சர்வதேசப் பிறையா? உள் நாட்டுப் பிறையா? இவ்விரு கருத்துக்களில் ஸலஃபி இமாம்களின் நிலைபாடு யாது?

- ஹுஸைன் இப்னு றபீக் மதனீ (MA - மதீனஹ்)

பொருளடக்கம்:

சர்வதேசப் பிறையா? உள் நாட்டுப் பிறையா?

தவறான வாதங்கள்
 1- இன்று சிலர் “நீங்கள்" என்று ஹதீஸில்  குறிப்பிடப்பட்டது உம்மத்தைக் குறிக்கும் என்று வாதிடுகின்றனர்.
 2- இன்னும் சிலர் உலகில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களை குறிக்கும் என்று வாதிடுகின்றனர்.
 3- இன்னும் சிலர் ஹதீஸில் "நீங்கள்" எனக்குறிபிடப்பட்டது சரியான கருத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் எனக் கூறுகின்றனர்.

மேலும் சில சான்றுகள்

எதிர் வாதங்கள்

பெரும்பாலான முஸ்லீம்கள் உள்நாட்டுப் பிறையை நடைமுறைப்படுத்தும் இடங்களில் சர்வதேச பிறையை நடைமுறைப்படுத்துவது ஸலஃபி பேரறிஞர்களின் வழிமுறைக்குட்பட்டதா?

சவூதி பேரறிஞர்கள் சபைத் தீர்மானம்

இமாம் இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்)

இமாம் அல்பானி (றஹிமஹுல்லாஹ்)

இமாம் இப்னுல் உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்)

அல்லாமஹ் ஸாலிஹ் அல்-பவ்ஸான்

அல்லாமஹ் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்

முழு இஸ்லாமிய உலகும் ஒரே நாளில் நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பது ஒற்றுமையை ஏற்படுத்துமா?

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் அங்குள்ள அதிகாரபூர்வ பிறை குழுவோ அல்லது பிறைக்கு பொறுப்பானவரோ இஸ்லாமிய நாட்டிலுள்ள அரசாங்கத்தின் இடத்தில் இருக்கின்றனர்.
 1- இமாம் இப்னு பாஸ் உள்ளடங்கலான சவுதி உலமாக்களின் ஆய்வு சபை தீர்மானம்
 2- கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் மக்களுக்கு மேற்படி ஆய்வுக்குழு வழங்கிய ஃபத்வா
 3- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்களின் பத்வா
மற்றுமொரு பத்வாவில்
 4- மதீனஹ் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களை கொண்ட ஆய்வுக்குழுவின் முடிவு
 5- ஷெய்க் பர்கூஸ் அவர்களின் ஃபத்வா

வானியலை அடிப்படையாக வைத்து பிறை சாட்சியம் மறுக்கப்பட்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பிறையை தீர்மானிக்கும் பொறுப்பாளர் அல்லது பிறைக் குழு பித்அத்வாதிகளாக இருந்தால் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லையா?

மேற்படி விடயத்தில் ஷெய்க் அல்பானி வழங்கிய இரண்டு பத்வாக்கள்.
பத்வா-1:
பத்வா-2:

பெரும்பாலான முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிறை குழு இருக்கும்போது வேறு ஒரு பிறை குழுவை உருவாக்குவது கூடாது

ஸலஃபி மன்ஹஜும் சர்வதேசப் பிறையும்


بسم الله الرحمن الرحيم

إنَّ الحَمدَ للهِ  نَحمَدُه  ونستعينُه ونَستغفرُه، ونَعوذُ بالله مِن شُرور أنفسِنا ومِن سيِّئاتِ أعمالِنا، مَن يَهدِه الله فلا مُضلَّ له، ومَن يُضلِل فلا هادِيَ له، وأشهَد أنْ لا إله إلَّا الله وحدَه لا شَريك له، وأشهَد أنَّ  محمَّدًا عبدُه ورسولُه، أمَّا بعدُ:

சர்வதேசப் பிறையா? உள் நாட்டுப் பிறையா?

மேற்படி ஃபிக்ஹ் ரீதியான பிறை கருத்து வேறுபாட்டில் ஒரு சமூகத்தில் பெரும்பாலான மக்கள் எந்தக் கருத்தை நடைமுறைப்படுத்துகிறார்களோ அந்தக் கருத்தையே அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும். தங்களுக்குள் பிரிந்து செயல்படக்கூடாது.    

"நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளில் தான் நோன்பு அமைந்திருக்கும்,  நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்பை விடுவதும் இருக்கிறது (நீங்கள் நோன்புப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் நோன்புப் பெருநாள்), நீங்கள் உழ்ஹிய்யஹ் கொடுக்கும் நாளில் தான் உழ்ஹிய்யஹ் கொடுப்பது அமைந்திருக்கும் (நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்)" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)   

இந்த ஹதீஸின் நோக்கங்களில் நோன்பு, பெருநாள் ஆகிய இரு கூட்டு வணக்கங்களில் ஒன்றுபட்டு நடக்க வேண்டும் என்பது உள்ளடங்கி உள்ளது. "நீங்கள் நோன்பு பிடிக்கும் நாள், நீங்கள் பெருநாள் கொண்டாடும் நாள்" என்பது ஒரு சமூகத்தில் அவர்களுடன் வாழும் மக்களையே முதலில் குறிக்கின்றது. இந்தக் கருக்தைப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால் தான் இப்பிரச்சினையைப் பற்றிப் பேசிய பல தற்கால அறிஞர்கள், அவர்களில் சர்வதேசப் பிறையை ஆதரிப்பவர்களும் கூட இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்கள் இஸ்லாமிய அறிஞர்கள் காலாகாலமாக கருத்து வேறுபட்டுக் கொண்டிருக்கும் பிறை விடயத்தில் ஏதாவது ஒரு கருத்தை நடைமுறைப்படுத்தும் போது அச்சமூகத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஒத்துப்போக வேண்டும், பிளவுபடக் கூடாது என்று கூறியுள்ளார்கள். 

இதே போன்று தான் இப்னு தைமியா (றஹிமஹுல்லாஹ்) போன்ற பழைய அறிஞர்களும் இப்பிரச்சனைக்கு ஒப்பான பிரச்சினையான ஒரு ஊரின் நீதிபதியால் பிறை கண்ட சாட்சியம் மறுக்கப்பட்டு அதைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டு நடக்கும் போது பிறைக் கண்டவர்களும் அவர்களுடைய தகவலை அறிந்தவர்களும் தாம் கண்ட பிறை அடிப்படையில் செயற்படாமல் மக்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்பதற்கு மேற்படி ஹதீஸையே ஆதாரம் காட்டியுள்ளனர். அந்த ஹதீஸில் நீங்கள் என்று குறிபிடப்பட்டுள்ளது அவர்களுடன் வாழும் மக்களைக் குறிக்கின்றது என்று அவ்வறிஞர்கள் கருதியதால் தான் அவ்வாறு அவர்கள் தீர்ப்புக் கூறியுள்ளனர். 

அதே போன்று தான் ஆஇஷஹ் (றலியல்லாஹுஅன்ஹா) அவர்களும் விளங்கியிருக்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவம் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. 

மஸ்ரூக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறபஹ் தினத்தில் ஆஇஷஹ் (றலியல்லாஹுஅன்ஹா) அவர்களிடம் நான் சென்ற போது அவருக்கு "ஸவீகை"  சாப்பிடக் கொடுங்கள் அதில் இனிப்பை அதிகப்படுத்துங்கள் என்று கூறினார்கள். அதற்கு, நான் (அறபஹ்) நோன்பு நோற்காமல் இருந்தது இன்று பெருநாள் தினமாக இருக்குமோ என்ற அச்சத்தால் தான் என்று கூறினேன். அப்போது ஆஇஷஹ் (றலியல்லாஹுஅன்ஹா) அவர்கள் கூறினார்கள்: மக்கள் எந்த நாளில் அறுத்துப்பலியிடுகிறார்களோ அந்த நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்; மக்கள் எந்த நாளில் நோன்பை விட்டு விடுகிறார்களோ அந்த நாளில் தான்  நோன்புப் பெருநாள்.  (பைஹகீ) 

மக்கள் என்று  ஆஇஷஹ் (றலியல்லாஹுஅன்ஹா) அவர்கள் குறிப்பிட்டது உலகத்தில் உள்ள மக்களையோ மக்கஹ்வில் உள்ள மக்களையோ அல்ல. தங்களுடன் மதீனாவில் வாழும் மக்களைத் தான் என்பது சிந்தித்துப்பார்த்தால் விளங்கக் கூடிய விடயமாகும்.


தவறான வாதங்கள்

1- இன்று சிலர் “நீங்கள்" என்று ஹதீஸில்  குறிப்பிடப்பட்டது உம்மத்தைக் குறிக்கும் என்று வாதிடுகின்றனர். நாம் கேட்கிறோம் இன்று முஸ்லிம் உம்மத் உலகில் இரண்டு, மூன்று நாட்களில் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இவர்கள் அனைவரும் முஸ்லிம் உம்மத்தைச் சேர்ந்தவர்கள் தான். காபிர்கள்  அல்லர். அப்படியானால் இவர்களில் யாருடன் பெருநாளை எடுக்க வேண்டும்? முதலாம் நாளில்  பெருநாள் எடுத்த கூட்டத்தோடு சேர வேண்டும் என்றால் இரண்டாம் மூன்றாம் நாட்களில் பெருநாள் எடுத்தவர்கள் உம்மத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா? 

 2- இன்னும் சிலர் உலகில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களை குறிக்கும் என்று வாதிடுகின்றனர். இதுவும் தவறான வாதமாகும். உலகில் பெரும்பான்மையான மக்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களில் எந்த நாளில் பெருநாள் எடுத்தார்கள் என்பதை உடனே அறிய முடியாது. முதலாவது அல்லது இரண்டாவது நாள் முடிந்த பிறகு தான் அறிய முடியுமே தவிர செயற்படுத்துவதற்கு முன்னால் அறிய முடியாது. ஒரு இடத்தில் பிறை கண்ட உடனே எத்தனை மக்கள் அதனை நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என்பதை உடனே கணக்கிட்டுச் சொல்லிவிட முடியாது. அதே போன்று பிறை கண்ட நாட்டில் பெருநாள் ஆரம்பிக்கும் போது எத்தனையோ நாடுகள் அந்த நாளை அது வரைக்கும் அடையாமல் இருக்கலாம். அல்லது எத்தனையோ நாடுகள் அந்த நாளின் மாலைப் பொழுதில் இருக்கலாம். இப்படியான சூழ்நிலையில் எந்த நாளில் பெரும்பான்மை மக்கள் பெருநாள் எடுக்கப்போகிறார்கள் என்பதை உடனே கணக்கிட முடியாது. இதனால் இந்தவாதம் சாத்தியமற்றது. 

சர்வதேசப்பிறையைப் பின்பற்றுகின்ற ஒரு சிலர் இந்த வாதத்தை வைப்பது ஆச்சரியமாக இருகின்றது. ஏனெனில் பொதுவாக சர்வதேசப் பிறைக்காரர்கள் முதல் நாளில் பெருநாள் எடுக்கிறார்கள். அதிகமான சந்தர்பங்களில் இந்த நாளை விட இரண்டாம் நாளில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளில் வாழும் அதிகமான முஸ்லிம்கள் பெருநாள் எடுக்கின்றனர். இவர்களின் வாதம் இவர்களின் செயலுக்கே முரண்படுகின்றது. 

3- இன்னும் சிலர் ஹதீஸில் "நீங்கள்" எனக்குறிபிடப்பட்டது சரியான கருத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் எனக் கூறுகின்றனர். இதுவும் தவறாகும். ஏனெனில் 

A). நீங்கள் என்பது பொதுவாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிர பலமான கருத்தைப் பின்பற்றுகின்ற நீங்கள் எனக் கூறப்படவில்லை. 

B). சர்வதேசப் பிறையா? உள்நாட்டுப்  பிறையா? என்ற கருத்து வேறுபாடு ஸஹாபஹ்களின் காலத்திற்கு பிறகிலிருந்து பல நூற்றாண்டுகளாக மார்க்கப் பற்றும் அறிவுத் திறனும் உள்ள பேரறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டிருகிறது. ஒவ்வொருவரும் தமது கருத்தே சரியானது என்று நம்புகிறார்கள். இப்படியான கட்டத்தில் சரியான கருத்தைக் கொண்டவர்களைத் தான் "நீங்கள்" என்ற வாசகம் குறிக்கும் என்றால் ஒவ்வொருவரும் தாம் தான் சரியான முடிவில் இருப்பவர்கள் என்று சொல்லிக்கொள்வர். அங்கே ஒரு ஒன்றுபட்ட பெருநாளோ ஒன்றுபட்ட நோன்போ ஏற்பட முடியாது. முஸ்லிம் சமூகம் பிளவுபட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தமது கருத்தை நடைமுறைப்படுத்துவர். இந்த ஹதீஸின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும். நோன்பு, பெருநாள் என்பது ஏனைய கருத்து வேறுபாடுகளைப் போல தனி நபர்களுடன் நின்று விடுவதில்லை. இது ஒரு சமூக, கூட்டு வணக்கமாகும். இரண்டு பக்கத்திலும் உள்ள அறிஞர்களும் தங்கள் சுய லாபத்திற்காக கருத்துகளைக்  கூறவில்லை. ஒவ்வொருவரும் குர்ஆன், ஸுன்னாவில் இருந்து தமக்கு விளங்குகின்ற கருத்தைத்தான் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் இது மார்க்கத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட முடியுமான ஒரு பிரச்சினையாகும். 

இது மார்க்கத்தில் தெட்டத்தெளிவாகச் சொல்லப்பட்ட கருத்து வேறுபாடே ஏற்படமுடியாத விடயமல்ல. இப்படியான விடயங்களில் நாம் கருதுவது தான் சத்தியம்; அடுத்தவர்களின் கருத்து வழிகேடு என்றுகூறமுடியாது. எமது கருத்துத் தான் நூறு வீதம் உறுதியான எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாத கருத்து என்று ஒரு கருத்தை நாம் சொல்வதாக இருந்தால் அதற்கு மாற்றமாக நடப்பது வழிகேடாகும். அதற்குரிய ஆதாரங்கள்  நிரூபிக்கப்பட்ட  பிறகும்  அதைச்  செய்பவர்கள்  வழிகேடர்கள் என்று சொல்ல முடியுமானதாக இருக்க வேண்டும். மார்க்கத்தின் அடிப்படைக்  கொள்கைகள்   விடயத்தில்   இப்படித்தான்   நாம்  நடந்து  கொள்கிறோம்.

இது போன்ற பிக்ஹ் மஸாஇல்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஒவ்வொருவரும் எது சரியானது என்று அறிந்து கொள்வதற்காக எடுக்கும் ஆய்வு முயற்சியினாலே ஏற்படுகின்றன. மனோ இச்சைக்கு அப்பால் நின்று ஆய்வு செய்து ஒருவர் சரியான முடிவுக்கு வந்தாலும் தவறான முடிவுக்கு வந்தாலும் அவருக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும். முடிவு சரியானதாக இருந்தால் இரண்டு கூலிகளும் தவறானதாக இருந்தால் ஒரு கூலியும் கிடைக்கும் என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படியான கட்டத்தில் இரண்டு பிரிவினரும் சத்தியத்தைத் தேடுபவர்கள் தான் வழிகேடர்களல்லர். அவர்களில் ஒருவரின் முடிவு தவறாக இருக்கலாம். அதனால் அவர் அசத்தியவாதியாகிவிடமாட்டார். வழிகெட்டவராகமாட்டார். ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழியில் நடக்கும் சத்தியத்தில் இருக்கும் வெற்றிபெற்ற கூட்டமான "அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத்" என்னும் ஒரே கூட்டத்துக்குள் பிறைவிடயத்தில் கருத்து வேறுபாடு இருகின்றது என்றால் “நீங்கள்" என்ற ஹதீஸின் வாசகம் அவர்களில் யாரைக் குறிக்கின்றது? ஆய்வு செய்யத் தெரியாத பொதுமக்கள், அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த அறிஞர்கள் சொல்வதை எடுத்து நடப்பது கடமையாகும். அவர்களில் ஒருவர் ஒரு தீர்ப்பும்  மற்றொருவர் வேறோரு தீர்ப்பும் கொடுத்திருக்கும் போது பொதுமக்களில்  ஒவ்வொரும் அவரவருக்கு நம்பிக்கையான அறிஞர் சொல்வதை ஏற்றுக் கொள்வர். ஒவ்வொருவரும் "நீங்கள்" என்ற வாசகம் எங்களைக் குறிக்கிறது; நாங்கள் தான் சரியான முடிவில் இருக்கிறோம் என்று சொன்னால் முஸ்லிம் உம்மத்தின் நிலைமை எப்படி இருக்கும்? 
இன்றைக்கு ஒருவர் நாளைக்கு ஒருவர் என்று பெருநாள் கொண்டாடுவார்கள்; ஒவ்வொருவரும் தாம் தான் சத்தியத்தில் இருப்பதாக வாதிடுவார்கள்; அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்தவர்களின் ஒரே வீட்டுக்குள் தந்தைக்குப் பெருநாள் மகனுக்கு நோன்பு, கணவனுக்குப் பெருநாள் மனைவிக்கு நோன்பு என்ற நிலை ஏற்படும் இதை செயற்படுத்தவா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த ஹதீஸை கற்றுத் தந்தார்கள்? 
எந்த ஹதீஸ் ஒற்றுமையை நோக்கமாகக்  கொண்டு சொல்லப்பட்டதோ அந்த ஹதீஸுக்குக் கொடுக்கப்படும் விளக்கம் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தின்  ஒற்றுமையைக் கூறுபோடுவதற்கு வழிவகுக்கிறது என்றால் அது சரியான விளக்கமாக இருக்க முடியுமா? 

"நீங்கள்" என்ற வாசகம் சரியான முடிவில் இருப்பவரைக் குறிக்கிறது என்றும் பிறை விடயம் கருத்து வேறுபாடு ஏற்பட முடியுமானது என்றும் ஒருவர் ஏற்றுக் கொண்டால் அது எத்தகைய பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதைப் பார்த்தீர்கள். ஏனெனில் ஒருவர் ஒரு விடயத்தைக் கருத்து வேறுபாடு ஏற்பட முடியுமான விடயம் என்று ஏற்றுக் கொண்டால் அதில் அவர் மாற்றுக் கருத்துடையவரைப் பார்த்து நீங்கள் வழிகேட்டில் இருக்கின்றீர்கள் என்று சொல்ல முடியாது. அதற்குக்  காரணம் ஒவ்வொருவரும் தான் சரியான முடிவில் இருப்பதாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆய்வின் மூலம் முடிவு செய்திருக்கிறார்.

C). அல்லாஹ், மார்க்கத்தின் அடிப்படை விடயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கு மத்தியில் கருத்து  வேறுபாடு ஏற்பட முடியாததாக அவற்றை மிகவும் தெளிவாக்கி வைத்திருக்கிறான். அதே போன்று பிறை விடயத்தையும் வைத்திருந்தால் “நீங்கள்" என்பது சரியான முடிவில் இருப்பவர்களைத் தான் குறிக்கிறது  என்று கூறலாம். 

ஆனால் பிறைக் கருத்து வேறுபாடு சத்தியத்தைச் சுமந்தவர்களுக்கு மத்தியிலே ஏற்பட்டுள்ளது. ஆகவே “நீங்கள்" என்பது அவர்களில் ஒரு சாராரைக்  குறிக்கமாட்டாது. இல்லை அவர்களில் ஒரு சாராரைத் தான் குறிக்கிறது என்றால் இந்த ஹதீஸ் அவர்களைப் பிளவுபடுத்தும். எனவே அது தவறான விளக்கமாகும். 
 “நீங்கள் நோன்பு நோற்கும் நாள்",  "நீங்கள் பெருநாள் எடுக்கும் நாள்" என்பது பெரும்பான்மை மக்கள் நோன்பு நோற்கும் நாள், பெரும்பான்மை மக்கள் பெருநாள் எடுக்கும் நாள் என்பதே சரியான பொருத்தமான விளக்கமாகும்.  அது உலகப் பெரும்பான்மையோ, நாட்டின் பெரும்பான்மையோ, மாநிலத்தின் பெரும்பான்மையோ அல்ல. அந்த நேரத்தில் எங்களுடன் வாழும் மக்களின் பெரும்பான்மையேயாகும்.

சுருக்கமாகக் கூறுவதாயின் தமது சூழலில் உள்ளவர்களுக்கு எந்தளவிற்கு ஒற்றுமைப்பட முடியுமோ அந்தளவிற்கு ஒற்றுமைப்பட வேண்டும். பெரிய ஒற்றுமையைக் காரணம் காட்டி ஒரே இடத்தில் பிளவுபட்டு ஒற்றுமையையே தூக்கி எறியக் கூடாது. பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் பெரும்பாலான மக்கள் ஒரே பிறையை நடைமுறைப்படுத்துவதால் அவர்களுடன் சேர்ந்து கொள்பவர் தன்னுடைய ஊர், மாவட்டம், நாடு ஆகியவற்றின் பொரும்பான்மையுடன் சேர்ந்து கொண்டவராகிறார். சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு நகரத்தில் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் ஒரு பிறையையும் வேறு ஒரு நகரத்தின் பெரும்பான்மையினர் வேறு ஒரு பிறையையும் பின்பற்றுவதால் ஒருவர் எந்த நகரத்தில் வாழ்கிறாரோ அவர் அந்த நகரத்தின் பெரும்பான்மை  மக்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும். 

சில அரபு நாடுகள் சேர்ந்து சவூதியை பின்பற்றுவதால் அந்த நாடுகளில் உள்ள அனைவரும் அதையே நடைமுறைப் படுத்த வேண்டும். இது நாட்டையும் தாண்டிய ஒரு பெரும்பான்மையைப் பிரதிபலிக்கின்றது. எனவே ஊருக்குள் ஒற்றுமைப்பட்ட பிறகு தான் மாவட்ட ஒற்றுமைக்காக முயற்சிக்க வேண்டுமே தவிர மாவட்டத்தில் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதற்காக ஊரைப் பிரிக்கக்கூடாது.


மேலும் சில சான்றுகள்

எங்கிருந்து தகவல் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதை சரிகண்ட இமாம் இப்னு தைமியஹ் கூட, அத்தகவலை மக்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது; உள்ளூரில் கண்டாலும் பத்துப் பேர் கண்டாலும் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதையும் சரிகண்டுள்ளார்கள். 

இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் பின்வரும் கூற்றை நடுநிலைமையாக சிந்தித்துப்பார்த்தால் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இமாம் அவர்கள் எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது புரியும்.

"وَحِينَئِذٍ فَشَرْطُ كَوْنِهِ هِلَالًا وَشَهْرًا شُهْرَتُهُ بَيْنَ النَّاسِ وَاسْتِهْلَالُ النَّاسِ بِهِ حَتَّى لَوْ رَآهُ عَشَرَةٌ وَلَمْ يَشْتَهِرْ ذَلِكَ عِنْدَ عَامَّةِ أَهْلِ الْبَلَدِ لِكَوْنِ شَهَادَتِهِمْ مَرْدُودَةً أَوْ لِكَوْنِهِمْ لَمْ يَشْهَدُوا بِهِ كَانَ حُكْمُهُمْ حُكْمَ سَائِرِ الْمُسْلِمِينَ فَكَمَا لَا يَقِفُونَ وَلَا يَنْحَرُونَ وَلَا يُصَلُّونَ الْعِيدَ إلَّا مَعَ الْمُسْلِمِينَ فَكَذَلِكَ لَا يَصُومُونَ إلَّا مَعَ الْمُسْلِمِينَ وَهَذَا مَعْنَى قَوْلِهِ: {صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ}. وَلِهَذَا قَالَ أَحْمَد فِي رِوَايَتِهِ: يَصُومُ مَعَ الْإِمَامِ وَجَمَاعَةِ الْمُسْلِمِينَ فِي الصَّحْوِ وَالْغَيْمِ. قَالَ أَحْمَد : يَدُ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ. وَعَلَى هَذَا تَفْتَرِقُ أَحْكَامُ الشَّهْرِ: هَلْ هُوَ شَهْرٌ فِي حَقِّ أَهْلِ الْبَلَدِ كُلِّهِمْ؟ أَوْ لَيْسَ شَهْرًا فِي حَقِّهِمْ كُلِّهِمْ؟ يُبَيِّنُ ذَلِكَ قَوْله تَعَالَى {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} فَإِنَّمَا أَمَرَ بِالصَّوْمِ مَنْ شَهِدَ الشَّهْرَ وَالشُّهُودُ لَا يَكُونُ إلَّا لِشَهْرٍ اشْتَهَرَ بَيْنَ النَّاسِ حَتَّى يُتَصَوَّرَ شُهُودُهُ وَالْغَيْبَةُ عَنْهُ. {وقول النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا وَصُومُوا مِنْ الْوَضَحِ إلَى الْوَضَحِ} وَنَحْوُ ذَلِكَ خِطَابٌ لِلْجَمَاعَةِ لَكِنْ مَنْ كَانَ فِي مَكَانٍ لَيْسَ فِيهِ غَيْرُهُ إذَا رَآهُ صَامَهُ فَإِنَّهُ لَيْسَ هُنَاكَ غَيْرُهُ". مجموع الفتاوى  (25/117)

“ஒரு பிறை, பிறையாகவும் மாதமாகவும் இருப்பதற்கு நிபந்தனை யாதெனில் அது மக்களுக்கு மத்தியில் பிரபல்யம் அடைய வேண்டும்; (பிறை தென்பட்டுவிட்டது என்று) அதைப் பற்றி அவர்கள் பேசவேண்டும் என்பதாகும். பத்து நபர்கள் தான் பிறையைக்  கண்டுக் அவர்களின் சாட்சியம் மறுக்கப்பட்டு அல்லது அவர்கள் சாட்சி சொல்லாமல் இருந்ததால் அந்தப் பிறை அந்த நகரத்தின் மக்களிடத்தில் பிரபல்யம் அடையவில்லையானால் ஏனைய முஸ்லிம்களுக்குரிய சட்டம் தான் பிறை கண்டவர்களுக்குமுரிய சட்டமாகும். (அவர்கள் தாம் கண்ட பிறை அடிப்படையில் செயற்படக்கூடாது.) அவர்கள் எவ்வாறு முஸ்லிம்களுடன் தான் அறபஹ்வில் தரிப்பார்களோ, அறுத்துப் பலியிடுவார்களோ, பெருநாள் தொழுவார்களோ அவ்வாறே முஸ்லிம்களுடன் தான் நோன்பும் நோற்க வேண்டும். "நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் உங்களுடைய நோன்பு; நீங்கள் பெருநாள் கொண்டாடும் நாளில் தான் உங்களுடைய பெருநாள்" என்ற ஹதீஸின் கருத்தும் இதுவாகும். இதனால் தான் வானம் தெளிவாக இருக்கும் நிலையிலும் மேகமூட்டம் ஏற்படும் நிலையிலும் இமாமுடனும் முஸ்லிம் ஜமாஅத்துடனும் நோன்பு நோற்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் கை ஜமாஅத் (கூட்டத்)தின் மீது இருக்கிறது என்றும் இமாம் அஹ்மத் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனடிப்படையில் தான் அந்த மாதம் அந்த நகரத்தின் அனைத்து மக்களுக்குமுரிய மாதமா? அல்லது அது அவர்கள் அனைவருக்குமுரிய மாதம் இல்லையா? என்ற மாதத்தின் சட்டங்கள் பிரிகின்றன. அதனை அல்லாஹ்வின் கூற்றான {உங்களில் யார் மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்} என்ற வசனம் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் நோன்பு நோற்க்குமாறு கட்டளை இட்டது மாதத்தை அடைந்தவருக்குத்தான். மாதத்தை அடைவது அல்லது அடையாமல் இருப்பது என்று கற்பனை செய்வதற்கு அந்த மாதம் மக்களிடத்தில் பிரபல்யம் அடைய வேண்டும். அப்படிப் பிரபல்யம் அடையாத மாதத்தை அடைய முடியாது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கூற்றான "நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பு பிடியுங்கள்; நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்" என்ற ஹதீஸும் இதனை தெளிவு படுத்துகின்றது. இது போன்ற கட்டளை ஜமாஅத்-கூட்டத்திற்குரிய கட்டளையாகும். ஆனால் எவருமில்லாத ஒரு இடத்தில் ஒருவர் மாத்திரம் தனியாக இருந்தால் அவர் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் அங்கே அவரைத் தவிர வேறொருவரும் இல்லை."

சுட்டிக்காட்டப்பட்ட கூற்றிலும் வேறு இடங்களிலும் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) சொல்ல வருவது என்ன என்பதைச் சற்று சிந்தியுங்கள். 

1. மாதம் என்பதைக் குறிக்கும் 'ஷஹ்ர்’ என்ற அரபுச் சொல் பிரபல்யம் என்ற அர்தத்தை உள்ளடக்கியுள்ளது. ஒரு கூட்டத்திற்கு மாதம் ஏற்பட்டு விட்டது என்று சொல்வதற்கு அவர்களிடத்தில் அது பிரபல்யம் அடைய வேண்டும்.

2. பிறையைக் குறிக்கும் ‘ஹிலால்’ என்ற அறபுப் பதம் சப்தமிடுதல், பேசுதல் என்ற அர்த்தத்தைத் தருகிறது. ஒரு கூட்டம் எந்தப் பிறையைப் பற்றி எங்களுக்குப் பிறை பிறந்து விட்டது என்று பரவலாகப் பேசிக் கொள்ளவில்லையோ அது அந்த கூட்டத்திற்குப் பிறையாக அமையாது. அதனைப் பத்து நபர்கள் தான் கண்டாலும் பரவாயில்லை. இப்படியான நிலையில் பிறை கண்டவர்களும் அவர்களின் தகவலை நம்பியவர்களும் கூட்டத்தை விட்டுப் பிளவுபடமுடியாது. 

3. ஒரு கூட்டம் துல்ஹஜ் பிறையை மக்கஹ்வில் தென்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னால் கண்டு விட்டால் அது மக்கஹ்வில் ஏற்றுக்கொள்ளப்படாத போது அவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகளைத் தமது பிறையின் அடிப்படையில் செயற்படுத்தமுடியாது. அங்கே உள்ள முஸ்லிம்கள் அறபஹ்வில் தரிக்கும் நாளாகிய இவர்களின் பிறையின் அடிப்படையில் பத்தாவது நாளில் தான் இவர்களும் அறபஹ்வில் தரிக்க வேண்டும். ஏனைய கிரிகைகளையும் அவ்வாறே நிறைவேற்ற வேண்டும். இதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. எனவே இதே தீர்ப்புத் தான் நோன்பு, நோன்புப் பெருநாள் ஆகிய தினங்களுக்கும் சரியாகும். ஹஜ்ஜில் மக்களுக்கு மாற்றம் செய்ய முடியாது என்று கூறிவிட்டு நோன்பிலும் நோன்புப்பெருநாளிலும் மக்களுக்கு மாற்றமாக நடக்க முடியும் என்று கூறுவது முரண்பாடாகும்.

4. பெரும்பான்மை மக்களுடன் தான் பிறைவிடயத்தில் சேர்ந்து நடக்க வேண்டும் என்பதற்கு “நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் உங்களின் நோன்பு; நீங்கள் பெருநாள் எடுக்கும் நாளில் தான் உங்களின் பெருநாள்’’ என்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாகும். 

5. {உங்களில் மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும்} என்ற அல்லாஹ்வின் வசனத்திலிருந்து ஒரு கூட்டத்தாரிடத்தில்  ஒருவரோ பலரோ பிறையைக் கண்டு அது ரமழான் மாதம் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரபல்யம் அடையவில்லை என்றால் அந்த நாளில் அவர்களில் ஒருவரும் நோன்பு பிடிக்க முடியாது. ஏனெனில் மக்களிடம் அந்த மாதம் பிரபல்யம் அடைந்தால் தான் அதனை அடைய முடியும். 

6. “நீங்கள் பிறை கண்டு நோன்பு பிடியுங்கள்" என்ற ஹதீஸ்     தனிப்பட்டவர்களுக்கு உரியதல்ல. ஒரு கூட்டத்திற்கு உரியது. கூட்டத்திற்கு மாற்றமாக ஒருவரோ இருவரோ நோன்பையோ பெருநாளையோ எடுக்க முடியாது. 

எனவே சிலர் நினைப்பதைப் போல ஒரு பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களுக்கு மாற்றமாக நோன்பையோ பெருநாளையோ எடுக்க வேண்டும் என்று இப்னு தைமியா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறவில்லை.

எதிர் வாதங்கள்

சிலர் இது முஸ்லிம் ஆட்சியாளர் இருக்கும் இடங்களுக்கு மாத்திரமுள்ள சட்டம் என்று தவறாக வாதிடுகின்றனர். இமாம் அவர்கள் இந்த ஆதரங்களை எல்லாம் எதற்காக முன் வைத்தார்? மக்களுக்கு மாற்றமாக ஒருவர் நோன்பு பிடிக்கவோ பெருநாள் எடுக்கவோ கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவா? அல்லது ஆட்சியாளருக்கு மாறுசெய்யக் கூடாது என்பதற்காகவா? ஆட்சியாளரை சம்பந்தப்படுத்தக்கூடிய எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் முன்வைக்கவில்லை. அவர் முன்வைத்த அத்தனை ஆதாரங்களும் மக்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். 

ஆட்சியாளரால் சாட்சியம் மறுக்கப்பட்டால் மாத்திரம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது மக்களால் (அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவால்) மறுக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதற்கு இமாமின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதை நிதானமாக சிந்திப்போம்.

ஆட்சியாளருக்காக சர்வதேசப் பிறையை விட்டுக் கொடுக்க முடியும் என்றால் ஏன் மக்களுக்காக அதை விட்டுக் கொடுக்க முடியாது? இரண்டும் மார்கத்தில் உள்ளவை தான். அதைவிட ஒருபடி மேலாக ஆட்சியாளருக்காக விட்டுக்கொடுப்பதன் நோக்கமே இஸ்திரத் தன்மையும்  மக்களின் ஒற்றுமையும் தானே தவிர ஆட்சியாளர் என்ற தனிமனிதனுக்காக அல்ல. ஆட்சியாளர் அநியாயக்காரனாக, பெரும் பாவியாகக் கூட இருக்கலாம். மார்க்கத்தை ஆழமாகக் கற்ற குர்ஆன் சுன்னஹ்வை நிலைநாட்டப் பாடுபட்ட பேரறிஞர்கள் இதைப்புரிந்து கொண்டதால் தான் உள்நாட்டுப் பிறையில் மக்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு வழியுறுத்தினார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக)

இஸ்லாமிய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இஸ்லாமிய அரசாங்கம் இல்லாது கேட்பார், பார்ப்பார் அற்று தவிர்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களால் அங்கீகரிக்கப்படும் பிறைக் குழுக்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையைக் காப்பாற்றக் கூடாதா? இதனால் தான் இஸ்லாமிய ஆட்சியாளர் இல்லாத நாடுகளில் மக்கள் பிறைக் குழுக்குக் கட்டுப்பட வேண்டும்  என்று சவூதிப் பேரறிஞர்களை கொண்ட ஆய்வு சபை உட்பட பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

எத்தனையோ விடயங்களில் பெரும்பான்மை மக்களின் கருத்தை நடைமுறைப்படுத்தாத நீங்கள் பிறையிலே மாத்திரம் ஒற்றுமைபடுவது சரிதானா? என்று எம்மிடம் கேட்டால், பிறை விடயத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். ஏனைய தவறுகளில் சேரவேண்டும் என்று கூறவில்லை. "அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விடயத்தில் படைக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்படக்கூடாது" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறுவோம்.

பெரும்பாலான முஸ்லீம்கள் உள்நாட்டுப் பிறையை நடைமுறைப்படுத்தும் இடங்களில் சர்வதேச பிறையை நடைமுறைப்படுத்துவது ஸலஃபி பேரறிஞர்களின் வழிமுறைக்குட்பட்டதா?

இஸ்லாமிய சமூகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகளில் தலைப்பிறை சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடும் ஒன்றாகும்.

 1) உலகின் எந்தப் பகுதியில் இருந்து பிறை கண்ட தகவல் வந்தாலும் அதை ஏற்கவேண்டும் என்றும்

 2) ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்தப்  பிரதேசத்தில் கண்ட பிறையையே ஏற்கவேண்டும் என்றும்

முக்கிய இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இவ்விரு கருத்துக்களில் ஒவ்வொரு கருத்துக்கும் சார்பாக பெரும் அறிஞர்கள் உள்ளனர். ஆனால் எல்லா அறிஞர்களும் ஒரு விடயத்தில் ஒற்றுமைப்படுகிறார்கள். அது தான் ஒரு சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இவ்விரு கருத்துக்களில் எந்தக் கருத்தை நடைமுறைப்படுத்துகிறார்களோ அந்தக் கருத்தையே அனைவரும் நடைமுறைப்டுத்த வேண்டும். தங்களுக்குள் பிரிந்து செல்ல முடியாது என்பது இரு கருத்துள்ள அறிஞர்களும் ஒருமித்துச் சொல்லக் கூடியதாகும்.

அந்த அடிப்படையில் இலங்கை நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பெரும்பாலான மக்கள் இலங்கையில் காணும் பிறையையே ஏற்க வேண்டும் என்ற கருத்தையே நடைமுறைப்படுத்துவதால் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் அதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்றைய காலத்தில் சர்வதேசப் பிறை என்று கூறப்படும் எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்றுக்கொள்ளல் என்ற கருத்தை கூறிய பேரறிஞர்களில் அல்லாமஹ் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் அல்லாமஹ் இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் மற்றும் சவூதியின் பேரறிஞர்கள் சபையின் அனைத்து அறிஞர்களும் நாம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்தையே நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள். ஒரு இடத்தில் பிறை தென்பட்டால் அப்பிறை அன்று எந்த இடங்களில் தென்பட வாய்பிருக்கின்றதோ அவ்விடங்களை மாத்திரமே கட்டுப்படுத்தும் என்ற கருத்தை அல்லாமஹ் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களும் மேற்படி நாம் சுட்டிக்காட்டிய நடைமுறையில் முரண்பட முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளார்கள். மேற்படி ஸலஃபி பேரறிஞர்களின் கருத்துக்களின் சுருக்கத்தை இங்கே நாம் தமிழில் மொழிபெயர்த்துள்ளோம்.


சவூதி பேரறிஞர்கள் சபைத் தீர்மானம் 

"அல்-லஜ்னஹ் அத்-தாஇமஹ் லில் புஹூஸ் அல்-இல்மிய்யஹ் வல்இப்தா” என்ற சவூதியின் முக்கிய அறிஞர்களைக்  கொண்ட ஆய்வுக் குழுவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியினதும் அதற்கான அவர்களின் பதிலினதும் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

கேள்வி :- நாம் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கும் முஸ்லிம் மாணவர்கள்.  ஒவ்வொரு ரமழான் மாத ஆரம்பத்திலும் முஸ்லிம்கள் மூன்று பிரிவுகளாகப் பிளவுபடுகின்ற ஒரு பிரச்சினை எமக்கு ஏற்படுகிறது.

1- ஒரு பிரிவினர் தாங்கள் வாழும் பிரதேசத்தில் பிறை பார்த்து நோன்பு பிடிக்கின்றனர்.

2- இரண்டாவது பிரிவினர் சவூதியுடன் நோன்பு பிடிக்கின்றனர்.

3- மூன்றாவது பிரிவினர் அமெரிக்காவிலும், கனடாவிலும் இருக்கும் முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் தகவலை அடிப்படையாக வைத்து நோன்பு பிடிக்கின்றனர்.  

இவ்வொன்றியம் அமெரிக்காவின் பல இடங்களிலும் பிறைபார்க்க முயற்சிக்கின்றனர். ஒரு மாநிலத்தில் பிறை கண்ட உடனே ஏனைய மையங்களுக்கு அது பற்றி அறிவிக்கின்றனர். பின்னர் முழு அமெரிக்க முஸ்லிம்களும் தாங்கள் வாழும் நகரங்களுக்கு மத்தியில் மிகவும் அதிகமான தொலை தூரம் இருந்தும் கூட ஒரே நாளில் நோன்பு பிடிக்கின்றனர். ஆகவே இம்மூன்று பிரிவினரில் யாரை நாம் பின்பற்றுவது சிறந்தது?

பதில் :- ஏற்கனவே சவூதியின் பேரறிஞர்கள் சபையின் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை ஆய்வு செய்யப்பட்டு ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கம் யாதெனில்:

1) பிறை தென்படும் பிரதேசங்கள் வித்தியாசப்படுகின்றன. (ஒரு பகுதியில் காணும் பிறையை இன்னொரு பகுதியில் காண முடியாதிருக்கலாம்) என்பது புத்தியாலும் புலனாலும் உறுதியாக அறியப்பட்ட விடயமாகும். அதில் எந்த அறிஞர்களும் கருத்து வேறுபடவில்லை. பிறை தென்படும் பிரதேசங்கள்; வித்தியாசப்படுவதைக் கணக்கில் எடுப்பதா இல்லையா? (ஒரு பகுதியில் கண்ட பிறையைப்  பிறை காணாத பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுச் செயற்பட வேண்டுமா இல்லையா?) என்பதிலேயே முஸ்லிம் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

2) பிறை தென்படும் பிரதேசங்கள் வித்தியாசப்படுவதைக் கணக்கில் எடுக்க வேண்டுமா? இல்லையா? (ஒரு பிரதேசத்தில் கண்ட பிறையை கொண்டு மற்ற பிரதேசங்களில் இருப்பவர்களும் செயற்பட வேண்டுமா? இல்லையா?) என்பது இஜ்திஹாத் (ஆய்வு) செய்வதற்கு இடம்பாடான ஒரு விடயமாகும். அறிவிலும் மார்க்கத்திலும் தகுதியுள்ளவர்கள் மத்தியில் அந்த விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது சரியான முடிவுக்கு இரண்டு கூலிகளும் தவறான முடிவுக்கு ஒரு கூலியும் கிடைக்கக் கூடிய சாத்தியமான, ஆகுமான ஒரு கருத்து வேறுபாடாகும். அறிஞர்கள் (மேற்படி) இரண்டு கருத்துக்களையும் கூறி கருத்து வேறுபடுகின்றனர். ஒவ்வொரு கருத்துடைய அறிஞர்களும் குர்ஆனில் இருந்தும் ஹதீஸில் இருந்தும் தங்களது ஆதாரங்களை எடுத்துள்ளனர். சில வேளை ஒரு குர்ஆன் வசனத்தை அல்லது ஒரு ஹதீஸை இரு தரப்பினரும் ஆதாரமாகக்  காட்டி அதனை வெவ்வேறு விதத்தில் விளக்குகின்றனர். பேரறிஞர் சபை கருதும் சில நியாயங்களைக்  கருத்தில் கொண்டும், இந்தக் கருத்து வேறுபாட்டில் அச்சப்படக் கூடிய விளைவுகள் இல்லை; ஏனெனில் இந்த மார்க்கம் தோன்றிப்  பதினான்கு நூற்றாண்டுகள் கடந்தும் கூட எந்தக் காலப் பகுதியிலாவது இஸ்லாமிய உம்மத் ஒரே பிறையின் கீழ் ஒன்றுபட்டதாக நாம் அறியவில்லை. மேற்படி விடயத்தைக்  கருத்தில் கொண்டும் பேரறிஞர் சபை உறுப்பினர்கள், இந்த விடயம் எவ்வாறு நடைமுறையில் இருக்கிறதோ அவ்வாறே இருக்கட்டும் என்றும் இந்த விடயத்தைப் பிரச்சியைப்படுத்தி (குழப்பக்) கூடாது என்றும் ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டுக்கும் தனது அறிஞர்கள் மூலமாக மேற்படி இரு கருத்துக்களில் எதனையும் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்றும் கருதுகிறார்கள். ஏனெனில் இரு கருத்துகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன.

          "அல்லஜ்னஹ் அத்தாஇமஹ் லில் புஹூஸ் அல்-இல்மிய்யஹ் வல்இப்தா” வாகிய நாம் கருதுவது யாதெனில் மேற்படி முஸ்லிம் மாணவர் ஒன்றியம், மேற்படி இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு பிறை விடயத்தில் இஸ்லாமிய அரசின் இடத்தில் இருக்கின்றது.

          பேரறிஞர் சபை தீர்மானத்தின் இரண்டாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில், இம் மாணவர் ஒன்றியத்திற்கு மேற்படி இரு வேறுபட்ட கருத்துக்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. பின்னர், அவ்வொன்றியம் தான் கருதுவதை அந்நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீது பொதுவானதாக ஆக்க வேண்டும். அங்குள்ள முஸ்லிம்கள் ஒற்றுமைக்காகவும் நோன்பை ஆரம்பிக்கவும் பிளவுகள், குழப்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் அவ்வொன்றியத்தின் கருத்தையே கடைப்பிடிக்க வேண்டும். அந்த நாடுகளில் வாழும் அனைவரும் தாங்கள் இருக்கும் மாநிலங்களில் பிறை பார்க்க முயற்சிக்க வேண்டும். அவர்களில் நம்பகமான ஒருவர் அல்லது பலர் பிறை கண்டால் அதனைக் கொண்டு அவர்கள் நோன்பு பிடித்து அதனை அவ்வொன்றியத்திற்கும் எத்திவைத்து மற்றவர்களுக்கும் பொதுவானதாக மாற்றவேண்டும். 

"அல்லஜ்னஹ் அத்தாஇமஹ் லில் புஹூஸ் அல்-இல்மிய்யஹ் வல்-இப்தா”

தலைவர்: அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லா இப்னு பாஸ்.

உபதலைவர்: அப்துர் ரஸ்ஸாக் அபீபீ.

உறுப்பினர்:  அப்துல்லாஹ் இப்னு குதய்யான்

உறுப்பினர்:  அப்துல்லா இப்னு குஊத்

(பார்க்க:- பதாவா அல்-லஜ்னா அத்தாஇமா, பாகம்:- 10, பக்கம்:-109–110) 

பேரறிஞர்கள் சபைக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்ட பேரறிஞர்களின் பெயர்ப்பட்டியலில் பதினேழு பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள்:

1. அப்துர் ரஸ்ஸாக் அபீபீ 
2. முஹம்மத் அமீன் ஷன்கீதி
3. மிஹ்ளார் அகீல்             
4. அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
5. அப்துல்லாஹ் இப்னு ஹுமைத்
6. அப்துல்லாஹ் கய்யாத்
7. முஹம்மத் ஹரகான்           
8. அப்துல் மஜீத் ஹஸன்
9. அப்துல் அஸீஸ் இப்னு ஸாலிஹ்
10. ஸாலிஹ் இப்னு கஸூன்
11. இப்றாஹீம் இப்னு முஹம்மத்
12. ஸுலைமான் இப்னு அபீத்
13. முஹம்மத் இப்னு ஜுபைர் 
14. அப்துல்லாஹ் இப்னு குதய்யான்
15. ராஷித் இப்னு ஹுனைன்     
16. ஸாலிஹ் இப்னு லுஹைதான்
17. அப்துல்லாஹ் இப்னு மனீஃ
(பார்க்க:- அப்ஹாஸ் ஹய்அத் கிபார் அல்உலமா, பாகம்:- 3, பக்கம்:- 32, தீர்மானம்:- 2)

فتوى هيئة كبار العلماء في المملكة العربية السعودية
فتاوى اللجنة الدائمة  (10 / 109-112) الفتوى رقم ( 1657 )
س1: نحن الطلبة المسلمين في الولايات المتحدة وكندا ، يصادفنا في كل بداية لشهر رمضان مشكلة تسبب انقسام المسلمين إلى ثلاث فرق:
1- فرقة تصوم بتحري الهلال في البلدة التي يسكنون فيها.
2- فرقة تصوم مع بداية الصيام في المملكة العربية السعودية .
3- فرقة تصوم عند وصول خبر من اتحاد الطلبة المسلمين في أمريكا وكندا الذي يتحرى الهلال في أماكن متعددة في أمريكا ، وفور رؤيته في إحدى البلاد يعمم على المراكز المختلفة برؤيته فيصوم مسلمو أمريكا كلهم في يوم واحد على الرغم من المسافات الشاسعة التي بين المدن المختلفة.
فأي الجهات أولى بالاتباع والصيام برؤيتها وخبرها؟ أفتونا مأجورين أثابكم الله.
ج: قد سبق أن نظر مجلس هيئة كبار العلماء بالمملكة العربية السعودية هذه المسألة وأصدر فيها قرارا مضمونه ما يلي: أولا: اختلاف مطالع الأهلة من الأمور التي علمت بالضرورة حسا وعقلا، ولم يختلف فيها أحد من العلماء وإنما وقع الاختلاف بين علماء المسلمين في اعتبار اختلاف المطالع وعدم اعتباره. ثانيا: مسألة اعتبار اختلاف المطالع وعدم اعتباره من المسائل النظرية التي للاجتهاد فيها مجال والاختلاف فيها واقع ممن لهم الشأن في العلم والدين وهو من الخلاف السائغ الذي يؤجر فيه المصيب أجرين أجر الاجتهاد وأجر الإصابة، ويؤجر فيه المخطئ أجر الاجتهاد. وقد اختلف أهل العلم في هذه المسألة على قولين: فمنهم من رأى اعتبار اختلاف المطالع، ومنهم من لم ير اعتباره، واستدل كل فريق منهما بأدلة من الكتاب والسنة، وربما استدل الفريقان بالنص الواحد، كاشتراكهما في الاستدلال بقوله تعالى: { يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ }   وبقوله صلى الله عليه وسلم: « صوموا لرؤيته وأفطروا لرؤيته »   الحديث. وذلك لاختلاف الفهم في النص وسلوك كل منهما طريقا في الاستدلال به. ونظرا لاعتبارات رأتها الهيئة وقدرتها ونظرا إلى أن الاختلاف في هذه المسألة ليست له آثار تخشى عواقبها فقد مضى على ظهور هذا الدين أربعة عشر قرنا، لا نعلم فيها فترة جرى فيها توحيد الأمة الإسلامية على رؤية واحدة، فإن أعضاء مجلس كبار العلماء يرون بقاء الأمر على ما كان عليه، وعدم إثارة هذا الموضوع، وأن يكون لكل دولة إسلامية حق اختيار ما تراه بواسطة علمائها من الرأيين المشار إليهما في المسألة، إذ لكل منهما أدلته ومستنداته. ثالثا: نظر مجلس الهيئة في مسألة ثبوت الأهلة بالحساب وما ورد في ذلك من أدلة في الكتاب والسنة واطلعوا على كلام أهل العلم في ذلك فقرروا بإجماع: عدم اعتبار حساب النجوم في ثبوت الأهلة في المسائل الشرعية لقوله صلى الله عليه وسلم: « صوموا لرؤيته وأفطروا لرؤيته »   الحديث. وقوله صلى الله عليه وسلم: « لا تصوموا حتى تروه ولا تفطروا حتى تروه » (2) الحديث، وما في معنى ذلك من الأدلة. وترى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء أن اتحاد الطلبة المسلمين في الدول التي حكوماتها غير إسلامية يقوم مقام حكومة إسلامية في مسألة إثبات الهلال بالنسبة لمن يعيش في تلك الدول من المسلمين. وبناء على ما جاء في الفقرة الثانية من قرار مجلس الهيئة يكون لهذا الاتحاد حق اختيار أحد القولين: إما اعتبار اختلاف المطالع، وإما عدم اعتبار ذلك، ثم يعمم ما رآه على المسلمين في الدولة التي هو فيها، وعليهم أن يلتزموا بما رآه وعممه عليهم؛ توحيدا للكلمة، ولبدء الصيام وخروجا من الخلاف والاضطراب، وعلى كل من يعيش في تلك الدول أن يتراءوا الهلال في البلاد التي يقومون فيها، فإذا رآه ثقة منهم أو أكثر صاموا بذلك، وبلغوا الاتحاد ليعمم ذلك. وهذا في دخول الشهر. أما في خروجه فلا بد من شهادة عدلين برؤية هلال شوال أو إكمال رمضان ثلاثين يوما؛ لقول رسول الله صلى الله عليه وسلم: « صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا العدة ثلاثين يوما. وبالله التوفيق وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم.
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء
الرئيس: عبد العزيز بن عبد الله بن باز .......... نائب رئيس اللجنة: عبد الرزاق عفيفي
عضو: عبد الله بن قعود ....................... عضو: عبد الله بن غديان
وكذلك انظر : قرار هيئة كبار العلماء  في : أبحاث هيئة كبار العلماء - (3 / 32) قرار رقم (2)
وفيه ذكر العلماء المشاركين في الدورة التي صدر هذا القرار فيها وهم : 
1- عبد الرزاق عفيفي   2- محمد الأمين الشنقيطي      3- محضار عقيل      4- عبد العزيز بن باز         5- عبد الله بن حميد           6- عبد الله خياط        7-  محمد الحركان             8- عبد المجيد حسن    9- عبد العزيز بن صالح     10- صالح بن غصون                   11- إبراهيم بن محمد آل الشيخ  12-  سليمان بن عبيد    13- محمد بن جبير       14- عبد الله بن غديان          15-  راشد بن خنين 16- صالح بن لحيدان         17- عبد الله بن منيع


இமாம் இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்)

1) சவூதி போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டில் ரமளான் மாதம் ஏற்பட்டு விட்டதாக அறிவிப்புச் செய்யப்பட்டு நான் வாழும் நாட்டில் அது அறிவிக்கப்படவில்லை என்றால் சவூதியில் ரமளான் ஏற்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நாம் நோன்பு பிடிக்கவேண்டுமா? அல்லது எமது நாட்டில் ரமளான் ஆரம்பித்து விட்டதாக அறிவிக்கப்படும் போது அவர்களுடன் சேர்ந்து நோன்பு பிடித்து அவர்களுடன் சேர்ந்து பெருநாள் எடுக்கவேண்டுமா என்று இப்னு  பாஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பத்வா வழங்குகிறார்கள்.    
பதில் :- ஒரு முஸ்லிம் எந்த நாட்டில் இருக்கிறானோ அந்த நாட்டுடனே நோன்பு பிடிக்கவும் பெருநாள் எடுக்கவும் வேண்டும். 
(மஜ்மூஃ பதாவா இப்னு பாஸ்: பாகம் :- 15, பக்கம் :- 103 – 104)

2) ரமழான் மற்றும் ஷவ்வால் தலைப்பிறை பாகிஸ்தானில் சவூதியை விட இரண்டு நாட்கள் தாமதித்தே தென்படுவதாகவும் நாங்கள் சவூதியுடன் நோன்பு பிடிக்க வேண்டுமா? அல்லது பாகிஸ்தானுடன் நோன்பு பிடிக்க வேண்டுமா? என்று அல்லாமா இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்.
"இத்தூய மார்க்த்தின் சட்டமாக எமக்கு தெளிவாவது என்னவெனில் நீங்கள் உங்களுடன் இருக்கும் முஸ்லிம்களுடன் நோன்பு பிடிப்பதே உங்கள் மீது கட்டாயமாகும். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1- "நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளில் தான் நோன்பு; நீங்கள் நோன்புப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் நோன்புப் பெருநாள்; நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்" என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

        எனவே நீரும் உமது சகோதரர்களும் பாகிஸ்தானில் இருக்கும் காலத்தில் அவர்கள் நோன்பு பிடிக்கும் போதே நீங்களும் நோன்பு பிடிக்க வேண்டும். அவர்கள் பெருநாள் எடுக்கும் போதே நீங்களும் பெருநாள் எடுக்க வேண்டும். ஏனெனில் நீங்களும் மேற்படி ஹதீஸிற்கு உட்படுகிறீர்கள். மேலும் பிறை தென்படுவது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது. அறிஞர்களில் ஒரு பிரிவினர் ஒவ்வொரு நாட்டு மக்களும் பிறை காணவேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இப்னு அப்பாஸ் (றலியல்லாஹுஅன்ஹு) அவர்களும் இக்கருத்தையே கொண்டிருந்தார்கள்.

2- நோன்பு மற்றும் பெருநாளில் உங்களுடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு நீங்கள் மாறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கேள்விக்கும் மறுப்புக்கும் வழிவகுக்கும். கருத்து முரண்பட்டு பிரச்சினைபடுவதையும் வாக்குவாதப்படுவதையும் தூண்டக் கூடியதாக அமையும். இம்முழுமையான இஸ்லாமிய மார்க்கம், ஒற்றுமைப்படுவதையும், உடன்படுவதையும், நல்ல காரியத்திலும், இறை அச்சகத்திலும், ஒத்துழைப்பதையும் முரண்பட்டுப் பிரச்சினைப்படுவதைத் தவிர்ப்பதையும் தூண்டுகிறது. இதனால் தான் "அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" பிரிந்து விடாதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான். மேலும் (நீங்கள் இருவரும் நன்மாராயம் கூறுங்கள்; வெறுப்படையச் செய்யாதீர்கள். உடன்பட்டு நடந்து கொள்ளுங்கள், பிளவுபட்டு நடக்காதீர்கள்) என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், முஆத் (றலியல்லாஹுஅன்ஹு) அவர்களையும் அபூ மூஸா (றலியல்லாஹுஅன்ஹு) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த போது உபதேசம் செய்தார்கள்.
(பார்க்க:- மஜ்மூஃ பதாவா இப்னு பாஸ்: பாகம்:- 15, பக்கம்:- 103 – 104)

من فتاوى الإمام الفقيه ابن باز (رحمه الله رحمة واسعة) وهو ممن يرى عدم الاعتبار باختلاف المطالع  :
1- في مجموع فتاوى ابن باز (15 / 102)
س: إذا ثبت دخول شهر رمضان في إحدى الدول الإسلامية كالمملكة العربية السعودية، وأعلن ذلك، ولكنه في الدولة التي أقيم بها لم يعلن عن دخول شهر رمضان، فما الحكم ؟ هل نصوم بمجرد ثبوته في المملكة أم نفطر معهم ونصوم معهم متى ما أعلنوا دخول شهر رمضان ؟ وكذلك بالنسبة لدخول شهر شوال - أي يوم العيد - ما الحكم إذا اختلف الأمر في الدولتين؟ وجزاكم الله عنا وعن المسلمين خير الجزاء   .
ج : على المسلم أن يصوم مع الدولة التي هو فيها ، ويفطر معها ؛ لقول النبي صلى الله عليه وسلم: « الصوم يوم تصومون، والفطر يوم تفطرون، والأضحى يوم تضحون »   . وبالله التوفيق.
 
2- وفي مجموع فتاوى ابن باز أيضا (15 / 103- 104)
س: ذكرتم أن الرؤية في الباكستان لهلال رمضان وشوال تتأخر بعد السعودية يومين ، وسألتم : هل تصومون مع السعودية أو مع الباكستان ؟
ج : الذي يظهر لنا من حكم الشرع المطهر أن الواجب عليكم الصوم مع المسلمين لديكم ؛ لأمرين:
أحدهما: قول النبي صلى الله عليه وسلم : «الصوم يوم تصومون، والفطر يوم تفطرون، والأضحى يوم تضحون»   خرجه أبو داود وغيره بإسناد حسن ، فأنت وإخوانك مدة وجودكم في الباكستان ينبغي أن يكون صومكم معهم حين يصومون ، وإفطاركم معهم حين يفطرون ؛ لأنكم داخلون في هذا الخطاب، ولأن الرؤية تختلف بحسب اختلاف المطالع. وقد ذهب جمع من أهل العلم منهم ابن عباس رضي الله عنهما إلى أن لأهل كل بلد رؤيتهم.
الأمر الثاني: أن في مخالفتكم المسلمين لديكم في الصوم والإفطار تشويشا ودعوة للتساؤل والاستنكار وإثارة للنزاع والخصام، والشريعة الإسلامية الكاملة جاءت بالحث على الاتفاق والوئام والتعاون على البر والتقوى وترك النزاع والخلاف ؛ ولهذا قال تعالى: {وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا} وقال النبي صلى الله عليه وسلم لما بعث معاذا وأبا موسى رضي الله عنهما إلى اليمن : « بشرا ولا تنفرا وتطاوعا ولا تختلفا ».


இமாம் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) 

1) அவர்கள் தனது தமாமுல் மின்னஹ் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

"இஸ்லாமிய நாடுகள் (சர்வதேசப் பிறையில்) ஒன்றுபடும் வரை ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டுடனே நோன்பு பிடிக்கவேண்டும். தங்களுக்குள் பிரிந்து சிலர் தங்கள் நாட்டுடனும் வேறு சிலர் அந்த நாட்டுக்கு முன்னரோ, பின்னரோ நோன்பு பிடித்த நாடுகளுடன் நோன்பு பிடிக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அது சில அரபு நாடுகளில் சில வருடங்களாக நடந்து வருவதைப் போல ஒரு சமூகத்திற்குள்ளே கருத்து வேறுபாட்டின் வட்டத்தை விரிவுபடுத்துவதாக அமையும்." (398– 399)

2) ஸில்ஸிலஹ் ஸஹீஹஹ் என்ற தனது நூலில் கூறும் போது "இஸ்லாமிய அரசுகள் தங்கள் ஹஜ்ஜின் நாளை எவ்வாறு ஒன்றுபடுத்தியுள்ளார்களோ அவ்வாறே தங்கள் நோன்பு   பிடிக்கும் நாளையும் பெருநாளையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.   அவர்கள் அந்த விடயத்தில் ஒன்றுபடும் வரை அவர்களுக்குக் கீழ் வாழும் சமூகங்கள்,   சிலர் தங்கள் நாட்டுடனும் வேறு சிலர் இன்னொரு நாட்டுடனும் நோன்பு பிடித்து   தங்களுக்குள்ளே பிளவுபடுவதை நாம் ஆதரிக்கமாட்டோம். (நாம் இவ்வாறு கூறுவது)   உஸூல் (அல் - பிக்ஹ்) கலையில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று சிறிய பாதிப்பை   செய்து பெரிய பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளல் என்ற சட்ட விதியைச்   சார்ந்ததாகும்." 
(பாகம் 6, பக்கம் 254, ஹதீஸ் எண் 2624)

3) "நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளில் தான் நோன்பு. நீங்கள் நோன்புப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்" என்பது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸாகும்.

          அறிஞர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஓரிடத்தில் வாழும் மக்கள் அங்குள்ள பெரும்பாலான மக்களுடன் நோன்பு பிடிக்க வேண்டும், பெருநாள் எடுக்க வேண்டும் தங்களுக்குள் பிரிந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

        மேற்படி ஹதீஸை அல்பானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது மேற்குறிப்பிட்ட நூலில் ஸஹீஹ் (ஆதாரபூர்வமான செய்தி) என்று விளக்கி விட்டு இது பெரும்பாலான மக்களுடனே நோன்பையும் பெருநாளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாக விளக்கமளித்துள்ளார்கள். அதற்கு மேலும் பல அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆஇஷஹ் (றலியல்லாஹுஅன்ஹா) அவர்களின் தகவலையும் மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

 அதே போன்று ஒருவர் உண்மையாக பிறை கண்டு அவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அவர் கண்ட பிறை அடிப்படையில் அவருக்கு செயற்பட முடியாது. மக்களுடன் சேர்ந்தே நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும் என்று அல்பானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். நோன்பு பெருநாள் ஜமாஅத் தொழுகை போன்ற கூட்டு வணக்கங்களில் தனிப்பட்டவருடைய கருத்தை அது அவரின் பார்வையில் சரியாக இருந்தாலும் மார்க்கம் ஏற்றுக் கொள்ளாது என்று கூறுகிறார்கள்.

        ஸஹாபாக்களுக்கிடையில் இருந்த கருத்து வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி அக்கருத்து வேறுபாடுகள் அவர்கள் ஒரு இமாமுக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து தொழுவதைத் தடுக்கவில்லை என்பதையும் குறிப்பாக உஸ்மான் (றலியல்லாஹுஅன்ஹு) அவர்கள் மினாவில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுதது போன்று சுருக்கித் தொழாது பூரணமாகத் தொழுததை இப்னு மஸ்ஊத் (றலியல்லாஹுஅன்ஹு) அவர்கள் குறை கூறிவிட்டு அவரைப் பின்பற்றி பூரணமாகவே தொழுதார்கள். அவர்களிடத்தில் ஏன் குறை கூறிவிட்டு நீங்களும் அவரைப் பின்பற்றி பூரணமாக தொழுதீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு 'வேறுபடுவது (பிளவுபடுவது) மிகக் கெட்டது' என்று கூறினார்கள் என்ற செய்தியையும் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) தன் கருத்துக்குச் சான்றாக எடுத்துக் காட்டி விளக்குகிறார்கள். 
(பார்க்க: ஸில்ஸிலஹ் ஸஹீஹஹ், பாகம்:-1, பக்கம்:- 443– 445, ஹதீஸ் எண்:- 224)

الإمام المحدث ناصر الدين الألباني ( رحمه الله رحمة واسعة ) وهو ممن يرى عدم الاعتبار باختلاف المطالع  :
1-  في  تمام المنة – ص398-399
وإلى أن تجتمع الدول الإسلامية على ذلك فإني أرى على شعب كل دولة أن يصوم مع دولته ولا ينقسم على نفسه فيصوم بعضهم معها وبعضهم مع غيرها ممن تقدمت في صيامها أو تأخرت لما في ذلك من توسيع دائرة الخلاف في الشعب الواحد كما وقع في بعض الدول العربية منذ بضع سنين والله المستعان .

2- وفي السلسلة الصحيحة - رقم الحديث 2624 – 6/254
ونرى أن من الواجب على الحكومات الإسلامية أن يوحدوا يوم صيامهم ويوم فطرهم ، كما يوحدون يوم حجهم ، ولريثما يتفقون على ذلك ، فلا نرى لشعوبهم أن يتفرقوا بينهم ، فبعضهم يصوم مع دولته ، وبعضهم مع الدولة الأخرى، وذلك من باب درء المفسدة الكبرى بالمفسدة الصغرى كما هو مقرر في علم الأصول . والله تعالى ولي التوفيق.

3-  وفي السلسلة الصحيحة - رقم الحديث 224 – ص 1/443-445
بعد أن صحح حديث رسول الله صلى الله عليه وسلم ((الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون، و الأضحى يوم تضحون))  قال :
فقه الحديث : قال الترمذي عقب الحديث : " وفسر بعض أهل العلم هذا الحديث , فقال : إنما معنى هذا الصوم والفطر مع  الجماعة وعظم الناس " .
وقال الصنعاني في " سبل السلام " ( 2 / 72 ) : " فيه دليل على أنه يعتبر في ثبوت العيد الموافقة للناس , وأن المتفرد بمعرفة  يوم العيد بالرؤية يجب عليه موافقة غيره , ويلزمه حكمهم في الصلاة والإفطار والأضحية " 
وذكر معنى هذا ابن القيم رحمه الله في " تهذيب السنن " ( 3 / 214 ) , وقال : " وقيل : فيه الرد على من يقول إن من عرف طلوع القمر بتقدير حساب المنازل جاز له أن يصوم و يفطر , دون من لم يعلم , وقيل : إن الشاهد الواحد إذا رأى الهلال ولم يحكم القاضي بشهادته أنه لا يكون هذا له صوما , كما لم يكن للناس " .  وقال أبو الحسن السندي في "حاشيته على ابن ماجه" بعد أن ذكر حديث أبي هريرة عند الترمذي : " والظاهر أن معناه أن هذه الأمور ليس للآحاد فيها دخل , و ليس لهم التفرد  فيها , بل الأمر فيها إلى الإمام والجماعة , ويجب على الآحاد اتباعهم للإمام والجماعة , وعلى هذا , فإذا رأى أحد الهلال , ورد الإمام شهادته ينبغي أن لا يثبت في حقه شيء من هذه الأمور , و يجب عليه أن يتبع الجماعة في ذلك " .   قلت : وهذا المعنى هو المتبادر من الحديث , ويؤيده احتجاج عائشة به على مسروق  حين امتنع من صيام يوم عرفة خشية أن يكون يوم النحر , فبينت له أنه لا عبرة برأيه وأن عليه اتباع الجماعة فقالت : " النحر يوم ينحر الناس , والفطر يوم يفطر الناس "  قلت : وهذا هو اللائق بالشريعة السمحة التي من غاياتها تجميع الناس وتوحيد  صفوفهم , وإبعادهم عن كل ما يفرق جمعهم من الآراء الفردية , فلا تعتبر الشريعة  رأي الفرد - ولو كان صوابا في وجهة نظره - في عبادة جماعية كالصوم والتعييد وصلاة الجماعة , ألا ترى أن الصحابة رضي الله عنهم كان يصلي بعضهم وراء بعض وفيهم من يرى أن مس المرأة و العضو و خروج الدم من نواقض الوضوء , ومنهم من  لا يرى ذلك , ومنهم من يتم في السفر , ومنهم من يقصر , فلم يكن اختلافهم هذا  وغيره ليمنعهم من الاجتماع في الصلاة وراء الإمام الواحد , والاعتداد بها , وذلك لعلمهم بأن التفرق في الدين شر من الاختلاف في بعض الآراء , ولقد بلغ الأمر ببعضهم في عدم الإعتداد بالرأي المخالف لرأى الإمام الأعظم في المجتمع  الأكبر كمنى, إلى حد ترك العمل برأيه إطلاقا في ذلك المجتمع فرارا مما قد ينتج من الشر بسبب العمل برأيه , فروى أبو داود ( 1 / 307 ) أن عثمان رضي الله عنه  صلى بمنى أربعا , فقال عبدالله بن مسعود منكرا عليه : صليت مع النبي صلى الله عليه وسلم ركعتين , ومع أبي بكر ركعتين , ومع عمر ركعتين , ومع عثمان صدرا  من إمارته ثم أتمها , ثم تفرقت بكم الطرق فلوددت أن لي من أربع ركعات ركعتين  متقبلتين , ثم إن ابن مسعود صلى أربعا! فقيل له : عبت على عثمان ثم صليت أربعا ?! قال : الخلاف شر . و سنده صحيح . و روى أحمد ( 5 / 155 ) نحو هذا عن  أبي ذر رضي الله عنهم أجمعين .  فليتأمل في هذا الحديث و في الأثر المذكور أولئك الذين لا يزالون يتفرقون في  صلواتهم , و لا يقتدون ببعض أئمة المساجد , و خاصة في صلاة الوتر في رمضان ,  بحجة كونهم على خلاف مذهبهم ! وبعض أولئك الذين يدعون العلم بالفلك , ممن يصوم ويفطر وحده متقدما أو متأخرا عن جماعة المسلمين , معتدا برأيه وعلمه , غير مبال بالخروج عنهم , فليتأمل هؤلاء جميعا فيما ذكرناه من العلم , لعلهم يجدون  شفاء لما في نفوسهم من جهل و غرور , فيكونوا صفا واحدا مع إخوانهم المسلمين فإن يد الله مع الجماعة. 
அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பலரும் இப்பிரச்சினை சம்பந்தமாக கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் ஆடியோக்களில் பதிவாகியுள்ளன. அவை இணையத்திலும் உள்ளன. அந்த ஆடியோக்கள் أهل الحديث والأثر என்ற இணைய தளத்தில் எழுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அவற்றின் சில பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.

4- அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் (குரல் பத்வா-1):

"பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தங்கி வாழக்கூடியவர் -அவர் அரபு நாடுகளைச் சேர்ந்தவராக இருந்தாலும்- அவர் எந்த பிரதேசத்தில் வாழ்கிறாரோ அந்த பிரதேசத்தை விட்டும் நோன்பில் வித்தியாசப்பட கூடாது. ஏனெனில் அரபு நாட்டுடன் அவர் நோன்பு பிடிப்பது கருத்து வேறுபாட்டை இன்னும் அதிகரிக்கும். மனிதர்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாட்டை குறைப்பதே கட்டாயமாகும். அதனை அதிகப்படுத்துவது  அனுமதிக்கப்பட்ட விடயமல்ல..."

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு இதே சட்டமா? என்று ஷெய்க் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ஆம் என்று பதில் கூறினார்கள்.

5- அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் (குரல் பத்வா-2): 

"நாங்கள் தனிப்பட்ட முஸ்லிம்கள் என்ற வகையில் முழு இஸ்லாமிய உலகையும் ஒரே நாளில் நோன்பு பிடிக்க வைப்பது எங்கள் சக்திக்கு உட்பட்ட காரியமல்ல. இதனால் நாம் ஸஹீஹான ஒரு ஹதீஸை நடைமுறைப்படுத்துவது எங்கள் மீது கடமையாகும். அதுதான் "மனிதர்கள் நோன்பு நோற்கும் நாளில்தான் உங்கள் நோன்பு அமைந்திருக்கும்; மனிதர்கள் பெருநாள் எடுக்கும் நாளில்தான் உங்கள் பெருநாளும் அமைந்திருக்கும்" என்ற ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றாகும். நீர் இந்த நாடுகளில் வாழ்பவனாக இருந்தால் அவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்று அவர்களுடன் சேர்ந்து பெருநாள் எடுத்துக்கொள். இந்த நாடுகளை நோன்பில் முந்தும் அல்லது பிந்தும்  சவூதியிடனோ ஏனைய நாடுகளுடனோ உன்னுடைய முடிவை தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டாம்... நாம் புதிதாக ஒரு பிரிவினையை  உண்டு பண்ண வேண்டிய அவசியமில்லை..." 


6- அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் குரல் பத்வா-3:

"...நான் சொல்வது யாதெனில்: முடியுமான அளவு கருத்து வேறுபாட்டை தடுப்பது ஷரீஅத்தின் அடிப்படை விதிகளில் உள்ளதாகும். ஒரு நாட்டின் பிறை அடிப்படையில் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்பது தான் அடிப்படை என்று இப்போது நாம் கூறினோம். ஆனால் இது நடைமுறையில் இல்லை. எனவே ஒரே நாட்டுக்குள் இந்த அடிப்படையை நாம் கடைபிடிக்க முற்பட்டால் (சர்வதேசத்தை ஒன்று படுத்துதல் என்ற) எமது சக்திக்கு அப்பாற்பட்ட பிரிவினையை விட விசாலமானதாக பிரிவினையின் வட்டம் மாறிவிடும்... பிரிவினையின் வட்டத்தை சுருக்க வேண்டும் என்பதற்காக நாம் சொல்கிறோம்: எந்த ஒரு அறிஞரும் குறிப்பிடாத அடிப்படையான ஒரு முரண்பாட்டை நாம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் நாம் இருக்கும் நாட்டுடன் நோன்பு பிடிப்போம்..."

7- அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் குரல் பத்வா-4:

ஷெய்க் அல்பானி அவர்களிடம் ஒருவர் கேட்கிறார்:
உஸ்தாத் அவர்களே ஒருவர் தனக்கு சூழுள்ள சமூகம் அல்லாத வேறு ஒரு சமூகத்துடன் நோன்பு பிடிக்க முடியுமா? 

ஷெய்க் அவர்களின் பதில்: "முடியாது; அவ்வாறு செய்வது கூடாது… பிக்ஹ் மஸாஇல்களில்  முடியுமான அளவு புரிந்துணர்வும் நெருக்கமும் ஏற்படுவது கட்டாயம்.... சிறிய பாதிப்பை செய்து பெரும் பாதிப்பை தடுத்துக் கொள்வதற்காக ஒரு நாட்டவர் வேறு ஒரு நாட்டுடன் நோன்பு பிடிக்க வேண்டாம் என்று சொல்லப்படவேண்டும். இதனால் எங்களிடம் இல்லாத ஒரு பிரிவினை ஏற்படுகிறது. எந்த அளவுக்கு என்றால் அடிப்படை விடயங்களில் ஒரு ஸலபிக்கும் ஸலபியல்லாத ஒருவருக்கும் ஏற்படுவது போன்று ஒரே வீட்டுக்குள்ளே வேறுபாடு ஏற்படுகிறது. இவர் ஸவூதியுடன் நோன்பு நோற்கின்றார் அவருடைய தந்தை நாட்டுடன் நோன்பு நோற்கின்றார். எனவே இது கூடாது..." 
கேள்வி கேட்டவர் பின்வருமாறு கேட்கிறார்: சரி ஒரு வாதத்திற்கு எந்த பிரச்சினையோ, வேறுபாடோ, விளைவோ ஏற்படவில்லை என்று வைத்துக்கொள்வோமே? என வினவுகிறார். 
அதற்கு ஷெய்க் அவர்கள்: "நீர் கற்பனை பண்ண வேண்டாம்; நாங்கள் அனுபவத்தில் அறிந்ததையே உமக்கு சொல்கிறோம். ஒரு வாதத்துக்கு அதனை கூடும் என்று நாம் சொன்னால் நீர் என்ன பயனைத்தான் அடைந்துகொள்ளப் போகிறாய்? மாத இறுதியில் பிரச்சினை ஏற்படும்; இங்கே 29ஆவது நாளாக இருக்கும் போது அங்கே பெருநாளாக இருக்கும். இவன் யாருடன் எவ்வாறு பெருநாள் எடுக்கப் போகிறான். அமல்கள் அவற்றுடைய இறுதி எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்தே அமைந்திருக்கும்.  எனவே இவன் தன்னுடைய நாட்டு மக்களுடன் தான் நோன்பு பிடிக்க வேண்டும். அங்கே தவறு நடந்தால் அம்மக்கள் அந்தத் தவறின் பாவத்தை சுமந்து கொள்ள மாட்டார்கள்..."

8- அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் குரல் பத்வா-5:

"பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள்" என்ற ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களின் கூற்று முழு உம்மத்திற்குமான  கட்டளையாக இருக்கிறது என்பது எங்களிடத்தில் பலமான நிலைப்பாடாக இருந்தாலும்கூட... ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்கள் நோன்பு பிடிக்கும் பொழுது நோன்பு பிடிக்க வேண்டும் என்றே இதுபோன்ற பிரச்சினையில் நாம்  ஃபத்வா கொடுக்கிறோம்..."


இமாம் இப்னுல் உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்)

1- "…ஆனாலும் ஒரு ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆட்சியாளர் நோன்பு பிடிக்குமாறு அல்லது பெருநாள் எடுக்குமாறு கட்டளையிட்டால் அவரது கட்டளையை நிறைவேற்றுவது கட்டாயமாகும். ஏனெனில் இந்த விடயம் கருத்துவேறுபாடானதாகும். ஆட்சியாளரின் தீர்மானம் கருத்து வேறுபாட்டை நீக்கும். இதனடிப்படையில் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டு மக்கள் நோன்பு நோற்று, பெருநாள் எடுப்பது போன்றே நீங்களும் நோன்பு நோற்று, பெருநாள் எடுக்க வேண்டும். அது உங்கள் அடிப்படை நாட்டுக்கு உடன் பட்டாலும் மாறுபட்டாலும் பிரச்சினையில்லை. அவ்வாறுதான் அறஃபஹ் தினத்திலும் நீங்கள் இருக்கும் நாட்டை பின்பற்ற வேண்டும்." 
(மஜ்மூஉல் பதாவா - இப்னுல் உஸைமீன், 19/41)

2- "…பிறை தென்படும் பகுதிகள் வித்தியாசப்படுவதற்கேற்ப செயல்பட வேண்டும் என்ற கருத்தை நாம் சரி கண்டாலும் (மேற்குறிப்பிட்ட) இதுவே சமூக ரீதியாக பலமான கருத்தாக இருக்கிறது. அதனால், பிறை தென்படும் பகுதிகளுக்கு ஏற்பவே செயற்படவேண்டும் என்று கருதுபவரும் கூட மக்கள் இருக்கும் கருத்துக்கு மாற்றமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பது கட்டாயமாகும்."
(அஷ்ஷரஹுல் மும்திஃ, 6/311)

3- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்லிமல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு செய்த உபதேசத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

"...அம்முஸ்லிம்களின் நோன்பும் பெருநாளும் ஒன்றாக இருக்கவேண்டும். அவர்களை வழிநடத்தும் மார்க்க மத்திய நிலையத்தையே அவர்கள் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கிடையில் பிரிந்துவிடக் கூடாது. அது ஸஊதியை விட அல்லது ஏனைய இஸ்லாமிய நாடுகளை விட பிந்தி விட்டாலும் சரியே. அவர்களுடைய மத்திய நிலையம் சொல்வதை அவர்கள் பின்பற்றட்டும்."
(மஜ்மூஉல் பதாவா - இப்னுல் உஸைமீன், 19/51)

الإمام الفقيه محمد بن صالح بن عثيمين (رحمه الله تعالى رحمة واسعة) وهو ممن يرى اعتبار اختلاف المطالع
1- قال رحمه الله في  مجموع الفتاوى له (ج19/ص41): ...ولكن إذا كان البلدان تحت حكم واحد وأَمَرَ حاكمُ البلاد بالصوم، أو الفطر وجب امتثال أمره؛ لأن المسألة خلافية، وحكم الحاكم يرفع الخلاف.  وبناء على هذا صوموا وأفطروا كما يصوم ويفطر أهل البلد الذي أنتم فيه سواء وافق بلدكم الأصلي أو خالفه ، وكذلك يوم عرفة اتبعوا البلد الذي أنتم فيه.
2- وقال في الشرح الممتع على زاد المستقنع (ج6/ص311): ...وعمل الناس اليوم على هذا أنه إذا ثبت عند ولي الأمر لزم جميع من تحت ولايته أن يلتزموا بصوم أو فطر، وهذا من الناحية الاجتماعية قول قوي، حتى لو صححنا القول الثاني الذي نحكم فيه باختلاف المطالع فيجب على من رأى أن المسألة مبنية على المطالع، ألا يظهر خلافاً لما عليه الناس.
3- وقال في مجموع فتاواه (ج19/ص51): ...وأن يكون صومهم واحداً وفطرهم واحداً، وهم يتبعون المركز الذي عندهم أعني المركز الديني الذي يوجه من تحت نظره من المسلمين وأن لا يتفرقوا حتى لو تأخر صومهم عن صوم المملكة، أو أي بلاد إسلامية أخرى فليتبعوا ما يقوله المركز.


அல்லாமஹ் ஸாலிஹ் அல்-பவ்ஸான்

"...இவ்விடயத்தில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இது ஆய்வுக்கு உட்பட்ட விடயமாகும். அந்நாட்டில் இருக்கும் அறிஞர்கள் இது விடயத்தில் முடிவு செய்வர். அவர்கள் நோன்பில் ஒன்றுபட வேண்டும்; பிறை தென்படும் இடங்களுக்கு மத்தியிலுள்ள வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக்கூடாது என்று கருதினால் அவர்களுக்கு அவர்களின் ஆய்வின் அடிப்படையில் நடக்கும் உரிமை இருக்கிறது. அவர்கள் பிறை தென்படும் இடங்கள் வித்தியாசப்படுவதற்கேற்ப  செயல்பட வேண்டும் என்று கருதினால் இதுவே சரியான நிலைப்பாடாகும்; இதுவே பலமான கருத்தாகும்."

العلامة صالح الفوزان حفظه الله تعالى وهو ممن يرى اعتبار اختلاف المطالع
...والمسألة فيها خلاف بين العلماء فهي محل للنظر والترجيح, وهذا يرجع إلى أهل العلم في هذا البلد فإذا رأوا توحيد الصيام ولم يعتبروا اختلاف المطالع فلهم اجتهادهم وإذا رأوا العلم باختلاف المطالع فهذا هو الصحيح وهو الراجح...


அல்லாமஹ் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்

"இது போன்ற விடயங்களில் வெளிப்படையாக விளங்குவது யாதெனில்: முஸ்லிம்கள் அவர்களின் நோன்பில் ஒன்றுபட்டால் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் அதுவே ஏற்றமானது. ஆனால் அது நடக்காத போது  ஒவ்வொரு நாட்டு மக்களும் அவர்களின் அறிஞர்கள் கொடுக்கும் தீர்ப்பையே ஏற்க வேண்டும். குறித்த ஒரு நாட்டுக்கு அவர்கள் உடன்பட்டால் மற்றவர்களும் அவர்களைப் பின் தொடர வேண்டும். தங்கள் நாட்டில்   தனியாக பிறை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கருதினால் அவ்வாறு அவர்கள் செய்ய முடியும்."
(ஷரஹ் ஸுனனி அபீதாவூத் 268)

العلامة الشيخ عبد المحسن العباد البدر حفظه الله تعالى وهو ممن يرى عدم اعتبار اختلاف المطالع 
قال حفظه الله تعالى في شرح سنن أبي داود (٢٦٨): ...والذي يظهر في مثل هذا أن المسلمين لو اجتمعوا واتحدوا في صيامهم فلاشك أن هذا هو الأولى، ولكن إذا لم يحصل ولم يتأت ذلك فإن كل بلد يعولون على ما يفتيهم به علماؤهم، فإن وافقوا أهل بلد معين تابعوهم في ذلك، وإن رأوا أنهم يستقلون برؤيتهم فلهم ذلك.


முழு இஸ்லாமிய உலகும் ஒரே நாளில் நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பது ஒற்றுமையை ஏற்படுத்துமா?

ராபிதஹ்வின் அல்மஜ்மஃ அல்பிக்ஹீ அல்இஸ்லாமீ  ஆய்வகத்தின் தீர்மானம்: 

இவ்வாய்வு குழுவில் கலந்து கொண்டவர்களில் இமாம் இப்னு பாஸ், இமாம் உஸைமீன், அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் ஆகியோரும் உள்ளனர்.

"...இஸ்லாமிய உலகில் பிறைகளையும் பெரு நாட்களையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அவசியமும் இல்லை. ஏனெனில் இதற்கான ஆலோசனையை வழங்கிய பலரும் கற்பனை செய்வது மாதிரி அது அவர்களின் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்தமாட்டாது. பிறையை தீர்மானிக்கும் விடயத்தை இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் நீதி மற்றும் பத்வா மன்றங்களுக்கு விட்டுவிட வேண்டும். அதுவே இஸ்லாமிய பொது நலனுக்கு ஏற்றதாக இருக்கும். உம்மத்தின் ஒருமைப்பாட்டுக்கும் கருத்தொற்றுமைக்கும் உத்தரவாதத்தை ஏற்படுத்துவது யாதெனில்: அவர்கள் தங்கள் அனைத்து விடயங்களிலும்  அல்லாஹ்வின் வேதத்தை கொண்டும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்  ஸுன்னஹ்வை கொண்டும் அமல் செய்வதற்கு ஒன்றுபடுவதே ஆகும்."

المجمع الفقهي الإسلامي للرابطة  
"...وعلى ضوء ذلك قرر مجلس المجمع الفقهي الإسلامي: أنه لا حاجة إلى الدعوة إلى توحيد الأهلة والأعياد في العالم الإسلامي؛ لأن توحيدها لا يكفل وحدتهم ، كما يتوهمه كثير من المقترحين لتوحيد الأهلة والأعياد. وأن تترك قضية إثبات الهلال إلى دور الإفتاء والقضاء في الدول الإسلامية، لأن ذلك أولى وأجدر بالمصلحة الإسلامية العامة. وأن الذي يكفل توحيد الأمة وجمع كلمتها، هو اتفاقهم على العمل بكتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم في جميع شؤونهم. والله ولي التوفيق. وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم" 
الرئيس: عبد الله بن حميد, نائب الرئيس: محمد علي الحركان, الأعضاء: عبد العزيز بن باز، محمد بن سالم بن عبد الودود (غائب)، مصطفى الزرقا (غائب عند التوقيع)، محمد رشيدي، محمد بن عبد الله السبيل، حسنين مخلوف، محمد رشيد قباني، صالح بن عثيمين، عبد المحسن العباد، اللواء محمود شيث خطاب (غائب)، محمد الشاذلي النيفر، محمود الصواف، عبد القدوس الهاشمي، مبروك العوادي، أبو الحسن الندوي (غائب عند التوقيع) قرار رقم: 16 (7/4) في بيان توحيد الأهلة من عدمه.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் அங்குள்ள அதிகாரபூர்வ பிறை குழுவோ அல்லது பிறைக்கு பொறுப்பானவரோ இஸ்லாமிய நாட்டிலுள்ள அரசாங்கத்தின் இடத்தில் இருக்கின்றனர்.

1- இமாம் இப்னு பாஸ் உள்ளடங்கலான சவுதி உலமாக்களின் ஆய்வு சபை தீர்மானம்:

கேள்வி: இஸ்லாமிய நாடு அல்லாத ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ரமலான், ஷவ்வால், துல் ஹஜ் பிறைகளை தீர்மானித்துக் கொள்வதற்கு ஒரு குழுவை அமைத்துக் கொள்வது கூடுமா கூடாதா?

பதில்: "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இஸ்லாமிய நாடு அல்லாத ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ரமலான், ஷவ்வால்,  துல் ஹஜ் பிறைகளை தீர்மானிக்கும் பொறுப்பை செய்யும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துக் கொள்வது கூடும்...". 

1- اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء:  سؤال رقم 2511, فتاوى اللجنة الدائمة (ج10/ص112): 
 سؤال: هل يجوز للمسلمين الذين يقيمون في بلد ليس بإسلامية أن يشكلوا لجنة تقوم بإثبات هلال رمضان وشوال وذي الحجة أم لا ؟ 
الجواب: الحمد لله . المسلمون الموجودون في بلد غير إسلامية يجوز لهم أن يشكلوا لجنة من المسلمين تتولى إثبات هلال رمضان وشوال وذي الحجة . وبالله التوفيق وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. 
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء 
الرئيس: عبد العزيز بن عبد الله بن باز                                  نائب رئيس اللجنة: عبد الرزاق عفيفي 
عضو: عبد الله بن قعود                                                  عضو: عبد الله بن غديان

2- கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் மக்களுக்கு மேற்படி ஆய்வுக்குழு வழங்கிய ஃபத்வாவில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

"அல்லஜ்னஹ் அத்தாஇமஹ் லில் புஹூஸ் அல்-இல்மிய்யஹ் வல்இப்தா” வாகிய நாம் கருதுவது யாதெனில்: *மேற்படி முஸ்லிம் மாணவர் ஒன்றியம், மேற்படி இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஒரு இஸ்லாமிய அரசின் இடத்தில் இருக்கின்றது. இருவேறுபட்ட கருத்துக்களில் ஒன்றை தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது;  அங்குள்ள முஸ்லிம்கள் அதனை கடைபிடிப்பது கட்டாயமாகும்..."

2- في فتاوى اللجنة الدائمة (10 / 109-112) الفتوى رقم (1657 ) 
...وترى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء أن اتحاد الطلبة المسلمين في الدول التي حكوماتها غير إسلامية يقوم مقام حكومة إسلامية في مسألة إثبات الهلال بالنسبة لمن يعيش في تلك الدول من المسلمين. وبناء على ما جاء في الفقرة الثانية من قرار مجلس الهيئة يكون لهذا الاتحاد حق اختيار أحد القولين: إما اعتبار اختلاف المطالع، وإما عدم اعتبار ذلك، ثم يعمم ما رآه على المسلمين في الدولة التي هو فيها، وعليهم أن يلتزموا بما رآه وعممه عليهم؛ توحيدا للكلمة، ولبدء الصيام وخروجا من الخلاف والاضطراب...
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء 
الرئيس: عبد العزيز بن عبد الله بن باز                                  نائب رئيس اللجنة: عبد الرزاق عفيفي 
عضو: عبد الله بن قعود                                                  عضو: عبد الله بن غديان

3- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பிறை கருத்து வேறுபாட்டைப் பற்றி குறிப்பிடும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்கள்:

"முஸ்லிம் அல்லாத நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் அங்கு ஒரு அமைப்போ, அலுவலகமோ, இஸ்லாமிய நிலையமோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் அவை சொல்வதின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும்..." 

3- قال الفقيه العلامة محمد بن صالح بن عثيمين في الشرح الممتع (6/  312): مسألة: الأقليات الإسلامية في الدول الكافرة، إن كان هناك رابطة، أو مكتب، أو مركز إسلامي؛ فإنها تعمل بقولهم، وإذا لم يكن كذلك، فإنها تخيَّر، والأحسن أن تتبع أقرب بلد إليها.

மற்றுமொரு பத்வாவில்:

ஒரு நாட்டில் காணும் பிறை அடுத்த நாடுகளுக்கு செல்லுபடியாகாது என்பது துல்ஹஜ் மாதத்தின் பிறையையும் கட்டுப்படுத்துமா? என்று இப்னு உஸைமீன்  றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது பின்வருமாறு பதில் கூறுகிறார்கள்:

"ரமலானிலும் தான் ரமலான் அல்லாத மாதங்களிலும் தான் பிறையின் உதிப்பு பூமியின்  ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையில் வித்தியாசப்படும். அதனால் எல்லா மாதங்களுக்கும் ஒரே சட்டம்தான். ஆனாலும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் மக்கள் அங்குள்ள  இஸ்லாமியர்களின் தலைவர் சொல்வதையே பின்பற்ற வேண்டும்; அனைத்து மக்களும்  ஒருமித்த முடிவில் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்த விடயம் (கருத்துவேறுபாடுக்குட்பட்ட) விசாலத் தன்மை கொண்டதாகும்..."

وفي مجموع فتاوى ورسائل ابن عثيمين (19/43):
بسم الله الرحمن الرحيم 
سماحة الشيخ محمد بن صالح العثيمين حفظكم الله 
السلام عليكم ورحمة الله وبركاته. فقد اطلعنا على فتوى سماحتكم في كتاب «فتاوى إسلامية» حول رؤية الهلال في بلد لا تلزم جميع البلاد بأحكامه. فهل ينطبق هذا على رؤية هلال عيد الأضحى (شهر ذي الحجة) أفيدونا مأجورين. 
بسم الله الرحمن الرحيم
 وعليكم السلام ورحمة الله وبركاته. الهلال تختلف مطالعه بين أرض وأخرى في رمضان وغيره، والحكم واحد في الجميع، لكني أرى أن يتفق الناس على شيء واحد، وأن يتبعوا ما يقوله أمير الجالية الإسلامية في بلاد غير المسلمين؛ لأن الأمر في هذا واسع إن شاءالله، حيث إن بعض العلماء يقول: متى ثبتت رؤية الهلال في بلد الإسلام في أي قطر لزم الحكم جميع المسلمين في جميع الأقطار الإسلامية. كتبه محمد الصالح العثيمين في15/2/1421هـ.

4- மதீனஹ் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களை கொண்ட ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்டு அதன் கல்வி ஆய்வகம் வெளியிட்டுள்ள அர்கானுல் இஸ்லாம் என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது:

"இஸ்லாமிய ஒற்றுமையை பேணும் முகமாக ஒவ்வொரு நாட்டிலும் (அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள) நோன்பை தீர்மானிக்கும் விடயம் அந்நாட்டின் பொது ஆட்சித் தலைவருக்கு விடப்படும். நோன்பு நோற்பது அல்லது நோற்காமல் இருப்பது என்று அவர் தீர்மானித்தால்  அவருக்கு கட்டுப்படுவது கட்டாயமாகும். ஆட்சியாளர் முஸ்லிமாக இல்லாதிருந்தால் இஸ்லாமிய நிலையத்தின் மஜ்லிஸ் அல்லது அது போன்றவை  வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும்."

4- وفي كتاب أركان الإسلام: ويُجعل أمر الصيام في كل دولة إلى ولي الأمر العام للدولة، فإن حكم بالصيام أو عدمه وجبت طاعته، فإن لم يكن ولي الأمر مسلماً يُعمل بما يحكم به مجلس المركز الإسلامي -أو نحوه- في البلاد محافظة على الوحدة الإسلامية.
أركان الإسلام (ص30) – إصدار عمادة البحث العلمي - الجامعة الإسلامية بالمدينة المنورة

5- ஷெய்க் பர்கூஸ் அவர்களின் ஃபத்வா

"நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளில் தான் நோன்பு; நீங்கள் நோன்புப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் நோன்புப் பெருநாள்; நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளதன் காரணமாக, ஒரு முஸ்லிம் எங்கிருக்கிறானோ -தனது நாட்டு மக்களுடனோ அல்லது வேறுநாட்டுடிலோ எங்கிருந்தாலும்- அங்குள்ள ஜமாஅத்துடனும் பெரும்பாலான மக்களுடனும் அவர்களின் தலைவருடனும் தான் நோன்பு நோற்கவேண்டும்; பெருநாள் எடுக்கவேண்டும் என்பதே அடிப்படையாகும். இந்த கருத்தையே ஆஇஷஹ் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், மஸ்ரூக் (ரஹிமஹுல்லாஹ்) அறபஹ் தினத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்குமோ என்ற அச்சத்தால் நோன்பு நோற்காத போழுது அவர்களுக்கு எதிரான ஆதாரமாக முன்வைத்தார்கள்... மேலே குறிப்பிட்ட விடயங்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்: *நோன்பை ஆரம்பிப்பது, முடித்துக் கொள்வது, உழுஹிய்யஹ் கொடுப்பது, பெருநாள் கொண்டாடுவது போன்ற கூட்டு வணக்கத்தில் தனிப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு அவற்றில் தனித்து செயல்படும் உரிமையும் கிடையாது. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமாஅத் அல்லாத வேறு ஒரு ஜமாஅத்தை பின்தொடரவும் அவர்களுக்கு உரிமை இல்லை. (கருத்து வேறுபாடுள்ள விடயத்தில்) நோன்பு நோற்பதையும் விடுவதையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஆட்சித் தலைவருக்கும், _தான் வாழும் ஜமாஅத்திற்கும் தான் இருக்கிறது..."

5- الشيخ أبو عبد المعز محمد علي فركوس (الفتوى رقم: 500):
فالأصل أن المسلم يصوم ويفطر مع الجماعة وعِظَمِ الناس وإمامهم حيثما تواجد، سواء مع أهل بلده أو مع بلدِ غيره لقوله صلى الله عليه وآله وسلم: «الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»، وهذا المعنى من وجوب الصوم والفطر مع الجماعة في الحديث احتجّت به عائشة رضي الله عنها على مسروق حين امتنع من صيام يوم عرفة خشية أن يكون يوم النحر، حيث قال: «دَخلتُ على عائشةَ رضي الله عنها يوم عرفة، فقالت: اسقوا مسروقًا سويقًا، وأكثروا حلواه، قال: فقلت: إني لم يمنعني أن أصوم اليوم إلاّ أني خفت أن يكون يوم النحر، فقالت عائشة رضي الله عنها: النَّحْرُ يَوْمَ يَنْحَرُ النَّاسُ، وَالفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ»،  ومنه يفهم أنه في العبادة الجماعية كالصوم والإفطار والأضحية والتعييد ونحوها لا عبرة فيها للآحاد، وليس لهم التفرّد فيها، ولا أن يتبعوا الجماعة غير الجماعة التي يتواجدون بينهم، بل الأمر فيها إلى الإمام والجماعة التي وجد معهم صومًا وإفطارًا...
الجزائر في 11 رمضان 1427هـ  - الموافق ل 4 أكتوبر 2006م   


வானியலை அடிப்படையாக வைத்து பிறை சாட்சியம் மறுக்கப்பட்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதிலின் சுருக்கம்:

"ஒருவர் பிறை கண்டதை அதற்குப் பொறுப்பானவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் தான் கண்ட பிறை அடிப்படையில் செயற்படக் கூடாது. மக்களுடன் சேர்ந்து தான் நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும். சிலவேளை பிறை கண்டதை உறுதிப்படுத்துவதற்காக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள தலைவர் நம்பகமானவர்களின் சாட்சியத்தை மறுப்பதன் மூலம் திறக்குறைவு செய்பவராக இருக்கலாம். அதாவது சாட்சியாளர்களின் நம்பகத் தன்மையை தேடிப் பார்ப்பதில் கவனயீனமாக இருப்பதன் மூலமாகவோ தனக்கும் அவர்களுக்கும் மத்தியில்  இருக்கும் பகைமை அல்லது மார்க்கத்தில் இல்லாத வேறு காரணங்களுக்காக அவர்களின் சாட்சியத்தை அவர் மறுப்பதன் மூலமாகவோ அல்லது வானவியலாளரின் அன்று பிறை காண முடியாது என்ற தவறான வாதத்தை ஏற்றுக்கொண்டு சாட்சியத்தை மறுக்கக்கூடியவராகவோ அவர் இருக்கலாம். அப்போதும் பிறையைத் தீர்மானிப்பதில் அவர் கருத்தை ஏற்கவேண்டுமா? என்று கேள்வி கேட்டால், அதற்கு பதில்: ஆம் சரியான அல்லது தவறான முடிவுக்கு வரக் கூடிய நேர்மையான ஆய்வாளராக அவர் இருந்தாலும் அல்லது அந்த விடயத்தில் (மேலே கூறப்பட்டதைப் போன்று) குறை செய்யக் கூடியவராக இருந்தாலும் அவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்."

  "நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆட்சித் தலைவர்கள் விடயத்தில் "அவர்கள் உங்களுக்குத்  தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால் உங்களுக்கும் அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் (வேண்டுமென்றே)   பிழை செய்தால் உங்களுக்கு நன்மையும் அவர்களுக்குப் பாவமும் உண்டு" என்று கூறியுள்ளார்கள். எனவே அவரின் பிழைக்கும் திறக்குறைவுக்கும் அவர் மீதே குற்றம் ஏற்படுமே தவிர பிழைசெய்யாத திறக்குறைவு செய்யாத முஸ்லிம்கள் மீது குற்றம் ஏற்படாது." 
(பார்க்க :- அல்-பதாவா அல்-குப்ரா, பாகம்:- 2, பக்கம்:- 460–464)

பின்னர் இப்னு தைமியா(றஹிமஹுல்லாஹ்) அவர்கள் வானவியலை அடிப்படையாகக் கொண்டு தலைப்பிறையைத் தீர்மானிப்பதைத்  தவறானது; அப்படி செய்பவர் மார்க்கத்தில் வழி கெட்டவர்; பித்அத் செய்பவர் என்று விளக்கிக் கொண்டு செல்கிறார். இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வது யாதெனில் முஸ்லிம்களின் பிறையைத் தீர்மானிக்க பொறுப்புச் சுமத்தப்பட்டவர் தவறிழைத்தால் அல்லது வானவியலைப் பயன்படுத்தி இன்று பிறையைக் காணமுடியாது என்று முடிவு செய்து நம்பகமானவர்களின் சாட்சியத்தை மறுத்தால் அவரின் செயல் பித்அத் ஆக இருந்த போதிலும் அவரையே முஸ்லிம்கள் ஏற்கவேண்டும். அவர் செய்த குற்றத்திற்கு அவர் மாத்திரமே பொறுப்புச்  சுமக்க வேண்டும். ஏனைய அவரைப் பின்பற்றிய முஸ்லிம்கள் அல்ல என்பதாகும். இதுவே இமாம் இப்னு தைமியா(றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் அவர்கள் பிறை கண்ட தகவல் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்ற  கருத்தைக் கொண்டிருந்தார்கள். எனினும் பிறைத் தகவலை பொறுப்பானவர் மறந்ததால் மக்கள் அவருக்கு மாறு செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

قال الإمام ابن تيمية (رحمه الله) في الفتاوى الكبرى (2/460-464 ): فَإِنْ قِيلَ: قَدْ يَكُونُ الْإِمَامُ الَّذِي فُوِّضَ إلَيْهِ إثْبَاتُ الْهِلَالِ مُقَصِّرًا، لِرَدِّهِ شَهَادَةَ الْعُدُولِ، إمَّا لِتَقْصِيرِهِ فِي الْبَحْثِ عَنْ عَدَالَتِهِمْ، وَإِمَّا رَدَّ شَهَادَتَهُمْ لِعَدَاوَةٍ بَيْنَهُ وَبَيْنَهُمْ، أَوْ غَيْرُ ذَلِكَ مِنْ الْأَسْبَابِ، الَّتِي لَيْسَتْ بِشَرْعِيَّةٍ، أَوْ لِاعْتِمَادِهِ عَلَى قَوْلِ الْمُنَجِّمِ الَّذِي زَعَمَ أَنَّهُ لَا يُرَى. قِيلَ: مَا يَثْبُتُ مِنْ الْحُكْمِ لَا يَخْتَلِفُ الْحَالُ فِيهِ بَيْنَ الَّذِي يُؤْتَمُّ بِهِ فِي رُؤْيَةِ الْهِلَالِ، مُجْتَهِدًا مُصِيبًا كَانَ أَوْ مُخْطِئًا، أَوْ مُفَرِّطًا، فَإِنَّهُ إذَا لَمْ يَظْهَرْ الْهِلَالُ وَيُشْتَهَرْ بِحَيْثُ يَتَحَرَّى النَّاسُ فِيهِ. وَقَدْ ثَبَتَ فِي الصَّحِيحِ أَنَّ {النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الْأَئِمَّةِ: يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ وَلَهُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ}". فَخَطَؤُهُ وَتَفْرِيطُهُ عَلَيْهِ، لَا عَلَى الْمُسْلِمِينَ الَّذِينَ لَمْ يُفَرِّطُوا، وَلَمْ يُخْطِئُوا. وَلَا رَيْبَ أَنَّهُ ثَبَتَ بِالسُّنَّةِ الصَّحِيحَةِ وَاتِّفَاقِ الصَّحَابَةِ أَنَّهُ لَا يَجُوزُ الِاعْتِمَادُ عَلَى حِسَابِ النُّجُومِ، كَمَا ثَبَتَ عَنْهُ فِي الصَّحِيحَيْنِ أَنَّهُ قَالَ: {إنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ، وَلَا نَحْسُبُ، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ}". وَالْمُعْتَمِدُ عَلَى الْحِسَابِ فِي الْهِلَالِ، كَمَا أَنَّهُ ضَالٌّ فِي الشَّرِيعَةِ، مُبْتَدِعٌ فِي الدِّينِ، فَهُوَ مُخْطِئٌ فِي الْعَقْلِ وَعِلْمِ الْحِسَاب...


பிறையை தீர்மானிக்கும் பொறுப்பாளர் அல்லது பிறைக் குழு பித்அத்வாதிகளாக இருந்தால் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லையா?

பிறையை தீர்மானிப்பவர் முஸ்லிமாக இருந்து, பிறையுடன் சம்பந்தப்பட்ட இஜ்திஹாத்-ஆய்வுக்குட்பட்ட விடயங்களில் இஸ்லாமிய அறிஞர்களின் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையில் தீர்மானிப்பவராக அவர் இருந்தால் அவருக்கு கட்டாயமாக கட்டுப்பட வேண்டும். அவர் ஸுன்னஹ்வாதியாக  இருந்தாலும் பித்அத்வாதியாக இருந்தாலும் சரியே. இங்கு நாம் அவரின் பித்அத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த விடயம் இஜ்திஹாதிற்குரிய விடயம் என்பதையே கவனிக்க வேண்டும். பிறை விடயத்தில் ஆட்சியாளரோ அல்லது ஆட்சியாளர் இல்லாத இடத்தில் ஆட்சியாளரின் வேலையை செய்பவரோ பித்அத்வாதியாக இருந்தால் அவருக்கு கட்டுப்படக் கூடாது என்பது இஸ்லாத்திற்கு முரணான நிலைப்பாடாகும். 
ஆட்சியாளராக இருந்தாலும் பாவமான விடயத்தில் நாம் அவருக்கு கட்டுப்படக் கூடாது. இஜ்திஹாதிற்குரிய விடயத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக பிறை விடயத்தில் மக்களை மையப்படுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஹதீஸை கூறியுள்ளார்கள். அதனை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயமாகும். அதனை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அதனடிப்படையில் பிறை விடயத்தில் ஏற்படும் இஜ்திஹாதிற்குரிய கருத்துக்களில் எவரும் தனித்து செயல்பட முடியாது. தான் வாழும் சமூகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்களுக்கு உடன்பட வேண்டும். அதற்கு மாற்றமாக நடப்பது அந்த ஹதீஸை புறக்கணித்ததாகவே அமையும். எங்களுடன் வாழும் மக்கள் முஸ்லிம்களாக இருந்தால் இஜ்திஹாதிற்குட்பட்ட பிறை விடயங்களில் அவர்களுக்கு நாம் உடன்படுவது கட்டாயமாகும். அவர்கள் பித்அத்வாதிகளாக இருந்தாலும் சரியே. 
இஜ்திஹாதுக்கு உட்படாத தீர்க்கமாக மார்க்கத்தில் சொல்லப்பட்ட விடயங்களில் அவர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு தீர்மானத்தை எடுத்தால், உதாரணமாக மாதத்தை 25 நாட்கள் அல்லது 35 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம் என்று தீர்மானித்தால் அப்போது நாம் அவர்களுக்கு கட்டுப்படுத்த தேவையில்லை. அவ்வாறு எந்த  முஸ்லிம்களும் சொல்வதும் இல்லை. இதனை ஷெய்க் அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களும் தனது பத்வாகளில் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்த உம்மத்தில் எல்லாக் காலத்திலும் பிறையை தீர்மானிப்பவர்களாக ஸுன்னஹ்வாதிகள் தான் இருந்தார்கள் என்பதில்லை. ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்துக்குப் பிறகுலிருந்து இன்றுவரை அதிகமான இடங்களில் பித்அத்வாதிகளிடமே இதுபோன்ற பொறுப்புகள் இருக்கின்றன. இதனால் இவர்களுக்கு கட்டுப்படக் கூடாது என்று எந்த ஒரு ஸுன்னஹ்-ஸலஃபி இமாமும் கூறவில்லை.

மேற்படி விடயத்தில் ஷெய்க் அல்பானி அவர்கள் வழங்கிய இரண்டு பத்வாகளை உங்களுக்கு முன்வைக்கின்றோம்.

பத்வா-1: 

ஒரு கூட்டம் மக்கஹ்வுடன் நோன்பு நோற்கின்றனர். மற்றவர்கள் நாட்டுடன் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் சூஃபிகளாக இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, எப்படி இருந்தாலும் இது இஜித்திஹாதுக்குரிய ஒரு விடயமல்லையா? என்று அவர்கள் கேட்டுவிட்டு பின்வருமாறு பதில் கூறினார்கள்: இவ்வாறு செய்வதை நாம் சரி காண மாட்டோம். இதனால் ஒரு நாட்டுக்குள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படும். (பிறையில்) ஒரே நாட்டுக்குள் மக்கள் பிளவு படுவதை விட நாடுகள் பிளவுபடுவது  குறைவான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும். மக்கஹ்வையோ மதீனஹ்வையோ அடிப்படையாக வைத்து நோன்பு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஷரீஅத்தில் இல்லை... 

பத்வா-2: 

கசகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசாக இருந்தாலும் நோன்பு மற்றும் பெருநாளை தீர்மானிப்பதில் அவர்கள் குறிப்பாக துருக்கியை தக்லீது செய்கிறார்கள் அல்லது கண்மூடித்தனமாக இஜ்திஹாத் செய்கிறார்கள்; அவர்கள் எந்த அளவுக்கு ஹனபி மத்ஹபில் பிடிவாதமாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முப்தியே நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்கிறார். அவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் முஸ்லிம்கள்; மார்க்க விடயங்களை கையாளும் மத்திய நிலையம் ஒன்றும் ஒரு முஃப்தியும் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் அவர்களுடன் சேர்ந்து நோன்பு பிடிக்க முடியுமா என்ற அர்த்தத்தில் ஷெய்க் அல்பானி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஷெய்க் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்: 

இந்த முஃப்தி அஹ்லுஸ்ஸுன்னஹ்களால் பின்பற்றப்படும் மத்ஹபுகளில் ஏதேனும் ஒரு மத்ஹப் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினால் அவரை இந்த விடயத்தில் பின்தொடர வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால் அவரை பின் தொடரக் கூடாது. 

(அஹ்லுஸ்ஸுன்னஹ் அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுள்ள, இஜ்திஹாதிற்குட்பட்ட விடையங்களில் பிறையைத் தீர்மானிப்பவர் ஏதேனும் ஒரு கருத்தின் அடிப்படையில் செயல்பட்டால் அவருக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு மாற்றமாக இஜ்திஹாதிற்கு இடமில்லாத விடயங்களில் அவர் சுயமாக தீர்ப்பு வழங்குபவராக இருந்தால் அதனை நாம் ஏற்கத் தேவையில்லை என்பதை இமாமவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்) .


பெரும்பாலான முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிறை குழு இருக்கும்போது வேறு ஒரு பிறை குழுவை உருவாக்குவது கூடாது

பிறை விடயத்தில் ஒரு பிரதேசத்தில் தென்பட்ட பிறையை ஏனைய பிரதேசங்களிலும் செயல்படுத்த வேண்டுமா என்பது மாத்திரமல்ல கருத்து வேறுபாடுக்குட்பட்டது. வெற்றுக் கண்ணால் மாத்திரம் தான் பார்க்க வேண்டுமா அல்லது தொலைநோக்கியாலும் பார்க்க முடியுமா? அதிலும்  CCD தொழில்நுட்பம் கொண்ட தொலைநோக்கியாலும் பார்க்க முடியுமா? சூரியன் மறைவதற்கு முன்னர் பிறை கண்டால் ஏற்க முடியுமா? ஒரே ஒருவர் மாத்திரம் சாட்சி சொன்னால் ஏற்க முடியுமா? ஒரு பெண் சாட்சி சொன்னால் ஏற்க முடியுமா? போன்ற விடயங்களிலும் கருத்துவேறுபாடுகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொருவரும் தான் சரி காணும் கருத்தை செயற்படுத்த முற்பட்டால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
இஜ்திஹாதிற்குரிய ஒரு விடயத்தில் அதிகாரபூர்வ பிறை குழுவுக்கு முரண்பட்டு நாம் ஒரு பிறை குழுவை உருவாக்கினாலும் அதிலும் காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மேலும் மேலும் பிளவுகள் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 
மார்க்க அடிப்படையிலும் அதிகாரப்பூர்வ பிறைக் குழுக்கு மாற்றமாக இஜ்திஹாத் விடயங்களை காரணம் காட்டி இன்னொரு பிறை குழுவை உருவாக்குவது  ஏற்றுக்கொள்ள முடியாது. இஜ்திஹாதிற்குட்பட்ட பிறை விடயங்களில் எம்முடன் இருக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு உடன்பட வேண்டும் என்ற மார்க்க சட்டத்திற்கு இது முரண்படுகிறது.

ஸலஃபி மன்ஹஜும் சர்வதேசப் பிறையும்

ஸலஃபி மன்ஹஜை  பின்பற்றும் சிலர் எல்லா விடயத்திலும் இமாம்களே தங்களுக்கு முன்மாதிரி என்று கூறிவிட்டு பிறை விடயத்தில் மாத்திரம் ஸலஃபி பேரறிஞர்களின் நிலைப்பாட்டுக்கு மாற்றமான நிலைப்பாட்டை எடுப்பது மிகவும் வேதனையானதும் ஆச்சரியமானதுமாகும். இதனால் ஸலஃபிகளின் ஒரே வீட்டுக்குள் இரண்டு பெருநாள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். இதனை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்காது. மார்க்கத்தை ஆழமாக புரிந்த எந்த ஒரு அறிஞரும் ஏற்றுக் கொள்ளமாட்டார். இதனால்தான் எங்கு பிறை கண்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற ஸலஃபி பேரறிஞர்களும் ஒவ்வொரு பிரதேசத்திலும் பிறை காணவேண்டும் என்கின்ற ஸலஃபி பேரறிஞர்களும்  ஒருமித்து இதனை மறுத்துள்ளனர். 
எல்லா மார்க்க விடயத்திலும் எங்களுக்கு இந்த அறிஞர்களே முன்மாதிரி என்று சொல்கிறவர்கள் பிறை விடயத்தில் மாத்திரம் நாம் சுயமாக அந்த அறிஞர்களுக்கு மாற்றமான முடிவை குர்ஆன், ஹதீஸில் இருந்து விளங்குகிறோம் என்று சொல்வது எந்த அளவுக்கு நியாயம்? இமாம்கள் கொடுக்காத புதிய ஒரு விளக்கத்தை கொடுப்பவர்களை பித்அத்வாதிகள் என்று நம்புகின்றவர்கள் பிறையில் மாத்திரம் இமாம்களின் நிலைபாட்டிற்கு மாற்றமாக எப்படி செயல்பட முடியும்? 

பிறை கருத்து வேறுபாட்டில் எது பலமான கருத்து என்று  இமாம்கள் பேசியுள்ள கூற்றுக்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, நடைமுறையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விடயத்தில் அதே இமாம்கள் தெளிவாக கூறியுள்ளதை விட்டுவிடுகின்றனர்! இந்த இமாம்களை விட நாங்களே இந்த விடயத்தை அதிகமாக புரிந்து இருக்கிறோம்; எங்களுக்கு அவர்களைவிட ஸின்னஹ்வில் அதிகமாக பற்றுள்ளது என்று சொல்ல வருகிறார்களா? 

பிறையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இந்த இமாம்கள் கருத்து வேறுபாடுபட்டிருந்தால்  அக்கருத்துக்களில் பலமாக நீங்கள் கருதும் ஒரு கருத்தை எடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒருமித்து சொல்லும் விடயத்தில் எவ்வாறு நீங்கள் அவர்களை விட அதிகமாக விளங்குவதற்கும் பற்றுள்ளவர்களாக  இருப்பதற்கும் முடியும்? சிந்தித்து செயல்படுவோம். 

அறியாமல் செய்த கருத்தை மாற்றிக் கொள்வது எங்களுக்கு கண்ணியத்தை தரும். உலமாக்களின் வழிகாட்டலை நோக்கி திரும்பி வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். ஒரே குடும்பத்தில் ஒரே வீட்டில் ஒரே மஸ்ஜிதில் ஒரே ஊரில் அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக நோன்பும் பெருநாள் எடுக்கும் நிலைமையை உருவாக்குவோம். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான். விதண்டா வாதமும் முரட்டுப் பிடிவாதமும் வரட்டு கவுரவமும் சத்தியத்தை விளங்குவதற்கும் செயல்படுவதற்கும் தடையாக இருக்கும் என்பதை மறக்கக் கூடாது. அல்லாஹ் நம் அனைவருக்கும் அவன் விரும்பும் வழியில் செல்வதற்கு அனுகூலம் புரிவானாக!
Previous Post Next Post