- ஸிஹாப்தீன் ஹாமி
1. அத்தஹிய்யாத்தில் அஹ்ஸனுல் கலாமி....என்று ஓதுவது.
2. இமாம் இரண்டு சூறா ஓதியதும் மஃமூகள் சூறா பாத்திஹா ஓதுவதற்காக இமாம் ருகூவிற்கு முன்பு அமைதியாக நிற்பது.
3. "ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா" என்று ஓதிய பிறகு சுப்ஹான ரப்பியல் அஃலா என்று சப்தமாக ஓதுவது.
4. பெருநாள் மற்றும் ஜனாஸா தொழுகைகளில் இரு கைகளையும் உயர்த்தி உயர்த்தி (ஆரம்பத் தக்பீர் தவிர்ந்த மற்ற தக்பீர்களில்) தக்பீர் கட்டுவது.
5. வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது.
6. தங்களின் இயக்கத்தினரை மட்டும் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்று அழைப்பது.
7. கலிமா சொன்ன, இஸ்லாமிய கடமைகளை செய்கிற முஸ்லீம்களை தங்களின் இலங்கை ஏத்தளை தலைவரிடம் பைஅத் செய்தால்தான் முஸ்லிம் என்றும் இல்லையேல் அவர் ஜாஹில்,காபிர் என்றும் கூறுகின்றமை.
8.தமது இயக்கத்தில் சேராத ஒருவரை (ex: தப்லீக்,தவ்ஹீத் போன்ற ஜமாஅத்தினரை) திருமணம் செய்தால் முர்தத் என்று தீர்ப்பு வழங்குதல்.
9. அல்லாஹ் ரஸூலுக்கு மாறுசெய்தை விட அமீறுக்கு மாறு செய்வதை குப்ராக, ரித்தத் ஆக பார்க்கின்றமை.
10. தங்களின் இயக்கத்தை விட்டும் ஒருவர் வெளியேறி வஹியின் வழியில் வாழ்ந்தாலும் அவரை மதம்மாறியவராக கருதி தீர்ப்ளிக்கின்றமை.
11. தொழுகையின் எல்லா இருப்புக்களிலும் அத்தஹிய்யாத் இருப்பில் விரல் நீட்டுவது போல் நீட்டுதல்.
12. இமாம் மிம்பரில் குத்பா பிரசங்கத்தின் போது கட்டாயம் அஸா வைத்திருக்க வேண்டும் என்பது.