அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைப்போம்.

தவக்குல் - ஒரு அடியான் தனது  காரியங்கள் முழுவதையும்  முழுமனதோடு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவனிடம் ஒப்படைப்பது  தவக்குல் ஆகும்.

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் இது பொதுவான கட்டளையாகும்;
 என்பதை பின் வரும் குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

وتوكل على العزيز الرحيم ، الذي يراك حين تقوم ، وتقلبك في الساجدين ، إنه هو السميع العليم ( الشعراء : 217 – 220 )

(நபியே) கருணையாளனாகிய, யாவற்றையும் மிகைத்த  அல்லாஹ்வின் மீதே நீர் தவக்குல் வைப்பீராக!  
அவன் எத்தகையவன் என்றால் நீர் நின்று (இரவில் தனியாக)  வணங்கும் வேளையிலும்,
  சுஜூத் செய்பவர்களோடு (பகிரங்கமாக) நீர் சுஜூத் செய்யும் போதும்  அவன் உம்மை 
 உற்று நோக்குகின்றான்.
நிச்சயமாக அவன், நன்கு செவியுறுபவன், அனைத்தையும் நன்கு அறிந்தவன்.
 ( அஷ்ஷுஅரா- 217-222)

"وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ ۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
(الفرقان - 58)"

 மேலும் (நபியே) நீர் மரணிக்காத, என்றும்  உயிருடன் இருப்பவனாகியவன் 
(அல்லாஹ்வின்) மீது பொறுப்புச் சாட்டுவீராக! 
 இன்னும் அவனைத் துதிப்பீராக! 
அவனே போதுமானவன்.
 அவன் தனது அடியார்களின் பாவங்கள் பற்றி நன்கு அறிந்தவன்.
 ( அல்புர்கான்- 58).

தெளிவு:

அல்லாஹ் என்றும் மரணிக்காதவன்.
 உண்ணாமல், உறங்காமல் இரவு பகலாக ஒவ்வொரு நொடிப் பொழுதும் அவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.

அவனது படைப்புக்கள் மரணித்ததோடு அவர்களின் புலன்களும் மரணித்து விடும். 

மண்ணறையில் வைக்கப்படும் அவனது அடியார்கள் வானவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அல்லாஹ்வே அவர்களுக்கு மீண்டும் புலன்களை சில நொடிகள் இயக்கச் செய்து அதனை மீண்டும் திரும்பப் பெறுவான்.
இதில் இறைநேசர்களும் முழுமையாக உள்ளடக்கமே!

ஆகவே அல்லாஹ்வையும் அவனது பூரணமான பண்புகள் பற்றியும் நன்கு அறிந்த முஸ்லிம்கள் அல்லாஹ்விடமே தமது பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடுவார்கள்.

 அவனையே சகல விஷயங்களிலும் முதன்மைப்படுத்துவார்கள்.

الحمد لله الذي هدانا لهذا. وما كنا لنهتدي لولا أن هدانا الله. 

தொகுப்பு:-

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم