நம்முடைய நிகழ்ச்சிகளில் பித்அத்வாதிகள் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கலாமா

கேள்வி: நம்முடைய நிகழ்ச்சிகளில் பித்அத்வாதிகள் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கலாமா?

பதிலளிப்பவர் : அஷ்ஷேக் அப்துல் வகீல் மதனி (முதல்வர் குல்லியத்துல் ஹதீஸ்,பெங்களூர்)

கூடாது. அதற்கான சில காரணங்கள்:

1) அவன் எதை போதிப்பான் என்பது உனக்கு தெரியாது.சில சமயம்
 அவனுடைய உரையில்  வழிகெட்ட கருத்துக்களை பேசலாம். அவனை அழைத்தவர் தான் அதற்க்கு பொறுப்பாவார்கள்.

2) அல்லது வழிகெட்ட கருத்துக்களை போதிக்காமல், குர்ஆன் ஹதீஸ்களை தனது உரையில் அமைத்துக் கொள்கிறான். இதனால் அவனது உரையின் பாணியை கண்டு மக்கள் ஏமாறலாம்.நீ பரேல்விய்யீன்களின் உரைகளை கேட்டுப்பார்த்தால் தெரியும் அது மிக அருமையானதாக இருக்கும். மேலும் தேவ்பந்திகள் சலஃபிகளை விட நல்லமுறையில் உரையாற்றுவார்கள். இதனால் மக்கள் சில வேலையில் அவர்களது அழகிய பாணியினால் ஏமாந்து, அவர்களை பின்பற்ற தொடங்குவார்கள்,இறுதியில் நேர்வழியை விட்டும் வெளியேறி விடுவார்கள்.

3) பித்அத்வாதியை அழைப்பது அவரை கண்ணியப்படுத்துவதாகும். இதனால் தான் ஸலஃப்கள் கூறுகையில்: எவன் 
பித்அத்வாதியை கண்ணியப்படுத்துவானோ அவன் இஸ்லாம் அழிவதற்கு உதவி செய்கிறான்.

4) அஹ்‌லுஸ்ஸுன்னாவினர் அழைக்கின்றார்கள் என்றால், அவன் சரியானவனாகத்தான் இருப்பான் என்பதாக மக்கள் கருதுவார்கள். இதனால் மக்கள் ஏமாந்து சரியான பாதையை விட்டும் வெளியேறி விடுவார்கள்.
أحدث أقدم