ஹவாரிஜ், இஹ்வான் மற்றும் ஷீஆ ஒருமித்த மூலக்கூறுகள்

- Hamdhan Hyrullah, Paragahadeniya
‍‍‍‍‍‍ ‍‍
ஹவாரிஜ்களும் இஹ்வான்களும் ஸுன்னி முஸ்லிம் பிரிவினர்களாக கருதப்பட்டாலும் அவர்களுக்கும் ஷீஆக்களுக்கும் மத்தியில் ஒருமித்த சில மூலக்கூறுகள் இருக்கின்றனர். அதன் காரணமாக அவர்களுக்கு மத்தியில் நிதி, பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்புகள் ரீதியாக பெரும் உதவிகள் செய்வதோடு ஆழமான ஒரு உறவையும் வைத்திருக்கிறார்கள். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சதிகளில் சில இடங்களில் ஒரு சாராரின் கைவரிசையையும் இன்னும் சில இடங்களில் மூன்று சாராருடைய கைவரிசையும் நாம் நிதர்சனமாக கண்டுகொள்ளலாம். இவர்களிடம் உள்ள அந்த ஒருமித்த கூறுகள் பற்றி அறியாதவர்களே "இல்லை இம்மூன்று சாராரும் வெவ்வேறு திசையில் பயணிப்பவர்கள்" என்று வாதாடுபவர்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*முதல் மூலக்கூறு:*
*ஆட்சி அதிகாரம் என்ற பகுதியை மையமாக கொண்ட சிந்தனை*
‍‍‍‍‍‍ ‍‍
ஹவாரிஜ் சிந்தனை, இஹ்வானிய சிந்தனை மற்றும் ஷீஆ சிந்தனை வெளிப்படையில் வேறுபட்டிருந்தாலும் அடிப்படையில் ஒரே ஊற்றிலிருந்து தான் அவை பிறந்தது, அதுதான் "ஆட்சி" என்ற பகுதியை முற்படுத்துகின்ற சிந்தனை.
‍‍‍‍‍‍ ‍‍
ஷீஆக்களை (ராபிழாக்கள்) பொறுத்தவரையில் அவர்கள் நம்ப கூடிய 12 இமாம்கள் இந்த உலகத்தை ஆட்சி செய்வார்கள் என்பது அவர்களுடைய அடிப்படை நம்பிக்கை. ஹவாரிஜ்கள் நேர்மையான ஆட்சியொன்றை அல்லது இஸ்லாமிய ஆட்சியொன்றை நிலைநாட்டுவதன் பெயரில் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தவர்கள். இன்றைய நிதர்சனத்தில் இவ்விரண்டு தீயையும் மூட்டும் இஹ்வான்கள் 1924ஆம் ஆண்டு இஸ்லாமிய கிலாபத் வீழ்ந்ததன் பின்னர் இஸ்லாமிய ஆட்சியை கொண்டவரா போகிறோம் என்ற கோஷத்தில் பிறந்தவர்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
சிலர் இஹ்வான்களை "இஸ்லாமிய ஆட்சியை கொண்டவர போகிறோம்" என்ற கோஷத்தில் மக்களை ஏமாற்றி வயிற்று பிழைப்பு நடத்துபவர்கள் என்று சொல்கிறார்கள் - உண்மைகள் இருந்தாலும் இது போன்ற பயனற்ற விமர்சனங்களை நாம் தவிர்க்க வேண்டும்.
‍‍‍‍‍‍ ‍‍
வடிவங்கள் வித்த்தியாசப்பட்டாலும் மூன்று சாராரும் ஆட்சி மற்றும் அரசாங்கம் என்ற பகுதியை முற்படுத்தக்கூடியவர்கள், அல்லது ஆட்சியை மையமாக கொண்ட ஒரு சிந்தனையின் அடிப்படையில் செயல்படுபவர்கள் என்பது எல்லோரும் அறிந்தோர் விடயம்.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*இரண்டாவது மூலக்கூறு:*
*சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்குமில்லை.*
‍‍‍‍‍‍ ‍‍
சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதில் யாரும் முரண்படலாகாது. ஸல்மான் ருஷ்தி போன்று தெளிவாக இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் அறிவில்லாதவர்களே இதில் மாற்றுக்கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் மிகவும் சர்ச்சைக்குரிய தலைப்பாக கருதப்படுகிறது, இதன் காரணமாக காபிர்களாக தீர்ப்பளிக்கப்பட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை முஸ்லிம்களே ஓட்டும் நிலையை உருவாக்கி இருக்கின்றது.
‍‍‍‍‍‍ ‍‍
இந்நிலை புதியதல்ல, இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக இவ்வாதத்தை முற்படுத்தி முஸ்லிம்களை காபிர்கள் என்று தீர்ப்பளித்து கொலை செய்வதை நியாயப்படுத்தியவர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் தோன்றிய ஹவாரிஜ்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
சென்ற நூற்றாண்டில் ஹவாரிஜ் சிந்தனை புதுப்பித்தவர்கள் இஹ்வான்கள், குறிப்பாக செய்யித் குதுப் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி இஸ்தாபகர் மவ்லானா மவ்தூதி. "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவின் விளக்கம் இதுதான், நபிமார்கள் அனுப்பப்பட்டது இதற்கு தான் என்று விளக்கம் கொடுத்தார்கள், அதற்கு தவ்ஹீதுல் ஹாகிமிய்யாஹ் என்று பெயர் சூட்டினார்கள், சகட்டு மேனிக்கு தக்fபீர் செய்தார்கள். அதாவது அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு ஆட்சி செய்யாத ஆட்சியாளர்கள் காபிர்கள் என்றும் அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டத்துக்கு கட்டுப்படுபவர்கள் அவர்களை வணங்குபவர்கள் எனவே அதனடிப்படையில் ஆளுகின்றவர்கள் ஆளப்படுகின்றவர்கள் அனைவரும் காபிர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இதுதான் ISIS, அல்காஇதா போன்ற ஹவாரிஜ் சிந்தனையை தாங்கிய இயக்கங்களின் பின்னணி.
‍‍‍‍‍‍ ‍‍
எனவே "சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்குமில்லை" என்பது தான் தக்fபீர் சிந்தனையின் ஊற்று, உரிமையாளர்கள் பழைய ஹவாரிஜ்கள் புதுப்பித்தவர்கள் இஹ்வான்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
முன்னாள் இஹ்வானுல் முஸ்லிமீன் முக்கிய தலைவர்களில் ஒருவரான பரீத் அப்துல் ஹாலிக் தனது இஹ்வானுல் முஸ்லிமீன் பீ மீஸானில் ஹக் (p.115) என்ற நூலில் இதனை தெளிவாக பின்வருமாறு சொல்கிறார்.
"தக்fபீர் சித்தனை ஐம்பது மற்றும் அறுபதுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ஷாஹீத் செய்யித் குதுப் அவருடைய சித்தாந்தத்தாலும் அவருடைய எழுத்தாக்களாலும் தாக்கமுற்ற இஹ்வான் இளைஞர்களுக்கு மத்தியிலையே பரவலானது என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம். சமூகம் ஜாஹிலிய்யத்தில் விழுந்துவிட்டது, மேலும் அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு ஆட்சி செய்யாத காரணத்தால் அவர் (செய்யித் குதுப்) ஆட்சியாளர்கள் மீது தக்fபீர் செய்துள்ளார், அதனை அங்கீரகரித்ததால் ஆட்சி செய்யப்படும் பொதுமக்கள் மீதும் தக்fபீர் செய்தார் என்பதையே அவர்கள் (இஹ்வான் இளைஞர்கள்) அவருடைய எழுத்துக்களில் இருந்து பெற்றார்கள்."
‍‍‍‍‍‍ ‍‍
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று சில இஹ்வான்கள் தக்fபீர் சிந்தனையை முஹம்மத் இப்ன் அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பிரச்சாரத்தோடு முடிச்சு போடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். பல முறை அவர்களிடம் அவர் தக்fபீர் செய்தற்கான ஆதாரத்தை முன்வையுங்கள் என்று கேட்டும் அவர்கள் ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை, சமர்ப்பிக்கவும் முடியாது ஏனெனில் முஹம்மத் இப்ன் அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் தக்fபீர் சிந்தனை இருக்கவில்லை. எனவே வெறும் வார்த்தை ஜாலங்களால் ஒரு குறிப்பிட்ட காலம் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கலாம், ஆனால் அவர்களால் ஆதாரத்தை சமர்ப்பித்து நிரூபிக்க முடியாது.
‍‍‍‍‍‍ ‍‍
"வணக்கத்துக்குரிய நாயனை வணங்குவது எப்படி?" என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டு ஒரு இஜ்திமாவில் மாற்றப்பட்ட உரையில் சூசகமாக இந்த கருத்தை முன்வைக்கிறார் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர். ஆட்சி பகுதியை நேரடியாக உள்ளடக்காமல் சூசகமாக முன்வைத்தார், அவர் முன்வைத்த உதாரணம்: சீதனம் எடுக்க கூடாது என்பது அல்லாஹ்வின் சட்டம், யார் தாய்க்கு கட்டுப்பட்டு சீதனம் எடுக்கின்றாரோ அவர் தனது தாயை வணங்குகிறார், ஷிர்க் செய்கிறார் என்று சொன்னார். பின்னர் அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டும் ஆட்சியாளரின் சிறப்பு என்று தொடர்ந்து பேசினார். இலங்கை பூராக ஜமாத்தே இஸ்லாமியின் கிளைகளில் முஅய்யித் பாடத்திட்டத்திலும் இதே சூசகமான வடிவில் படித்துக் கொடுக்கப்படுகிறது. இஹ்வான்கள் இன்றும் இந்த சிந்தனையை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை பதிவு செய்யவே இதனை சொன்னேன்.
‍‍‍‍‍‍ ‍‍
இந்த விஷயத்தில் இஹ்வான்களுக்கும் ஹவாரிஜ்களுக்கும் இருக்கும் உறவு அவர்களுடைய நடவடிக்கைகளை பார்த்தால் புரியமுடியும், அபு முஹம்மத் அல்மக்திஸி ஹவாரிஜ் சிந்தனையை சுமந்த பிரபலமான ஒருவர். இஹ்வான்களுடைய துர்கி நாட்டின் அரசாங்கம் அதன் மதச்சார்பின்மை போக்கு பற்றி வினவப்பட்ட போது, ஹவாரிஜ்களோடு (அவருடைய வார்த்தையில் முஜாஹிதீன்களோடு) நளினமாக நடக்கும் நாடுகளை நாம் ஒரேயடியாக காபிர் என்று தீர்ப்பளித்துவிட கூடாது என்ற கருத்துப்பட பதிலளித்தார். ஹவாரிஜ்களுக்கு (தீவிரவாதிகளுக்கு) உதவி செய்து வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தியமைக்கும் ஈரானின் தீவிரவாதத்துக்கு உதவி செய்ததற்கும் இஹ்வான்களுடைய கட்டார் நாட்டுடன் ஸஊதி தலைமையில் சில நாடுகள் உறவுகளை துண்டித்து பல தடைகளை விதித்ததும் வளைகுடா அல்காஇதா கிளை தலைவர் ஹாலித் பாதர்fபி அதனை கண்டித்தது அவர்களிடம் உள்ள உறவை வெளிப்படுத்தியது.
‍‍‍‍‍‍ ‍‍
அய்மண் அல்லவாஹிரி போன்ற பல அல்காஇதா தலைவர்கள் செய்யித் குதுப் ஹஸனுல் பண்ண போன்றவர்களை எழுத்திலும் பேச்சிலும் பாராட்டி சீராட்டி இருந்ததையும் அல்காஇதாவுக்கும் இஹ்வான்களுக்கும் இருந்த நெருங்கிய உறவையும், ISIS கலீபாவாக ஏற்றிருக்கும் அபூபக்ர் அல்பக்தாதி அவர்களும் உஸாமா பின் லாதின் போன்றவர்களை பாராட்டியிருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். எனவே சுருக்கமாக சொன்னால் ஹவாரிஜ்களை உருவாக்கும் தொழிற்சாலையாக செயற்படுவது இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஒரு அம்சமாகும்.
‍‍‍‍‍‍ ‍‍
ISIS தலைவர் முன்னாள் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை சார்ந்தவர் என்று இஹ்வான்களின் ஆன்மீக தலைவர் யூசுப் அல்கர்ளாவி தெரிவித்திருக்கிறார். https://
www.youtube.com/watch?v=Q82QOAcz
odk
‍‍‍‍‍‍ ‍‍
அடுத்தது இஹ்வான்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையில் இருக்கும் உறவு. இஹ்வான்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையில் இருக்கும் ஆழமான உறவை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் இந்த கொள்கை ரீதியான உறவு பற்றியே இங்கு நான் சொல்லவருகிறேன்.
‍‍‍‍‍‍ ‍‍
செய்யித் குதுப், ஹஸனுல் பண்ணா, மவ்லானா மவ்தூதி போன்றவர்களை கொமைனி மற்றும் ஏனைய ஷீஆக்கள் ஆதரித்து முன்மாதிரியாக எடுப்பது மட்டுமின்றி செய்யித் குதுப் புதுப்பித்த இந்த ஹவாரிஜ் கொள்கை தான் ஈரானில் கொமைனிக்கு ஷீஆ (ராபிழா) ஆட்சியை அமைக்க உதவியாக அமைந்திருக்கிறது. செய்யித் குதுப் புதுப்பித்த இந்த ஹவாரிஜ் சிந்தனையை அடிப்படையாக வைத்தே இருந்த ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொமைனி தனது ஆட்சியை நிருவினார் என்பதை ஷீஆ பகுப்பாய்வாளர் மெஹ்தி ஹலஜி நிரூபிக்கிறார். செய்யித் குத்துபுடைய பல நூற்கள் ஈரானிய புரற்சிக்கு முன்னரும் பின்னரும் பாரசீக மொழியில் கொமைனி, அலி காமெய்னி மற்றும் ஷீஆ அறிஞ்சர்கள் மூலமும் வெளியிடப்பட்டுள்ளது.
‍‍‍‍‍‍ ‍‍
ஜமாத்தே இஸ்லாமியின் இஸ்தாபகர் மவ்லானா மவ்தூதி அவர்களுக்கும் ஈரானிய புரட்சிக்கும் உள்ள சம்பந்தம் பற்றி அவருடைய மகன் Dr அஹ்மத் பாரூக் மவ்தூதி அவருடைய கூற்று "இரண்டு சகோதரர்கள் - கொமைனி மற்றும் மவதூதி" என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தில் (p129) வெளியிடப்பட்டுள்ளது: "அல்லாமா கொமைனிக்கு அப்பா ஜானுடன் (தந்தையுடன்) மிகவும் பழைய நெருக்கமான தொடர்பு இருந்தது, ஆயத்துல்லாஹ் கொமைனி அவருடைய (தந்தையுடைய) புத்தகங்களை பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்து அதை கும் பிரதேசத்தில் பாடத்திட்டங்களில் சேர்த்தார். அல்லாமா கொமைனி எனது தந்தையை சந்தித்தது 1963 ஆண்டு ஹஜ்ஜின் போது, ஈரானை போன்று பாகிஸ்தானிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதே எனது தந்தையின் ஆசையாக இருந்தது. ஈரானிய புரட்சியின் வெற்றி குறித்து அவருடைய கடைசி மூச்சு வரை மிகவும் கரிசனையோடு இருந்தார்."
‍‍‍‍‍‍ ‍‍
அடுத்தது ஹவாரிஜ்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையில் இருக்கும் உறவு.
அல்காஇதா மெய்நிகர் தலைவர்கள் ஈரானில் தான் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள், ஈரானில் ஷஹீத் உஸாமா பின் லாதின் என்ற பெயரில் ஒரு வீதி இருக்கின்றது. 2016 மார்ச் 2 ஆம் திகதி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் உஸாமா பின் லாதின் தனது பிரதிநிதி ஒருவரை ஈரானை அச்சுறுத்தியமைக்கு கண்டித்து எழுதிய கடிதத்தில் "நிதி, பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்புகளுக்கு ஈரான் தான் எமது பிரதான நாடி என்பதை நீர் அறிவீர்" என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய புலனாய்வு வெளியிட்டுள்ளது.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
மூன்றாம் மூலக்கூறு:
ஹுரூஜ்: ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சி/நடவடிக்கை
‍‍‍‍‍‍ ‍‍
இதை பற்றி நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை, மூன்று சாரார்களுடைய பேச்சுக்கள் எழுத்துக்கள் அவர்கள் பகிரும் உணர்வுகள் எல்லாமே பொதுவாக ஆட்சியாளருக்கு எதிராக மக்களை தூண்டுவதை தான் காண்கிறோம், இருந்தாலும் சில குறிப்புகளை மாத்திரம் பதிவிடுகிறேன்.
‍‍‍‍‍‍ ‍‍
முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக இஹ்வான்கள் கருத்து தெரிவிப்பார்கள், அதில் ஈரானிய மீடியாக்களில் பரத்தப்படும் பொய்களை பரத்துவதும் இவர்களது வழக்கம். அதற்கு சிறந்த உதாரணம் 2015 ஆம் ஆண்டு மக்காஹ்வில் கிறேன் விழுந்தது மற்றும் மினாவில் ஷீஆக்கள் சன நெரிசல் ஏற்படுத்தி மக்களை கொண்டதும், இந்த சம்பவம் குறித்து ஈரானிய மீடியாக்களில் பரத்தப்பட்ட பொய்களையே இஹ்வான்களும் பரத்திக்கொண்டிருந்தார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
ஆட்சியாளர் எவ்வளவு தான் மோசமானவராக இருந்தாலும் அவருக்கு (நல்ல விஷயங்களில்) கட்டுப்பட்டு நடக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியிருக்கிறார்கள். மோசடி செய்யும் ஆட்சியாளனை அல்லது கொடுங்கோல் ஆட்சியாளனை நீக்க வேண்டும் என்ற சிந்தனை லெனின் போன்ற அரசியல் சிந்தனையாளர்களுடைய சிந்தனையாகும் அது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை தடுத்திருந்தும் அதை செய்வது மட்டுமன்றி அதற்கு வசந்தம் என்று பெயர் சூட்டுவது அடாவடித்தனமாகும்.
‍‍‍‍‍‍ ‍‍
ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று சொன்னதும் எமக்கு முர்ஜி என்றும், மன்னர்களுக்கு தேவை போல் மார்க்கத்தை வளைப்பவர்கள் என்றும், மன்னார் விஷயத்தில் மென்மையை கடைபிடிப்பவர்கள் என்றும், ரியாழுக்கு பத்வா கொடுப்பவர்கள் என்றும், ஸஊதி ஸலபிஸ்ம் என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் என்ன பெயர் சூட்டினாலும் இது நபியவர்கள் தடுத்தது, அஹ்லுஸ் ஸுன்னாஹ்க்களின் அடிப்படைகளில் ஒன்று, அவர்களுடைய மன்ஹஜ் வழிதவறிய மன்ஹஜ் என்பது தான் இங்கு கவனிக்கவேண்டியது. நபியவர்களது வார்த்தைக்கு எந்தமதிப்பும் கொடுக்காதவர்களால் மட்டுமே இப்படி விமர்சிக்க முடியும், இஹ்வான்களை அப்படி தான் நாம் அறிந்தும் இருக்கிறோம், ஸுன்னாஹ் போபியாவின் மொத்தவடிவமும் இஹ்வான்கள் தான் என்று சொல்லுமளவுக்கு!
‍‍‍‍‍‍ ‍‍
தெளிவான குப்ர் செய்யாதவரை ஆட்சியாளருக்கு கட்டுப்பட்டு நடப்பது அஹ்லுஸ் ஸுன்னாஹ் மன்ஹஜ், உங்களுடைய மன்ஹஜ்ஜை நீங்க மீள்பரிசீலனை செய்வது உங்களுக்கு நல்லது.
‍‍‍‍‍‍ ‍‍
இமாம் இப்ன் தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ்: கொடுங்கோல் ஆட்சியாளர்கள் விஷயத்தில் பொறுமை மேற்கொள்வது அஹ்லுஸ் ஸுன்னாஹ்களின் அடிப்படைகளில் ஒரு அடிப்படையாகும்" [மஜ்மூ அல்பதாவா 28/179]
‍‍‍‍‍‍ ‍‍
இன்று சிலர் இமாம் இப்ன் தைமிய்யாஹ்வை சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்கள் ஆனால் உண்மையில் அவர்களுடைய அகீதாவுக்கும் மனஹஜ்ஜுக்கும் இமாம் அவர்கள் எதிரானவர் என்பதை எடுத்து காட்டுவதற்கும் சேர்த்தே இதனை நான் பதிவுசெய்தேன்.

இது அல்லாத ஸஹாபாக்களை விமர்சித்தல்/தக்fபீர் செய்தல் போன்ற இன்னும் சில மூலக்கூறுகள் இருக்கின்றது, ஆனால் அவைகளில் எல்லா ஹவாரிஜ்களும் இஹ்வான்களும் உடன்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது.
‍‍‍‍‍‍
இவர்களுடைய வழிதவறிய சிந்தனைகளில் இருந்தும் சதிகளில் இருந்தும் எம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
Previous Post Next Post