சிறப்புகள்:
மதினாவில் பிரபலமான ஏழு தாபியீன்களில் ஒருவர், சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட, போரில் ஹவாரியூன் (இஃக்லாஸான உதவியாளர்) என்று நபி (ﷺ) அவர்களால் அழைக்கப்பட்ட ஜுபைர் (ரலி) அவர்களின் மகன்.
அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) இவர்களின் தாய், மற்றும் சிறியதாய் ஆயிஷா (ரலி), பாட்டனார் அபூபக்ர் (ரலி) என்று சஹாபாக்களை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.
கல்வி பயணம்:
சஹாபக்களிடமிருந்து மார்க்க கல்வியை கற்க கூடிய வாய்ப்பைப் பெற்று, ஹதீஸ்களை அறிவிப்பு செய்துள்ளார்கள்.
நாம் யாரிடம் கல்வி கற்கிறோம் என்பது மிக முக்கியம். அதன்படி இவர்கள் சொல்லக்கூடிய விஷயம் அஹ்லுஸ் ஸுன்னாவின் நேரான கொள்கையாக இருக்கின்றது.
லட்சியம்:
ஆலிமன் ஆமிலன் (மார்க்க கல்வியை கற்று அமுல்படுத்துவது) என்ற ஆசையோடு பிறருக்கு மரணம்வரை மார்க்கத்தை கற்றுக் கொடுத்து அதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டும் என்பதே இவர்களின் ஆசையாக இருந்தது.
நாமும் இவர்களைப் போல் ஆசை கொள்ள வேண்டும்.
ஒரு அறிஞர் கூறுகிறார்கள்; "ஒரு மனிதன் எப்பொழுதுமே மாணவனாக, ஆசிரியராக இருக்க வேண்டும்." நாம் கற்க வேண்டும் பின் கற்பிக்கவும் வேண்டும்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்ஆன் : 61:2)
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான் தான் கற்றதை அமல்படுத்தாமல் பிறருக்கு அதைக் கூற வேண்டாம்.
உதாரணமாக வகுப்புகளின் மூலம் புறம் பேசக்கூடாது என்று கற்றுக் கொண்டோம் என்றால் அதை நாம் முதலில் பின்பற்ற வேண்டும். பிறகு அடுத்தவருக்கும் சொல்ல வேண்டும்
வளர்க்கப்பட்ட முறை:
இவர்கள் சிறு வயதிலேயே இஸ்லாமிய பற்றுடன் வளர்க்கப்பட்டார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள். அபூபக்ர் இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களுடன் 13 வயதே கொண்ட உர்வா(ரஹி) அவர்களும் ஜமல் போருக்காக செல்கிறார்கள் என்றால் இவர்களின் இஸ்லாமிய தியாக உணர்வை அறியமுடிகிறது.
இஸ்லாத்திற்காக முதலில் வாளேந்திய இவர்களின் தந்தை ஜுபைர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த தியாக உணர்வு வந்தது என்றால் மிகையாகாது.
வளர்க்கப்பட்ட விதமும், வளர்க்கப்பட்ட இடமும் இவர்களின் இந்த பண்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளது.
இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை:
நம் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இசையை கேட்கக் கூடியவர்களாக, தவறான விஷயங்களை பார்க்க கூடியவர்களாக நாம் அவர்களை வளர்த்து விட்டு பின் பெரியவர்களானவுடன் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
நாளை மறுமையில் நம் குழந்தைகளை பற்றி நம்மிடம் கேட்கப்படும் .
நபி (ﷺ )அவர்கள் கூறுகிறார்கள்; "ஏழு வயதில் குழந்தைகளை தொழுக அனுப்புங்கள் 10 வயதாகியும் தொழுகவில்லை என்றால் அடியுங்கள் .
நம் அமானிதமான குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே நல்ல அஃக்லாக்கை, வெட்க உணர்வை, மார்க்கத்தை சொல்லிக்கொடுத்து வளர்த்தால்தான் அவர்கள் பெரியவர்களாகும் பொழுது தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள்.
மார்க்க அறிஞர்கள், இமாம்கள் போன்றவர்கள் சிறுவயதிலேயே மார்க்கப்பற்றுடன் வளர்க்கப்பட்டதால் தான் அவர்கள் மார்க்கத்திற்காக பல தியாகங்கள் புறிந்து, பிறருக்கும் மார்க்கத்தை எத்தி வைத்து பின் மார்க்கத்தை பாதுகாத்தார்கள்.
உர்வா (ரஹி) அவர்கள் நற்குணம் கொண்டவராக, பொறுமையாளராக திகழ்ந்தார்கள் என்றால் அவர்களின் வளர்ப்பு முறை மிக முக்கியமான பங்காற்றுகின்றது.
தந்தை ஜுபைர் (ரலி) அவர்கள் உர்வா(ரஹி) அவர்களை கண்டிப்புடனும், கனிவுடனும் வளர்த்தார்கள் .
நம் குழந்தைகளை கண்டிப்புடன் மட்டுமில்லாமல்
கனிவுடனும் மட்டும் இல்லாமல்
கண்டிப்பும் கனிவும் சேர்த்து வளர்த்தால் தான் இவர்களைப் போன்று அறிஞர்களாக நம் குழந்தைகளை உருவாக்க முடியும்.
உர்வா (ரஹி) அவர்களை போல் நாமும் நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அல்லாஹ் தடுத்த விஷயத்தை தடுத்து அல்லாஹ் ஏறியதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்
உர்வா (ரஹி) அவர்கள் சந்தித்த சஹாபாக்கள்:
ஸயீத் இப்னு ஸைய்து (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் இன்னும் பல சஹாபாக்களை சந்தித்து கல்வி கற்று அமுல்படுத்தி பிறருக்கும் எத்தி வைத்துள்ளார்கள்
ஆலிமன் ஆமிலனாக வாழ்ந்தார்கள் இதுவே அவர்கள் வாழ்வில் நாம் பெறும் படிப்பினைகள்