அழிந்து வரும் சமுதாயம்…

அன்வர் றாசியா ( ஷரயியா)

எங்கே இந்த எதிர்கால சிசுக்கள்….?? தொலைந்து விட்டார்களா?அல்லது தொலைத்து விட்டீர்களா? …

உள்ளம் கல்லாகி விட்ட மனிர்களாக கருவில் உருவாகும் எதிர்கால தலைவர்களை உலகுக்கு காட்டாமலே அல்லது உலகுக்கு வரவிடாமலே அழித்ததன் காரணம் தான் என்ன?

தாய்மார்களே!இன்று எம்முன்னால் ஒருவரையொருவர் குத்தி கொலை செய்து விட்டார்கள் என கேள்விப்பட்டதும் ‘ஆ’ என விழிப்புருவத்தை வில்லாக்குவதில் ஆண்களை விட பெண்களாகிய எமக்கே பங்கு அதிகம் அல்லவா?

இப்படியான பிஞ்சு மனம் கொண்ட எமக்குள் ஏன் இந்த கடின உணர்வு.

எம் சமூகத்தில் ஒரு தவறை சுட்டிக்காட்டவேண்டிய தேவை எப்போது வரும் தெரியுமா?

அந்த தவறு சமூகத்தில் பரவலாக நடை பெறும் போது தான் அதை சுட்டிக்காட்டவேண்டிய தேவை வரும். 

அந்த வகையில் இன்று சர்வசதாரணமாக “கருக்கலைப்பு ” எம் சமூகத்தில் சதாரணமாக நடைபெறுகின்றது.

இந்த ‘கருக்கலைப்பு’ எந்தளவுக்கெனில் ஒரு தாய் அவளுக்கு ஆறு மாதக்குழந்தை வயிற்றிலிருக்கும் போதே கருக்கலைப்பதற்குரிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் தேவை எந்தளவுள்ளது என்பதை நாம் அறியலாம்.

இன்றைய கருக்கலைப்பு செய்பவர்கள் “எங்களுக்கு இருக்கின்ற பிள்ளைகளுக்கே சாப்பிடுவது எப்படியென உள்ள நிலையில் இன்னொன்று வந்தால் எங்களின் நிலை என்னவாகும்.” என்ற காரணத்தை முன்வைக்குறார்கள்.

எம் கைகளை வந்தடையும் முன் இருட்டறையான கருவறையில் உணவளித்த இறைவனுக்கு இந்த உலகைபார்த்த பின் உணவளிக்க முடியும் என்பதில் எமக்கு என்ன சந்தேகம்?..

சூரா இஸ்ரா வில் அல்லாஹ் கூறுகின்றான் “நீங்கள் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும்உங்களுக்கும் நாமே உணவை வழங்குகின்றோம். நிச்சயமாக அவர்களைகொலை செய்வது பெரும் குற்றமாக இருக்கிறது. ”

இதிலிருந்து அல்லாஹ் தான் எனக்கும் எம் குழந்தைகளுக்கும் உணவு அளிக்கிறான் என்பது தெளிவாகிறது.,

மேலும் எம் பெருமானார் அழகிய உதாரணத்தை கூற தவறவில்லையா?. ” நிச்சயமாக அல்லாஹ்வின் மீது முழுமையாக தவக்குல் வைப்பீர்களானால் பறவைகளுக்கு உணவளிப்பதை போல் அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான். பறவைகள் காலையில் வெறும் வையிற்றுடன் செல்கின்றன. மாலையில் வயிறு நிறைந்தவையாக திரும்புகின்றன”

எனவே இந்த பறவைக்கு உணவளித்தது அந்த உணவளிக்கக்கூடியவனை தவிர எவருமில்லை.
ஆகவே, இதே போன்றுதான் அல்லாஹ் மனிதனுக்கு உணவளிக்கிறான் என்பதில் சந்தேககம் இல்லை.
எந்தளவுக்கினில் தாயின் கருவறையில் வைத்தே அவனின் உலகப்பொருளாதார நிலை எழுதப்பட்டுவிடுகின்றது. எழுதப்பட்ட பொருளாதரத்தை உலகில் வந்து பெற்று வாழ்கின்றன அந்த சிசுக்கள். அப்படி இருக்கும் போது ஏன் வறுமைக்கு பயந்து “அநியாயம் செய்யாத உயிருக்கு அநியாயம் செய்கிறீர்களே!”

இது மிகப்பெரிய பாவம் என அறியாமலா?
நபியவர்கள் கூறினார்கள் “ஏழு மிகப்பெரிய பாவங்களில் ஒன்றுதான் ஆன்மாவை கொலை செய்வது”.

எனவே பெரும்பாவம் செய்தவன் தவ்பா செய்யாமல் மரணித்தால் நரகம் செல்வான்.

ஆகவே , கருக்கலைப்பு உயிரை கொலை செய்வற்கு சமன் என்பதால் கருவை கலைத்தவன் நாளை மறுமையில் இறைவனின் விசாரணைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்.
“و اذا الموءدة سٸلت”
“(உயிருடன் புதைக்கப்ட்ட) பெண் குழந்தை விசாரிக்கபடும் போது”
( அல்குர்ஆன்)

அந்த ஜாஹிலியாக்காலத்தில் பெண் பிள்ளை என்றாலே வறுமைக்கு பயந்து பிறந்தவுடன் உயிருடன் புதைதத்தற்காகவே இறைவனின் கடுமையான விசாரணை இருக்குமென்றால் இன்று கருவிலே அழிக்கின்ற எங்களின் நிலை மறுமையில் கடுமையாக இருக்குமென்பதை நாங்கள் மறந்துவிட்டோம்.

எனவே இவ்வுலகில் வாழ்கின்ற தன் அடியார்களுக்கு உணவளிப்பவன்அவன் தான் என்ற தவக்குலுடன் அவனின் தண்டனையை பயந்துகொள்வோமாக……!!
أحدث أقدم