1. குழந்தைக்கு விளையாடி மகிழ்வதற்கும் வேடிக்கை குறும்புகள் செய்வதற்குமான நேரம் தேவை
“நாளை அவரை எம்முடன் அனுப்பி வையுங்கள். (கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாம் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 12:12)
2. குழந்தைக்கு தக்க தருணத்தில் சரியான வழிகாட்டலும் தேவை
"இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(அல்குர்ஆன் : 31:13)
3. குழந்தைக்கு ஒழுக்கம் கற்பிப்பதும் தேவை
"அருமை சிறுவரே! சாப்பிட முன் பிஸ்மில்லாஹ் கூறுவாயாக, வலது கையால் சாப்பிடுவாயாக, உமக்கு அருகிலுள்ளவற்றை சாப்பிடுவாயாக! ( புகாரீ 5376, முஸ்லிம் 2022)
4. குழந்தைக்கு அன்பும் அரவணைப்பும் தேவை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது பேரப்பிள்ளைகளுடன் முத்தம் கொடுத்து, அரவணைத்து அவர்களுடன் விளையாடுபவர்டளாகவும், தொழுகையிலும், குத்பா உரையின் போதும் தன்னுடன் அழைத்துச் செல்பவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
அரபுலக சமூக வலைத்தளங்களில் உலா வரும் பிள்ளை வளர்ப்பு தொடர்பான சுருக்கமான இஸ்லாமிய பார்வை.
தமிழில்: Azhan Haneefa