மஃஆலிமுஸ் ஸுன்னா நபவிய்யா - அறிமுகம்

தாபிஈன்களில் மிகவும் பிரபலமான இமாமான ஹஸ்ஸான் பின் அதிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
வானவர் ஜிப்ரஹில் அலைஹிஸ்ஸலாம் திருக்குர்ஆனை எவ்வாறு முக்கியத்துவத்துடன் நபியவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்களோ அதே போன்று தான் சுன்னாவையும் நபியவர்களுக்கு கொண்டு வந்தார்கள்.

நூல் - இப்னுல் முபாரக் (ஜியாதாத் அஸ்ஸுஹ்து -32 )
அல்மர்வஸி (அஸ்ஸுன்னா -32 )
தாரமி, அபுதாவூத், அல்ஃபதஹ் - இப்னுல் ஹஜர் -இது ஸஹீஹான ஸனது நன்றி இமாம் பைஹக்கியும் கூறுகிறார்.

قال الإمام التابعي حسان بن عطية: "كان جبريل عليه السلام ينزل على النبي صلى الله عليه وسلم بالسنة كما ينزل عليه بالقرآن، ويعلمه إياها كما يعلمه القرآن".
*الإبانة الكبرى لابن بطة العكبري

رواه ابن المبارك في (زيادات الزهد)، (ص32)، (رقم23)؛ والمروزي في (السنة)،   (ص32)، (رقم102)؛ والدارمي في (سننه)، (1/ 153)، (ح588)؛ وأبو داود في    (المراسيل)، (ص361). وأورده ابن حجر في (الفتح)، (13/ 291) وعزاه للبيهقي بسند    صحيح، وقال: (حسان بن عطية أحد التابعين من ثقات الشاميين).

கீழ்காணும் இறைமறை வசனங்களும்  நபியவர்களின் ஸுன்னாக்களான நபி வழியும் இறை செய்தியே என்பதை தெளிவாக கூறுகிறது.

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى‏
மேலும், அவர்தம் மன இச்சையின்படி பேசுவதில்லை.
(அல்குர்ஆன் : 53:3)

اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏
இது (அவர்மீது) இறக்கியருளப்பட்ட வஹியே* ஆகும்.
(அல்குர்ஆன் : 53:4)

"ஸுன்னா ", (நபி வழி)என்பது கடமை இல்லாத விதத்தில் செய்பவருக்கு கூலியும் விட்டவருக்கு தண்டனையும் இல்லாத ஒன்றிற்கு சொல்லப்படும்.

ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளர் தனது இபாதத்துகள் முழுமை பெற வேண்டும் இறைவனால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நாடினால் அவர் நபி வழியை கடைப்பிடித்தாலே இறை பொருத்தத்தை பெற முடியும்.

இறைத்தூதர் ﷺ அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் நபிமொழிகளாக மார்க்கத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

நபி அவர்களின் அனைத்து நபி மொழிகளும் ஆறு கிரந்தங்களில் இருந்து அதிகப்படியாக 14 கிரந்தங்கள் வரை ஒன்று திரட்டப்பட்டுள்ளன.

இந்த நபி மொழிகளை நாம் பின் வருமாறு பிரிக்கலாம் இன்று டாக்டர் ஸாமி அப்துல்லாஹ் அல்மஹ்லுஸூ ஹஃபிழஹுல்லாஹு கூறுகிறார்

நபி மொழிகளின் வழிகாட்டுதல்கள் கீழ் வரும் விகிதாச்சாரத்தில்......

1- ஃபிக்ஹூ மார்க்கச் சட்டங்கள் -75 % 
2-இஸ்லாமிய கொள்கைகள் - 8%
3- குர்ஆனியக் கல்விகள் -3% 
4- நபிமார்களின் வாழ்க்கை வரலாறு-  1%
5- கனவுகளின் விளக்கங்கள் -1%
6- அமல்களின் சிறப்புகள் -2 % 
7- நற்குணங்கள் -5 %
8-  ஷரீஆவின் ஒழுக்கங்கள்- 5% 
9- நபி மருத்துவம் - 1 % 

ஹதீஸ் கிரந்தங்கள் பொதுவாக எட்டாம் நூற்றாண்டுகளில் தான் ஒன்று திரட்டப்பட்டன என்ற ஒரு வாதம் இருந்து வருகிறது , ஆனால் டாக்டர் ஸாமி அவர்கள் தனது ஆய்வில் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலே அபூ ஷாஹ் ரழியல்லாஹு அன்ஹு என்ற எமனைச் சிறந்த ஒரு ஸஹாபி நபி அவர்களிடம் அவர்களின் நபி மொழிகளை திரட்டுவதற்கு அனுமதி பெற்று இருக்கிறார் என்ற விடயம் ஸஹீஹ் புகாரியில் வந்திருக்கிறது என்ற செய்தியை கூறுகிறார்.

நபிமொழி கிரந்தங்களில் முதலாவதாக திரட்டப்பட்ட ஒரு ஏடு 
1-ஸஹீஃபத் அபூ ஷாஹ் (صحيفة ابي شاه )
2-ஸஹீஃபத் அப்துல்லாஹ் பின் அமிரிப்னில் ஆஸ் 
3- ஸஹீஃபத் அமீருல் முஃமினீன் அலி 
ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மீர்

ஆனால் உமையாக்கள் காலத்தில் தான் அதிகாரப்பூர்வமாக நபி மொழிகள் தொகுகப்பட்டது .

பின்வரும் சஹாபாக்கள் நபி மொழிகளை அதிகமதிகமாக அறிவித்திருக்கிறார்கள் இவர்களில் இருந்து தான் நபி மொழிகள் பல கிரந்தங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

1- அபூ ஹுரைரா - ரழியல்லாஹு அன்ஹு - 5374
2- அப்துல்லாஹ் பின் உயர் ரழியல்லாஹு அன்ஹு - 2630
3- அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு - 2286
4- ஆயிஷா ரழியல்லாஹூ அன்ஹா -2210
5- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹு-1660
6- ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரழியல்லாஹூ அன்ஹு -1540
7- அபூ ஸஃஈதுல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு-1170
8- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு -848
9- அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் -700
10-உமர் பின் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு- 537
11- அலி பின் அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு- 536

நவீன காலங்களில் தொகுக்கப்பட்ட ஸஹீஹான நபி மொழிகள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்ட ஒரு கிரந்தம்
معالم السنة النبوية
"மஃஆலிமுஸ் ஸுன்னா நபவிய்யா ", ஆகும்.

அஷ்ஷைக். ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ (80 வயதில் உள்ளவர்) நபிகளார் (ஸல்) அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் (ஹதீஸ்களை) ஒழுங்கமைத்தல் அதாவது ஸுன்னாவை வரிசைப்படுத்துல் திரும்ப திரும்ப வரக்கூடிய ஹதீஸ்களை தவிர்த்து அதனை முறைமைப்படுத்தி தலைப்பு வாரியாக பிரித்து அதனை ஓழுங்குபடுத்தல் பணியினை மரியாதைக்குரிய அஷ்ஷைக் ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ அவர் மிக திறம்பட செய்து அதனை உம்மத் பயன்பெறும் வகையில் தந்துள்ளார். ஹதீஸ்களை வரிசைப்படுத்துல் என்ற அடிப்படையில் நபிகளாரின் (ஸல்) அனைத்து பொன்மொழிகளும் 1,14,194 ஆகும். அதிலிருந்து திரும்ப திரும்ப இடம்பெறாத 28,430 ஹதீஸ்களை பிரித்து எடுத்தார். அதிலிருந்து 3,921 ஹதீஸ் என்ற வரைமுறைக்குள் கொண்டு வந்துள்ளார். அதாவது இந்த 3921 ஹதீஸ்களை அறிந்து கொண்டால் நபிகளாரின் அனைத்து செய்திகளின் சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். 3921 ஹதீஸ்களை கொண்ட இந்த புத்தகத்தின் பெயர் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா அந்நபவிய்யா) பல்வேறு தலைப்பின் கீழ் இதனை தொகுத்துள்ளார்.

சுமார் 3921 ஹதீஸ்களை கீழ்கண்ட முறைமையின் கீழ் சுமார் 14 கிதாபுகளிலிருந்து தொகுத்துள்ளார்.

الجامع بين الصحيحين ஜாமிஆ பைன ஸஹீஹைன் (மொத்தம் 2 கிதாபிலிருந்து)  
இதில் புகாரீயில் இடம்பெறாத முஸ்லிமில் உள்ள செய்திகளை புகாரீயுடன் சேர்த்தார் அதாவது திரும்ப திரும்ப இடம்பெறாத ஹதீஸ்களை ஒன்று இணைத்தார்.

زوائد السنن على الصحيحين ஜவாயீத் ஸுனன் அலா ஸஹீஹைன்: (மொத்தம் 5 கிதாபிலிருந்து)  
ஸுனன் அபீதாவூத், ஸுனன் திர்மிதி, ஸுனன் நஸாயீ மற்றும் ஸுனன் இப்னு மாஜா மற்றும் ஸுனன் தாரமீ இந்த 5 கிதாபிலிருந்து புகாரீ முஸ்லிம் இடம்பெறாத ஹதீஸ்களை தொகுத்து ஜவாயீத் ஸுனன் அலா ஸஹீஹைன் என பெயரிட்டு இந்த கிதாபை வெளியிட்டார்.

زوائد الموطأ والمسند ஜவாயீத் முஅத்தா மற்றும் முஸ்னத் (மொத்தம் 2 கிதாபிலிருந்து) 
முஅத்தா மாலிக், முஸ்னத் அஹமத் என்ற இரு கிதாபிலிருந்து மேற்சொன்ன 7 கிதாபுகளில் இடம் பெறாத ஹதீஸ்களை தொகுத்து ஜவாயீத் முஅத்தா மற்றும் முஸ்னத் என்று தனி கிதாபை வெளியிட்டார்கள்.

جامع الأصول التسعة ஜாமிவு உஸூலுத் திஸ்ஆ: 
மேற்சொன்ன 9 கிதாபுகளில் திரும்ப திரும்ப வரும் ஹதீஸ்களை நீக்கி விட்டு புதிய கிதாபை வெளியிட்டார்கள் அதன் பெயர்தான்: جامع الكتب التسعة ஜாமிவு குதுபுத் திஸஅ.

زوائد السنن الكبرى للبيهقي ஜவாயீத் ஸுனன் குப்ரா பைஹகீ 
பைஹகீ கிதாபில் மேற்சொன்ன 9 கிரந்தங்களில் இடம்பெறாத ஹதீஸ்களை தனியாக பிரித்தெடுத்து இந்த கிதாபை வெளியிட்டார்.

زوائد ابن خزيمة وابن حبان والمستدرك على الكتب التسعة ஜவாயீத் இப்னு குஸைமா , இப்னு ஹிப்பான் 
(மொத்தம் 2 கிதாபிலிருந்து)
மேற்சொன்ன 10 கிரந்தங்களில் இடம்பெறாத ஹதீஸ்களை ஸஹீஹ் இப்னு ஹிப்பான் மற்றும் இப்னு குஸைமா என்ற கிரந்தங்களிலிருந்து தனியாக பிரித்தெடுத்து இந்த கிதாபை வெளியிட்டார்.

زوائد الأحاديث المختارة لضياء الدين المقدسي على الكتب التسعة 
மேற்சொன்ன 9 கிரகந்தங்களில் இடம்பெறாத ஹதீஸ்களை தனியாக பிரித்தெடுத்து இந்த கிதாபை வெளியிட்டார்.

ஆக மொத்தம் 14 கிரந்தங்களிலிருந்து 3921 ஹதீஸ்களை கொண்ட இந்த புத்தகத்தின் பெயர் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா அந்நபவிய்யா)
 
معالم السنة النبوية
"மஃஆலிமுஸ் ஸுன்னா நபவிய்யா ", 
தற்பொழுது தமிழ் மொழியில் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டு அப்துல்லாஹ் பப்ளிகேஷன் மூலம் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது அல்லாஹ் அவர்களின் இந்த பணியை ஏற்றுக் கொள்வானாக!!

ஆக நபிமொழி கிரந்தங்களில் இன்னும் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன பல தொகுப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகாரத்துடன் இருக்கக்கூடிய நபிமொழிகள் இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகள் பலகீனமான நபி மொழிகள் என்று பல வகைகளில் பிரிக்கப்பட்டு இன்றைய காலத்தில் எளிதாக நபி மொழிகளை பின்பற்றுவதற்கு நவீன காலங்களில் பல ஹதீஸ்களை வல்லுனர்கள் முயற்சி செய்து தொகுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒன்று,
 
அரபு நாட்டு உலமாக்களாகிய அல்லாமா மஹ்மூத் ஷாகிர்,அல்லாமா ஷுஐப் அர்னாவூத்,அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுமு ல்லாஹ் ,தற்பொழுது ஈராக்கில் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய சேவை ஆற்றி வரும் இன்றைய காலத்து இப்னு ஹஜர் அல்லாமா பஷ்ஷார் அவ்வாது மஃரூப் .

இந்தியாவைச் சேர்ந்த இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் , அல்லாமா அன்வர்ஷா கஷ்மீரி ரஹிமஹுமுல்லாஹ்....

இவர்களைப் போன்ற பல அறிஞர்கள் ஸுன்னாவை பாதுகாத்து அதற்காக தனது வாழ்க்கையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக !!



Previous Post Next Post