சிறுவர் தினம், அன்னையர் தினம், முதியோர் தினம்

بسم الله الرحمن الرحيم

சிறுவர் தினம், அன்னையர் தினம், முதியோர் தினம் போன்ற தினங்களை கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

 மார்க்கம் அனுமதித்த கொண்டாட்டங்களுக்கு முரணாக அமையக்கூடிய கொண்டாடும் தினங்கள் பித்அத்தான  கொண்டாட்டங்களாகும். இப்படியான தினங்கள் ஸஹாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்களின் காலத்தில் அறியப்படவில்லை.  இப்படியான  தினங்கள் அந்நிய மதத்தவர்களிடமிருந்து தோற்றம் பெற்றிருக்கலாம். எனவே, இத்தினங்களைக் கொண்டாடுவது பித்அத்தாக இருப்பதோடு இறைநிராகரிப்பாளர்களுக்கு ஒப்பான செயலாகவும் அமைகின்றது. 

 மார்க்கம் அனுமதித்த கொண்டாட்டங்கள் முஸ்லிம்களிடத்தில் அறியப்பட்டவைகளாகும்.  அவை நோன்புப் பெருநாளும் ஹஜ் பெருநாளும் வாரத்தில் ஒருமுறை வரக்கூடிய வெள்ளிக்கிழமையும் ஆகும்.  இஸ்லாத்தில் இந்த மூன்று கொண்டாடும் தினங்களைத் தவிர வேறு கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது.  இந்த மூன்று கொண்டாட்டங்களுக்கும் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு கொண்டாட்டங்களும் நிராகரிக்கப்பட்டதும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அசத்தியமானவைகளாகும்.  

ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:  யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்படும். மற்றொரு அறிவிப்பில் யார்  எமது கட்டளையின் பிரகாரம் அமையாத ஒரு செயலை செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள்.

பதாவா நூருன் அலத்தர்ப்: 142

தமிழில்: அஸ்கி அல்கமி
Previous Post Next Post