எதிர்ப்புக்களையும் மீறி இஸ்லாம் ஓங்கி வளரும்

இஸ்லாம் மார்க்கம் குரங்கில் இருந்து பிறந்ததாக கற்பனை செய்யப்படும் நாஸ்தீக மனிதர்களின் மார்க்கமோ சிந்தனையை கிடையாது. 

மாறாக  பிசுபிசுப்பான, தட்டினால் கிணீர் என்ற ஓசையைத் தரும் களிமண்ணில் இருந்து முதல் மனிதர் ஆதாமைப் படைத்த அகிலங்களின் அதிபதியாகிய அர்ஷின் இரட்சகன் அல்லாஹ் மனித குல நன்மைக்கு மரணத்தின் பின்னாலுள்ள நிரந்தர வாழ்வில் சுவனத்தை அடைவதற்காக தேர்வு செய்யப்பட்ட தூய வழிமுறையாகும். அதில் 
சாதாரண மலசல  வழிமுறைகள் முதல் பெரிய பெரிய வழிமுறைகள் வரை காட்டி தந்த பூரணம் பெற்ற அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்ட போதனேகள் திரிபுபடுத்தப்படாத அற்புத நெறியாகும்.

 الاسلام دين فطري صالح لكل زمان ومكان وللإنسانية جمعاء  
இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் அனைத்து மனித குலத்திற்கும் பொருத்தமான இயற்கை இறை மார்க்கமாகும் என இஸ்லாமிய அறிஞர்கள் பெருமையோடு குறிப்பிடும் ஆன்மீகம் லௌகீகம் இரண்டும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் போன்ற அழகிய நெறியாகும்.

அது வளரும் மார்க்கமே அன்றி, அழியும்  மார்க்கம் அன்று. 

சில போது  எங்கோ ஒரு கோடியில் அது நொந்து நலிந்து, பலவீனப்படுத்தப்பட்டாலும் பலவீனமான காலத்தை வென்று வீறு கொண்டு சீறிக்கொண்டெளும் ஆற்றல் அதற்குண்டு.

காரணம் அது இறை உத்தரவாதம் பெற்ற இறைவன் பூமியில் உள்ள மனிதர்களுக்கு பொருந்தி அவனால் தேர்வு செய்யப்பட்ட ஒழுங்கு மார்க்கமாகும்.

உலகில் அதி வேகமாகப் பரவும் மார்க்கமாக நவீன காலத்தில் இஸ்லாம் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது அதன் எதிரிகளுக்கு வைற்றில் புளி கரைக்கும் ஒன்றுதான்.

கி.பி. 2050 உலக  முஸ்லிம்களின் தொகை கிரிஸ்தவ சமய மக்களின் எண்ணிக்கையை நெருங்கிவிடும் என்றும், 2070 இஸ்லாம் உலகில் முதல் மார்க்கமாக  அடையாளப்படுத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

கீழ் உள்ள அரபி மூலமான இணைப்பில் இணையுங்கள்.

1) https://amp-dw-com.cdn.ampproject.org/v/s/amp.dw.com/ar/%D8%AF%D8%B1%D8%A7%D8%B3%D8%A9-%D8%A3%D9%85%D8%B1%D9%8A%D9%83%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%A5%D8%B3%D9%84%D8%A7%D9%85-%D8%B3%D9%8A%D8%B5%D8%A8%D8%AD-%D8%A3%D9%83%D8%A8%D8%B1-%D8%AF%D9%8A%D8%A7%D9%86%D8%A9-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%B9%D8%A7%D9%84%D9%85-%D8%A8%D8%AD%D9%84%D9%88%D9%84-2070/a-42921240?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#amp_tf=From%20%251%24s&aoh=16547154064738&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fwww.dw.com%2Far%2F%25D8%25AF%25D8%25B1%25D8%25A7%25D8%25B3%25D8%25A9-%25D8%25A3%25D9%2585%25D8%25B1%25D9%258A%25D9%2583%25D9%258A%25D8%25A9-%25D8%25A7%25D9%2584%25D8%25A5%25D8%25B3%25D9%2584%25D8%25A7%25D9%2585-%25D8%25B3%25D9%258A%25D8%25B5%25D8%25A8%25D8%25AD-%25D8%25A3%25D9%2583%25D8%25A8%25D8%25B1-%25D8%25AF%25D9%258A%25D8%25A7%25D9%2586%25D8%25A9-%25D9%2581%25D9%258A-%25D8%25A7%25D9%2584%25D8%25B9%25D8%25A7%25D9%2584%25D9%2585-%25D8%25A8%25D8%25AD%25D9%2584%25D9%2588%25D9%2584-2070%2Fa-42921240

(2) https://amp-france24-com.cdn.ampproject.org/v/s/amp.france24.com/ar/20180904-%D8%A7%D9%84%D8%A5%D8%B3%D9%84%D8%A7%D9%85-%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D8%A7%D9%86%D8%A9-%D8%A7%D9%84%D8%A3%D9%88%D9%84%D9%89-%D8%A7%D9%84%D8%B9%D8%A7%D9%84%D9%85-%D9%86%D9%85%D9%88-%D8%AF%D9%8A%D9%85%D9%88%D8%BA%D8%B1%D8%A7%D9%81%D9%8A%D8%A7-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D9%8A%D8%AD%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%8A%D9%87%D9%88%D8%AF%D9%8A%D8%A9?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#amp_tf=From%20%251%24s&aoh=16547157886261&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fwww.france24.com%2Far%2F20180904-%25D8%25A7%25D9%2584%25D8%25A5%25D8%25B3%25D9%2584%25D8%25A7%25D9%2585-%25D8%25A7%25D9%2584%25D8%25AF%25D9%258A%25D8%25A7%25D9%2586%25D8%25A9-%25D8%25A7%25D9%2584%25D8%25A3%25D9%2588%25D9%2584%25D9%2589-%25D8%25A7%25D9%2584%25D8%25B9%25D8%25A7%25D9%2584%25D9%2585-%25D9%2586%25D9%2585%25D9%2588-%25D8%25AF%25D9%258A%25D9%2585%25D9%2588%25D8%25BA%25D8%25B1%25D8%25A7%25D9%2581%25D9%258A%25D8%25A7-%25D8%25A7%25D9%2584%25D9%2585%25D8%25B3%25D9%258A%25D8%25AD%25D9%258A%25D8%25A9-%25D8%25A7%25D9%2584%25D9%258A%25D9%2587%25D9%2588%25D8%25AF%25D9%258A%25D8%25A9

அதில் இஸ்லாமிய வளர்ச்சி பற்றியும் 2060-2070 களில்  இஸ்லாமிய மார்க்கமே உலகில் முதல் மார்க்கமாகவும் பார்க்கப்படும் அளவு எல்லை கடந்து இஸ்லாம் பரவுவது பற்றிய தகவல்களைக் காணலாம். 

இந்த நிலை ஏற்படாதிருக்கவே இஸ்லாத்தின் உள் எதிரிகளான சூஃபிகளை வளர்க்க அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல கோடிப் பணங்களை செலவு செய்தும் முகம் குப்புற விழுந்து தோல்வி அடைகின்றன. 

சிந்திக்க
-------
1400 வருடங்களுக்கு முன்னால் ஒரு முஹம்மத், அவரது அன்பு மனைவி கதீஜா அம்மையார், அவரது உற்ற தோழர்களன அபூபக்கர் ஸித்தீக்,  உமர் ஃபாரூக், உஸ்மான் பின் அஃப்பான், அலி, பிலால் (ரழிகள்) என இருந்த விரல் விட்டு எண்ணும் தொகையினருடன் இன்று 200 கோடியையும் தாண்டி முஸ்லிம்களின் தொகை எகிறி விட்டது என்றால் அது இறை மார்க்கமின்றி வேறு என்னவோ!

ஆஃபிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் நாலா திசைகளிலும் ஜெட்வேகத்தை தாண்டி இஸ்லாம்  உலகில் அதிவேகமாக கால்பதித்து தனது வீரியத்தில் பயணிப்பதன் காரணமாகவே அதன் வளர்ச்சியினைத் தடுக்க இஸ்லாம் ஒரு அடிப்படைவாத சமயம், தீவிரவாதத்தைப் போதிக்கின்றது, பெண்களை ஒடுக்குகின்றது, உரிமைகளை பறிக்கின்றது என அதன் எதிரிகள் மீடியாக்கள் மூலமும் வெறுப்பு பிரச்சார உத்திகள் ஊடாகவும் அவதூறு கூறி, அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த படாதபாடுபடுகின்றனர். பாவம் அவர்கள்.

அதற்காக கோடிக்கணக்கான பணத்தை பொதுவெளியில் வீண் விரயமும் செய்கின்றனர். 

கேலிச் சித்திரம் குர்ஆன் எரிப்பு, 

பொது இடங்களில் ஹிஜாப், தொழுகை தடை என பலதையும் செய்து பார்க்கின்றனர்.

தமது தீய சதியின் வெற்றிக்காக 
தமது 
மீடியாக்களை,   
ஆட்சி அதிகாரத்தை, 
செல்வங்களை, 
சமூக ஊடகங்களை வைத்து குரைத்தும் பிரச்சாரம் செய்தும்   பல ஆண்டுகளாகியும் விட்டன.

இருந்தும் இஸ்லாம் பற்றிய சிலரின் தூய தேடலும் பின் அதற்குள் அவர்களின் மனம் நிறைந்த 
பிரவேசமும் தொடரவே செய்கின்றன.

அமெரிக்காவில் மாத்திரம் நாளாந்தம்
624 பேர் வரை இஸ்லாத்தை தழுவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நகரங்களில் சுபஹுடைய அதான் தவிர்ந்த ஏனைய நேர அதான்களை ஒலி பெருக்கியில் ஒலிக்க 2022 ம் ஆண்டு அந்நாடு அனுமதித்துள்ளது என்றால் பாருங்களேன்.

இஸ்லாமிய எதிர்ப்பு கலாச்சாரம் என்பது முதல் இறைத் தூதரான நூஹ் நபி காலம் முதல் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை வந்த இறைத் தூதர்கள் சந்தித்த ஒன்றுதான். 

தொலைத் தொடர்பு சாதனங்களே இல்லாத அக்கால நிலையே  இவ்வாறு  என்றால் மனிதன் தொழில் நுட்பத்தில் வானளாவ உயர முன்னேறிய, தொலைத் தொடர்பு சாதனங்கள் நிறைந்த இந்தக் காலம் பற்றி சொல்லவா வேண்டும்.?

இருந்தும் இஸ்லாம் யாரிடமும்  மண்டி இடாது. மாற்றமாக அது பலரை  தன்னிடம் மண்டி இட வைத்துள்ளது. 

இஸ்லாமிய எதிரிகளின் உறக்கத்திற்கு விவாகரத்து கொடுக்கும் குர்ஆனிய வசனம்

يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏ [ التوبة/32  ]
 அவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) ஜோதியை
தம் வாய்களைக் கொண்டேனும்
 (ஊதி) அணைத்துவிட  விரும்புகின்றார்கள் - ஆனால்; இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (9:32) என்ற இறை சவாலுடன், பின்வரும் வசனத்தில் அதற்கான காரணத்தையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

 هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ‏

அவனே தனது தூதரை (முஹம்மது நபியை) நேர் வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் -  இணை வைப்போர், (இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், அதை எல்லா மார்க்கங்களையும் விட  மிகைக்கச் செய்யவே (அவன் இவ்வாறு செய்தான்.) (9:33) என்ற வசனத்தின் மூலம்  இஸ்லாமிய மார்க்கம் இறை மார்க்கம் என்பதை மிகத் தெளிவாக விளங்க முடியும்.

இந்த மார்க்கம் பின்வரும் காலங்களில் உலகின்  நாலா திசைகளிலும் பரவும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

عن تميم الدَّاري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ليَبْلُغن هذا الأمر ما بلغ اللَّيل والنَّهار، ولا يترك الله بيت مَدَرٍ ولا وَبَرٍ إلَّا أدخله اللهُ هذا الدِّين، بِعِزِّ عَزِيزٍ أو بِذُلِّ ذَليلٍ، عِزًّا يُعِزُّ الله به الإسلام، وذُلًّا يُذِلُّ الله به الكفر (( مسند أحمد ، الطبراني، البيهقي) 

இரவு பகல் இருக்கும் தேசமெங்கும் 
இந்த மார்க்கம் நிச்சயமாக சென்றடையும். 
சிறிய சாதாரண ஓலைக் குடிசைகளையும் அது விட்டு வைக்காத அளவு (அங்கெல்லாம்) அதனை அல்லாஹ் புகுத்தியே தீருவான் . ஒன்று அதை ஏற்று கண்ணியம் பெற்று வாழ்வர், அல்லது அதை மறுத்து இழிவாக வாழ்ந்து சாவர்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அஹ்மத், தபரானி, பைஹகி).

இந்த நபிமொழியை அறிவிக்கின்ற நபித்தோழர் தமீமுத்தாரி (ரழி) அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களாக இருந்த பலர் இஸ்லாத்தை ஏற்று கண்ணியமாக வாழ்ந்ததையும் அதை மறுத்து ஜிஸ்யா வரி செலுத்தி மிகக் கேவலமாக வாழ்ந்ததையும் தான் நேரில் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார்கள்.

மேற்படி ஆதாரங்களின் அடிப்படையில் மானுட சமூகம் எங்கெல்லாம் வாழுமோ அங்கெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் சென்றடையும். அதனை மேலுள்ள குர்ஆன் வசனங்களும் நபி மொழியும் உறுதி செய்கின்றன. 

அறியாமை காரணமாக  இஸ்லாத்தை விமர்சிக்கின்ற என சகோதரர்களே! இஸ்லாம் பற்றி அதிகமதிகம் தேடிப்படியுங்கள். மரணத்தின் பின்னால் உள்ள மறுமையில் கைசேதப்படுவதில் எந்த பயனுமில்லை. 
 

எம்.ஜே.  எம்.ரிஸ்வான் மதனி 

أحدث أقدم