ஹஜ்ருல் அஸ்வத்


இஸ்லாத்தில் ஹஜ்ருல் அஸ்வத் கல் பற்றி அறிந்து கொள்ளுவோம் 




ஹஜ்ருல் அஸ்வத் கல் நம்மில் பலரும் இதை பற்றி அறிந்து இருப்போம்! நம்மில் பலர் இதனுடைய முழுமையான வரலாறு அறியாமல் இருப்போம் அதனாலே இதன் மீது நிறைய கட்டுதைகள் கூறுவார்கள்! 

ஹஜ்ருல் அஸ்வத் கல் என்பதன் பொருள் ‘கருப்புக்கல்’ என்பதாகும்! இந்த கல் கஅபாவின் தென் கிழக்கு மூலையில் பதிக்கப்பட்டுள்ளது!

ஹஜ்ருல் அஸ்வத் கல்லை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்கு பூமிக்கு இறக்கி உள்ளான் ஏன் என்ன காரணம் என்பதற்கு ஸஹீஹான ஆதாரம் எதுவும் கிடையாது!

ஹஜ்ருல் அஸ்வத் கல்லை அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து இறக்கினான்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்! இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன !

(நூல் : திர்மிதி :  877)

(தரம் : ஸஹீஹ் : இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) : ஃபத் அல்-பாரி : 3 / 462)

ஹதீஸ் விளக்கம் :

1) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை நாம் தொடுவதால் அல்லது முத்தமிடுவதால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன!

2) மனிதர்கள் அந்த அளவுக்கு அதிகம் பாவம் செய்வதன் காரணமாக தான் பாலை விட வெண்மையாக இருந்த ஹஜ்ருல் அஸ்வத் கல் கூட கருப்பு நிறமாக மாறி விட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது இந்த ஹதீஸின் மூலம்!

3) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை நாம் தொடும் போது நம்முடைய பாவங்களால் கருப்பாக மாறுவது போன்றுதான் நம்முடைய உள்ளமும் பாவம் செய்யச் செய்ய கருப்பாக மாறிவிடுகிறது! பின்பு பாவம் செய்வதில் இன்பமும் மார்க்கத்தில் பொடுபோக்குத்தனமும் ஏற்பட்டுவிடும் என்பதை இந்த ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்!

ஹஜ்ஜில் தவாப் செய்தல் :

காபாவை தவாப் செய்யும் ஹாஜிகள் முதலில் ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து தவாப் (வலம் வருதல்) செய்ய ஆரம்பம் செய்வார்கள்!

இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடட்டும், இயலாவிட்டால் தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வத் கல்லை நோக்கி கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்குவார்கள்!

(நூல் : புகாரி : 1603 | திர்மிதி : 793)

ஆனால் இன்று சண்டை போட்டு கொண்டு ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட செல்லுகிறார்கள்! சிலர் நெரிசலில் மயக்கம் முற்று விடுகிறார்கள் இன்னும் சிலர் மரணம் அடைந்து விடுகிறார்கள்!

ஆனால் இந்த அளவுக்கு கடுமையாக போராடி ஹஜருல் அஸ்வத் கல்லை தொடவோ அல்லது முத்தமிடவோ இஸ்லாம் நமக்கு கூறவில்லை இயன்றால் செய்யலாம் இல்லை என்றால் தூரத்தில் இருந்து ஹஜருல் அஸ்வத் கல்லை நோக்கி சைகை செய்து கொண்டால் போதுமானது ஆகும்!

ஹஜ்ருல் அஸ்வத் கல் உடைக்கப்படுதல் :

ஹஜ்ருல் அஸ்வத் கல் என்பது பெரிய கல் ஆகும் இது கண்ணாடி போன்ற தன்மை உடையது!

அக்ஸா என்ற பகுதியை ஷியாக்களின் ஒரு பிரிவிரான கராமியாக்கள் சில காலம் ஆட்சி செய்து வந்தனர்! இவர்கள் தான் மக்காவில் மஸ்ஜித் ஹராமுக்கு உள்ளே நுழைத்து யுத்தம் செய்து மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி ஹஜ்ருல் அஸ்வத் கல் இருந்து இடத்தில் இருந்து அதை பெயர்த்து எடுத்து விட்டார்கள்! பின்பு தங்களின் ஆட்சி செய்யும் பகுதிக்கு எடுத்து சென்று விட்டார்கள்!

இந்த ஷியாக்கள் மற்றும் கராமியாக்கள் பொறுத்த வரை காபா என்பது தூய்மையானா அல்லது மதிப்புகுறிய இடம் அல்ல! அதனால் தான் காபாவின் உள்ளேயே இவ்வாறு செய்தார்கள்!

ஹஜ்ரி 319ல் இருந்து ஹஜ்ரி 339 வரை சுமார் 20 ஆண்டுகள் கராமியாக்களிடம் தான் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை வைத்து இருந்தார்கள்! 20 ஆண்டுகளாக மக்காவில் ஹஜ்ருல் அஸ்வத் கல் இருக்க வில்லை!

அதன் பின்பு ஷியாக்கள் எடுத்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லை உடைத்து விட்டார்கள்! பின்பு முஸ்லீம் சமூகம் கராமியாக்கள் உடன் போரிட்டு ஹஜ்ருல் அஸ்வத் கல்லை திரும்ப எடுத்தார்கள்! அப்போது அது 8 துண்டுகளாக உடைந்து இருந்தது!

உடைந்து போன ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் 8 பகுதிகளில் பெரியது பேரீத்தம் பழம் அளவு பெரியதாக இருக்கும்! மற்றவைகள் பேரீத்தம் பழ கொட்டை  அளவுக்கு சிறியதாக இருக்கும்!

(நூல் : அல் பிதாயா வால் நிஹாயா, 11 /72 & 73)

ஹஜ்ருல் அஸ்வத் கல்லை இதன் பின்பு யாரும் மீண்டும் எடுத்து சென்று விட கூடாது என்பதற்காக காபா உடன் சேர்த்து வைத்து பதித்து விட்டார்கள்! அதற்கு பாதுகாப்பாக இருக்க அதை சுற்றி வெள்ளி கவசம் போன்று ஒன்றை அதை சுற்றி ஏற்படுத்தி விட்டார்கள்!

நாம் வெளியே இருந்தால் பார்த்தால் முழுவதும் கருப்பாக தெரியும் பலர் இதான் ஹஜ்ருல் அஸ்வத் கல் என்று எண்ணி கொள்ளுவார்கள் ஆனால் உண்மையில் அது கிடையாது! மாறாக அதன் உள்ளே நாம் தொட்டு பார்த்தால் பேரீத்தம் பழம் அல்லது பேரீத்தம் பழ கொட்டை போன்று நமது கைகளில் தெரியும் அதான் உண்மையான ஹஜ்ருல் அஸ்வத் கல் ஆகும்!

மறுமை நாளில் சாட்சி கூறும் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான்! யார் இதை முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும்!

(நூல் : இப்னு மாஜா : 2944 | திர்மிதி : 961)

முஸ்லீம்கள் கல்லை வணங்குகிறார்களா?

சில மாற்று மதத்தினர் கேட்கும் கேள்வி முஸ்லீம்கள் ஒரே இறைவனை வணக்கும் போது ஏன் கல்லிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று!

முதலில் ஒரு உண்மையான முஸ்லீம் ஹஜருல் அஜ்வத் கல்லை புனிதமாக வணக்கத்திற்குரிய ஒன்றாக எப்போதும் கருத மாட்டான்! அதை ஒரு வணக்க பொருளாக பார்க்க கூடியவன் உண்மையான முஸ்லீம் ஆக இருக்க மாட்டான்!

பின் எதற்காக ஹஜருல் அஸ்வத் என்னும் கல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் கஃபாவை தவாப் செய்ய (சுற்றி வருவதற்காக) ஒரு துவக்க அடையாளமாகவே ஹஜ்ருல் அஸ்வத் கல் உள்ளது!

முஸ்லீம் பொறுத்த வரை அது ஒரு கல் நபி (ஸல்) அவர்கள் கூறிய சிறப்பு தவிர்த்து அதனால் எங்களுக்கு எந்த வித நலவும் அல்லது தீங்கும் அந்த கல்லால் செய்து விட முடியாது! அதனால் தான் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

உமர் (ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டு விட்டு, நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன்! நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் என்றார்கள்!

(நூல் : புகாரி : 1597)

அது ஒரு கல் அதை நபி (ஸல்) அவர்கள் முத்தம் இடவில்லை என்றால் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள்! உமர் (ரழி) இவ்வாறு கூற காரணம் பித்அத் (புதுமை) ஏற்படும் விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தவர்கள் அதனால் இவ்வாறு கூறினார்கள்!

-அல்லாஹ் போதுமானவன்
أحدث أقدم