அலி ரலி அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் தங்களுடைய ஆதரவாளர்களை நிறுத்தி உஸ்மான் ரலி அவர்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று கூறினார்கள்.
ஆனால் தன்னுடைய பாதுகாப்புக்காக முஸ்லிம்களிடையே சண்டை உருவாகி இரத்தம் சிந்துவதை உஸ்மான் ரலி அவர்கள் விரும்பவில்லை. எனவே இப்பிரச்சனையில் தான் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று அதை எதிர்பார்த்தே உஸ்மான் ரலி அவர்கள் இருந்தார்கள்.
உஸ்மான் ரலி அவர்கள் கொலை செய்யப்பட்டு ஷஹீத் ஆவார்கள் என்பது நபிமொழி. இது உஸ்மான் ரலி அவர்களுக்கும் நன்கு தெரியும்.
وعن جابر بن عبد الله رضي الله عنه «أن علياًّ أرسل إلى عثمان: إنَّ معي خمسمائة ذراع، فأذن لي فأمنعك من القوم، فإنك تحدث شيئاً يستحلّ به دمك. قال أي عثمان: جزيت خيراً، ما أحب أن يهراق دم في سببي
ஜாபிர் இப்னு அப்துல்லா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்
என்னிடம் 500 வீரர்கள் உள்ளனர். எனவே எனக்கு அனுமதி கொடுங்கள். அக்கூட்டத்தாரிடமிருந்து உங்களை நான் பாதுகாக்கின்றேன். உங்களின் ரத்தத்தை ஓட்டுவதற்கு காரணமான எந்த ஒரு குற்றத்தையும் நீங்கள் செய்யவில்லை என அலி ரலி அவர்கள் உஸ்மான் ரலி அவர்களிடம் கூறினார்கள்.
அதற்கு உஸ்மான் ரலி அவர்கள் நீங்கள் நல்லுபகாரம் செய்துள்ளீர்கள் . எனக்காக ரத்தம் ஓட்டப்படுவதை நான் விரும்பவில்லை என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம் தாரீகு திமஷ்க் பக்கம் 43
فعن محمد بن سيرين قال: «انطلق الحسن والحسين وابن عمر وابن الزبير ومروان كلهم شاكي السلاح حتى دخلوا الدار، فقال عثمان: اعزم عليكم لما رجعتم فوضعتم أسلحتكم ولزمتم بيوتكم
ஹசன் ஹுசைன் இப்னு உமர் இப்னு ஸுபைர் மர்வான் இவர்கள் அனைவரும் ஆயுதங்களை ஏந்தி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது உஸ்மான் ரலி அவர்கள் நீங்கள் திரும்பிச் சென்று உங்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு உங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று உங்களுக்கு நான் மிகவும் வலியுறுத்தி கூறுகிறேன் என்று கூறினார்கள்.
أعزم على كل من رأى أن عليه سمعاً وطاعة إلا كف يده وسلاحه (٢) فإن أفضلكم عندي غناء من كف يده بسلاحه
செவியுற்று கட்டுப்பட வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் நான் கட்டளை இடுகிறேன். அவர்கள் தங்களின் ஆயுதத்தையும் தங்களின் கைகளையும் தடுத்து வைத்துக் கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் என்னிடத்தில் மிகவும் சிறந்தவர் தன் ஆயுதத்தையும் தன் கரத்தையும் தடுத்துக் கொள்பவரே.
ஆதாரம் தபக்காத் இப்னு சஅது (3 :70)