மறுமையில் சொர்க்கத்தில் சொர்க்கவாசிகளோடு அல்லாஹ் நேரடியாக பேசும் போது நடைபெறும் அழகிய காட்சி.

சொர்க்கவாசிகள்மீது இறைவன் தனது உவப்பை அருள்வதும் அதன் பின்னர் ஒருபோதும் அவர்கள்மீது கோபப்படாமல் இருப்பதும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, "சொர்க்கவாசிகளே!" என்று அல்லாஹ்
அழைப்பான். அதற்கு அவர்கள், "எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன" என்று பதிலளிப்பார்கள்.
 அப்போது அல்லாஹ், "திருப்தி அடைந்தீர்களா?" என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், "உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?" என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ், "இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?" எனக் கேட்பான். 
அவர்கள், எங்கள் "அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், " என் உவப்பை (திருப்போருத்தத்தை) உங்கள்மீது
அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்" என்று கூறுவான். என அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்- 5444.)

தெளிவு - 
(1)அல்லாஹ்வின் அழைப்பு, அவனது பேச்சு என்பது முறை கற்பிக்க முடியாத யதார்த்தமானதே தவிர,  அஸரீரி கிடையாது.

அது அவனது அடியார்கள் செவெமடுக்கும்படியான அழைப்பாகும்.

(2). அல்லாஹ் சுவனவாசிகளோடு அவனது உண்மையான தோற்றம் தெரியும்படியாகவே உரையாடுவான் என ஹதீஸ் கூறி இருக்க, அவனை சுத்த சூனியமாக சித்தரிப்பது இஸ்லாமிய கொள்கை கிடையாது.

(3) மறுமை நாளில் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முஃமினான மக்கள் அல்லாஹ்வை சந்திப்பதும், அவனது வெகுமதிகளைக் கொண்டு அகமகிழ்வதும் உண்மையான நிகழ்வாகும். 

யா அல்லாஹ் மறுமை நாளில் உன்னைக் முகமலர்ச்சியோடு காணும் நற்பாக்கியத்தை தருவாயாக!

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி 

أحدث أقدم