

ஒரு ஆண் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை பார்ப்பது சட்டபூர்வமானதும் பொருத்தமானதும் ஆகும்.  தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை பார்க்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, அறிவுறுத்தியுள்ளார்கள்..

தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை பார்ப்பது என்பது அவளை தனிமையில் சந்திப்பது என்பதல்ல. தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை மஹர்ரத்தின் துணையில்லாது சந்திப்பது சட்டவிரோதமானதும் தடுக்கப்பட்டதும் ஆகும். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, கூறுகின்றார்கள்: எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றாரோ அவர் ஒரு பெண்ணுடன் தனித்து இருக்காதிருப்பாராக. அவள் மஹர்ரத்துடன் இருந்தால் தவிர. அவ்வாறில்லையெனில் ஷைத்தான் அவர்களுடன் இருப்பான். (புஹாரி, முஸ்லிம் மேலும் மற்றவர்களும்.)

இந்த தடுப்பை ஒரு சிலர் இலேசாக எடுத்துக் கொண்டு திருமணம் செய்யப் போகும் பையனை பெண்ணை தனியாக சந்திக்க அனுமதிக்கின்றனர். இதன் விளையாக முறையற்ற காரியம் வளர்கின்றது. அந்தப் பையன் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அவளை மணப்பதை விட்டு விட நேரிடலாம். ஏனெனில் தனக்கு இணங்கிய அவளின் மேல் சந்தேகம் வந்து அவளை நம்ப மாட்டான். பெண்தான் விளைவை அனுபவிக்க வேண்டும்.

திருமணத்திற்கான நிபந்தனைகள்:

ஒரு ஆரோக்கிய முஸ்லிம் குடும்பத்தை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சில திருமண நிபந்தனைகள் உள்ளன. அவைகள் :-

1 - பொறுப்பாளரின் சம்மதம். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, பொறுப்பாளரின் சம்மதமின்றி நடக்கும் திருமணம் செல்லாது என கூறினார்கள்.

2 - பெண்ணின் சம்மதம் அவளின் பொருப்பாளர் திருமணத்தை பேசி முடிப்பதற்கு முன் அவளின் கருத்தையோ அல்லது சம்மதத்தையோ கேட்க வேண்டும். அவளின் சம்மதமின்றி மணமுடித்துக் கொடுப்பது ஆகுமானதல்ல. பெண்ணின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்ட எந்த திருமண ஒப்பந்தமும் செல்லுபடியாகாது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, அவர்களிடம் ஒரு பெண் வந்து என் தந்தையார் என் விருப்பத்திற்கு மாறாக அவரின் சகோதரியின் மகனிற்கு என்னை திருமணம் செய்து வைத்து விட்டார் என கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, அத்திருமணத்தை ரத்து செய்யும் உரிமையை அவளுக்கு அளித்தார்கள்.  அதற்கு அவள், என் தந்தையார் செய்ததை நான் பொருந்திக்கொண்டேன். இருப்பினும்,  அவ்வாறு செய்வதற்கு தந்தைக்கு உரிமையில்லை என்பதை மற்ற பெண்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று அப்பெண் கூறினாள்.

3 - திருமணம் அந்த இருவரை மாத்திரம் பாதிக்காமல் குடும்பம் முழுவதையும் பாதிப்பதாலும், பொதுவாக பெண்களுக்கு ஆண்களைப் போன்று வாழ்க்கையில் அனுபவம் இல்லாததாலும்தான், பெண்ணிற்கு தகுந்த பொருத்தமான துணையை தேடுவதற்காக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

4 - நல்ல இறையச்சமிக்க ஆணை திருமணம் செய்வதை விட்டும் பெண்ணை பொறுப்பாளர் தடுப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்:- அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்;. (2:232).

5 - ஒரு பொறுத்தமான துணையை எந்தவித தகுந்த காரணமுமின்றி ஒரு பொறுப்பாளர் தடுத்தால், அவர் நீதிபதியின் முன் தன் பொறுப்பாளர் அந்தஸ்தை இழப்பார். அந்நீதிபதி அத்திருமணத்தை நிறைவேற்றி வைப்பார்.  பொறுப்பாளர் அவ்வாறு தடுப்பது அநீதியாகும்.

6 - நிக்காஹ் ஒப்பந்தம் செல்லுபடி ஆவதற்கு சாட்சிகள் தவிர்க்கமுடியாத தேவையாகும். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, கூறுகின்றார்கள்: - பெண்ணின் பொறுப்பாளரின் சம்மதமும் மேலும் இரண்டு சாட்சிகளுமின்றி எந்த திருமணமும் செல்லுபடியாகாது. (புஹாரி)

7 -  திருமணத்தை விளம்பரப்படுத்துவது: நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, கூறுகின்றார்கள். திருமணத்தை விளம்பரப்படுத்துங்கள்.  அது நடக்கும் போது தப் அடியுங்கள்.

ஒருவர் ஒரு பெண்ணிற்கு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தால், அதை கைவிடுவதற்கு முன், வேறொருவர் கோரிக்கை வைப்பது ஆகுமானதல்ல. ஒரு பெண் இத்தாவிலிருக்கும் போது அவளிடம் பகிரங்கமாக திருமண கோரிக்கை வைப்பதும் ஆகுமானதல்ல. ஆயினும், அவர்களிடம் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது கூடும்.


மஹர் (மணக்கொடை)

கணவனிடமிருந்து மனைவிக்கு சேரவேண்டிய குறிப்பிட்ட சில உரிமைகள் உள்ளன.  அவைகளில் சில பொருளாதார ரீதியான மற்றவைகள் வேறு வகையானவைகள்.  பொருளாதார உரிமையைப் பொறுத்த வரையில் அது மஹராகும். அரபியில் அது ஸிதக் என்று அழைக்கப்படுகின்றது. உண்மை என்ற மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும் இது. மனைவிக்கான கணவனின் உண்மையான அன்பை மஹர் வெளிப்படுத்துவதால் அது ஸிதக் என்று அழைக்கப்படுகிறர்.

திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றியவுடனோ அல்லது உடலுறவிற்குப் பின்போ அல்லது பால்குடி உறவென அறிந்து திருமண ஒப்பந்தத்தை முறிக்க வேண்டிய வந்தாலோ அல்லது திருமணத்திற்கு சாட்சியாக இருந்தவர்கள் தங்களின் சாட்சியை பின் வாங்கி விட்டாலுமோ மஹர் கொடுக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில் பெண்கள் தவறாகவும் கேவலமான முறையிலும் நடத்ததப்பட்டதிற்கு எதிராக அவளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக மஹர் கொடுப்பதை இஸ்லாம் சட்டப்பூர்வமாக்கியுள்ளது. அது மனைவிக்குரிய தனிப்பட்ட உரிமையாகும். அவளின் பொறுப்பாளருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை.

திருமண பந்தம் தொடராவிடில் அதன் இலட்சியம் நிறைவேற்றப்பட முடியாது. மஹர் இல்லையேல் அந்த பந்தத்தை நிலைக்கச் செய்ய முடியாது. ஏனெனில் அவர்களிடையே ஏற்படும் பிணக்கு அல்லது கடினத்தன்மை ஆகியவை சில நேரங்களில் மண விலக்கில் போய் முடியும். கணவன் சிறிய காரணத்திற்கெல்லாம் மண விலக்கு செய்வதிலிருந்து இந்த மஹரானது அவனைத் தடுக்கின்றது. கணவன் மஹரை கொடுக்கவில்லையெனில் அவன் சிந்திக்காமல் முடிவெடுத்து விடுவான். அப்பொழுது திருமணத்தின் இலட்சியம் நிறைவேறாமல் போய் விடும்.

மேற்கத்திய நாடுகளிலும் ஏன் சில முஸ்லிம் நாடுகளிலுமுள்ள பெண்கள் தாங்களவே வீட்டிற்குத் தேவையான பர்னீச்சர்கள் போன்றவற்றை பொருட்களாக வரதட்சணை கொடுக்க வேண்டியதிருக்கின்றது. அவ்வாறு கொடுத்து திருமணம் செய்ய இயலாத பெண்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டு பணம் அதற்கான பணம் சம்பாதிக்க வேண்டியதிருக்கின்றது.

மஹரின் சட்டம்:

மஹர் என்பது நிபந்தனையோ அல்லது திருமண ஒப்பந்தத்தின் தள்ளமுடியாத ஒரு பாகமோ அல்ல.  ஆனாலும், சரியான திருமணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும் அது.  மஹர் கொடுக்க வேண்டியது கணவனின் கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான்: -நீங்கள் அவர்களுக்கு தங்கக் குவியலையே மஹராக கொடுத்திருந்தாலும் அதில் சிறிதளவு கூட திரும்ப வாங்காதீர்கள்.  மஹர் பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுக்கப்படலாம்.

எப்பொழுது மஹர் கொடுக்க வேண்டும்?

உடலுறவு ஏற்படுவதினாலோ அல்லது மரணம் சம்பவிப்பதனாலோ மஹர் கடமையாகி விடுகின்றது என சட்ட வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தம்பதிகள் தனித்திருந்தால் கூட அது கடமையாகி விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, கூறினார்கள்:-

தன் பொருப்பாளரின் அனுமதியின்றி மணக்கும் பெண்ணின் திருமணம் செல்லாது செல்லாது செல்லாது.

கணவன் அவளிடம் உடலுறவு கொண்டு விட்டால், அவள் சட்டப்பூர்வமானளாக ஆகி விட்டதால், மஹர் பெறுவதற்கு உரிமையாகி விடுகின்றாள்.

தம்பதிகளில் எவரேனும் ஒருவர் உடலுறவிற்கு முன் மரணமாகி விடும் போதும். அந்நிலையில் பெண் முழு மஹரிற்கு உரிமையாகி விடுகின்றாள்.  மஹரை நிர்ணயிக்கும் முன் ஆண் மரணமாகி விட்டால், அவள் அந்தஸ்திலுள்ள பெண்கள் சாதாரணமாக எவ்வளவு மஹர் வாங்குவாளோ அவ்வளவு மஹர் அவளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

உடலுறவிற்கு முன் மணவிலக்கு ஏற்பட்டு விட்டால் பெண் ஒப்புக்கொள்ளப்பட்ட மஹரில் பாதிக்கு உரிமையாகி விடுகின்றாள்.  அல்லாஹ் கூறுகின்றான்:- ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி;. (2:232)

மஹர் கொடுப்பது நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, அவர்களின் காலத்திலும் அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களைத் தொடாந்தவர்கள் ஆகியோரின் காலத்திலும் நடைமுறையில் இருந்து வந்தது.  மஹர் பொருட்களாகவும் கொடுக்கப்படலாம்.  மனைவிக்கு திருக்குர்ஆனை கற்றுக் கொடுப்பது கூட மஹராகலாம்.  அல்லாஹ் கூறுகின்றான்: - அவர்களுக்குரிய மஹரை மணமுவந்து கொடுத்து விடுங்கள்.(4:4).

தம்பதிகளிடையே உடலுறவு ஏற்பட்ட உடனேயோ அல்லது அவர்கள் தங்கு தடையற்ற தனிமையில் இருந்தால் மஹர் கொடுக்க வேண்யாதாகின்றது. உடலுறவு ஏற்படாவிட்டாலும், தம்பதிகள் இருவரில் ஒருவர் இறந்து விட்டாலும் மஹர் கொடுக்க வேண்டியது அவசியம்.

இஸ்லாம் பெண்ணை கண்ணியப்படுத்தியுள்ளது அவளுக்கு சொத்துரிமையை வழங்கியுள்ளது மேலும் அவளின் சட்டபூர்வ உரிமையாக மஹர் கொடுப்பதை ஆண்களுக்கு கடமையாக்கியுள்ளது. அவளின் அனுமதியில்லாமல் மஹர் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பாகத்தையோ எடுப்பது ஆகுமானதல்ல.

குறைந்த தொகையையே மஹராக கேட்கும்படியும் அந்த மஹரை திருமண ஒப்பந்தத்தில் குறிப்பிடும்படியும் பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றது. மஹர் இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்ற வரையறை இல்லாவிட்டாலும், குறைந்த அளவு மஹரை ஏற்றும் கொள்ளும் பெண்ணில் நிறைய பரக்கத் உள்ளது.

ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு மஹர் முழுவதையுமோ அல்லது அதன் ஒரு பகுதியை உடனடியாகவோ அல்லது பிற்பாடோ அல்லது அதன் ஒரு பகுதியை எதிர்காலத்திலோ கொடுப்பது ஆகுமானது. ஆனாலும் மணவிலக்கின் போதோ அல்லது கணவனின் இறப்பின் போதோ மஹரை கட்டாயப்படுத்தி கேட்கலாம்.

மஹர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உடலுறவிற்கு முன்போ அல்லது தம்பதிகள் தனியாக இருப்பதற்கு முன்போ மண விலக்கு ஏற்பட்டு விட்டால், பெண் பாதி மஹருக்கு, அவளின் பொறுப்பாளர் அதை விட்டுக் கொடுத்தால் ஒழிய, உரிமையாளியாக ஆகி விடுகின்றாள்.

மஹரை விட்டுவிடுதல்:

கீழ் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மஹரை விட்டுவிட வேண்டியது வருகின்றது.

1 - இருவரில் யாராவது ஒருவர் உடலுறவிற்கு முன், மார்க்கத்தை துறப்பது போன்ற காரணங்களால், பிரிந்து விடும்போதோ அல்லது  கணவனிற்கு குறிப்பிட்ட குறைபாடு ஏதேனும் இருப்பதை மனைவி கண்டு பிடித்தாலோ அல்லது கணவன் பொறுத்தமற்றவனாக இருப்பதால் பெண்ணின் பொறுப்பாளர் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்தாலோ. இது போன்ற சூழ்நிலைகளில் மஹரை விட்டு விடலாம். ஏனெனில் மண விலக்கு இல்லாமல் பிரிந்து விடுவது திருமண ஒப்பந்தத்தை செல்லாததாக ஆக்கி விடுகின்றது.

2- குலா

3- கணவனிற்கு மனைவி எந்த வித நிர்ப்பந்தமுமின்றி தானாகவே மஹரை விட்டுக் கொடுத்தல். 

மஹரை உடனடியாகவோ அல்லது பிற்பாடோ கொடுத்தல்:

தம்பதிகள் தங்களுக்கிடையே பேசி ஒப்புக்கொண்ட பிரகாரம் மஹரை உடனடியாகவோ அல்லது பிற்பாடோ கொடுப்பது கூடுமானதாகும். அல்லது முஸ்லிம் நாடுகளில் நிலவும் பழக்கத்தை அனுசரித்து கணவனின் மரணத்தின் போதோ அல்லது மணவிலக்கின் போதோ கொடுப்பதும் கூடுமானதாகும்.  உடனடியாக கொடுப்பதுதான் சிறந்தது.  பிற்பாடு கொடுப்பதோ அல்லது தவணை முறையில் கொடுப்பதோ நபி (ஸல்) அவர்களின், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, காலத்தில் அனுசரிக்கப்படவில்லை.  ஏதோ ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்குவது போன்று மஹரை நினைக்கக்கூடாது.


திருமண விருந்து

திருமண விருந்து கொடுக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, கட்டளையிட்டுள்ளார்கள். அந்த விருந்தை யாரும் மறுக்கக்கூடாது. அதில் இசையோ, மதுவோ, தடுக்கப்பட்ட இறைச்சியோ இருந்தால் அல்லது ஆணும் பெண்ணும் கலந்து பழகும் சந்தர்ப்பம் இருந்தால் அதில் கலந்து கொள்ளக்கூடாது.

 

குடும்பப் பராமரிப்பு

குடும்ப பராமரிப்பிற்கான செலவை அளிப்பது கணவனின் கடமையாகும்.  அல்லாஹ் கூறுகின்றான்:- (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; (2:232).

ஒரு பெண் திருமண ஒப்பந்தத்தின் மூலம் கணவனிற்கு மாத்திரமே சொந்தமானவளாக இருக்கின்றாள். அவனுக்கு கீழ்படிந்து நடக்கின்றாள். வீட்டுப்பணிகளையும் குழந்தைகளையும் கவனித்து வருகின்றாள். குடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் கணவன் மேல் மாத்திரம் சுமத்தியிருப்பதன் காரணம் இதுவேயாகும்.  அவளின் சேவைகளுக்கு பகரமாக, மனைவி மிகப் பெரிய பணக்காரியாக இருந்தாலும், குடும்பததிற்கு செலவளிப்பது கணவனின் கடமையேயாகும்.  அவன் ஒன்றிற்கு மேல் திருமணம் செய்தால் அவர்களுக்கிடையே நீதியாக இருக்க வேண்டும்.

 

திருமண உரிமைகள்

தம்பதிகள் ஒருவருக்கொருவர் மரியாதையோடும், கனிவோடும் நற் பண்புகளோடும் நடப்பது கடமையாகும்.

அவர்களில் எவரும் மற்றவரின் உரிமையை அளிப்பதில் தாமதம் செய்யவோ அல்லது அவற்றை நிறைவேற்றுவதில் வெறுப்போ தயக்கமோ காண்பிக்கக்கூடாது.

மனைவிக்கு பாதிப்பும் நேராத வரை அல்லது அவளின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு தடங்கல் ஏற்பாடாத வரை, தான் விரும்பும் எந்த நேரத்திலும் கணவன் மனைவியுடன் இன்பமனுபவிக்கலாம்.

மாதவிடாய் காலத்தின் போதோ அல்லது குழந்தை பெற்றவுடனேயோ மனைவியுடன் உடலுறவு கொள்வது கூடாது.

மல துவாரத்தின் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது.

உடலுறவிற்குப் பின் தம்பதிகள் கட்டாயம் குளித்திட வேண்டும். உடலுறவு கொள்ளப் போகும் போது கீழ்கண்டவாறு ஓத வேண்டுமென நபி (ஸல்) அவர்கள், அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்துவானாக, கூறியுள்ளார்கள்: பிஸ்மில்லா.  அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான். வஜன்னிப்னிஷ் ஷைத்தான மா ரஸக்தனா. அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.  எங்களை ஷைத்தானிலிருந்து தூரமாக்கி வைப்பாயாக மேலும் நீ அளிக்கும் எங்கள் சந்ததியையும் ஷைத்தானிலிருந்து தூரமாக்கி வைப்பாயாக.

தன் உரிமையில்லாமல் வெளியில் செல்வதை விட்டும் மனைவியை தடுக்கும் உரிமை கணவனுக்கு உண்டு. வேலைக்குப் போவதையோ அல்லது வேறு எந்தவித வேலையை ஏற்றுக்கொள்வதையோ தடுக்கும் உரிமை அவனுக்குண்டு.

கணவனின் உரிமையின்றி அவள் பயணம் செய்தாலோ, அவனுடன் பயணம் செய்வதற்கு மறுத்தாலோ, அவனுடன் உறங்க மறுத்தாலோ அவள் மாறு செய்வதனால் பராமரிப்பு உரிமையை அவள் இழக்கின்றாள்.

ஒருவருக்கு ஏற்கனவே மனைவியிருந்து அவர் ஒரு கன்னிப்பெண்ணை மீண்டும் மணக்கிறாரெனில், அவர் நாட்களை மனைவிகளுக்கிடையே பகிர்வதற்கு முன், ஏழு நாட்கள் தொடர்ச்சியாக அப்பெண்ணுடன்இருக்க வேண்டும். ஆனால் அப்பெண் ஏற்கனவே மணமானவளாக இருந்தால் அவர் அவளுடன் மூன்று நாட்கள் மாத்திரம் இருந்தால் போதும். ஆனால் அப்பெண் தன்னுடன் ஏழு நாள் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால் அவர் இருக்கலாம். மற்ற மனைவிகளிடமும் அவ்வாறே அவர் இருக்க வேண்டும்.

 

நுஸ்ஹுஸ்

மனைவி கணவனிற்கு கீழ்படியாமலிருப்பதுதான் நுஸ்ஹுஸ் எனப்படும். ஒரு வெண் கணவனிற்கு கீழ்படியாதது போல் இருந்தால், அதாவது அவரை அவளுடன் உடலுறவு கொள்வதற்கு மறுத்தால், அல்லது பொடு போக்காகவோ, வேண்டா வெறுப்பாகவோ வந்தால் அவள் கணவனால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவாள். மேலும் தன் பராமரிப்பு உரிமையையும் அவள் இழப்பாள். கணவர் அவளுக்கு அறிவுரைகள் கூறலாம்.  அல்லாஹ்வின் அச்சத்தை அவளுக்கு ஊட்டலாம். அவள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், படுக்கையிலிருந்து அவளை தள்ளி வைக்கலாம். அவள் மேலும் மேலும் பிடிவாதமாக இருந்தால் அவளை இலேசாக அடிக்கலாம்.

ஒவ்வொருவரும் மற்றவர்தான் குற்றவாளி என்று குற்றம்சாட்டினால், ஆண் தரப்பிலிருந்து ஒருவரையும் பெண் தரப்பிலிருந்து ஒருவரையும் அனுப்பி அவர்களுக்கு பொறுத்தமானதை, அவர்கள் தொடர்ந்து ஒன்றாக இருப்பதா அல்லது பிரிந்து விடுவதா என்பதை, ஒரு நீதிபதி தீர்மானிக்கலாம். அல்லாஹ் கூறுகின்றான்:- (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் ஷமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான். (4:35).

 

மணவிலக்கு

ஒரு கணவன் திருமண பந்தத்தை முற்றிலுமாகவோ அல்லது ஓரளவிற்கோ ரத்து செய்வதுதான் இஸ்லாத்தில் தலாக் என்பதாகும். ஒரு கணவன் இரண்டு முறை மணவிலக்கு செய்வதற்கு சந்தர்ப்பம் உண்டு. இந்த இரு மணவிலக்கிற்குப் பிறகும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருமண பந்தத்தை மீண்டும் ஏற்படுத்தலாம். ஆனால் அவன் மூன்றாம் முறையும் மணவிலக்கு செய்து விட்டால், அவள் வேறொருவரை மணந்து அவரும் அவளை மணவிலக்கு செய்தால் ஒழிய, அவளை மீண்;டும் மணக்க முடியாது.  அல்லாஹ் கூறுகின்றான்:-

தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. (2:229) மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. (2:230).

மணவிலக்கின் குறிக்கோள்:

குடும்பம் நிலையாக இருக்க வேண்டுமெனவும் தம்பதிகளுக்கிடையே தீவீரமான பிணைப்பு இருக்க வேண்டுமெனவும் இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகின்றது. வெற்றியடையாத திருமணத்தின் அல்லது திருமண பந்தமே ஒருவருக்கொருவர் தீங்கானாத ஆகிவிடும்போது கடைசித் தீர்வாக வருவதான் மணவிலக்கு.

மணவிலக்கை ஆண்தான் ஆரம்பித்திட முடியும். ஏனெனில் பெரும்பாலும் ஆண் உணர்வுப்பூர்வமான முடிவெடுக்காமல் நிலைமையின் தீவீரத்தை சிந்தித்து அறிவுப்பூர்வமான முடிவு எடுக்கின்றான். ஆயினும், தக்க காரணமிருப்பின் நீதி மன்றத்தின் மூலமாக மணவிலக்கு பெறுவதற்கு பெண்ணிற்கு உரிமை உள்ளது.

நிர்ப்பந்தத்தின் காரணமாகவோ அல்லது குடிபோதையிலோ, தான் என்ன பேசுகிறோம் என்று உணர முடியாத அளவிற்கு கோபவெறியிலோ தலாக் சொன்னால் அது செல்லாததாகும். மனைவியின் மாதவிடாய் காலத்திலோ அல்லது உடலுறவிற்குப் பிறகோ தலாக் சொல்வது சரியானதல்ல.

மணவிலக்கின் விதங்கள்:

சுன்னத்தான பித்அத்தான என இரண்டு விதமான மண விலக்குகள் உள்ளன.

சுன்னத்தான மணவிலக்கு: மனைவி (மாதவிடாய் முடிந்து) தூய்மையடந்த காலத்தில், அக்காலத்தில் உடலுறவு ஏதும் கொள்ளாமலிருந்து, கணவன் மணவியை தலாக் சொல்ல வேண்டும். (அதற்குப் பிறகு அவள் இத்தா இருந்து அந்த) இத்தாக் காலம் முடிந்தவுடனேயே தலாக் அமுலாகி விடுவதால் அவர்கள் ஒரே வீட்டில் இருக்க முடியாது கணவன் அவளை அணுகவும் முடியாது. அவள் கணவனின் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். தங்களின் திருமண உறவை புதுப்பிக்க வேண்டுமானால் அவர்களிருவரும் புதிய திருமண ஒப்பத்தந்தை புதிய மஹருடன் செய்ய வேண்டும்.

கணவன் இரண்டாம் முறையும் தலாக் செய்து விட்டால் இத்தா காலத்தில் அவளுடன் சேர்வதன் மூலம் திருமண பந்தத்தை மீட்டுக் கொள்ளலாம். அவன் மூன்றாம் முறையும் தலாக் செய்து விட்டால் அவள் மற்றொருவரை மணந்து அவரும் தலாக் சொல்லாதவரை இவன் அப்பெண்ணை மீண்டும் மணக்க முடியாது.

பித்அத்தான மணவிலக்கு: 

இந்த வகையான மணவிலக்கு இஸ்லாமிய சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும். கணவன் மனைவியின் மாதவிடாய் காலத்திலோ, அல்லது மாதவிடாய்க்குப் பிறகு உடலுறவு கொண்ட பிறகு அல்லது கணவன் ஒரே நேரத்தில் உன்னை தலாக் செய்து விட்டேன் உன்னை தலாக் செய்து விட்டேன் உன்னை தலாக் செய்து விட்டேன் என்று மூன்று முறை கூறினாலோ இது போன்ற தலாக்குகள்தான் பித்அத்தான நபி வழிக்கு மாறான தலாக் எனப்படும். இந்த வகையான தலாக்குகள் சரியற்றதும் பாவகரமானதும் ஆகும்.

மாதாவிடாய் முடிந்து மனைவி தூய்மையடைந்த காலத்தில் கணவன் முத்தலாக்கை ஒரே வாக்கியத்திலோ அல்லது ஒரே தடவையிலோ சொல்லி விட்டாலும் தலாக் ஆகி விடும். அத்தகைய தலாக் ஒரு தலாக்காக கணக்கிடப்படும். ஆனாலும் மூன்றையும் ஒரே நேரத்தில் சொன்னதற்காக கணவன் பாவியாக கருதப்படுவான்.


மீட்ட முடிகின்ற மற்றும் மீட்ட முடியாத தலாக்

மீட்ட முடிகின்ற தலாக்: 

முதல் முறையோ அல்லது இரண்டாம் முறையோ கணவன் மனைவியை ஒரே ஒரு தலாக் சொன்னால், அவளின் இத்தா காலத்தில் அவளை அணுகலாம் ஏனெனில் இத்தாவில் இருக்கும் வரை அவள் அவனின் மனைவிதான்.  இந்தக் காலத்தில் தம்பதிகளில் யாராவது ஒருவர் மரணமடைந்து விட்டால் சட்டபூர்வமாக அவர்கள் சொத்தில் பங்கு பெறலாம்.  இத்தாவில் இருக்கும் மனைவியின் மீண்டும் கூட வேண்டுமாயின், தான் மீண்டும் சேர விரும்புகிறேன் என்பதை வாய்மூலமாக சொல்லலாம் அல்லது அவளிடம் உடலுறவு கொள்வதனாலேயோ அல்லது அதற்கிழுத்துச் செல்லும் கொஞ்சல் முத்தமிடல் போன்றவைகளை செய்வதன் மூலம் மனைவியை திரும்ப அழைத்திட முடியும்.

இது கடுமை குறைந்த மண விலக்காக கருதப்படுகின்றது. ஏனெனில் கணவன் (இத்தா காலம் முடிந்த பிறகும்) அவளை புதிய திருமண ஒப்பந்தத்தம் மற்றும் மஹரின் மூலம், அவள் வோறொருவரை மணக்காதிருந்தால், மணந்து கொள்ள முடியும்.

மீட்ட முடியாத தலாக்: 

இத்தலாக்கின் பிறகாரம் மனைவி கணவனை விட்டு பிரிந்திட வேண்டும். கணவன் மூன்றாம் முறை தலாக் சொன்ன பிறகு அவன் இடத்தை விட்டுப் பிரிந்து வெளியேறி விட வேண்டும்.  அவள் மற்றொருவனை மணந்து அவர்கள் உடலுறவு கொண்டு அந்தக் கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் அதற்குப் பிறகு அவள் தன் இத்தா காலத்தை முடித்த பிறகு வேண்டுமானால் முதல் கணவன் புதிய திருமண ஒப்பந்தம் மற்றும் மஹரின் மூலம் மீண்டும் மணமுடிக்க அனுமதிக்கப்படுவான்.

திருமண பந்தமானது ஒரு பெண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தி அவளின் வாழ்வு சகிக்க முடியாததாகிப் போனால் கீழ்கண்ட சூழ்நிலைகளில், நீதிபதியின் முன் மணவிலக்கு கோர பெண்ணிற்கு அனுமதியுண்டு.

1. அவளைப் பராமரிக்க கணவன் தவறினால்.

2. அவள் அவனுடன் தொடர்ந்து வாழ முடியாத அளவிற்கு அவளை திட்டுதல், சபித்தால், அடித்தல், ஹராமானவற்றை செய்ய நிர்ப்பந்தித்தல் போன்றவற்றை செய்து தீங்கிழைத்தால்.

3. அவன் கணவன் வெகுகாலமாக வராமலிருந்தாலே, அல்லது அவன் வெகுகாலத்திற்கு சிறைத்தண்டனை பெற்று விட்டாலோ, அதனால் தான் ஹராமான செயலில் ஈடுபட்டு விடுவோம் என்று அவள் பயப்படும்போது.

4. அவள் கணவனிற்கு நிலையான இயலாத்தன்மை, ஆண்மையின்மை, தீவீர நோய் போன்றவை இருந்தால்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும். தவிர்க்க இயலாத அவசியத்திற்கு மாத்திரம் வெளிச்செல்ல வேண்டும். மணவிலக்குச் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் சாட்சிகள் இருக்க வேண்டுமென நபிவழி கூறுகின்றது.

 

குலா (உடனடி மணவிலக்கு)

கணவனுக்கு பணயத்தொகையோ அல்லது ஈட்டுத்தொகையோ கொடுத்து மனைவி தன்னை திருமண பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் உடனடி மணவிலக்கு குலா என்று அழைக்கப்படும். திருமண வாழ்வில் வெறுப்பு ஏற்படுவது கணவன் புறத்திலிருந்து என்றால் அவன் மணவிலக்கு செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அது மனைவியின் புறத்திலிருந்து என்றால், கணவன் ஏற்கனவே அவளுக்குக் கொடுத்ததை திருப்பிக் கொடுப்பதின் மூலம் உடனடி மண விலக்கு கோருவதற்கு இஸ்லாம் அவளுக்கு அனுமதி அளிக்கின்றது.

மனைவி கணவனின் நடத்தையையோ, -------------, -------, இறையச்சமின்யையோ, ஆண்மையின்மையையோ வெறுக்கும் போது அல்லது அவனுக்கு விசுவாசமாக இல்லாமல் இருந்து பாவம் செய்து விடுவோம் என அஞ்சும் போது குலா கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

தான் கொடுத்த மஹரை திரும்பப்பெறுவதற்காக குலா கொடுப்பதை கணவன் தடுத்து வைப்பது சட்டவிரோதமானதாகும்.

மனைவி மாதவிடாய் காலத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குலா கொடுப்பது அனுமதிக்கப்பட்டதே. குலா மூலம் மண விலக்கு செய்த மனைவியை அவளின் சம்மதத்துடன் புதிய திருமண ஒப்பந்தம் செய்வதன் மூலம் திருமணம் செய்வது ஆகுமானது.

 

பல்வேறு பொதுவான பிரச்னைகள்.

மாதவிடாயும் (ஹைல்) பிள்ளைப் பேறுக்கு பிறகுள்ள இரத்த ஓட்டமும் (நிபாஸ்)

மாதவிடாய் என்பது மாதா மாதம் வரும் இரத்தத்தை குறிக்கும். பெரும்பாலான நேரங்களில் இது சுமார் ஆறு அல்லது ஏழு நாள் வரை தொடரும். ஆனால் நிபாஸ் என்பது குழந்தை பேறுக்கு பின்பு வெளிவரும் இரத்தமாகும். இந்த இரண்டு வகையான இரத்த ஓட்ட காலத்தின் போதும் பெண் தொழக் கூடாது. (இந்தக் காலத்தின் போது விடுபட்ட தொழுகையை அவள் சுத்தமான பின்பு மீண்டும் தொழ வேண்டியதில்லை.) அவள் நோன்பும் நோற்கக்கூடாது. ஆனால் ரமளானில் தவற விட்ட நோன்பிற்குப் பகரமாக இரத்த ஓட்ட காலம் நின்ற பிறகு விட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.  மாதவிடாயின் இறுதியில் சுத்தமாகும் பொருட்டு குளிப்பது கடமையாகும். மேன்மைக்குரிய அல்லாஹ் கூறுகின்றான்:- மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்; ''அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. (2:222)

மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, கேட்கப்பட்ட போது:- நீங்கள் விரும்பியவாறு அவர்களை அனுபவியுங்கள். ஆனால் உடலுறவை மாத்திரம் தவிர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். (இப்னு கதீர்).

இஸ்திஹாழா மாதாவிடாய்க்கு பிறகு தொடர்ந்து இரத்தம் போவது. இத்தகைய நிலையில் பெண் ஒரு முறை குளித்தால் (ஒவ்வொரு தொழுகைக்கும் அவள் குளிக்க வேண்டியதில்லை. மாறாக சுமார் ஆறு ஏழு நாட்கள் வரும் அவளின் மாதவிடாயின் இறுதியின் போது குளித்தால் போதுமானது.) போதுமானது. ஆனால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவள் உளு செய்து கொள்ள வேண்டும். மேலும் அடைக்கும் துணியை வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திமா பின்த் அபீ ஹுபைஸ் என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் நான் தொடர்ச்சியான இரத்த ஓட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் நான் எப்பொழுதுமே அசுத்தமாக உள்ளேன். நான் தொழுகையை நிறுத்திக் கொள்ளவா? என்று கேட்டார்கள். அது நரம்பிலிருந்து வரும் இரத்தமேயாகும் (மாதவிடாய் இரத்தமல்ல). உன்னுடைய மாதவிடாய் காலம் ஆரம்பித்தவுடன் தொழுகாதே. ஆனால் அக்காலம் முடிந்த பிறகு குளித்துவிட்டு தொழுகையை தொடர்ந்து கொள் என கூறினார்கள். (அல் புஹாரி. இந் நிலையில் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளு செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.)

இப்படி இஸ்திஹாழா உள்ள பெண் தொழுவது கூடுமென்பதால் அவள் சுத்தமான நிலையிலேயே இருக்கின்றாள் என்பது அர்த்தம். ஆகவே கணவன் அவளுடன் உடலுறவு கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே.

நிபாஸ் பிள்ளைப்பேறுக்கு பின்பு வரும் இரத்தப் போக்கு. இது அதிகப்பட்சம் நாற்பது நாட்களுக்கு தொடர்ந்து போகின்றது. ஆயினும், இதற்கு முன்பே பெண் சுத்தமாகி விட்டால், அவள் குளித்து விட்டு தொழுகையையும் நோன்பையும் நிறைவேற்ற வேண்டும்.

ஒரு தொழுகை நேரம் வந்த பிறகு மாதவிடாய் தொடங்கி விட்டால் மாதவிடாய் முடிந்த பிறகு அத்தொழுகையை மாத்திரம் திருப்பித் தொழுக வேண்டும்.


தடுக்கப்பட்டவைகள்

தன் உடல் தோற்றம் சம்பந்தமாக முஸ்லிம் சகோதரி தெரிந்து கொள்ள வேண்டிய வேறு சில தடைகளும் உள்ளன. சவரி முடியோ அல்லது விக்கோ வைத்துக்கொள்வது, முகத்திலுள்ள முடியை பிடுங்குவது, பல்லை தீட்டுவது, பச்சை குத்துவது ஆகியவைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டுள்ளன. அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, ஒரு பெண் என் பெண்ணிற்கு தற்போதுதான் திருமணமாகி உள்ளது. --------------- அவளின் முடி கொட்டி விட்டது. ஆகவே அவள் பொய் முடி அணிந்து கொள்ளலாமா? எனக் கேட்டாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை மறுத்து பொய் முடி உண்டாக்குபவரையும் அணிபவரையும் அல்லாஹ் சபிக்கின்றான் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் கூறியதாக அல்காமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

பச்சை குத்துபவனையும் குத்தப்படுபவனையும், முகத்தில் உள்ள தன் முடியை பிடுங்குபவனையும் மற்றவர்களின் முகமுடியை பிடுங்குபவனையும், தன் பல்லை ராவுபவனையும் மற்றவர்களின் பல்லை ராவுபவனையும் அல்லாஹ்வின் படைப்பில் மாறுபாட்டை உண்டாக்குவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான். திருக்குர்ஆனை ஓதி வந்த பனீ அஸதை சேர்ந்த ஒரு பெண் என்ன மாதிரியான ஹதீதை நீ அறிவிக்கின்றாய்? பச்சை குத்துபவனையும் குத்தப்படுபவனையும், முகத்தில் உள்ள தன் முடியை பிடுங்குபவனையும் மற்றவர்களின் முகமுடியை பிடுங்குபவனையும், தன் பல்லை ராவுபவiயும் மற்றவர்களின் பல்லை ராவுபவனையும் அல்லாஹ்வின் படைப்பில் மாறுபாட்டை உண்டாக்குவர்களையும் நீ சபிப்பதாக நான் கேள்விப்பட்டேன் என கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தவர்களை நான் ஏன் சபிக்கக்கூடாது. மேலும் இது அல்லாஹ்வின் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதற்கு அப் பெண் திருக்குர்ஆனை முதலிலிருந்து கடைசி வரை ஓதியிருக்கிறேன் நீ கூறியதை அதில் நான் காணவில்லை எனக் கூறினாள்.  நீ ஓதியிருந்தாள் நீ கண்டிருக்கவேண்டும். மேன்மைக்குரிய அல்லாஹ் கூறுகின்றான். (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; (59:7) என அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் கூறினார்கள். (நீங்கள் கூறிய சிலதை) உங்கள் மனைவி செய்து வருவதை நான் கவனித்துள்ளேன் என்று அப்பெண் கூறினாள். நீ (என் வீட்டிற்கு) உள்ளே வந்து பார்த்துக் கொள் என்று அவர் கூறினார். வீட்டினுள் சென்று பார்த்து விட்டு அப்பெண் வெளியே வந்து நான் உங்கள் மனைவியிடத்தில் எதையும் காணவில்லை என்று கூறினாள். அதற்கு அவர், அவள் தடுக்கப்பட்ட அவைகளை செய்திருந்தாள் அவளை மண விலக்கு செய்திருப்பேன் என்று கூறினார். (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1678)


ஜினா (விபச்சாரம்)

திருமண உறவு இல்லாமல் முறையற்ற உடலுறவு கொள்வது மிகவும் மோசமான ஒன்றாகும்.  மேற்கில் குடும்ப அமைப்பை சீர்குலைக்கும் முக்கிய காரணிகளுள் இது ஒன்றாகும்.  இத்தகைய உடலிச்சை குற்றத்திற்கெதிராக எச்சரிக்கை செய்கின்றது மேலும் அதில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை உள்ளதாக அச்சுறுத்தவும் செய்கின்றது. இணை வைக்கும் கொடுங்குற்றத்தோடு சமப்படுத்திக் கூறுமளவிற்கு இக்குற்றத்தை மிகவும் பயங்கரமானதாக இஸ்லாம் கருதுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவiளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.(24:3).

விபச்சாரம் புரிவது அல்லாஹ் எச்சரித்துள்ள குற்றங்களில் ஒன்று என்பது மாத்திரமல்ல அதற்கு இட்டுச் செல்லும் எந்தச் செயலிற்கும் எதிராக அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். அவன் கூறுகின்றான்:- நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)

அது தீய வழி ஏனெனில் அது நரகத்திற்கு இட்டுச் செல்கின்றது.

தன் கணவருக்கென்றல்லாமல் மற்றவர்களுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ளும் பெண் படிப்படியாக தன் ஒழுக்கத்தை இழந்து முறையற்ற உறவின் மூலம் சுகம் தேடுமளவிற்கு ஊக்கம் பெற்றுவிடுகின்றாள். ஒரு முஸ்லிம் பெண் தன் கணவனுக்காக மாத்திரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவள் அழகு சாதனங்களையும், வாசனைத்திரவியங்களையும், நகைகளையும் அவனுக்காக மாத்திரம் அணிய வேண்டும். இப்னு அப்பாஸ் அவர்கள் என் மனைவி எனக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது போல நான் என் மனைவிக்காக வேண்டி என்னை அலங்கரித்துக் கொள்கிறேன்; எனக் கூறுகின்றார்.  வீடு பெண்ணிற்கு அவளுக்குப் பொருந்திய இயற்கையான சூழ்நிலைய உள்ள இடமாகும்.

இஸ்லாத்தில் சமூக ஒழுங்கும் ஒழுக்க மாண்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. முறையற்ற அல்லது சட்டவிரோத செயல்களுக்கு இட்டுச் செல்லும் எந்த வழியும் அல்லது சாதனங்களும் அனுமதிக்கப்பட்டதல்ல. உதாரணத்திற்கு, பெண்ணிடம் கைகுலுக்குவது, அவளிடம் கை குலுக்குபவர்கள் அவள் திருமணம் செய்ய முடியாத சகோதரன், மகன், தந்தை போன்ற உறவு முறை இருந்தால் தவிர, கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.  ஏனெனில் பெண்ணை தொடுதலே அவன் உணர்ச்சியை கிளர்ந்தௌச் செய்யும் தூண்டு கோலாகும். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அவர்களின் புகழை உயர்த்துவானாக, பெண்ணைத் தொடுவதிலிருந்தும் எச்சரிக்கை விடுத்து கூறுகின்றார்கள்:  ஒரு மனிதன் தான் தொட சட்டபூர்வமற்;ற ஒரு பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியை வைத்து தன் தலையில் குத்திக் கொள்வது அவனுக்கு சிறந்ததாயிருக்கும்.

 

அழகுபடுத்திக் கொள்ள தடுக்கப்பட்டவைகள்

முஸ்லிமா தவிர்க்க வேண்டியவற்றை மேலுள்ள ஹதீது தெளிவாக குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

முகத்திலுள்ள முடியை குறிப்பாக கண்ணிமையை பிடுங்குதல். தன் முகத்திலுள்ள முடியை பிடுங்குபவரையும் மற்றவர்களின் முகமுடியை பிடுங்குபவரையும் அல்லாஹ் சபித்துள்ளான்.

பச்சைகுத்துதல். அழகுக்காக முன்பற்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தல். இதை தனக்காக செய்பவரையும் மற்றவருக்காக செய்பவரையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தலைக்கு மேல் கொண்டை போடுதல்.

ஆண்களைப் போன்று முடி வெட்டிக் கொள்ளுதல்.

மற்றவர்களின் உணர்வுகளை தூண்டும் வகையிலோ அல்லது மற்றவர்கள் மனதில் ஏதேனும் நினைப்பை உண்டாக்கும் வகையிலோ நடத்தல் அல்லது நகர்தல்.

ஆண்களின் உடையை அணிதல் அவர்களைப் போன்று நடத்தல். அல்லாஹ் அவர்களை சபிக்கின்றான்.  அதே போல் பெண்ணைப் போன்று நடக்கும் ஆணையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

மேற்கண்டவைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவைகள் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்பவைகளாக கருதப்படுகின்றன.

أحدث أقدم