நபி ﷺ அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதன் முக்கியத்துவம்

 - ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி حفظه الله تعالى

நமது நபி ﷺ அவர்கள் (இறைத்தூதராக) அனுப்பப்பட்டிருக்கும் விடயம், அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது, மேலும் அவர்களை நம்பிக்கை கொள்வது ஆகியன ஆக முக்கியமான விடயங்களாகும்.

(எனது) சகோதரர்களே! இவற்றைப் பற்றி நாம் நன்கு விளங்கிக் கொள்வதற்கும், மேலும் இவற்றை நல்ல முறையில் புரிந்து கொள்வதற்கும் ஆர்வம் கொள்வது நம்மீது கடமையாக இருக்கின்றது.

நாம் வாழக்கூடிய இந்தக் காலமானது, சந்தேகங்கள் பரவிக்கொண்டிருக்கும் ஒரு காலமாகும். பலகீனமான ஈமான் மற்றும் பலகீனமான கல்வி உடையவர்களை அவர்கள் அறியாத வகையில் ஆட்கொண்டு, வழிகெடுக்கக் கூடிய நிறைய சந்தேகங்கள் (இக்காலத்தில்) உள்ளன. அவை மார்க்கத்தின் அடிப்படைகளிலேயே அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன!  மேலும் அவர்களுக்கு மத்தியில் (இச்)சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன.

இவை மக்களை வந்தடைவதில் எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன! குறிப்பாக வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் (இவற்றிற்கு மிகவும் அருகாமையில் உள்ளனர்). உண்மையில் நமது இளைஞர்கள், நமது இளம் பெண்கள், நமது வளர்ந்து வரும் தலைமுறையினர், நம்முடைய ஆண் மற்றும் பெண்மக்கள் சந்தேகங்களை ஏற்படுத்துபவர்களுடைய அம்புகளின் இலக்காக (ஆபத்தில்) உள்ளனர்.

உலகளாவிய வலைதளம் மற்றும் சமூக வலைதளங்கள் சந்தேகம் ஏற்படுத்துபவைகளால் நிரம்பி வழிகின்றன! (இந்த சத்திய) மார்க்கத்திலும், அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையிலும், மேலும் ரஸூல்மார்களின் தலைவராகிய முஹம்மது ﷺ அவர்களின் நபித்துவத்திலும் கூட சந்தேகத்தை ஏற்படுத்துபவை (இக்காலத்தில் அதிகமாக காணப்படுகின்றன). 

(ஈமானை) அடித்துச் செல்கின்ற இந்த சந்தேக வெள்ளப்பெருக்கின் முன்பாக, நபி ﷺ அவர்களுடைய நபித்துவத்தின் ஆதாரங்களையும், அவர்களின் தூதுத்துவத்தினுடைய உண்மைத்தன்மையின் அத்தாட்சிகளையும் அறிந்து கொண்டு பாதுகாப்பாக இருப்பது, ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உகந்ததாகும் மாறாக ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். ஏனெனில், நிச்சயமாக இது மிக முக்கியமான காரியங்களிருந்து உள்ளதாகும்.

நான் (தலைப்பிற்கு மீண்டும்) திரும்பி கூறுகின்றேன்: "உங்களின் நபி முஹம்மது ﷺ அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது" என்று இமாம் அவர்கள் கூறுகின்றார்கள்.

உனது நபி முஹம்மது ﷺ அவர்களைப் பற்றி கண்டிப்பாக நீ அறிந்து கொள்ள வேண்டும். இது உனது மார்க்கத்தில் உள்ள கட்டாயமாக (அறிந்து கொள்ள வேண்டிய) ஒரு அடிப்படையாகும்.

அன்றி, அவரைப் பற்றி முற்றிலுமாக எதுவும் அறியாத நிலையில் நீ எவ்வாறு "முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர்" என்று சாட்சியம் பகர முடியும்!? நிச்சயமாக உனது சாட்சியமானது, அந்நிலையில் ஏதோ (பிரச்சனை) உள்ள சாட்சியமாகவே இருக்கும். ஏனென்றால், (முன்னர்) நாம் கூறியிருந்தோம்: (அரபியில்) "அஷ்ஹது" என்றால் "எந்த ஒன்றை நான் அறிந்து உள்ளத்தால் உறுதி கொண்டிருக்கின்றேனோ அதனை (நாவால்) மொழிகின்றேன்" என்பதாகும். அடிப்படையிலேயே உனக்குத் தெரியாத ஒரு மனிதரின் நபித்துவத்திற்கு எவ்வாறு உன்னால் சாட்சியம் பகர முடியும் !?

எனவே, இந்த சங்கைமிக்க நபி முஹம்மது ﷺ அவர்களைப் பற்றி ஓரளவிற்கு உன்னிடத்தில் கல்வி இருப்பதென்பது கட்டாயம். இது முதலாவதாகும்.

இரண்டாவதாக, நாம் நபி ﷺ அவர்களை மகத்தான நேசம் கொண்டு நேசிப்பதற்காக கண்டிப்பாக நாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 

لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين

"உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோர், அவரது குழந்தைகள் மற்றும் மக்கள் யாவரையும் விட நான் மிகவும் நேசத்திற்குரியவனாக ஆகும் வரை, அவர் (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார்" என்ற நபி ﷺ  அவர்களின் கூற்றை நீ செவியுறவில்லையா!?

நான் உன்னிடம் கேட்கின்றேன்: "அவர்களைப் பற்றி நீ அறியாதிருக்கும் நிலையில் உன்னால் இந்த படித்தரத்தை அடைய முடியுமா?!" 

என்னுடைய சகோதரர்களே! நேசம் என்பது கல்வியைப் பின்தொடர்ந்துள்ளது. "நீ எந்த அளவிற்கு ஒன்றைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளாயோ, அந்த அளவிற்கு அதை அதிகமாக நேசிப்பாய்". நீ ஒன்றைப் பற்றி அதன் நல்ல, அழகிய மற்றும் பரிபூரணமான பண்புகளைக் கொண்டு அறிந்து வைத்திருந்தால், நிச்சயமாக நீ அதன் மீது கவனமும், நேசமும் கொள்வாய். அதுவே, நீ அதனைப் பற்றி அறியாதவனாக இருந்தால், நிச்சயமாக அதற்கேற்றவாறு (அதன்மீதான) உன்னுடைய நேசம் குறைந்துவிடும்.

எனவே, நீ இந்த படித்தரத்தை அடையும் அளவிற்கு (அவர்களைப் பற்றி நிச்சயமாக நீ அறிந்திருக்க வேண்டும்). மேலும் அது எத்தகைய படித்தரமெனில், அதனை (வாழ்க்கையில்) உண்மைப்படுத்தாமல் கடமையான ஈமான் என்பது ஏற்படாது. 

எனவே (நபி) ﷺ அவர்களை பற்றி நீ அறிந்து கொள்வது கட்டாயமாகும். அவர்களைக் குறித்து, மேலும் அன்னாரின் பெயர், பண்புகள், குணாதிசியங்கள், அங்க அடையாளங்கள், நற்பண்புகள் மற்றும் அவர்களுடைய நபித்துவத்தின் ஆதாரங்கள் ஆகியவற்றைப் பற்றி நீ அறிந்து கொள்வது (கட்டாயமாகும்). ஒவ்வொரு முஸ்லிமிடம் இருந்தும் நாடப்படும், மேலும் (அவர்மீது) கடமையாகவும் இருக்கும் இந்தப் படித்தரத்தை இதன் மூலம் நீ அடைந்துகொள்வாய். 

(அந்த படித்தரமானது) நீ ﷺ அவர்களை (உனது) பெற்றோர், குழந்தைகள் மற்றும் மக்கள் யாவரையும் விட அதிகமாக நேசிப்பதாகும். எனவே, இந்த விடயத்தின் காரணமாக, நாம் நபி ﷺ அவர்களை அறிந்து கொள்வதன் பக்கம் தேவையுடையோராக இருக்கின்றோம். 

மூன்றாவது விடயம்: நாம் நபி ﷺ அவர்களை நபியாக பொருந்திக் கொள்வதற்காக நாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதன் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்.

நாம் ஏன் அவர்களை நபியாக பொருந்திக் கொள்ள வேண்டும்?! (இதற்கு) பதிலானது: நாம் ஈமானின் சுவையை சுவைப்பதற்காக ஆகும்.

நபி ﷺ அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. 

ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نبيًّا

"யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது ﷺ அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டாரோ, அவர் ஈமானின் சுவையை சுவைத்து விட்டார்".

நீ அவர்களை எவ்வாறு நபியாக பொருந்திக் கொள்வாய்?! அந்த சங்கைமிக்க நபி உனக்கு நபியாகவும், நீ அவரை பின்பற்றுவோரிலும், மேலும் அவரது உம்மத்தில் உள்ளவனாகவும் இருக்கின்றாய் என்பதைக் கொண்டு (உன்னிடத்தில்) பொருத்தம், கீழ்ப்படிதல் மாறாக மகிழ்ச்சி ஆகியன எவ்வாறு ஏற்படும்?! நீயோ அவர்களைப் பற்றி அறியாதவனாக இருக்கின்ற நிலையில் அது எவ்வாறு ஏற்படும்?!

எனவே, (நபி) ﷺ அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதென்பது கட்டாயமாகும். மேலும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய பாதைகளில் இருந்துள்ளதாவது - மாறாக நீ ஆர்வம் கொள்வதற்கு உகந்தவற்றில் மிகவும் முக்கியமான விடயம் - இரண்டு விடயங்கள் பக்கம் ஆர்வம் கொள்வதாகும்: 

1️⃣ நீ ﷺ அவர்களின் அங்க அடையாளங்கள், நற்குணங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

2️⃣ நீ ﷺ அவர்களுடைய நபித்துவத்தின் ஆதாரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

மிக்க வருத்தத்திற்குரிய (விடயம் என்னவெனில்), இது பாமர மக்களில் - அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர - (மற்றவர்களிடத்தில்), குறிப்பாக வளர்ந்து வரும் தலைமுறையினரிடம் குறைபாடு ஏற்படக்கூடிய விடயங்களிலிருந்து உள்ளதாகும்.

மிக்க வருத்தத்திற்குரிய (விடயம் என்னவெனில்), வளர்ந்து வரும் முஸ்லிம் தலைமுறையினரில் குறைவானவர்களையே தவிர, (மற்றவர்கள் யாவரும்) நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் அங்க அடையாளங்கள், நற்குணங்கள் மற்றும் அவர்களுடைய நபித்துவத்தின் ஆதாரங்கள் ஆகியவைப் பற்றிய கல்வியில் பொடுபோக்காகவே இருக்கின்றனர். 

நீங்கள் ஒரு சிறுவன் அல்லது சிறுமியிடம் திரைகளில் அவர்கள் காணும் நபர்களைப் பற்றி கேட்கலாம் அல்லது கேட்கப்படுபவர்கள் அறியப்படுவதற்கு அடிப்படையிலேயே எந்தவொரு தகுதியும் அற்றவர்களாக கூட இருக்கலாம். ஆனாலும், (அந்-நபர்கள்) பற்றியான ஒவ்வொரு விடயத்திலும், (மேலும்) அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள மிக நுணுக்கமான விடயங்கள் பற்றியும் (அவர்களிடத்தில்) விவரங்களைக் கண்டு கொள்வீர்கள்! அவ்வாறு இல்லையா?! இது நிகழக்கூடிய ஒரு விடயமாகும்.

ஆனால், நபி ﷺ அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய எளிதான, தெளிவான, இன்னும் சில வேளைகளில் இயல்பாகவே அறியப்பட்ட கேள்விகளை நீ அவர்களிடத்தில் கேட்கக்கூடும். (அதற்கு அவர்கள்) பதில் கூறலாம், பதில் கூறாமலும் போகலாம். இது நடக்கிறதா இல்லையா?! - மிக்க வருத்தத்துடன் - நடக்கத்தான் செய்கின்றது.

இந்த குறைபாடு ஏற்படுவதற்குரிய காரணிகளிலிருந்து உள்ளதாவது: ஓ தந்தைமார்களே, வழிநடத்துபவர்களே, சகோதரர்களே (இது) நம்மிடமிருந்துள்ள குறைபாடாகும்! இதன் காரணமாகவே, சகோதரர்களே! இவ்விடயங்களில் கவனம் செலுத்துவதின் பக்கம் நாம் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்.

வளர்ந்து வரும் தலைமுறையினர் நல்ல முன்மாதிரிகளின் பக்கம் தேவையுற்று இருக்கின்றனர். அவர்(களுக்கு) முன் நல்ல முன்மாதிரிகள் தோன்றவில்லையெனில், நன்மையின் பக்கம் ஆர்வமில்லாத மக்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக ஆகிவிடுவார்கள்! எவ்வித வரையறையுமின்றி ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிகப்பெரும் முன்மாதிரி (யாரெனில்), எவ்வித சந்தேகமும் இன்றி (அது) நம்முடைய நபி முஹம்மது ﷺ அவர்களே ஆவார்கள்.

ஆகவே, நாம் நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களுடைய அங்க அடையாளங்கள் மற்றும் நற்குணங்கள், அதுபோலவே அவர்களுடைய நபித்துவத்தின் ஆதாரங்கள் ஆகியவற்றை நமக்கு மத்தியில் நினைவூட்டிக் கொள்வது, ஒருவருக்கொருவர் படித்துக்கொள்வது, கற்றுக்கொள்வது, மனனமிடுவது முதலியவற்றின் பக்கம் தேவையுடையோராக இருக்கின்றோம்.

அவ்வாறே ஒரு சில கல்வியைத் தேடும் மாணவர்களிடத்திலும் குறை உள்ளது. அவர்கள் கல்வியில் மிகவும் நுணுக்கமான விடயங்களைப் பற்றி ஆராயக் கூடும். ஆனால், அவர்களிடத்திலோ நபி ﷺ அவர்களின்  வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய கல்வியில் அலட்சியம் இருக்கும்!

அதாவது, கல்வியைத் தேடக்கூடிய  மாணவர்களிலிருந்து (அரபி மொழி, உஸூல் போன்ற) கிளைப்பிரிவான "உலூமுல் ஆலாஹ்" என அழைக்கப்படும் கல்வித்துறைகளில் அதிகமான புத்தகங்களை வாசித்தவரை நீங்கள் கண்டுகொள்ள நேரிடும். (ஆனால், அவரோ) நபி ﷺ அவர்களுடைய வரலாறு குறித்த ஒரு புத்தகத்தைக் கூட வாசித்திருக்க மாட்டார் அல்லது நபி ﷺ அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் நற்குணங்கள் குறித்த ஒரு புத்தகத்தைக் கூட வாசித்திருக்க மாட்டார். எனவே, சகோதரர்களே! நாம் இது விடயத்தில் கவனம் செலுத்துவதின் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்.

ஷர்ஹ் அல்-உஸூல் அஸ்-ஸலாஸா, ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி, பக்கம்: 3-13 (மஃஹத் அஷ்ஷரீஆ வெளியீடு). 


-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post